COD-1 ஆதியாகமத்தின் மீதான கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 53-07-29 5. கேள்வி:1 ''தேவன் மனுஷனை, ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்'' இப்பொழுது இதுதான் முதல் குறிப்பு (point) என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது ஆதியாகமம் 2:7 ''அவர் உருவாக்கினார்'' (கீழ் கோடிடப்பட்டுள்ளது) என்று கூறுகிறது. ஆனால் முதலாவதாக அவர் சிருஷ்டித்தார்'' பிறகு இதை கோடிட்டுள்ளார். ''அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் (கோடிடப்பட்டுள்ளது) ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். இன்னுமாக. இப்பொழுது இதிலுள்ள வித்தியாசம் என்ன, அல்லது மேலே உள்ள வேத வாக்கியத்தின் இணைப்பு எங்கே இருக்கிறது-? இப்பொழுது, இது... நீங்கள் அதைக் குறித்துக் கொண்டீர்களானால், ஆதியாகமம் 1:26 முதல் 28, ஆதியாகமம் 2:7. இது ஒரு சிணுக்கமுள்ள, உணர்வு பூர்வமான ஒன்று (touchy). என்னுடைய சொந்த கருத்துதான் என்னிடம் உள்ளது. ஆகவே நான் எப்படி எண்ணுகின்றேனோ அப்படியே உங்களிடம் கூறிவிடுகிறேன். நீங்கள் அதிலிருந்து வேறுபட்டால், நல்லது, அது அருமையான ஒன்று. அந்த கேள்விகளுக்கு அருமையான பதிலை அளித்த சகோ. நெவிலை பாராட்டுகிறேன். இப்பொழுது அது அருமையாயிருக்கிறது. 6. இப்பொழுது, இங்கே ஆதியாகமம் 1:26-ல் தேவன் மனிதனை தம்முடைய சாயலாகவும், ரூபமாகவும் உண்டாக்கினார். நீங்கள் அதை கவனிபீர்களானால், நீங்கள் 26-ஆம் வசனத்தை எங்களோடு சேர்ந்து படிப்பீர்களானால், என்னுடன் சேர்ந்து சரி பார்ப்பீர்களானால் நாங்கள் மகிழ்ச்சியுறுவோம். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக: அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக் கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 7. இப்பொழுது, அதன்பேரில் உலக முழுவதிலும் அநேக முறைகள் விவாதிக்கப்பட்டதையும், அதைக் குறித்து விவாதங்கள் வருவதையும் நான் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஆதி-2:7-ல் அவர் இங்கே என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அது சரி, அது இங்கே உள்ளது-! தேவனாகிய... மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இப்பொழுது, எந்த விதமான அமைப்பை... அந்த - அந்த கேள்வியாளர் கேட்க விரும்புகிறார்: கேள்வி: இந்த ஆதியாகமம் 1:26, ஆதியாகமம் 2:7-வுடன் எந்த விதமான தொடர்பு, இணைப்பைக் கொண்டுள்ளது-? தேவன் இரண்டு மனிதர்களை சிருஷ்டித்தார். யார் அந்த மனிதன், அவன்... என்ன தொடர்பை அது கொண்டுள்ளது-? என்ன... எப்படி அது வேத வாக்கியத்துடன் இணைகிறது. நல்லது, இப்பொழுது ஆதியாகமம் 1:26-யை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், “முதலாம் பாகத்தை நாம் முதலாவதாக எடுத்துக் கொள்வோம். தேவன் நாம் உண்டாக்குவோம்” என்றார். இப்பொழுது, ''நாம்'' என்பது... ''நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக''. இப்பொழுது நம்முடைய, (our) அவர் யாரிடமோ, வேறொரு நிலைபேறுடைய ஒருவருடன் (Another Being) பேசிக் கொண்டிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம், அவர் பேசுகிறார். ''நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் நாம் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் மிருக ஜீவன்களையும் ஆளக்கடவர்கள்“. நீங்கள் கவனிப்பீர்களானால், சிருஷ்டிப்பில், உண்மையிலேயே முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டது வெளிச்சம் ஆகும். நீங்கள் சிருஷ்டிப்பின் தொடர்ச்சியைக் கவனிப்பீர்களானால் கடைசியாக சிருஷ்டிக்கப்பட்டது என்ன-? ஒரு மனிதன். மனிதனுக்குப் பிறகு ஸ்திரியானவள் உருவாக்கப்பட்டாள். அது சரி, முதல்... கடைசியாக சிருஷ்டிக்கப்பட்ட, தேவனுடைய சிருஷ்டிப்பு மனித இனமாகும். தேவன் தம்முடைய முதல் மனிதனை உருவாக்கினபோது, நீங்கள் கவனித்திருப்பீர்களானால், அவர் அவனை தமது ரூபத்தின்படியே உண்டாக்கினார். அவன் தேவ சாயலின்படி உண்டாக்கப்பட்டான். தேவன் என்றால் என்ன-?இப்பொழுது தேவன் என்றால் என்ன என்று நாம் காண முடியும் என்றால், அவர் உண்டாக்கிய மனிதன் எப்படிப்பட்டவன் என்பதையும் நம்மால் கண்டுகொள்ள இயலும். 8. இப்பொழுது பரிசுத்த யோவான், 4-ஆம் அதிகாரத்தை நான்... நாம் இதைப் படிப்போம், இயேசு அந்த ஸ்திரியுடன் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நீங்கள் திருப்ப விரும்புவீர்களானால், நான்... எனக்கு போதுமான நேரம் இல்லை. நான் இதை எழுதி வைக்கவில்லை, ஞாபகத்தின் மூலம் இதை எடுக்க வேண்டியதாயிற்று. சீக்கிரமாய் நான் கண்டுபிடிப்பேனானால் - இப்பொழுது நீங்கள் அதைப் பாருங்கள், இப்பொழுது நான்காம் அதிகாரம், 14-ஆம் வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம்: நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது... நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றுகளாயிருக்கும். அந்த ஸ்திரீ அவரை நோக்கி; ஐயா (Sir) நான் இங்கே மொண்டுகொள்ள வராமலிருக்கும் படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ... 9. நீங்கள் காண வேண்டுமென்று நான் விரும்புகிறதை, இதற்கு இன்னும் மேல் நோக்கிச் சென்றால் இப்பொழுது காணலாம் என்று நான் நம்புகிறேன். இதை இங்கு கண்டுபிடித்து நான் காண நினைப்பது எது-? 23, 24ஆம் வசனம். அதுசரி. நீங்கள்... (அது சரியே) நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (ஆம் அது சரி, பாருங்கள்.) உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் (யூதர் அல்லது புறஜாதியார்) பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும்... காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். இப்பொழுது, எனக்குத் தேவையான அடுத்த வசனம்: தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்றார். 10. இப்பொழுது, தேவன் மனிதனை தமது சாயலின்படியேயும் தமது ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்திருப்பாரானால், எப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் சிருஷ்டித்திருக்க வேண்டும்-? ஒரு ஆவி மனிதனையே. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் எல்லா சிருஷ்டிப்பையும் செய்து முடித்த பின்பு, ஒரு ஆவி மனிதனைச் சிருஷ்டித்தார். இதைக் கூர்ந்து படிப்பீர்களானால் (இந்த கேள்வியைக் கேட்டவருக்கு) தேவன் மனிதனுக்கு மிருக ஜீவன்கள் மேலும், சமுத்திரத்து மச்சங்கள் எல்லாவற்றையும் ஆளும் அதிகாரத்தை அளித்தார் என்பதைப் பார்க்கலாம். ஆனால், தம்முடைய சிருஷ்டிப்பில், மிருக ஜீவன்களையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் வழி நடத்த மனிதனை தம்முடைய சொந்த சாயலின்படி சிருஷ்டித்தார். இன்றைக்கு எப்படி பரிசுத்த ஆவி ஒரு விசுவாசியை வழி நடத்துகின்றாரோ, அதைப்போல. பாருங்கள்-? வேறு விதமாகக் கூறுவோமானால், முதலாம் மனிதனாகிய ஆதாம் தேவனுடைய சிருஷ்டிப்புகளிலே கடைசி சிருஷ்டிப்பாக இருந்தான். முதலாம் சிருஷ்டிப்பு தேவன்தாமே ஆவார்; பிறகு தேவனிலிருந்து தேவனுடைய குமாரனாகிய லோகாஸ் (Logos) வெளியே வந்தார்; பிறகு தேவனுடைய வார்த்தையாயிருந்த லோகாஸிலிருந்து (ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்) லோகாஸிலிருந்து மனிதன் வெளியே வந்தான். 11. ஓ, நீங்கள் மாத்திரம் என்னுடனே ஒரு சிறுபயணம் (a little trip) வருவீர்களானால், என்னுடைய மனதில் இப்பொழுது ஒரு அழகான காட்சி உள்ளது. இதை நான் உங்களிடம் பேசியுள்ளேன் என்று நம்புகிறேன். நீங்கள் இதை நன்றாகக் காண வேண்டுமென்று நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். இப்பொழுது, நாம் சிறிது நேரம் பிரயாணித்து பின்னோக்கிச் செல்வோம். இப்பொழுது எவ்வளவு வெப்பமாயிருக்கிறது என்று எண்ணாதீர்கள், நாம் பேசி சிந்திக்கப் போகும் காரியத்திற்கு இப்பொழுது நம் மனதைச் செலுத்துவோமாக. சந்திரனோ, நட்சத்திரமோ இல்லாதிருந்த லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கிச் செல்வோமாக. இப்பொழுது, இங்கே ஒன்றுமே இல்லாத காலம் ஒன்று இருந்தது. அங்கு முடிவில்லாமையும் நித்தியமும் மாத்திரமே இருந்தது. தேவன் தாமே எல்லா முடிவில்லாமையும் நித்தியமுமாய் இருந்தார். அவர் அங்கு ஆதியிலேயே இருந்தார். இப்பொழுது, இந்த திரையின் முனைப்பாகத்திற்கு சென்று, அங்கு நடக்கும் காரியங்களைக் காண்போம். 12. இப்பொழுது, “பிதாவை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'' சரீரப்பூர்வமாக தேவனை எந்த மனிதனாலும் காண முடியாது, ஏனெனில் சரீர வடிவில் தேவன் இல்லை, தேவன் ஆவியாயிருக்கிறார். பாருங்கள்-? அது சரி. ''பிதாவை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை. பிதாவின் ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்'' முதலாவது... யோவான், பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள், அங்கு வெற்றிடத்தைத் தவிர வேறொன்றுமே இல்லை. அங்கு வெளிச்சம் இருக்கவில்லை, இருள் இருக்கவில்லை, அங்கு ஒன்றுமே இருக்கவில்லை, ஒரு காரியமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிலே மகத்தான, இயற்கைக்கு மேம்பட்டவரான யேகோவா தேவன், எல்லா வெற்றிடத்தையும் எல்லா வெட்ட வெளிகளையும் எல்லா நேரங்களையும் மூடிக் கொண்டிருந்தார். அவர் என்றென்றைக்குமுள்ளவைகளிலிருந்து, என்றென்றைக்கும் உள்ளவராய் இருக்கிறார். சிருஷ்டிப்பின் துவக்கம் அவரே ஆவார். அது தான் தேவன். ஒன்றையும் காண முடியாதிருந்தது. ஒன்றையும் கேட்க முடியாதிருந்தது. ஒரு அணுவும் காற்றிலே அசைய முடியாதிருந்தது, காற்றே இல்லாதிருந்தது. ஒன்றுமே இல்லாதிருந்தது. ஆனாலும் தேவன் அங்கு இருந்தார். அது தேவன்தான் (இப்பொழுது நாம் சில நிமிடங்களுக்கு கவனிப்போம். அதற்குப் பிறகு...) எந்த ஒரு மனிதனும் அதைக் கண்டதில்லை. இப்பொழுது, அதுதான் பிதா, அதுதான் தேவனாகிய பிதா. 13. இப்பொழுது, கவனியுங்கள். அதற்கு பிறகு சிறிது நேரத்தில் ஒரு வட்ட வடிவத்தில் (halo) அல்லது வேறெதோ ஒன்றை, ஒரு சிறிய பரிசுத்த ஒளி உருவாகுவதை நான் காண ஆரம்பிக்கிறேன். ஆவிக்குரிய கண்களால் மாத்திரமே உங்களால் அதைக் காண முடியும். ஆனால் இப்பொழுது பாருங்கள், இப்பொழுது முழு சபையாக இதை நாம் பார்க்கிறோம். நாம் மகத்தான ஒரு பெரிய கைப்பிடிக் கம்பியுள்ள படிக்கட்டின் மீதிலிருந்து நின்றுகொண்டு, தேவன் என்ன செய்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த கேள்வியை நாம் சரியாக அணுகி, எப்படி அவர் இதற்குள் அதைக் கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, தேவனை ஒருவரும் கண்டதில்லை. அடுத்ததாக அங்கே ஒரு சிறிய வெள்ளை ஒளியானது உருவாகின்றதை நாம் நமது இயற்கைக்கு மேம்பட்ட கண்களால் காணத் துவங்குகிறோம். அது என்ன-? வேத மாணாக்கர்களால் அது “லோகாஸ்” (Logos) அல்லது அந்த “அபிஷேகிக்கப்பட்ட ஒன்று” (the anointed) அல்லது “அந்த அபிஷேகம்” (anointing) என்று அழைக்கப்பட்டது, அல்லது... நான் கூறவிழைவது, மானிடர்கள் அது என்னவாயிருந்தது என்பதைக் குறித்த ஒரு எண்ணத்தைக் கொள்ள அது ஏதுவாயிருக்கும்படி தேவனுடைய பாகமானது ஏதோ ஒன்றாக உருவாகத் துவங்கியது. அது ஒரு சிறிய அல்லது ஒரு அசைந்து கொண்டிருந்த வெளிச்சமாயிருந்தது. அவர்... அதுதான் தேவனுடைய வார்த்தையாகும். இப்பொழுது, ஒரு அணுவும் கூட இல்லாதிருந்த... ஒரு அணுவை உருவாக்க காற்றுங்கூட இல்லாதிருந்த போது, தேவன் தாமே இந்த குமாரனை பெற்றெடுத்தார். அதுதான். பாருங்கள், இயேசு, “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே நாம் பெற்றிருந்த மகிமையினாலே என்னை மகிமைப்படுத்தும்'' என்றார். பாருங்கள் தொலைதூரமான காலத்தில். 14. இப்பொழுது, பரிசுத்த யோவான் 1-ல், ''ஆதியிலே வார்த்தை இருந்தது'' என்று கூறினார். முதலில்... ''அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' தேவன் தம்மைத் தாமே மானிட வர்க்கத்திற்கு வெளியாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தல். அவர் அதை எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, அங்கே, இந்த சிறிய வட்ட வடிவு (halo) வருகிறது. இப்பொழுது, இன்னுமாய் எதையும் நாம் காணவில்லை, ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட கண்களால் ஒரு வட்ட வடிவம் அங்கு நிற்பதை நாம் காண்கிறோம். இப்பொழுது, அதுதான் தேவனுடைய குமாரன், அந்த லோகாஸ். எல்லாம் நித்தியமாயிருக்கையில், பிதாவினுடைய வாசற் கதவிற்கு முன்னால் அவர் ஒரு சிறிய குழந்தையைப் போன்று விளையாடிக் கொண்டிருப்பதை இப்பொழுது என்னால் காணமுடிகின்றது. பாருங்கள்-? பிறகு இப்பொழுது, பிறகு அவருடைய கற்பனைக் காட்சியமைப்பில் காரியங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதை அவர் நினைக்க ஆரம்பிக்கின்றார். “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. பிறகு அவர் கூறுகையில், ஒரு அணு வெடித்து சூரியன் தோன்றி சுழல ஆரம்பித்தது. அது நூற்றுக்கணக்கான லட்சம் ஆண்டுகளாகச் சுழன்று, உருக்காங்கற்களை (clinkers) உருவாக்கி, எரிந்து, இப்பொழுது இருப்பது போலவே இருந்தது; இன்னுமாய் எரிந்து கொண்டு, அணுக்களை உடைத்துக் கொண்டு இருக்கின்றது. ஒரு அணுகுண்டு வெடிக்க ஆரம்பித்தால், இந்த அணுவின் வரிசையானது இதை... இந்த பூமியானது சூரியனைப் போலவே வெடித்துக் கொண்டும் சிதறிக் கொண்டும் இருக்கும். நீங்கள் வேறொரு கிரகத்தில் நின்றுக் கொண்டு இதைப் பார்ப்பீர்களானால் இன்னொரு சூரியனைப் போன்றே இது தோன்றும். அணுக்கள் இந்த பூமியை எரித்துக் கொண்டிருக்கும்போது, இந்த வரிசையானது தளர்ந்து இப்படியும் அப்படியுமாக திரும்பி சுழல ஆரம்பிக்கும்... இந்த நெருப்பானது சூரியனிலிருந்து கோடிக் கணக்கான ஃபாரன் ஹீட் (Fahrenheit) அனல் கொண்டு வெளியே வரும், அதன் தீப்பிழம்புகள் லட்ச, லட்சக்கணக்கான மைல்கள் உயர எழும்பும். 15. இப்பொழுது இதைக் கவனியுங்கள். அழகான ஒன்று-! இப்பொழுது, அவர் சூரியனை உண்டாக்கினார். பிறகு முதலாவதாக ஒரு பெரிய உருக்காங்கல் அதிலிருந்து விழுந்து, இந்த பூமியைப் போன்ற எடையை கொண்டதாய் “ஸ்பியூ-!'' என்று சப்தமிட்டு விழுந்தது. இந்த தேவனுடைய குமாரனாகிய லோகாஸ் அதை பார்த்துக் கொண்டிருந்தார். அதை ஒரு நூற்றுக்கணக்கான, இலட்சக்கணக்கான ஆண்டுகளாக விழ விட்டுவிட்டு பிறகு அவர் அதை நிறுத்துகிறார். பிறகு வேறொன்று பறந்து விழ ஆரம்பிக்கிறது. அதை அவர் லட்சணக்கணக்கான ஆண்டுகளுக்கு விழ விட்டுவிட்டு பிறகு அதை நிறுத்துகிறார். இப்பொழுது நாம் நின்றுகொண்டு அது தோன்றி இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, அவர் தமது சிந்தையில் எதையோ கொண்டுள்ளார், ஆகையால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்-? அவர் தமது முதல் வேதாகமத்தை எழுதிக் கொண்டியிருந்தார். மனிதன் பார்த்ததிலேயே முதலாவது வேதாகமம் நட்சத்திரங்களும், இராசி மண்டலங்களும் (Zodiac) ஆகும். அது ஒரு பரிபூரண... அது வேதத்துடன் சரியாக பொருந்துகிறது. அது ராசி மண்டலத்தின் முதலாம் அடையாளமான கன்னி ராசியில் துவங்குகிறது. அது சரியா-? கடைசி ராசி என்ன-? லியோ (Leo) என்கிற சிம்மராசி. அதுதான் இயேசுவினுடைய முதலாம் வருகை. அவர் ஒரு கன்னியின் மூலமாக வந்தார்; இரண்டாம் முறையாக, அவர் யூதா கோத்திரத்தின் சிங்கமாக வருகின்றார். பாருங்கள்-? எல்லாவற்றையும் வெளிகொணர்கிறது. கான்சர், புற்று நோயின் காலம் மற்றும் தொடர்ச்சியாக எல்லாமும் இப்பொழுது எல்லாவற்றையும் வானத்திலே அமைத்து வைத்துவிட்டார். இந்த வால் நட்சத்திரங்களும், பூமியின் பாகங்களும் அல்லது சூரியன் எல்லாம் அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது, விஞ்ஞானமானது விழுகின்ற அந்த கணைகளை (missiles) பார்க்க செல்கிறதென்றால் அது தேவனை பொய்யராகச் செய்யவில்லை, அதற்கு மாறாக அதை எனக்கு நிருபிக்கின்றது. பாருங்கள், அது அதை இன்னும் அதிக தத்ரூபமாக்குகின்றது. இப்பொழுது கவனியுங்கள், இந்த தொங்கிக் கொண்டிருக்கின்ற கணைகளெல்லாம் அந்த வெப்பமான சூரியனுக்குச் சற்று தூரமாக காற்றில் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அது ஒரு மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாறையாக (iceberg) ஆகின்றது. 16. இப்பொழுது, இவ்விதமாகத்தான் இப்பூமி தோன்றினது. ஒரு பெரிய பழைய அரைகுறையாக எரிந்த ஒரு நிலக்கரித் தணல் அங்கிருந்து பறந்து விழுந்தது. இவ்விதமாகத்தான் இப்பூமி தோன்றியது. பூமியின் கீழே இருப்பது ஒரு சுழல்கின்ற, எரிமலை, சில வெடித்து எரியும். நாம் வாழுகின்ற இந்த உலகமானது எப்படி ஒரு ஆப்பிள் பழத்தின் மேல் தோல் உள்ளதோ அதைப் போன்று அதன் மேல் உள்ள ஒரு கடினமான பாகம் போன்று சுற்றி அமைந்துள்ளது (crust) என்று விஞ்ஞானம் கூறி இருக்கிறது. எல்லா... இப்பொழுது, அநேகமாக 25 ஆயிரம் மைல்கள் இருக்கலாம் (ஏறக்குறைய 8 ஆயிரம் மைல்கள்) 8 ஆயிரம் மைல்கள் அளவுக்கு கனம் பொருந்தினதாக இருக்கிறது. ஆகவே அதற்கு கீழே இருப்பதுதான் எரிகின்ற எரிமலை. பூமியின் மூன்றில் இரண்டு பாகம், இரண்டு பாகத்திற்கும் அதிகமாக தண்ணீரால் நிறைந்துள்ளது; மூன்றில் ஒரு பகுதி, ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி நிலமாக உள்ளது. இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, சுற்றி (பூமியின் மேல் - தமிழாக்கியோன்) அமைந்துள்ள கடினமாக பாகத்தைப் (Crust) பாருங்கள், அதன் முழுவதுமாக உள்ளில் பயங்கரமான ஆபத்தான வெடிபொருட்கள், எரி வாயு, பெட்ரோல், எண்ணெய், அனைத்தும் போன்றவைகளால் நிறைந்துள்ளன. அது சரியா-? ஆகவே மூன்றில் இரண்டு பாகம், அதற்கும் மேல் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. தண்ணீரின் சூத்திரம் (formula) என்ன-? மூன்று பாகம் பிராணவாயும் (Oxygen) ஒரு பாகம் நீரகவாயும் (hydrogen) கொண்டது, வெடிக்கும் தன்மை வாய்ந்தவைகள். ஒவ்வொரு அறையிலும் உஷ்ணத்திலிருந்து குளுமையாக்க தேவையான மின்சாரம் உள்ளது. ஒரு அறையை வெடிக்கச் செய்யும் அளவிற்கு அது போதுமான மின்சாரத்தை உண்டாக்கும். ஒரு சிறிய குழிபந்தாட்டபந்திலே (golf ball) தேவையான அளவு அணுக்களை நிறைத்து நியூயார்க் பட்டணத்தை வெடிக்கச் செய்து பூமியின் முகப்பிற்கு வெளியே தள்ளிவிடலாம். ஆகவே மனிதன் நரகத்தில் உட்கார்ந்து கொண்டு தன் மார்பில் தட்டிக் கொண்டு “நரகம் என்கிற இடம் இல்லவே இல்லை'' என்று கூறி தேவனுடைய வார்த்தையை எதிர்த்துக் கொண்டு இருக்கிறான். (அதைக் குறித்த சிறிது என்னிடம் உள்ளது, அதை நாம் பார்க்கப் போகிறோம்). ஒவ்வொரு நாளும் அது அடங்கிய (நரகம் - தமிழாக்கியோன்) பெரிய பானையில் நீங்கள் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் இங்கே இருக்கையில், நீங்கள் சரியாக அதன் மேலேயே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், உனக்கு அடியிலேயே நரகம் உள்ளது. 17. ஆகவே இப்பொழுது கவனியுங்கள். ஆனால் இப்பொழுது அது முதலில் கண்டுபிடிக்கப்பட்டபொழுது, இயேசு. இப்பொழுது அந்த சிறிய வட்ட வடிவைக் கவனியுங்கள். அது பூமியை நோக்கி அசைந்து சென்று, அதன் மேல் ஏறி சூரியனுக்கு அருகாமையிலே செல்லத் துவங்குவதை என்னால் காண முடிகிறது. அது ஒன்றுமல்ல, அது ஒரு பெரிய பனிக்கட்டிப் பந்துதான். ஆகவே அது உருக ஆரம்பித்தபோது, மெதுவாக நகரும் பெரிய பனிக்கட்டிகள் (Glaciers) வடக்கு பிரதேசங்களின் வழியாக வெட்டிக் கொண்டு வந்தன. அவ்வாறு அவை வந்த போது கான்சாஸ், டெக்ஸாஸ் போன்றவற்றையும் இன்னும் அங்கு இருந்த மற்ற பிரதேசங்களையும் வெட்டி அமைத்து பிறகு நேராக மெக்ஸிகோ வளைகுடாவிற்குள் சென்றடைந்தது. ஆகவே முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, முழுவதுமே தண்ணீரினால் மூடப்பட்டது. இப்பொழுது, நாம் நம்முடைய காட்சியை ஆதியாகமம் 1-ல் காணலாம். ''பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது அது சரிதானே-? “தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்''. இப்பொழுது, அவர் ஜலத்தை, வேறு பிரித்து மலைகளையும் நிலங்களையும் வெளி கொணர்ந்து உலாவிட்டார். தாவர வகைகள் மற்றும் எல்லாவற்றையும் அவர் உண்டாக்கினார். அவர் சந்திரனை உண்டாக்கினார். சமுத்திரம் கடக்காதவாறு அதற்கு எல்லைகளை அமைத்தார். 18. அவர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து...-? மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கினார், எல்லா ஜீவராசிகளும் பறவைகளும், பூச்சிகளும், குரங்குகளும் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கி பூமியின் மேல் வைத்தார். அதற்கு பிறகு இந்த கேள்வியைக் கேட்கிறார். ''நமது ரூபத்தின்படியே மனிதனை உண்டாக்குவோமாக'' (யார்-? பிதாவும், குமாரனும்) (ஆங்கிலத்திலே “Let us” என்பதற்கு “நாம் தாமே'' என்று பொருள், ஆங்கில வேதத்தில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) இப்பொழுது, மனிதனானவன் அந்த சிறிய பரிசுத்த ஒளியைப் போன்றோ அல்லது வேறெதாவதொன்றைப் போலவோ உருவாக்கப் பட்டிருந்தானானால், அது காணப்படக் கூடாததாகும் (அது ஒரு ஆவிக் குரிய நிலைபேறுடைய ஒன்று [spiritual Being)). ஆகவே அவர் தம்மைத் தாமே சிறிது மேலாக ஒரு திரித்துவமாக, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக ஆக்கிக் கொண்டு வெளிப்பட்டார் அல்லது வெளியாக்கிக் கொண்டார். “நாம் தாம் மனிதனை உண்டாக்குவோமாக'' என்று தேவன் இங்கே தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார், ”நாம் தாமே மனிதனை நமது சாயலாக உண்டாக்குவோமாக, அது அவருடைய குமாரனும், வேரும், சந்ததியாயும் இருந்தது. அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒருவன். அவன் ஜீவராசிகளையும், பிராணிகளையும் இன்னும் மற்றவைகளையும் ஆளக்கடவன்.'' இப்பொழுது, ஒரு மனிதன் ஒரு மனிதனை வழி நடத்தினான். பரிசுத்த ஆவி எப்படி ஒரு உண்மையான விசுவாசியை வழி நடத்துகிறதோ அதே போன்று மனிதன் பிராணிகளையும் மற்ற எல்லாவற்றையும் வழி நடத்தினான். தேவனுடைய சத்தம் அங்கே வெளியே... மனிதனின் சத்தம் அங்கே பேசி... பிராணிகளை இவ்வழியாக அழைத்தது, ஆடுகளை இந்த புல்வெளிக்கு கூப்பிட்டது. மீன்களை இந்த தண்ணீருக்கு அழைத்தது. பாருங்கள், அவன் அதிகாரம் உடையவனாய் இருந்தான், எல்லாம் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. 19. இப்பொழுது, ஆனால் நிலத்தை பண்படுத்துவதற்கோ, “உழுவதற்கோ அங்கே மனிதன் இல்லை, ஆதியாகமம் 2, நிலத்தை பண்படுத்த எந்த மனிதனும் இல்லை. அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார்'' (ஆதியாகமம்2:7). இப்பொழுது நாம் அதை கவனிப்போம், அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, இந்த இயற்கைக்கு மேம்பட்ட ஆவியை அவனுக்குள் வைத்தார்... இப்பொழுது, அவன் அங்கே படுத்துக் கிடந்தான். அதைக் குறித்த அநேக காட்சிகளை என்னால் எடுக்க இயலும். ஆதாம் நிற்பதை என்னால் காண முடிகிறது... அதை நாம் இந்த விதமாக எடுத்துக் கொள்வோம். ஒரு மரம் போல் அவன் நிற்பதாகப் பார்ப்போம். தேவன் அவனை உண்டாக்கினார். அவன் அப்படியே மரித்த நிலையில் கிடந்தான்; அவனுடைய பாதங்கள், நிலத்தில் வேர் ஒட்டிக் கொண்டிருப்பது போல இருந்தது. பிறகு தேவன், ''உண்டாகக் கடவது“ என்றார். அல்லது ஜீவசுவாசத்தை அவனுக்குள் ஊதினார். பிறகு அவன் குதித்தெழுந்து வெளி வந்தான். அவன் ஒரு ஜீவசுவாசத்தை அவனுக்குள் ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். இப்பொழுது அவன் அசையத் துவங்கினான். 20. ஆகையால் பிறகு தேவன் அவனிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். இப்பொழுது, ஸ்திரீக்கான ஆவியை எங்கிருந்து எடுத்தார்-? பாருங்கள்-? அவர் தாமே... ஆதியாகமம் 1:26-ல் அவர் கூறினார் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, ஆணும் (மனிதன்) பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். அவர் பலமிகுந்த ஆவியை மனிதனுக்கு உண்டாக்கினார். அவர் மிருதுவும், எளிமையும், புலன்களுக்கு இனியதான, பெண்மையின் ஆவியை பெண்ணிற்கு உண்டாக்கினார். ஆகையால், ஒரு ஸ்திரீ மனிதனைப் போன்று நடப்பதை நீங்கள் கவனிப்பீர்களானால், அவள் ஆதியிலிருந்த தன் ஸ்தானத்தை விட்டு இடம் மாறிவிட்டாள். பாருங்கள்-? அது சரி. அவள்... ஸ்திரீ தன் புனிதமான, பெண்மைக்குரிய இடத்தை இழந்து போயிருப்பது வெட்கத்திற்குரியது என்று நான் எண்ணுகிறேன். அது ஒரு பெருத்த அவமானம். நான் கூறுகிறேன் அது... நான் இதைக் கூறுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, இங்கிருக்கும் ஸ்திரீகளாகிய உங்களைக் குறித்து நான் கூறவில்லை, பேசவில்லை. ஆனால், உண்மையில், அது உங்களைப் புண்படுத்தும், அது அவ்விதமே செய்யும். ஆனால் பாருங்கள், உங்களை ஒன்று நான் கேட்கட்டும். ஸ்திரீகள் அவ்வளவு பெண்மை தன்மை வாய்ந்தவர்களாய் இருந்திருந்தார்கள். ஒரு மனிதன் அவர்களிடம் சென்று பேசினால், ஹம்-! அவர்கள் முகம் சிவந்து நாணம் கொள்வார்கள். எப்படியாயினும், நாணம் கொள்வதென்றால் என்ன-? அநேக காலமாக அதை நான் காண்பதில்லை. சில ஸ்திரீகள் நாணம் கொண்டாலும் கூட அது எனக்கு தெரியாமல் போகின்றது. ஏனென்றால் நீண்ட காலமாக அதை நான் கண்டதில்லை, காண்பதில்லை. அந்த மதிப்பிற்குரிய காரியத்தை அந்த அருமையான பெண்மைக்குரிய ஆவியை இன்னுமாய் அவர்கள் உடையவர்களாய் இல்லை. அவர்கள் ஒரு... அவர்களால்... அவர்கள் மனிதனைப் போல உடையணிந்து கொள்கின்றனர். மனிதனைப் போன்று மயிரை வெட்டுகின்றனர். மனிதனைப் போல புகைப் பிடிக்கின்றனர், குடிக்கின்றனர், மனிதனைப் போல வக்கிரம் கொள்கின்றனர், மனிதனைப் போல வாக்களிக்கின்றனர், மனிதனைப்போல வேலை செய்கின்றனர். கடினமாகி, வலுவாகி இன்னுமாய் இருக்கின்றனர். ஓ, என்னே-! அது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. முற்றிலும் சரி. 21. அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயைக் காண்பதென்பது இப்பொழுது கடினமான ஒரு காரியமாகும். இன்னுமாக அதே போன்று காண முடியாது. அது சரிதானே-? ஆம். அது உண்மையாகும். ஆகையால் ஒரு ஸ்திரீ எழுந்து ஒரு மனிதனைப்போல வலுவுள்ளதாகவும், பெரியவளாகவும், இருக்கும்படி எண்ணப்படவில்லை. ஏனென்றால் அவள் மதுரமுள்ள தன்மை கொண்டவள். தேவன் அவ்வாறேதான் அவளை உண்டாக்கினார். வேதவாக்கியங்களின் மூலமாக அதை என்னால் நிரூபிக்க முடியும். ஆம் ஐயா. அது சரி. ஆகையால்... நாம் இந்தக் கேள்வியை விட்டு அப்புறம் செல்கிறோம். ஆனால் இந்தக் கேள்வியிலிருந்து அநேக காரியங்களை எடுக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாருங்கள், அங்குதான் அவர் தம்முடைய ரூபத்தின்படியே முதலாவது மனிதனை உண்டாக்கினார். 22. ஆகவே பிறகு, தேவன் ஒரு நட்சத்திரத்தையும் கூட உருவாக்கு முன்பே, உலகம் இருக்கும் என்று அறிந்திருந்தார். அவருக்கு, நான் வில்லியம் பிரான்ஹாமாக இருந்து, அந்த முற்பட உருப்படுத்திக் காட்டுதலில் (prefigure) சுவிசேஷத்தை பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பேன் என்றும், நீங்கள் ஜான் டோவைப் போல அங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பீர்களென்றும் உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவருக்கு தெரியும். அல்லேலூயா-! இப்பொழுது, இங்கே தான் சட்ட கால்வீனிஸ்டுகள் குழம்பிப் போகிறார்கள். பாருங்கள்-? ''ஏன் முன்குறிக்கப்பட்ட சிலர் இழந்து போகப்பட வேண்டும்-?'' என்று கூறுகிறார்கள். யாராவது சிலர் அழிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. ஒருவரும் அழியக் கூடாது என்று தான் அவர் விரும்புகிறார். ஆனாலும் அவர் தேவனாயிருப்பதால், சிலர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் அவர் அறிவார். பாருங்கள்-? பாருங்கள், அவர் தேவனாய் இருப்பாரானால் துவக்கம் முதல் முடிவு வரை அவர் அறிந்திருக்க வேண்டும். அப்படித்தானே-? 23. ஆகையால் சில ஸ்திரீகளை அவர் உடையவராய் இருக்கப் போகிறார் என்று அவர் அறிவார். ஆதலால் அவர்களுடைய ஆவியை சரியாக அங்கே உண்டாக்கினார். ''அவர் அவனை, மனிதனை, ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தார்“ என்று வேதம் ஆதியாகமம் 1:26-ல் கூறுகின்றது. ஆமென். பாருங்கள்-? அவர் ஒரு முன்வடிவில், அவர்கள் பூமியின் மண்ணினாலே உருவாக்கப்படும் முன்பே, அவர் அவர்களை ஒரு முன்வடிவில் ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். அதன்பின் தேவன் மனிதனை உண்டாக்கினார், தம்முடைய சொந்த சாயலில் அல்ல. இந்த சரீரமானது தேவனுடைய சாயலின்படி இல்லை. இந்த சரீரமானது மிருகங்களின் சாயிலின்படிதான் உள்ளது. 24. (என்னுடைய கோட்டை நான் கழற்றி விடட்டுமா-? இங்கு உஷ்ணமாக இருக்கின்றது. உள்ளே ஒரு கிழிந்த சட்டையை அணிந்து இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் காண முடியாது. ஏனென்றால் அது ஒரு ஜெஸிசலவையிலிருந்து எடுத்து வரவில்லை, ஆகையால். ஆனால் கவனியுங்கள், நாம் ஒரு பொருளின்மேல், பாகத்தில் மேல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். பிரசங்க பீடத்தில் கிழிந்த சட்டை ஒரு பொருட்டல்ல. அப்படித்தானே-? அது நித்திய ஜீவன் ஆகும்). 25. இப்பொழுது, மனிதனைக் கவனியுங்கள். தாம் ஒரு மனிதனையும், ஸ்திரீகளையும் உடையவராய் இருக்கப் போகிறார் என்பதை தேவன் ஆதியிலேயே அறிந்திருந்தார், ஒரு இரட்சகர் இங்கு இருக்கப் போகிறார் என்றும், அவர் இயேசுவைக் கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர் சிலுவையில் அறையப்படுவார் என்றும் அவர் அறிந்திருந்தார். இப்பூமியிலே இயேசு இருந்தபோது தம்முடைய சீஷர்களிடத்திலே அவர்களை, “உலகம் தோன்றுவதற்கு முன்பே அறிந்திருந்தார்'' என்று கூறினார். உலகம் என்பது உண்டாவதற்கு முன்னரே. ஆகவே தேவன் கூறினார், அல்லது பவுல் கலாத்தியரிலே “உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே அவர் நம்மை நியமித்து அவனுக்குள்ளாக அழைத்தார்'' என்று கூறுகிறார். அதை நினைத்துப் பாருங்கள்-! தேவன். இதைக் குறித்த வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறதென்று கேட்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கேள்வியோடு சரியாக அது செல்கின்றதாய் இருக்கின்றது. இப்பொழுது என்னுடனேயே கலாத்தியர் 1-ஆம் அதிகாரத்தை புரட்டுங்கள், இங்கு கவனியுங்கள் கலாத்தியர், இல்லை. எபேசியர். இப்பொழுது எபேசியர் 1-ல் தேவன் என்ன கூறுகிறார் என்பதை கவனமாகக் கேளுங்கள்: தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர் வதித்திருக்கிறார். இங்கிருக்கிறது, இப்பொழுது கவனியுங்கள்: அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... (வியூ-!) அது மிகவும் அருமையானது அல்லவா-? அது மிகவும் அருமையானது அல்ல, அது உண்மையாகவே மிகவும் அருமையானது. உலகம் தோன்று முன்பே தேவன் ஆர்மன் நெவிலை அறிந்திருந்தார். அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார் என்றும் தேவன் அறிந்திருந்தார். ஆர்மன் நெவில் சுவிசேஷத்தை பிரசங்கிப்பார் என்று உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் அறிவார். அது ஆச்சரியமானதல்லவா-? அவர் தெரிந்தெடுத்தார். ''ஏன், அவர் சபையின் ஒரு அங்கத்தினர், தாம் அந்த சபையை உடையவராய் இருக்கப் போகிறார் என்பதை தேவன் அறிவார். அவர் தமக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்'' என்று, எபேசு சபைக்கு பவுல் கூறினான். இப்பொழுது நாம் எல்லாரும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினராய் இருக்கிறோம். அது சரிதானே-? உலகம் தோன்றுவதற்கு முன்னரே தேவன் உன்னையும், என்னையும் தமக்குள் தெரிந்து கொண்டார். வியூ என்னே-! அது ஆச்சரியமானதல்லவா-? 26. இப்பொழுது முதலாவது மனிதன், அவர் முதலாவது மனிதனை தம்முடைய ரூபத்தின்படியே உண்டாக்கினார், நாம் அந்த ரூபத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றோம், அது சரி, உண்டாக்கப்பட்ட நம்முடைய முதலாம் ரூபத்திற்கு. வில்லியம் பிரன்ஹாமாகிய என்னை தேவன் உண்டாக்கின போது, உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே நான் இருந்தேன், அவர் என் சரீரத்தையும், ஆவியையும் உண்டாக்கினார். எனக்குத் தெரிந்தவரை என்ன நடந்தது என்பதை நான் அறியாதவனாய் இருந்தேன், ஆனால் நான் அங்கு இருந்தேன். ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். ஆகையால் இப்பொழுது, ஒரு நிமிடம், இயேசு தம்முடைய சீஷர்களிடம் ''உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவர்களை அறிந்திருந்தேன்'' என்று கூறினார். இங்கே பவுல், ''உலகம் தோன்று முன்னரே, தமக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்,'' என்று கூறுகிறான். இப்பொழுது அங்கே என்னுடைய ஒருபாகம், சகோதரன் ஆர்மன் நெவில் மற்றும் உங்கள் எல்லாருடைய ஒரு பாகம் உலகம் தோன்றுவதற்கு முன்பே கிறிஸ்து இயேசுவிற்குள் இருந்தது. இப்பொழுது அதைக் குறித்த என்னுடைய மதிப்பீடு என்னவென்றால், இன்றைக்கு இந்த ஆவியைப் பெற்றுள்ள மக்கள், அல்லது அந்த ஆவி தேவனை சுற்றியிருந்த முறைப்படி மாற்றி மாற்றி சுழன்ற (Rotated), பரலோகத்திலே சாத்தானுடைய பொய்யை எதிர்த்த, ஆதியிலே விழுந்து போகாத தூதர்கள் ஆவியை மக்கள் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். 27. பூமியின் மூன்றில் இரண்டு பாகம், அதற்கும் மேலாக பாவத்தில் உள்ளது. மூன்றில் இரண்டு பாகமான தூதர்கள் உதைத்து தள்ளப்பட்டனர். ஆகையால் அந்த பிசாசின் ஆவிகள் ஜனங்களுக்குள் வந்து அவர்கள் சரீரங்களில் குடிகொண்டன. நான் என்ன கூற விழைகிறேன் என்பதைப் பாருங்கள்-? அவைகள் பிசாசுகள்... அவைகள் ஜனங்களுக்குள் வந்து ஒரு சுபாவத்தை, தன்மையை அளிக்கின்றன. இயேசு மகதலேனா மரியாளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை விரட்டினார். பெருமை, அகங்காரம் (நீங்கள் பாருங்கள், பெரிய மக்கள்) அசுத்தம், ஆபாசம், தீய ஒழுக்கம், மிஞ்சும் தன்மை, சச்சரவு, இவைகள் எல்லாம், பாருங்கள். தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலின்படியே உண்டாக்க துவங்கின போது இந்த ஆவிகளெல்லாம் அங்கே உண்டாக்கப்பட்டு இருந்தன. இயற்கை முறைக்குள் அடங்காத, அந்த ஆவிகள் உண்டாக்கப்பட்டன. 28. பிறகு அவர் மனிதனை பூமியின் மண்ணிலே வைத்தார், அவன் தான் முதலாவது மனிதன், ஆதாம் ஆவான். அந்த மனிதன் அந்த ரூபத்தின்படியே உருவாக்கப்பட்டான், இங்கிருக்கும் இந்த மானிட மனிதன், அவன் ஒரு மிருகத்தின் ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவன் ஆகும். இந்த மனித சரீரங்கள் மிருகங்களின் ரூபத்தின்படி உருவாக்கப்பட்டதாகும். நமக்கு ஒரு குரங்கிற்கு இருப்பது போன்ற கையும், ஒரு கரடிக்கு இருக்கும் காலைப் போலவும் இருக்கின்றது. ஒரு சிறிய கரடிக் குட்டியை எடுத்து, அதன் தோல்களையெல்லாம் உரித்து, ஒரு சிறிய பெண் குழந்தைக்கு பக்கத்திலே தலைகீழாக படுக்கவைத்து அதில் வித்தியாசம் உள்ளதா என்றுபார். ஹம்-! சகோதரனே, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் மார்பு, வயிறு பாகத்திற்கு இடையே உள்ள தடித்த தசைச்சுவர், உதரவிதானம் (Diaphram), மற்றும் அதன் முழு அமைப்பும், அது உருவாக்கப்பட்ட விதமும், அதன் ரூபமும், மற்ற எல்லாமுமே சரியாக ஒன்று போலவே இருக்கும். அது மிருகத்தின் ரூபத்தின்படியே உள்ளது, மிருகங்களை வழி நடத்துவது அவனுடைய கடமையாக இருந்ததால். அவன் மிருகத்தின் சாயலைப் போன்ற ஓன்றாக உண்டாக்கப்பட்டான். 29.. ஆகவே பரிசுத்த ஆவி ஒரு மனிதனிடத்திலிருந்து எடுக்கப்படுமானால், அவன் மிருகத்தைக் காட்டிலும் தாழ்ந்தவனாயிருப்பான், அவன் மிருகத்தை விட மோசமானவனாயிருப்பான். அவ்விதம் கூறுவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால், நீங்கள், தன் சிந்தையிலே மறுஜென்மமடையாத அவன் நினைவுகளை வழிநடத்த பரிசுத்த ஆவியற்ற ஒரு மனிதனைக் காண்பீர்களானால், அவன் ஒருதாயின் கையில் உள்ள ஒரு குழந்தையை பிடுங்கி எறிந்து, மிருக இச்சை கொண்டு அவளை மானபங்கப்படுத்திவிடுகிறவனாக இருப்பான். அது முற்றிலும் சரியே. ஒரு கெட்ட ஸ்திரீயை எடுத்துக்கொண்டால் - நீ ஒரு வயதான தாய் காட்டுப் பன்றியை (hog) அல்லது ஒரு வயதான நாயை (dog) எடுத்துக் கொண்டால், அதற்கு எல்லா பெயர்களையும் சொல்லி அழைப்போம்... ஆனால் அதனுடைய ஒழுக்கமானது தன் குட்டி நாய்களுக்காக, காட்டுப்பன்றி தன்னுடைய குட்டிகளுக்காக இருக்கின்றன. ஆனால் ஒரு சாதாரண ஒழுக்கமில்லாத ஸ்திரீ... எப்பொழுதுமே, எல்லா நேரமும் நாற்றமெடுக்கும் ஒருவள் ஆவாள். அது சரி. ஆகவே ஞாபகங்கொள்ளுங்கள், கிறிஸ்து இல்லாமல், உன்னுடைய ஒழுக்கமானது. ஒரு நாய்க்குக் கீழாகச் சென்றுவிடும். அது சரி. ஒரு நாயோ, அல்லது மற்ற மிருகமோ ஆடையினால் தன்னை மூடிக்கொள்ளத் தேவையில்லை. மனிதன்தான் விழுந்து போனவன் ஆவான், மிருக ஜீவன்கள் அல்ல. ஆனால், மிருக ஜீவனானது மனிதனுக்கு (மனித ஜீவனுக்கு) கீழாக உள்ளது, ஏனென்றால் அதற்கு வழிகாட்டியும், சிறந்த தலைவனும் மனிதனே ஆவான். பூமியில் உள்ள எல்லா மிருகமும் மனிதனுக்கு பயப்படுகின்றன. யாரோ ஒருவர், முன்பு ஒரு சமயம், வேட்டையைப் பற்றி என்னிடம், “நீங்கள் அதற்கு பயம் கொள்வதில்லையா-?”, என்று கேட்டார். ஏன், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு மிருகமும் ஆதியிலிருந்து மனிதனைக் கண்டு பயப்படுகின்றது, ஏனெனில் ஆதியிலிருந்து அது அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள்-? நிச்சயமாக, நீ ஓடுவாயானால், உனக்கு பின்னாலே அது ஓடிவரும், அது சரியே. ஒரு நாய் அல்லது நீ செய்ய வேண்டும் என்று விரும்பும் எதுவும் அவ்விதமேயாகும். அதுசரி. 30. ஆனால் இப்பொழுது கவனியுங்கள், ஒரு மனிதன் இங்கே வருவானானால்... நீங்கள், “இப்பொழுது அதைக் குறித்து என்ன சகோதரன் பிரான்ஹாமே-?'' என்று கூறலாம். இப்பொழுது, நீ தேவனை சரியாகக் காணலாம், ஒருத்துவத்திற்கும் திரித்துவத்திற்கும் நடுவில் சரியாக அதை இப்பொழுது காண்பாய். இப்பொழுது கவனியுங்கள், தேவன் தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டார், அவர் கீழேயுள்ள இந்த மனிதனிடம் வரும் அளவிற்கு தம்மைத் தாழ்த்தி தம்மை வெளிப்படுத்தினார். இப்பொழுது, மனிதன் பாவம் செய்தான், தன்னுடைய ஆவியினால் அல்ல, ஆனால் அவன் தன்னுடைய சரீரத்தின் இச்சை, ஆசையில் பாவம் செய்தான். அவன் பாவம் செய்தபொழுது தன்னுடைய சிருஷ்டிகரிடத்திலிருந்து தன்னை வேறு பிரித்துக் கொண்டான். ஆகவே பிறகு தேவன், அந்த லோகாஸ், அவனை சிருஷ்டித்த அதே சிருஷ்டிகர், கீழே வந்து மனிதனுடைய சாயலின் படியே உருவாக்கப்பட்டார். மனிதன் தேவனுடைய சாயலின்படி உருவாக்கப்பட்டான். பிறகு மிருகத்தின் சாயலின்படி அவன் உண்டாக்கப்பட்டு விழுந்து போனான். ஆகவே தேவன் மனித சாயலின்படியே கிறிஸ்து இயேசு என்னும் மனிதனுக்குள் வந்து பாடு அனுபவிக்க கீழே வந்தார். தேவன் ஆவியிலே பாடு அனுபவிக்க முடியாது. தேவன் ஆவியில் எவ்விதம் சரீரபூர்வமான பாடனுபவிக்க முடியும்-? அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆகவே தேவன் மனித சாயலின்படியே உருவாக்கப்பட்டு இழந்து போனவர்களை மீட்க தம்மை வெளிப்படுத்தினார். பாருங்கள்-? பிறகு தேவன் மாம்சத்திலே பாடனுபவித்தார். 1தீமோத்மேயு 3:16, “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், தேவ தூதர்களால் காணப்பட்டார், சிலுவையிலறையப்பட்டார் பிரசங்கிக்கப்பட்டார், விசுவாசிக்கப்பட்டார், தேவனுடைய வலதுபாரிசத்திற்கு ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்'' அது சரிதானே-? தேவன் தாமே கீழிறங்கி வந்து மனித சரீரத்திலே வாசம் பண்ணி சோதனையை அனுபவித்தார். ''தேவன் கிறிஸ்துவிற்குள் இருந்து, உலகத்தை தம்மோடே ஓப்புரவாக்கினார்'' அன்பு என்றால் என்னவென்று பாருங்கள்-? தேவனுடைய அன்பு-! 31. இப்பொழுது, இப்பொழுது, மனிதனும், ஸ்திரீயும், அதை நாம் காண்போம் என்று நம்புகிறேன். இப்பொழுது ஒரு ஸ்திரி... இப்பொழுது இதை நீங்கள் காணும் விதத்தில் இதை நான் சரியாகக் கூறட்டும், பாருங்கள். “ஸ்திரீ தன்னுடைய புருஷனுக்கு உட்பட்டவளாவாள். ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை ஆளுகை செய்ய வேண்டும்'' என்று வேதம் கூறுகின்றது. ஆனால் அவர்கள் அதை எப்படி மாற்றிப்போட்டுவிட்டார்கள்-! ஸ்திரீ மனிதன் மீது ஆளுகை செலுத்துகிறாள், ''இப்பொழுது, ஜான் நீ வீட்டில் இரு நீ வெளியில் செல்லக்கூடாது-!'' ''சரி என் அன்பே'' அதுதான் காரியம், பாருங்கள்-? திரு. அவர்களே, உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும். உன் மனைவிக்காக நீதான் பதில் கூறப் போகிறாய், ஆனால் உன்னுடைய மனைவி உனக்காக பதில் சொல்லப் போவதில்லை. நீ தான் ஸ்திரீக்குத் தலை, தேவன் மனிதனுக்குத் தலையாய் இருக்கிறார். ஆதலால் அவர், ஒரு மனிதன் கிறிஸ்துவுக்காக தன் மயிரைக் கத்தரிக்ககடவன். ஒரு ஸ்திரீ தன் மயிரை கத்தரிக்காதிருக்கக்கடவள். அவள் அவ்விதம் தன் மயிரைக் கத்தரித்தால், “அவள் தன் புருஷனை அவமதிக்கிறாள்'' என்று கூறினார். பாருங்கள்-? வேதவாக்கியம் கூறுகிறபடி நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா-? 32. ஷ்ரீவ்போர்டில் ஒருநாள் அதைக் குறித்து சூடாக பேசினேன். ஸ்திரீகளுக்கு நீண்ட மயிர் இருக்கலாமா என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான், ''கத்தரிக்கப்பட்ட குட்டை மயிர் உடைய ஸ்திரீகளை விவாகரத்து செய்ய புருஷனுக்கு, அதிகாரம் உண்டு. அது வேதாகம அதிகாரம்“ என்றேன். அது சரியே. வேதாகமம் அதைத்தான் உங்கள் கண்களால் தேவனைக் காணமுடியாது. அதைச் செய்ய உங்களுக்கு அவைகளை அவர் அளிக்கவில்லை. நீங்கள்... கூறுகின்றது. அது முற்றிலும் சரியே. ஓ, என்னே-! தங்களுக்கு போதிக்கப்பட்டபடியே பரிசுத்த ஆவிபெற்ற ஸ்திரீகள் அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதுதான். பாருங்கள்-? ஆம், அதில் சிறிது தளர்ந்தால். பிறகு... அவர், ''இப்பொழுது, அவர்கள் அதைக் கத்திரிக்க வேண்டுமெனில், ஏதோ ஒரு கோளாறு இருந்து தங்கள் மயிரைக் கத்தரித்துத் தான் ஆகவேண்டுமென்று இருந்தால், ஒரு சவரக்கத்தியை எடுத்து முழுவதுமாக மொட்டை அடித்து பிறகு அவளுடைய மயிரை வழவழப்பாகக் செய்யுங்கள்'' என்றார். நீ அவ்வழியாக வருவது சிறந்ததாகும். அது சரி. வேதவாக்கியமும் அதைத்தான் கூறினது. அது, ''அவள் தன் மயிரைக் கத்தரித்து, தன் புருஷனை கனவீனப்படுத்துகிறாள். கனவீனமான ஒரு ஸ்திரீயை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து தள்ளிவிடலாம்'' என்று கூறுகின்றது. ஆனால், இப்பொழுது அவன் திரும்பவும் விவாகம் செய்யக் கூடாது. ஆனால் அவன் அவளை விவாகரத்து செய்யலாம். அது சரி. அது வேதப் பூர்வமானது. ஓ சகோதரனே, நமக்கு தேவை என்னவென்றால் இன்னும் கேள்விகளுக்கான சில இரவுகள் வேண்டும்-! அது சரி. நீங்கள் அதைப் படிக்க விரும்பினால் அது 1கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் ஆகும். அது சரி. இப்பொழுது இந்த ஸ்திரீ... 33. தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அவர் என்ன செய்தார் என்பதைக் காண்கிறீர்களா-? அவர் மனிதனை உருவாக்கினார். அவர் உருவாக்கினார்... இப்பொழுது, அதுதான் முதலாம் கேள்வி, பாருங்கள், “அவர்களைச் சிருஷ்டித்தார்'' ஆதியாகமம் 1:26 ஆதியாகமம் 2:7-ல் ”அவர் அவர்களை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்''. கேள்வி: என்ன வித்தியாசம் உள்ளது, அல்லது மேற்கூறப்பட்ட வேத வாக்கியத்தில் தொடர்பு, இணைப்பு எங்குள்ளது-? முதலாம் மனிதன் இரண்டாம் மனிதனிடத்தில் எப்படிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தான்-? இரண்டாம் மனிதன், உண்டாக்கப்பட்ட, ஐந்து புலன்களில் வெளிப்படையான முதலாம் மனுஷனாய் இருக்கிறான். பாருங்கள்-? இப்பொழுது தேவனை உங்கள் கைகளினால் அவ்விதம் தொட முடியாது, 34.. ஒரு வயதான பரிசுத்தவான் மரிக்கும்போது ''அங்கே தாயார் உள்ளார், நான் அவர்களை அநேக ஆண்டுகளாகக் காணவில்லை-?'' என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா-? மக்கள் இப்படி கூறுவதை கேட்டிருக்கிறீர்களா...-? பாருங்கள், அது என்ன, அவர்களுடைய கண்கள் மங்கி, இயற்கைக்கு மேம்பட்ட கண்கள் உள் வருகின்றன. பாருங்கள்-? ஆகவே சில சமயங்களில் நாம்... தேவன் அவ்வாறு செய்வாரானால்... இயற்கைக் கண்கள் மங்கும்போது நாம் தரிசனங்களைக் காண்கிறோம். சரியாக நமக்கு முன்பாக, நாம் நேராகப் பார்க்கையில், அங்கே நமக்கு முன்பாக ஒரு தரிசனம் தோன்றி தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை நமக்கு காண்பிக்கிறது. நான் என்ன கூற விழைகிறேன் என்பதைப் பாருங்கள்-? ஆகவே பாருங்கள், ''இங்கு பூமிக்குரிய கூடாரமாகிய...'' இப்பொழுது இங்குள்ள ஆண்கள் பெண்களில் சிலர் முதிர்வயதை அடைந்துக் கொண்டிருக்கின்றனர். கவனியுங்கள். ''இந்த பூமிக்குரிய கூடாரமாகிய..'' அங்கிருக்கும் தொண்ணூற்றிரண்டு வயது நிரம்பிய தந்தையைக் குறித்து நான் நினைக்கிறேன். “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், அங்கே (அழியாத) ஒரு ஆவிக்குரிய மனிதன், ஒரு ஆவிக்குரிய சரீரம் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நான் உங்களை அங்கு காண்பேன். நான் நடந்து செல்வேன்... 35. அங்கே சகோதரன் நெவிலை என்னால் தொட இயலாது, ஏனென்றால் அவர்கள் பலிபீடத்தின் கீழே உள்ள ஆத்துமாக்களாய், அவர்கள் ''எவ்வளவு காலம் ஆண்டவரே, எவ்வளவு காலம்-?'' என்று கதறுவதை யோவான் கண்டான். அது ஏனென்று நாம் வெளிப்படுத்தலை ஆராய்ந்தோம். அவர்கள் திரும்பி வரவும், தங்கள் சரீரங்கள், அழிவில்லாத சரீரங்களாகிய அங்கியால் போர்த்தப்படவும், அவர்கள் எவ்வளவாய் வாஞ்சித்தனர். அவர்கள், “எவ்வளவு காலம் ஆண்டவரே-?'' என்று கதறினர். இப்பொழுது, ஒருவரையொருவர் அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால் பேசவோ, கைகளைக் குலுக்கவோ அவர்களால் இயலவில்லை அல்லது என்னை மன்னிக்... அவர்களால் பேச முடிந்தது, ஆனால் அவர்களால் கைகுலுக்குதலையோ, மற்றவைகளையோ செய்ய முடியவில்லை. இங்கே அதை நிரூபிக்க ஒரு காட்சி உள்ளது. எந்தோரின் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சாமுவேலின் ஆவியை அழைத்தபோது, சவுல் அதைக் கண்டு அது சாமுவேலின் ஆவி என்று அடையாளம் கண்டுகொண்டான். சாமுவேல் சவுலை அடையாளங்கண்டு, ''நீ என்னை எழுப்பி வரப்பண்ணி என்னைக் கலைத்தது என்ன, கர்த்தர் உன்னை விட்டு விலகி உனக்கு சத்துருவாய் இருக்கும்போது நீ என்னிடத்தில் கேட்பானேன்-?'' என்று கூறினான். அது சரிதானே-? அங்கே வயதான சாமுவேல் தீர்க்கதரிசியின் சால்வையைப் போர்த்திக் கொண்டு அவனை நோக்கிப் பார்த்தான். அவன் ஆவியாய் இருந்தான். “அந்த அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்'' என்று கூறி தரையில் விழுந்தாள். ''ஏன் என்னை கலைத்தாய்-?“ என்று அவன் கூறினான். அதற்கு அவன் “நல்லது, யுத்தம் எப்படி நடக்கின்றது என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்,'' என்றான். அவன், ''நாளை நீ யுத்தத்தில் மரிக்கப்போகிறாய், நீயும் உன்னுடைய குமாரரும் நாளைய இரவு இந்நேரத்தில் என்னோடிருப்பீர்கள் என்றான்'' பாருங்கள்-? அவன் சுயநினைவு கொண்டவனாய் இருந்தான், அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீக்கும், சவுலுக்கும், அவன் இங்கே பூமியில் இருந்தபொழுது அவர்களுக்குச் செய்ததையே மறுபடியும் செய்தான். 36. இப்பொழுது கவனியுங்கள். அநேக சமயங்களில்... தாயும் தந்தையும் மரிக்கும்போது தாங்கள் நேசித்தவர்கள் அருகில் நிற்பதைக் கண்டார்களே அதைக் குறித்தென்ன-? ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட சரீரத்தில், அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார்கள். ஆனால் இப்பொழுது மகிமையான பாகம் இங்குள்ளது. இயேசு திரும்பவுமாக உயிர்த்தெழுதலில் வருகையில், அது அந்த சரீரமாக இருக்காது. அந்த சரீரம் அப்போது, பூமிக்கு வந்து ஸ்திரீயினால் பிறப்பிக்கப்படாத, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட (அல்லேலுயா-!) வயது ஆகாத, அல்லது சுருக்கம் விழாத, வேறொரு சரீரத்தை பெற்றுக் கொள்ள வரும், உன்னுடைய தலையில் நரைத்தமயிர் உண்டாகாது. எப்போதுமே பரிபூரணமாக இருக்க, அல்லேலுயா-! ஓ, சகோதரனே, இந்த உஷ்ணமான இரவில் அது என்னை கூச்சலிடச் செய்யும்-! அது சரி-! ஓ, என்னுடைய இந்த மாம்சப் போர்வையானது விழுந்து, நான் எழுந்து, நித்தியமான பரிசைப் பற்றிக் கொள்வேன்-! கவலை கொள்ள உலகத்தில் நமக்கு என்ன இருக்கிறது-? 37. தேவன் என்னை எவ்விதம் ஆதியிலே சிருஷ்டித்தார் என்ற முழு திட்டமும் அங்கே இருக்கின்றது. நான் இங்கே பூமிக்கு இறங்கி வந்து, சுவிசேஷ பிரசங்கியாக என் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன், அல்லது உங்களைப் போல, நீங்கள் ஆண் அல்லது பெண்ணாக இரட்சிப்பைப் பெற்று, பிறகு தேவனுடைய கிருபையால் நீங்கள் ஜீவிக்கின்றீர்கள். அல்லேலூயா-! ஆதியிலே இருந்த அதே ஆவிதான் இங்கேயிருந்து செல்கின்றது. நான் இங்கே இருந்தேன் என்ற நினைவோடு (அல்லேலுயா-!) பீடத்தின் கீழாக காத்திருந்து, எப்போதுமாக ஆசீர்வாதிக்கப்பட்டு இளைப்பாறுவேன். மறுபடியுமாக திரும்பி நான் வரும்போது, மரணம் என் சரீரத்தைத் தாக்கினதற்கு முன்னிருந்த அந்த மிகச் சிறப்பின் சரீரத்தை நான் எடுத்துக் கொள்வேன், அப்படியே அதை எடுத்துக் கொள்வேன். உனக்கு 22 அல்லது 23 வயதாகையில் நீ தளர ஆரம்பிக்கின்றாய், மரணம் உன்னை தாக்குகின்றது. உனக்கு இருபத்தைந்து வயது ஆனபிறகு நீ முன்பிருந்த மனிதனைப் போலவோ அல்லது ஸ்திரீயைப் போலவோ உன்னால் இருக்கமுடியாது, ஏதோ ஒன்று உள் வருகின்றது. உன் கண்களுக்கு கீழாக சுருக்கம் ஆரம்பிக்கின்றது. நீ முன்பிருந்தது போலவே உன்னால் சலவைசெய்ய முடியாது. உனக்கு முப்பது வயதாகும் போது அதை அதிகமாகக் காணலாம். என்னைப் போல நாற்பத்து நான்கு வயதாகும் வரை காத்திரு, அப்பொழுது நீ உண்மையாகவே அதைக் காண்பாய். ஆனால் ஓ சகோதரனே-! நான் எண்பது, தொண்ணூறு வயதாகி கோலுன்றி அங்கு நிற்கும் வரை காத்திரு. அது என்ன-? தேவன் அவனை ஒரு ஓட்டப் பந்தயத்திற்கு ஓட வைக்கிறார். ஆனால் மகிமையான ஒரு நாளிலே மரணம் உள் வருகின்றது. 38. ஒரு சமயத்தில் நான் அகன்ற தோள்களையும், கருமை நிற மயிரையும் (தலை முழுவதுமாக) என் கண்களின் கீழே சுருக்கம் விழாதவனாக இருந்தேன்; இப்பொழுது என்னைப் பாருங்கள். தளர்ந்து கொண்டிருக்கிறவனாக, தோள்கள் சரிந்தவனாக, பருமனாகிக் கொண்டு, கண்களின் கீழ் சுருக்கம் விழுந்தவனாக, வழுக்கைத் தலையாக இருக்கிறேன். ஏன், இந்த கடைசி இருபது ஆண்டுகளாக மரணம் எனக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். மரணம்தான் அதைச் செய்து கொண்டிருக்கின்றது.தேவன் என்னை வாழ அனுமதிப்பாரானால், நான் எண்பது வயதாகும் வரை பொறுத்திருங்கள், காண்பதற்கு நான் எப்படியிருப்பேன், இந்த பழைய கோலை ஊன்றிக் கொண்டிருப்பேன், அதைப்போல எங்கேயோ நடுங்கிக் கொண்டிருப்பேன். ஆனால், அல்லேலுயா, மகிமையான ஒரு நாளில் மரணம் தன்னுடைய முழுவதையுமே எடுத்துக் கொள்ளும். பிறகு நான் உயிர்த்தெழுதலிலே எழுந்திருக்கையில், நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பேன், திருமதி. பிரான்ஹாம், திரு பிரான்ஹாம் அவர்களால் உண்டாக்கப்பட்ட சரீரத்தில் அல்ல, ஆனால் தேவன் இந்த பூமியில் எப்படி சிறந்ததாக என்னைச் சிருஷ்டித்தாரோ, அதேபோன்று இருப்பேன். நான் சோதனைகளிலிருந்தும், பாவத்திலிருந்தும், மற்ற எல்லாக் காரியத்திலிருந்தும் விடுதலையடைந்தவனாக, இருதய கோளாறு, வியாதி எப்போதுமே வராதவாறு தேவன் தாமே சிருஷ்டித்த ஒன்றாக இருப்பேன். ஓ, என்னே-! பிறகு நான் என்னுடைய சிறிய மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு தேவனுடைய பரதீசியிலே புதியவனாக நடந்து செல்வேன். நீங்களும் அதைப் போன்றே செய்வீர்கள். இப்பொழுது இன்றிரவு நீங்கள் கூட்டிக்கொண்டு செல்லும் தலை நரைத்துப் போன வயதான மனைவி என்று நீங்கள் அழைக்கும் அவள், நீங்கள் பீடத்தின் அருகே விவாகம் செய்தபோது எப்படி இருந்தாளோ அதைப் போலவே அழகாக இருப்பாள். அல்லேலுயா-! வ்யூ-! அது ஒரு மனிதனைக் கூச்சலிடச் செய்யப் போதுமானதாக இருக்கும். அப்படித்தானே-? பாருங்கள்-? 39. அது சரி, அதுதான் அந்த தொடர்பு, இணைப்பு. தேவன் உறுதியுள்ளவர் ஆவார். தேவன் ஒரு காரியத்தைச் செய்ய முடிவு செய்வாரானால் எண்ணம் கொள்வாரானால், அது அப்படியே ஆகவேண்டும். சாத்தான் இக்காரியத்தை பாலுணர்ச்சியின் மூலமும், ஸ்திரியின் மூலமும், பிள்ளை பெறச் செய்து அதைப் பாழாக்கினான். அவன் இதைப் பாழாக்கினான். ஆனால் அதனோடே முன் செல்லுங்கள், அது சரிதான். இந்த ஜீவியமானது இதை எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், நீ அந்த உருவையும், சாயலையும் எடுத்துக் கொள்ளுகிறாய் என்பது தான் நீ இந்த ஜீவியத்தில் செய்கின்ற ஒரே காரியமாகும். இப்பொழுது நீ சிகப்பு நிற மயிரையுடைய தலையுடன் இருந்தால், நீ அங்கு அவ்விதமே இருப்பாய். நீ கருமை நிற மயிரையுடைய தலையுடன் இருந்தால், அங்கு அவ்விதமே இருப்பாய். பாருங்கள், நீ சிறந்த முறையில் எப்படியெல்லாம் இருந்தாயோ. நீ... சாத்தான் இந்த காரியத்தில் குறுக்கீடு செய்தான், குறுக்கே வந்து, அதை நீ பெற்றுக் கொள்ளவே இல்லை... தேவன் நீ எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தாரோ, எண்ணங் கொண்டாரோ, அப்படி இருக்கப் போகிறாய். ஓ, எவ்வளவு மகிமையானது-! அதோ உன்னுடைய மனிதன். 40. இப்பொழுது ஆதியாகமம் 2. நான் விரைவாய் செல்லவேண்டும், நான் அதை எடுப்பேன் (உங்களுக்கு ஏதாவது உண்டா -? நீங்கள்... பதிலைப் பெற்றுக் கொண்டீர்களா-?) அது சரி, ஆதியாகமம் 2: 18-21. கேள்வி:2. தேவன் ஏவாளை ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கினார், ஆதியாகமம் 2:18-21. தேவன் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து, பிறகு ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கினாரா-? கேள்வி: 3. காயீன் பெண் கொள்ள அப்பொழுது சிருஷ்டிக்கப்பட்ட ஆண், பெண்ணிடத்திற்குச் சென்றானா-? இப்பொழுது, எனக்குத் தெரிய... இதை எழுதிய நபர் இங்கு தான் இருக்க வேண்டும். இப்பொழுது, தேவன். இங்குள்ள முதலாவது கேள்வியில்-! ஆதியாகமம் 2:18-21-ல் உள்ள கேள்வி: ஆணையும் பெண்ணையும் தேவன் உண்டாக்கினாரா-? இல்லை. நான் 2:18-21-ல் இங்கே நீங்கள் காண்கின்றபடி, கவனியுங்கள். பின்பு, தேவனாகிய கர்த்தர்; மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும்... மற்ற எல்லாவற்றையும். மண்ணினாலே உருவாக்கி... மேலும் இன்னுமாக இப்பொழுது, தேவன் ஏவாளை ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவாக்கினார். ஏனென்றால் ஆதாமின் சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பு எடுக்கப்பட்டபடியால், ஸ்திரீகளின் உடல் உள்ளமைப்பில் மனிதனின் அமைப்பில் இருப்பதைவிட கூடுதலான ஒரு விலா எலும்பு உள்ளது. ஆதாம் ஏற்கனவே உண்டாக்கப்பட்டு, தனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தான், “ஆகையால் தேவன். மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல'' என்று கூறினார். 41. ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்கின்ற உரிமைகள் பாதிரியார்களுக்கு, குருமார்களுக்கு மறுக்கப்படுகிறது. இப்பொழுது, அந்த ரோம சபையானது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள்தான், அவர்கள்தான் அதற்கு பதில் கூறவேண்டும், நானல்ல. நல்லது, சமீபத்தில் ஒரு மனிதன் என்னை இவ்விதம் கேட்டார், ''பாதிரியார்களைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்-? அங்கே அந்த வாலிபப் பாதிரியார் அந்த ஸ்திரீயை, பெண்ணை இங்கு ஜெபர்சன்வில்லைச் சேர்ந்தவளை கூட்டிச் சென்று விவாகம் செய்ததைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்-?“ அது அந்த ஐரிஸ் சபையில், ஞாபகமிருக்கிறதா. அவர் பெயர் என்னவென்று நான் மறந்துவிட்டேன். நான் ''விவாகம் செய்ய எனக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ, விவாகம் செய்துக் கொள்ள அவருக்கும் உரிமை உண்டு. நான் அதைக் குறித்து அவ்விதமாகத்தான் சரியாக நினைக்கிறேன். ஒரே ஒரு காரியம் தவறு என்று நான் எண்ணுகிறேன், அவர் தன்னுடைய சபைக்குச் சென்று தன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, பிறகு சென்று அப்பெண்ணை விவாகம் செய்திருக்க வேண்டும். அப்படி ஓடியதற்கு பதிலாக அவர் அதைச் செய்திருக்க வேண்டும்,'' என்றேன். இப்பொழுது சில வாரங்களுக்கு முன்பாக இங்கே ஜெபர்சன்வில்லில், அங்கிருந்த ஐரிஷ் கத்தோலிக்கப் பாதிரியார் சம்பவத்தை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்களா-! அவர் ஒரு இளம் வயதுக்காரர். அவர் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு பெண்ணை நேசித்தவராய் இருந்தார். அப்போது அவர்... அவருக்கு ஒரு பெரிய அன்பின் காணிக்கை அளித்தார்கள், அவரை இண்டியானா போலீஸிற்கு (Indiana polis) வேறெங்கேயோ சபை மாற்றம் செய்யப் போகிறார்கள். அவர் அப்பெண்ணின் அன்பைப் பெற்று அவளுடன் சென்று விவாகம் செய்து கொண்டார், பிறகு அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. நல்லது, விவாகம் செய்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதை அவர் செய்திருக்கக் கூடாது. அவர் சபைக்குச் சென்று பாதிரியார் என்னும் என்னுடைய பொறுப்பை நான் ராஜினாமா செய்கிறேன். நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன், அவ்வளவுதான், அது முடிந்து விட்டது'' என்று இவ்வாறு கூறியிருக்க வேண்டும். 42. ஆனால் இப்பொழுது, தேவன் ஏவாளை உருவாக்கினார். ஆவியான ஆதாமையும், ஆவியான ஏவாளையும், ஆதாமையும் ஏவாளையும் மனிதனும் ஸ்திரீயும், ஓரே நேரத்தில் உண்டாக்கியது தான் தேவன் செய்த இயற்கைக்கு மேம்பட்ட காரியமாகும். பிறகு அவர்... ஆதாமை உண்டாக்கி இங்கே வைத்தார். அது நல்லதல்ல என்று பாருங்கள், எல்லா நேரத்திலும் தேவனுடைய காட்சி வெளியாகின்றது. இதைப் போல எல்லாமும், அது சரியாக கீழ் வருகிறது, சரியாக வெளியாகின்றது, ஆயிர வருட அரசாட்சியினுள் வந்து நித்தியத்திற்குள் செல்கின்றது. தேவனுடைய காட்சி திறக்கப்படுகின்றது, தேவன் தம்மைத்தாமே திறந்து காண்பிக்கின்றார். இங்கே, தேவன் தம்மைதாமே இயேசு கிறிஸ்துவுக்குள் வெளிப்படுத்துகின்றார். அது அவர் யார் என்பதைக் காண்பித்தது. இயேசு என்பவர் யார்-? துன்பம், துயரம் நிறைந்து அதனுடன் இருந்த, அன்புடைய ஒரு மனிதன். அவர் வேசியை நோக்கி ''உன் மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே-?' என்று கேட்டார். ''ஒருவரும் இல்லை ஆண்டவரே'' ''நான் உன்னை குற்றம் சாட்டப் போவதில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே.'' அவர் அந்நாளிலே சுமார் முப்பது மைல்கள் வனாந்திரம், பாலைவனம் வழியாக நடந்ததால் மிகவும் சோர்வாயிருந்து களைப்புற்றிருந்தார்; அங்கே நாயின் என்னும் ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ வந்து கொண்டிருந்தாள்; அவளுடைய ஒரே மகன் மரித்துப்போய் இருந்தான். அவர் அடக்க ஊர்வலத்தை நிறுத்தினார். அவன் மேல் கைகளை வைத்து ''எழுந்திரு'' என்றார். மரித்த அந்தப் பையன் மறுபடியும் எழுந்து உட்கார்ந்தான். அது - அது நம்முடைய கர்த்தராகிய இயேசு. (நன்றி டெட்டி, மகனே) அங்கே, ஏதேனும் நன்மை செய்வதற்காக ஒருபோதும் சோர்வோ களைப்போ இல்லாமல் இருந்தவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகும். அது, சரி. 43. இங்கே வேறொரு காரியம்: கேள்வி: காயீன் தன்னுடைய மனைவியை தெரிந்து கொள்ள முதலாம் சிருஷ்டிப்பாகிய ஆண், பெண்ணிடத்திற்கு சென்றானா-? இப்பொழுது, இது ஒரு சிக்கலான கேள்வி, ஆகையால் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, ஓ, நான்... “காயீன் எங்கிருந்து தன் மனைவியைப் பெற்றுக் கொண்டான்-?'' இதை மக்கள் தாள்களில் எழுதுவதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். ஓ நான் அதைக் கூறுவது உண்டு. நான் மனந்திரும்பி நான்கு வருடங்கள் ஆன பிறகும் எரிகின்ற நரகம் ஒன்றுண்டு என்று நான் போதித்ததில்லை. நான் வேதத்திலிருந்து அதைக் காண வேண்டியதாய் இருந்தது. எனக்கு எதுவும் தெரியவில்லை என்றால், அதைக் குறித்து எதையும் நான் கூறமாட்டேன். பாருங்கள்-? ஆனால், இப்பொழுது, “காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான்-?'' இப்பொழுது இக்கேள்விக்கான ஆராய்ச்சி அதுதான். ''காயீன் தன் மனைவிக்காக சிருஷ்டிப்பான ஆண், பெண்ணிடத்திற்கு சென்றானா-?'' பாருங்கள்-? இப்பொழுது, இப்பொழுது, இது முதலாவதான... 44. இந்த திருமதி. டீ ஆர்க், இவர்கள் சுகமானதைப் பற்றியும், எவ்விதம் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் என்றும், மற்றும் எல்லாவற்றையும் நீங்கள் கடந்த இரவு கேட்டீர்கள். அந்த பெண்மணி மரித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் சுமார் காலை இரண்டு மணி அளவில் வந்தனர். ஆகையால், இப்பொழுது, அப்படித்தான் நான் வருவதுண்டு. அவனுடைய மகன் ஜார்ஜ், எட்-ம் கூட மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்கிறவர்களாயிருந்தனர் (அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட்டனர். நான் அங்கே ஒரு விவாதத்தை கேட்டேன், அங்கு முதல்... காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான். நல்லது, அங்கு பங்கேற்ற விவாதத்தில் மிகவும் சிறப்பாகக் காணப்படும்படியான விதத்தில் பேசினவன், காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான் என்று நான் கூறுகிறேன். காயீன் சென்று ஒரு பெரிய பெண் குரங்கை விவாகம் செய்தான், அந்த குரங்கினின்று கறுப்பர் இனம் வெளிவந்தது, நீங்கள் கவனிப்பீர்களானால் கறுப்பர் இனமக்களில் தலை அதைப் போன்று ஒரு குரங்கின் தலையைப் போன்று கூர்மையாக உள்ளது'' என்று கூறினான். நல்லது, நான் அங்கு நின்று கொண்டிருந்தேன், நான் சுவிசேஷத்தில் இரண்டு மாத வயது கொண்டவனாய் இருந்தேன். நான் “மனிதனே, நான் உன்னுடன் வேறுபாடு கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் நான் ஒரு மாணவன் அல்ல, நான் இப்பொழுதுதான் இரட்சிக்கப்பட்டேன், ஆனால் அது அப்படித்தான் என்றால், கறுப்பர் இனமக்கள், நோவாவின் காலத்து பெரு வெள்ளத்தின் அழிவில் (Antediluvian Destruction) அழிந்து போயிருப்பார்கள், உலகமானது தண்ணீரினால் அழிக்கப்பட்டபோது, நோவாவும் அவனுடைய குடும்பம் மாத்திரமே பேழையில் இருந்தது. இக்குடும்பம் ஒன்றுதான் பேழைக்குள் இருந்தது. கறுப்பர் இனமோ அழிந்து போயிருக்கும்'' என்று நான் கூறினேன். ”அப்படித்தான் இருக்குமென்றால், இல்லை ஐயா-! கறுப்பர் இனம் அங்கிருந்து ஒருபோதும் வந்ததே அல்ல. இல்லை ஐயா. நாம் எல்லாரும் ஒரே மரத்திலிருந்து வந்தவர்கள், கறுப்பர் இனமும், ஒவ்வொரு மனித பிறவியும் ஒன்றே'' என்றேன். வித்தியாசம் என்பதே கிடையாது. சரியாக நாம் எல்லாரும். ஒருவர் மஞ்சள் நிறம் கொண்டவராயும், மற்றொருவர் பழுப்பு நிறம் கொண்டவராயும், ஒருவர் கறுப்புநிறம் கொண்டவராகவும், வெள்ளை நிறம் கொண்டவராயும், வேறொருவர் மங்கின நிறம் கொண்டவராயும், இன்னொருவர் சிகப்பு நிறம் கொண்டவராயும் இருக்கலாம், ஆனால் நீங்கள் எல்லாருமே அதே மரத்திலிருந்து வந்தவர்கள். அது இங்குள்ள சரீர பாகம் மட்டுமே ஆகும். அது சரி. அவர்கள் எல்லாரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனித பிறவிகள் தான். 45. இப்பொழுது, கவனியுங்கள், சில நாட்களுக்கு முன்பு, நான் இங்கே நின்று கொண்டிருந்தேன். லூயிவில்லிருந்து சில மருத்துவர்கள் வந்திருந்தனர். ஆப்பிரிக்காவிலுள்ள அந்த ஏழை ஜனங்கள் எப்படி என்பதைக் குறித்து நான் பேசிக் கொண்டிருந்தேன். மனித இனத்தை தின்னுகிற வகையினர் எப்படி அங்கிருந்த ஒரு ஸ்திரீ ஒரு சிறிய குழந்தையை எடுத்து - அதை அடித்து... வேலியில் தொங்க விட்டு சில நாட்களுக்கு அதை அழுகவிடுவார்கள், அது சிறிதாக அழுக ஆரம்பிக்கும்போது அதைத் தின்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதைப் போன்ற ஏதாவதொன்றை அவர்கள் சிறிது அழுகிப்போக விடுவார்கள். அது மிருதுவாகும். மனித இனத்தை தின்னும் வகையினரைப் (Cannibals) பற்றியே அதிகம் நினைக்காதீர்கள். இங்கிலாந்திலும் அதே போன்றுதான் செய்கின்றனர், அவர்கள் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி வகைகளைக் (Pheasants) கொன்று அதை மரத்தில் தொங்கவிடுகின்றனர், அதன் இறகுகள் கீழே விழ ஆரம்பிக்கும்போது அவைகளை சாப்பிடுகின்றனர். அது ஆங்கிலோ-சாக்ஸன் இனத்து மக்களின் தாய் இனமாகும், அது இங்கிலாந்தின் பழங்குடியினர் - நீங்கள் எண்ண வேண்டாம். நீங்கள் இங்கிலாந்திற்கு செல்லவேண்டாம், நீங்கள் தென் மாநிலங்களுக்கு சென்று அதே காரியத்தை நீங்கள் காணலாம். நிச்சயமாக. எந்த ஒரு மனிதனும் ஒரு நத்தையையோ, அல்லது ஒரு பாம்பையோ, அல்லது ஏதாவதொன்றையோ உண்ண முடியும். ஆம்... 46. இப்பொழுது கவனியுங்கள், இதைநான் உங்களுக்கு கூறட்டும். இங்கே நடந்தது இதுதான். கறுப்பர்... கறுப்பர் இனம் இதனுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. காயீன்... இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர்கள் “அவன் நோத் என்னும் தேசத்திற்கு சென்றான்'' என்றனர். இப்பொழுது, காயீன் ஏதேனில் இருந்தான். ஏதேன் தோட்டம், ஏதேனிற்கு கிழக்கில் இருந்தது. ஏதேனிற்கு கிழக்கு, அது சரியா-? கேருபீன்கள் அங்கு வைக்கப்பட்டது, ஜீவ விருட்சம் தோட்டத்தின் கிழக்கு வாசலில் இருந்தது, அங்கே தான் காயீனும் ஆபேலும் தங்கள் பலிகளைச் செலுத்தினர் என்று நான் எண்ணுகிறேன். அங்கே தான் சுடரொளிப் பட்டயத்தை வைத்திருந்த கேரூபின் வாசலின் கிழக்கே இனி மேலுமாய் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது-! நீங்கள் கவனித்தீர்களா, இயேசு கிழக்கிலிருந்து வருவார். வெளிச்சம் கிழக்கிலிருந்து உதிக்கின்றது. எல்லாம் வருகின்றது... நாகரீகம் கிழக்கில் துவங்கி மேற்கு பிரயாணித்து சுற்றிச் சென்று அதே இடத்தை அடைகின்றது. நாம் நிலவுலக மேற்கு அரைக் கோளத்தில் இருக்கின்றோம். அது கிழக்கு, கிழக்கு பழையான நாகரீகம் ஆகும். வரலாற்று அறிஞர்களுக்கு தெரிந்தவரை சீன நாகரீகம்தான், இன்றைக்கு உலகத்திலேயே மிகவும் பழமையானது. கிழக்கு-! 47. ஓ, இக்கேள்விகளின் பேரில் மணிக்கணக்கில் நாம் தங்கியிருக்கலாம். ஆனால் நான் மற்றவர்களின் கேள்விகளைப் பார்க்க முடியாது. இங்கே கவனியுங்கள். நாம் காயீனைக் குறித்தும் காயீனுடைய மனைவியார் என்றும், எங்கிருந்தவள் என்றும் நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை எத்தனைப் பேர் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்-? நாம் இப்பொழுது பார்க்கலாம். அது சரி. காயின் என்ன செய்தான் என்பதை நான் கூறுகிறேன், அது தான் சரியான பதிலாக நீங்கள் காணக்கூடும்: காயீன் தன்னுடைய சொந்த சகோதரியையே மணந்தான். அவன் அப்படி செய்ய வேண்டியதாயிற்று, ஏனென்றால் அப்பொழுது பூமியில் ஒரு பெண் மாத்திரமே இருந்தாள்; மூன்று பேர் பிறந்தனர் என்று வேதம் கூறுகின்றது. காம் சேம்... இல்லை... என்னை மன்னிக்கவும், அது காயீன், ஆபேல், சேத் ஆகும். ஆனால் அங்கு யாருமே... ஒரு பெண்ணின் பிறப்பைக் குறித்து வேதம் எப்போதுமே குறித்துக் காட்டுவதில்லை. நீங்கள் அதை அறிவீர்கள். 48. இப்பொழுது, இன்றிரவு நான் ஸ்திரீகளைக் குறித்து பேச நிச்சயப்படுகிறேன். ஆனால் பாருங்கள், உலகமானது ஸ்திரீயை வழிபடுகிறது, ஆனால் ஆதியிலிருந்தே ஸ்திரீயானவள் சாத்தானுடைய கருவியாக இருக்கின்றாள். இன்றைக்கு நல்ஒழுக்கம் குன்றிய ஒன்றைத்தான் அவன் சிறந்த கருவியாகப் பெற்றிருக்கிறான். அங்கே உலகத்தில் உள்ள எல்லா திருட்டு வியாபாரக் குழுக்களைக் காட்டிலும் இன்னும் அதிகமான பிரசங்கிகளை அவள் தான் நரகத்திற்கு அனுப்பிவிடுவாள். ஒரு துடுக்கான பெண் தன் வாயின் முனையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு, அதைப் போன்று மயிரை வெட்டிக் கொண்டு, நீண்ட பெரிய கண்மையிட்டுக் கொண்டு மேலும் கீழுமாக கண்ணடித்துக் கொண்டு, சகோதரனே, ஒரு சிறிய... அழகாகக் காணப்படுகின்ற உடலமைப்பைப் பெற்றிருப்பாளானால், அவள் என்ன செய்வாள் என்பதைக் கவனியுங்கள். பிரசங்கியே, நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மூடிக் கொள்வாயனால் நலமாயிருக்கும். அது சரி. நான் ஒரு மனிதன் என்று, இப்பொழுது நீ எனக்கு ஒன்றும் கூறாதே, நான் அதைக் குறித்து நிறையவே பார்த்துவிட்டேன். இப்பொழுது, இங்கே கவனியுங்கள்; உங்கள் சிந்தையை இயேசு கிறிஸ்துவின் மேல் மையம் கொள்ளச் செய்து, உங்கள் சிந்தனையை தூய்மையாக வைத்திருப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம் ஆகும். 49. பவுல் அங்கே கூறினது போல... பவுல், “அது... ஒரு சகோதரியை கூட்டிக் கொண்டு திரிய எங்களுக்கு அதிகாரம் உண்டென்று நீங்கள் அறிவீர்கள். அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால், நான் அதைச் செய்யமாட்டேன்'' என்றான். பாருங்கள், அவன் அதைச் செய்யவில்லை. அவன், ”ஊழியமானது அவர்களுடைய சுவிசேஷம் பிழைக்க வேண்டுமென்பதை நான் அறிவேன், போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக,'' என்றான். நாம் பிரசங்கியாயிருப்பதால் நாம் சில சமயங்களில் இவ்வாறு நினைப்பதுண்டு என்று நீங்கள் அறிவீர்கள் (சகோதரனே, அது உங்களையும் என்னையும் குறித்தல்ல), ஆனால் பிரசங்கிமார்கள், தாங்கள் பிரசங்கிகள் என்றும் அவர்கள் சபை அங்கத்தினர்களைக் காட்டிலும் பெரியவர்கள் என்றும் நினைக்கிறார்கள். நீங்கள் பெரியவர்கள் அல்ல, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மனம் மாறின குடிகாரனைக் காட்டிலும் தேவனுடைய பார்வையில் நீங்கள் பெரியவர்களும் அல்ல. இது போன்ற காரியங்களைத் தான் சீர்திருத்தங்கள் களைந்தெடுக்கவில்லை. “மறைதிரு” என்று நான் என் பெயரை கையொப்பமிடுகிறேன் என்று எனக்குத் தெரியும். அது முற்றிலுமாக இன்றைக்கு ஒரு வழக்கமாக இருக்கின்றது, ஆனால் அவ்விதமாக செய்தல் கூடாது. “மறை திரு”, “பிஷப்”, “டாக்டர்” ஆகிய இவை எல்லாம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பட்டப் பெயர்கள், அவை முட்டாள்தனம்-! வேதாகமத்தில் அவைகள் “பேதுரு” “யாக்கோபு'', ”பவுல்'', ''யோவான்“ என்றே இருக்கின்றன. இன்னும் மற்ற எல்லாமும் அவ்வாறே இருக்கின்றன. 50. பவுல், “இப்பொழுது, இங்கே, அது எனக்குத் தெரியும். நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன். அது அது - அது என்னுடைய கடமை” என்றான். நான் ஒரு பிரசங்கி, அவனும் ஒரு பிரசங்கி, சகோதரன் நெவில் ஒரு பிரசங்கி, ஆனால் அது பிரசங்கியாய் இருப்பது, அது நமது கடமை. நல்லது, நாம் செய்யவேண்டியது அது மாத்திரமே. ''ஆனால் நான் வேறெதாவதைச் செய்யவிடுங்கள்'' என்ற பவுல், “அது அதற்கும் மேலானது”. இப்பொழுது பணத்தை எடுக்க எனக்கு உரிமை உண்டு, நான் தியாகம் செய்ய முடியும் என்று உங்களுக்குக் காண்பிக்க நான் கூடாரத் தொழில் செய்கிறேன். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயும் இருப்பதாக. ஒரு மனிதன் விவாகம் செய்வது நலமாயிருக்கும். விவாகம் செய்து கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது நான் - நான் விவாகம் செய்து கொள்ள முடியும், விவாகம் செய்து கொள்ள சட்டபூர்வமாக எனக்கு உரிமையுண்டு. ஆனால் நான் விவாகம் செய்து கொள்ளமாட்டேன். கர்த்தருக்கு என்று வேறொரு தியாகத்தை செய்ய நான் விரும்புகிறேன்'' என்றான். பாருங்கள்-? பிறகு அவன், ''ஒவ்வொருவனும் தன்னுடைய அழைப்பை அறிந்திருக்கிறான். அவன் செய்ய... சிலர் தேவனுடைய வார்த்தைக்காக அண்ணகர்களாக உள்ளனர், இன்னுமாக...'' என்றான். நமது கடமைக்கு அப்பாலும் ஏதாவதொன்றை செய்ய விரும்புகிறோம். நீங்கள் உண்மையாக தேவனுடைய ஆவியினால் மறுபிறப்பு அடைந்தவராயின், “சபைக்கு செல்வது என் கடமை. அதை நான் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்'' என்று கூறுவீர்களானால், ஓ, என்னே-! நல்லது, நான் அதை விட அதிகமாகச் செய்ய விரும்புகிறேன், நான் கிறிஸ்துவிற்கு சில ஆத்துமாக்களை சம்பாதிக்க விரும்புகிறேன். நான் ஏதாவதொன்றைச் செய்யவேண்டும்-! நான் பிணியாளிகளைச் சந்தித்து அவருக்கு ஏதாவதொன்றைச் செய்யவேண்டும். அடக்க ஆராதனையில் பிரசங்கிப்பது என்னுடைய கடமை, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்னுடைய கடமை, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது என்னுடைய கடமை. ஏதாவதொன்றை நான் செய்யட்டும், நான் ஏதாவதொன்றைச் செய்யட்டும், அதன் மூலமாக தேவன் என்னைக் கனப்படுத்தட்டும். 51. இப்பொழுது காயினுக்கு திரும்புவோம் (ஒலி நாடாவில் காலி இடம் -ஆசி) தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே ஸ்திரீ ஏவாள் ஆகும், ஆகையால் அவளுக்கு குமாரத்திகள் இல்லாதிருக்கும் பட்சத்தில், அந்த கடைசி பெண், (ஒரே பெண்) மரித்திருப்பாளானால் மானிட இனமே அழிந்து போயிருக்கும். அது சரிதானே-? அங்கே இன்னுமாய் பெண்கள் இருந்திருக்க மாட்டார்களே. ஆகையால் அவளுக்கு குமாரத்திகள் இருந்திருக்க வேண்டும். காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மணந்தான், அவன் அப்படித்தான் செய்தாக வேண்டும். வேறெந்த வழியிலும் பெண்கள் வந்திருக்க முடியாது. அந்நாட்களில் அது சட்டப் பூர்வமாகவும் நியாயப் பூர்வமாகவும் இருந்தது, ஆபிரகாமுக்கும் சரி, ஈசாக்கிற்கும் சரி. ஈசாக்கு தன்னுடைய சொந்த ரத்தமாகிய மாமன் மகளை மணந்தான். ஆபிரகாம் தன்னுடைய சொந்த ரத்த சம்பந்தப்பட்ட சகோதரியையே மணந்தான். அவன் தகப்பனார். வித்தியாசப்பட்ட தாய்மார்கள், ஆனால் ஒரு தகப்பன். அணு ஆண்பாலிடத்திலிருந்துதான் வருகிறது. சாராள், அற்புதமான ஈசாக்கை பெற்றெடுத்தாள். அது சரியா-? அங்கே அப்போது பூமியில் யாரும் இல்லை . அது எல்லாம் நிழலாயிருக்கின்றன, காண்பித்து... இங்கேயிருக்கிறது சகோதரனே-! ஈசாக்கு... ரெபெக்காள், சபைக்கு அடையாளமாயிருகின்றாள், ஈசாக்கு மணவாட்டி, கிறிஸ்துவிற்கு நிழலாயிருக்கின்றான். அது சரிதானே-? அவர்கள் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும்-! அல்லேலுயா-! ஆமென்-! இரத்த சம்பந்தமான உறவு-! 52. ஆகையால் காயீன் தன் சகோதரியை விவாகம் செய்தான், அது... பிறகு அவர்கள் நோத் தேசத்திற்குச் சென்றார்கள். இப்பொழுது, தொடர்ந்து செல்வோமானால், நாம் ஒரு ஆழமான பொருளிற்குச் செல்வோம், நீங்கள் இன்னும் அதற்கு மேல் கேட்காததற்கு நான் மகிழ்ச்சியுறுகிறேன். (அந்த தேசத்தில் இருந்த ராட்சதர்கள் எங்கேயிருந்தனர்-? போன்றவைகள். ஜோசபஸும் மற்றவரும் அதைக் குறித்து நிறைய விவாதித்தனர்) ஆமென்-! சகோதரனே, அதை நான் சரியாக எடுக்கவில்லையெனில், ஞாயிறு காலையில் மறுபடியுமாக அதை என் கையில் கொடுங்கள். அது சரி. 53 கேள்வி:4 ஞாயிறு வாரத்தின் முதல் நாள், சனிக்கிழமை ஏழாவது நாள் இதை நீர் விளக்க முடியுமா-? வாரத்தின் முதல் நாளான ஞாயிற்று கிழமையில் கிறிஸ்தவர்கள் சபைக்குச் செல்கின்றனர். வாரத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமையில் அவர்கள் செல்ல வேண்டுமல்லவா-? நல்லது, இப்பொழுது அருமை நண்பரே, இதைக் கேட்ட எவராயினும், இது ஒரு அருமையான கேள்வி. இது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் ஒரு பழைய கேள்வியாகும். ஆனால் இன்றிரவில் இதைக் குறித்த என்னுடைய கருத்தை நான் கூறட்டும். நீங்கள் பாருங்கள், அதைத்தான் என்னால் செய்யகூடும். நான் சரியாயில்லையெனில், நல்லது, நீங்கள் என்னுடனே பொறுத்துக் கொள்ளுங்கள்; தேவன் என்னை மன்னிப்பாராக, நீங்கள் பாருங்கள் நான் - நான் அதைத் தவறுபடுத்துவேனானால்... 54. இப்பொழுது நியாயப்பிரமாணத்தைப் பொறுத்த வரையில்... இப்பொழுது, அநேகமாக ஒரு ஏழாம் நாள்ஆசாரிப்புக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கு அமர்ந்திருக்கிறார். நானும் முதன்முதலாக ஏழாம் நாள் ஆசாரிப்புக் கொள்கையை படித்திருந்தேன். அது சரி. ஏழாம் நாள் ஆசாரிப்புக் காரியத்தைத்தான் நான் முதலாவதாகப் படித்திருந்தேன். ''சனிக்கிழமை தான் ஏழாம் நாள்'' என்று என்னிடம் கூறினார்கள், சகோதரனே, அது யூத மாத அட்டவணையின் படியாக இருந்தது. ரோமகால அட்டவணை அதனுடன் பொருந்தவில்லை, ஆகையால் உண்மையாகவே சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையாக இருக்க வேண்டியதாயிற்று. நல்லது, நான் சரியென்று நினைத்திருந்த ஒன்றை அவர்கள் என்னிடம் அளித்திருந்தனர். அவர்களது ஏட்டுச் சுவடிகளை நான் சில காலம் படித்துக் கொண்டிருந்தவரை அது சரி என்று நான் எண்ணியிருந்தேன், நூறு சதவீதம், ஆனால் ஒரு நாள் வேதத்தைக் கையில் எடுத்தபோது, வித்தியாசமாக இருப்பதை நான் கண்டேன். பாருங்கள்-? இப்பொழுது, வாரச் சக்கரத்தை, சுழற்சியைப் பொருத்தவரை சனிக்கிழமை ஓய்வு நாளாக இருக்கின்றது. இப்பொழுது, நமக்கு தெரியாது. அது மாற்றப்பட்டுள்ளது, நீங்கள் அறியக் கூடாத நிறைய மாற்றங்கள் நமக்கு நிகழ்ந்துள்ளது. பாருங்கள்-? ஏனென்றால்... இப்பொழுது, யூதர்கள் கூறுகிறார்கள் நாம் இப்பொழுது. இப்பொழுது அவர்களுடைய அட்டவணைச் சுழற்சிப் பிரகாரமாக நாம் சரியாக 1970-ல் இருக்கிறோம். ரோம கால அட்டவணை 1953 என்று காட்டுகின்றது. அதை எங்கோ கொண்டு செல்கின்ற வேறொரு கால அட்டவணை அவர்கள் வைத்துள்ளனர். ஆனால் அதுதான் கிறிஸ்துவ மதத்திற்கு சரியான ஆதாரத்தைக் காட்டுகின்றது, எல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி அமைந்துள்ளது. நீங்கள் பாருங்கள், அங்கேயிருந்துதான் நாம் எடுக்கின்றோம். 55. இப்பொழுது, ஏழாம் நாளாய் இருக்கும் பட்சத்தில், “அங்கே அநேக பெந்தெகோஸ்தே மக்கள் ஓய்வு நாளை மிகத் தீவிரமாக ஆசரிக்கின்றனர், சனிக்கிழமையை ஓய்வு நாளாக வைத்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாக வைத்திருக்க வேண்டுமென்று வேதத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை'' என்று கூறுகின்றனர். இப்பொழுது, புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக் குறித்தும் அதையே நான் கூறுவேன், பாருங்கள்-? இப்பொழுது, சனிக்கிழமை, யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வு நாளாய் இருந்தது. இப்பொழுது, இடைப்பட்ட வேளையில் அது கொடுக்கப்பட்டது. இப்பொழுது, இது வேறு கேள்வி கேட்கப்படவிழைகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தபோது, வேதத்தைப் பொருத்த வரையில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக ஏழாவது நாளானது கடைபிடிக்கப்படவில்லை. ஆகவே வனாந்திரத்தில் இஸ்ரவேலிற்கு தேவன் ஏழாவது நாளை ஒரு அடையாளமாக அளித்தார், தேவனுக்கும்... 56. ஆகவே தேவன் ஏழாம் நாளிலே ஓய்திருந்தார், அவருடைய ஓய்வு நாளின் ஞாபகச் சின்னம் (memorial). நான் அதை ஏன் கூறுகிறேனென்றால் இந்தக் கேள்வியைக் கேட்ட ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தின் சகோதரனோ அல்லது சகோதரிக்கு இது ஏதுவாயிருக்கும், அவர்கள் ஒரு அருமையான சபையை வைத்திருக்கின்றனர். ஆகவே இப்பொழுது கவனியுங்கள், இந்த கேள்வியின் பேரில் அவர்களுடன் இது சிறிதளவு வேறுபடுகின்றது. தேவன் ஏழாம் நாளை பரிசுத்தமாக்கினார். ஆறு நாட்கள் மனிதனுடையதாய் இருந்தது. ஏழாம் நாள் தேவனுடைய ஓய்வு நாளாய் இருந்தது, அது ஆயிர வருட அரசாட்சிக்கு நிழலாய் இருக்கின்றது. இப்பொழுது இது எப்படி பொருந்துகின்றது என்பதைக் கவனியுங்கள். இயேசு பூமியில் வந்தபொழுது, அவர் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லை என்று சிலுவையில் அறைந்தார்கள்; இரண்டு குற்றச் சாட்டுகள்தான் இயேசுவின் மீது கூறப்பட்டன. அது என்னவென்றால் “அவர் ஓய்வு நாள் ஆசரிப்பை மீறினார், தம்மை தேவனாக்கிக் கொண்டார்” என்பதே. அவர் தாம் ஓய்வு நாளின் தேவன் என்று கூறினார், அவர்... அவர் தேவனின் ஓய்வு நாளும் கூட, அவர் தேவன். ஆகவே அவர் மேல் குற்றம் சுமத்த அவர்களால் முடியாதிருந்தது. 57. இப்பொழுது, நீங்கள் எந்த நாளை வைத்திருக்க வேண்டும் என்று இதை நான் உங்களுக்குத் தெளிவாக்கட்டும், நான் இதை உங்கள் நன்மைகென்று கேட்கிறேன். அதைக் குறித்த வேதவாக்கியம் உள்ளதா-? கேள்வி: சகோதரன். பிரான்ஹாம், யூதர்கள் சனிக்கிழமையை வைத்திருப்பது போல நாம் ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்க வேண்டும் என்று நமக்கு கூறும் வேதவாக்கியம் ஏதாகிலும் உண்டா-? இல்லை, ஐயா, அவ்வாறு இல்லை. வேதத்தில் ஒரு வசனம் கூட இல்லை, சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக் கிழமையா என்று நமக்கு புதிய ஏற்பாட்டில் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்கும் காரணம் என்னவென்றால் அது உயிர்த்தெழுதலின் நினைவுச் சின்னமாக உள்ளது. வேறொன்றுமில்லை... ''ரோமன் கத்தோலிக்க சபை அதைச் செய்தது'' என்று இப்பொழுது நீங்கள் கூறப் போகிறீர்கள். அவர்கள் அதைச் செய்ததாக உரிமை கோருகிறார்கள், அப்படி அவர்கள் செய்திருப்பார்களானால், பரிசுத்த பவுல் ரோமன் கத்தோலிக்கனாயிருப்பான், அவ்வாறே பேதுரு, யோவான், யாக்கோபும் மற்ற அனைவரும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வாரத்தின் முதல் நாளிலே ஆராதிக்க கூடினார்கள். ஆகையால், சரித்திர ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரையில் ஒரு கிறிஸ்தவ யூதனுக்கும், வைதீக யூதனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் (இருவரும் ஒரே ஜெப ஆலயத்திற்கு சென்றனர்). ஒருவன் சனிக்கிழமை சென்றான் (இயேசுவின் உயிர்த்தெழுதலை மறுதலிப்பவன்) வேறொருவன் ஞாயிற்றுக் கிழமையன்று செல்வான் (இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப்பவன்) அதுதான் முத்திரை. அது அவ்வாறே இருக்கவேண்டும், அது இன்னும் ஒரு முத்திரையாயிருக்கிறது, அது மிருகத்தின் முத்திரையாக வெளி வரலாம். 58. இப்பொழுது அதை எனக்கு... ஏழாம் நாள் ஆசாரிப்பு கூட்ட சகோதரர் அதுதான் தேவனுடைய முத்திரை என்று எண்ணுகிறதாக நான் கேள்விப்பட்டேன். அவர்கள், ''நீ ஓய்வு நாளை கைகொள்வதன் மூலம் முத்தரிக்கப்படுகிறாய்'' என்று கூறுகின்றனர். அவ்வாறு வேதாகமம் கூறுகிறதாக ஒரு வேதவாக்கியம் கூட கிடையாது. நீங்கள் முத்தரிக்கப்பட்டதாக கூறும் ஒரு வேதவாக்கியம் இங்கே உள்ளது. எபேசியர் 4:30, “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான் தேவனுடைய முத்திரை என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு நிரூபிப்பேன். பாருங்கள்-? அதுதான் ஆவியின் ஞானஸ்நானம், அதுதான் தேவனுடைய முத்திரையாகும். இப்பொழுது, ஏசாயா 28-ல் அவர், ''கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும்,'' என்று கூறினார். 59. இப்பொழுது என் அன்பு நண்பனே, இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, தங்கள் வேலைகளை விட்டுவிடுபவர்கள்... பாருங்கள், மனிதர் தங்களைத் தாங்களே இரட்சித்துக் கொள்ளும்படி ஏதோவொன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டுள்ளனர். அதைக் குறித்துச் செய்யும்படியாக உங்களால் கூடுமான காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள். உங்களை அழைப்பவரும் தேவனே, உங்களை இரட்சிக்கிறவரும் தேவனே. நீங்கள் தேவனுடைய அடிச்சுவடுகளை மாத்திரம் பின்பற்றுகிறீர்கள், அவ்வளவே. உங்களால் ஒன்றும் கூறமுடியாது. அதுதான் மனிதனின் சுபாவமாகும். அவர்கள் மாம்சம் புசிப்பதை நிறுத்த முயற்சிக்கின்றனர், ஓய்வு நாட்களை ஆசரிக்க முயற்சிக்கின்றனர், ''நீ இதை விட்டுவிட்டால்'' என்கின்றனர். அது நீங்கள் மாம்சம் புசியாதிருப்பதால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் இதனால், அதனால் அல்லது அந்த மற்றதால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் கிருபையால் இரட்சிக்கப்பட்டீர்கள். தேவன் தமது கிருபையால் அந்த மாம்சத்தை, நித்திய ஜீவனை அளிக்கிறார். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா-? நித்திய ஜீவன்தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகும். 60. இதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். ஓய்வு நாள் (Sabbath) என்னும் வார்த்தையின் அர்த்தம் என்ன-? தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் உங்கள் கைகளை உயர்த்துங்கள்-? ஓய்வு நாள், (Sabbath-?) (ஒரு சகோதரி ''இளைப்பாறுதல்“ என்கிறார்கள் -ஆசி) இளைப்பாறுதல். சரியாக. ஓ-ய்-வு-நா-ள். S-a-b-b-a-t-h, ஓய்வு நாள் என்றால் ”இ-ளை-ப்-பா-று-த-ல்“ R-e-s-t, ஓய்வு நாள். உங்கள் வேதத்தை எடுத்து ஓரக் குறிப்பில் ''இளைப்பாறுதல்'' நாள் என்ன என்பதை சிறிது பாருங்கள். இப்பொழுது நாம் விரைவாக எபிரெயர் 4-ஆம் அதிகாரத்திற்கு செல்வோம். நாம்... இது என்னுடைய கடைசி கேள்வி. சகோதரன் நெவில் சிலவற்றை அங்கு வைத்துள்ளார். சில கேள்விகள் சுருக்கமானவை என்று எனக்குத் தெரியும். ஆகையால் உங்களை நான் நீண்ட நேரம் வைத்திருக்க மாட்டேன். நான் அவைகளை எடுக்கும் வரையில் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இளைப்பாறுதல் என்ற வார்த்தையை நீங்கள் காணும் போது அதன் அர்த்தம் ஓய்வு நாள் (Sabbath) என்று அறிவீர்கள். இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இங்கே, இயேசு பரிசுத்த மத்தேயு 5-ஆம் அதிகாரத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றார். ''விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்'' அது என்ன-? நியாயப்பிரமாணம், கட்டளைகள். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவர் அதை மாற்றினார், அப்படித்தானே-? ''பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் கொலை செய்யக்கூடாது”, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்-!''அதை மாற்றினார், மாற்றினார் அல்லவா-? (அவர் பிரமாணத்தை மாற்றவில்லையா-?) அது சரி. அவர், ''நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதானை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் கொலைபாதகத்திற்கு உள்ளவனாயிருக்கிறான்'' என்றார். அது ஒருபோதும் பழைய ஏற்பாட்டில் இல்லை, அது புதிய ஏற்பாடு. அவர் அதற்கு மேலாகக் கடந்து சென்றார். பாருங்கள்-? அவர் மேற்சென்று அந்த கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் அவர் நான்காவதைக் கடந்தார், அதை விட்டுவிட்டார். அதுதான் ஏழாவது நாளாய் இருந்தது. இப்பொழுது இங்கே 7-ஆம் அதிகாரத்தில்... 61. அவர் மலைப் பிரசங்கத்தில் கூறினவைகள் இதோ இங்கிருக்கின்றன. அவர், ''இதைச் செய், இதை நீ செய்யாதே“, என்று பழைய காலத்தில் கூறப்பட்டதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், ''நான் உங்களுக்கு வித்தியாசமானதைக் கூறுகிறேன் என்றார். ''பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்'' என்று அவர்கள் கூறுகிறதைக் கேட்டிருக்கிறீர்கள், ”ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது-! அவர்கள் வித்தியாசமாகக் கூறினதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது...'' எல்லாவற்றிற்கும் பிறகு கடைசியாக, அவர் நான்காவது கட்டளையை விட்டுவிட்டார், அது என்னவென்றால் “ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக'' என்பதாகும். இப்பொழுது அவர் கூறினார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே-! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் தருவேன்''. 62. இப்பொழுது கவனியுங்கள், ''விபசாரம் செய்கிறவர்கள் கல்லெறியப்பட வேண்டும்,'' அவர்கள் விபசாரம் செய்வதாக சரியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது சரிதானே-? அது சரீரப்பூர்வமாக செய்யப்பட வேண்டும். ''கொலை செய்கிறவர்கள்'', அவன் ஒரு கொலைகாரனாக இருக்கவேண்டும். ஆனால் இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும்” என்றார், அவனுடைய ஆத்துமாவும், ஆவியும் - இப்பொழுது சரீரத்தில் அல்ல. அவன் ஆத்துமா மீட்கப்பட்டது, அப்பொழுது அவ்வாறே இருக்கவில்லை; அது (நியாயப்பிரமாணம் - தமிழாக்கியோன்) ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப்போல, பாருங்கள், நியாயப்பிரமாணம். இப்பொழுது அவர், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் ஏற்கனவே அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்றார். இப்பொழுது அவர், ''கொலை செய்யாதிருப்பாயாக என்று அவர்கள் கூறினதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் கூறுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்ளுகிறவன் ஏற்கெனவே கொலைபாதகத்துக்கு உள்ளவனாயிருக்கிறான்“ என்று கூறினார். 63. இப்பொழுது அவர் ஓய்வு நாளைக் குறித்து வேறு வார்த்தைகளில் கூறுகிறார், அவர் கூறினார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே-! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (rest) தருவேன், உங்கள் ஆத்துமாக்களுக்கு ஓய்வுநாள். (உங்கள் சரீரத்திற்கு அல்ல, உங்கள் ஆத்துமாவிற்கு) இப்பொழுது கேளுங்கள் - பவுலிற்கு செவி கொடுங்கள். உங்களால் சற்று முடிந்தால்... இப்பொழுது கவனியுங்கள், இங்கும் மற்ற எல்லா இடத்திலும், இங்கேயும் கூட உஷ்ணமாய் உள்ளது. ஆனால் இப்பொழுது, இதை சரிபடுத்திக் கொள்ள மிக கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது பவுல், எபிரெயருக்கு எழுதுகிறான். அந்த எபிரெயர்கள் யார்-? பதில் கூறுங்கள். யூதர்கள். அது சரிதானே-? இப்பொழுது, அவர்கள் பிரமாணத்தைக் கைக் கொண்டவர்கள், ஓய்வு நாளைக் கைக்கொண்டவர்கள். அது சரியா-? சகோதரனே, பிரசங்கியே, அது சரி தானே-? அவர்கள் ஓய்வு நாளைக் கைக்கொண்டவர்கள், அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டவர்கள், அது சரி. இப்பொழுது, பவுல் யூதர்களுக்கு நியாயப்பிரமாணம் எதற்கு நிழலாக இருந்தது என்று நிழல்களாகவும், அடையாளமாகவும், காண்பிக்கின்றான். ''நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்“ என்று கூறி, ஓரிடத்தில் இன்னும் மேலே சென்று அது சந்திரனும் சூரியனும் போல என்று அங்கே விளக்குகிறான். வேறொரு நாட்டின் மீது அல்லது வேறொரு உலகத்தின் மீது பிரகாசிக்கும் சூரியனின் ஒரு நிழல் தான் சந்திரன், அது இங்கே பிரதிபலிக்கின்றது. இப்பொழுது... ஆனால் எபிரெயர் 9, 64. இப்பொழுது கவனியுங்கள் எபிரெயர் 4-ல் அவர் ஓய்வுநாள் ஆய்வுப் பொருளிற்கு வருகிறார். இப்பொழுது பாருங்கள். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... இப்பொழுது, பவுல் ஓய்வு நாளை ஆசரிக்கிற, கைக்கொள்ளுகின்ற மக்களிடையே பேசுகின்றான். வேறு விதத்தில் கூறுவோமானால், “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... பயந்திருக்கக் கடவோம்'', அல்லது நீங்கள் வேதத்தில் உள்ள குறிப்புகளை கவனித்தீர்களானால், என்னுடைய ஸ்கோ .ஃபில்ட் (Scoffield) வேதாகமத்தில் ''ஜே” (J) என்றிருக்கிறது, அது ஒரு “ஓய்வு நாளைக் கைகொள்ளுதல் பாருங்கள்-?” அது சரி. ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க பின்வாங்கிப் போனவனாக காணப்படாதபடிக்கு பயந்திருக்க கடவோம். ஏனெனில் சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல நமக்கும் அறிவிக்கப்பட்டது; (அங்கே நியாயப் பிரமாணத்தின்) கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. இப்பொழுது, அது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த நாள் ஆகும். அவர்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் அதை எழுப்ப எந்த அடிப்படையும் இல்லை. இப்பொழுது அவருடைய “இளைப்பாறுதல்”. இப்பொழுது, “அவருடைய” அது கிறிஸ்துவின் இளைப்பாறுதல். சரி, அவருடைய இளைப்பாறுதல் அவருடைய “ஓய்வு”. நான் ஒவ்வொரு முறையும் இளைப்பாறுதல் (“Rest”) என்று அங்கு எழுதப்பட்டுள்ளபடி நான் உபயோகப்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு நாளை ஆசரிப்பது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக “ஓய்வு” என்னும் பதத்தை உபயோகப்படுத்தப் போகிறேன். விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த ஓய்வில், இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத் தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே...-?... ஆணையிட்டேன் என்றார். (இப்பொழுது, பரிசுத்தமாக்கப்பட்ட நாளைக் குறித்து பவுலின் செய்தியைக் கவனியுங்கள்) மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே இளைப்பாறுதல் அல்லது ஓய்வு... (அது சரியா-? நான் அதை அங்கு குறிப்பிட விரும்புகிறேன், பாருங்கள்) மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே இளைப்பாறுதல் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் (நியாயப் பிரமாணத்தில்) சொல்லியிருக்கிறார். 65. அது தான் அவருடைய ஏழாவது நாளாகும். இப்பொழுது, தேவன் அவர்களுக்கு அந்த நாளை கொடுத்தார் என்று பவுல் ஒப்புக் கொள்ளுகிறான். அதுதான் அந்த ஏழாவது நாளாகும். தேவன் ஏழாம் நாளை ஓய்வாக்கினார், அதை அவர் ஆசீர்வதித்தார், அதைத் பரிசுத்தப்படுத்தினார். அதைப் பரிசுத்தமாக்கினார், அதை ஒரு இளைப்பாறும் நாளாக்கினார். தேவன் தம்முடைய கிரியைகளெல்லாம் முடித்து, ஓய்ந்திருந்தார். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். (இயேசு பேசிக் கொண்டிருக்கிறார்). இப்பொழுது, வேறொரு ஓய்வு எங்கோ இருக்கின்றது. அது எங்குள்ளது-? இப்பொழுது, ''தேவனுடைய இளைப்பாறுதல்“ (”God's Rest“) அது ஏழாவது நாள் என்பதை நீங்கள் இங்கே ஞாபகங்கொள்ளுங்கள். பவுல், ''அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெற்றிருந்தனர்”, என்று கூறுகிறான். ஆனால் அவன் மறுபடியும் இங்கே, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் (My Rest) பிரவேசிப்பார்களானால்'' என்று கூறுகிறான் - மத்தேயுவில் இயேசுவைப் பற்றி பேசுகின்றதே, சரியாக அதுவே. ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும், மறுபடியும். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். கவனிக்கின்ற அனைவரும் ஆமென் என்று கூறுங்கள் (சபையார் “ஆமென்” என்கிறார்கள் - ஆசி ) கவனியுங்கள்: மறுபடியும், வெகு காலத்திற்குப்பின்... அவர் இங்கே ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அது என்ன-? நீங்கள் எல்லாரும் அதை அப்படியே கூறுங்கள். ஓய்வுநாள்-! அது சரியா-? அவர், இங்கே, இந்த இடத்தில், வாரத்தின் ஏழாவது நாளை ஓய்வு நாள் என்று குறித்தார். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகு காலத்திற்குப் பின்பு தாவீதின் (சங்கீதத்தில்), சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, (இயேசு வருவது, நீங்கள் பாருங்கள் அவரது முதலாம் வருகை) இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். (வேறொரு வருகை வரவிருக்கின்றது: சரீரப் பிரகாரமானதல்ல, ஆவிக்குரியது) 66. இப்பொழுது, கவனியுங்கள், “ஆகையால், நாங்கள் ஏழாவது நாளையும் பெற்றுள்ளோம்'' என்று நீங்கள் கூறலாம். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருப்போம். நாம் அடுத்த வசனத்தை வாசிப்போம். பாருங்கள், நாம் அதை மிக வேகமாகப் படிக்க வேண்டாம். சரி. யோசுவா (ஆங்கில வேதாகமத்தில் 'இயேசு' என்றுள்ளது) அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், இளைப்பாறும் நாள், இளைப்பாறுதல் பின்பு அவர் பிறகு வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே அவர் நியாயப்பிரமாணத்தை மாற்றிய போது, நியாயப் பிரமாணத்திலிருந்து கிருபைக்கு மாற்றியபோது, அவர்களுக்கு இளைப்பாற ஒரு நாளை, இளைப்பாறும் நாளை, ஒரு குறிப்பிட்ட நாளை அவர் அளிக்காமல் இருந்திருப்பாரா-? ஆனால் அவரோ ஒய்வு நாளைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவர் ஞாயிற்றுக் கிழமையைக் குறித்து ஒன்றும் கூறவில்லை. அவர் சனிக்கிழமையைக் குறித்தும் ஒன்றுமே கூறவில்லை. ஆனால் அவர் கூறியது இதோ இங்குள்ளது, என்று பவுல் கூறுகிறான். இப்பொழுது கவனியுங்கள். ''அங்கே...“ 19-வது வசனம்... அல்லது 9-வது வசனம். ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. (அது இந்த நாள்)... வரவிருக்கிறது... தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம். ஏனெனில், அவருடைய (“வருத்தப்பட்டுபாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன்'' - இயேசுவின் இளைப்பாறுதல்) இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் (நீங்கள் அல்லது நான்), தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் (நீங்கள் அல்லது நான்) தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். ஆமென்-! இதோ உங்கள் ஓய்வு. அது சரியா-? ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே (நாட்கள், மற்றவை பாருங்கள்) விழுந்து போகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம். (பவுல் கூறினான்) தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 67. இப்பொழுது, கவனியுங்கள், தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அவர் ஏழாம் நாளைச் சிருஷ்டித்து, அதை நினைவு கூரும்படியாய் யூதருக்கு அளித்தார். பாருங்கள், நான் இப்பொழுது பவுல் பேசினதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். அதைக் கேளுங்கள். இப்பொழுது, அவன் அதைக் கொண்டு வருகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? அவனுக்கு உரிமையுண்டு என்று நீங்கள் எண்ணுகிறீர்களா-? இப்பொழுது, அவன் கலாத்தியர் 1:8-ல் கூறியது என்ன-? நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தாதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். பாருங்கள், சுவிசேஷங்கள் வெளிப்படையாய் இருக்கின்றன. இப்பொழுது, கவனியுங்கள். ''நல்லது, சகோதரன் பிரான்ஹாம், இப்பொழுது நான் என்ன செய்யட்டும், இயேசு கிறுஸ்துவையே விசுவாசிக்க வேண்டுமா-?'' இல்லை. அது இளைப்பாறுதல் அல்ல. 68. இப்பொழுது, அது என்னவென்று அறிய நீங்கள் விரும்பினால் கிறிஸ்தவனின் இளைப்பாறுதல் என்பது என்னவென்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும் “ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் ''ஆமென்'' என்று கூறுகின்றனர்- ஆசி) இப்பொழுது ஏசாயா 28, அதைக் குறித்துக் கொள்ள விரும்புவோர் அதைக் குறித்துக் கொள்ளலாம். அவன், ''கற்பனையின் மேல் கற்பனையும் - கற்பனை” என்று பேசுகின்றான். ''கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும், நலமானது என்னவோ அதை பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறான் வரயிருக்கின்ற இளைப்பாறுதல், ஓய்வின் காலத்தைக் குறித்து இங்கே தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருக்கிறான். நீங்கள் அந்த முழு அதிகாரத்தையும் வாசித்து பாருங்கள், பாருங்கள். அவன் ''அந்த ஓய்வு நாள் என்பது ஓய்ந்து போகும் காலங்கள் வரும்'', என்று கூறுகிறான். ஆகையால், அவர்கள் திங்கட்கிழமை காலணிகளையோ அல்லது மற்றவைகளையோ விற்றது போல் சனிக்கிழமையிலும் விற்பனை செய்வார்கள். நீங்கள் அதைக் காண்கிறீர்களா-? அவன், ''இந்த அடையாளம் எப்பொழுது இருக்கும்-?'' என்றான். அவன்: “கற்பனையின் மேல் கற்பனையும், பிராமணத்தின் மேல் பிர மாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும் என்பார்கள்: நலமாய்த் தோன்றுகிறது எதுவோ அதைப் பிடித்தக் கொள்ளுங்கள். ஏனெனில் பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷைகளினாலும் இந்த ஜனத்தோடு பேசுவார். அவர்கள் எதற்குள் பிரவேசிக்க வேண்டுமென்று நான் கூறினேனோ இதுவே அந்த ஓய்வு, அந்த இளைப்பாறுதல். அவர்கள் இது எல்லாவற்றிற்கெல்லாம் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, தங்கள் தலைகளைத் துலக்கி, அதைப் புறக்கணித்தார்கள். அவர்கள் அப்படியே (பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவி ஜனங்கள் மீது இறங்கிய போது, அவர்கள் அந்த நாளில் செய்ததைப் போலவே - பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவிதான் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட முதன்மையானதாகும். அதுதான் தேவனுடைய ஜனங்களுக்கு அருளப்பட்ட இளைப்பாறுதல், ஓய்வாகும்.) 69. ஆனபடியால், இக்காரணத்தால்தான் நாம் ஞாயிற்றுக் கிழமையை கைக் கொள்கிறோம், இது நம்முடைய வேதாகமத்தின் ஆதி முற்பிதாக்களாகிய பரிசுத்த பவுல், யோவான், மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்ற எல்லாராலும் துவக்கப்பட்டது, அவர்கள் வீடு வீடாகச் சென்று, வாரத்தின் முதல் நாளிலே பந்தியைக் கைக்கொண்டார்கள், சீஷர்கள் எல்லாம் ஒன்றாய் கூடினபோது, அது ஓய்வு நாள் என்று அழைக்கப்படவில்லை, ஆனால் கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்பட்டது. அங்கே சபையிலே, ஓய்வு நாளின் பண்டிகையானது ஏற்கனவே இருந்தது. பத்மு தீவிலே யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்'' என்றான். அது சரி. பாருங்கள்-? அவன் பார்த்தபோது... ஆகவே இப்பொழுது, கர்த்தருடைய நாள் என்றால் அது கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளாகும். இப்பொழுது நீங்கள், வரலாற்று அறிஞர்களாகிய ஜோஸிபஸ், ஆக்டிபஸ் அல்லது மற்ற அநேகரை அணுகிப் பாருங்கள். அல்லது அது ஆக்டிபஸ் அல்ல, ஓ என்னால் முடியவில்லை... கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர்களை நீங்கள் பார்த்தால் கண்டு கொள்வீர்கள். சபை வரலாற்று அறிஞர்கள், ஃபாக்ஸினுடைய இரத்தச் சாட்சி புத்தகம் (Foxe's Book of Martyrs), இன்னும் அநேகவற்றைப் பார்ப்பீர்களானால், ஒரே ஒரு வித்தியாசத்தைத்தான் நீங்கள் காணமுடியும்... அவர்கள் ஒரு கூட்ட யூதர்கள். அவர்கள், அவர்களில் ஒருவர் (அந்த வரலாற்று அறிஞரில் ஒருவர் - தமிழாக்கியோன்) கிறிஸ்தவர்களை ''தன்னினத்தை தின்னுகிறவர்கள்“ (”Cannibals“) என்று அழைத்தனர். அவர்கள் ''ஒரு மனிதன் பொந்தியுபிலாத்துவால் கொல்லப்பட்டார். சீஷர்கள் வந்து அவருடைய சரீரத்தைத் திருடிச் சென்று, ஒளித்து வைத்து, ஒவ்வொரு ஞாயிறும் சென்று அச்சரீரத்தின் பாகத்தை சாப்பிட்டனர்'' என்றனர். அவர்கள் இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர். அவர்கள் மாத்திரம். அவருடைய சரீரத்தை உட்கொண்டனர். அவர்கள் பாருங்கள், கர்த்தருடைய சரீரத்தை உட்கொண்டிருந்தனர் என்று அவர்கள் கூறினார்கள். இராப்போஜனம். அது என்ன என்பது இவர்கள் அறியவில்லை, ஆகவே அவன், ”அவர்கள் தன்னினத்தைத் தின்கிறவர்கள் அவர்கள் வாரத்தின் முதல்நாள் சென்று, ஒன்று கூடி, “இம்மனிதனின் சரீரத்தை புசிக்கின்றனர்'' என்றான். 70. அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு ஆக்ரோஷமாக உயிர்த்தெழுதலை மறுதலிக்கிறவர்களா, அல்லது அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்து, உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறவர்களா, என்பதை நீங்கள் கண்டுபிடித்துக் கூற இருக்கின்ற ஒரே ஒரு வழி, ஒருவன் சபைக்கு சனிக்கிழமை செல்வான், மற்றொருவன் சபைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று செல்வான், அது தான் அவர்கள் நடுவே இருந்த ஒரு அடையாளமாகும். அது ஆணித்தரமான ஒன்றல்லவா, அப்படித்தானே-? அது சரி. அது செய்யும் என்று நம்புவோமாக. பரிசுத்த ஆவி ஒரு... உங்களிடம் ஏதாவது இப்பொழுது உள்ளதா சகோதரனே-? நீர் விரும்புவது... அதற்கு பதிலுரைக்கப்பட்ட நீர் விரும்புகிறீரா-? சரி, பார்க்கலாம், இங்கே ஓ, ஆமாம். 71. கேள்வி:5 புறஜாதிகளின் யுகம் முடிவுற்ற பின்னர் யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு இருக்குமா-? ஓ என்னே, இது முதல்தரமான ஒன்றல்லவா-! ஹ ஹூம். நாம் அதற்குள் அதிகமாக செல்ல போதுமான நேரம் நமக்கு இல்லை, ஆனாலும் இதை நான் உங்களுக்குக் கூறட்டும். என்னுடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதை உங்களுக்குக் காண்பிக்கட்டும். இதனால் நீங்கள் என்னுடைய வார்த்தையை எடுப்பீர்களானால், நான் தேவனிடத்தில் விவரித்தது போல், நீங்கள் பிறகு இதைப் பார்ப்பீர்களானால், நீங்கள் இதை கண்டு கொள்வீர்கள், பாருங்கள். ஏனெனில் நான் கற்பனை... என்னால் அந்த கடிகாரத்தைக் காண முடியவில்லை, ஆனால் அதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. (என்ன நேரம் ஆகிறது-? என்ன-? ஒன்பதரை. நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், பிறகு நியூ ஆல்பனிக்கு செல்ல வேண்டும், நான் காலை மூன்று மணி இருபத்தைந்து நிமிடங்களுக்கு ஜெபர்சன்வில்லுக்கு வெளியில் செல்லவேண்டும். ஆகையால்... நான் இந்த வாரம் இரவு முழுவதும் இரண்டு அல்லது மூன்றுமணி வரை படுக்கைக்குச் செல்ல முடியவில்லை). 72. இப்பொழுது இதைப் பெற்றுக்கொள்ள, இதை இங்கே சீக்கிரம் கவனியுங்கள். ஆம். என் கிறிஸ்தவ நண்பனே, புறஜாதிகளின் நாட்கள் முடிவுற்றது, இப்பொழுது சரியாக முடிவடைகிறது. ஆகையால் தேவன் யூதர்களிடத்திற்கு திரும்புவார். நான் தொடர்ந்து ஜெபித்து வருகின்ற இந்த சிறிய சபைக்கு நான் இதைக் கூறட்டும். இதைக் குறித்த அநேக தீர்க்கதரிசனங்கள் தேசத்தின் மற்ற பாகங்களிலிருந்து வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. நான் விசுவாசிக்கிறேன், யூதர்... இப்பொழுது சிறிது நேரம் பொறுங்கள். கிறிஸ்தவ சபையைக் குறித்த இந்த ஒன்றை யூதனால் பெறமுடியவில்லை. யூதன் அநேக முறை “சகோதரனே, நீங்கள் தேவனை மூன்று கூறுகளாக வெட்டி அவரை எனக்கு அளிக்க முடியாது” என்று என்னிடம் கூறியுள்ளான். யூதன் ஒரே தேவனைத்தான் கொண்டிருக்கிறான், அது யெகோவா. ஆகவே புறஜாதியார் அதைத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். அவர்கள் அதை இவ்வளவாக ஞானத்தினால் குழப்பி இவ்வாறு அவரை ஆக்கியுள்ளனர். அது மூன்று தேவர்கள் அல்ல என்று அதைக் குறித்த ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறான் என்று - நான் விசுவாசிக்கிறேன் ஒரே தேவன், மூன்று அவதாரங்கள் (Manifestations) ஒரே நபருக்குள் மூன்று இயல்புகள். நீங்கள் அந்த செய்தியை பெற்றுக் கொள்ளும்போது, நான் ஹைமான் ஆப்பிள்மேனிடம் (Hyman Appleman) கூறினேன். (உங்களில் அநேகர் அவரை அறிவீர்கள்). அவர், ''சகோதரன் பிரான்ஹாம், நீர் அந்த செய்தியை அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் பாலஸ்தீனர்களுக்கு எடுத்துச் செல்வீரானால், பத்து லட்சம் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வார்கள்'' என்றார். பாருங்கள், அது சரி. 73. இப்பொழுது நான் கூறினேன்... நாம் கொண்டிருக்கும் செய்தி இதோ இங்குள்ளது. இயேசு தான் மாம்சத்தில் மறைந்திருந்த யெகோவா, மறைந்து கீழிறங்கி வந்தவர். இப்பொழுது தேவன் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) சில மக்கள் நினைப்பதுபோல, உங்கள் விரல்களைப்போல் அல்ல. முழு காரியமும்... இல்லை, தேவன் என்பதை நான் சற்று முன்பு உங்களுக்கு வெளியாக்கிக் காண்பித்தேன், பாருங்கள், அங்கே அந்த ஒன்றில் திரித்துவம் அமைந்துள்ளது. நான் ஒன்றில் உள்ள திரித்துவமாயிருக்கிறேன். நான், ஆத்துமா, சரீரம், ஆவியுள்ள ஓர் நபராக இருக்கிறேன். அது சரிதானே-? நிச்சயமாக. நான் அணுக்களாலும், இரத்தத்தாலும், நரம்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளேன், ஆனாலும் ஒரே நபராயிருக்கிறேன். பாருங்கள்-? நீங்கள் காணும் எல்லாவற்றிலும் திரித்துவம் உள்ளது, ஒன்றில் உள்ள திரித்துவம். பேழையிலும் ஒரு திரித்துவம் இருந்தது. கீழ் அறை, ஊறும் அறை, ஊறும் பிராணிகளுக்கு, இரண்டாவது அறை, கோழிகள், பறக்கும் பட்சிகள்; மூன்றாவது அறை நோவாவும் அவனுடைய குடுபத்தினருக்கும். எல்லாம்-! ஆசரிப்பு கூடாரத்தில், அங்கு ஒரு சபை, பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். பாருங்கள்-? மூன்று யுகங்கள் இருக்கின்றன. பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவியின் யுகம். நான் என்ன கூற விழைகிறேன் என்று பாருங்கள்-? ஆனால் அந்த மூன்றும்... ''நம் தேவர்கள்'' என்று நாம் கூறுவதில்லை. அது அஞ்ஞான வழக்கம், யூதர்களும் அதை அறிவார்கள். ஆனால் அவனுக்கு இந்த இயேசு தான் தேவன், யெகோவா தேவன், இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் அல்ல, அது எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் தம்மை வெளிப்படுத்தும் ஒரே நபர்தான் என்று நீ கூறலாம். பாருங்கள்-? அதன் பிறகு மரித்தோரிலிருந்து இயேசு உயிரோடெழுந்தார் என்று அற்புதங்களாலும் அடையாளங்களாலும் நிரூபிக்கமுடியும். 74. ஆகவே இந்த டாக்டர் ரீட்ஹெட்... பின்னால் இருக்கும் சகோதரன், சபையில் இருக்கும் ஒரு போதகர். பள்ளி ஆசிரியர், நான் அவரை இங்கே சபையில் கேட்டேன்... அங்கேயுள்ள அவருடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நான் கைகுலுக்கினேன். அவர் அந்த இரவு நான் பிரசங்கிப்பதைக் கேட்க வந்திருந்தார். அவர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் செல்லவில்லை என்றால், அவர் லூயிவில்லில் உள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்று நான் நம்புகிறேன். எப்படியாயினும், அவர் பேசுவதைக் கேட்க சென்றிருந்தனர். அது முக்கியம் வாய்ந்தது. அநேக மாதங்களுக்கு முன்பாக அந்த மனிதன் ஒரு யூதனுடன் என் வீட்டிற்கு வந்தார். அவர் சகோதரன் பிரான்ஹாமே, “பாப் ஜோன்ஸில் அநேக பட்டங்களை நான் பெற்றிருக்கிறேன். நான் வீட்டனிலிருந்து (Wheaton) வந்தவன்.'' என்றார். எல்லா கல்வியும் அவருக்குள் குவிக்கப்பட்டிருந்தது. அவர், ''நான் சிறிய பையனாய் இருக்கும் போதிலிருந்தே தேவனை விசுவாசித்து வருகிறேன், ஆனால் இன்னுமாய் என் வாழ்க்கை வெறுமையாயிருக்கிறது-!'' என்றார் அவர் ''போதகர்கள் தவறாய் இருக்கிறார்களா-?'' என்று கேட்டார் 75. ஆகவே அந்த கருத்து இங்கே இருக்கிறது. எப்படியாவது... அந்த இரவு திறந்த வெளியில் பிரசங்கம் செய்யப்பட்ட போது அங்கிருந்திருப்பீர்களானால், அவர், ''நான் என்னுடைய அதை - இதை பெற்ற போது... என்றார் இப்பொழுது கவனியுங்கள், சிறிய சபையே, உங்களுடைய ஜெபங்களும் மற்றவைகளும் உதவி புரிந்தன, இதற்கு செவிகொடுங்கள். அவர் இதை இங்கே இந்த வீட்டிலே என்னிடம் முன்பு கூறினார். அவர் என் வீட்டிற்கு வந்து “சகோதரன் பிரான்ஹாம், நான் மூர்ச்சையடைந்தேன், கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக, விசுவாசித்து ஏற்றுக் கொண்டுள்ளேன், இதைவிட மேலானது ஒன்று உண்டோ-? நான் ஆவியினாலே மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன், அதற்காக சாட்சிகள் எனக்கு இல்லை'' என்று கூறினார். நான், ''சகோதரனே, நான் இதைக் கூறுவது சற்று மோசமாக இருக்கும், உங்களுடைய போதகர்களும், பள்ளிகளும் உங்களை ஏமாற்றியுள்ளன'' என்றேன். கவனியுங்கள், நான் - நான் அதைக் கூறமுடியும், உன் கட்டை விரலை அசைத்துக் கொண்டு நீ பரலோகம் செல்ல முடியாது என்று நான் விசுவாசிக்கிறேன், “உங்களுடைய சபைகளிலே நீங்கள் இதை விசுவாசிக்கின்றீர்களா-?'' இங்கே உள்ள எதையும் நான் அறியேன் ஆனால்... ”வேதம் இதை கூறுகிறது, அதை நீ விசுவாசிக்கிறாயா-?'' பிசாசும் விசுவாசித்து நடுங்குகிறான்-! நீ என்ன விசுவாசிக்கிறாய் என்பதல்ல. நீங்கள் மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்பதற்கு உங்களுடைய ஆவி அவருடைய ஆவியுடன் சாட்சியிட்டாக வேண்டும். 76. அவர், ''சகோ பிரான்ஹாம், பெந்தெகோஸ்தேயினரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களா-?“ என்றார். நான், “அதன் காரணத்தால்தான் நான் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன், உங்களிடம் இல்லாத ஏதோ ஒன்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர், தங்களுடைய விடாப்பிடியான சமய நெறிக் கொள்கை மற்றும் எல்லாவற்றாலும், நீங்கள் அறியாத ஒரு உண்மையை அவர்கள் கொண்டிருக்கின்றனர்” என்றேன். நான் அமெரிக்காவின் மகத்தான மனிதர்களில் ஒருவரான ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆம் ஐயா, அடிப்படையில் மிகவும் உறுதியான, உலகத்திலேயே மிகவும் சிறந்ததான சுடான் மிஷன்ஸ் (Sudan Mission) தலைவர் அவர். அவர் வேத வசனங்களை அறிந்திருந்தார், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் போன்றவற்றை ஒரு வீடு தீப்பற்றி எரிவதைப் போல பிரசங்கம் செய்வார். ஆனால் அது அல்ல. பிசாசும் கூட அதைச் செய்வான். பிசாசும் அடிப்படையில் எப்படி இருக்க முடியுமோ அப்படியே இருப்பான். ஆனால், சகோதரனே, இயேசுகிறிஸ்து, “ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்'' என்றான். “ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன். ஆமாம், நான் - நான் அந்த விதமாக விசுவாசிக்கிறேன். அதை விசுவாசிக்கிறேன். ஆம்” என்று நீங்கள் கூறுவதால் மாத்திரம் அல்ல. அது அதைச் செய்யாது. புதிய பிறப்பின் சரியான அனுபவமாக அது இருத்தல் வேண் டும். அது, உங்களுக்கும் தேவனுக்கும் இடையே ஏதோ ஒன்றாக இருந்து மரணத்தை விட்டு ஜீவனுக்குள் வந்துவிட்டீர்கள் என்று நீங்கள் அறியும்படியாக இருத்தல் வேண்டும். 77. அவர் ''சகோதரன் பிரான்ஹாம், பரிசுத்த ஆவியை நான் பெற முடியுமா-?'' என்று கேட்டார். நான் “ஹைமேன் ஆப்பிள்மேன் மீது அங்கே கைகள் வைக்கப்பட்ட போது அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானதைப் பெற்றுக் கொண்டார்'' என்றேன். இந்த யூதன் அழ ஆரம்பித்து அங்கே இருந்த சிறிய மேஜை மேல் இருந்த கண்ணாடியை உடைத்து, மிகவுமாக அழுதார். அவர்கள் இருவரும் “சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் எப்படி அந்த பரிசுத்த ஆவியைப் பெறுவது-? என்று கேட்டனர். படிப்பாளிகள்-! சிறந்தவர்கள், சாமர்த்தியசாலிகள்-! அந்த ஊரிலேயே சிறந்தவர்கள். ஆகையால் நான், ''பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கான அப்போஸ்தல வழி கைகள் மேலே வைக்கப்படுதலே'“என்றேன். அது சரி. “கைகள் மேலே வைக்கப்படுதல்'' பவுல் தன் பார்வையைத் திரும்பப் பெறுவதற்காகவும், பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவதற் காகவும் அனனியா அவன் மீது கைகளை வைக்க வந்தான். பிலிப்பு அங்கே சென்று பிரசங்கித்து ஒரு முழு கூட்டத்திற்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்தான். பரிசுத்த ஆவி யார் மீதும் வரவில்லை, ஏனெனில் பேதுருவிடம் தான் திறவுகோல்கள் இருந்தன. அவன் வந்து அவர்கள் மீது கைகளை வைத்தான், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது சரிதானே-? 78. பவுல் அப்போஸ்தலர் 19-ல், அவன் அங்கே கடந்து சென்ற போது பில்லி கிரகாமிற்கு நிழலாயிருக்கிற அப்போல்லோ என்பவன் அங்கே பெரிய மகத்தான எழுப்புதலையும் மகத்தான ஒரு சமயத்தையும் கொண்டிருந்தான். அந்த பாப்டிஸ்டு குழுவினரிடம் “விசுவாசிகளான போது நீங்கள் பரிசுத்த ஆவியைப்பெற்றீர்களா-?'' என்று கேட்டான். அவர்கள் “நாங்கள் யோவானைப் பின்பற்றுகிறவர்கள். எங்களுக்குத் தெரியும்-! அப்போல்லோ எங்களுடைய பிரசங்கி ஆவார், அவர் மனந்திரும்பிய ஒரு சட்ட நிபுணர் (lawyer). இந்த தேசத்திலேயே சாமார்த்தியசாலி,'' என்று கூறினர். அவன்“ ஆனால் நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா-?' என்று கேட்டான். அதற்கு அவன், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்று கூறினான். அதற்கு அவன் (பவுல்) ''நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்-?'' என்று கேட்டான். அவன் “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றான். அவன், ''யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாய் இருக்கவேண்டும் என்று ஜனங்களுக்கு சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தானே'' என்றான். ஆகவே, அவர்கள் இதைக் கேட்டபோது அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பவுல் தன் கைகளை அவர்கள் மீது வைத்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று அந்நிய பாஷைகள் பேசி தேவனை பிரதிபலித்தார்கள். நான் வேதவசனங்களை அறிந்தவரையில் இது தெளிவான ஒரு காரியமாகும். 79. இப்பொழுது, கவனி நண்பனே-! உன்னுடைய கருத்துக்களில் சிறிது வேறுபாடு இருக்கலாம், ஏனெனில் நீ எல்லாவற்றிலும் கலக்கப்பட்டுள்ளாய். ஆனால் அதை விட்டுவிடு, உன்னுடைய வியாக்கியனத்தை அதில் சேர்க்க முயற்சிக்காதே. வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் கூறு, அதை இந்த வழியிலேயே விட்டுவிடு. ஆகவே நான், “இருக்கட்டும் சகோதரனே, பரிசுத்த ஆவியைப் பெற விரும்புபவர்கள் மீது கைகள் வைக்கப்படுதலே எனக்குத் தெரிந்த ஒரே வழி'' ஆகும் என்று கூறினேன். அவர் “நீர் எங்கள் மீது கைகளை வைத்து தேவன் எங்களை ஆசிர்வதித்து பரிசுத்த ஆவியை அருளுமாறு கேட்பீரா-?'' என்று கேட்டார். நான் ''நான் செய்வேன்“ என்றேன். நாங்கள் தரையில் முழங்காற்படியிட்டோம், நான் ஜெபித்து அவர்கள் மீது கைகளை வைத்தேன். அதற்குப் பிறகு சிறிது வாரங்கள் கழித்து, இருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆகவே இந்த டாக்டர் ரீட்ஹெட் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, அந்நிய பாஷைகள் பேசுவதன் வழியாகக் கடந்து வந்தார். ஆம், ஐயா. 80. ஆகையால் உங்கள் சுடான் மிஷன், “அந்நிய பாஷைகள் பேசும் ஒரு மனிதனுக்கு எங்களிடத்தில் இடமில்லை'' என்று கூறுகின்றது. அவர் என்னிடம் வந்து, “எவராவது அந்நிய பாஷைகளில் பேசுகின்றனரா-?'' என்று கேட்டார். ''ஏன், ஏன்,'' நான், “அவர்களிடத்தில் இயேசு கிறிஸ்துவிற்கு இடமில்லை, ஏனெனில் இயேசு கிறிஸ்து யாரும் அறியாத பாஷைகளில் பேசினார்; அந்நியபாஷைகள் பேசியவாறு மரித்தார்'' என்றேன். பவுலின் போதகத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்களை விட பவுல் அதிகமாக அந்நிய பாஷைகள் பேசினான். நேற்று ஒருவர் என்னிடம் வந்து, “அதைக்காட்டிலும் புரிந்து கொள்ளப்படுகிற வகையில் நான் ஐந்து வார்த்தைகளைப் பேசுவேன்'' என்றார். ஆனால் பவுலின் உபதேசம், ''தீர்க்கதரிசனச் சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கும் தடைபண்ணாதிருங்கள்'' என்று கூறுகின்றது. ஆனால் அந்நிய பாஷைகளைப் பேச அவர்கள் தடை செய்யப்பட்டனர். 81. பாஷைகளில் பேசுவது சபைக்கு அளிக்கப்பட்ட ஒரு தெய்வீக வரமாகும். ஆதியில் எப்படி இருந்ததோ அவ்வாறு இன்றைக்கும் அது சபைக்கு சொந்தமாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மையானது. ஆம், அப்படித்தான் அது வேத போதகமாகும். அது ஒரு தெய்வீக வரம் ஆகும். நீ அதை மறுதலிப்பாயானால் நீ அதை வெட்ட முயற்சிக்கும் பொழுது நீ புதிய பிறப்பையும், இயேசு போதித்த எல்லாவற்றையும் நீ மறுதலிக்கிறவனாகக் காணப்படுவாய் இப்பொழுது, “அதை நீ தாறுமாறாக்கக் கூடாது, அநேகர் அவ்வாறு செய்துள்ளனர். ஆனால் அது தன் இடத்தை உடையதாய் இருக்கிறது'' என்று நான் கூறுகிறேன். அது ஒரு ஜோடி காலணிகளைப் போன்றது. நீ ஒரு ஜதை காலணிகளை வாங்கும்போது, அதற்குள் நாக்குகள் இருக்கும். அது சரி. நீ கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும்போது, தேவன் எல்லா காரியத்தையுயும் சரியாக அமைத்துள்ளார். சகோதரனே, சகோதரனே, அவரிடம் அன்பு உள்ளது, சந்தோஷம் உள்ளது. நான் அங்கே இருக்கின்ற உங்கள் மேஜையின் அருகே அமரும் போது, “நீங்கள் பிரசங்கியாரே என்னுடன் வந்து உணவு உண்ணுங்கள்” என்று கூறுவீர்களானால், நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று நான் நம்புவேன். மேஜையின் மீது பீன்ஸ், உருளைக் கிழங்கு, காரட்டு, வறுத்த கோழிகறி, பூசனிக்காய் பொறியல், ஐஸ்கிரீம், மற்றும் எல்லாம் இருக்கையில் உருளைக் கிழங்கினிடத்தில் நான் வரவேற்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன். அதே போன்று கோழிகறியினிடத்திற்கும்; பூசனிக்காய் பொறியலிடத்திற்கும் நான் வரவேற்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன். நான் செய்யவேண்டிய ஒரே ஒரு காரியம் என்ன வென்றால், “அந்த பொறியலை சிறிது என்னிடத்திற்கு அனுப்பமுடியுமா-?'' என்று கூறுவது மாத்திரமே. சுத்தமுள்ள இருதயத்துடனும், நீங்கள் என்னை நேசித்து ”நிச்சயமாக என் சகோதரனே நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறீர்கள் என்று நான் நம்புவேன். அது சரிதானே-? ''உருளைக்கிழங்குளை என்னிடம் கொடுங்கள்-?'' என்று நான் கூறும்போது, ''ஏன், நிச்சயமாக என் சகோதரனே இங்கே இருக்கிறது'' என்று நீங்கள் கூறுவீர்கள். இயேசு கிறிஸ்து தமது பிராயசித்த பலியில் கல்வாரியில் மரித்து சம்பாதித்த ஒவ்வொரு மீட்பின் ஆசிர்வாதமும், மேஜையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசுவாசியும் அதன் முன் அமர்ந்துக் கொண்டிருக்கிறான். அல்லேலுயா-! எனக்கு சுகமாகுதல் தேவையெனில் பிதாவே, “சுகமாகுதலை என்னிடம் அனுப்பும்,'' என்று நான் கூறி என்னுடைய தட்டில் அதை ஊற்றி, சிறப்பான ஆகாரத்தைப் புசித்து. இப்பொழுது, நீங்கள் சாப்பிடாமல் மரிக்க வேண்டுமென்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள். ஆம், ஐயா. தீர்க்கதரிசனம், பாஷைகளில் பேசுதல் 82. இந்த மனிதன் இவ்வாறு எழுதியுள்ளான். நான் பேசினேன் என்று அவன் அறியாதிருந்தான். நான் அந்நிய பாஷைகளைப் பேசினேன் என்று அவன் அறியாதிருந்தான். அவர் இந்த புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அது தேசங்களை சிதறடிக்கும் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அது மட்டுமல்லாமல், மூடி வேதாகம சங்கத்தில் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை நாடிக்கொண்டிருக்கின்ற இருபத்தைந்து ஊழியர் இந்த மனிதனிடத்தில் இருக்கின்றனர். அடிப்படைவாதிகள் தலை கீழாக மாற்றி விட்டனர். இந்த மாதத்தில் வெளி வந்துள்ள கிறிஸ்துவ ஜீவியம் (Christian life) என்னும் பத்திரிகை, கிறிஸ்துவ ஜீவியம் பத்திரிகையின் 19-வது பக்கத்தில் வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அந்தப் பெரிய மனிதர் கூறுவதைக் கவனியுங்கள். அவர், ''இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா-? நாம் ஏதாவது ஒன்றை இழந்துவிட்டோமா-?'' என்று கூறுகிறார். நான் அபரிதமான மழை வருதலின் சத்தத்தைக் கேட்கிறேன். நிறைய மக்கள் அதை கோணலாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பரிசுத்தஆவியின் அபிஷேகம் முழுமையாக ஊற்றப்பட்டு, வல்லமையோடும், அடையாளங்களோடும், அற்புதங்களோடும் நிறையப்பட்டு இந்த புறஜாதி உலகத்தை குலுக்கும். இதன் காரணத்தால் நான்... பெந்தெகொஸ்தேயினரும் மூலைக்குத் தள்ளப்பட்டு, அதைப் போன்ற வெவ்வேறு காரியங்கள் மேல் வெறிபிடித்தவர்கள் போலாகிவிட்டனர், ஏற்ற காலம் இன்னுமாய் வரவில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள் இவ்விதமான எல்லா அதி தீவிர மூடபக்தி வைராக்கியத்தைக் கொண்டிருந்தனர் ஆனால் அதுதான். தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தமும், தேவனுடைய தெய்வீக வார்த்தையுமாயுள்ளது, அது நடந்தேறியாக வேண்டும். ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். புறஜாதியாரின் யுகம் முடிவுபெறும் சற்று நேரத்திற்கு முன்பு அந்நிய பாஷைகளில் பேசுதலையும் தேவன் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார். அடிப்படை வாதிகளின் மேல் தேவன் ஊற்றுவார் என நான் நம்புகிறேன். 83. இந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ரீடர்ஸ் டைஜெஸ்ட் (Reader's Digest) இதழில் நீங்கள் படிக்கலாம். எவ்விதம் அந்த மெதொடிஸ்ட் பிரசங்கியார் பிரசங்க பீடத்திலிருந்து, மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனுக்காக ஜெபித்தபோது, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இறங்கி வந்து அந்த மனிதனை அந்தப் பொழுதில் சுகமாக்கிற்று என்பதை நீங்கள் அதில் படியுங்கள். அல்லேலூயா-! நிச்சயமாக. இங்கிருக்கும் மேஜையின் மேல் தேவன் தெய்வீக சுகமளித்தலை வைத்திருக்கிறார்-! தீர்க்கதரிசனத்தையும் அவர் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார்-! அந்நிய பாஷைகளில் பேசுதலையும் தேவன் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார். சரீரத்தில் ஆவிக்குரிய ஒன்பது வரங்களையும் வைத்துள்ளார், நீங்கள் இந்த ஒவ்வொன்றிற்கும் வரவேற்கப்படுகின்றீர்கள்-! அல்லேலூயா-! ஆம், ஐயா, அவைகள் இங்கே உள்ளன. கேள்வி: புறஜாதியாரின் முடிவில், யூதர் திரும்பி விட்டு இருப்பார்களா-? ஆம், ஐயா, சகோதரனே, சகோதரியே, அது யாராயிரப்பினும் அநேக வேதவாக்கியங்கள் உள்ளன. ஒன்றைச் சொல்வோமானால், அந்த மரத்தைக் குறித்து யோவேல், “பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது'', என்றான். இன்னும் மற்ற வசனங்களும் உள்ளன. அவர்கள் எவ்விதம் திரும்ப அனுப்பப்படுவார்கள் என்றும் இன்னும் மற்ற எல்லாவற்றையும் குறித்து இயேசு தாமே கூறியுள்ளார். ஓ, தானியேல் உட்பட, முழு வேதவசனங்களும், எல்லா இடங்களிலும் அதைக் குறித்துப் பேசுகின்றன. ஆம், ”அதன் அத்திமரம் துளிர்கள், தன்னுடைய துளிர்விடும்போது, காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்,'' என்று இயேசு கூறினார். இங்கேயுள்ள மற்றொன்றும் அதைத் குறித்தாகவே உள்ளது என்று நான் நம்புகிறேன். 84. கேள்வி:6 நீர் விசுவாசிக்கிறீரா யூதர்களுடைய பாலஸ்தினாவிற்கு யூதர்களுடைய திரும்ப வருதலானது, வேதாகம தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா-? நீர் பாலஸ்தீனாவிற்குப் போகவிருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டடோம், அது உண்மையா-? ஆம், ஆம், ஐயா. நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லட்டும். மிக மகத்தானவைகளில் ஒன்று வருடத்தின் எந்த நேரம் என்று நீங்கள் காணவிரும்பினால், நீங்கள் நாட்காட்டியைப் பார்க்கின்றீர்கள். இரவின் எந்த நேரம் என்று நீங்கள் காணவிரும்பினால், நீங்கள் கடிகாரத்தைக் காண்கிறீர்கள். நீங்கள் எந்த நாளில் வாழுகிறீர்கள் என்பதைக் காண விரும்பினால் யூதர் எங்கே இருக்கின்றார்களோ அங்கே பாருங்கள். அதுதான் தேவனுடைய மணிக்காட்டி ஆகும். பாருங்கள்-! அதே இரவில், அதே நாளில் கர்த்தருடைய தூதன் 1946-ஆம் வருடம், மே மாதம் 7-ஆம் தேதி அன்று கிரீன் மில், இன்டியானாவில் என்னை சந்தித்தார், அந்த அதே நாளில் யூதர்களுக்கு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து முதன் முதலாக ஒரு ஸ்தாபிக்கப்பட்ட தேசமானது. அல்லேலூயா-! இன்றிரவு, உலகத்திலேயே மிகவும் பழமையான கொடியாகிய, ஆறு முனை கொண்ட தாவீதின் நட்சத்திரக் கொடி, பாபிலோன் கொண்டு போகப்பட்டதிலிருந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து, முதல் முறையாக இப்பொழுது எருசலேம் நகரத்தின் மீது பறக்கின்றது. இயேசு, ''அத்திமரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது...'' என்றார். இதோ இது இங்குள்ளது. அவர்-! அங்கே அவர், “ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள், 'கோடைகாலம்' சமீபமாயிற்று என்று கூறுகிறீர்கள். இதை நீங்கள் காணும்போது அந்த நேரமானது வாசல் அருகே இருக்கிறது என்பதை அறிவீர்கள்'' என்று கூறினார். 85. இயேசு, “தானியேலின் அருவருப்பைக்” குறித்து கூறினபொழுதும், இன்னும் மற்றவையையும் நீங்கள் அறிவீர்கள். ''வரப் போகிற அந்த மகா பிரபு - அவர் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்'', என்பது அந்த மூன்றரை வருடங்களாகும். இயேசு சரியாக அதைத்தான் பிரசங்கித்தார். அவர் யூதரிடம் தனியாகவே வந்தார். அதன் பின்பு அவர் ஜனங்களுக்காக சங்கரிக்கப்படுவார். ஜனங்களுக்காக பலியாவார். ''பாழாக்கும் அருவருப்பை“, ”முகமதியர் ஓமர் மசூதியை அங்கு கட்டினார்கள். அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள்'' (வ்யூ-! எதுவரையிலும்-?) புறஜாதிகளின் யுகம் நிறைவேறும் வரையிலும்“. அப்பொழுது அவர் யூதரிடம் திரும்ப வருவார். அங்கேதான் ஆர்மகெதோன் யுத்தமானது... தேவன் புறஜாதிகளின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை அவருடைய மணவாட்டியை அழைத்தார். கவனியுங்கள். ஆம், ஐயா. அங்கு இன்னும் நிறைவேண்டிய ஒரு லட்சத்து நாற்பத்த நான்காயிரம் பேர் (1,44,000) மீட்கப்பட்ட யூதராவார்கள். இவைகள் யாவும்... 86. அதன் பின் சபையானது மேலே எடுக்கப்பட்ட பிறகு, வெளிப்படுத்தல் 11-ல் மோசேயும், எலியாவும் தோன்றி இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு பிரசங்கிக்கின்றனர். சபை மேலே எடுக்கப்படுவதற்கென எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது, பரிசுத்த ஆவி புறஜாதியாரிடமிருந்து எடுக்கப்படுகிறது. ஆகவே மீதம் உள்ள யூதர்களுக்கு மூன்றரை வருடம் பிரசங்கம் செய்யப்படுகிறது, ஏனெனில் அவர் “உன் ஜனத்தின் மேல், எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் நடுவில் மேசியா சங்கரிக்கப்படுவார்,'' என்றான். அவர் எடுக்கும்போது, புறஜாதிகளுக்கு ஒரு இடம் அளிக்கப்படுகிறது, பிறகு அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கப்பட இன்னும் மூன்றரை வருடங்கள் உள்ளன. நிச்சயமாக, யூதர்களும் வருகிறார்கள். சகோதரனே, நான் நம்புகிறேன், இந்நேரத்தில் நாம் பாலஸ்தீனாவிற்கு செல்லும்போது, ஓ, ஜெபியுங்கள்-! அவர்கள் அந்த வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரே காரியம் தான், பிறகு ஒரு சிறிய கேள்வி இங்கு என்னிடம் உள்ளது, பிறகு எல்லாம் முடிவுறுகிறது. இங்கிருப்பது ஒரு ஜெபம் என்று நான் நினைக்கிறேன். 87. இதைப் பாருங்கள்-! டாக்டர்ரீட்ஹெட் கூறினார், அங்கு நின்று கொண்டு திறமை வாய்ந்த ஒரு முகமதியனுடன் பேசும்போது... இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். ஒரு முகமதியன், அங்கே ஆப்பிரிக்காவிலே அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்கள் கண்டனர், அவர்களில் சுமார் இருபதாயிரம் பேரை கர்த்தராகிய இயேசுவிடம் வரச் செய்தேன். சுமார் இருபதாயிரம் பேர்கள் இருந்தனர், மொத்தமாக முப்பதாயிரம் பேர், பத்தாயிரம் பேர் வந்தனர் என்று நான் யூகிக்கிறேன், ஏனெனில்அதிகபட்சமாக முகமதியர்கள்தான் இருந்தனர். அவர்கள் அங்கே நின்றபோது, நான் ''இப்பிரதேச மக்களே, உங்கள் கோவிலில் உள்ள தீர்க்கதரிசிகள் யாராவது அம்மனிதனை முழுமையானவனாக ஆக்க முடியுமா-? உங்களுடைய விக்கிரகங்களில் ஏதாவதொன்று இம்மனிதனை முழுமையானவனாக ஆக்கமுடியுமா-? ஒருவராலும் முடியாது-! கோவிலில் உள்ள ஒரு தீர்க்கதரிசியாலும். எந்த ஆசாரியனாலும் சரி, முடியாது'' என்று கூறினேன். மேலும் “எந்த விக்கிரகமும் அதைச் செய்ய முடியாது. என்னாலும் கூட அதைச் செய்ய இயலாது. ஆனால் பரலோகத்தின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உயிரோடெழுப்பினார், இன்றைக்கு அவர் மனிதனிடையே உயிருள்ளவராக இருக்கிறார், இப்பொழுது முழுமையானவனாக ஆக்கப்பட்டு, நீங்கள் காணத்தக்கதாக நின்று கொண்டிருக்கும் இம்மனிதனுக்கு முழு சுகத்தையும் அளித்தவர் அவரே'', என்று கூறினேன். கழுத்தில் சங்கிலியிடப்பட்டு, ஒரு நாயைப் போல கூட்டிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த அவன், ஒரு நிமிட நேரத்தில் நலமுடன் இயல்பாக தன் காலில் நின்று கொண்டிருந்தான். 88. முந்தின இரவு நாங்கள் அங்கே காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, சகோ. ரீட்ஹெட் என்னிடம், “ஓ, என்னே-!'' என்றார். நான் அதைக் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். சிறந்த கல்வி அறிவு படைத்த இந்த முகமதியனிடம் அவர் நல்லது, ஐயா, உங்களுடைய பழைய இறந்து போன தீர்க்கதரிசி முகமதை ஏன் நீங்கள் விட்டுவிடக் கூடாது-?'' என்று கேட்டார். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். முகமதியர்கள் தேவனில் விசுவாசம் வைத்துள்ளனர். அங்கே ஆப்பிரிக்காவில் அந்த மகத்தான மணி போன்ற ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ரப்பரால் செய்யப்பட்ட ஒரு பெரிய சுத்தியால் அதை அடிப்பார்கள், அது தேசம் முழுவதும் ஒலிக்கும். ஒவ்வொரு முகமதியனும் நிற்பான், “பிறகு பூசாரி வெளியே நடந்து சென்று மக்களிடையே ஒரே ஒரு ஜீவிக்கின்ற தேவன் தான் இருக்கிறார். முகமது அவருடைய தீர்க்கதரிசி ஆவார்” என்று கூறுவான். அவர்கள் இஸ்மவேலின் பிள்ளைகள். பாருங்கள், ஆகார், அவர்கள் ஆகாரிலிருந்து வெளிவந்த ஆபிரகாமின் பிள்ளைகள். பாருங்கள்-? அவர்கள் உண்மையான யெகோவா தேவனில் விசுவாசம் கொண்டுள்ளனர், ஆனால் இயேசுவை அவர்கள்... (அது அவர் நமது மீட்பர், சுயாதீன ஸ்திரீயிலிருந்து புறஜாதிகளுக்கு அனுப்பப்பட்டவர்; பாருங்கள், ஈசாக்கு சாராள் மூலமாக), ஆகவே இப்பொழுது, அவர்கள் ஆகார், இஸ்மவேல் மூலமாக வந்தவர்கள், முகமதியர்கள். முகமதுவின் கல்லறையை நீங்கள் சென்று காணவேண்டும். அங்குள்ள மகத்தான சமாதி, அது அழகாக இருக்கின்றது. அங்கே குதிரை சேணங்கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. முகமது ஒரு நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து அந்த குதிரையின் மேல் குதித்து உட்கார்ந்து உலகத்தை வெல்லப் போவதாக வாக்குரைத்திருக்கிறார். ஆகவே ஒவ்வொருபொழுதும் அவர்கள் வெவ்வேறு குதிரைகளை மாற்றி கொண்டு அங்கே விசுவாசத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முகமது மரித்தோரிலிருந்து எழுந்திருக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. 89. அவர்கள் இயேசுவை விசுவாசிக்கின்றனர், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் கூறுகின்றனர். பழைய எருசலேமின் மதில்களின் மேல் ஒரு மகத்தான, பெரிய பரிசுத்த ஸ்தலம் முகமது வருவதற்காக கட்டப்பட்டுள்ளது, அதற்குக் கீழே ஒரு சிறிய பரிசுத்த ஸ்தலம் கட்டப்பட்டுள்ளது. அது இயேசுவிற்கு. பாருங்கள், “அவர்கள் இயேசு சிலுவையில் அறையப்படவேயில்லை, அதைக் குறித்து குழப்பிவிட்டிருக்கின்றனர், அவர் ஒரு குதிரையின் மேல் ஏறிச் சென்றுவிட்டார்” என்று கூறுகின்றனர். பாருங்கள்-? இப்பொழுது, அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். நீங்கள் இந்தியாவிற்கு செல்வீர்களானால் அதைக் கவனிப்பீர்கள். அங்கே அவர்கள் தங்கள் கண்களுக்கு இடையே ஒரு சிகப்பு புள்ளியை வைத்திருப்பார்கள். என்னே, அவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். 90. டாக்டர் ரீட் ஹெட், அங்கு நின்று கொண்டிருந்த அந்த மனிதனிடம், “இப்பொழுது, ஏன் நீங்கள் அந்த மரித்துப்போன வயதான தீர்க்கதரிசியை புறம்பாக்கிவிட்டு, மரித்தோரிலிருந்து எழுந்த ஜீவிக்கின்ற கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளக் கூடாது-?'' என்று கேட்டார்கள். இப்பொழுது, அவர் ஒரு படிப்பாளி, வார்த்தைகளை எங்கெங்கு பொருத்த வேண்டும் என்பதை அவர் அறிவார். அந்த முகமதியன் அவரை நோக்கிப் பார்த்தான், (திறமைசாலி, படித்த மனிதன், இங்கே அமெரிக்காவில் படித்தவர்), அவன் “அன்புள்ள ஐயா, என்னுடைய மரித்த தீர்க்கதரிசி எனக்கு செய்ததைக் காட்டிலும் உம்முடைய உயிர்த்தெழுந்த இயேசு எனக்கு என்ன செய்ய முடியும்-? என்னுடைய இறந்துபோன தீர்க்கதரிசி எனக்கு மரணத்திற்குப் பிறகு ஜீவன் அளிப்பதாக வாக்குரைத்திருக்கிறார். அதைத்தான் உம்முடைய இயேசுவும் கூறியிருக்கிறார்'' என்றான். ”நல்லது, அவன் ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தான். அவன், ''இப்பொழுது இருவரும் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். இயேசு எழுதினதை நீர் விசுவாசிக்கிறீர், நான் முகமது எழுதினதை விசுவாசிக்கிறேன். இருவரும் ஜீவனை வாக்குத்தத்தம் செய்திருக்கின்றனர். என்னுடைய முகமது எனக்கு செய்ததைக் காட்டிலும் உம்முடைய இயேசு எனக்கு என்ன செய்ய இயலும்-?'' என்றான். நல்லது, அந்த மனிதன், சாதாரண கூற்றுகள், அது உண்மை. அவன், “அன்புள்ள ஐயா, சற்றுப் பொறுங்கள், உங்கள் இயேசு வாக்குத்தத்தம் செய்தது போல என் முகமது எனக்கு செய்யவில்லை. உங்கள் இயேசு வாக்குரைத்திருக்கிறார். ”அவர்கள் அவர் உயிர்த்தெழுந்தார்“ என்று கூறுகின்றனர், உலக முடிவு பரியந்தம் உங்களோடு இருக்கப்போகிறார்; அவர் செய்த அதே அற்புதங்கள், அடையாளங்கள் நீங்களும் உலக முடிவுபரியந்தம் செய்யப் போகிறீர்கள். நீங்கள் பிணியாளிகளை சுகமாக்குவீர்கள், மரித்தோரை எழுப்புவீர்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குவீர்கள், பிசாசுகளை துரத்துவீர்கள். நான் கிறிஸ்தவ மார்க்கத்தை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தேன், சரி இப்பொழுது, உங்கள் போதகர்கள் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கட்டும், அப்பொழுது அவர் மரித்தோலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் விசுவாசிப்பேன். ஆனால் இதற்கு மாறாக... முகமது இக்காரியங்களை எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை, மரணத்திற்கு பிறகு ஜீவன் என்று மாத்திரமே எங்களுக்கு வாக்குரைத்தார். அந்த ஒரு காரியத்தை நீங்கள் போதித்து மற்றவைகளைக் கடந்து செல்கிறீர்கள். அந்த முகமதிய மனிதன் முற்றிலும் சரியாகக் கூறினான். 91. டாக்டர் ரீட் ஹெட் எழுந்து நின்று அழுதார். அவர், ''சகோ. பிரான்ஹாம் நான் உங்களைப் பற்றி நினைத்தேன்“ என்று கூறினார். அவர் வேகமாக ஓடி இங்கு வந்தார், நான் அவர் மீது என் கரங்களை வைத்தேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர் மேல் வந்தது. இப்பொழுது அவர் தரிசனங்களையும், மற்றவைகளையும் கூட காண்கிறார். இப்பொழுது அந்த முகமதியன் இவரை சந்திக்கட்டும்-! இப்பொழுது இவர் வித்தியாசப்பட்ட நபர்-! நான் நம்முடைய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார், அவர் இன்றைக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறேன். அவர் அன்றைக்குச் செய்த அதே அற்புதங்களையும் அடையாளங்களையும் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அடிப்படைவாதி களாகிய மக்கள் உட்கார்ந்து கொண்டு அந்த விதத்தில் விளக்க முயன்று கொண்டு, வேதத்தின் அடிப்படை, அஸ்திபாரபாகங்களை விட்டுவிடுகிறீர்கள். அது முற்றிலும் சரி. உயிர்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உன் மூலமாக வேறு பாஷைகளில் பேச முடியும், அவர் உன் மூலமாக தீர்க்கதரிசனம் உரைக்க முடியும், அவர் உன் மூலமாக தரிசனங்களைக் காண்பிக்க முடியும், அவர் உன் மூலமாக அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்யமுடியும். எல்லாம் அவருடைய பாகமாயிருக்கின்றன. ஆகவே இந்த பாகத்தை அவரிலிருந்து எடுத்துக் கொண்டு அந்த பாகத்தை விட்டுவிடுவது, என்னை இரண்டாக வெட்டி என்னுடைய இடுப்பு மற்றும் கால்களை எடுத்துக் கொண்டு, இந்த பாகத்தைப் பெறாமல், என்னைப் பெற்றுக் கொண்டேன் என்று நீ கூறுவது போன்று இருக்கும். ஒன்று என்னை முழுமையாக பெற்றாக வேண்டும். அந்த காரணத்தால் தான், தேவன் கூறின எல்லா காரியங்கள் உண்மை என்று விசுவாசிக்கும் முழு சுவிசேஷப் பிரசங்கியாக நான் இருக்கிறேன். ஆமென்-! மகிமை-! நான் ஒரு பரிசுத்த உருளையனாக இருப்பதாக இப்பொழுது உணருகிறேன். ஆம், ஐயா. நான் அதை விசுவாசிக்கிறேன்-! 92.கேள்வி:7 மத்தேயு 24:29 “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் இது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்பு அல்லது பின்பு நிகழுமா, அல்லது இயேசு பூமியின் மீது ஆளுகை செய்ய வரும் முன்னர் நிகழுமா-? என்னுடைய தாழ்மையான நம்பிக்கையில், இப்பொழுது, நான் செய்யமாட்டேன். எனக்குத் தெரியாது, அவர் அங்கே மத்தேயு 24-ஐக் குறித்து பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இயேசு நட்சத்திரங்களைக் குறித்தும், விழும் காரியங்களைக் குறித்தும் பேசுகின்றார், பூமியின் மீது உபத்திரவம் விழும் முன்னர் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இதை நீங்கள் யாரும் ஆமோதிக்காத, ஏற்றுக் கொள்ளக் கூடாத ஒரு வினோதமான கருத்தை நான் கொண்டிருந்தேன், நாம் அதற்குள் கடந்து வந்தோம் என்னும் போதகத்தை பழைய காலத்தவரில் சிலர் கேட்டார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். பாருங்கள், சபையானது உபத்திரவக் காலத்திற்குள் செல்லும் என்று நான் விசுவாசிப்பதில்லை. நான் விசுவாசிக்கிறேன் சபை... பாருங்கள், நான்... புதிய ஏற்பாட்டை நான் கற்பிக்கும் ஒரே வழி அதன் நிழலாகிய பழைய ஏற்பாட்டின் மூலமேயாகும், இங்கே பரிசுத்த ஆவி ஓய்வு நாளுக்காகவும் உள்ளதைப் போன்றாகும். எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு நிழலுண்டு. 93. இப்பொழுது, பழைய ஏற்பாட்டைத் திரும்பிப் பாருங்கள். அங்கு வாதைகள் விழுவதை நீங்கள் காணும் போது, அவர்கள் அங்கு எகிப்தில் இருந்தனர். அப்படித்தானே-? தேவன் தம் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்ல அவர்களை வெளியே அழைத்தார். அது சரிதானே-? இஸ்ரவேலோ ஒரு வாதையைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை. எப்படி வாதைகள். அது வரும் முன்னர் அவர்கள் கோசேனிற்குள் சென்றுவிட்டனர். அது சரியா-? அங்கு சூரியன் மங்கவில்லை, கொசுக்கள் வரவில்லை, தவளைகள் அங்கே இல்லை, பேன்கள் அங்கே இல்லை, புயல், மின்னல் அங்கே இருக்கவில்லை, ஆடு மாடுகள் அங்கே கொல்லப்படவில்லை, கோசேனில் அவர்கள் வைத்திருந்த எல்லா காரியங்களும் பாதுகாக்கப்பட்டன. அது சரிதானே-? உபத்திரவக் காலத்திற்கு முன் சபை சென்றுவிடுவதற்கு இது நிழலாய் அமைந்துள்ளது. இயேசு, “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்'' என்று கூறினார். நான் நம்புகிறேன், சந்திரன், சூரியன் நட்சத்திரங்கள்... அவர்கள் கூறினர். நான் மேற்சென்று அதைப் படிக்கிறேன், மனிதர்கள் ஓடி தங்களை ஒளித்துக் கொண்டார்கள். பிறகு. விழுந்து தங்களைத், தானே கொலை செய்துகொள்ள முயற்சித்தார்கள், ஆனாலும் அவர்களால் முடியாதிருந்தது, எல்லாவற்றிலும்'' இது உபத்திரவத்திற்கு முன்பாக நிகழும் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, கவனியுங்கள், உபத்திரவம் வருகின்றது. உபத்திரவம் வருகின்றது. உபத்திரவம் தாக்கும்போது, சபை மேலே செல்கிறது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவி இல்லாது ஒரு சாதாரண சபை உபத்திரவத்திற்குள் செல்கிறது. அது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே செல்வதாகும். ஓ, இன்னும் ஒரு நிமிடம் இதைக் குறித்து நான் இங்கே சற்று பார்க்க முடியும். இன்னும் மூன்று நிமிடங்கள் எனக்கு அளிப்பீர்களா-? எடுத்துக் கொள்ளப்பட்ட மக்கள் என்னவென்று அழைக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்-? அது சரிதானே-? அது சரி.. நான் - நான் கூற விழைவது - அது மணவாட்டி இப்பொழுது, மீதமுள்ளவர்கள் விடப்பட்டனர். 94.இப்பொழுது, ஒரு ஸ்திரீ மேலாடைக்கான அமைப்பை வெட்டச் செல்கையில், நீங்கள் அதைக் குறித்து பேசுகிறீர்கள். அவள் பொருட்களை பிரித்து விரித்து வைக்கிறாள் (அது சரிதானே-?), பொருட்கள். வெட்டப்பட வேண்டிய அமைப்பை அதன் மீது வைக்கிறாள். பிறகு வெட்ட வேண்டிய அமைப்பை குறிக்கின்றாள். அது சரி-? ஓ, சகோதரனே, இது உங்களுக்கு நலமானதைச் செய்கிறதல்லவா-! தெரிந்து கொள்ளுதலை செய்வது யார்-? தேவனே தெரிந்த கொள்ளுதலைச் செய்கிறார். அது சரியா-? இதை நான் கூறுவதற்கல்ல, அவர்தான் அதைக் கூறவேண்டும். யார் மீது அமைப்பு வைக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கின்றாரோ அவன் மீது அதை வைக்கிறார். அது சரி தானே-? இப்பொழுது, மணவாளனை சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள். அது சரிதானே-? “கன்னி'' என்பது என்ன-? கன்னி என்றால் ''தூய்மை, பரிசுத்தம்” அது சரியா-? கன்னிகை என்பது என்ன-? கறைபடாத, தொடப்படாத ஒரு பெண், அவள் ஒரு கன்னிகை. தூய்மையான ஒலிவ எண்ணெயைப் போன்று வேறு தூய்மையானது உண்டா-? அப்படியென்றால் அது முழுவதுமாக சுத்தமாகும் வரை கடைந்தெடுக்கப்பட்ட ஒன்று. தூய்மையான பொன் என்றால் என்ன-? உலோகக் கழிவு முழுவதும்... அது நெருப்பிலும், அனலிலும் மற்றெல்லாவற்றிலும் புடமிடபட்டு, உலோகக் கழிவு முழுவதும் உருக்கி எடுக்கப்பட்டது. அது சரியா-? எல்லா இரும்பும், செம்பும் உருக்கி எடுக்கப்பட்ட பிறகு அது தூய்மையாக ஆகின்றது. 95. இப்பொழுது, அங்கே பத்துப் பேர் மாணவாளனைச் சந்திக்கச் செல்கின்றனர். இயேசு அவ்வாறு கூறினார். அது சரியா-? எத்தனைப் பேர் அதை ஆமோதிக்கிறீர்கள் என்று கூறுங்கள் (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பத்துப் பேர் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் பரிசுத்தமாய் இருந்தார்கள். நல்லது பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் ”பரிசுத்தமாக்கப்பட்டிருக்க வேண்டும்“ ஏனென்றால் சுத்தமாக்கப்பட தேவன் வைத்திருக்கும் ஒரே வழி, பரிசுத்தமாக்கப்படுதல். அது சரிதானே-? இப்பொழுது, கவனியுங்கள். பத்துப் பேர்களும் பரிசுத்தமாக்கப்பட்டு இருந்தனர், ஐந்து பேர் தங்கள் விளக்குளில் எண்ணெயை வைத்திருக்கவில்லை. ஐந்து பேர் தங்கள் விளக்குளில் எண்ணெய் வைத்திருந்தனர். அது சரிதானே-? எண்ணெய் எதைக் குறிக்கின்றது-? இப்பொழுது, சுத்தத்தை, அல்லது கன்னித் தன்மையை அது குறிக்கவில்லை. எண்ணெய் “பரிசுத்த ஆவியை” குறிக்கின்றது. 96. இப்பொழுது, இதை நான்... கூறுவது உங்களை சிறிது புண்படுத்தக் கூடும், நான் அவ்வாறு செய்யவிழையவில்லை, அவ்வாறு செய்வதில்லை. இப்பொழுது என்னை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சபையை விட்டு நின்றுவிடாதீர்கள். உங்களுக்கு உதவத் தான் நான் இந்த பிரசங்க பீடத்தில் இருக்கின்றேன். பாருங்கள்-? இப்பொழுது, கவனியுங்கள், இதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். நசரீன்கள், பரிசுத்த யாத்ரீகர்கள் போன்றவர்களை விட பரிசுத்தமாக ஜீவிக்கின்ற சபை இவ்வுலகத்தில் கிடையாது. அது சரிதானே-? அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் முழுவதுமாக விசுவாசிக்கின்றார்கள். அவர்களுடைய ஸ்திரீகள் மோதிரங்கள், மற்ற எதையுமே அணிவதில்லை. தூய்மை, பரிசுத்தமாக்கப்படுதல், எல்லா வழிகளிலும் அதை விசுவாசிக்கின்றார்கள். யாத்ரீக ஸ்தாபனங்கள், எல்லா சட்டபூர்வக்காரர்கள், அதுதான் அவர்கள் போதகங்கள், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். பரிசுத்தம்-! ஸ்திரீகள் நீண்ட மயிரையும் நீண்ட ஆடைகளையும் அணிகின்றனர். மனிதன் தன்னுடைய சட்டைக் கைகளைக் கூட மடிக்க கூடாது, அவர்களில் அநேகர். அவர்கள், குடிக்கவோ, புகை பிடிக்கவோ, மற்ற எதையும் செய்யக்கூடாது, பாருங்கள். பரிசுத்தம்-! இதை விட பரிசுத்தமாய் உன்னால் ஜீவிக்க இயலாது. ஆனால் அதே நசரின் சபையில், ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசுவானானால், அவன் வெளியே தள்ளப்பட்டு, கதவு மூடப்படும். அவ்வொருவன் பக்கத்திலும் கூட உட்காரமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொழுது, அது உண்மை. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை என்றால், முயற்சி செய்துபார்த்து, கண்டுகொள்ளுங்கள். உடனே கண்டுக் கொள்ளுங்கள். அதைக் குறித்த சிந்தனைகளையே அவர்கள் வெறுக்கின்றனர். “அது பிசாசு” என்று அவர்கள் கூறுகின்றனர். 97. அவர்களில் ஐந்து பேர். பத்துப் பேர்களும் கன்னிகைகள். ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாய் தங்கள் விளக்குகளில் எண்ணெயை வைத்திருந்தனர், மற்ற ஐந்து பேரும் தூய்மையாயும், பரிசுத்தமாயும் இருந்தனர். ஆனால் அவர்களிடத்தில் எண்ணெய் இல்லை (அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவி இல்லாமல் இருந்தனர்). “பூலோகத்திலே சாட்சியிருக்கிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே''. பரி. யோவான் 5:7... 1யோவான் 5:7 ”பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இம்மூன்றும் ஒன்றே. ஆனால் அங்கே பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, இரத்தம், ஜலம் என்பவைகளே. அவைகள் ஒன்றல்ல. ஆனால் இவை மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது''. இப்பொழுது, குமாரன் இல்லமால் பிதாவை நீங்கள் கொண்டிருக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இல்லாமல் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க முடியாது. அவர்களெல்லாரும் ஒருவரே. நீங்கள்... அவர்களைப் பிரிக்க இயலாது. ஆனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமான்களாக்கப்பட முடியும். நீங்கள் பரிசுத்த ஆவி இல்லாமல் பரிசுத்தமாக்கப்பட முடியும்; சுத்தமானவர்களாயும், தூய்மையான வாழ்வை வாழ்ந்து, தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலித்து, சுகமாக்கும் வல்லமையையும், பாஷைகளில் பேசுதலையும், தேவனுடைய மகத்தான வரங்களையும் (ஒவ்வொன்றும் அதில் உள்ளது) நிராகரிக்கின்றீர்கள். 98. உங்களுடைய ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் அங்கே தங்கள் விளக்குகளில் எண்ணெய் உடையவர்களாய் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசம், அற்புதங்கள், அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள், மற்ற எல்லாவற்றையும் விசுவாசிப்பார்கள். மீதமுள்ளவர்களிலிருந்து இந்த ஐந்து பேர்கள் வெட்டி எடுத்து கொள்ளப்பட்டனர். மற்ற ஐந்து பேரும் இன்னும் கன்னிகைகளாய் இருக்கின்றார், அவர்கள் இழந்து போகப்பட மாட்டார்கள், ஆனால் உபத்திரவ காலத்திற்குள் செல்வர். இயேசு கூறினார், “அங்கே...'' அவர்கள், ''உங்களுடைய எண்ணெயில் சிறிது எங்களுக்குத் தாருங்கள், எங்களுக்கு இப்பொழுது பரிசுத்தஆவி தேவை“ என்றனர். இப்பொழுது, அந்த பரிசுத்தஆவி என்பதாவது... ஒவ்வொரும் அறிந்திருக்கிறீர்கள். சகரியா 4, மற்றும் ஓ, யாக்கோபு 5:14, அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். இப்பொழுது அவர்கள் கூறினர். அதன் காரணத்தால் தான் நாம் எண்ணெயால் அபிஷேகம் செய்கிறோம், அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது; இப்பொழுது, “ஆவியாகிய எண்ணெய்'' என்று வேதம் கூறுகின்றது. 99. இப்பொழுது, இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர்; இவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று தேவனுடைய வல்லமையின் எல்லா அம்சங்களிலும், காரியங்களிலும் விசுவாசம் கொண்டிருந்தனர். இங்கே, இதைக் குறித்து தேவன் உரைத்த எல்லாவற்றையும் பெற்று, விசுவாசித்தித்தனர். அவர்கள் எடுக்கப்பட்டனர். ஆகையால், இவர்கள், ''எங்களுக்கு இப்பொழுது கொடுங்கள்“ என்று கூறினர். இவர்களோ, ''உள்ளே செல்வதற்கு போதுமான அளவுதான் எங்களிடம் உள்ளது“ என்றனர். ஆகவே அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றுவிட்டனர் அது, “நீங்கள் சென்று விற்பவர்களிடமிருந்து சிறிது வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றது. இயேசு, அவர் தான் கூறினார். ஆகவே அவர்கள் ஜெபம் செய்து பரிசுத்த ஆவியைப் பெற்று கடந்து செல்ல விழைந்தனர். ஆனால் உபத்திரவம் காலம் முடிவுற்று, உபத்திரவ காலம் எழும்பிற்று. ஆகவே அவர், ''அவர்கள் இருளில் தள்ளப்பட்டார்கள். அங்கே அழுகையும், மாரடித்தலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்று கூறினார். ஆனால் இரண்டாம் உயிர்த்தெழுதலிலே அவர்கள் வெள்ளாடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட செம்மறியாடுகள் ஆவர், ஆனால் அவர்கள் மணவாட்டி அல்ல, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் மீதியாயிருந்த ஸ்திரீயுடைய வித்து ஆவர். 100. மீதம் என்றால் என்ன-? வெட்டினதில் மீதம் உள்ள பொருள். அதே விதமானப் பொருள்தான். அது சரிதானே-? உனக்கு தேவையான ஆடையை வெட்ட, நீ பெரிய காலிகோ (Calico) துணியை விரித்து அதிலிருந்து வெட்டி எடுப்பாய். எந்த விதமாக அமைக்கப்பட வேண்டுமென்று நிர்ணயிப்பது உன்னுடைய வேலையாகும். அதே விதமாக அதுவும் தேவனுடைய வேலை ஆகும், எவ்விதமாக அமைக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து, சரியாக வெட்டி வெளியே எடுக்கின்றார். அது சரியல்லவா-? ஆகையால், இப்பொழுது, இங்கே துணி மீதமாக இருக்கிறது. ஆனால் ஆடையின் வடிவில் உள்ள துணியைப் போன்றே இந்த மீதமானதும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அது சரியல்லவா-? ஆனால் அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் ஆகும். தேவன் தமது சபையை தெரிந்து கொள்ளுகிறார், தேவன் தமது சபையை முன்குறித்திருக்கிறார், தேவன் அந்த சபையை முன்குறிக்கின்றார், அந்த சபையை அவர் வெளியே எடுக்கின்றார். ஆகவே மீதமுள்ளவர்கள் உபத்திரவக் காலத்திற்குள் செல்லவிடப்படுகின்றனர். 101. இங்கு தான் அநேக வேதாகம அறிஞர்கள் குழப்பம் தந்து, மணவாட்டி உபத்திரவத்தில் செல்கின்றாள் என்று நினைக்கிறனர். ஒரு மனிதன் என்னிடம், ''சகோ. பிரான்ஹாம், இதை என்னால் சொல்லக்கூடாதிருக்கிறது, நான் மணவாட்டியை வானத்தில் கண்டேன், வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து ஜலத்தைக் கக்கினவாறு மணவாட்டியுடன் யுத்தம் செய்ய வந்தது. மணவாட்டியான இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் சீனாய் மலையின் நின்று கொண்டிருந்தனர்'' என்று கூறினார். நான், ''ஓ, இல்லை, இல்லை, இல்லை, நீர் குழப்பமடைந்திருக்கிறீர். மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள்'' என்றேன். மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்கள், அவள்... அமைப்பானது (Pattern) அல்ல, மீதமுள்ளவர்கள் அங்கே இருந்தனர், உபத்திரவம், அடக்குமுறை (ரோம சாம்ராஜ்ஜியம்) கத்தோலிக்க சபை வலுவடைந்து நிலைகொள்ளும்போது அவர்கள் பெரிய தங்கள் எல்லா அதிகாரத்தையும் அந்த சபையுடன் சேர்த்து விடுவார்கள். 102. ஏன், அவர்கள் அதைச் செயல்படுத்துகிறார்கள். அன்றிரவு தொலைகாட்சியில் அது வந்தது. மெத்தோடிஸ்ட் சபைகளும், பாப்டிஸ்ட் சபைகளும், முழு கிறிஸ்தவ சபைகள் என்ற அமைப்பும், மற்ற எல்லாமும் கத்தோலிக்க சபையுடன் இணைந்து, ஒரே பீடத்தின் முன்பு நிற்க முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிஷப் அன்றிரவு என்ன கூறினார்-? நான் தொலைக்காட்சியில் அதைக் கண்டேன். அவர்களின் எல்லாக் கூட்டத்தாரும்-! நேரம் வரும்போது அடக்குமுறை கையாளப்படும், பரிசுத்தஆவி மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் மீது விழும். அவர்கள் எல்லாரும் பாஷைகள் பேசி, தேவனைத் துதித்து, வியாதியஸ்தரை சுகமாக்கி, தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், எல்லா அற்புதங்களும் அடையாளங்களும் சம்பவிக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மேலே செல்வர், மீதமுள்ளவர்கள் உபத்திரவ காலத்திற்குள் செல்லத்தக்கதாக இங்கேயே விடப்படுவார்கள். காலமானது முடியும் போது, என்ன சம்பவித்தது என்பதை அவர்கள் கண்டு, இரத்த சாட்சிகளாய் மரிக்க வேண்டும். 103. பிறகு கவனியுங்கள். ''நல்லது, இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, இம்மக்கள் அங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் இருப்பார்கள், என்று எங்களுக்கு கூற முற்படுகிறீரா-?'' அவர்கள் இருப்பார்கள்... மணவாட்டி ஒருபோதும் நியாயந்தீர்க்கப்பட மாட்டாள். இல்லை, ஐயா. அவள் கிறிஸ்துவிற்குள் இருக்கின்றாள். அவர்கள் எப்படி கிறிஸ்துவிற்குள் செல்கின்றனர்-? “நாமெல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு உள்ளோம்'' அது சரிதானே-? இப்பொழுது, இங்கே கவனியுங்கள். வேதாகமம் “நியாயத்தீர்ப்பு ஆரம்பித்தது, அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன'' என்று கூறுகின்றது. அது சரியா-? பாவிகளுடைய புத்தகங்கள். ''வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது”, ''அது ஜீவ புஸ்தகமாய் இருந்தது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயந்தீர்க்கப்படுவான். அது சரியல்லவா-? நீயாயத்தீர்ப்பை செய்வது யார்-? இயேசுவும் பரிசுத்தவான்களும். அவர் வந்தார், ''அவர் சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல் துப்புரவாகவும் இருந்த நீண்ட ஆயுசுள்ளவருக்கு சேவை செய்தார். அவருடன் ஆயிரம் பதினாயிரம்பேர் வந்து, நியாத்தீர்ப்பில் அவருக்கு ஊழியஞ் செய்தனர்“. ''இங்கே இயேசு இராஜாவும், ராணியுமாக திரும்ப வருகிறார், கலியாணம் முடிந்தது, அவர் கலியாணமானவர். இங்கே ராஜாவும் ராணியும் நிற்கின்றனர். பரிசுத்தமாக்கப்பட்ட கூட்டம் அங்கே நிற்கிறது, தேவன், ''இங்கே என்னுடைய வலது பக்கத்தில் நில்லுங்கள்'' அந்த புஸ்தகம் திறக்கப்பட்டது, அவர் பாவிகளைப் பார்த்து, ”என்னுடைய இடது பக்கத்திற்கு வாருங்கள்'' என்று கூறுகிறார். ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட நபர்கள் இங்கே இருக்கின்றனர். 104. நீங்கள், சகோ. பிரன்ஹாம், என்னுடைய பெயர் அங்கே எழுதப்பட்டுள்ளது, நான் செல்வேன்-!'' என்று கூறலாம். ஒரு நிமிடம் பொறுங்கள்-! யூதாஸ்காரியத்தும் பரிசுத்தமாக்கப்பட்டான். வியூ-! சகோதரனே, தயவு செய்து இப்பொழுது விழித்துக்கொள், அப்பொழுது இதைப் பெற்றுக்கொள்வாய், நீங்கள் பாருங்கள். யூதாஸ்காரியோத்து, அவனுடைய ஆவிதான் இன்றைக்கு அந்தி கிறிஸ்துவாக இருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். இயேசு தாம் தேவனுடைய குமாரன், தேவனிடத்திலிருந்து வந்து தேவனிடத்திற்கு சென்றார்; யூதாஸ் கேட்டின் குமாரன் ஆவான், பாதாளத்திலிருந்து வந்து பாதாளத்திற்கே திரும்பிச் சென்றான். இயேசு மனந்திரும்பின பாவியை தம்முடன் கூட்டிச் சென்றார்; யூதாஸ் மனந்திரும்பாத பாவியை தன்னுடன் கூட்டிச் சென்றான், ''நீ இப்படிப்பட்டவன் தான் என்றால்-! நீ ஒரு தெய்வீக சுகமளிப்பவன் ஆனால், இதைச் செய். நீ இப்படிப்பட்டவன் என்றால், இதை செய்'' (தேவனுடைய வார்த்தைக்கு குறுக்கே உள்ள கேள்விக் குறியை கவனியுங்கள்) ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படியென்றால் இதை எனக்குக் காண்பி. அப்படியென்றால்-! அப்படியென்றால்-!'' பாருங்கள்-? ''அதெல்லாம் உண்மை'', என்று தேவன் கூறினார். 105. இப்பொழுது கவனியுங்கள். யூதாஸ்காரியோத்து விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டான், இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். வேதம் கூறுகின்றது, “இயேசு - இயேசு சீஷர்களுக்கு, தம்முடைய சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்'' அது சரி. பரி. யோவான் 17:17, அவர்களை அவர் அனுப்புவதற்கு முன், அவர், ''உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் என்றார்'' பரிகாரமானது செய்யப்படுவதற்கு முன்பிலிருந்தே அவர் வார்த்தையாயிருந்தார். வேறு விதமாகக் கூறினால், அதற்கு முன் காட்சியாக (preview), பிதாவே, என் சிந்தப்பட்ட இரத்தத்தினாலே நான் இவர்களைப் பரிசுத்தமாக்குறேன்,'' என்றார். அசுத்த ஆவிகளுக்கு எதிராக அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், ஆகவே அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். அது சரியா-? அவர்கள் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தினார்கள். அதுசரியா-? ஆகவே அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், துதித்துக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், குதித்துக் கொண்டும் தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டும், திரும்பி வந்தனர். அது சரியல்லவா-? ''பிசாசுகளும் எங்களுக்கு கீழ்ப்படிகிறது'' என்று அவர்கள் கூறினார்கள். இயேசு, ''பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள். பரலோகப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்'' என்றார். அது சரிதானே-? யூதாஸ் காரியோத்தும் அவர்களோடு இருந்தான், அவர்களில் ஒருவனாய் இருந்தான், வெளியே அழைக்கப்பட்டவனாய், பரிசுத்தமாக்கப்பட்டவனாக இருந்தான், அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. மத்தேயு 10-நீங்கள் படித்து அது சரியாக இருக்கின்றதா என்று பாருங்கள். அவர் ஒவ்வொருவரையும் அழைத்தார், யூதாஸ்காரியோத்தைக் கூட, அங்கே அவர் அழைத்தார். அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து அனுப்பினார். 106. இப்பொழுது கவனியுங்கள்-! அதிர்வைத் தாங்கும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். யூதாஸ் ஒரு பொக்கிஷதாரியாக இருந்து அந்த சபையோடு வந்து கொண்டிருந்தான், போதகர்... இயேசுவுடன் பணி செய்துக்கொண்டு இருந்தான், ஆனால் அந்த வேளை வந்தபோது, பெந்தெகொஸ்தே நாளில், தன் சுயரூபத்தைக் காண்பித்தான். அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காண்பித்தான். ஆகவே அவன் தன்னை அழித்துக் கொண்டு, தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் ஒரு காட்டத்தி மரத்தில் தன்னைத் தானே தூக்கிலிட்டுக் கொண்டான். ஆகவே அந்த யூதாஸின் ஆவி சரியாக வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும். இயேசு கூறினது போல, பிசாசுகளும் நடுங்கி, விசுவாசிக்கும்'' அவன் சரியாக வந்து பரிசுத்தமாக்கப்படுதலை குறித்து போதித்து, ஒரு பரிசுத்த, தூய வாழ்க்கை எப்படி இருக்குமோ அதைப் போலவே இருப்பான்; ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் என்ற ஒரு நிலைக்கு வரும்போது அவன் அதை நிராகரிப்பான்-! அவன் ஒவ்வொரு நேரத்திலும் தன்னுடைய சுயரூபத்தை காண்பிப்பான். அங்கேதான் அந்த ஆவி உள்ளது. கவனியுங்கள்-! இயேசு, எச்சரிக்கையாயிருங்கள்-! என்றார். மத்தேயு 24-ல் ''அந்த இரண்டு ஆவிகளும் மிக நெருக்கமாக, ஒன்று போலக் காணப்பட்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்...'' அது சரியல்லவா-? அங்கேதான் அந்த அமைப்பானது, அமைக்கப்படுகையில்... சகோதரனே, பழமை நாகரீகம் கொண்ட, பரிசுத்த ஆவியுடைய, இங்கிருக்கும் பிரசங்கிகளில் விசுவாசம் கொண்டு தேவனுடன் உன்னை சரிபடுத்திக் கொள்வது நல்லது. அது சரி. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்காதீர்கள். ஆமென்-! எல்லாரும் நலமாக இருப்பதாக உணருகிறீர்களா-? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) 107.எல்லோரும் நன்றாக உணருகிறீர்களா-? நாமெல்லாரும் பரலோகத்தை அடையும் போது, அது என்ன குதூகலம் கொண்ட நாளாக இருக்கும்-! நாமெல்லாரும் இயேசுவைக் காண்போம், ஜெயம் என்று நாம் பாடி சப்தமிடுவோம். நாமெல்லாரும் பரலோகத்தை அடையும் போது, அது என்ன குதூகலம் கொண்ட நாளாக அது இருக்கும்-! நாமெல்லாரும் இயேசுவைக் காண்போம், ஜெயம் என்று நாம் பாடி சப்தமிடுவோம். அல்லேலூயா-! சிறிது நேரம் நாம் எழுந்து நிற்போம். உங்களில் எத்தனைப் பேர் உங்கள் முழு இருதயத்துடன் அவரை நேசிக்கிறீர்கள்-? உங்கள் கரங்களை உயர்த்தி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-!''என்று கூறுங்கள். (சபையார் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-!'' என்று கூறுகின்றனர் - ஆசி) ''கர்த்தாவே, நான் முழு சுவிசேஷத்தையும் விசுவாசிக்கிறேன்'' (”கர்த்தாவே, நான் முழு சுவிசேஷத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று சபையார் கூறுகிறார்கள் - ஆசி) ''உமது ஊழியக்காரனாய் இருக்கும்படி எனக்கு உதவும்'' ('உமது உழியக்காரனாய் இருக்கும்படி எனக்கு உதவும்'' என்று சபையார் கூறுகின்றனர் - ஆசி) அல்லேலூயா-! அல்லேலூயா-! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) வேதத்திலே அவர்கள்... 108. ஒரு ஸ்திரீ என்னிடம் கூறினாள்... ஒரு வாலிபன், இன்றிரவு ஒரு வேளை அவன் கேட்டுக் கொண்டிருக்கலாம், அவன் தெருவிற்கு அப்பால் வசிக்கிறான். அவன் அங்கே வந்தான். சகோதரி லூலா, இங்கே சபைக்கு வருகிற ஒரு சகோதரி, அங்கே சத்தமிட்டுக் கொண்டிருந்தார். சகோதரன் நெவில், நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அந்த வாலிபன் என்னிடம் கூறினான். இப்பொழுது, அங்கே முதல் பாப்டிஸ்ட் சபையில் அவன் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியனாக இருந்தான். அவன், ''பில்லி, அந்த ஸ்திரீ, உமக்கு நன்றி இயேசுவே-! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று அவள் சத்தம் போட ஆரம்பிக்கும் முன்பு வரை உமது பிரசங்கத்தை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன், எப்போதாவது ஒருமுறை யாரோ ஒரு மனிதன் (சகோ. சீவர்ட்) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-! ஆமென்-! என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்'' என்றான் நான் உன்னுடைய பிறப்புரிமையை விற்றுவிடுதல் என்பதைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், ஏசா தன்னுடைய பிறப்புரிமையை விற்றுப் போட்டான். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவன், “ஊ, ஊ, ஊ, அது என்னை நடுக்க முறச்செய்கிறது, என்னால் அதை சகிக்க முடியவில்லை-!'' என்றான். நான் “சகோதரனே, நீ பரலோகத்திற்குச் செல்வாயானால் நடுக்கத்தால் உறைந்துபோய் இருப்பாய். அங்கே பரலோகத்தில் இரவும் பகலும் சப்தமிட்டு ஆராவாரம் செய்வது நிச்சயமாக இருக்கும். அது சரி. சகோதரனே, ஐயா-! ஓ, ஆம், ஓ, அவர் முகத்தை நான் காணவேண்டும், அவருடைய இரட்சிப்பின் கிருபையை அங்கே என்றென்றும் பாடவேண்டும்; மகிமையின் வீதிகளிலே என்னுடைய குரலானது உயரட்டும்; கவலையெல்லாம் கடந்து, கடைசியாக வீடு வந்து, என்றென்றுமாகக் குதூகலிக்க. ஓ, அவர் முகத்தை நான் காணவேண்டும், அவருடைய இரட்சிப்பின் கிருபையை அங்கே என்றென்றும் பாடவேண்டும்; மகிமையின் வீதிகளிலே என்னுடைய குரலானது உயரட்டும்; கவலையெல்லாம் கடந்து, கடைசியாக வீடு வந்து என்றென்றுமாகக் குதூகலிக்க. ஆமென்-! சரி, சகோ. நெவில். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக நீங்கள் அங்கே சென்று முடித்து வையுங்கள். கேள்விகளும் பதில்களும் COD - 2 ஜனவரி 3, 1954 கேள்வி:8. 13-வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா-? 26. இப்பொழுது, கேட்பதற்கு இது ஒரு அருமையான கேள்வி ஆகும். நல்லது, இப்பொழுது, நண்பனே நான் எப்பொழுதும் அந்த நபரிடமே அதை விட்டு விடுவேன், 27. நினைவில் கொள்ளுங்கள், எனக்குத் தெரியாது... யார் இதை எழுதினது என்ற ஒன்றை மாத்திரம் நான் அறிவேன், இங்கே இருப்பவர், அந்த மனிதன் தாமே என்னிடம் வந்து கொடுத்தார். யாரோ ஒருவர் என்னிடம் சற்று முன்பு வந்து இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார். நான் "எனக்கு இங்கே போதுமான நேரம் கிடைத்தால் நான் பதிலுரைப்பேன்" என்று கூறினேன். அவர்கள் காகிதத்தில் அதை இங்கே எழுதி வைக்கவில்லை. 28. இப்பொழுது, இங்கே," நான்..... 13-வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன், மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா-? 29. நீங்கள் 13-வயதிலிருந்து கிறிஸ்தவனாயிருந்து, கிறிஸ்துவிற்குள் ஒரு விசுவாசியாயிருப்பீர்களானால் நான் - நான் நீங்கள் இருப்பது போலவே நானும் இருந்து விடுவேன். நான் இப்பொழுது செய்ய மாட்டேன். அது முதல் தேவன் உங்களை ஆசீர்வதித்து பரிசுத்தாவியை உங்களுக்கு அருளி இருப்பாரானால் நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள். 30. ஞானஸ்தானம் என்பது ஒரு-ஒரு-ஒரு முறைமை ஆகும், (form) ஞான ஸ்நானமானது உலகத்திற்கு காண்பிக்கத்தக்கதாக (அல்லது சபையாருக்கு - நீங்கள் அந்நேரத்தில் இருந்தீர்கள் என்று) நீங்கள், சாட்சிகளுக்கு முன்பாக, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் என்றும், அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் என்றும், ஆகையால் நீங்கள் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு புதிய ஜீவியம் செய்து நடக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறீர்கள் என்று நிரூபிப்பதற்காகவே. நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும்போது உங்களைப் பார்த்த மக்கள், நியாயத்தீர்ப்பில் உங்களைச் சந்திப்பார்கள், பாருங்கள். 31. ஆகவே பிறகு, யாராவது ஒருவர் (அந்நியர்) ''நீயா-?'' என்று கூறினால், 32. ''ஆம், என் தேவனுடைய மரணத்தினூடே, அடக்கத்தினூடே நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளேன். " 33. பாருங்கள், நான் நினைக்கிறேன் ஞானஸ்தானம். . . ஓ, அது தேவை என்று நான் கூறுகிறேன். அது தேவை அல்ல என்று நான் கூறமாட்டேன். ஆனால் அது தேவையான ஒன்று, ஏனென்றால் அது... தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் முக்கியமானதாகும். அப்படித் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா-? நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுவது மிகவும் அவசியமாகும். இயேசு மத்தேயு அல்லது மாற்கு 16-ல் இதைக் கூறுகின்றார். அவர் "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்றார். அவர் நிக்கொதேமுவிடன் பேசிக் கொண்டு இருக்கையில், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்'' என்று கூறினார். ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, புதிய ஜீவியத்தில் எழுப்பப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் நான் விசுவாசமுள்ளவனாயிருக்கிறேன். 34. ஆனால், நீங்கள், "சகோதரன் பில், சிறிய வயதில் அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கையில், நீங்கள் மறுபடியுமாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துள்ளீர்களா-?" என்று கூறலாம். அநேக முறை நான் அதைக் செய்துள்ளேன். 35. ஆகவே, அங்கே - அங்கே, வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 2-ஆம் அதிகாரத்தில் ''மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக" என்று அவர் சபையிடம் பேசுகின்றார். அநேகர் இந்த வசனத்தை எப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், நீ சரியாகப் பின்னால் சென்று அதே காரியத்தைச் செய் என்று அது குறிக்கிறது என்று கூறுகிறார்கள். நல்லது, அருமை கிறிஸ்தவ நண்பனே, இதை நீ கவனிப்பாயானால். . . 36. இப்பொழுது, இதனுடன் நான் இணங்காதிருக்க விழையவில்லை, பாருங்கள், ஏனெனில் நம்மிடம் உள்ள ஞானஸ்நானத்தொட்டி நிரப்பப்பட்டு உள்ளது. ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று விரும்புவோர் எவரையும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாங்கள் ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாயுள்ளோம். நாங்கள் இணங்காமல் இருக்க மாட்டோம். ஆகவே, நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், நீங்கள் செல்லும் பாதையில் ஏதாவது இருக்குமானால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள். அது சரி. நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள், உங்கள் பாதையில் எதையும் இருக்க விடாதீர்கள், நீங்கள் உங்களைத் தாமே பூரணமாக தெளிவாக்கிக் கொள்ளுங்கள். 37. அநேக வருடங்களுக்கு முன் நீங்கள் ஏதோவொன்றை எடுத்திருந்து, நீங்கள் அதைச் சரி செய்ய வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் சரி செய்யுங்கள். அது என்னவாய் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எல்லாவற்றை யும் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அந்த இடத்திற்கு வந்து விடுவீர்கள், ஏனெனில் உங்கள் பாதையில் இருக்கும் அதை நீங்கள் விலக்கும் வரையில் உங்களால் தொடர்ந்து செல்ல இயலாது. பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கியிருக்கிற எல்லாக் காரியங்களையும் நாம் தள்ளியாக வேண்டும். 38. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள். செய்ய வேண்டியது அது தான். நான் சிலருக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்துள்ளேன். 39. இப்பொழுது, நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த வேத வாக்கியம் ஒரு தனிப்பட்ட நபரிடம் பேசவில்லை, அது சபைக்கு பேசப்பட்டதாகும். பாருங்கள், அந்த சபைக்கு, அவர்கள் என்ன செய்தனர், ஆதியிலே அவர்கள் கொண்டிருந்த மகத்தான ஒன்றை, அவர்கள் ஆதி அன்பை விட்டனர். பாருங்கள். அவர்கள் "ஆகையால் நீ மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக," என்றனர். சரியாக அதைச் செய்து, அதை கைக்கொள், ''மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால்" என்று அவர் சபையிடம் பேசுகின்றார். நல்லது, இல்லையெனில், "நான் விளக்குத் தண்டை எடுத்துவிடுவேன்'', என்று கூறுகிறார். 40, ஆகவே நீங்கள் 13-வயதிலோ, அல்லது எந்த வயதிலோ ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், என்ன, அது உங்களுக்குச் சரியாயிருப்பின், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள். 41, நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று இப்பொழுது வேதபூர்வமாக நான் உங்களுக்கு கூற முடியுமானால், நீங்கள் பாருங்கள், மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று நான் கூற ஒரு வேத பூர்வமான வழி தான் உள்ளது, முழு வேதத்திலேயே ஒரே ஒரு வசனத்தில் தான் மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்றிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்னர் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட மக்கள் தான் அவர்கள். அப்போஸ்தலர் 19:5-ல் பவுல் அவர்களிடம், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என்றால் அவர்கள் மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று கூறினான், பாருங்கள்-? 42. இப்பொழுது - இப்பொழுது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டால் தான் பரிசுத்தாவியை பெற முடியும் என்று இல்லை, ஏனென்றால் உங்கள் இருதயம் சரியாக இருந்தாலே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறலாம். பாருங்கள்-? ஏனென்றால் அப்போஸ்தலர் 2-ல், ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கு என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்னும் விதியை பேதுரு அளிக்கின்றான். ஆனால், அப்போஸ்தலர் 10:49, தேவன் திரும்பி, புறஜாதியார், ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்பே தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளித்தார். நீங்கள் பாருங்கள்-? ஆகவே, நீங்கள் பாருங்கள், அது உங்கள் இருதயத்தின் நிலையைப் பொறுத்ததாகும். 43, அப்பொழுது பேதுரு. "நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா-?" என்றான். நீங்கள் பாருங்கள்-? ஆகவே, பிறகு, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று அவன் கட்டளை இட்டான். 44. பிறகு, பவுல், அப்போஸ்தலர் 19 கூறுகிறது... பவுல், மேடான தேசங்களின் வழியாய் எபேசுவிற்கு வந்தான். அங்கே சில சீஷர்களைக் கண்டான், அவர்களிடம் ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியை பெற்றீர்களா--?" என்று கேட்டான். 45. அவர்கள் "பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை.” என்றனர் "அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்-?” என்று கேட்டான். அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். "யோவான் கொடுத்த ஞான ஸ்நானம் பெற்றோம்” என்று அவர்கள் கூறினர். 46. அவன், “யோவான் 'தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்பதற்காக மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானம் கொடுத்தான் என்று கூறினான்", அவர்கள் அதைக் கேட்ட போது அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள், பாருங்கள்-? ஆகவே அது... 47, இப்பொழுது, இதன் பேரில்... ஆனால் நீங்கள் 13-வயதில் கிறிஸ்தவ ஞான ஸ்நானம் பெற்று இவ்வளவு காலமாக கிறிஸ்தவ ஜீவியம் செய்ததாக இது கூறுகிறதா அல்லது சில நேரங்களில் பின்மாற்றம் நீங்கள் அடைந்து ... 48. எனக்குத் தெரியாது, அவர்கள் அதை, பின்மாற்றத்தைப் பற்றி, எனக்குத் தெரியாது. அதைக் குறித்து யாராவது என்னிடம் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் பின்மாற்றத்தைக் குறித்து, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் பின்மாற்றம் அடைகிறீர்கள். அதை தவிர்க்க உங்களுக்கு ஒரு வழியும் இல்லை. அது சரி. நீ "பின்மாற்றம்" அடைவாயானால், சபையில் உள்ள மக்களுக்கு, அது ஆனால் தேவனுக்கு முன்பாக அல்ல, பாருங்கள்-? நீ கிறிஸ்துவின் பேரில் பின்மாற்றம் அடைகிறாய், ஆனால் தேவன் பேரில் உன்னால் முடியாது, ஏனென்றால் நீ உண்மையாகவே பாவம் செய்திருந்தால், நீ இழந்து போனவனாய் இருக்கின்றாய். ஆனால் நீ ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறாய், பவுல் ஒவ்வொரு நாளும் சாக வேண்டியதாய் இருந்தது. அது சரியல்லவா-? அவன் ஒவ்வொரு நாளும் செத்து, ஒவ்வொரு நாளும் மனந்திரும்ப வேண்டியதாயிருந்தது. கால முழுவதும் அவன் மனந்திரும்பிக் கொண்டே இருந்தான். பாருங்கள்-? ஆகவே பவுலே அவ்வாறு செய்ய வேண்டியதாய் இருந்ததால், நான் கூட அவ்வாறே செய்தாக வேண்டும். நீயும் கூட, அது சரி. ஆகவே நாம்... 49. ஆனால் இப்பொழுது, நீ மீட்டுக் கொள்ளப்பட்டவன் என்றும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன்னை பாவத்திலிருந்து சுத்திகரித்தது என்றும், நீ ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நீர் உணர்வாயானால், அது (மறுபடியும் ஞானஸ்நானம் பண்ணப்படுவது-தமிழக்கியோன்) தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு செய்யப்பட நீ விரும்பினால், சரி அது நல்லதாயிருக்கும். அதைச் செய்ய நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம். 50, யாரோ ஒருவர் என்னிடம் அங்கே கொடுத்த ஒரு சிறு குறிப்பு இப்பொழுது இங்கே, இருக்கிறது. கேள்வி:9. சுவிசேஷமானது யூதர்களுக்குத் திரும்புகையில் சபை எந்த நிலையில் இருக்கும்-? 51. இப்பொழுது, இதை எழுதிய நபர், லூக்காவைக் குறிப்பிடுகிறார். அவர்-அவர் என்னிடம் கூறினார், நம்முடைய சகோதரன், ''புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் மதில்கள் புறஜாதியாரால் மிதிக்கப்படும்" என்று வேதம் கூறுவதை அவர் குறிப்பிடுகின்றார். அது லுக்கா.21:24. இதைக். கூர்ந்து கவனியுங்கள். இது விளங்கச் செய்யும். அருமையான கேள்வி-! அற்புதமானது. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 52. இப்பொழுது, இதை நாம் கூர்ந்து கவனிப்போமாக. "எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்று." இப்பொழுது, இதைக் குறித்து அநேக குழப்பங்கள் உள்ளன. ஜனங்கள்,. ஆனால் வேதத்தைக் கொண்டு சரித்திரப்பூர்வமாக அதை நீங்கள் அணுகுங்கள். 53. இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரர் எருசலேம் மறுபடியும் சேனைகளால் சூழப்படும் என்று விசுவாசிக்கிறார்கள். நல்லது. இப்பொழுது, அது உண்மையாக இருக்கலாம், ஏனெனில் வேத வசனமானது அநேக அர்த்தங்கள் கலந்து இணைந்ததாய் இருக்கின்றது. 54. வேதாகமம், ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் அநேக அர்த்தங்களை கொண்டு இருக்கிறது என்பதை உங்களில் எத்தனைப் பேர் அறிவீர்கள்-? நிச்சயமாக-! ஆம் ஐயா, அது அதைக் கூறி இந்த காலத்தைத்தான் அது குறித்துக் காட்டி, திரும்பவுமாக மறுபடியும் இங்கே உள்ள ஏதோ ஒன்றைக் குறித்து கூறும். பாருங்கள்-? நான் சீக்கிரமாக சிந்திப்பேனானால் சிலவற்றை நான் குறித்துக் காட்டுவேன். ஓ, ஆம். இங்கே லூக்காவில் ஒன்றுள்ளது., மத்தேயு 2-ல், "என்னுடை... எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன், என்று கூறுகின்றபடி, தீர்க்கதரிசியால் பேசப்பட்டது நிறைவேறும்படியாக, இயேசு எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டார்”, என்று கூறுகின்றது. 55, இப்பொழுது, அந்த தீர்க்கதரிசனம், தீர்ககதரிசியால் குறித்துக்காட்டப்பட்ட அது சரியாக இஸ்ரவேல் (தேவனுடைய குமாரன்) குறித்துக் காண்பிக்கின்றது. அவன் எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டான். ஆதியாகமத்திலும், யாத்திராகமத்திலும் அது சரி. ஆனால் அது- அங்கே குறிப்பிடப்பட்ட அது, மறுபடியும் இங்கே சொல்லப்படுகிறது. அவர் பாரோனிடம் “நீ..." என்றார். “நீ, - நீ," என்றார். அவன், அவருடைய குமாரனுக்கு என்ன செய்தான்., அவர் அந்த ஜீவனை அழிப்பேன். அவன். அவருடைய குமாரனை போகவிடவில்லை, ஆகவே பாரோன்... தேவன், பாரோனின் குமாரனைச் சங்கரித்தார். அல்லது அந்த மரணதூதன் அதைச் செய்தான். ஆகவே அது அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது. 56. ஆகவே, இப்பொழுது, எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருந்ததைக் குறித்து, நிஜமாகவும் சரித்திரப்பூர்வமாகவும், அது கி.பி.96 ஆம் வருடத்தில், தீத்து எருசலேமை முற்றுகை இட்டபோது நிகழ்ந்தது. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால் வித்தியாசத்தைக் காணக்கூடும். கடைசி காலத்தில் எருசலேம் சேனைகளால் சூழப்படும் என்று விசுவாசிக்கிறேன். தீத்து அவர்களை முற்றுகை இட்டபொழுது, அந்த அழிவு நடந்தபொழுது... இங்கே இது அதனுடன் ஒத்து இருக்கின்றது என்று தான் நம்புகிறேன். 57. இப்பொழுது, "அந்த அழிவைக் குறித்து தீர்க்கதரிசி தானியேல் பேசும் போழுது... "அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கையில்" என்று கூறுகிறான். கவனியுங்கள், அவன், "நீங்கள் பாழாக்கும் அருவருப்பை, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது" என்று கூறுகின்றான். பாருங்கள், “அந்த அருவருப்பு" அருவருப்பு என்றால் “அசுத்தம்", "பாழாக்குதலைச் செய்கின்ற", பாழாக்குதல் என்றால் “அப்புறப்படுத்து" "அழித்தல்", "நீங்கள் பாழாக்கும் அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது, "தீத்து எருசலேமை முற்றுகையிட்ட போது வேதபூர்வமாக நிறைவேறினது அதை எடுத்து 58. இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் "கடைசி காலம் எப்பொழுது இருக்கும்-? கிறிஸ்துவின்... வருகைக்கான அடையாளங்கள் என்ன-?" என்று அவர்கள் அவர் இடத்தில் கேட்டனர். தேவாலயத்தைக் குறித்தும், அது எப்படி இருந்தது என்றும், எப்படி மகத்தான கற்களால் அது அலங்கரிக்கப்பட்டதென்றும் அவர்கள் (சீஷர்கள்-தமிழாக்கியோன்) அவரிடத்தில் கூறினர். 59. அவர், “ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டு போகும் வேளை வரும், எல்லாம் இடித்துப் போடப்படும்,” என்று கூறினார். அவர் அவர்களுக்கு அற்புதங்களையும், அடையாளங்களையும் கொடுக்கத் துவங்கினார். அப்பொழுது, இயேசு அவர்களிடையே பேசுகையில், தானியேலுக்கு திரும்புகிறார், ஏனெனில் எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து நிறைவேற வேண்டும். முழு வேத வாக்கியங்களும் எங்கேயும் தவறாததாய் உள்ளது. 60. இயேசு, ""வேத வசனங்கள் தவறாததாயிருக்கின்றன'', ஆமென். அங்கே தான் பரலோகத்திற்குப் போகிறேனா-? நிச்சயமாகத் தான் செல்கிறேன், வேத வசனங்கள் தவறாததாயிருக்கின்றன. அடையாளங்களையும் அற்புதங்களையும் விசுவாசிக் காத உங்களுக்கு, எப்படி நீங்கள் வேத வசனத்திலிருந்து விலகி இருக்க முடியும்-? வேத வசனங்கள் எவ்வாறு தவறாததாய் இருக்கின்றனவோ அவ்வாறே கிறிஸ்துவையும் (மேலே இருக்கின்ற) புறம்பாக்கிட முடியாது, எப்படி மேலே இருக்கிற அவருடைய மகத்தான ஒவ்வொரு அசைவும் கீழே பூமியிலே பிரதி பலிக்கிறதோ அதே போன்று, அது அவ்வாறு இருந்தாக வேண்டும். ஆகவே கிறிஸ்து... உங்கள்... தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமையானது இங்கே பூமியிலுள்ள மாம்சப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய சபையிலிருந்து எடுக்கப் பட்டால், அது கிறிஸ்துவிலிருந்தும் நீக்கப்பட்டது போன்றதாகும். அவர் இன்னுமாய்..., 61. ஆனால், ஓ, அந்த உண்மையான திராட்சைச் செடியைப் பற்றியும் கொடிகளாகிய நம்மைப் பற்றியும் என்ன ஒரு அருமையான காட்சி. பாருங்கள்-? திராட்சைச்செடி எங்கே செல்கிறதோ அங்கே கொடிகளும் செல்லுகின்றன. அது சரியா-? அவருடைய சரீரமானது அசைவுக்குள்ளும் வல்லமைக்குள்ளும் வருவது போன்று அவருடைய மகத்தான சரீரம், ஓ, அவருடைய மகத்தான இரத்தம் வடிகின்ற கரங்கள், விழுகின்ற கண்ணீர், இரத்தம் வடிகின்ற அவருடைய விலாக்கள், அடிக்கப்பட்ட அவருடைய முதுகு, இதைப் போன்று பூமியின் மேலே தேவனுக்கும் (பிதா) பூமியிலுள்ள அழிவுள்ள மானிடர்களுக்கும் நடுவே தொங்கிக் கொண்டு, பரிந்து பேசிக் கொண்டு அவர்களை நேசிக்கின்றாரே அது சபைக்குள் அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு அழகான ஒன்றல்லவா-! 62. "என்னுடைய கரங்களை இவ்வழியாய் அசைப்பேன்” என்று அவர் கூறுகையில், அவருடைய சரீரமானது அசைகின்றது. ''இங்கே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'', அந்த சபை சரியாக நேரே செல்வதை நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால் என் கையினுடைய நிழலானது கையுடனே செல்ல வேண்டும். ஆமென். அது சரியா-? ஆமென். ஓ, என்னே, அதைக் குறித்து நான் நினைக்கையில், அங்கே அவர் இருக்கிறார், அவருடைய சரீரமானது அசைகின்றது, ''நீங்கள் உலகமெங்கும் போய், வல்லமையை பிரஸ்தாபித்துக் காட்டுங்கள்", காரியம் என்ன வென்றால் நம்முடைய வேதகல்வி, போதகங்களை, இன்னும் காரியங்களை செய்வோம் ஆனால் நாம் மோசமாகத் தோல்வியுறுவோம், ஆனால் இப்பொழுது தேவனுடைய கரமானது அசைந்து, அடையாளங்களும் அற்புதங்களும் நம் கண்ணெதிரில் தோன்றிக்கொண்டுள்ளன. ஏன், என்னே-? 63. இயேசு அங்கே பிசாசுகளைத் துரத்தின போது கூறினார்... இப்பொழுது ஒரு கடினமான கேள்வியை விட்டு அகன்று செல்கிறோம். ஆனால் இயேசு பிசாசுகளைத் துரத்தும் போது, "உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்-? நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் எதினால் அவைகளைத் துரத்துகிறார்கள்-? நீங்கள் இதைவிட சிறந்ததை உடையவர்களாய் வைத்திருந்தால், எங்களுக்கு அதை காண்பியுங்கள், என்றார். பாருங்கள்-? ''நான் தேவனுடைய விரலினாலே," ஆமென். தேவனுடைய "விரலை" குறித்து சற்று சிந்தியுங்கள். கிறிஸ்துவிற்கு மேலாக தேவன் இருக்கிறார்; சபைக்கு மேலாக கிறிஸ்து. அங்கே, பிதா, சில-சில காரியங்களைக் கூறுகிறார்; பிறகு தேவன், குமாரன் தம்முடைய கரத்தை அசைக்கின்றார், நிழல் அதைத் தொடர்கிறது-? "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்-?" 64. கவனியுங்கள், நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஓ, பிசாசு உங்கள் மேல் எவ்வளவு பெரிய வியாதியையும் வருத்தத்தையும் கொண்டு வந்தாலும் பரவாயில்லை, அவைகளை அகற்ற அவருடைய விரல் ஒன்றே போதும். ஓ, என்னே-! என்னே-! அவைகளைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரிய, வலுவான தோள்களும் கரங்களும், தசைகளும் கொண்டுள்ளன. ஆனால் அவருடைய விரல் ஒவ்வொரு வியாதியையும் பிசாசுகளையும் வெளியேற்றுகிறது. பிசாசு எவ்வளவு சிறியதான ஒன்று-!. அவர் தம்முடைய விரலைக் கொண்டு அவனைத் துரத்தள்ளி விடுகிறார். "நான் தேவனுடைய விரலினாலே. . ." 65, இப்பொழுது, நான் உங்களுக்கு தேவனுடைய அன்பை நான் காண்பிக்கட்டும். ஆனால் ஒரு ஆடு தொலைந்த போதோ, அவர் தம்முடைய விரலை உபயோகிக்க வில்லை, அதைத் தம்முடைய தோள்களின் மீது கிடத்தினார். அவர் தம்முடைய முழுவதையும், கைகளையும் பிரயோகித்து ஆட்டை தம்முடைய தோளின் மீது வைத்தார். ஒரு மனிதனுடைய தோள்களும், முதுகும் ஒரு மனிதனின் மிகவும் பலங்கொண்டதும், வல்லமை கொண்டதுமான பாகங்களாகும். நீங்கள் அதை அறிவீர்கள். அவர் தம்முடைய கைத்தசைகள், தசைகளினால் அந்த முழு ஆட்டையும் தூக்கி தம் தோளின் மீது வைக்கிறார். ஆகவே அவர் ஒரு சிறிய, பழைய பிசாசை ஓட்ட தம் விரலைக்கொண்டு வருவது போன்று வரவில்லை, ஆனால் இங்கே தம்முடைய எல்லா தசைகளையும், கால் தசைகளையும், கை தசைகளையும் கொண்டு, வனாந்திரத்தில் சென்று, காணாமற்போன அந்த ஆட்டை எடுத்து தம் தோளின் மீது வைத்துக் கொள்கிறார். ஓ, என்னே-! “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்” ஓ, அல்லேலுயா-! என்னே-! 66. சரி, இப்பொழுது பொருளிற்கு வருவோம்: எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது... அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகவும்... வெளியே புறப்படவும்... நாட்டுப் புறங்களிலிருக்கிறவர்கள்... எழுதியிருக்கிறபடி யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிகட்டும் நாட்கள் அவைகளே அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின் மேல் மிகுந்த இடுக்கணும் இந்த இனத்தின் மேல் கோபாக்கினையும் உண்டாகும். பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள் ளும் சிறைபட்டுப் போவார்கள்; 67. கவனியுங்கள். அதைக் குறிப்பாக எடுத்துக்காட்ட இங்கே வேத வாக்கியங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. முதலாவதாக, "பட்டயங்களின் கருக்கினாலே', கடைசியாக வருவது அணுகுண்டு ஆகும். பாருங்கள்-? ஆனால் இது பட்டயக் கருக்கினால் உண்டாகிறது, யூதர்கள் எல்லா நாடுகளுக்கும் சிறையாக்கிக் கொண்டு செல்லப்பட்டனர். அது அவ்விதம் மறுபடியும் இருக்காது, அவர்கள் கடைசி காலத்திற்காக பாலஸ்தீனாவில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். பாருங்கள்-? இது கடந்து போன நாட்களைக் குறிக்கின்றது. அது சரித்திர பூர்வமாக அப்படியே நடந்தேறியது. 68. அவர்கள் எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் நீங்கள் யூதர்களைக் காணலாம். ஓ, ஒவ்வொரு தேசத்திலும், நீங்கள் சீனாவிற்குச் சென்றால் அங்கே யூதர்களைக் காணலாம். நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்றால் அங்கே யூதர்கள் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு சிறு தீவுகளுக்கும் செல்லுங்கள், அங்கே யூதர்களைக் காணலாம். ஒவ்வொரு தேசத்திலும் சிதறடிக்கப்பட்டிருக்கிறீர்கள், அது என்ன-? தேவனுடைய தீர்க்கதரிசனம் ஆகும். தேவன் அதை எத்தனித்தார். சகோதரனே, அந்த யூதர்கள் தான் தூரத்தைக் காட்டும் அடையாளக் கம்பங்கள் ஆவர். நீங்கள் அவர்களைக் காணும் போது. . . 69. அவர்கள் குருடாயிருந்து, கொண்டு செல்லப்பட்டனர் என்று எனக்குத் தெரியும். அவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். நீயும் நானும் காணத்தக்கதாக அவர்கள் தேவனால் குருடாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டனர். அது சரி. ஆனால் தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும் நான் கூறுகிறேன், யூதன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. ஆம் ஐயா, அவர் ஹிட்லரின் இருதயத்தைக் கடினப்படுத்தி ஜெர்மனி தேசத்திலிருந்து அவர்களை விரட்டினார்; முசோலினியின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், ரஷ்யாவை விட்டு அவர்களை விரட்டினார். அவர், அவர்களை வெளியே கொண்டு வர அந்நாட்களில் செய்தது போலவே அவர், அவர்களை எவ்விடத்திலிருந்தும் விரட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வனாந்தரத்தில் சென்று அங்கே கடந்து செல்ல ஆயத்தமாயிருந்த போது, என்ன நிகழ்ந்தது-? தேவன் மகத்தான வாதைகளையும் மற்ற காரியங்களையும் கொண்டு அந்த தேசத்தைச் சந்தித்தார். அவர், எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தல் 11-ல் வருகின்ற 2-ஒலிவ மரங்களாகிய தமது 2-ஊழியக்காரர் வருகையில் அவர், மறுபடியும் அதைச்செய்வார். அவர் அந்த அற்புதங்களையும் அடையாளங்களையும் மறுபடியும் செய்வார். 70. வெளிப்படுத்தல் 11-ல் வரும் அந்த 2-சாட்சிகளைப் பாருங்கள், "என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும் அதிகாரம் கொடுப்பேன், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாட்களிலே வானத்தை அடைப்பார்கள். வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிப்பார்கள்." அவர்கள் கடைசி நாட்களில் வருகின்ற இரண்டு சாட்சிகள் ஆவர். 71. ''அது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு" என்கின்ற நவீன போதகம் எனக்குத் தெரியும். அது தவறு-! அது தவறு-! 72. இங்கே அந்த இரண்டு சாட்சிகள், சரியாக மோசேயும் எலியாவும் திரும்ப வருதல் ஆகும். நீங்கள் கவனியுங்கள், அவர்கள் ஒவ்வொருவரும், மோசே, அவன் மரித்தான், ஆனால் அவன் எங்கு சென்றான்-? அவன் மறுபடியும் எழுந்திருக்க வேண்டும். எலியா மரணத்தைக் காணாமல் மறுரூபமாக்கப்பட்டான். அவன் மரிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மானிடனும் மரிக்க வேண்டும். ஆகவே அவன் மறுபடியும் திரும்ப வர வேண்டும். ஆகவே அவர்கள் தான் அந்த இரண்டு சாட்சிகள் ஆவர். 73. இப்பொழுது கவனியுங்கள்: அவர்கள்... பட்டயக்கருக்கினாலே விழுவார்கள்,... (24-வது வசனம்). புறஜாதிக ளுக்குள்ளும் சிறைப்பட்டு போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும், (ஆமென்-!). எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். 74. நமக்கு சிறிது காலம் மாத்திரமே உள்ளது என்பதை அறியும் போது, அது அதிர்ச்சியூட்டுகின்றதாய் இருக்கிறதல்லவா-? தேவன் அவ்வாறே கூறி உள்ளார்-! நேபுகாத்நேச்சார் ராஜாவோடு புறஜாதியாரின் காலம் துவங்கியது. ஓ, என்ன குறிப்பிடத்தக்க ஒன்று-! இந்தப் பொருளின் மேல் எவ்வளவு நேரமாகிலும் என்னால் செலவழிக்க முடியும், ஆனால் இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன-! ஆனால் கவனியுங்கள், எல்லாரும் தங்கள் கேள்விக்கு பதில் பெற விரும்புகின்றனர். ஆனால் நாம் இதன் மேல் பேசுகையில், நாம் இதைக் குறித்து சிந்திப்போம், சரியாக இப்பொழுது அது நமக்கு மிகவும் தேவையான ஒன்றாய் உள்ளது, 75. கவனியுங்கள்-! தேவன் யூத மக்களை நடத்தினார். அவர்கள் ஒரு தேசமாக இருக்கவில்லை, அவர்கள் ஒரு ஜனங்களாய் இருந்தனர். அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட ஒரு சபையாய் மாத்திரம் இருந்தனர். யூதர்களுக்குள் எப்போதுமே ஒரு ஸ்தாபனம் இருந்ததில்லை, அவர்கள் எப்போதுமே தேவனால் வழி நடத்தப் பட்டனர். 76. ஆகவே அவர்கள் பிறகு அரசியல் ரீதியாகவும், தேச ரீதியாகவும் வர விரும்பிய அவர்களுக்கு - ஒரு ராஜா தேவைப்பட்டது. ஆகவே தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தார். ஆனால் அது கிரியை செய்யவில்லை. தேவன் தான் அவர்களுடைய ராஜா. தேவன் தான் நம்முடைய ராஜா, அது சரி, தேவன் தான் சபையினுடைய ராஜா. 77. இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனிற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் பூமியிலுள்ள நாடுகளைப் போல போலியாக இருக்க விரும்பினர். இன்றைய சபை உலகத்திற்கு அது என்ன ஒரு அருமையான காட்சி. இன்றைக்கு சபை உலகத்தைப் போலியாக்கிக் காண்பிக்க முயன்று, தங்களுடைய வாழ்க்கையின் போக்கிலே அப்படியே அடித்துச் செல்லப் படுகின்றனர். உலகம் ஜீவிக்கிறது போல சபையும் ஜீவிக்கிறது, அப்படியே செய்து கொண்டு, அப்படியே நடந்து கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டு, தான் சபையென்று கூறிக் கொண்டிருக்கிறது. நீ அதைச் செய்யக்கூடாது. இல்லை ஐயா. நீ யார் என்பதை உன் ஜீவியம் நிரூபிக்கிறது. 78. நீ யார்... நான் துவக்கத்தில் கூறினது போன்று. நீ வேறெங்கேயோ என்னவாய் இருக்கிறாயோ அதைத் தான் நீ இங்கே பிரதிபலிக்கிறாய், உன்னுடைய, மேலே எங்கேயோ உள்ள வானத்துக்குரிய சரீரம் (celestial body) எப்படியுள்ளதோ அல்லது பூமிக்குரிய சரீரம் (terrestrial body) எங்கோ எப்படி உள்ளதோ அதைத் தான் இங்கேயும் பிரதிபலிக்கிறாய். ஆவிக்குரிய தேசத்தில் என்னவாய் இருக்கிறாயோ அதே போன்று தான் இங்கேயும் இருக்கிறாய். நீ ஆவிக்குரிய பிரதேசத்தில் கெட்ட சிந்தை உடையவனாய் இருந்தால் இங்கேயும் கெட்ட சிந்தையுடையவனாய் இருக்கிறாய். பகைமை எண்ணம், பொறாமை, சச்சரவு உள்ளம் போன்றவைகளை ஆவிக்குரிய இடத்தில் கொண்டிருப்பாயானால் அது இங்கே திரும்பி பிரதிபலிக்கும். ஆனால் உன்னுடைய முழு உள்ளான காரியங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தமாக்கப் பட்டிருந்தால், அங்கே உனக்காக சுத்தமாக்கப்பட்ட ஒரு சரீரம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அது காண்பிக்கின்றது, அது இங்கே மாம்சத்திலே பிரதிபலிக்கின்றது. இதை நீ காண்கிறாயா-? பாருங்கள், இங்கே இருக்கிறது. ''இந்த பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் நமக்காக ஒன்று ஏற்கெனவே காத்துக் கொண்டு இருக்கின்றது." பாருங்கள்-? 79. இப்பொழுது, இந்தக் காலத்தில் இந்த கடைசி காலத்தில், எப்படி இந்த மாம்சீக ஒப்பனை செய்தல், கிறிஸ்தவ மதத்தை போலியாக்குதல் எல்லாம் கலந்து அப்போது நடந்தது போல ஒரு பெரிய பாபிலோனாகி உள்ளது. அவர்கள் பாபிலோனுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அது சரியா-? "கர்த்தருடைய தூதன் வந்து என் ஜனங்களே, 'பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்-! என்று அழைத்தான். " என்று வேதம் கூறுகின்றது. 80. குழப்பம்-! "நான் ஒரு பாப்டிஸ்ட், நான் ஒரு மெத்தோடிஸ்டு, நான் ஒரு பிரஸ்பிடேரியன்” இது எல்லாம் குழப்பமே. அதில் இரட்சிப்பு என்பதே கிடையாது. 81. இப்பொழுது, பாப்டிஸ்டு மக்கள் இரட்சிப்பைப் பெறவில்லை, மெத்தோடிஸ்ட் மக்கள் இரட்சிப்பைப் பெறவில்லை என்று நான் கூறவில்லை. நான் அதைக் குறித்து பேசவில்லை. நான் சபையைக் குறித்தும் அதினுடைய அரசியல் வல்லமையைக் குறித்தும் நான் பேசுகிறேன். அது அரசியல். அரசியல் பூர்வமாகப் பேசினாலும், ஏனெனில் நீ மெதோடிஸ்டாக அல்லது பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் அல்லது கத்தோலிக்கனாக இருப்பதால் அதனுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. தேவன் அதை அங்கிகரிப்பதில்லை. ஆகவே அது இன்றைக்கு பாபிலோனாக இருக்கிறது, தேவன் தமது சபையை, இருதயத்தில் சுத்தமுள்ளவர்களை, அவைகள் எல்லாவற்றையும் விட்டு வெளியே வர அழைக்கிறார், அதை தம்முடைய சபை ஆக்குகிறார். எவ்வளவு அழகான ஒன்று-! 82. இப்பொழுது கவனியுங்கள், உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் காரியத்தை என்னால் கூற முடியும். ஆனால் அது... கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள். பாபிலோன் எப்படி.,. என்ன நடந்தது. பாபிலோனில், உண்மையாக தொழுது கொண்டவர்கள் மீது நிர்ப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அன்று சிறை பிடிக்கப்பட்டவர்களில், தேவனை உண்மையாக தொழுது கொண்டவர்களாகிய வெகு சிலரான ஷாத்ராக், மேஷாக் ஆபெத்நேகோ, தானியேல், தாங்கள் யார் என்றும், அவர்களுடைய உண்மையான சுவாபம் என்னவென்றும் காண்பிக்க தேவன் அவர்களை அழைத்ததை நினைவில் கொள்ளுங்கள். ஒரு விக்கிரகத்தை வழிபட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அது சரியல்லவா-? விக்கிரக ஆராதனை-! அவர்கள் விக்கிரகத்தை வணங்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர், ஒரு சொரூபத்திற்கு முன்பு தலை வணங்க வேண்டியதாய் இருந்தது. அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். 83. ஓ, தானியேலையும், வெளிப்படுத்தின விசேஷத்தையும் எடுத்து ஒன்றாக இணைத்து வேத வசனத்தின் மூலம் சபையும் வெளியே அழைக்கப்படுவதற்கு முன் அத்தகைய துன்புறுத்தல் அடைவாள் என்பதை காண்பித்தல் எவ்வளவு அழகான காட்சியாக இருக்கிறது. அந்த விதமாகத்தான் புறஜாதி சபையானது உள்ளே கொண்டு வரப்பட்டது. அவ்விதமாகவே புறஜாதி சபையும் வெளியே எடுக்கப்படும். எப்படி வருகின்றாளோ அவள் அவ்விதமாகவே செல்வாள். 84. அவன் எப்படி அந்த சொரூபத்தைக் கண்டான் என்பதைச் கவனியுங்கள். ஆகவே, இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். அந்த சொரூபம்... இப்பொழுது இது சொந்த இடம். கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் ராஜா செய்த சொரூபம், பரிசுத்த மனிதனாகிய தானியேலுடையது என நான் நம்புகிறேன். நீங்கள் கவனிப்பீர்களா னால், நேபுகாத்நேச்சார் அரசன் தானியேலை “பெல்தேஷாத்சார்" (அது அவனுடைய சொரூபமாயிருந்தது) என்று ஏற்கனவே அழைத்திருந்தான். அவன் ஒரு சொரூபத்தை உண்டாக்கினான். இந்த சிங்கக் கெபியில் தானியேலுக்கு பிறகு யாருமே போடப்படவில்லை. அவள் "தானியேலின் தேவனைத் தவிர, வேறே தேவர்களை யாரும் சேவிக்கக் கூடாது” என்றான், ஆகவே இந்த பரிசுத்த மனிதனின் சொரூபமாக அது இருந்திருக்கக் கூடும். அந்த மகத்தான சிலையை, எல்லாரும் வணங்க வேண்டியதாயிருந்தது. 85. ஆனால் சபையாகிய, ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ... தானியேல் தலைவனாய் இருந்தான், கிறிஸ்து சபைக்கு தலைவராய் இருக்கிறது போல, 86. ஆகவே அவர்கள் இந்த சொரூபத்திற்கு வணங்கி, அதை சேவிக்க வேண்டியதாய் இருந்தது. கவனியுங்கள்-! நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த நேரங்களில் தானியேல் அமைதியாயிருந்தான், ஆமென்-! ஓ, இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். தானியேல் அமைதியாயிருந்தான், அவர்களை... அவர்கள் தங்கள் சொந்த தெரிந்தெடுத்தலை செய்ய வேண்டியவர்களாய் இருந்தனர். 87. அந்த நாளில்... புறஜாதிகளின் சமயம் முடிவடையும் நேரத்தில், அங்கே ஒரு சொரூபம் இருக்கும், எல்லாரும் இந்த சொரூபத்தை வணங்கி, அதை தொழுது கொள்ள வேண்டும். அது எவ்வளவு பரிசுத்தமாய் இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சொரூபத்தை தொழுது கொள்ளக் கூடாது (சொரூப -வழிபாடு). 88. இப்பொழுது கவனியுங்கள். ஓ, என்னே-! கடைசி நேரத்தில், தானியேல் மறுபடியும் உள்ளே வருகிறான். எவ்வளவு மகத்துவமானது-! வைப்பாட்டிகளுடனும், மற்றவர்க ளுடனும் அந்த மகத்தான விருந்து நடக்க இருந்த அந்த இரவில் சுவற்றில் ஒரு கையுறுப்பு வந்து "'மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்'' என்று எழுதியது. அது அந்நிய பாஷையில் எழுதப்பட்டு இருந்ததால், யாராலும் அதற்கு வியாக்கியானம் அளிக்க முடியவில்லை. யாருமே அதற்கு அர்த்தம் உரைக்க முடியவில்லை,. 89. அவர்கள் சென்று சிறந்த ஞானிகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் "எங்களுக்குத் தெரியவில்லை'' என்று கூறினர். 90. அவர்கள் சென்று அவர்களுடைய எல்லா குறி சொல்பவர்களையும், ஜோதிடக் காரர்களையும் அழைத்து வந்தனர், அவர்கள், ''எங்களுக்குத் தெரியவில்லை. அதைக் குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இதைப் போன்ற ஒரு பாஷையை, மொழியை நாங்கள் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை '' என்றனர். 91. ஆனால் அங்கே ஒரு மனிதன் இருந்தான்-! தேவன் தம்முடைய மனிதனை வைத்திருந்தார். தானியேல் அங்கே இருந்தான். அவன் - ''நீங்கள் சென்று அவனைக் கொண்டு வாருங்கள், ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் வாசம் செய்கிறது” என்று கூறினான். 92. ஆகவே தானியேல் அங்கே வந்து அந்த சுவற்றில் எழுதப்பட்ட அந்த பாஷையைப் படித்து அதை வியாக்கியானம் செய்கிறான். அவன், அதை வியாக்கியானம் செய்கிறான். அவன்... அதன் வியாக்கியானம் என்ன-? "ஓ, நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக, ஓ ராஜாவே நீர் என்றும் வாழ்க'' என்றல்ல, ஆனால் நேரடியாக முரடான குரலில், அவன் நேரடியாக நிராகரிக்கப்பட்டான் என்னும் விதத்தில், ''நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" என்றான். 93. கவனியுங்கள், அது அதே விதமாகத்தான் இருக்கின்றது. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் எப்படி புறஜாதியாரின் ராஜ்ஜியத்தை உள்ளே கொண்டு வந்ததோ, அதே போன்று இயற்கைக்கு மேம்பட்ட காரியம் இதை புறஜாதியார் இடமிருந்து வெளியே எடுக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் ராஜ்ஜியம் ஆரம்பித்து, இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் அது வெளியே செல்கிறது. எருசலேமின் மதில்கள் மேல் அவர்கள்... அது... ''புறஜாதியாரின் காலம் நிறைவாகும் வரை புறஜாதியார் அதை கொண்டிருப்பார்கள்". பிறகு தேவன் யூதர்களிடம் திரும்புகிறார். ஆமென்-! ஓ என்னே-! 94. ஓ, நண்பர்களே, இதன் மேல் இன்னுமாய் சென்று கொண்டிருக்க நான் விரும்புகிறேன். நீங்களும் தானே-? நாம் இந்த பொருளின் மேல் சுமார் ஒரு வாரம் நீடித்திருக்கலாம், பாருங்கள், வேத வசனங்களை நாம் முழுவதுமாக ஆராய நமக்கு ஏதுவாயிருக்கும். 95. அதை, கவனியுங்கள், இப்பொழுது அவர் என்ன கூறினார் என்று கூர்ந்து கவனியுங்கள், அவர் என்ன கூறினார், "புறஜாதிகளின் காலம் நிறைவேறும் வரை எருசலேம் புறஜாதிகளால் மிதிக்கப்படும்,'' தீத்து எருசலேமை முற்றுகையிட்ட பின்னர் அதைப் பிடித்தான். அவர், “பாழாக்கும் அருவருப்பை நீங்கள் காணும்போது-?" என்றார். "ஆம்" "நல்லது, புறஜாதிகள் உள்ளே வந்த பிறகு தான்" “ஆம், எங்களுக்கு புரிகின்றது" என்று சீஷர்கள் கூறினார்கள். ''இப்பொழுது, புறஜாதியார் இப்பொழுது தங்கள் அரசாங்கத்தை கொண்டு இருக்கின்றனர்'' ''நிச்சயமாக'' 96. "எருசலேம் அப்பொழுது புறஜாதியாரின் அரசாங்கத்தின் கீழ் இருந்ததா-?" ஆம், ஐயா-! ரோமர்கள். அவர்கள் இன்னும் எருசலேமில் அரசாங்கத்தைக் கொண்டு இருந்தனர். தானியேல் பேசின அந்த பாழாக்கும் அருவருப்பு அப்போதே ஆரம்பித்து விட்டது. 97. இப்பொழுது அவர், "காலமானது சமீபமாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் முகமதியர், புறஜாதியர், இந்த ஆலயத்தை அழித்துப்போட்டு, ஒமர் மசூதியை இந்த இடத்தில் கட்டுவார்கள், இதே இடத்தில் அது நிற்கப் போகிறது, அது இங்கே நிற்கப் போகிறது." என்றார். 98. புறஜாதி என்றால் "அவிசுவாசி” என்று பொருளாகும். அது சபை அல்ல, இப்பொழுது, அது புறஜாதி, பாருங்கள், அவிசுவாசி. இப்பொழுது புறஜாதியார் காலம் நிறைவேறும் வரை அது அங்கே நிற்கும். புறஜாதிகளின் யுகம் முடிவடையும் போது அந்த மகத்தான பிரபு கடைசிக் காலத்தில் மக்களுக்காக நிற்பார் (அவர் கிறிஸ்து). 99. தானியேலில், "அவனிடத்தில் அவர் வந்தார்'', ''அவருடைய சிரசின் மயிர் வெண்மையாய் இருந்தது, ” வெளிப்படுத்தின விசேஷம் 1-ஆம் அதிகாரத்தில் நீங்கள் காண்பது போன்று. நியாயசங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. எழுதப் பட்டவைகளின்படியே ஒவ்வொருவரும் நியாயத் தீர்ப்படைந்தனர். கவனியுங்கள், புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ''அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்" அவருடன் பரிசுத்தவான்கள் வந்தனர். அது சரியா, அது தானியேலில் உள்ளது. 'புஸ்தகங்கள் திறக்கப்பட்டன', அதுதான் தானியேலில் உள்ளது. "புஸ்தகங்கள் திறக்கப்பட்டன', அது தான் உன் ஜீவியத்தின் புஸ்தகமாகும். "ஒவ்வொரு மனிதனும்- இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். "வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது'', அது தான் ஜீவ புஸ்தமாகும். "ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்பட்டான்", 100. இப்பொழுது கவனியுங்கள், அது மூன்றாக இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போதும் நினைவுகொள்ளுங்கள். நீங்கள் இதை நினைவு கொள்ளவில்லை எனில் நிச்சயமாக நீங்கள் குழம்பிப் போவீர்கள். பூமியின் மேல் பிறந்த மக்களில் 3-வகையைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; ஆதியில் 3-வகையினர் இருந்தனர்; கடைசியிலும் 3- வகையினர் இருப்பர். என்ன... 101. அவரைத் தொழுது கொண்டிருக்கிற ஆயிரமாயிரம் பேர்களோடும் இயேசு திரும்பி வந்தார். அவர் கூறினதை நினைவில் வைத்திருக்கிறீர்களா, "உங்களில் ஒருவனுக்கு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன்... அந்தக்காரரிடத்தில் போகத்துணிகிறதென்ன-? பரிசுத்தவான்கள் உலகத்தை நீயாயந்தீர்ப்பார்கள் என்பதை அறியீர்களா-?" பரிசுத்தவான்கள் பூமியை நியாயத்தீர்ப்பார்கள்-! அல்லேலூயா-! தான் அதை நினைக்கையில், என்னே-! அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் அவர் வருவதையும், ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு, மீட்பையும், காலங்கள் தோறும் மீட்கப்பட்ட யாவரும் அவருடைய பிரசன்னத்தில் நிற்பதையும் காண்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னே-! இரத்தத்தால் கழுவப்பட்ட மணவாட்டி-! 102. நன்மக்களாய் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் நிச்சயமாக முதலாம் உயிர்த் தெழுதலில் இருக்க மாட்டார்கள், வேதம், "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை," என்று கூறுகிறது. அது சரியல்லவா-? அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள், ஆனால் பரிசுத்த ஆவியை பெற மறுத்தவர்கள்... 103. அந்நேரத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரமே உள்ளே செல்வர். ஆயிர வருட அரசாட்சியில் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரமே செல்வர். ஓ, அப்படி ஆனால், சகோதரனே, என்ன விதமான மக்களாய் நாம் இருத்தல் வேண்டும்-? நான் ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக இருக்க விரும்புகிறேன்-! நாம் நம்முடைய பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் புறம்பே தள்ளுவோமாக. ஒரு சகோதரன் ஏதோ ஒன்றைக் தவறாக கூறி, அல்லது இந்த விதமாக தவறாகச் செய்தால், நாம் அவருக்காக ஜெபித்து, தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம். உன்னுடைய ஒரே நோக்கமானது தேவனை நோக்கியவாறே இருக்கட்டும். வேறுயாரும் சென்றுடையவில்லை ஆனாலும், நீ சென்றடை.. ஏனென்றால் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரம் கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் ஜீவிக்க உள்ளே சென்று, ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக ஜீவித்து, மகிமையில் அவருடன் சென்று, திரும்பவும் வருவார்கள், பொல்லாங்கரின் உயிர்த்தெழுதல் நடைபெற்றவுடன், ஆயிர வருட அரசாட்சி... ஆயிர வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர்,... அப்பொழுது கிறிஸ்து சபையுடன் மேலே செல்வார், ஆயிர வருட கடைசியில் அவர் சபையுடன் திரும்ப வருவார். 104. கிறிஸ்து மூன்று முறை வருகின்றார். முதலாவதாக, தமது சபையை மீட்க வந்தார். அது சரி தானே-? இரண்டாவது முறையாக, தமது சபையை பெற்றுக் கொள்ள வருகிறார். மூன்றாவது முறையாக அவர் சபையுடன் வருகிறார். பாருங்கள்-? அவளை மீட்க வருகிறார்; அவளை எடுத்துக் கொள்ள வருகிறார், வாதைகள் இன்னும் மற்ற காரியங்களின் நேரத்தில் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ள வருகிறார்; ஆயிர வருட அரசாட்சிக்காக திரும்பவும் வருகிறார், ஆயிரம் வருடங்கள் முழுவதும் இருக்கின்றார், 105. அதன் பின் அந்த மகத்தான ராஜாவும் ராணியும் நியாயத் தீர்க்க கீழே வருகின்றனர். வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டு புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அதோ அங்கே மீட்கப்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டு இருக்கின்றனர். பரிசுத்தாவியினாலே பிறந்து ஜீவிக்கிற தேவனுடைய சபை அங்கே அந்த அழகுடன் நியாயத்தீர்க்க நின்று கொண்டிருக்கிறது, "புஸ்தகங்கள் திறக்கப் பட்டன, நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயத் தீர்ப்படைந்தான்'' அது தான் பாவிகள். ''வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது”. பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டுள்ள மணவாட்டிக்கு அல்ல, அவள் எடுக்கப்படுதலில் இருப்பதினால் அவள் அதில் இல்லை. 106. இந்த காலையில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தால், தேவனுடைய வல்லமை உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு தசையிலும் அசைந்து கொண்டிருக்கும் ஆனால், நியாயத்தீர்ப்பின் நாளிலே எப்படிப்பட்ட நன்மையை அது உங்களுக்கு அளிக்கும்-? நீங்கள் ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, நிறைக்கப்பட்டு, ஏற்கெனவே கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களுக்குள் அமர மாற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் இப்பொழுதே மாற்றப்பட்டு இருக்கிறீர்கள், சரியாக இப்பொழுதே மாற்றப்பட்டு இருக்கிறீர்கள்-! 107. "அவர் எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இருந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட, இவ்வுலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மீட்கப்பட்ட நபருக்கும் நித்திய ஜீவன் இருக்கின்றது. அவன் அழிந்து போக முடியாது, அவன் ஏற்கனவே கிறிஸ்து இயேசுவிற்குள் உன்னதங்களில் அமர்ந்து இருக்கிறான், அவன் ஆக்கினைக்குள்ளாக வர முடியாது. அவன் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளான். அது அற்புதமானதல்லவா-? பாருங்கள்-? ஏற்கெனவே மீட்கப்பட்டு, கிறிஸ்துவுடனே உன்னதங்களில் அவர்கள் அமர்ந்து இருக்கின்றனர். ஏற்கெனவே மகிமைப்படுத்தி விட்டார், ஏற்கெனவே மகிமைப்படுத்தி விட்டார். 108. ''சகோ, பில், வேத வாக்கியம் அப்படி கூறுகின்றதா-?" என்று நீங்கள் கேட்கலாம். 109. இயேசு அதைக் கூறினார், அல்லது வேதவாக்கியம் அதைக் கூறுகிறது. அல்லது இதை எழுதின பவுல், எவர்களை நீதிமான்களாக்கினாரே, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அது என்ன-? ஓ, என்னே-! (என்னை மன்னியுங்கள்) ஏற்கெனவே மகிமைப்படுத்திவிட்டார்-! அப்படியானால் நாம் பரிசுத்தாவியினால் நிறைந்து, தம்முடைய தசைகளும், அவையவங்களும் தேவனுக்குள் காக்கப்பட்டு இருக்குமானால், இது நமக்கு முடிந்து போய், நீ செல்லத்தக்கதாக ஒரு மகிமையின் சரீரம் ஏற்கனவே உனக்கு காத்துக் கொண்டிருக்கிறது. எவர்களை நீதிமான்கள் ஆக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். 110. நான் சிறிது நேரத்திற்கு முன் கூறினது போன்று, அதை உங்களுக்குத் தெளிவாகப் புரியும்படி செய்ய எனக்கு போதுமான கல்வியறிவு இருந்தால் நலமாய் இருக்கும், போதுமான வகையில் கூற என்னால் முடியவில்லை. நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன், ஆனால் நான் கூற நினைக்கும் விதத்தில் அதைக் கூறிட என்னால் முடியவில்லை. 111. (ஒலிநாடாவில் காலி இடம்- ஆசி). சிவந்த சமுத்திரம்... யூதர்கள், செல்வம் மிகுந்தவர்கள் மற்றும் எல்லாக் காரியங்களையும் அங்கே வயல்களில் வெளியே போடுகின்றனர். ஆனால் அதே காரியம் அவர்கள் உடைய கூடாரத்தை மறுபடியும் மாசுபடுத்தும். ஆம்-! உலகத்தின் பட்டணங்களினின்று அவர்கள் சரியாக வருவார்கள். ரஷ்யாவும் வந்து, "அந்த காரியத்தை நாம் பெற்றாக வேண்டும். அங்கே யுரேனியம், மற்ற காரியங்களும் இருக்கின்றன. நாம் அதைப் பெற்றாக வேண்டும்'' என்று கூறுகிறது. அவர்கள் செல்கையில், அர்மெகேதோன் யுத்தம் நிகழும். அப்பொழுது தேவன் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலுக்காக நின்று யுத்தம் செய்தாரே அதைப் போன்றே செய்வார். ஆனால் அது புறஜாதியாரின் காலம் முடிந்தவுடன் நிகழும், காலமானது முடிவுற்ற.... கேள்விகளும் பதில்களும்..... 112. (ஒலிநாடாவில் காவி இடம்) இப்பொழுது இந்த கேள்வியைக் கேட்ட அருமையான நபருக்கு, இது தான் என்னுடைய தாழ்மையான கருத்து. 113. கேள்வி:10. அந்த நாட்களில் இருந்த அந்த இராட்சதர்கள் யார்-? 197. இப்பொழுது ஜோசபஸ் அங்கே... எனக்குத் தெரியும், நமது சபை, நீங்கள் என்னை போன்று தான் இருக்கிறீர்கள். நான்- நான் ஒரு ஏழாவது வகுப்பு வரை படித்த ஒரு பேதை, நான் - நான் கல்வியறிவைக் குறித்தோ மற்றவைகளைக் குறித்தோ கவலைப்படுவதில்லை, சுவிசேஷத்திற்கு இருக்கின்ற தடைகளிலே அது தான் மிகப் பெரிய தடை என்று நான் கருதுகிறேன். ஆனால் இன்னுமாய், சில சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தை நான் எடுக்கிறேன். இப்பொழுது என்னைப் போன்ற மக்களிடையே நான் கொண்டிருக்கின்ற தொடர்பு என்னவெனில் நாம் எல்லாரும் ஒரே கோட்டில் உள்ளோம், நாம் சாதாரண மக்களாயிருக்கிறோம். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வேதம் "சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்" என்று கூறுகின்றது. அங்கே வேறொரு பிரிவினராகிய செல்வந்தர் இருந்தனர். ஆனால் சாதாரண மக்களோ... நம்மைப் போல மிகவும் சாதாரண மக்கள், தேவனை நேசித்து இந்த உலகத்தைக் குறித்து அவ்வளவு அக்கறைக் கொள்ளாமல், தங்கள் குடும்பத்துடனும் பிள்ளைகளுடனும், இருக்கும் மக்கள், நாம் தேவனை நேசித்து சபைக்கு செல்ல விரும்பும் மக்கள் ஆவோம். அவருடைய ராஜ்ஜியத்திற்காக நமது துணிகளையும், எதையாகிலும் கொடுப்போம். நாம் அவரை நேசிக்கின்றோம், நாம் எதையும் செய்வோம், சாதாரண மக்கள் தான் அவருக்குச் செவி கொடுத்தனர். இன்றைக்கும் அதே போன்று தான், சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்கின்றனர். 114. இப்பொழுது ஐசுவரியவானுக்கு உலகத்தைக் குறித்து சிந்திக்க நிறைய காரியங்கள் உண்டு, பாருங்கள். அங்கே இருக்கும் அவனிடம் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவன் இதற்கு கவனமே செலுத்த மாட்டான். ஆனால் சாதாரண மக்கள் அவருக்கு மகிழ்ச்சியாய் செவி கொடுத்தனர். 115. இப்பொழுது ஜோசபஸ் என்பவர் எழுதியிருக்கிறார்... இப்பொழுது ''தேவ குமாரர்கள்” மனுஷக்குமாரத்திகளை பெண் கொண்டதைக் குறித்து அவருடைய வியாக்கியானம் இதோ இருக்கிறது. அவர் கூறினார். "பூமியின் மேல் இருந்த விழுந்து போன ஆவிகள்...'' 116. இப்பொழுது உங்களுக்குத் தெரியும்.., வெளிப்படுத்தின விசேஷம் 11-ஆம் அதிகாரம்... அல்லது 7-வது என்னை மன்னி... வெளிப்படுத்தல் 12-வது அதிகாரம் சூரியனில் நின்று கொண்டிருந்த ஸ்திரி. ''சிவப்பான பெரிய வலுசர்ப்பம், தன் வாலைக் கொண்டு நட்சத்திரங்களில் மூன்றில் இரண்டு பங்கை இழுத்து பூமியில் விழுத்தள்ளிற்று" அது சாத்தான் என்று நாம் அறிந்து கொள்கிறோம், ஆதியிலே அவன் வடதிசைகளில் தன் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான். மிகாவேலினுடையதை விட அது அழகாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். ஒரு நாள் அவன் பரலோகத்தில் யுத்தத்தை அறிவித்தான். மூன்றில் இரண்டு பங்கு தேவ தூதர்களை தன்னுடன் இழுத்துக் கொண்டான். அது சரியா-? 117. அந்த காரணத்தால்தான் நாம் சிறுபான்மை மக்களாக இருக் கின்றோம். நான் கருதுவது அந்த அந்த பக்கம், இன்று காலையில் சிறுபான்மையாயுள்ள நாம்-பரிசுத்த ஆவியால் பிறந்து கிறிஸ்துவ பரிமாணத்தில் உள்ள நாம், “அந்த - அந்த சிறுபான்மையாய் இருக்கின்றோம். அது சரி. 118. ஆதியாகமத்தில் எழும்பி வருகின்ற அந்த ஆவிகளை நீங்கள் கவனிப்பீர்களானால், அது எழும்ப ஆரம்பிக்கின்றது. அந்த அழகான, மிகவும் நேர்த்தியான, உயர்தர சபை வழிபாட்டைக் கவனியுங்கள். அது காயீனிடம் இருந்ததைக் கவனியுங்கள். இன்றைக்கும் அதைக் கவனியுங்கள். அது சரியாக வந்து அந்த பரிசேயர்களுக்குள் புகுந்தது. அங்கே இரண்டு வகையினர் இருந்தனர். பரிசேயர், சதுசேயர். பாருங்கள். இப்பொழுது அது சரியாகச் சென்று கொண்டு இருக்கின்றது. கத்தோலிக்கத்தில் மகத்தான அசைவுகளில், அழகான ஸ்தலங்களில் அது உள்ளதைப் பாருங்கள், 119. நல்லது, ஒரு சிறிய ஆட்டுக்குட்டியுடன் இருந்த ஆபேலை கவனியுங்கள். பாருங்கள். ஒரு சாதாரண காரியம். இயேசுவின் நாட்களில் அது இருந்ததைக் கவனியுங்கள். வேத வாக்கியங்கள் முழுவதிலும் அது செய்கிறதைக் கவனியுங்கள், அது எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். தேவன் காலங்கள் தோறும் தம் சபையை அழைத்தபோது, நாம் அந்த நாளில் நாம் சரியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த சிறிய கோடு வேதம் முழுவதும், முழு வழியிலும் அந்த சிறிய சிவப்புக் கோடு ஓடுகின்றது, வேதம் முழுவதிலும் அது ஓடுகின்றது. அது இரத்தத்தால் கழுவப்பட்ட மக்கள் உடையது. கவனியுங்கள்.-! 120. இப்பொழுது எனது கருத்தின்படி இந்த "தேவ குமாரர்”, நீங்கள் நிச்சயமாக... ஜோசபஸ் என்ன கூறினார் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறுவதன் மூலம் நான் அவருடன் ஒத்துக் கொள்ளாமல் இருக்கவோ அல்லது அவரை விட அறிவாளியாகவோ நான் இருக்க விழையவில்லை, ஆனால் நான் எப்படி மனிதனாயிருக்கிறேனோ அவ்வாறே அவரும் மனிதன் தான். அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்தாலும் சரி, அவர் ஒரு மனிதன் தான். அவர் செய்த ஒரே காரியம் அவர் பழைய வேத வசனங்கள், பழைய புனித சின்னங்கள் மற்றும் மேலும் சிலவற்றை ஆராய்ந்து பார்த்தாகும். ஆனால் நம்மிடையே உள்ள பரிசுத்த ஆவியைப் போன்ற மேலானது எதுவும் அவரிடம் இல்லை, இப்பொழுது, அவர் தன் இயல்பான மனம் எப்படி செல்கின்றதோ அப்படி... 121. ஆனால் ஆவிக்குரிய மனதில் நாம் எடுத்துக் கொள்கிறோம். அந்த ''தேவகுமாரர்" தூதர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். அப்படித் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் நம்புகிறேன்... 122. இப்பொழுது, ஜோசபஸ் அதே காரியத்தைத்தான் கூறினார், ஆனால் அவர் ''அவர்கள் மனித மாம்சத்தில் பலவந்தமாகப் புகுந்து கொண்டு... மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்” என்று கூறினார். இப்பொழுது நாம் எல்லாரும் கலப்பு சபையாய் கூடியிருக்கிறோம். நாம் இந்த காலை எல்லாரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்களாக, கலந்துள்ள வித்தயாச மானவர்களாக இங்கள்ளோம். இங்குள்ள வயது வந்தோர் புரிந்து கொள்ள இதை நான் பேசுகிறேன். அவர் "இந்த தூதர்கள், பெண்களைப் பார்த்து, மனிதன் ஸ்திரியோடு வாழ்வதைப் பார்த்த போது இச்சைக் கொண்டு, மனித சரீரத்தில் பலவந்தமாகப் பிரவேசித்தார்கள். ஆகையால்... அவர்கள் மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்" என்று கூறுகிறார். 123. நல்லது, நான் - நான் அதை நம்புவது கிடையாது. அவர்கள் அங்கே கானானில் பிறந்தவர்கள் என்னும் இக்காரியத்தை நான் நம்புகிறேன். அவர்கள் நோத் தேசத்திற்கு அனுப்பப்பட்ட காயீன் கூட்டத்திலிருந்து பிறந்தவர்கள் ஆவர். அவனை யாரும் கொல்லக் கூடாதபடிக்கு அவன் மேல் ஒரு அடையாளம் இருந்தது. ஏனென்றால் அவன் கொலை..... அவன் தன் சகோதரனைக் கொலை செய்தான், ஆனால் கவனியுங்கள், இஸ்ரவேலர் அங்கே சென்ற போது அம்மக்கள் சிலரைக் கண்டனர். அவர்கள் மிகப் பெரியவர்களாய் இருந்தனர். ஆகவே அவர்கள் பக்கத்தில் நின்றால் தாங்கள் வெட்டுக் கிளிகளைப் போலக் காணப்படுவோம் என்றனர். அது சரி தானே-? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர், மகத்தான, பெரிய முரட்டு மனிதர்கள் இருந்தனர். சில சமயங்களில் குழிகளைத் தோண்டுகையில், இம் மகத்தான மனிதர்களின் பிணங்களைக் கண்டெடுத்துள்ளனர். 124. இப்பொழுது அது எங்கிருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, என்னுடைய போதகத்தில் சிறிதானதை கூறுகிறேன். சபை மக்களே, பாருங்கள். காயீன் சாத்தானுடைய குமாரன் என்று தான் நினைக்கிறேன். இதனுடன் நீங்கள் உடன்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த சபை செய்கின்றது. ஆனால் அது இன்னுமாய் தேவன் வித்தியாசமானதை என்னிடம் காண்பிக்கும் வரை, அவன் சாத்தானுடைய குமாரன் தான் என்ற காரியத்தை நான் - நான் அதே காரியத்தைத் தான் விசுவாசிப்பேன். ஏனென்றால் அந்த தேவனற்ற, கொலை பாதகமான ஆவி தேவனிடத்தில் இருந்து வருகின்றது என்று என்னால் பொருத்திக் கூற முடியவில்லை. இல்லை ஐயா. அவனுடைய தந்தை... இங்கே, சர்ப்பத்தின் மேலே சாத்தான் ஏறின போது, அவன் தன் தந்தையைப் போலவே இருந்தாக வேண்டும். 125. சர்ப்பம் ஒரு ஊரும் பிராணி அல்ல, சாபம் அதை ஊரும் பிராணி ஆக்கிற்று. அது ஒரு மனிதனைப் போலவே நிமிர்ந்து நடந்தது. அது அங்கே இருந்த ஸ்திரீயினிடம் சென்றது. அவள் விபச்சாரம் செய்து தன் முதல் குமாரனான காயீனைப் பெற்று எடுத்தாள், தன் தந்தையின் சுபாவம். அந்த பெரிய மிருகம் ஒரு மனிதனைப் போலவே நிமிர்ந்து நடந்தது. இதிலிருந்து தான் இந்த இராட்சதர்கள் வந்தனர் என்று நான் நம்புகிறேன். ஆம், அது முற்றிலும் சரி, இப்பொழுது, அது என்னுடைய சொந்த எண்ணம், அது ஒரு வேளை நான்- நான் தவறாய் இருக்கலாம். இது என்னுடைய கருத்து, பாருங்கள். ஆனால் அவர்கள் பெரிய மனிதர்களாயிருந்தனர். 126. நீங்கள் கவனித்திருப்பீர்களானால், தேவன் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் முன்பாக நின்று கொண்டு ''நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ மண்ணுக்குத் திரும்புவாய். நான்..." என்று கூறுகிறார். 127. "ஏனெனில் நீ... செவி கொடுத்ததனால்... உன் புருஷனுக்கு பதிலாக மிருகத்திற்கு செவி கொடுத்ததால் நீ உலகத்திலிருந்து ஜீவனை எடுத்து விட்டாய், ஆகையால் நீ அதை உலகத்திற்கு மறுபடியும் கொண்டு வருவாய்." 128. ஆகவே, அவர், "சர்ப்பமே, உன் கால்கள் உன்னை விட்டு அகலுவதாக. பாருங்கள், நீ இனி நடக்கப் போவதில்லை. நீ மிருகமாய் இருக்கப் போவதில்லை, நீ இப்பொழுது ஊரும் பிராணியாய் ஆகப் போகிறாய். நீ உன் வயிற்றினால் நகர்வாய், மண் தான் உன்னுடைய ஆகாரமாக இருக்கும்,” என்றார். 129. அங்கே தான் நான் நினைக்கிறேன்... அந்த முரட்டு சுபாவமுடைய அந்த மிருகம் இந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, இந்த பிள்ளையைப் பெற்றாள். பெரிய, உயரமான, வயது கொண்ட மனிதன். அது பாதி மனிதத் தன்மையும், பாதி மிருகத் தன்மையையும் கொண்டிருந்தது. காயீன் அந்த சுபாவத்தைக் கொண்டிருந்தான். ஆகவே பிறகு அவன் வெளியிற் சென்றான். அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் ஆதியிலே இருந்த தன் தகப்பனைப் போன்று மிருகத்தனமாகவும், மாம்சீக இச்சை உடையவர்களாயும் இருந்தனர். அந்த பழைய இச்சையுடைய மிருகம் இந்த குமாரத்திகளையும் மற்றவைகளையும் கண்டு, மனுஷக் குமாரத்திகளையும் கொண்டனர். அது சரி. 130. இந்த மனிதர்களைக் கொண்டு வந்த அதே விழுந்து போன ஆவிகள், அவை சந்ததி சந்ததியாக மக்கள் மேல் இறங்கின, நினைவில் கொள்ளுங்கள், அப்பொழுது வாழ்ந்த அதே ஆவிகள், இன்றைக்கும் வாழ்கின்றன... 131. இன்றைக்கு அதைக் கவனியுங்கள்-! நல்லது, நம் நாட்டில் மக்கள் உள்ளனர். இப்பொழுது, நான். இந்த, நான் ஒரு அமெரிக்கன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை நான் உங்களுக்குக் கூறட்டும், நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும், உலகத்திலுள்ள நாடுகளில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸைக்காட்டிலும், எனக்குத் தெரிந்த வரை இந்த நாடே மிகக் கீழ்த்தரமான நாடாய் இருக்கின்றது. இது மிகவுமாய் இழிந்த நிலையில் உள்ளது-! 132. ஏன், ஆப்பிரிக்கா, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த அயல் நாட்டு மக்கள்... அங்கே அவர்கள் "அமெரிக்க மக்களாகிய உங்களுக்கு என்ன ஆயிற்று, உங்கள் ஸ்திரீகளுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதே இல்லையே-? வானொலிப் பெட்டியில் ஒலிபரப்பப்படும் பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்து மிகவும் கேவலமாக, இழிவாக உள்ளதே, உங்கள் ஸ்திரீகளுக்கு அங்கு மரியாதை என்பதே கிடையாதா-?" என்று கூறுகின்றனர். 133. நம்முடைய பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்த, பாலுணர்வைக் கொண்டதும், இச்சையுடையதும், மற்றக் காரியங்களை உடையதுமாய் உள்ளது. ஏனென்றால் பிசாசு அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றான். அது முற்றிலும் சரி. பழைய ஹாலிவுட், தொலைகாட்சி, மற்ற எல்லாமும் அந்த கேவலமான, இழிவான, தேவனற்ற காரியங்களை வெளியே அனுப்புகின்றன, அது செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள், விற்கும் இடங்களிலும், மற்ற இடங்களிலும் செல்கின்றன. எல்லாவற்றிலும் ஸ்திரீகள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு இருப்பதும், மற்றவைகளும் இடம் பெறுகின்றன. அது சரியாக ஆதியில் என்னவாய் ஆரம்பித்ததோ அதைப் போலவே முடிவும் பெறுகிறது. அது ஒரு அவமானமாகும்-! 134. ஒழுக்கம் என்கிற காரியத்திற்கு வருவோமானால், ஸ்திரீயின் ஸ்தானம் தான் எந்த ஒரு தேசத்திற்கும் முதுகெலும்பாய் இருக்கின்றது. நீ தாய்மையை உடைப்பாய் ஆனால், நீ உன்னுடைய தேசத்தை உடைத்து விட்டாய். நாம் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நமது ஸ்திரீகள்... புகை பிடித்துக் கொண்டும், விஸ்கி குடித்துக் கொண்டும்... மற்றவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள், அது வெட்கக்கேடு, அவக்கேடு ஆகும். 135. ஒரு வாலிபன் ஒழுக்கம் நிறைந்த, கன்னிகையை தன் மனைவியாக அடையத் தேடுவானானால், அத்தன்மை கொண்ட ஒரே ஒரு ஸ்திரீயை அடைய அவன் சில நல்ல பழைமையான, பரிசுத்தாவி சபைக்குத் தான் செல்ல வேண்டும். அது முற்றிலும் சரி. 136. அது முட்டாள்தனமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சகோதரனே அது உண்மையா இல்லையாவென்று நீங்கள் ஆராய்ந்து அறியுங்கள், கண்டு கொள்ளுங்கள். அது வெட்கக்கேடு-! அது சரி. அவர்கள் தேவ குமாரர்கள் அங்கே... இப்பொழுது, அதை நான் விளக்கி விட்டேன்.. பாருங்கள், அது... 137. "ஏன், சகோதரன் பில், கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன் என்று ஏவாள் கூறினதாக வேதம் உரைக்கிறதே” என்ற வேறொரு கேள்வி இன்றைக்கு என்னிடத்தில் உள்ளது. அது முற்றிலும் சரி. அது கர்த்தர் இடத்திலிருந்து தான் வர வேண்டியதாயிருந்தது. தேவன் தான் ஒரே சிருஷ்டிகர். அவர், பிசாசை தேவன் சிருஷ்டித்தார். அது எப்படி-? தேவன் பிசாசை சிருஷ்டித்தார். ஒவ்வொரு விழுந்து போன தூதனையும் தேவன் தான் சிருஷ்டித்தார். அது சரி தானே-? ஏன், நிச்சயமாக. அது அவர்களுடைய தெரிந்து கொள்ளுதலாயிருந்தது, அவருடையது அல்ல. அவர் உன்னை உண்டாக்கினார், அதைக் குறித்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்-? அவர்களைப் போலவே நீயும் நியாயந்தீர்க்கப்படுவாய். அது அவ்விதமே, நிச்சயமாக-! 138. இவர்கள் தேவனுடைய குமாரர்கள், ஆனால் அவர்கள் கிருபையிலிருந்து விழுந்து, இந்த மிருகத்தனம் வாய்ந்த மனிதனிற்குள் வந்தனர். அவர்கள் வெளியில் சென்று இச்சித்தனர். அவர்கள் ஸ்திரீகளைப் பார்த்த போது, அப்படியே எடுத்துக் கொண்டனர். ஏன், அவர்கள் இன்னும் இங்கே இருக்கின்றனர். அமெரிக்காவின் ஒழுக்கக் கேடானது தேவனுடைய ஆவி இல்லாத மனிதர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் ஒரு குழந்தையை அதன் தாயின் கரங்களிலிருந்து பிடுங்கி வீசியெறிந்து, அவளை மானபங்கப்படுத்துகின்றனர். தேவனில்லை என்றால் அவன் - அவன் மிருகத்தைவிடக் கேவலமானவனாய் இருக்கிறான். அவன் இன்னுமாய் மிருகத்தனத்தை, தேவன் அற்ற சுபாவத்தை கொண்டிருக்கிறான். மனிதன்.. அவர்கள் ''மதம் ருசியாக உள்ளது, எனவே மனிதன் மதத்தின் பேரில் பைத்தியம் கொண்டான்” என்கின்றனர். மதம் தான் ஒரு மனிதனுக்கு சரியான மனநிலைமையை அளிக்கும், அது இயேசு கிறிஸ்துவின் மதம் ஆகும். 139. கிறிஸ்துவை நீ கண்டடையும் வரை உனக்கு சரியான மன நிலைமை இராது என்பதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியும். அது சரி. அது மிகவும் கடினமானதாய் இருக்கிறது. ஆனால் அதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க இயலும். அது சரி. நீ இயேசு கிறிஸ்துவைக் கண்டடையும் வரை நீ மிருகத்தனமாகவும், இச்சை கொண்டவனாகவும், எல்லாவற்றையும் கொண்ட வனாக இருப்பாய். அவர் தான் அந்த அருமையானவர், 140. இப்பொழுது, கர்த்தரைக் குறித்து மக்கள் மிகவுமாக ஆராய்கிறார்கள், மிகவும் கடினமாகச் சிந்திக்கிறார்கள், மிகவும் முன்னே செல்ல பிரயாசப்படுகின்றனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் சில சமயங்களில் அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகின்றது. நீங்கள் அதை விட்டு விடவேண்டும்-! நீங்கள் அதைச் செய்யத் தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அவரில் அன்பு கூர்ந்து, அப்படியே அவரை நேசித்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அது சரி. அது உங்களைத் தானே எதற்குள்ளாகவோ தள்ளிக் கொண்டோ, நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை ஆக்கிக் கொள்ளவோ அல்ல, முன்னே சென்று தேவன் உன்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறாரோ அவ்வாறே உங்களை விட வேண்டும். உங்களைத் தாமே நீங்கள் ஒப்புக் கொடுத்து, கீழ்ப்படிந்து, சந்தோஷமாக, பாடி துதித்து சென்று கொண்டேயிருங்கள். அது தான் வழியாகும். 141. வேதம் “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக் கேதுவாக நடைபெறும்" என்று கூறுகிறது. ஆகவே நீங்கள் அவரில் அன்பு கூர்வதில் நிச்சயம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அது ஒன்று மாத்திரமே. ஆமென்-! அவரில் மாத்திரம் அன்பு கூர்ந்து நடந்து செல்லுங்கள். ''கர்த்தாவே நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை நேசிப்பதை நீர் அறிவீர்” என்று கூறுங்கள். ''நீங்கள் இதை நேசிக்கிறீர்களா-?" "இல்லை, ஐயா, கர்த்தாவே நான் உம்மை, நேசிக்கிறேன்" பாருங்கள்-? 142. ''நல்லது, நீ... நீ ஒரு மகத்தான பிரசங்கியாக ஆக விரும்புகிறீரா-? நீங்கள் இதைப் போன்று ஆக விரும்புகிறீரா-?'' என்று கூறும்போது, 143. "இல்லை, இப்பொழுது கர்த்தாவே, என்ன... அப்படி நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புவீரானால், அப்படியே ஆகட்டும். நீர் அப்படி. விரும்பவில்லையென்றால், ஆமென், நான் இங்கே சபையின் மிதியடி ஆகவே சரியாக இருப்பேன்.'' 144. "நல்லது, இப்பொழுது இதைக் குறித்து நீர் ஏதாவது ஒன்றைச் செய்வீரானால் மக்களும் உமது சபையைக் குறித்து அதிகமாக நினைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்'' 145. ''மக்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலை இல்லை, கர்த்தாவே, நீர் என்ன நினைக்கின்றீர் என்பதையே நான் அறிய விரும்புகிறேன். நான்- நான் உம்மோடே இருப்பேன், நீர் என்னிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீரோ அதைச் செய்வேன், நான் எல்லாவற்றையும் நேசிப்பேன். நிச்சயமாக." ''நல்லது, இப்பொழுது சகோதரி இன்னார் இன்னாரை அறிவீரா, நீர் அவளை நேசிப்பதில்லை." "ஆம், நான் நேசிக்கிறேன் கர்த்தாவே, ஆம் நிச்சயமாக அவளை நான் நேசிக்கிறேன்." "ஏன்-?'' 146. "ஏனென்றால் நீர் அவளை நேசிக்கிறீர், நீர் என்னுள்ளும் இருக்கிறீர். ஆகையால் நான் அவளை நேசித்து தான் ஆக வேண்டும், ஏனெனில் நீர் எனக்குள் இருந்து அவளை நேசிக்கின்றீர்" வ்யூ. அது தான். 147. நான் நினைக்கிறேன், அந்த மிருகங்கள் அங்கே... விழுந்த அந்த மிருகம், பாருங்கள். கேள்வி:11. "தேவ குமாரர்” என்றால், அவர்கள் தூதர்களா அல்லது பரலோகத்தில் இருந்து வந்த ஆவிகளா-? 148. அது தான் அந்த நபரின் கேள்வி. அது சரி. அவர்கள் தூதர்கள் அல்ல என்று நான் நம்புகிறேன். பாருங்கள். அவைகள் ஜீவிகளாய் இருந்தன, "தேவகுமாரர்" என்று வேதம் கூறுகிறது. தூதர்கள் அல்ல, அவர்கள் தேவ குமாரராய் இருந்தனர், அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தனர். வந்து மாம்சத்திற்குள் வைக்கப்பட்டனர்; அவைகள் தாங்களே மாம்சத்திற்குள் நுழைந்து கொள்ளவில்லை," இல்லை. இயேசு கிறிஸ்துவைத் தவிர, மற்ற எல்லா மாம்சமும் பாலுணர்வின் மூலம் பிறந்த ஒன்று என்று நான் நம்புகிறேன். கன்னிப் பிறப்பின் மூலம் பிறந்த நபர் இயேசுகிறிஸ்து ஒருவர் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜோசபஸ் மகத்தான சரித்திர அறிஞராயிருந்தாலும்கூட, நான் தான் அதைக் குறித்து அவருடைய கருத்துடன் இணங்குவதில்லை. ஆனால் அவைகள் இயற்கைக்கு மேம்பட்ட ஜீவிகள் என்றும், அவை கீழே வந்து மனிதனின் ஆவியை ஆட்கொண்டன என்றும் நான் நம்புகிறேன். அவைகள் இங்கே சரியாக ஜெபர்சன்வில்லில் இன்றைக்கும் இருக்கிறது, சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதே மிருகத்தனமாக, இச்சைக் கொண்ட, தேவனற்ற ஆவிகள் இன்றைக்கு மனிதர்களுக்குள், இருக்கின்றது. இப்பொழுது ஒரு நாளிலே இம்மனிதர் மரிப்பர்; வேறொரு சந்ததி இருக்குமானால், அவைகள் அவர்கள் மீது வரும். 149. நினைவில் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய மனிதனை எடுக்கின்றார். ஆனால் தம்முடைய ஆவியை எடுப்பதில்லை, இது பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்தாவியாகும், 150. அதே பிசாசு தான் (மதங்கள் என்ற வடிவில்) கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது, அதே பிசாசு தான் இன்றைக்கு நீண்ட அங்கிகளை அணிந்து சபையில் இருக்கின்றது. ஆகவே அவர்கள்... அவர்கள் சரீரத்தின் மேல் உள்ள நீண்ட அங்கிகளை நான் குறிப்பிடவில்லை. உங்கள் ஆத்துமாவின் மேல் உள்ள அங்கியை நான் குறிப்பிடுகிறேன். பாருங்கள், "ஏன், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லவே இல்லை. "நீங்கள் நவீன பரிசேயர்களைக் குறித்து பேசுகின்றீர்கள்-! சரியாக அது தான். 151. எப்படியாயினும், வேதம் ''அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு" என்று கூறுகின்றது. அவர்கள் இன்னுமாய் தேவ குமாரர்களாய் இருக்கின்றனர். ஆனால் விழுந்து போன நிலையில் அவர்கள் உள்ளனர். நான் என்ன கூற முனைகின்றேன் என்பதை பாருங்கள்-? சிலர் ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள், சிலர் மூப்பர்களாய் இருக்கிறார்கள், சிலர் உதவியாளர்களாக இருக்கிறார்கள், சிலர் பிஷப்புகளாக இருக்கிறார்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு மதப்பணி ஆர்வமிக்கவர்களாய் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் வேதம்... 152. இப்பொழுது, சகோதரனே, சிறிது நேரத்திற்கு முன் நீர் கேட்ட கேள்விக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன். யாரோ கூறினார்: கேள்வி:12. சகோதரன் பிரான்ஹாம், ''இந்த மனிதன் பரிசுத்தாவியைப் பெற்றிருக்கிறார், ஏனென்றால் 'இதை' செய்தார்" அல்லது "இந்த ஸ்திரீ பரிசுத்தாவியை பெற்று இருக்கிறாள், ஏனெனில் 'அதை' செய்தாள்” என்று அறிந்து கூற நான் விரும்புகிறேன். 153. இதை அறிந்து கொள்ள உங்களுக்கு உலகத்தில் ஒரு வழியும் கிடையாது. அது சரி. நீங்கள் அறிந்து கொள்ள உலகத்திலே ஒரு வழியும் இல்லை, நாம் ஒருவரையும் நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, தேவன் தான் நியாயாதிபதியாய் இருக்கின்றார், நியாயந்தீர்க்க நாம் இல்லை. பாருங்கள்-? நீங்கள் சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கியுங்கள், வாழுங்கள்... 154. சில காலத்திற்கு முன் ஒரு மனிதன் என்னிடம் வந்தார். கடந்த இரவு நான் கூறியதைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவர் என் வீட்டிற்கு வந்து, "சகோதரன் பிரான்ஹாம் தான்-நான்-நான். விரும்பினது. நான் என் பாவங்களை அகற்ற விரும்புகிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறி அமர்ந்தார். 155. அவர் “சர்வதேச பிரசித்த பெற்ற, மகத்தான மனிதனாகிய பில்லி கிரகாம் என்னும் பெயர் கொண்ட நபரைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஆகையால் அவருடைய கூட்டங்களுக்கு நான் சென்றேன், அவர் 'கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பும் எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்தி கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினார். ஆகையால் தான் என்னுடைய கரங்களை உயர்த்தினேன், அவர் 'இப்பொழுது நாமெல்லாரும் எழுந்து ஜெபம் செய்வோம்" என்றார். ஆகையால் நான் எழுந்து ஜெபித்தேன்.... (என்னை மன்னிக்கவும்)" எவ்வளவு உத்தமமாக ஜெபிக்க முடியுமோ அவ்வளவு உத்தமமாக ஜெபித்தேன்." ஆனால் அது எனக்கு ஒரு நன்மையையும் அளிக்கவில்லை," என்றார். 156. அவர் "அதன் பிறகு நான் ஓரல் ராபர்ட்ஸ் கூட்டங்களுக்குச் சென்றேன். அவர், 'நான் அவரைக் குறித்து கேள்விபட்டிருக்கிறேன். அங்கே அவர்கள் அவ்வளவாய் மகிழ்ந்து களிகூர்வதைக் குறித்து நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்'' என்றார், மேலும் அவர், " "நான் ஓரல் ராபர்ஸிடம் சென்று 'ஒரு கிறிஸ்தவனாக மாற நான் என்ன செய்யவேண்டும்-?' என்று கேட்டேன். அவர் “நீங்கள் அங்கே செல்லுங்கள்...' நான் பில்லி கிரகாமின் கூட்டத்தில் கைகளை உயர்த்தினேன் என்று கூறினேன். அதற்கு அவர் 'நீங்கள் அந்த கேள்வி கேட்கப்படும் அறையில் சென்று சந்தோஷமாக அந்நிய பாதைகளில் பேசும் வரை இருங்கள்," என்றார். அவர் மேலும், ''நான் அங்கே உள்ளே சென்று அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் வரை நான் ஜெபித்தேன், ஆனால் நான் வெளியே வந்த பிறகு அது எனக்கு ஒரு நன்மையும் அளிக்கவில்லை" என்று கூறினார். 157. அவர் ''.அதன் பிறகு நான் வேறொரு கூட்டத்திற்கு சென்றேன், அவர்கள் நான் பரிசுத்தமாக்கப்படவில்லை என்று என்னிடம் கூறினர். 'நீங்கள் பரிசுத்தமாக்கப் பட்டு, மகிழ்ந்து சப்தமிட வேண்டும், போதுமான சந்தோஷத்தைப் பெற வேண்டும் ஆகவே நான் சத்தமிடும் வரை ஜெபித்தேன், ஆனால் இன்னுமாய்," என்றார், 158. நான் ''சகோதரனே, அந்த எல்லாக் காரியங்களும் சரியானவைகளே, ஒவ்வொன்றும் நன்மையானதே. உன்னுடைய கரங்களை உயர்த்துதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், சத்தமிடுதல், அந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால் இருந்த போதிலும் அந்த காரியம் அதுவல்ல, அது இயேசு கிறிஸ்துவாகிய அந்த நபரை ஏற்றுக் கொள்வது ஆகும். பாருங்கள்-?" பாருங்கள் அது.. 159. இவைகள் எல்லாம் தன்மைகளாகும். சத்தமிடுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், ஓடுதல், குதித்தல், அழுதல், ஜெபம் செய்தல், பேசுதல் ஆகிய இவைகள் எல்லாம் தொடர்ந்து வருகின்ற தன்மைகள் மாத்திரமே. முதலாவது காரியம் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக் கொள்வது மாத்திரமே. பாருங்கள்-? ஆகையால் அங்கே நாம் கூறத்தக்கதான சாட்சிகள் இல்லை. ஏனென்றால் ஒரு மனிதன் அழுகின்றான் என்பதினாலா-? ஒரு மனிதன் மிகவுமாக அழுது, அழுது முதலைக் கண்ணீர் வடித்து, ஆனால் இன்னுமாய் அவன் தன்னால் இயன்ற மட்டும் மிகப் பெரிய பாவியாய் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். 160. கவனியுங்கள், இயேசுவிற்கு ஆடுகளைத் தவிர வேறொன்றும் கிடையாது. அது சரி தானே-? மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறான். வெள்ளாட்டின் சப்தத்தை இங்கிருப்பவர்கள் யாராவது கேட்டிருக்கிறீர்களா-? நல்லது, சகோதரனே, நீங்கள் வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் மேய்ப்பர்களாய் இருத்தல் நல்லது. ஒரு வெள்ளாடு, செம்மறியாட்டைப் போலவே சப்தமிடும். ஹ. அந்த பழைய வெள்ளாட்டை எங்கேயாவது நிறுத்தி வைத்து, ஒரு சிறிய செம்மறியாட்டை வேறு பக்கமாக நிறுத்திவீர்களானால், "பா...'', "பா...'' என்ற சத்தம் ஒரே விதத்தில் அமைந்து இருக்கும் 161. அவர்கள் பீடத்தின் கீழே ''ஓ தேவனே'' என்று அழுது ''ஓ தேவனே என்று விம்மிக் கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் முழு நேரமும் வெள்ளாடாய் இருக்கின்றனர். அது சரி, சப்தமிடுதல்-? நல்லது என்னே, அவர்கள் மிகவுமாய் சப்தமிட்டு, தரையில் இங்கும் அங்குமாக ஓடி மேலும் கீழுமாக குதிப்பதை நான் கண்டிருக்கிறேன். 162. இப்பொழுது, “'சகோதரன் பிரான்ஹாமே, அழுவதில் நீங்கள் நம்பிக்கைக் கொள்வதில்லையா-?” என்று நீங்கள் கூறலாம். 163. நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக, அழுவதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஆனால் அது சாட்சியைக் குறிக்கவில்லை என்று நான் கூறுகிறேன், பாருங்கள், ஏனென்றால் அவை இரண்டுமே அழுகின்றன. அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக சப்தமிடுகின்றனர் என்பதை நான் கண்டிருக்கிறேன். ஆம் ஐயா. பிறகு அவ்வாறே இருந்துவிடுகின்றனர். நான் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கின்றேனோ, அவ்விதமாக உங்களில் அநேகர் இருந்து வருகின்றனர். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டு இருக்கிறேன், பிறகு அவர்கள் வெளியிற்சென்று எவ்வித வாழ்க்கையையும் வாழ்ந்து எதையாகிலும் செய்கின்றனர். ஆகவே, அது ஒரு அடையாளம் இல்லை. ஆனால் நீங்கள்... நீங்கள் அதற்கு எதிராக உள்ளீர்கள், "' என்று கூறலாம். 164. ஓ, இல்லை. அந்நிய பாஷைகளில் பேசுவதில் நான் விசுவாசம் கொண்டு இருக்கிறேன், அது சபையில் உள்ள தேவனுடைய வரம் ஆகும். அதை நான் வெளியே எடுத்தேனென்றால், நான் தேவனுடைய ஒரு பாகத்தை வெளியே எடுத்து விடுவேன். நான் என்னுடைய நாவை வெளியே எடுத்தால் என்னுடைய நாக்கு என்னுடைய சரீரத்தின் ஒரு அவயம், அப்படியானால் முழுமையான சரீரம் எனக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நாவுகள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் சரீரம் நாவுகளைக் கொண்டதாய் உன்ளது; ஆகையால் நீ அதை வெளியே எடுத்தால், கிறிஸ்துவினுடைய ஒரு பாகத்தை நீ வெளியே எடுக்கின்றாய். ஆனால் அது தான் சரீரம் என்று நீ இன்னுமாய் அதைக் கூற முடியாது, பாருங்கள். பாருங்கள்-? பாருங்கள்-? 165. ஆனால் அது கிறிஸ்து இயேசுவை அந்த நபரை ஏற்றுக் கொள்வதாகும், அதன் பிறகு இந்த மற்றைய காரியங்கள் சரியாக உள்ளே வந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து பொருந்தி விடும். ஆகவே இக்காலையில் இச்சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் இந்த சிறிய மக்கள் குழு, நாம் ஒவ்வாருவரும் திரைகளை நம் பக்கமாக இழுத்து வைத்து, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசு என்னும் நபரை பெற்றுக் கொள்வோமானால், ஒரு குழப்பமோ, அல்லது விவாதமோ நம் மத்தியில் இருக்கவே இருக்காது. அங்கே பரிபூரண அன்பு மாத்திரமே இருக்கும். நீங்கள் இன்னுமாய் இதை அல்லது அதை விசுவாசித்தாலும் முழுவதும் அன்பினாலே நிறையப்பட்டு இருக்கும், நீங்கள்... பாருங்கள்-? அதுதான். இப்பொழுது, இயேசு, "அவர்கள் உடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கூறினார். ஆகவே ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற் குணம், சாந்தம், விசுவாசம் என்பதாகும். 166. இப்பொழுது, நான். ஒரு மனிதன் ஒரு கிறிஸ்தவன் என்று சாட்சி பகருகின்ற ஒரு காரியத்தை, என்னுடைய மதிப்பீட்டை, எனக்கு தெரிந்த ஒன்றை நான் கூறுகிறேன். அது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா-? அது பெருமுயற்சி கடும் முயற்சி செய்கின்ற ஆத்துமாவாகும். தேவனுக்காக மிகவுமாக பசி தாகம் கொண்டிருக்கிற ஒரு மனிதன். அவர்கள். இரவும் பகலுமாய், அவர்களால் - அவர்களால் தாங்க முடியாது. அவர்கள் -அவர்கள் அவர்கள் தேவனுக்கென்று ஏதாவதொன்றைச் செய்தாக வேண்டும் என்றிருப்பார்கள். அவர்கள் முழுவதுமாக அன்பினால் நிறைந்து... அவர்கள் ஆத்துமா கடும் முயற்சி செய்யும், எப்பொழுதும், எந்நேரமும் பிரயாசப்பட்டுக் கொண்டே இருக்கும். வேதம் ''கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே அறுப்பான். அறுத்த அருமையான அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்'' என்று கூறுகின்றது. அது சரியா-? அந்த எல்லாக் காரியங்களும். . . 167. இப்பொழுது, கவனியுங்கள், அங்கே இந்த சபையானது.... இக்காலை வேளையில் நான் கூறுவேனானால், இக்கூட்ட மக்களும் நானும்... தேவன், "இப்பொழுது, வில்லியம் பிரான்ஹாம், கவனி, அந்த மக்கள் குழுவிற்கு நீ என்ன கூறுகின்றாயோ, அதற்கு நீ பதிலுரைக்கும்படியாக நான் செய்யப் போகிறேன். இப்பொழுது, அவர்கள் எல்லாரும் சப்தமிட வேண்டும் என்று நீ விரும்புகிறாயா-?" என்று கூறினால், ''நிச்சயமாக, அவர்கள் சப்தமிடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' "அவர்கள் எல்லாரும் அந்நியபாஷையில் பேசவேண்டும் என்று நீ விரும்புகிறாயா-?" "ஒவ்வொருவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" அவர்கள் "எல்லாரும் ஆவியில் நடனமாட வேண்டும் என்று விரும்புகிறாயா-?'' ''ஒவ்வொருவரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' 168. ''சரி, மிகவும் நல்லது, ஆனால் அவர்களை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்-?” ஹ-ஹூம் 169. "ஜெபிக்க வேண்டும் என்று தங்கள் இருதயத்தில் பாரம் கொண்டவர்களாய், இந்த பீடத்தின் கீழே இருந்து, இங்கே இரவும் பகலும் தங்கியிருந்து, மற்றைய காரியங்கள் உள்ள ஒரு சபை; அவர்கள் வீட்டிலே எந்நேரமும் ஜெபத்திலேயே இருந்து, மக்களை தேவனண்டையில் வரும்படிச் செய்து, தாழ்மையாய் நடந்து, மருத்துவமனைகளில் சென்று நோயாளிகளைச் சந்தித்து, சபைக்கு மக்கள் வரும் படிச் செய்து, சரியானவைகளைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சபையையே நான் கொண்டிருப்பேன். அந்த மற்ற காரியங்கள் யாவும் ஒன்றாக இருந்து அந்த மற்றவை சரியாய் இருந்த போதிலும், அது சபைக்குள்ளானதாய் இருந்தாலும், இவைகளைக் காட்டிலும் நான் அந்த சபையையே (ஆத்துமா பாரங்கொண்ட சபையை-) நான் பெற்று இருக்க விரும்புகிறேன்.'' 170. ஆனால் அதை நான் கொண்டிருக்க விரும்பினால், அந்த ஒன்றை நான் முதலாவதாக வைப்பேன். ஏனெனில் நீ அதை பெற்றுக் கொள்வாயானால், மற்றவை நடந்தேறும். ஹா..ஹம். பாருங்கள்-? நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களானால், நீங்கள் தேவனுக்காக மிகவுமாக பசி கொள்வீர்கள், சப்தமிடுவது தானாக நடை பெறும். நீங்கள் தேவனுக்கென்று மிகுந்த பசி அடைவீர்களானால் அந்நிய பாஷைகளில் பேசுவது நிகழும். நீங்கள் தேவனுக்காக மிகவும் பசியடைவீர்கள் ஆனால், நீங்கள் தாமே பசி கொண்டவர்களாகவே இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் தாமே வேற்றுமை சிந்தை கொண்டவர்களாய் ஆவதை நீங்கள் கவனிப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், அதை கவனியுங்கள், அங்கே வேறொரு ஆவி கிரியை செய்ய முயல்கிறது என்பதாகும். தேவனுக்கு முன்பாக தாழ்மையாகவும், ஆத்துமப் பசிமிக்கவர்களாயும் நடவுங்கள். நல்லவர்களாகவும் பழமை நாகரீகம் கொண்டவர்களாயும் இருங்கள்... 171. எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தின்படி, "பரிசுத்தாவியினால் முத்திரை இடும் படியாக முதலாவதாக தேவனுடைய தூதன் சென்ற போது, அவன் நகரத்திலே செய்யப்படுகிற சகலவித அருவருப்புகளினிமித்தமும் பெரு மூச்சுவிட்டு அழுகிறவர்களையே அவன் முத்திரையிட்டான்" என்ற வேத வாக்கியத்தின் மூலம் நான் அதை நிரூபித்துக் காட்டமுடியும். அது சரியா-? நகரத்திலே செய்யப்படுகின்ற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற மனுஷரின் நெற்றிகளிலே முத்திரையிட்டான், 172. இப்பொழுது, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன். (இப்பொழுது கூடுமானவரை சீக்கிரமாக நான் முடித்து விடுகிறேன்) பரிசுத்தாவியானவர் தாமே ஜெபர்ஸன்வில், நியூ ஆல்பனி, லூயிவில் ஆகிய இடங்களின் வழியாகச் சென்று இந்த மத்திய வேளையில் வீட்டில் இருப்போரை முத்தரித்தால் இன்றைக்கு என்ன நிகழும், “தேவனே கூட்டத்திற்காக மிகவும் பசியாய் இருப்பவர்களுக்கு எழுப்புதலை அனுப்பும். ஓ, தேவனே, இப்பட்டணத்தின் பாவங்களைப்பாரும் ஓ, அது மிகவும் மோசமானதாய் இருக்கிறது அல்லவா, தேவனே-? ஓ, நீர் தயவு கூர்ந்து ஒரு எழுப்புதலை அனுப்ப மாட்டீரோ, தேவனே. ஒரு அருமையான பிரசங்கியை எவராவது, ஒரு வரை அனுப்பும். ஓ, கர்த்தாவே பரிசுத்த ஆவி தாமே...''-? எங்கே அவர் முத்தரிப்பார்-? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 173. இப்பொழுது, "நல்லது, சகோதரன் பிரான்ஹாம், நீர் என்ன கூற முயல்கிறீர்-?" 174. நான் இதைத்தான் பயத்தோடும், வலிமையில்லாத கயிறுகளின் மேல் நடந்தவாறு இதை கூற விழைகிறேன். உள்ளே இருப்பவர்களுக்கு நாளானது முடிவடையப் போகின்றது என்று நான் நம்புகிறேன். பாருங்கள்-? பாருங்கள்-? கதவுகள் மூடிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்குள்ளே அதைக் குறித்த பாரம் என்பதே இல்லாமலிருக்கின்றது. 175. பில்லிகிரஹாமும், ஓரல் ராபர்ட்-யும், நம்மிடையே உள்ள மற்ற எல்லாரும் தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தினோம், நாம் கதறினோம், ஜெபித்தோம், மற்ற எல்லாவற்றையும் செய்தோம். ஆனால், நீங்கள் பாருங்கள், கதவுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. "அசுத்தமாய் இருக்கிறவன் இன்னும் அசுத்தமாய் இருக்கட்டும்." நான் வேத வசனங்களை மேற்கோடிட்டு காட்டுகிறேன், "அசுத்தமாய் இருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.'' புறஜாதியாரின் கதவுகள் மூடிக் கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன். பாருங்கள்-? காலங்களின் நேரம் முடிவடையப் போகின்றது, இன்னும் வர வேண்டியது சிலர் மாத்திரமே. தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தினோம், ஆத்துமாவைக் குறித்து பிரசவ வேதனை இல்லாததால் தான் அதைப் போன்று கூட்டங்கள் உங்களுக்கு இருக்கவில்லை. உங்களுக்கு அந்த பாரம் இருக்கவில்லை . 176. அநேக வருடங்களுக்கு முன் சம்பவித்தது என் நினைவிற்கு வருகின்றது, அன்று நடந்ததை அவர்கள் சபையில் பேசுகின்றதை நீங்கள் எப்பொழுதும் கேட்கின்றீர்கள். ஆனால் அதுவோ இன்னுமாய்த் தொடர்ந்து இருக்கவில்லை, சிறிதேனும் இல்லை, ஆனால் அன்று அது புதுப் பொலிவுடன் இருந்தது. தேவன் தமது சபையை அழைத்துக் கொண்டு இருந்தார். அவர்கள் கதறி அழுதுக் கொண்டு, விம்மிக் கொண்டு இரவு முழுவதும் பீடத்தின் மேல் விழந்து கிடந்ததை நான் கண்டிருக்கிறேன். நான் அவர்கள் வீடுகளுக்குச் சென்று இருக்கிறேன். நீங்கள் அவர்கள் வீட்டருகில் வரும் போழுது - ஆணும் பெண்ணுமாக ''ஓ, தேவனே'' என்று கதறிக் கொண்டிருப்பதை உங்களால் கேட்க முடியும். 177. அவர்கள் சபையினூடே நடந்து செல்வதை நீங்கள் காணலாம். அப்பொழுது, "இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக் கொள்ளும்'' என்று பியானோ கருவியில் இசைக்கப்படுவதை நான் காண்பேன், அங்கே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், உங்களுக்குத் தெரியுமா. (சகோ. பிரான்ஹாம் சப்தத்தை உண்டாக்குகிறார்- ஆசி) இந்த சபைக்குள் செல்வோம், வேறொரு சபைக்கு செல்வோம், ''அங்கே அருமையான ஒரு ஊற்று'' என்று அங்கே பாடப்படுவதைக் கேட்போம், "ஓ, தேவனே, என்னுடைய மகனைக் காத்தருளும். என் மகளைக் காப்பாற்றும், அவள் இழந்து போயிருக்கிறாள், கர்த்தாவே, தயை கூர்ந்தருளும்-!'' 178. அதைப் போன்று இன்று உன்னால் காணமுடியாது. காரணம் என்ன-? விலக்கிக் கொண்டுள்ள தேவனுடைய ஆவி இயேசு இதை முன்னறிவித்தார், அவர்களுடைய அன்பு தணிந்து போகும். அக்கிரமம் மிகுதியாவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும். பாருங்கள்-? பாருங்கள்-? குளிர்ந்து போய் அகன்று விடுகின்றனர். அன்பு தணிந்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் வேஷத்தை தரித்து, பியானோ கருவியை மேலும் கீழாக வாசித்து, ஓ," அல்லேலுயா-! தேவனுக்கு மகிமை-! அல்லேலூயா-! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்பார்கள். பாருங்கள், அது வெறும் வேஷமே. அதைப் போன்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், பாருங்கள், பாருங்கள், பாருங்கள், பரவாயில்லை நாம், நான் இப்படிச் சொல்கையில்... 179. நாம் நம்முடைய சபையைக் குறித்து பேசவில்லை, அமெரிக்காவில் நான் கண்டதைக் குறித்தே பேசுகிறேன். அது ஒரு வேஷம் போலாகி விட்டது, அது நம்மிடையே இருந்ததைப் போன்று ஒரு நடிப்பாக ஆகிவிட்டது. அந்த ஆத்தும பசி, முயற்சியானது ஏறத்தாழ இல்லாமற் போயிற்று. ஓ, சகோதரனே, சகோதரியே (தேவன் நம் மேல் இரக்கமாய் இருப்பாராக). தேவன் இரக்கமாயிருப்பாராக-! 180. இந்த எழுப்புதல்களையும், மற்ற பலமான காரியங்களையும் நோக்கிப் பாருங்கள், சுவிசேஷமானது தெளிவாகப் பிரசங்கிக்கப்படுகிறது, அது.... எழுப்புதலானது முடிவுற்றவுடன் அவர்கள் சென்று விடுவதை இன்றைக்குக் கவனியுங்கள். அது என்னவென்று தெரியுமா-? 181. இதை நான் கூறட்டும். தான் ஏன் இதைவிட முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கவனியுங்கள், இயேசு கூறினார், "பரலோக ராஜ்ஜியம் ஒரு மனிதன் கடலிலே போடப்பட்டு சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வெளியே இழுத்த போது, கடலில் இருந்த அநேக ஜந்துக்களை எடுத்தான். ஆமைகள், பாம்புகள், நீர் நாய்கள், நண்டு வகைகள், மீன் ஆகியவைகள் வந்தன. பாருங்கள், நான் விசுவாசிக்கிறேன் அந்த வலை... 182. இப்பொழுது, கவனியுங்கள்-! இங்கே ஒரு ஆமை உள்ளது, இங்கே ஒரு மீன் உள்ளது. அந்த ஆமை, ஆமையாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் துவக்கத்திலிருந்தே அது ஆமையாகத் தான் இருந்தது. ஆமையினுடைய சுபாவம் தான் அதற்கு அமைந்திருக்கும், அந்த ஒரு சுபாவம் மாத்திரமே அதற்கு இருக்கும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நான் ஜெயிக்கப் போகிறேன் என்று கூறி இருக்கிறேன். பாருங்கள், அது துவக்கத்திலிருந்தே ஆமையாகத்தான் இருக்கின்றது, இப்பொழுதும் அது ஆமை தான். பாம்பாக அது துவங்கியிருக்குமென்றால் அது இப்பொழுதும் பாம்பாகத் தான் இருக்கும். நீர் நாயாக துவக்கத்தில் அது இருந்திருக்குமானால்..... 183. அந்த குளத்தில் இருந்த எல்லா மீன்களும் பிடிபடும் வரை அந்த வலையானது போடப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். 184. அந்த காரணத்தால் அவர்கள், ''நல்லது என் கைகளை நான் உயர்த்தினேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக-! நான் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-!" என்று கூறுகின்றனர். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து, "ஓ, லிடியா, அந்த காரியம் உனக்குத் தெரியுமா, அது... முட்டாள்தனமான ஒன்று. நான் சரியாகத்தான் ஊகித்தேன்'' என்று கூறுவர். ஏன்-? அதன் சுபாவம் அங்கே இருக்கின்றது, அதன் ஆரம்பமே நீர் நாயாகவும், சர்ப்பமாகவும் இருந்தது. 185. ஏரியிலிருந்து அந்த மீன் இப்பொழுது எடுக்கப்பட்டிருக்கும், வலை காய்வதற்காக வைக்கப்படும். பிறகு இயேசு வந்து தம்முடைய மீனை எடுத்துக்கொள்வார். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதைப் பாருங்கள்-! ஓ, கிறிஸ்துவத்தின் ஒரு சிறு துளி மாத்திரம் உங்களில் இருந்தால், தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் சிறிய அளவில் மட்டும் இருந்தால் முடிந்த வரை இக்காலை வேளையில் அதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள், உங்கள் இருதயத்தில் அதை வைத்து களி கூறுங்கள், 186. 'தேவகுமாரர்; மனுஷ குமாரத்திகளைக் கொண்டார்கள்". நிச்சயமாக அவர்கள் தேவகுமாரர் தான். இப்பொழுதும் அவர்கள் இன்னுமாய் தேவ குமாரர்களாய் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் விழுந்து போன தேவ குமாரர். அவர்களில் சிலர் வேதபூர்வமாக இருக்கின்றனர், வியூ அவர்கள் எவ்வாறு வேத வாக்கியங்களைப் பேசுகின்றனர்-! அவர்கள் தேவகுமாரர். சாத்தான் தேவனுடைய வலது கரமாக விளங்கியவன் என்று உங்களுக்குத் தெரியுமா. இன்றைக்கு உலகில் உள்ள வேத ஞானிகளைக்காட்டிலும் வேத வாக்கியங்களை அவன் அதிகமாக அறிந்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதைக்குறித்து பேசி அவன் வேத கலாசாலைகளை தலை கீழாக ஆக்கிக்கொண்டிருக்கிறான், குறிப்பாக இங்கு இருந்த பாப்டிஸ்டுகள், "இயேசு கிறிஸ்து ஒரு ரோம போர் வீரனுக்கோ, அல்லது ஜெர்மானிய போர் வீரனுக்கோ பிறந்திருக்க வேண்டும்'' என்று கூறுகின்றனர். அதைக் குறித்த புத்தகத்தை நான் வைத்திருக்கிறேன், வருகின்ற நாட்களில் என்றாவது ஒரு நாளிலே அதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அது சரி. 187. முடிவாக யாத்திராகமம்... ஓ நாம் அதை முடிக்கும் வரை அதை புரிந்து கொள்ள முடியாது. சீக்கிரமாக அதை தான் முடிக்கின்றேன். உங்களுடைய நேரத்தை அதிக அளவில் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். என்னோடு சிறிது நேரமாக பொறுத்துக் கொள்வீர்களா-? (சபையார் "ஆமென்” என்கின்றனர் - ஆசி) 13. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதியான யூதர்களில் 144000 பேர், சயை எடுக்கப்படுதலில் பங்கு கொள்வார்களா-? துவக்கத்தில் இஸ்ரவேல்.. அவர்கள் துவங்கி.. (என்னை மன்னிக்கவும்) காலத்திலே செல்கின்ற. 188. என்னை மன்னியுங்கள், ஒரு நிமிடத்தில் இது என்ன என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். அது பேப்பரில் ஒரு வகையாக எழுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ...கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருஷங்கள் நேரத்தில் இது சம்பவிக்குமா அல்லது மனிதன் நவீன மதவாதிகளாக வாழ்பவனை. ஆம் ஐயா, 189. இப்பொழுது, ஒரு நிமிடம், இந்த கேள்வி என்னவென்பதை சரியாக பார்ப்போம்: அந்த 144000 பேர் நம்மில் மீதியான.... 190. முதலில் நான் அதை சரி செய்து அதைக் குறித்து நீங்கள் நிச்சயமாக இருக்க விரும்புகிறேன், பாருங்கள், அந்த 144000 பேர். , , வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீதமுள்ள யூதர்களாகிய அந்த 144000 பேர் சபை எடுக்கப்படுதலில் பங்கு உடையவர்களாய் இருப்பார்களா-? அது 144000 பேர்.... 191. இப்பொழுது,.... நான் - நான்... இதைத் துவங்குவதற்கு முன் நான் இதை என் மனதில் தெளிவாய் பெற்றிருக்க விரும்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீதமுள்ள யூதர்களாகிய 144000 பேர் சபை எடுக்கப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா-? 192. இதை நான் முதலில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த 144000 பேர் மீதம் உள்ள யூதர்கள் ஆவர், ஆனால் அவர்கள் எடுக்கப்பட்ட சபை அல்ல. பாருங்கள்-? வெளிப்படுத்தின விசேஷம் 6.ஆம் அதிகாரத்தில் அதை நீங்கள் காணலாம். 193. நாம் அதைக் குறித்த அந்த பாகத்தை; அந்த பக்கத்தை, நாம் அடுத்ததாக பார்க்கலாம். அவர்கள் அதைக் குறித்த மற்றொரு கேள்வியை வைத்து உள்ளனர். இந்த காரியங்களைக் கவனியுங்கள். 194. அது சரி, வெளிப்படத்தின விசேஷம் 6-ல் இப்பொழுது, அங்கே இதை நீங்கள் பார்க்கலாம். பாருங்கள்-? இப்பொழுது நாம் ஆரம்பிக்கப் போகிறோம், அவன் மேற்சென்று குதிரை சவாரி செய்பவர்கள், இன்னும் மற்றவைகளைக் குறித்து அவன் கூறுகின்றான். ''அவர்கள் அதைத் திறந்த போது"... வெளிப்படுத்தின விசேஷம் 6-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனத்தை நாம் பார்ப்போம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது.... 195. நான் -நான்- தான் தவறு செய்து விட்டேன், நான் தவறான அதிகாரத்தை எடுத்து விட்டேன். அது 7-வது அதிகாரம்: இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, 196. ஓ, என்ன அருமையான ஒரு கேள்வி, அதைப் பார்க்க சிறிது நேரம் தான் உள்ளது, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன்... ஏறி வரக்கண்டேன்... 197. ஓ, நிச்சயமாக இது ஒரு அருமையான கேள்வி தான், பாருங்கள்-? இப்பொழுது, யோவான், பூமியிலிருந்து சென்று, ஆவியில், பூமியை நோக்கிப் பார்த்து கூறின மகத்தான காட்சி இது. அவன், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் காற்றுகளையும் பிடித்திருப்பதைக் காண்கிறான். 198. இப்பொழுது வேதத்தில், "காற்றுகள்” என்றால்... வேத வசனங்களை உங்களுக்கு எடுத்துக் கூற எனக்கு நேரம் இல்லை, ஆனால் நாம் இதைப் பார்க்கலாம். இதற்கு சரியாக பதில் உரைக்கப்படவில்லையெனில், நான் வேறொரு சமயத்தில் அதை எடுப்பேன். அந்த நான்கு, வேதத்தில் காற்றுகள் என்றால் “யுத்தங்களும் சச்சரவுகளும்'' என்று அர்த்தம். யோபின் காலத்தில் காற்று கீழே வந்து அவனுடைய குமாரர்களை எடுத்துப் போட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நான் என்ன கூற முயல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா, அது -அது -அது தொந்தரவு, வேதனை, பாருங்கள், ...பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் (நான்கு தூதர்கள், அல்லது “நான்கு செய்தியாளர்கள்'') அவர்கள் அந்த மூலைகளில் நின்று கொண்டு... அல்லது பூமியின் நான்கு திசைகளிலும் நின்று கொண்டு, அவர்கள் பூமியின் நான்கு காற்றுகரையும் பிடித்திருக்க கண்டேன்... ...அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி. (இப்பொழுது, அவன் கர்த்தருடைய வருகையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றான். பாருங்கள்-?) நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றியில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாது இருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (ஊழியக்காரர்). 199. இப்பொழுது, சபையானது அவருடைய ஊழியக்காரர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் அவருடைய குமாரர், அவருடைய ஊழியக் காரர் அல்ல, யூதர்கள் தான் எப்பொழுதுமே அவருடைய ஊழியக்காரராய் இருந்து வந்து உள்ளனர். சபையானது அவருடைய ஊழியக்காரராக ஒரு போதும் இருந்தது இல்லை, அது அவருடைய பிள்ளைகளாய் இருந்தது. பாருங்கள்--? அந்த ஊழியக்காரர்: முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைப் போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். (இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் யூதர்கள்) 200. இப்பொழுது கவனியுங்கள்-! “யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் பன்னீராயிரம். இன்னும் மற்ற கோத்திரங்கள் சிமியோன் கோத்திரத்தில் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் பன்னீராயிரம். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், ஆக பன்னிரண்டு பன்னிரண்டு... என்ன-? 144000. இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் எல்லா கோத்திரத்தாரையும் கவனியுங்கள். அவர்கள் தேவனுடைய "ஊழியக்காரர்" என்பதை இப்பொழுது கவனியுங்கள். 201. ஒரு வேளை, உங்களுக்கு நான் இதை தெளிவாக்கக்கூடும். இப்பொழுது கவனியுங்கள். இவைகளுக்குப் பின்பு நான் பார்த்த போது இதோ சகல ஜாதிகளிலும் (இப்பொழுது இங்கே வேறொரு கூட்டம் இருப்பதைப் பாருங்கள்) கோத்திரங்களிலும், ஐனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய இனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து ஆட்டுக்குட்டியான வருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு... (இந்த பரிசுத்தாவியின் கூட்டத்திற்கு செவி சாயுங்கள்-!)... இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன் களையும் சூழநின்று சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுது கொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும்... மகிமையும். ஸ்தோத்திரமும்... வல்லமையும். பெலனும் சதாகாலங்களிலும் உண்டவதாக; ஆமென், என்றார்கள், அப்பொழுது. மூப்பர்களில் ஒருவன்... (இப்பொழுது கவனியுங்கள், அது... யோவான் தரிசனத்தில் இருந்தான்).... மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி, (இப்பொழுது, யோவான் ஒரு யூதனாய் இருந்ததால் அந்த பன்னிரண்டு கோத்திரங்களை அவன் பார்த்த போது அவர்களை அடையாளம் கண்டு கொண்டான்)...வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்-? எங்கேயிருந்து வந்தார்கள்-? என்று கேட்டான். இப்பொழுது நீ யூதர்களை கண்டிருக்கிறாய், அவர்கள் ஒவ்வொருவரையும் உனக்குத் தெரியும், கோத்திரங்களாக அவர்களை நீ கணக்குப் பார்த்து எத்தனை ஆயிரம் பேர் முத்திரிக்கப்பட்டார்கள் என்று நீ கூறினாய். ஆனால் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள் யார்-? அவர்கள் எங்கிருந்து வந்தனர்-? அதற்கு நான்; ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (வேறு விதமாகக் கூறுவோமானால், ''அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தான் ஒரு யூதன், தான் இங்கே நின்று கொண்டு இருக்கிறேன், அங்கேயுள்ள என்- என் ஜனத்தை தான் கண்டேன்" என்று யோவான் கூறுகிறான்).... அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து, பாருங்கள்-! மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே (சபைகளில் அங்கத்தினர்கள் ஆவதன் மூலம் அல்ல)... ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். (பாருங்கள்-?). ஆனப்படியால், இவர்கள் தேவனுடைய சிங்காச னத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்கிரர்கள்..... 202. இப்பொழுது திருமதி. பிரான்ஹாம் எங்கே எனக்குப் பணி விடை செய்கிறார்கள்-? வீட்டிலே. அது தான் மணவாட்டி. திருமதி. நெவில் அங்கே தானே, உங்கள் வீட்டிலிருந்து, உங்களுக்கு பணிவிடை செய்கிறார்கள். அங்கே தான் மணவாட்டி (அவர்கள் ஊழியக்காரர் அல்ல).... மணவாட்டி பணிவிடை செய்கிறாள். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாய் இருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை.... (அவர்கள் இங்கே இருக்கையில் சில வேளை தங்கள் உணவை அவர்கள் இழந்திருக்கலாம். அப்படித் தானே-?)... இனி தாகமடைவது இல்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதில்லை. இவர்கள் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களே ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் (அங்கே சென்று இருந்த மக்கள் அழுது கொண்டிருந்த கூட்டமாயிருந்தனர்) யாவையும் துடைப்பார் என்றான். (பாருங்கள்-?) 203. இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் பசியுள்ளவர்களாயும், தாகம் உள்ளவர்க ளாயும், அழுதும், முனகியும், கதறியும் உபத்திரவத்திலிருந்து வெளி வந்தவர்க ளாயும் இருந்தனர். ("அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தைப் பாருங்கள், ஓ அவர்களுக்கு பைத்தியக்காரர்கள்" என கூறப்பட்டது) ஓ, என்னே-! ஆம். பாருங்கள்-? ஆனால் அவர்கள் அழுது கதறினர், அவர்கள் குழப்பம் ஏதும் உண்டாக்கவில்லை. அவர்கள் அழுது கதற மாத்திரம் செய்தனர். ஆகையால் பாருங்கள், அவர்கள் சகல ஜாதிகளும், கோத்திரரும், பாஷைக்காரருமாய் இருந்தனர். 204. இப்பொழுது, இந்த 144000 பேர் யூதர்களாய் இருந்தனர். ஆபிரகாம் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்தான். யூதர்கள் எப்போதுமே தேவனுடைய ஊழியக்காரர்க ளாய் இருந்தனர். புறஜாதியார் அவருடைய ஊழியக்காரர்களாய் எப்போதும் இருந்ததில்லை. 205. இப்பொழுது நாம் சீக்கிரமாக கடந்து செல்வோம், ஏனெனில் நம் இடையே இன்னும் 2 அல்லது 3 கேள்விகள் உள்ளது. என்னால் முடிந்த அளவிற்கு வேகமாக இவைகளைக் கடந்து செல்வேன். ஆனால் நான் திரும்பவும் வந்து அடுத்த ஞாயிறன்று (கர்த்தருக்கு சித்தமாயிருக்கும் பட்சத்தில்) இவைகளின் பேரில் அதிக நேரம் செலவிடுவேன். 206. ஆனால் இப்பொழுது, கவனியுங்கள், அவன் பூமியின் நான்கு திசைகள் யாவையும் கண்டான், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நிற்பதை அவன் கண்டான். "அது வட்டமாக இருந்தது என்று நான் எண்ணினேன்" என்ற நீங்கள் கூறலாம். நீங்கள் பாருங்கள், அதனால் அங்கு நான்கு திசைகள் இருக்கக் கூடாது என்பதல்ல, அது சரி. 207. இப்பொழுது, "பூமியின் நான்கு திசைகளிலும், நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்" வேறு விதமாகக் கூறினால், உலக முழுவதும் போரிலும், சச்சரவிலும் இந்த காற்றானது சென்று வீசினது. அது எப்பொழுதாவது நிகழ்ந்து உள்ளதா-? முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் வரை அது நிகழவில்லை. ''காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்" உள்ளே செல்லாதப்படிக்கு அவர்கள் கடினமாகப் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தனர். 208. ஆகவே இப்பொழுது, இங்கே வேறு ஓருவன் வருகிறான். இப்பொழுது அந்தத் தூதனைக் குறித்து நீங்கள் கவனிப்பீர்களானால், எசேக்கியேல் 9-ல், புருஷர் தங்கள் கைகளிலே வெட்டுகிற ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு எருசலேம் முழுவதுமாக யூதர்களை வெட்டுவதற்காக வாசலிலிருந்து புறப்பட்ட போது, இதே தூதன் தான் அங்கே வந்தான். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா-? அவன், "நிறுத்து-! நிறுத்து-! நீ நகரமெங்கும் உருவப்போய், அதற்குள்ளே செயல்படுகிற சகல அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றான். அது சரி தானே-? 209. அதன் பிறகு, அவர்கள் சென்று படுகொலைகளை செய்ய அவன் அனுமதித்தான். அது தீத்து இராயன் கீழ் நிகழ்ந்த அடக்கு முறை, துன்பம். இப்பொழுது கிழக்கிலிருந்து (அங்கிருந்து தான் இயேசு வருவார்) வருகின்றவனும் அதே தூதன் தான் என்பதை நீங்கள் கவனியுங்கள், அவன் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை வைத்து இருக்கிறான், மகிமை-! 210. இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன-? ஓ... அது உலகத்திலே மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இன்று இருக்கின்றது அல்லவா-! சிலர் அது ஓய்வு நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர், சிலர் அது இதை அல்லது அதை செய்வது தான் என்று கூறுகின்றனர். ஆனால் வேதம், "பரிசுத்தாவி தான் தேவனுடைய முத்திரை" என்று கூறுகின்றது. எபேசியர் 4:30, "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தாவியை துக்கப்படுத்தாது இருங்கள்" என்று கூறுகின்றது. பாருங்கள்-? அது சரியே. அது பரிசுத்தாவி. 211. பிறகு என்ன வருகின்றது-? இப்பொழுது கவனியுங்கள்-! ஓ, இதை நான் நினைக்கையில் என் இருதயம் துள்ளி குதிக்கின்றது. இப்பொழுது அவன்," நான்கு காற்றுகளையும் அசையாதபடிக்கு அப்படியே பிடித்திருங்கள்" என்று கூறுகிறான் (வேறொரு வார்த்தையில் கூறுவோமானால்) "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும்" அந்த ஊழியக்காரன், அந்த "யூதர்" (யோவான் திரும்பி, "முத்திரை போடப்பட்ட 144000 பேர்களை நான் கண்டேன்” என்று கூறுகிறான்) இப்பொழுது, காற்று அடிக்க ஆரம்பித்து, பூமியை முழுவதுமாக நிரப்பி, முதலாம் உலகப் போரின் போது அர்மெகேதோன் யுத்தம் நிகழ்ந்திருக்கும், ஆனால்... 212. இப்பொழுது, உங்களுக்குக் காண்பிக்கத்தக்கதாக வேறொரு வேத வாக்கியத்தை நான் வைத்திருக்கிறேன். இயேசு அந்த மக்களைக் குறித்து பேசினார். அவர், ''சிலர் ஒன்றாம் மணி வேளையில் வருவர், சிலர் வேறொரு மணி வேளையில் வருவார்கள், அவர்கள் தான் பதினோராம் மணி வேளையில் வந்தவர்கள். பதினோராம் மணி வேளை மக்கள்" என்று கூறினார். இப்பொழுது, ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் இடைப்பட்ட வரிகளை படித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் துரிதமாக இங்கும் அங்கும் தாவ வேண்டியவனாய் இருக்கின்றேன். இப்பொழுது கவனியுங்கள். "பதினோராம் மணி வேளை மக்களே, உள்ளே வாருங்கள்" ஆகவே சரியாக இப்பொழுது.., "முதலாம் மணி வேளையில் வந்தவர்கள் வந்து கூலியை பெற்றுக் கொண்டார்கள், அடுத்ததாக வந்தவர்களும் கூலியைப் பெற்றுக் கொண்டார்கள், பதினோராம் மணி வேளையில் வந்தவர்களும் முதலாம் மணி வேளை மக்கள் பெற்ற அதே கூலியை பெற்றுக் கொண்டனர். 213. இப்பொழுது, கவனியுங்கள், யூதர்கள் தான் நாம் பின்பற்றும் தூரத்தைக் காட்டும் மைல் கம்பம். இப்பொழுது, முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது ஒவ்வொரு யூதனும் பல நாடுகளுக்கு சிதறி செல்லும்படியாக ஆனது. முதலாம் வசனத்தைக் குறித்து இன்றைக்கு கேட்கப்பட்டது போன்று, எப்படி அவர்கள் எல்லாரையும் அவர் சிதறடித்திருப்பார், அவர்கள் எல்லாரும் அங்கே உள்ளனர். எல்லா இடங்களிலும் ஒரு உலகப்போர், இங்கே காற்றுகள் எருசலேமிற்குள் செல்ல வருகின்றது, 214. ஆகவே, அவன், "தாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைப் போட்டுத் தீருமளவும் நிறுத்துங்கள், பிடித்திருங்கள்" என்றான், வேறொரு விதமாகக் கூறினால், "நாம் அவர்களை எல்லா இடத்திலிருந்தும், எல்லா நாடுகளிலிருந்தும் அவர்களைக் கொண்டு வருகிறோம், ஏனென்றால் 144000 பேரை முத்திரை போடத்தக்கதாக நாம் அவர்களை சரியாக உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிடித்துக் கொண்டிருங்கள்" 215. ஆகவே, பதினோராம் மணி நேர மக்கள் உள்ளே வரத்தக்கதாக முதலாம் உலகப் போரானது, அந்த வருடத்தின் பதினோராம் மாதத்தின் பதினோராம் நாளில், அந்த நாளின் பதினோராம் மணி வேளையில் முடிவுற்றது. யூதனுக்கு விடுக்கப்படுகின்ற கடைசி அழைப்பு-! அவன் ஆதியில் அங்கே பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்தாவியை அவன் பெற்று, அதேவிதமாக ஞானஸ்நானம் பண்ணப்படுவான், அதே எல்லாக் காரியங்களும் பெற்றுக்கொள்வான். பதினோராம் மணி வேளை மக்கள் உள்ளே செல்கின்றனர். 216. அவன் ''இப்பொழுது, நாம் முத்திரைப் போட்டு தீருமளவும் பிடித்துக் கொண்டு இருங்கள்," என்றான். "எவ்வளவு நேரமாக நீங்கள் அதைப்பிடித்து கொண்டிருப்பீர்கள்-?" 217. "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரை முத்திரை போட்டுத் தீரும் அளவும் பொறுத்திருங்கள். இப்பொழுது நாம் - நாம் புறஜாதிகளை முத்தரிக்கின்றோம், அவர்கள் ஆயிரமாயிரம் பேர் இந்த பாடுகளின் மூலமும், உபத்திரவங்களின் மூலமும் அவர்கள் முத்தரிக்கப்பட்டனர். ஆனால் ஒரு நிமிடம் பொறுத்திடுங்கள். ஒரு நிமிடம் மாத்திரம் பொறுங்கள்.-! இந்த, நாம் இந்த ஊழியக்காரரை முத்தரிக்கும் வரை அந்த நேரத்தை வரவிடாதிருங்கள்", ஆகவே அவன் 144000 பேரை முத்தரித்தான். 218. பிறகு காற்றுகள் திறந்து விடப்பட்டன. இப்பொழுது, கவனியுங்கள். முதலாம் உலகப் போர் முதற்கொண்டு யூதருக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டாம் உலகப் போரிற்காக ஹிட்லர் எழும்பினான், அவன் ஆரம்பிக்கையில்.... என்ன-? அவன் முழு உலகத்தையே கிழித்து எறிய புறப்பட்டான். அது சரி தானே-? அவன் அதை கிழித்தெறிய முற்பட்டான். ஆம், அவன் அவ்விதம் இருந்தான். 219. எல்லாமே கம்யூனிசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். இங்கே என்னை நீங்கள் சிறையில் அடைக்க முற்பட்டதை நீங்கள் நினைவில் கொண்டிருக்கிறீர்களா-? அந்த இரவிலே, ரிவர் ஹாலில் இதே காரியத்தை குறித்துதான் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆம், ஐயா, தான் "அங்கே மூன்று கொள்கைகள் (TSMS) தோன்றும். அவை எல்லாம் சேர்ந்து ஒரு கொள்கை (ISM) ஆகிவிடும், அந்த கொள்கை ஒரு அடக்குமுறையைக் கொண்டு வந்து இயேசு கிறிஸ்துவை மறுபடியுமாக பூமிக்கு அனுப்பும்," என்று கூறினேன். அது முற்றிலுமாக சரி. அது கம்யூனிசம் ஆகும். ஹிட்லர், நாசி (Nazi) இன்னும் மற்றவை; முஸ்ஸோலினியினுடைய பாஸிசம் கொள்கை, மற்றும் ஹிட்லர், ஸ்டாலின். நான் "அவைகளில் ஒரு காரியம் நிகழ்ந்தேறும். எது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது வடக்கில் உள்ள இராஜாவாய் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்" என்றேன். சகோ.மாஹோனி, அங்கே இருந்து வருபவர்களாகிய நீங்கள், அந்த காரியங்கள் இங்கே எப்படி போதிக்கப்பட்டன என்று நிச்சயமாக நினைவில் வைத்திருப்பீர்கள். 220. ஆகவே அவர்கள் "நீ அதை பிரசங்கித்தால்.... " என்றனர். 221. இந்த N.R,A வைக் குறித்து, நான் "அது மிருகத்தின் முத்திரை அல்ல, நிச்சயமாக அல்ல. அது ஒரு மதச்சம்பந்தமான புறக்கணிப்பு; அது அது அல்ல'' என்றேன். ''இது தான் துன்பத்தின் ஆரம்பம் என்பதை மக்கள் அறிந்து, ஆயத்தம் அடைவதற்காக இது முன்னோடியாக உள்ளது, இங்கே இருந்து தான் நாம் ஆரம்பிக்க வேண்டும். சரியாக இங்கேயிருந்து தான் காலமானது முடிய ஆரம்பிக்கும் நேரம் ஆகும். இப்பொழுது கவனியுங்கள், அந்த நேரம் அங்கே உள்ளது” என்றேன். 222. இப்பொழுது, யூதர்கள் மேல் அடக்குமுறை கையாளப்படுகின்றது, ஒவ்வொரு தேசத்திலும் அவர்கள் மேல் அடக்குமுறை, இன்னல், வருவிக்கப்பட்டு சரியாக எருசலேமிற்குள் விரட்டப்படுகின்றனர். அது சரி தானே-? ஒவ்வொருவரும், அவர்கள் சரியாக... ஆகவே நீங்கள் 144000 பேரை உடையவர்களாய் இருப்பீர்கள். இங்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னுமாய் சற்று பாருங்கள். யோவான்... 223. திரு. போஹனான் இங்கே என்னிடம், "என்னால் அந்த வெளிப்படுத்தின விசேஷத்தை படிக்க முடியவில்லை" என்று கூறினார். அவர் ''அங்கே மணவாட்டி சீனாய் மலையின் மீது நின்று கொண்டு இருந்தாள், அங்கே மணவாட்டி மேலே பரலோகத்தில் இருக்கின்றாள், அங்கே மணவாட்டி இருந்தாள், அந்த தண்ணீர்.... அவளுடன் போரிடத் தக்கதாக வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது" என்றார். 224. நான் ''திரு. போஹனான், முதலாவதாக நீர் செய்த தவறு அதை மணவாட்டி என்று அழைத்தது" என்றேன். நான் "அந்த 144000 பேர்களான அந்த யூதர்கள் சீனாய் மலையின் மீது நிற்பார்கள். மணவாட்டி சரியாக இயேசுவுடன் பரலோகத்தில் இருப்பாள். அந்த வலுசர்ப்பம் மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்களுடன் போரிடத்தக்க தாக தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது" என்றேன். இந்த குழுதான் அங்கே செல்ல வேண்டியதாயிருக்கிறது, அந்த குழு அல்ல, பரிசுத்த ஆவியைப் பெறாமல் மீதமுள்ள ஸ்திரீயின் வித்து, "பரிசுத்தமாக்கப்பட்ட சபை", இதனுடன் தான் அவன் போர் செய்கிறான். பாருங்கள்-? 225. இங்கே மூன்று கோத்திரங்கள், பிரிவுகள் உள்ளன. நீங்கள் எப்பொழுதுமே மூன்றை உங்கள் மனதில் கொள்ளுங்கள். ஆகவே இங்கே நாம், இந்த மகத்தான மீட்கப்பட்ட மணவாட்டியை சுற்றி இந்த 144000 பேர் இருப்பதை பார்க்கிறோம். இங்கே, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற மறுத்தவர்கள் உள்ளனர். சபையானது அவர்களுக்கெதிராக அடக்கு முறையை ரோம சபை அவர்களைத் துன்பப்படுத்தும். ஆனால் மணவாட்டி ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்பட்டு பரலோகத்தில் இருப்பாள். அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றதோ, அவ்விதமாகவே அவர்கள் இருப்பார்கள். பாருங்கள்-? 226. ஆகவே அந்த 144000 பேர் யூதர்கள் ஆவர், தேவனுடைய ஊழியக்காரர். ஆகவே பரிசுத்தாவியின் சுவிசேஷம் அவர்களுக்கு பிரசங்கிக்கப்படும் போது ஆதியில் பெந்தெகோஸ்தே நாளில்-தமிழ்) அவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே போன்று இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள், புறஜாதியின் காலம் முடிவுபெறும், சபையானது முத்தரிக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப்படுதல் வருகின்றது. 227. புறஜாதிகளின் நாட்களிலே, சுவிசேஷமானது எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டு, புறஜாதிகளிடையே ஆணித்தரமாக கூறப்பட்டு, தண்ணீரில் உள்ள எல்லா மீன்களையும் பிடிக்க முயற்சிக்கப்பட்டது, அவைகளைப் பாருங்கள், அந்த பெரிய,.-?, ஆமைகள், தண்ணீர் ஜந்துக்கள் இன்னும் மற்றவை பிடிக்கப்பட்டன. ஆனால் எழுப்புதல் முடிவு பெற்ற உடனே அவை மறுபடியுமாக உலகத்திற்குள் சென்று விடுகின்றன. மீனானது ஏற்கனவே எடுத்து வைக்கப்படுகின்றது. நான் என்ன கூற விழைகிறேன் என்று பாருங்கள்-? 228. சுவிசேஷமானது பிரசங்கிக்கப்படுகின்றது-! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற் காக, அழுதல், கதறுதல், முனகுதல் போன்றவைகளை இப்பொழுது நீங்கள் கேட்பதில்லை. அவர்கள் உள்ளே வந்து நூற்றுக் கணக்கானவர்கள் மேல் கைகளை வைக்க விரும்புகின்றனர். அவர்கள் நடனமாடி, இன்னும் இதைப் போன்று மற்ற காரியங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புகின்றனர். அது எல்லாம் சரியே, ஆனால் அதெல்லாம் வெறும் தன்மைகள் ஆகும். 229. கிறிஸ்து இயேசுவாகிய அந்த நபர் உண்மையானவைகளை மாத்திரம் பிறப்பித்து, கிறிஸ்து வரும் வரை அந்த நபரை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார். அவ்விதம் இருக்கின்றார். ஆகவே தான் இப்பொழுது அழுதல் போன்றவை இல்லை, கதவானது மூடப்படுகின்ற நிலையில் இருக்கின்றது. செய்தியானது சென்றுள்ளது, அது கடைசி முறையாகச் செல்கின்றது, சிலரை தேவனுடைய இராஜ்ஜியத்தில் இழுக்கத்தக்கதாக செல்கின்றது. கதவுகள் மூடப்படுகின்றன-! பிரசங்கிக்கப்படும் போது ஆதியி.... 230. பிறகு அடுத்த காரியம் என்ன-? யூதர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். எல்லா காலங்களிலும் அவர்கள் அதை துன்புறுத்தி அதை கேலி செய்தனர்; ஆகவே அவர்களுக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்படும்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிசேஷகத்தை பெறுகின்றனர். புறஜாதி சபை எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதை மறுத்து, நீதிமானாக்கப்படுதலில் மாத்திரமே நடந்தவர்கள், அந்த வலுசர்ப்பம் (ரோம் அதிகாரம்) வெள்ளத்தை ஊற்றி, அதன் வாயிலாக கம்யூனிசத்துடன் இணைந்து, சபையை துன்பத்தில் ஆழத்தும். அவர்கள் இங்கே சரியாக படம் பிடித்து காண்பிக்கப் படுகின்றனர். 231. ஓ, சகோதரனே, அது வருவதை நாம் காண்கையில், அதன் காரணமாகத் தான் நான் தேவனிடம் "கர்த்தாவே, அந்த யூதர்களிடம் நான் செல்லட்டும். நான் அங்கே ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, அங்கே உள்ள சில புறஜாதிகளிடமும், முகமதியர்க ளுடனும் பணி செய்யட்டும். நான் அங்கே இருந்து இந்தியாவிற்கு சென்று உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, அவருடைய அற்புதங்களுடனும், அடையாளங்களுடனும், அவருடைய ஞானஸ்தானத்தையும், பரிசுத்தாவியையும் அவர்களுக்கு காண்பிக்கட்டும்." என்று கதறுகிறேன். பிறகு நாம் எருசலேமிற்கு வரும் போது,,, 232. சகோதரன் பீலர், இதைக் குறித்து தான் நீர் கேட்டுக் கொண்டிருந்தீர். அவர்கள் எருசலேமிற்கு வரும் போது, அங்கே நின்று, "இப்பொழுது, இயேசு தாம் மரித்தோரிலிருந்து எழுந்த தேவ குமாரனானால், அவர் அன்றைக்கு ஆதியில் செய்தது போல அதே காரியத்தைக் குறித்து அவருக்குத் தெரியும், அன்றைக்குச் செய்தது போல அதே ஜீவனை இன்றைக்கு பிறப்பிக்க முடியும். அவ்வாறே அவர் செய்தாரானால் நீங்கள் அவரை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா-?" என்று கேட்டு, உயிர்த்தெழுதலின் காரியங்களையும், அவருடைய மகத்தான வல்லமையோடு தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை காண்பிப்போம்.. 233.பிறகு அவர்கள் அதைச் செய்யும் போது, "என்னே, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பவர்களே... பெத்தேகோஸ்தே நாளில் விழுந்த அதே ஆவி தான் இங்கே உங்களுக்காக இருக்கிறது" என்று கூறுங்கள். அவர்களில் ஆயிரக்கணக்கான பேர் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். 234. சுவிசேஷமானது சரியாக அந்த நேரத்தில் யூதர்களுக்குச் செல்கின்றது. அங்கே யூதர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் இருக்கும். அதனால் பத்தாயிரக்கணக்கான யூதர்கள்... 144000 பேர் தேவனுடைய இராஜ்ஜியத்தில் கொண்டு செல்லப்பட்டு, முத்தரிக்கும் தூதனால் முத்திரையிடப்படுவர். 225. அவர், கிழக்கிலிருந்து வருகின்றார் என்று நான் நம்புகின்றேன். அவர் தம்முடைய கையில் அவருடைய முத்திரையுடன் அவ்வாறே தான் நம்மிடையே இப்பொழுது வந்திருக்கிறார். பிறகு, ஓ, நான் அங்கே கூட்டிச் சேர்க்கப்பட விரும்புகிறேன். "நான் இங்கேயும், அங்கேயும் அடக்கு முறையை, துன்பத்தை அனுப்பியிருக்கிறேன், என்னால் முடிந்த வரை கடினமாக பிராயசப்பட்டு யூதர்களை விரட்டியிருக்கிறேன். அவர்கள் உள்ளே துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள அநேக யூதர்கள் (அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது) ஏற்கெனவே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆனால் அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற அங்கே நின்று கொண்டிருக்கும் 144000 பேரை நான் கொண்டு இருக்கிறேன்" 236. அங்கே, முத்திரையிடும் தூதன் அந்த 144000 பேரை முத்திரையிட ஆரம்பிக்கையில், புறஜாதி சபையின் கதவுகள் மூடப்படும், யூதர்கள் பரிசுத்த ஆவியை யூதர்களிடம் கொண்டு செல்வர். முழு உலகத்தையும் அசைக்கத் தக்கதான ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருப்பர். அல்லேலுயா-! தேவனுடைய வல்லமையானது யூதர்கள் மத்தியில் வெளிப்படும். ஓ, என்னே இனிமையானது-! வ்வியூ ஓ, என்னே-! 237. ஏசாயாவை நான் எடுக்கட்டும். நம்மிடையே அந்த "தேவ குமாரர்" பற்றி உள்ளது. இப்பொழுது நாம் பார்ப்போம்: இஸ்ரவேலானது.. 238. பாருங்கள் நீங்கள் அதைப் படிப்பீர்களானால், சகோதரனே. நான்... அது ஒன்று சேர்த்து எழுதப்பட்டுள்ளது, சிலவற்றை அவர் அடித்து விட்டு இருக்கிறார். நான் வேறொன்றை எடுக்கிறேன். உங்களால் முடியுமானால், தயவு செய்து (சகோதரன் நெவில் கீழ்கண்ட கேள்வியைப் படிக்கின்றார் - ஆசி) 14. “பட்டயத்தின் முடிவு” என்னும் ஏசாயாவின் கருத்து கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நிகழப்போகும் செழிப்பை குறிக்கின்றதா-?, அல்லது வேறு விதமாக மனிதனால் கொண்டு வரப்படும் ஒன்றா-? (அநேக நவீன மதங்கள் நமக்கு கூறுவது போன்று-!) 239. எனது அருமை சகோதரன் அல்லது சகோதரி, நீங்கள் யாராய் இருந்தாலும் சரி... இது ஒரு மனிதனின் கையெழுத்து போல் உள்ளது. ஆனால், எப்படியாயினும், யாராயிருந்தாலும் சரி, நீங்கள் முற்றிலும் சரியாக கேட்டு இருக்கிறீர்கள்-! மண்வெட்டிகள்.... அல்லது பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள். அது ஆயிர வருட அரசாட்சியை கொண்டு வரும். இந்த நவீன மதக்கோட்பாட்டுக் குழுக்கள் எங்கும் சென்று மக்களுக்கு அறிவை போதித்து தேவனுடைய இராஜ்ஜியத்தில் சேர்க்க முயல்கின்றனர்... அது தேவன் தாமே இயற்கைக்கு மேம்பட்டவராய், இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையுடன், இயற்கைக்கு மேம்பட்டவைகளை விசுவாசித்து, இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை பெற்றுக் கொள்ளும் மக்களிடம் வருவதாகும், அது தேவனுடைய பிள்ளைகளை உருவாக்கும். அல்லேலூயா-! அது, இனி மேல் படித்தல், எழுதுதல், கணிதம் போன்றவையாய் இருக்காது, அது இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுந்த வல்லமையால் தான் இருக்கும். உலகமானது இனி யுத்தத்தைக் கற்பதில்லை. 240. இன்றுள்ள ஒவ்வொரு நாடும், எந்தவொரு அதிகாரமும், ஒவ்வொரு இராஜ்ஜியமும் பிசாசின் கட்டுக்குள் இருக்கின்றது. வேதம் அவ்வாறு கூறுகின்றது. ஆகவே ஒரு நாளில் இவ்வுலகத்தின் இராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருடைய, கிறிஸ்துவினுடைய இராஜ்ஜியங்களாகி விடும், அவர் இப்பூமியில் ஆயிரம் வருடம் அரசாளுவார்; சபையை எடுத்துக்கொள்வார். வேதத்தை வாசிக்கும் என் அருமையானவனே, அது முற்றிலும் சரி, 241. அந்த 144000 பேர் ஊழியக்காரர் ஆவர். மனிதன் எண்ணக்கூடாத திரளான கூட்டம்., ''ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாக ஜனங்கள்'', அவர்கள் புறஜாதிகள் ஆவர். 242. இன்னும் ஒரு நிமிடம், ஒரே ஒரு சிறு காரியம் இருக்கிறது. என்னால் முடியவில்லை. இன்னும் சில நிமிடங்களில் சபை ஜெபத்தை நான் வைப்பேன். இங்கே கவனியுங்கள், இப்பொழுது இது மிக முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும், நாம் துரிதப்படுவோம். நான் பகுத்தறிதலை வைப்பதற்கு பதிலாக, நேராக சென்று விடுவோம். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். வேறென்று இருக்கின்றதா-? நான் இதை மாத்திரம் எடுத்துக் கொண்டு அடுத்த ஞாயிறன்று பார்க்கலாம் என்று நான் யூகிக்கிறேன். 243. நண்பர்களே-! இதன் பேரில் கவனம் செலுத்துங்கள், இது எவ்வளவு அழகாயுள்ளது-! கவனியுங்கள்-! (இந்த கேள்வியைக் கேட்ட நபர் யாராயினும்) இதை நீங்கள் கூர்ந்து கவனிக்க நான் விரும்புகிறேன், அந்த 144000 பேர், பணி செய்கின்ற ஊழியக்காரர் ஆவர். நீங்கள் சரியாக நிலைப்படுத்தி பார்த்து இருப்பீர்களானால், பழைய வேத வசனத்தில்... 224. நிழற்பட நேர்படிவத்தை (positive - பாஸிடிவ்) நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் அதன் நிழலை (Shadow) எப்போதும் கவனியுங்கள். அது சரி. அதைக் கூர்ந்து கவனித்து, அது என்னவென்பதைப் பாருங்கள். இப்பொழுது, சிலுவை முதற்கொண்டு அது எதிர்மாறாக இருக்கின்றது, நீங்கள் நிழல் (Shadow) என்றால் என்ன என்பதை காண வேண்டுமென்றால் நிழற்பட நேர்படிவத்தை, பாஸிடிவ்வை நீங்கள் காணவேண்டும். அங்கே சிலுவை எதிர் நோக்கி சார்ந்திருக்க வேண்டியிருந்தது. சிலுவை எவ்விதம் இருக்கும் என்பதைக் காண நாம் திரும்பிப் பார்த்து நிழலைக் காண வேண்டி இருந்தது; இப்பொழுது அந்த நிழல் என்ன என்பதைக் காண நாம் சிலுவையிலிருந்து பார்க்க வேண்டியதாய் உள்ளது. பாருங்கள்-? கிறிஸ்து அந்த நாளிலே பூமியில் இருந்த போது என்னவாயிருந்தார் என்றும், இப்பொழுது அவர் என்னவாயிருக்கிறார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது தான் அவருடைய நிழல். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதை புரிந்து கொள்கிறீர்களா-? துவக்கத்தில் அது எப்படிப் பட்டதாயிருந்தது என்பதை நான் விவரித்ததை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, நான் அங்கேயிருந்து பார்ப்பேனானால், இது எப்படிப்பட்டதாய் இருக்கும், சிலுவை என்பது என்ன என்பதை அறிந்து கொள்ளத் தான் அந்த நிழல் என்ன என்பதை பார்க்க வேண்டும். 245. இப்பொழுது ஒரு நாளிலே இஸ்ரவேலிலே பாவம் இருந்தது, அங்கே ஒரு மனிதன் இருந்தான்... அது லேவி என்னும் பேரையுடைய கோத்திரம். அவர்கள் தங்கள் பட்டயங்களை உருவி மோசேயுடன் பாளையத்திற்கு சென்று பாவமாய் இருந்த எல்லாவற்றையும் அழித்து போட்டார்கள். அது சரி தானே-? தேவன் பார்த்து, ''நீங்கள் எனக்காக நின்று இதைச் செய்த படியால் உங்களுடைய... எல்லாரும் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். நீங்கள் நேராக சென்று ஆலயத்தில் ஆசாரியர்களாய் இருங்கள். நீங்கள் ஆலயத்திலேயே இருங்கள், மற்றவர் வேலை செய்து பத்தில் ஒரு பங்கை கொண்டு வந்து உங்களைப் பராமரித்து பார்த்துக் கொள்வார்கள்" என்று கூறினார். அது சரியல்லவா-? 246. ஓ, அல்லேலூயா-! அந்த ஆலயம் என்னவென்பதை நீங்கள் காண்பீர்களானால், அந்த லேவியர், மணவாட்டி, யாவர். இப்பொழுது, பாவமானது ஒவ்வொரு தருணத்திலும் எழும்புகையில் லேவியர் தங்கள் பட்டயங்களை உருவுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் பிறந்த மணவாட்டி அங்கே நின்று கொண்டு, "பாஸிடிவ்வில் உள்ள' (positive) இயேசு கிறிஸ்து தான், 'நெகடிவ்விலும் இருக்கின்றார். அதே அவ்வாறு தான். பாவம் இன்னுமாக பாவம் தான், அந்த காரியங்களைச் செய்வது தவறு-!'' என்று கூறுகிறார். அதுசரி, அவர்கள் பட்டயத்துடன் நின்று கொண்டு இருக்கின்றனர். 247. தேவன் "என் பிதாவினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, உள்ளே வாருங்கள்'' என்று கூறுகிறார். அது தான் மணவாட்டி. 248. அங்கே ஊழியக்காரர் உள்ளனர், அந்த ஊழியக்காரர் எங்கே பாளயமிறங்கி இருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த பக்கம் பன்னிரண்டு.. -இல்லை, இந்த பக்கமாக நான்கு, அந்த பக்கமாக நான்கு, அந்த பக்கம் நான்கு, அந்த பக்கம் நான்கு; பன்னிரண்டு கோத்திரங்கள். பன்னிரண்டு கோத்திரங்கள் தான் அந்த 144000 பேர். வெளிப்படுத்தின விசேஷத்தில் பாருங்கள். அந்த நகரத்திற்கு பன்னிரண்டு அஸ்திபாரங்கள் இருப்பதை அவன் காண்கிறான். ஒவ்வொரு வாசலின் மேலும் ஒரு அப்போஸ்தலனுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது, பன்னிரண்டு வாசல்கள், அதைச் சுற்றி பன்னிரண்டு கோத்திரங்கள் (அல்லேலூயா-!) உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. 249. அதன் உள்ளே மீட்கப்பட்டவர்கள் இருந்தனர். அல்லேலூயா-! கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு, மற்றும் அவருடைய ரத்தத்தால் கழுவப்பட்ட எல்லாரும் அவருடைய ஊழியக்காரர்களாய் இருப்பர், அவர்கள் அவரோடு இருப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அவர்கள்... சூரியன் அவர்கள் மீது இனி விழுவதுல்லை, அவர்கள் இனி பசியோ, தாகமோ அடைவதில்லை, முடிவேயில்லாத யுகத்தில் கிறிஸ்துவுடனே கூட அவர்கள் என்றென்றுமாக அரசாளுவார்கள்: இராஜாவும், ராணியாகிய அவர்களும் என்றென்றுமாக அரசாளுவார்கள்-! 250. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென். நான் இவைகளை வைத்துக் கொள்ளுகிறேன், கர்த்தருக்கு சித்தமானால் ஒரு வேளை, இன்றிரவு இவைகளை என்னுடன் கொண்டு வந்து அவைகளுக்கு பதில் அளிப்பேன் அல்லது எப்பொழுதாகிலும் சகோதரனே... நாம் ஒன்றாகக் கூடிப் பேசுவோம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக, உங்களுடைய முழு இருதயத்துடன் அவரை நேசியுங்கள். ஓ, நான் அவரைக் காண விரும்புகிறேன், அவருடைய முகத்தைக் காண விரும்புகிறேன், அவருடைய இரட்சிப்பின் கிருபையின் மூலம் அங்கே என்றென்றுமாக ஜீவிப்பதற்கு; மகிமையின் வீதிகளிலே என்னுடைய குரலை நான் உயர்த்தட்டும்; கவலைகளெல்லாம் கடந்து, வீடு வந்து, என்றென்றுமாக களிகூற (ஓ, என்னே ) இந்த பிரதேசத்திலே, பாடிக்கொண்டே நான் செல்கையில், ஆத்துமாக்களை கல்வாரியை, செந்நிற வெள்ளத்தை நோக்கி காண்பித்து, (சபையை நோக்கி அல்ல, கல்வாரியை நோக்கி) 251. அங்கே தான் நாம் குறித்துக் காண்பிக்கின்றோம்; வேத சாஸ்திரத்தை நோக்கி அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய செந்நிற வெள்ளத்தை நோக்கி. "இரத்தத்தில் தான் ஜீவன் உள்ளது" ஆகவே நம்முடைய ஜீவனாயும், இப்பொழுது நமக்குள்ளே வாசம் செய்யும் தேவனுடைய இரத்தம் அவரே. பிணைக்கும், பிணைப்பு சிறந்ததாய் இருப்பதாக-! 252. நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகையில், ஒரு விசேஷமான ஒரு பாடலை நான் விரும்புகிறேன். சகோதரி கெர்ட்டி, அவருடைய மகள், அவர்களுக்கு விருப்பமானால், இங்கே அவர்கள் வர நான் விரும்புகிறேன். நம்பிடுவாய், இது தான் உண்மையான பழைய பாடல், நீங்கள் அதை எனக்காக பாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அந்த கதவிற்குள் வரும் போதும், எல்லா நாடுகளிலும் இந்த பாடல் என்னைப் பின் தொடர்ந்து வருகின்றது என்பதை நினைவில் கொள்கிறேன். அவர்கள் அதைப் பாட நான் - நான் விரும்புகிறேன், சகோதரி கொட்டி அதை முதன் முறையாக (இசைக் கருவியால்) வாசித்தபோது, அதை நான் முதன் முறையாக கேட்டேன். பால் ரேடர் என்ற எனக்கு அறிமுகமான நபர் இதை எழுதினார். ஆகவே, தாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கச்செல்லும் முன், தேவனுடைய ஆசீர்வாதங்கள் இந்த வியாதியுள்ள மக்களின் மேல் அமர்ந்திருக்க, இந்தப் பாடலை அவர்கள் பாட நான் விரும்புகிறேன். 253. சகோ,நெவில் அவர்களே. நிறைய நேரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டதற்காக எங்களை மன்னியுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் கேள்விகளை விரும்புகிறீர்களா-? நான் விரும்புகிறேன். ஓ, அவைகள் மிகவும் அருமையானவைகள், அவைகள் அருமையானவைகள், வேறு சில கேள்விகளும் இருக்கின்றன. உண்மையாகவே அவைகளில் சில இன்னும் முழுமையாக படித்துப் பார்க்கப்படவில்லை, இன்னுமாக, ஓ, படித்துப் பார்க்க நிறைய உள்ளன. ஆனால் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. 254. இப்பொழுது எல்லாரும் உங்கள் மனதை கிறிஸ்துவின் மீது செலுத்துங்கள், கேள்விகளிலிருந்து தெய்வீக சுகமளித்தலுக்கு நாம் மாறுவோம். இங்கே ஜெபம் செய்யப்பட எத்தனைப் பேர் உள்ளீர்கள்-? ஜெபிக்கப்பட விரும்புவோரின் கரங்களை நான் காணட்டும். அது சரி, நம்முடைய சகோதரிகள் இந்த அருமையான பாடலை பாடி முடித்தவுடன், நாம் அவர்களைக் கொண்டு வந்து ஜெபிப்போம். அவர்கள் ஆயத்தமாகையில், இப்பொழுது உங்கள் முன் இருப்பது தான் அந்த வாக்குத் தத்தம், இது அவருடைய வேதாகமம். (சகோதரி கெர்ட்டியும் அவர்களுடைய மகளும் நம்பிடுவாய் என்று பாடுகிறார்கள் - ஆசி) நம்பிடுவாய், நம்பி..... 255. இப்பொழுது வியாதியஸ்தர்கள், உங்களால் முடியுமானால், இப்பொழுது பீடத்தை சுற்றி நில்லுங்கள். யாவும் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைகூடும், நம்பிடுவாய். 256. (சகோ.பிரான்ஹாம் நம்பிடுவாய் என்று வாய்க்குள்ளாகவே இசைக்கிறார் - ஆசி.) இப்பொழுது, பரலோகப் பிதாவே, இந்த வேத வசனத்திற்காகவும், "நம்பிடுவாய்” என்ற பாடலுக்காகவும் இன்றைக்கு நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். சந்திரரோகத்தைக் கொண்டிருந்த பையனின் தந்தையிடம் "நம்பிடுவாய், ஏனெனில் யாவும் கைகூடும்” என்று நீர் கூறுவதை எங்களால் கேட்க முடிகின்றது. 257. இப்பொழுது தேவனே, பீடத்தண்டை ஜெபிக்கப்படுவதற்காக இம்மக்கள் வருகையில் நெகடிவ்வாகிய நாங்கள், வெறும் நெகடிவாகிய நாங்கள்; அழியாமையின் ஆவியாகிய பாஸிடிவ் எங்களைச் சுற்றிலும் உள்ளது, அது ஒரு போதும் மரிப்பதில்லை என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அது காலாகாலங்களாக இருக்கும். ஒரே ஒரு வழி தான் உண்டு பிதாவே, அது உம்மை அவர்கள் மகிமைப்படுத்துவதேயாகும், என்று எங்கள் உடன் மானிடரான அவர்களுக்கு உதவ, அபிஷேகிக்கப்பட்ட ஊழியனாக இப்பொழுது நாங்கள் செல்கின்றோம். இப்பொழுது இந்த காலையில் வியாதியால் அவதியுற்று பீடத்தை சுற்றி நிற்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொருவருக்கும் சுகத்தை அளிப்பாராக. 258. சற்று முன் சகோதரிகள் "பயப்படாதே, சிறு மந்தையே" என்று பாடியவாறு, உம்முடைய சிறு மந்தையாகிய எங்களுக்கு, கர்த்தாவே, அவ்வாறே உள்ளவர்களுக்கு இராஜ்ஜியத்தை அருளுவது உம்முடைய நல்ல சித்தம் என்பதை நாங்கள் அறிவோம். நீர் எப்போதும் எங்கள் அருகாமையில் இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம், "எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என்னுடைய நாமத்தினாலே கூடியிருப்பார்களோ, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன். அவர்கள் கேட்பது எதுவோ, அதை நான் அவர்களுக்கு அளிப்பேன்" என்று கூறியிருக்கிறீர். 259. ஒருபோதும் தவறாத தேவனுடைய வார்த்தையின்படி இப்பொழுது, கர்த்தாவே ஒவ்வொருவருக்கும் சுகத்தை அருளும். அவர்கள் இங்கே நின்று, காத்து இருக்கின்றனர். நாங்கள் அவர்களை எண்ணெயினால் அபிஷேகித்து, அவர்கள் மீது கரங்களை வைத்து விடுதலைக்காக கேட்க, நாங்கள் செல்கையில், ஒவ்வொருவரும் தங்கள் ஆசனங்களுக்கு, தங்கள் வீடுகளுக்கு உம்மை துதித்துக் கொண்டு திரும்பி (பூரண சுகமடைந்தவர்களாக, இயல்பு நிலையில் உள்ளவர்களாக) சென்று, கர்த்தாவே மறுபடியும் இன்றிரவு திரும்பி வந்து, ஆராதனையில் தாங்கள் சுகமடைந்ததற்காக உம்மைத் துதித்து, தேவனுக்கு மகிமையை செலுத்தட்டும். கர்த்தாவே அதை அருளும். நாம் நமது தலைகளை தாழ்த்துகையில்: 260. சகோதரன். நெவில், உமக்கு விருப்பமானால் என்னுடன் வாருங்கள். சகோ. பிளீமேன், சகோ... மூப்பர், அல்லது இங்கே யாராவது, சகோ. காக்ஸ், நீங்கள் எல்லாரும் வந்து எனக்கு உதவ நான் விரும்புகிறேன். இந்த நேரத்திலே சபையின் எல்லா மூப்பர்களையும் நான் அழைக்கின்றேன். 261. நான் அவர்களுக்காக ஜெபிக்கையில், நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு வந்து உதவி செய்யலாம். இங்கே உள்ள எல்லாரும் உத்தமமாக இருக்க நான் விரும்புகிறேன். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில், நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க நான் விரும்புகிறேன். 262. சிறிது நேரத்திற்கு முன்பு மண்டபத்தை விட்டு வெளியே சென்ற, இரத்த வெளியேற்ற நோயை (hemorrhage) உடைய, ஒரு சிறுவன் அங்கே பின்புறம் உட்கார்ந்திருப்பதை இப்பொழுது நான் காண்கிறேன். கர்த்தராகிய இயேசு இப்பொழுது அற்புதமாக அந்த இரத்தப்பெருக்கை நிறுத்தினார். பாருங்கள். அவருடைய இரக்கம் துதிக்கப்படுவதாக, அவருடைய நாமம் போற்றப்படுவதாக. கடந்த சில நாட்களாக எத்தனைப் பேர் சுகமடைந்துள்ளதைப் பாருங்கள்-! 263. அப்போஸ்தலர் நாட்களில் இருந்த அதே கர்த்தராகிய இயேசு சரியாக இப்பொழுது இங்கிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். அது புறஜாதிகளின் முடிவை ஆரம்பித்தலாகும். இயற்கைக்கு மேம்பட்ட விசுவாசிகளின் மத்தியில் ஒரு பெரிய அசைவு சென்று கொண்டிருக்கிறது, ஏனென்றால் தேவன் இங்கிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். 264. உங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் சரியாக இப்பொழுது இங்கே கூடாரத்தில் இருக்கின்றது, என்பதை எண்ணிப் பாருங்கள், பரிசுத்த ஆவியின் பிரசன்னம் தான் உங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட நிலையாக இருக்கின்றது. நீங்கள் சரியாக இப்பொழுது கிறிஸ்துவிற்குள் மகிமைப் படுத்தப்பட்டுள்ளீர்கள். "எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்''. ஆகவே உங்களுடைய சொந்த மகிமைப் படுத்தப்பட்ட சரீரம், கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக இப்பொழுது சரியாக உங்கள் அருகிலேயே இப்பொழுது உள்ளது, அது எப்படி ஒரு பாட்டரி செல்லிற்குள் (battery) சக்தி செல்கின்றதோ அதே போன்று உங்களுக்கு வல்லமை அளிக்க அது இருக்கின்றது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்கின்றது. உங்களுடைய சரீரத்திற்கு வலிமையை அளிக்க அது இருக்கின்றது, உங்களில் இருக்கின்ற வியாதியிலிருந்து உங்களை சுகப்படுத்தி உங்களை நலமுள்ளவர்களாய் இருக்கச் செய்ய அது இருக்கின்றது, 265. இப்பொழுது, சபை விரும்புமானால், நம்முடைய சகோதரிகளுடன் சேர்ந்து அந்த பாடலை மறுபடியும் பாட நான் விரும்புகிறேன். இப்பொழுது, பீடத்தண்டை உள்ள ஒவ்வொருவரும்.... 266. இப்பொழுது, நண்பர்களே, நான் ஒரு ஏமாற்றுக்காரனாய் இருப்பேன் ஆனால், அதன் காரணத்தை நான் அறியேன். என் முழு இருதயத்துடன் நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, மக்களுக்கு உதவ முயற்சிக்கிறேன். தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு நான் உதவ முற்படுகின்றேன். நான் என் பரலோகப் பிதாவை நேசிப்பேனானால், அவருடைய பிள்ளைகளாகிய உங்களையும் நான் நேசிக்கிறேன். அப்படியில்லை எனில், நான் உங்களை ஏமாற்றுவேனானால், நான் தேவனை ஏமாற்ற முனைந்து உள்ளேன் என்று அர்த்தம், நீங்கள் அவருடைய பிள்ளைகள்; தேவனை யாருமே ஏமாற்ற முடியாது. நான் உங்களுக்கு உதவிடவே முயற்சிக்கின்றேன். 267. அதன் காரணமாகத் தான் தேவன் என்னுடைய முயற்சிகளை ஆசிர்வதிக்கின்றார். ஒருவேளை அவர்கள் மிகவும் ஏழைகளாக இருக்கலாம், அவர்களில் சிலரைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். நான் அவர்களைக் குறித்து வெட்கப்பட்டு என்னுடைய முயற்சிகளுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்பதை தேவன் அறிவார். ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகவும், அவருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் உதவத்தான் நான் எல்லாவற்றையும் செய்கிறேன். இங்கே சரியாக மேடையின் மீது இயேசுவை இக்காலை வேளையில் உங்களுடைய சுகம் அளிப்பவராக ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுடைய ஆசனங்களுக்கும் உங்களுடைய வீட்டிற்கும் நலமுள்ளவர்களாக, சுகமடைந்தவர்களாக திரும்பிச் செல்வீர்கள். 268. இப்பொழுது, இங்கே நூற்றுக்கணக்கானவர்களையும், உலகெங்கிலும் ஆயிரமாயிரம் பேர்களையும் அவர் சுகமாக்குகிறார் என்றால், உங்களை சுகமாக்க அவரால் முடியாதா-? விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அது சரி, சகோதரிகளே, சகோ, நெவில், நீங்கள் வந்து அவர்களை அபிஷேகிக்க நான் விரும்புகிறேன். (சகோ, பிரான்ஹாம் மற்றும் சகோதரர்கள் வியாதியஸ் தருக்காக ஜெபிக்கிறார்கள். சகோதரி கொட்டி, அவர்களுடைய மகள் "நம்பிடுவாய்” என்ற பாடலைப் பாடுகின்றனர் - ஆசி) 269. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... அல்லது சபை, அல்லவெனில், கிறிஸ்துவினுடைய மணவாட்டி. பாருங்கள் அவர் ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார், அவர் பாதம் வெண்கலத்தால் செய்யப்பட்டு இருந்தது, வெண்கலம் உலகத்திலுள்ள சபையின் தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாய் இருக்கின்றது. பாருங்கள், தெய்வீக நியாயத்தீர்ப்பு; அந்த வெண்கல சர்ப்பம், அதைக் குறித்து பேசுகின்றது. இப்பொழுது கவனியுங்கள், அது கம்பத்தின் மீது உயர்த்தப்பட்டது, அது சிலுவைக்கு அடையாளமாக இருக்கின்றது. இப்பொழுது, மூன்று காரியங்கள். 270. இப்பொழுது, கவனியுங்கள். அது என்ன காரணத்திற்காக உயர்த்தப் பட்டது-? அவர்கள் பாம்பு... தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்படைந்து, பாம்புக்கடியிலிருந்து குணமடைவதற்காகத் தான் அது உயர்த்தப்பட்டது. அது சரியல்லவா-? யார் அதை நோக்கிப் பார்த்தார்களோ, அவர்கள் பிழைத்துக் கொண்டார்கள்; பார்க்க மறுத்தவர்கள், மரித்தார்கள். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலை நீங்கள் கையாளாவிட்டால், பாவத்துடன் நீங்கள் எந்த வகையிலும், எந்த வழியிலும் எதிர்த்து செயல்பட முடியாது. உங்களால் முடியாது-! தெய்வீக சுகமளித்தல் இல்லாமல் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வழியே கிடையாது. உங்களால் அது கூடாது. அது சரி. 271. இப்பொழுது, இங்கே பாருங்கள், இங்கே ஒரு மனிதன் இருந்து, அவன் இங்கே நின்று கொண்டு, என்னைப் போலவே அவன் பலமாக தன் கை முட்டியால் பலமாகத் தட்டுவானானால், (பிரசங்க பீடத்தை தட்டுவதைக் குறித்து சகோ,பிரான்ஹாம் கூறுகின்றார்-ஆசி) என்று வைத்துக் கொள்வோம். நல்லது, இப்போழுது அந்த மனிதன் தன் கைமுட்டியினால் தட்டுவதை நிறுத்த வேண்டும் என்றால், அவனுடைய கையை வெட்டி விடத் தேவை இல்லை. பாருங்கள். அல்லது ஒரு வேளை அவன் என்னைத் தன் காலால் உதைத்துக் கொண்டிருக்கின்றான் என்றால், அவனுடைய காலை வெட்டி எடுப்பதில் எவ்விதப் பியோஜனமும் இல்லை. இப்பொழுது, செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அந்த மனிதன் தன் தலை முதற்கொண்டு கொல்லப்படவேண்டும். அது சரிதானே-? நீ தலையைக் கொல்வாயானால், நீ, கை, கால், மற்றும் முழு சரீரத்தையும் கொன்று விட்டிருப்பாய். அது சரிதானே-? நீ தலைமுதற் கொண்டு கொல்வாயானால்-! 272. நல்லது, நாம் இந்த காலையில் இங்கே இருப்பதின் தலையாய காரணம் என்ன-? இதன் எல்லாவற்றிற்கும் தலையாய காரணம் யாது-? இந்த வியாதி, பாவம், வெட்கக்கேட்டை எது பிறப்பித்தது-? பாவம் அதைப் பிறப்பித்தது. 273. பாருங்கள், உங்களிடம் பாவம் என்ற ஒன்று இருக்கும் முன்னர்.... வியாதி அதன் தன்மையாகும் அல்லது பாவத்தைத் தொடர்கின்ற ஏதோ ஒன்றாகும். உனக்கு.., அல்லது வேறுவிதமாகக் கூறுவோமானால், அது பாவத்திலிருந்து வருகின்ற ஏதோ ஒன்று. பாருங்கள்-? எவ்வித பாவமும் இருப்பதற்கு முன்னர், அப்பொழுது வியாதியோ, கவலையோ, முதிர் வயதோ, அழுதலோ, மார்பு நோயோ, பிரிந்த வீடுகளோ, வேறெதுவுமே இல்லவே இல்லை. பாருங்கள், எல்லாம் பூரணமாக இருந்தது. நல்லது, அது வரக்காரணம் என்ன, அது பாவம், பாவம். நல்லது, பிறகு வியாதி பாவத்தைத் தொடர்ந்தது, பிரிந்த வீடுகள், (தன்மைகள்) சீர்கேடான வாழ்க்கை, மற்ற எல்லாமும் பாவத்தைத் தொடர்ந்தது. 274. இப்பொழுது, நீ பாவத்தைக் கொல்வாயானால், அதன் தன்மைகளையும் நீ கொன்றாக வேண்டும். அப்படித் தானே-? உன்னால் - உன்னால்... நீ அதை... நீ இதனுடன் வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்கின்ற வரையிலும் நீ பாவத்தை எதிர் கொள்ள முடியாது, நீ இதனுடன் கோமாளித்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் அது பாவத்தில் முடிவடையும். பாருங்கள்-? இப்பொழுது, நீ பாவத்தைக் கொன்றால், அப்பொழுது நீ முழுவதையுமே கொன்று விடுகிறாய். 275. ஆகவே இப்பொழுது - இப்பொழுது, நீ ''வியாதி" என்று கூறுவாயானால். சில சமயங்களில் நீ மிகவுமாய் வியாதியுற்று, "நான் பாவம் செய்தேனா-?" என்று கூறலாம். 276. ஓ, நீ பாவம் செய்ததால் தான் என்பதினாலல்ல, ஆனால் “வியாதி வருவது. பெற்றோர்களின் அக்கிரமச் செயல் பிள்ளைகளின் மேல் வந்து, அந்த பிள்ளைகளின் பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள், மூன்றாம் சந்ததியிலிருந்து நான்காம் சந்ததியின் மேல் வரும்" என்பதை நினைவில் கொள். அது மனித சரீரங்களை சீரழித்துக்கொண்டிருக்கிறது, பாவமானது அடுக்கப்பட்டு உயர்ந்து கொண்டு இருக்கிறது; ஒழுக்கக் கேட்டினால் ஏற்படும் வியாதியைப் போல (Venereal) ஆகையால் அது தொடர்ந்து வருகின்றதாய் இருக்கின்றது. 277. இங்கே சில காலத்திற்கு முன்பு ஒரு புகழ்பெற்ற மருத்துவரிடம் இரு சிறுமிகளைக் கொண்டு வந்தனர், அவர்கள் குருடாகிக் கொண்டே இருந்தனர், ஆகையால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அப்பொழுது அது ஒழுக்கக் கேட்டினால் ஏற்படும் வியாதி (Venereal) என்று கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சிறு பெண்கள் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்கள். சரியாக இந்தப் பட்டணத்தில் தான், அந்த இருவருக்கும் பார்வை மங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு மூக்கு கண்ணாடி கொடுக்கப்பட்டது. பிறகு அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது, அது அங்கு இருந்தது. அவர்கள் சோதித்து பார்த்தபோது, அது அவர்களுடைய (அந்த இரு பெண்கள் - தமிழாக்கியோன்) முப்பாட்டனார் செய்த தவறாயிருந்தது, பாருங்கள் அங்கே தான் நீங்கள் வருகின்றீர்கள் (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)............... கேள்விகளும் பதில்களும் (COD 3) 54-0103E . கேள்வி:15 இப்பொழுது. மனிதன் மரித்தவுடன் பரலோகத்திற்கு அல்லது அல்லது நரகத்திற்கு செல்வானா, அல்லது நியாயத்தீர்ப்பிற்காக அவர்கள் காத்திருப்பார்களா-? இது ஒரு மிக அருமையான கேள்வி. ஆகவே இது - இதற்கு - அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில் தன்னுடைய ஜீவியம் முடிந்த பிறகு அவன் என்னவாக இருக்கப் போகிறான்-? ஒவ்வொரு மனிதனும் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆர்வம் இருக்கின்றது. நல்லது இப்பொழுது, நான் - என்னைப் பொருத்த வரையில், எனக்கு - எனக்குத் தெரியாது. வேதாகமத்திலிருந்துதான் நான் பதிலளிக்க வேண்டும். 9. ஒரு சமயம் ஒரு பெண், லாஸ்ஏஞ்சலிலிருந்து, சுமார் 35 அல்லது 40 நிமிடங்களாக அல்லது அதற்கு மேலாக, ஒரு நீண்ட தூரத்திலிருந்து என்னிடம் பேசினாள். ஐம்பது டாலர் தொலைபேசி கட்டணம் அவளுக்கு செலவானது என்று யூகிக்கிறேன். அவள் தன்னுடைய புருஷனை விட்டுவிட்டு வேறொரு மனிதனை விவாகம் செய்வது தனக்கு சட்ட ரீதியாகவும் சரியான ஒன்றாகவும் உள்ளது என்று நான் கூற வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தாள். நான் அதைச் செய்யமாட்டேன். இல்லை-! நான், ''இல்லை ஐயா-!'' என்றேன். அவள், “நல்லது, என் கணவர் ஒரு பாவி, இந்த மனிதனோ ஒரு கிறிஸ்தவன்” என்றாள். நான் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நிச்சயமாக நீ விபசாரத்தில் இருப்பாய் என்று கூறினேன். அவள், “நல்லது, நான் எலும்புருக்கி வியாதி (tuberculosis) உடையவள், ஆகவே இந்த மனிதன் எனக்கு இல்லையெனில் நான் வாழவேண்டிய அவசியமே இல்லை'' என்றாள். நான், ''நீங்கள் மோகம் கொண்டிருக்கிறீர்கள். அன்பு, நேசம் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் உங்களால் அவ்வாறு இருக்க முடியாது, அவ்வளவுதான், ஏனெனில் அவர் தான் உங்கள் கணவர். மரணம் உங்களை பிரிக்கும்வரை அவருடன் வாழ நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதிலிருந்து வேறெதுவாயிருந்தாலும் அது விபசாரம் ஆகும் என்றேன். அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். நான் கூறினேன் “ஸ்திரீயே, அதில்...'' அவள், ''நீர் மாத்திரம் அது சரி என்று என்னிடம் கூறினால் போதும்“ என்றாள். நான், ''நான் அதைச் செய்யமாட்டேன்'' என்றேன். நான் கூறினேன், “என்னால்...'' அவள், “ஆம், சகோதரன் பிரன்ஹாம், நாங்கள் உம்மிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்'' என்றாள். நான், “அப்படியானால் நான் உங்களுக்கு என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகிறேன். தேவன் என்ன கூறினாரோ அதைத் தவிர வேறு எதையும் என்னால் கூறமுடியாது” என்றேன். அது உண்மை என்று தேவன் கூறினார். ஆகவே அது சரியாக அவ்விதமாகத்தான் இருக்கும். பாருங்கள்-? நான் அந்த விதமாகத் தான் அது - அது இருந்தாக வேண்டும், அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டும்'' என்று கூறினேன். 10. ஆகவே இப்பொழுது, இந்த கேள்விகளில், அவ்விதமாகத்தான் இவைகள் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இப்பொழுது, அது எப்பொழுது... இப்பொழுது, இதில், இன்றிரவு இந்தச் சிறிய ஜனக்கூட்டத்தில், ஒருக்கால் எல்லா விதமான வித்தியாசமான கருத்துக்கள் இருக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அவையெல்லாம் சரியானது தான் என்று நாங்கள் நினைக்கிறோம், அவைகளில் ஒவ்வொரு கருத்தும் நல்லது தான், அது ஒரு... ஆனால் இப்பொழுது, நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் யாராவது ஒருவரை நாங்கள் கொண்டிருக்க... இந்த வாத்துக்கள், குள்ளவாத்துக்கள், வேறெதுவாயிருந்தாலும், தேனீக்கள் - ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவன் உண்டு. ஒரு ராணி தேனி மரித்தால், சம்பவிப்பதென்ன என்று நீங்கள் அறிவீர்கள். ஒரு வழிநடத்தும் குள்ள வாத்து மரித்தால், மற்றொன்றை அவைகள் தங்களுக்கென பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த - அவைகளுக்கு ஒரு தலைவன் இருக்கத்தான் வேண்டும். ஆகவே மனிதனும் ஒரு தலைவனைக் கொண்டிருக்கத்தான் வேண்டும்; அந்த தலைவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் சபையில் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், அதற்குப் பிறகு, தீர்க்கதரிசிகளையும், இன்னும் மற்றவைகளையும் வைக்கின்றார். 11. சில சமயங்களுக்கு முன்பாக யாரோ, ஒருவர் “என்ன, சகோதரன் பிரன்ஹாம், எங்களுக்கு போதிக்க யாரும் அவசியம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் வரும்போது, போதிக்க யாருமே எங்களுக்கு தேவையில்லை'' என்றார். ''உங்களுக்கு போதகம் தேவையில்லை என்று வேதாகமம் கூறுகின்றதே” என்றார். நான் ''அப்படியானால் அந்த அதே பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை வைத்தது ஏன்-?'' என்று கூறினேன். (பாருங்கள், பாருங்கள்-?) அவர் சபையை ஒழுங்கில் வைத்திருக்கின்றார். இதோ நாம் போதகர்களை கொண்டிருக்கத்தான் வேண்டும். அது சரி. ஆனால் நீங்கள் மேலும் கொண்டிருக்க... உங்களுக்கு ''விபசாரம் செய்யாது இருப்பாயாக; சத்தியம் பண்ணாதிருப்பாயாக, எடு...'' என்று கூறி உங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை. அதை நீங்கள் ஏற்கெனவே அறிந்து இருக்கிறீர்கள். அதை நீங்கள் செய்வது தவறு என்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய உங்கள் மனசாட்சியே உங்களுக்கு கூறும். ஆனால் இப்பொழுது வேத வசன போதனையைப் பொறுத்த வரையில், அதற்கு ஒரு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒன்று தேவையாயிருக்கிறது. அது சரி. தேவன் சபையை, அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், சுகமளிக்கும் வரங்கள், அற்புதங்கள், இன்னும் மற்றவைகளினால் ஒழுங்கில் வைத்திருக்கிறார். அவர் சபையை ஒழுங்கில் வைத்து, போதகர்களையும், இன்னும் மற்றவைகளையும் அங்கே வைத்து தம்முடைய சபையை வழிநடத்தி இலக்கை நோக்கி செலுத்துகிறார். ஆகவே இந்த நாம் - நாம் கூறின விதமாக, இயேசு பூமியின் மேல் தம்முடைய சரீரமாக... அவருடைய சரீரம் அசைகையில், பூமிக்கு பிரதிபலிக்கும் ஒரு நிழலாக மாத்திரமே அது இருக்கிறது. அதனுடன் அது அசையும். 12. இப்பொழுது அநேக ஜனங்கள்... ஓய்வு நாள் ஆசரிக்கும் ஜனங்கள், ஒரு மனிதன் மரிக்கும் போது அவன் சரியாக கல்லறைக்குள் சென்று, ஆத்துமா, சரீரம் மற்றவையோடு உயிர்த்தெழுதல் வரை அங்கேயே தங்குகிறான் என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள்... அவர்கள் அதை “ஆத்துமா உறங்குதல்'' என்று அழைப்பார்கள். நல்லது, அது சரிதான். அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்திருக்கும் வரையில் அது பரவாயில்லை, அது அவர்களை புண்படுத்தாது. ஆனால் இப்பொழுது வேத வசனங்களை பொறுத்த வரையில், அந்த நபர் மரிக்கும் போது, அவன் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், அவன் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், மரிக்கத்தக்கதாக அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்-? அவன் நேராக தேவனுடைய பிரசன்னத்திற்குச் செல்கிறான். ஆகவே அவன் நியாயத்தீர்ப்பில் இருக்க வேண்டிய அவசியமேயில்லை, ஏனெனில் அவன் ஏற்கெனவே... பாருங்கள்-? கிறிஸ்து எனக்கு செய்ததற்காக நான் காத்திருக்க வேண்டியதில்லை. இப்பொழுது, நான் ஒரு பாவியாக இருந்தேன், ஆனால் கிறிஸ்துவினுடைய நியாயத்தீர்ப்பு... இங்கே இங்கே சில வார்த்தைகளில் முழு காரியம், “அதை நீ புசிக்கும் நாளிலே, அந்த நாளிலே நீ சாவாய்'' அது அவ்வளவுதான். 13. இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வதைத் தவிர வேறு எதையுமே அவரால் செய்ய முடியாது, ஏனெனில் அவர் தேவன். நல்லது அப்படியானால், அவரால் முடியாது. அப்படியானால், அவர்... நீ தேவன் இடமிருந்து வேறு பிரிக்கப்படுகிறாய். அந்த... ஆகவே அப்படியானால், நீ பாவத்தில் பிறந்து, பொய் பேசுகிறவனாய் உலகத்திற்கு வந்தாய். ஆதலால் நீ பிறக்கும் போது, சுபாவத்தின்படி நீ ஒரு பாவி. அதைக் குறித்துச் செய்யும்படியாய் உலகத்தில் உங்களுக்கு எதுவுமே கிடையாது. என்னைத் தானே அல்லது உங்களையே இரட்சித்துக் கொள்ள என்னால் செய்ய கூடியது ஒன்றுமேயில்லை. அது கிறிஸ்து நமக்காக தேவனுக்குள் என்ன செய்தார் - அல்லது தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்கு என்ன செய்தாரென்பதே. பாருங்கள்-? அப்படித்தானே, நல்லது, ஒருக்கால் நான் இதைச் சிந்தித்தாலோ அல்லது நான் இதைச் செய்தாலோ என்பதல்ல அது. அவர் அதைச் செய்தாரா என்பதே. நல்லது, இப்பொழுது, நாம் அவருக்குள் இருக்கிறோம். அப்படியானால் அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்தார்; அவர் நியாயத்தீர்ப்பை எடுத்தார். ஆகவே அவர், பாவத்திலிருந்து குற்றமற்றவராக, பாவத்தை அறியாதவராக இருந்தும் இன்னுமாக நமக்காக பாவமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும் வரைக்கும், நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலை ஆகி இருக்கிறீர்கள். ''நான் இரத்தத்தை காண்கையில் உங்களைக் கடந்து போவேன். பாருங்கள், பாருங்கள்-? அது தான். உங்களை விடுதலையாக்கும் அந்த இரத்தம். 14. இப்பொழுது, பாவி ஒருக்காலும்... பாவி நியாயத்தீர்ப்பில் நிற்கத்தான் வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் இராது. அது ஒரு... அது கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் உலகத்தை சுற்றி இருக்கிற ஒரு வானவில் அல்லது ஒரு - ஒரு வட்டம் தான் ஆகும். இங்கே நீங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறீர்களோ... கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாகவே அன்றி தேவன் வேறு எந்த வழியிலாவது இன்றிரவு பூமியை இந்த நிலையில் நோக்கிப் பார்ப்பாரானால், ஒரு வினாடியில் அவர் அதை அழித்துப் போடுவார். அவர் அதைச் செய்தாக வேண்டும், நிச்சயமாக அவர் செய்துத்தான் ஆகவேண்டும். அங்கேதான் நியாயத்தீர்ப்புகள் வருகின்றன. இப்பொழுது, இல்லையென்றால் - அல்லது இங்கே கீழே ஒரு மனிதன் எவ்வளவு காலமாக இருக்கும் வரை, அந்த மனிதன் ஒரு குடிகாரனாகவும், ஒரு சூதாட்டக்காரனாகவோ அல்லது ஒரு மோசமான ஒரு அவிசுவாசியாக இருந்தாலும், தேவனுடைய இரக்கங்கள் இன்னுமாக அவனுக்காக பிராயச்சித்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு ஸ்திரீ, அவள் என்னவாயிருந்தாலும் சரி, ஒரு விபசாரியாகவோ, அல்லது என்னவாய் இருந்தாலும், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் இன்னுமாய் அவளுக்காக பிராயச்சித்தம் செய்துக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆத்துமா இந்த சரீரத்தை விட்டுச் செல்கின்ற மாத்திரத்தில் அவள் அதற்கு புறம்பாக கடந்து செல்கிறாள், அவள் இரக்கத்தின் மேல் சென்று நியாயத் தீர்ப்புக்குள் செல்கிறாள். தேவன் ஏற்கெனவே அவளை நியாயந்தீர்த்து விட்டார். அது காரியத்தை முற்றுப்பெறச் செய்கிறது. அது அவளுக்குச் செய்யப்படுகிறது. அவள் நியாயந்தீர்க்கப்படுகிறாள். அவள் நியாயந் தீர்க்கப்படுகிறாள். உங்கள் பாவங்களுக்காக அங்கே இருக்கும் தேவனுடைய பிராயச்சித்த பலியை நீ செயல்படுத்தும் விதத்தைப் பொருத்து நீ உன்னைத் தானே நியாயந்தீர்த்துக் கொள்கிறாய். பாருங்கள்-? நீ உன்னைத் தானே நியாயந்தீர்த்துக் கொள்கிறாய். அவர் உன்னை மன்னிக்க மாத்திரமே போதும் என்று அவரைக் குறித்து கணக்கிடாதே. பாருங்கள்-? அவர் உங்களை மன்னிப்பாரென்று நீங்கள் எண்ணினால், உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுங்கள், பிறகு அவர் உங்களை மன்னிப்பார். 15. அப்படியானால் ஒரே ஆவியினால் (கவனியுங்கள்) ஒரே சரீரத்திற்கு உள்ளாக நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். அந்த சரீரம் தேவனால் எழுப்பப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நீதியாக்கப்பட்டு பரலோகத்தில் வல்லமையோடும் மகத்துவத்தோடும் அவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார், ஆதலால் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள், நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையானவர்கள், உயிர்த்தெழுதலில் வருவார்கள். இப்பொழுது, ஆனால் இப்பொழுது நாம் மரிக்கையில் நாம் இப்பொழுது மரிக்கையில், ஒரு வானத்துக்குரிய சரீரத்தில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்திற்கு நேராகச் செல்கிறோம். அங்கே நான் சகோதரன் நெவிலைச் சந்திப்பேனானால், இப்பொழுது நாங்கள் இருவரும் மரித்தால், இப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரத்தில் நான் அவரைச் சந்திப்பேன்; நான், ''வாழ்த்துக்கள் சகோ.நெவில் என்று கூறி அவருடன் பேசுவேன். நான் அவருடைய கையை குலுக்க முடியாது; அவர் ஒரு வானத்துக்குரிய சரீரத்தில் இருக்கிறார். நான் அவருடன் பேச முடியும்: இங்கே எப்படி இருக்கிறாரோ அவ்விதமாகவே அவர் காணப்படுவார். நானும் இவ்விதமாகவே இருப்பேன். ஆனால் நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவோம், ஆனால் எங்களால் ஒருவரையொருவர் தொட முடியாது, ஏனெனில், பார்த்தல், ருசித்தல், உணர்தல் முகர்தல் மற்றும் கேட்டல் ஆகிய ஐந்து புலன்களில் ஒன்றாகில் எங்களிடத்தில் இருக்காது. பாருங்கள்-? ஆனால் நாங்கள் அழியாமையில் இருப்போம், எங்களால் ஒருவரை ஓருவர் பார்க்க முடியும். நாங்கள் தேவனுடைய பீடத்தண்டையில் ஆசீர்வதிக்கப்பட்ட பரிமாணங்களில் ஜீவிப்போம். யோவான் பீடத்தின் கீழே ஆத்துமாக்கள் மறுபடியுமாக பூமிக்கு வந்து தங்கள் மேல் வஸ்திரம் பெற்றுக் கொள்ள ''எவ்வளவு காலம், ஆண்டவரே, எவ்வளவு காலம்“ என்று கதறியதை யோவான் கண்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா-? 16. இப்பொழுது பரிசுத்த ஆவியின் வடிவில் நம்மில் இருக்கும் இயேசு, அவருடைய வானத்திற்குரிய சரீரம், பரிசுத்த ஆவி, மகிமையுள்ள சரீரத்தில் வரும் போது, நாம் அவருடன் அவரைப் போல மகிமைப்படுத்தப்படுவோம். நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதை காண முடிகிறதா-? பிறகு நான் அவருடைய கையைக் குலுக்கி ''இதோ, சகோ.நெவில்'' என்று கூறுவேன். பிறகு நாங்கள்... கவனியுங்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார் அவர்கள் தங்கள் இராப்போஜனத்தை எடுத்துக் கொண்டிருந்தனர், அவர், ''நான் இந்த திராட்சப்பழ ரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்ஜியத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதை நான் பானம் பண்ணமாட்டேன்“ என்றார். அது சரியா-? பாருங்கள்-? அதோ அது. ஆதலால் நாம்... மரித்தோர் மரிக்கும் போது... தேவனுடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு நீதிமானாக்கப்பட்ட நபராய், அழியாமை கொண்டவனாய் அவருடைய பிரசன்னத்திற்குள் சென்று திரும்ப வருகின்ற - அந்த நாள் வரைக்கும் சமாதானத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பரிமாணங்களில் ஜீவித்துக் கொண்டிருப்பான். 17. இப்பொழுது, நீதிமானாக்கப்பட்ட ஜனங்கள் மரித்தபோது தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்லாத காலம் ஒன்று இருந்தது. அது பழைய ஏற்பாட்டில் இருந்தது. அவர்கள் பரதீசு என்னும் இடத்திற்குள் சென்றனர், நீதிமான்களின் ஆத்துமாக்கள் பரதீசில் காத்திருந்தன. நீதிமான்களின் ஆத்துமாக்களை தேவன் வைத்திருந்த ஸ்தலம் தான் பரதீசாகும்; இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படும் வரையில் இது ஒரு சொப்பன இடம் போன்றிருந்தது. ஏனெனில் காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடவில்லை, அது பாவத்தை மூடிக் கொண்டு இருந்தது. ஆனால் இயேசுவின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடுகின்றது. நீங்கள் கவனியுங்கள் அவருடைய - கல்வாரியில் அவர் மரித்த போது... அவர் வந்த போது, காளைகள், ஆட்டுக்கடாக்கள், மற்றும் கடாரி இவைகளின் இரத்தத்தின் பரிகாரத்தின் கீழ் மரித்த அந்த மரித்த பரிசுத்தவான்களை கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர்கள் நகரத்திற்குள் பிரவேசித்தார்கள், (ஓ-!) அநேகருக்கு காணப்பட்டார்கள். ஓ, அதைத் தான் நாம் சற்று வரைவோமென்றால், அது எவ்வளவு அழகான ஒரு காட்சி-! அவர் மரித்தபோது இயேசுவை கவனித்துப் பாருங்கள். 18. இங்கே, நான் அடிக்கடி கூறுவது போல, இங்கே சபையில், இங்கே ஒரு பட்டியல் இருக்கிறது. இங்கே மானிடப் பிறவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் இந்த இருட்டு மற்றும் கறுப்பு, குற்ற உணர்வான மகத்தான கூட்டுத்திரளாக உள்ளனர். இங்கே அழிந்து போகக்கூடிய மானிடப் பிறவிகள் வாழ்கின்றனர். கீழ் உலகத்தில் இருந்தோ அல்லது மேல் உலகத்திலிருந்தோ ஒரு பாதிப்பு இல்லாமல் நீ இங்கே ஒரு ஆவிக்குரிய இனமாக, பாவியாகவோ அல்லது பரிசுத்தவானாகவோ, இருக்க முடியாது. இங்கிருந்து பாதிப்பு உனக்கு உண்டாயிருக்குமானால், நீ மேலிருந்து வந்தவன். உன்னுடைய வானத்திற்குரிய சரீரம் மேலே இங்கே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நீ ஒழுக்கக்கேடான, மாய்மாலமிக்க, இரண்டுங்கெட்ட நிலையில் இருந்தால், உங்களுடைய வானத்திற்குரிய சரீரம் இங்கே கீழேயே உள்ளது, அது மேலே உள்ளது என்று நீ எவ்வளவு தான் சிந்தித்தாலும் சரி; ஏனெனில் நீ கொடுக்கும் கனியானது ஜனங்களுக்கு முன்பாக நீ எங்கிருந்து வருகின்றாய் என்பதை நிரூபிக்கிறது. ஆதலால் வேறு எங்கேயோ நீ எப்படியிருக்கிறாயோ அவ்விதமே நீ இங்கேயும் இருக்கின்றாய். நீ இங்கேயிருந்து கடந்து செல்லும் போது அங்கே உன் ஜீவியமானது உன்னுடைய மரபு வழியை பிரதிபலிக்கிறது. உங்களுக்கு புரிகின்றதா-? 19. சரியாக நாம் இப்பொழுது (ஓ, அதைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கையில்) சரியாக இப்பொழுது நாம் தேவனுடைய பிரசன்னத்தில் மகிமைப்படுத்தப்பட்டு, மறுபடியும் பிறந்த விசுவாசிகளாயிருக்கிறோம். ''இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நமக்கென்று ஒன்று ஏற்கெனவே மகிமையில் காத்துக் கொண்டிருக்கிறது“. வேறெங்கேயோ அல்ல, சரியாக இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த பூமிக்குரிய சரீரங்கள் அந்த அழியாமையால் உடுத்துவிக்கப்பட வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது சரியா-? வியாதி மற்றும் பிணிகள் மற்றும் வலிகள், மற்றும் ஏமாற்றங்கள் மற்றும் இருதயவலிகள், மற்றும்... ஓ, இந்த பழைய பூச்சி நிறைந்த வீடு மூடப்படும் போது நான் மகிழ்ச்சி கொள்வேன், நீங்களும் தானே-? ஆம், ஐயா-! நாம் வீட்டிற்குச் செல்வோம். அது சரி. இந்த... நாம் - தரித்துக் கொள்ள தவிக்கிறோம், ஆவிக்குரிய தவிப்பு. ஓ, சுற்றிலுமிருக்கின்ற எல்லா வேதனையும், பாவம், நாற்றம், அழிவுள்ள ஜீவியம், ஏமாற்றம் மற்றும் எல்லாமும் கொண்ட கூட்டுத்திரளை நீ நோக்கிப் பார்ப்பாயானால், நான் “ஓ, தேவனே, இது இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்-?'' என்று நினைப்பேன். 20. இந்த நாட்களில் ஒன்றில் என்னுடைய கடைசி பிரசங்கத்தைச் செய்து, அதைப் போல வேதாகமத்தை கீழே வைத்து விட்டு, வீட்டிற்குச் செல்வேன். ஓ, அது என்ன ஒரு சமயமாக இருக்கும். ஆகவே இந்த பூமிக்குரிய கூடாரம் இங்கே முடிக்கப்படும்போது, நான் ஒரு வினாடிக்குள் மறுபுறம் செல்வேன்; நீங்களும் அவ்விதமாகத்தான். ஓ, என்னே-! அவர்கள் கூறியதில் ஆச்சரியம் இல்லை. இந்த மாம்ச அங்கி, கீழே போட்டு மேல் எழும்புவேன் நான், நித்திய பரிசை பிடித்துக் கொள்வேன்; காற்றினூடாக செல்லும் போது சத்தமிடுவேன்... (நிச்சயமாக, மேலே செல்லும் போது) இப்பொழுது, அது எங்கேயிருக்கிறது-? நாம் அதை எப்பொழுது பெற்றுக் கொள்வோம்-? இப்பொழுது-! “எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்''ஆகவே நம்முடைய மகிமைப்படுத்தப்பட்ட, அழியாமை கொண்ட சரீரம் சரியாக இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாம் வரத்தக்கதாக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் உணரமுடிகிறதா-? 21. நீங்கள் அறிவீர்களா-? ஒரு குழந்தை பூமியில் பிறக்கின்ற போது, பிரசவிப்பதற்கு முன்பு அது உயிருள்ளதாயிருக்கின்றது. ஆனால் ஆனால் அது இன்னும் பிரசவிக்கப்படவில்லை. அந்த குழந்தை வரும்போதே - அது - அது ஆரம்பிக்க - பிறக்கும்போது... அதன் நுரையீரல்கள் மூடப்பட்டு, அது மரித்துவிடுகின்றது. அதன் தசைகள் உதறுகின்றன, நடுங்கின்றன. ஆனால் முதல் கேள்விகளும் பதில்களும் காரியம் என்னவெனில், இதைப் போன்று ஒன்றோ அல்லது இரண்டு முறை கையினால் அதைத் தட்டும் பொழுது... (சகோ.பிரன்ஹாம் விளக்கிக் காண்பிக்கிறார்-ஆசி) அது (சகோ. பிரன்ஹாம் திணறுதல் என்ன என்பதை காண்பிக்கிறார்-ஆசி) தன் சுவாசத்தை இழுத்துக் கொள்கின்றது. காரியம் என்ன-? ஒரு தாயினுள் மாம்ச சரீரம் உருவாகும் போதே, அந்த குழந்தை பூமியில் பிறக்கும் போதே அதை ஏற்றுக் கொள்ள ஆவிக்குரிய சரீரம் காத்திருக்கின்றது. இந்த ஆவிக்குரிய சரீரத்தின் பிறப்பு எவ்வளவு நிச்சயமோ அதேபோல அது இவ்வுலகத்தைவிட்டுக் கடந்து செல்கையில் மாம்ச சரீரம் அதை ஏற்றுக் கொள்ள காத்திருக்கின்றது. பாருங்கள்-? எதிர்மறையாக, மறுபடியும் சரியாக ஏதேன் (பாருங்கள்-?), சரியாக அங்கே செல்கிறது. 22. இப்பொழுது, அங்கே தேவன்... அதே போன்று, அது - அது மரணத்தினின்று எல்லா கூரையும் வெளியே அடித்துத் தள்ளுகிறது. எனவே தான் பவுல் நின்று ''மரணமே உன் கூர் எங்கே-? பாதாளமே உன் ஜெயம் எங்கே-?'' என்று கூறினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவன் நம்முடைய, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். ஆம், நண்பர்களே-! இந்த பூமிக்குரிய கூடாரம் ஒழிந்து போனாலும் ஏற்கெனவே காத்துக் கொண்டு இருக்கிற ஒன்றை நாம் கொண்டிருக்கிறோம், ஆதலால் அதை குறித்து மறந்துவிடுங்கள். இப்பொழுது உனக்கு, நண்பனே அதைக் கேட்ட நீ ஒரு பாவியாயிருந்தால், தேவன் உன் மீது இரக்கமாயிருப்பாராக. ஆம், ஐயா இப்பொழுது நீ ஆக்கினைக்குள்ளாக இல்லை, இங்கே இல்லை, இல்லை-! நீ செழிப்பாய், சென்று கொண்டேயிரு. ஆகவே அது எல்லாம் தேவனுடைய இரக்கங்கள் மூலமாகவே ஆகும். அவைகள் எல்லாம் தேவனுடைய இரக்கங்கள் மூலமாக நீ செழித்து நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். அது உண்மை. ஆனால் இந்த நாட்களில் ஏதாவதொன்றில், நீ ஒரு பாவியாயிருந்து உன்னுடைய ஆத்துமா வெளியே நழுவும் போது, அது நியாயத்தீர்ப்புக்குச் சென்று ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும், ஆகவே பிறகு, நீ புறம்பாக்கப்படுவாய், நீ மறுபடியுமாக இந்த பூமிக்கு கொண்டு வரப்படும் நாள் வரைக்கும் வேதனைக்குட்படுத்தப்பட்டிருப்பாய். நீ ஒரு அழியாத சரீரத்தை பெறுவாய், மரிக்காத ஒரு அழியாத சரீரம், பிறகு அழுகையும் கூக்குரலும் பற்கடிப்பும் இருக்கின்ற புறம்பான இருளுக்குள் தள்ளப்படுவாய், அதில் ஒரு புழு கூட சாகாது, நெருப்பும் அவியாது, வரவிருக்கின்ற எல்லா காலங்களினூடாக நீ வேதனைக்கு உட்படுத்தப் படுவாய். இயேசு அதைக் கூறினார். அது ஒரு கடுமையான காட்சி, ஆனால் அதைத்தான் வேதாகமம் கூறுகின்றது. 23. தேவன் பாவத்தைக் கடிந்து கொண்டு அதற்கு எப்படிப்பட்ட ஒரு கிரயத்தை செலுத்த வேண்டியதாயிருந்தது, அந்த அநீதியான ஆவிகள் மறுபடியுமாக கட்டவிழ்க்கப்பட்டால் எப்படியாகயிருக்கும்-? கடந்த 6000 வருடங்களாக நாம் கொண்டிருந்ததைப் போன்று வேறொரு காரியத்தை நாம் கொண்டிருப்போம். அது சரியா-? மற்றொரு தருணம் என்பது இருக்கவேயிருக்காது. இப்பொழுது நீங்கள் ''நல்லது, நீங்கள் கல்லறைக்கு சென்றால் நீங்கள் - நீங்கள் பாதாளத்திற்கு செல்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்“ என்று கூறலாம். உங்கள் சரீரம் பாதாளத்திற்கு செல்கிறது, அது சரி. பாதாளம் என்பதற்கு ”வேறு பிரித்தல்'' என்று அர்த்தம். மரணம் என்றால் “வேறு பிரித்தல்” என்று அர்த்தம். உங்கள் சரீரம் மரிக்கிறது, வேறு பிரிகிறது. நீங்கள் இங்கே உங்கள் பிரியமானவர்களிடமிருந்து சென்றுவிடுகிறீர்கள், ஆனால் அதைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. “அன்றியும் ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது”, பாருங்கள். 24. இப்பொழுது, நீங்கள் - தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டுமென்றால், நீங்கள் கோபமுள்ள தேவனால் நியாயந்தீர்க்கப்படப் போகிறீர்கள். ஆகவே தேவன் - அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டார். ஆகவே நீங்கள் அங்கே செல்லும் முன்பே உங்களுடைய நியாயத்தீர்ப்பு என்னவென்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே செய்யப் படவேண்டிய காரியம் என்னவென்றால் இரட்சிக்கப்பட்டு, இந்த மகிமையான காரியத்தை கொண்டிருத்தல்... கவனியுங்கள், நான் - என்னுடைய ஆவி... கவனியுங்கள், நாம் மரித்துப் போன ஏதோ ஒன்று அல்ல; நாம் உயிரோடிருக்கிறோம். என்னுடைய - இங்கு இருக்கின்ற இந்த மேஜை - என் விரலிலுள்ள ஜீவனை இந்த பலகை கொண்டிருக்குமானால், அந்த மரணம் - அது அசையத்தக்கதாக ஒரு சக்தியை கொண்டு இருக்குமானால், என்னுடைய விரல் அசைவது போல அது அசையும். அந்த விதமான பொருளைக் கொண்டு நாம் உண்டாக்கப்படவில்லை. நாம் அணுக்கள், ஜீவனால், நார்ப் பொருளால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம், இவையெல்லாம் கட்டுப்படுத்த ஒரு ஆவி அங்கேயிருக்கிறது. அது எவ்வளவு வேகமாக பயணிக்க வேண்டும் என்பது பாருங்கள். இங்கே பாருங்கள்; என் கை அதைத் தொடுகிறது. இப்பொழுது சீக்கிரத்தில்... அங்கே ஒரு எதிர்மறை (negative) மற்றும் ஒரு நேர் எண் (positive) விளைவு ஏற்படுகிறது. என் விரல் அதைத் தொட்டவுடன், அதை உணர்கிறது. அது மிக வேகத்தில் என் மனதிற்கு செல்கிறது, என் மனது, “அது குளுமையாய் இருக்கிறது'' என்று கூறுகிறது. அது திரும்பிவிடுகின்றது. அது எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதை பாருங்கள்-? அது எண்ணத்தை விட வேகமானது, எந்த ஒன்றையும் விட வேகமான செயல் அங்கே இருக்கின்றது. அது என்ன-? அங்கே அதில் ஏதோ ஒன்று உயிரோடிருக்கிறது, அந்த நரம்பு மனதின் மேல் கிரியை செய்கின்றது. நான் என்ன கூறமுனைகிறேன் என்று தெரிகிறதா-? நரம்பு அதை தொடுகிறது, அதை உணர்கிறது, மனதற்கு ”அது குளுமையாக இருக்கிறது'' என்று கூறுகிறது. மனது அது குளுமையாய் இருக்கிறது என்று கூறுகிறது, ஏனெனில் அதை நரம்பு உணர்ந்து கொள்கிறது. ஓ என்னே-! நீங்கள் ஒப்பனையைக் குறித்து பேசுகிறீர்கள். 25. ஆகவே பிறகு அதனுடைய எல்லாம்... நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் தேவன் எவ்வளவு வேகமாக அறிந்து கொள்கிறார். நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், அவர் அதை அறிந்திருக்கிறார். ஆதலால் ஒரு விசுவாசி மரிக்கையில் அவன் தன்னை உண்டாக்கினவராகிய, தன்னுடைய தேவனின் பிரசன்னத்திற்குள் சென்றுவிடுகிறான். ஆகவே பாவியானவன், அவன் மரிக்கையில், தன்னுடைய முடிவான இடத்திற்கு செல்கிறான். பிறகு வரும் போது... இப்பொழுது, நான் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் குறித்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நியாயத்தீர்ப்பில் பாவியோடு நிற்க வேண்டிய, அவனோடு நியாயம் தீர்க்கப்பட வேண்டிய, இரண்டாம் வருகையில் வருகின்ற சிலர் இருக்கின்றனர். நீங்கள் அதை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். பாருங்கள்-? 26. இப்பொழுத, அங்கே... முதலாவதாக நடக்கப் போவதென்னவென்றால் மணவாட்டியினுடைய வருகை. இந்த உலகத்தில்... ஜனங்கள் இருப்பார்கள்... நான்... இதனுடன் வித்தியாசமான கருத்தைக் கொள்ளலாம், ஆனால் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதனால், நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விடுவீர்கள் என்பதல்ல. அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே, அவர்கள் தான் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள். இங்கே உபத்திரவத்தினூடாக செல்கின்ற எஞ்சியுள்ள சிலர் பூமியில் விடப்பட்டு இருப்பார்கள். சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் மேலே எடுக்கப்பட்டு இருக்கும். 27. பொருளிலிருந்து ஒரு துண்டை வெட்டப் போகிறீர்கள் என்றால் பொருளை இப்படியாக வைப்பீர்கள், பிறகு நீங்கள் வைத்திருக்கிற முன் வரைவு (pattern) மாதிரி படிவத்தை இந்த விதமாக அதன் மேல் வைத்து, முன்வரைவு படிவத்தின்படியே நீங்கள் பொருள்களை வெட்டுவீர்கள். இங்குள்ள ஸ்திரீகளின் எத்தனை பேர் அதை அறியாமல் இருக்கிறீர்கள்-? அது சரியா-? முன்வரைவு மாதிரி படிவத்தில் இருக்கின்ற அதே விதமான பொருள்கள் தான் ஏனைய மற்ற பொருள்களும் கூட. அது சரியா-? ஆனால் இந்த விதமான ஒன்றைத் தான் நீங்கள் எடுக்கின்றீர்கள். நீங்கள் அதை பின்னர் உபயோகப்படுத்த அப்படியே வைத்துவிடுவீர்கள், ஆனால் நீங்கள் வெட்டி எடுத்துவிட்ட அந்த - அந்த பொருள்கள் இப்பொழுது, இந்த முன் வரைவுமாதிரி படிவத்தை வைப்பது யார்-? தேவன், தெரிந்து கொள்ளப்படுதல் மூலம். ஆமென் தேவன் தெரிந்து கொள்ளப்படுதல் மூலம் முன் வரைவு (pattern) மாதிரி படிவத்தை வைக்கின்றார். அவர் “இப்பொழுது, உலகத் தோற்றத்திற்கு முன் நான் தெரிந்து கொண்டேன்... நான் இவைகளை வைக்கிறேன்...” என்று கூறுகிறார். ஏன், இயேசுவும் சீஷர்களிடம் தாம் அவர்களோடு இருந்ததாகவும், தாம் அவர்களை தெரிந்து கொண்டதாகவும் உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பாகவே அவர்களை அறிந்து இருந்ததாகவும் கூறினார். அது சரியா-? ஆதலால் தேவன் முன்வரைவு மாதிரி படிவத்தை வைக்கின்றார். இப்பொழுது, எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் தெரிந்து கொள்ளப்பட்ட குழுவொன்று இருக்கும். மேலும் நல்லவர்களாகவும், நேர்மையுள்ளவர்களாகவும், பரிசுத்த ஜீவியம் செய்பவர்களாகவும், தேவனால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களாகவும் இருந்து, எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லாத ஒரு ஜனக்கூட்டம் ஒன்று இருக்கும்; அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருவர், ஏனெனில்... 28. ஓ, நான் ஏதோ ஒன்று இங்கே உங்களுக்கு வெளிப்படையாக்குகையில் நீங்கள் என் மேல் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று நான் - நான் நம்புகிறேன். பாருங்கள்-! நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். நான் - நான் அதைக் கூறித்தான் ஆக வேண்டும், ஏனெனில் நான் - அதைக் கூறவேண்டும் என்று என்னை நெருக்கிக் கொண்டேயிருக்கிறது (நீங்கள் பாருங்கள்-?) கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். அப்படியானால், நான் இதைக் கூறப்போகிறேன்: விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பதில் விசுவாசம் கொண்டுள்ள மக்கள் இருக்கின்றனர் (பாருங்கள்-?) அவர்கள் ஒரு நல்ல, சுத்தமான, பரிசுத்த ஜீவியம் செய்கின்றனர்; அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலிலும் கூட விசுவாசம் கொண்டுள்ளனர். திரும்ப... யூதாஸ் காரியோத்தைப் பாருங்கள். யூதாஸ் காரியோத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட போது நீதிமானாக்கப்பட்டான். - யூதாஸ்காரியோத்து. யோவான் 17:17-ல் யூதாஸ்காரியோத்து பரிசுத்தமாக்கப்பட்டு மத்தேயு 10-ல் வெளியில் சென்று பிசாசுகளை துரத்த வல்லமை கொடுக்கப்பட்டது. வியாதியஸ்தரை சுகப்படுத்திய பிறகு யூதாஸ்காரியோத்து திரும்பி வந்தான், அவன் களிகூர்ந்து, நீங்கள் எப்பொழுதும் கண்டிராத வகையில் ஒரு நல்ல உருளும் பரிசுத்தனாக சத்தமிட்டுக் கொண்டிருந்தான். அது சரியா-? வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவிற்கு வந்த போது தன்னுடைய நிறத்தைக் காட்டினான். இப்பொழுது அதை கவனியுங்கள் - அந்த ஆவி. 29. இன்றைக்கு உலகில் ஜனங்கள், நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்ற நல்ல கிறிஸ்தவ ஜனங்கள், நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்ற அநேகர், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக் கானவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிசுத்தமாக்கப்படுதலுடன் எந்தவித தொடர்பும் இருக்காது. நாம் அதை பிரஸ்பிடேரியன், எபிஸ்கோபலியன், இன்னும் மற்றவை என்று கூறுவோம். அவர்கள் நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டுள்ளனர்; அதை பிரசங்கிக்கின்றனர். அது நல்லது தான்; அவர்கள் சரியே. ஆனால் இப்பொழுது, அந்த - அந்த நசரீன்கள், பரிசுத்த யாத்ரீகர்கள், விடுதலை மெத்தொடிஸ்டுகள் பரிசுத்தமாக்கப்படுதலுக்குள் செல்கின்றனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்றனர். சரியான விதத்தில் அவர்கள் சரியாக உள்ளனர். அவர்கள் ஜெயத்தைப் பெற்றுக் கொள்கின்றனர், சத்தமிடுகின்றனர், கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றனர். அவர்கள் சரியாக உள்ளனர்; அவர்கள் சரியாக இருக்கின்றனர். அவர்கள் யாராவது ஒருவரிடத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேககத்தைக் குறித்தும், வல்லமை, மற்றும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் குறித்து பேசிப் பாருங்கள், அவர்கள் சரியாக அங்கேயே தங்களுடைய நிறத்தை காண்பிப்பர். அதைக் குறித்த ஒன்றுமே எனக்குத் தேவையில்லை. நான் விசுவாசிப்பதில்லை...'' என்று கூறுவார்கள். நல்லது, என்னுடைய நல்ல நசரின் ஜனங்களுக்கும் கூட, அந்நிய பாஷைகளில் பேசுகின்ற ஒரு மனிதன் பிசாசினால் உண்டானவன் என்று விசுவாசிக்கின்றனர். நல்லது, சகோதரனே நீ அதைச் செய்வாயானால், நீ... 30. என்ன, சுடான் மிஷன்ஸ் தலைவராகிய டாக்டர் ரீட்ஹெட், அவர் அந்நிய பாஷையில் பேசினதால் அவரை அவர்கள் வெளியேற்றினர், ''அதை எங்களால் வைத்திருக்க முடியாது'' என்றனர். நான், “அப்படியானால் பவுல் பிரசங்கித்த விதமாக உங்களால் பிரசங்கிக்க முடியாது. உங்களால் பவுலின் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில் பவுல் அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடை பண்ணாதிருங்கள் என்றான்'' என்று கூறினேன். அது சரி. ஆனால் அவர்களோ - அவர்களோ அது பிசாசினால் உண்டானது என்று கூறுகிறார்கள். அவர்கள் அநேக போலிகளைக் கண்டுள்ளனர், ஆதலால் அதை அங்கே கொண்டு சென்று விடுகின்றனர். பாருங்கள்-? ஆனால் ஒரு நீதிமானாக்கப்பட்ட மற்றும் பரிசுத்தமாக்கப்பட்ட சபை ஒன்று இருக்கின்றது; ஆனால் பரிசுத்தமாக்கப் படுதலிலிருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வித்தியாசப்பட்டது என்று மறுதலிக்கின்றனர். ஆனால் அது - அது ஒரு வித்தியாசப்பட்ட கிரியையே. நிச்சயமாக அது அவ்வாறு தான். 31. கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து மூன்று தனிப்பொருட்கள் வந்தன. அவருடைய சரீரத்திலிருந்து வந்த அதே தனிப் பொருட்களைத்தான், நாம் அவருடைய சரீரத்திற்குள் செல்லத்தக்கதாக உபயோகப்படுத்துகிறோம். அங்கே ஜலம் (அது சரியா-?), இரத்தம் (அது சரியா-?) மற்றும் ஆவி இருந்தது. ஆகவே - இயேசு - வேத வசனம் கூறுகிறது, ''பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூன்றும் ஒன்றாயிருக்கிறார்கள்; ஆனால் பூலோகத்தில் சாட்சி இடுகின்ற மூன்று இருக்கின்றது; அவைகள் ஒன்றல்ல,' அவர், “ஆனால் அவைகள் ஒன்றாக ஒருமைப்பட்டிருக்கிறது: ஜலம், இரத்தம், மற்றும் ஆவி'' என்று கூறுகிறார். அது சரியா-? இப்பொழுது, குமாரனைக் கொண்டிராமல் உங்களால் பிதாவைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் உங்களால் குமாரனைக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் ஆனால் பரிசுத்தமாக்கப்படாமல் நீங்கள் நீதிமானாக்கப்பட முடியும். மேலும் நீங்கள் நீதிமானாக்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய இரண்டுமே ஆக்கப்பட்டு இன்னுமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளலாமல் இருக்க முடியும். பாருங்கள்-? அது உண்மை. அது வேதவசனம். ''இந்த மூன்றும் அவர் “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள், ஜலம், இரத்தம், ஆவி; இவைகள் ஒருமைப்பட்டிருக்கிறது'' என்று கூறினார், பாருங்கள். அவைகள் ஒன்று அல்ல, ஆனால் அவைகள் ஒன்றில் ஒருமைப்பட்டிருக்கிறது, ஏனெனில் அது அளவு முறையான அதே ஆவியாகும். தேவன் அந்த ஆவியை நமக்கு அளவாக அளிக்கின்றார். 32. இப்பொழுது, நீதிமானாக்கப்படுதலின் கீழ், லூத்தர் ''விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்“ என்று பிரசங்கித்தார். அவர் அதைத்தான் பிரசங்கித்தார். அது சரியா-? அவர் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டிருந்தார். அது பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக இருந்தது. அப்பொழுது, லூத்தரின் செய்தியானது வந்த போது - தேவன் தம்முடைய சபையை எழுப்பி மகத்தானதாக அதை வெளியே அனுப்பவிருந்தார் (ஓ, என்னே-!) லூத்தர் ''ஓ, நாம் வார்த்தையில் அதைப் பெற்றுக் கொண்டோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்றார். ஆனால் ஜான் வெஸ்லியோ “ஓ, இல்லை-!'' என்றார். அவரும் ஜார்ஜ் வைட்ஃபில்டும், மற்றவர்களும், அவர்கள், ''நாங்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசிக்கிறோம் அது கிருபையின் இரண்டாவது உறுதியான கிரியையாக உள்ளது'' என்றனர். அது சரியா-? ஆகவே அவர்களும் இரத்தத்தை பிரசங்கித்தனர். நல்லது, லூத்தர் அசைய விருப்பமில்லாதவராக இருந்ததால், தேவன் அதை வெஸ்லியன் மெத்தொடிஸ்டுகளிடத்தில் கொடுத்துவிட்டார். பாருங்கள்-? ஆகவே அவர்கள் அதைக் கொண்டிருந்தனர். உலகமெங்கும் பரந்து சென்ற ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருந்தனர். 33. ஆகவே உண்மையான சபை... நல்லது இப்பொழுது, அந்த சமயமானது வருகையில்... இப்பொழுது, பரிசுத்த ஆவியின் அடையாளமாகிய அடையாளங்கள், அதிசயங்கள், மற்றும் அற்புதங்கள் ஆகியவையோடு வருகின்றது. இப்பொழுது, வெஸ்லி இதனுடன் உடன்பட விரும்பவில்லை. இப்பொழுது, இந்த சமயங்களில் வெஸ்லி பூமியின் மேல் இருந்து இருப்பாரானால் மார்டின் லூத்தர் பூமியின் மேல் இருந்திருப்பாரானால், அதனுடன் அவர்கள் ஒருமைப்படுவார்கள், ஆனால் இரண்டாவது சுற்று... இப்பொழுது, பெந்தெகொஸ்தேயினர் அந்நியபாஷைகளில் பேசுவதில் விசுவாசம் கொண்டு, பெற்றுக் கொண்டனர். பிறகு அவர்கள் அதை ஒரு தொடக்கத்திலுள்ள அடையாளம் என்று ஒவ்வொருவரும் அந்நிய பாஷைகளில் பேசவேண்டும் என்ற விதத்தில் மாற்றிப் போட்டனர். அது பிழையான ஒன்றாகும். ஆனால் இப்பொழுது - இப்பொழுது அவர்கள் திரும்பவுமாக வந்து... அவைகள் தேவனால் அளிக்கப்பட்ட தனிக் கூறுகள். நான் நீலக்கண்களைக் கொண்டிருக்கிறேன் என்றால் அதை என்னால் தவிர்க்க முடியாது அல்லது... தேவன் அதைக் கொடுத்தார். அது சபையில் அவருடைய வரம் ஆகும். தேவன் அவைகளை வைத்தார். ''தேவன் சபையில் அதை வைத்திருக்கின்றார்...'' பாருங்கள்-? 34. இப்பொழுது. ஆனால் அவர்கள் அதனுடன் வந்த போது... இப்பொழுது, அவர்கள் ஒரு மகத்தான ஆசீர்வாதங்களை கொண்டிருந்தனர், அவர்கள் லூத்தரன்களை அல்லது அந்த மெத்தொடிஸ்ட், போன்றோரையும் கடந்து அப்பால் சென்றனர். ஆனால் இப்பொழுதோ, ''பெந்தெகொஸ்தேயினர், மெத்தொடிஸ்ட் மற்றும் மற்றவர்களையும் விட மோசமான நிலையை அடையத் தக்கதாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டனர். பிறகு அவர்கள் ஒரு இடத்திற்கு வந்தள்ளனர், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று... அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து சுமார் 40 வருடங்கள் ஆகின்றது. ஆனால் இந்த தேவனுடைய மரமானது 9 வித்தியாசமான கனிகளை அதன் மேல் கொண்டதாயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இந்த எந்த ஒரு கனிகளையும் கொண்டிருக்கலாம். பாருங்கள்-? தேவன் அவைகளை அனுப்பி இருக்கின்றார், ஆனால் மொத்தமாக அவை அந்த மரத்திலிருந்து வெளி வருகிறது. இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், அதை நோக்கிப் பாருங்கள். 35. இக்காலை அளிக்கப்பட்ட செய்தியைப் பாருங்கள். நியாய சங்கம் உட்கார்ந்த போது, புஸ்தகங்கள் திறக்கப்பட்ட போது... இப்பொழுது, இயேசு கோடா கோடி பரிசுத்தவான்களுடன் வந்தார், அப்பொழுது நியாய சங்கம் உட்கார்ந்தது. இங்கே அவர்கள் எல்லாரும் வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பை சுற்றிலும் இருந்தார்கள் (நாம் வேத வசனத்தினூடாக அதை பார்த்தோம்), புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புஸ்தகம் என்னும் மற்றுமொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. இங்கே எடுத்து கொள்ளப்படுதலில் இருந்த அவர்கள் அவர்களை நியாயந் தீர்த்துக் கொண்டு இருந்தனர். அது சரியா-? வீட்டிற்கு சென்று தங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களை பெற்றுக் கொண்டு, ஆயிர வருட அரசாட்சியினூடாக ஜீவித்த அவர்கள் இங்கே வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பில் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அவர் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பார் என்று கூறியுள்ளார். இப்பொழுது, நீங்கள் இங்கே, “ஏன், இப்பொழுது கவனியுங்கள்” என்று கூறலாம், ''அது வருமா... எப்படி சகோதரன் பிரன்ஹாம்-?'' என்று கூறலாம். அது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில். 36. “எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தென்ன-?'' நல்லது, எடுத்து கொள்ளப்படுதல் சமயத்தில்... இயேசு அதை ஒரு உவமையாக கற்றுக் கொடுத்தார். அவர் அதை பல வித்தியாசமான வழிகளில் போதித்தார். இதோ ஒரு வழி. கர்த்தரை சந்திக்க சென்ற பத்து கன்னிகைகள் இருந்ததாக அவர் கூறினார். ஆகவே... அவர்கள் எல்லாரும் கன்னிகைகளாக இருந்தனர், ஆனால் சிலர் தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை வைத்திருந்தனர், சிலர் எண்ணெயை வெளியே போக விட்டுவிட்டனர். அது சரியா-? ஆகவே மணவாட்டி... இப்பொழுது, அந்த எண்ணெய் என்னவாகயிருந்தது-? அந்த எண்ணெய் பரிசுத்த ஆவி ஆகும்; வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் கன்னிகைகளாக இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்றால் என்ன-? ”பரிசுத்தமானது, சுத்தமானது, வேறு பிரிக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது“ அது சரியா-? 37. ஒரு சிறிய கண்ணாடி என்னிடம் இருந்தால் அதை நான் காண்பிக்க... இங்கே உதாரணத்திற்கு, இங்கே இருக்கின்ற பாட்டிலைப் போல, அது காலியாக இருந்தால், நான் அதை எடுத்து, அதை எடுத்தேன். நான் அதை உபயோகிக்க விரும்புகிறேன். இப்பொழுது நல்லது, நான் முதலாவதாக செய்ய விரும்பும் காரியம், நீதிமானாக்கப்படுதல். நான் அதை உபயோகிக்க விரும்பினதாலேயே அதை எடுத்தேன். அது அழுக்காக இருக்கின்றது; நான் அதை பன்றித் தொட்டியில் கண்டெடுத்தேன், அல்லது வேறெங்காவது இருந்திந்தாலும் சரி. இப்பொழுது நான் ஒரு சரியான நபராக இருப்பேனானால், நல்லது, அங்கே நான் உபயோகப்படுத்தப் போகின்ற அதில் ஏதோ ஒரு சுத்தமானதை வைக்க நான் விரும்பமாட்டேன். முதலாவதாக நான் - நான் அதை தீர்மானித்தாக வேண்டும். இப்பொழுது, செய்ய வேண்டிய சிறந்த காரியம் என்னவெனில் அதை தேய்த்துக் கழுவி, அதை சுத்தமாக்கி, பிறகு அதை பரிசுத்தம் செய்தல் ஆகும். அது சரியா-? இப்பொழுது பரிசுத்தமாக்குதல் என்ற வார்த்தையின் பொருள் என்ன-? சுத்தமாக்கப்பட்டு, ஊழியத்திற்கென்று வேறு பிரிப்பது பழைய ஆலயத்தின் பாத்திரங்கள் சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கு பிரிக்கப்படுகின்றது. இப்பொழுது, அதோ அந்த சபை, தேவன் லூத்தரின் காலத்தின் மூலமாக அதை எடுத்தார், நீதிமானாக்கப்படுதல்; வெஸ்லியின் காலம், அவர் அவர்களை பரிசுத்தமாக்கினார். இந்த காலத்தில் அவர் அவர்களை நிரப்புகிறார். பாருங்கள்-? பரிசுத்த ஆவியின் மூலமாக அவருடைய ஜீவன்... பரிசுத்தஆவி அவர்களை எடுத்தது; பரிசுத்தாவி அவர்களை பரிசுத்தமாக்கியது. பரிசுத்த ஆவிஅவர்களை நிரப்பினது. பாருங்கள்-? அதே சபைதான். ஆனால் இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இந்த நாளில்... 38. இப்பொழுது, லூத்தர், வெஸ்லி, மற்றும் அவர்கள் எல்லாரும், அவர்களில் அநேகர் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்ட ஆவியின் பாகத்தை அவர்கள் கொண்டிருந்தனர்; அவர்கள் அதை விசுவாசித்தனர். இப்பொழுது எடுத்து கொள்ளப்படுதலில்... இன்று அசைந்து செல்லாத ஸ்தாபனங்களுக்குள் சென்றுவிட்ட ஜனங்கள் உள்ளனர். அது ஒரு... ஒரே ஒரு ஸ்தாபனம் தான் இருக்கின்றது, அது தேவனுடைய சபையாகும்; அது அதே விதமாக அசைந்து சென்றது. ஆனால் இந்த ஸ்தாபனங்களோ இந்த காரியங்களை உடைத்துப் போட்டிருக்கின்றன. அநேக ஜனங்கள் இன்றைக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பார்த்து அது ஒன்றுமற்றது என்று கூறுகின்றனர். ஆனால் இன்னுமாக அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டு இருக்கின்றனர்; இன்னுமாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள், “ஓ, அந்த உபயோகமற்ற காரியத்தை செய்து கொண்டு இருக்கின்றனர்'' என்று கூறுவர். எல்லா விதமான சோளக் கொல்லை பொம்மைகளையும் பிசாசு வைத்து இருக்கின்றான் என்று எனக்குத் தெரியும். எங்கே நல்ல ஆப்பிள் பழங்களை காண்கிறீர்களோ, அங்கே தான் சுற்றிலும் சோளக் கொல்லை பொம்மைகள் இருக்கின்றன. அது சரி. நீங்கள் நேராக அங்கே சென்று ஆப்பிள் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருங்கள். பாருங்கள்-? 39. இப்பொழுது இந்த... பிறகு தேவன் பரிசுத்த ஆவியால் நிரப்பினார்... பிறகு அவர் அதை மகிமைப்படுத்தத் தக்கதாக தம்முடைய சபையை வைக்கின்றார். இரண்டாவது வருகையில், இங்கே மணவாட்டி, சபை திரும்ப வருகிறது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் உபத்திரவக் காலத்தினூடாக செல்கின்றனரா என்று பாருங்கள். அவர் இந்த கன்னிகைகள் வந்து, “உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள் என்றார்கள்'' என்று கூறினார். “மணவாளன் வருகின்றார்'' என்கின்ற சத்தம் புறப்பட்டுச் சென்றது, ''இதோ மணவாளன் வருகின்றார். அவரை சந்திக்கத் தக்கதாக அவருக்கு எதிர் கொண்டுப் போகப் புறப்படுங்கள்''. ஆகவே இந்த கன்னிகைகள், கன்னிகைகள் என்றால் யார், பரிசுத்தமானவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் (அதைக் குறித்து சிந்தியுங்கள்), பரிசுத்தமானவர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள், அவர்கள், ''எங்களுக்கு எண்ணெயைக் கொடுங்கள்'' என்று கூறினார்கள். ஆகவே அந்த சபையானது “போதுமான அளவுதான் எங்களிடம் உள்ளது, அப்படியானால் நீங்கள் சென்று ஜெபியுங்கள்'' என்று கூறினது. ஆனால் அப்பொழுது மிகவும் காலதாமதமாகிவிட்டிருந்தது. ஆகவே, அந்த சபை கலியாணத்திற்குள் சென்றது, இந்த மற்றவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர் (அது சரியா-?) அங்கே அழுகையும், கூக்குரலும் பற்கடிப்பும் இருந்தது; ஆகவே அவர்கள் உபத்திரவத்திற்குள் சென்று, அவதிப்பட்டு, மரித்தனர். 40. இயேசு பூமிக்கு திரும்பி வந்தார். அவருடன் ஆயிரம் வருடங்கள், ஆயிரவருட அரசாட்சி துவங்கினது. நீதியுள்ளவர்களும் அநீதி உள்ளவர்களும் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு மனிதனையும் நியாயம் தீர்த்தனர். ஒரு பக்கம் வெள்ளாடுகளும் மறுபக்கம் செம்மறியாடுகளும் இருந்தன. பிறகு தேவன் வந்து பூமியின் விசாலத்திலிருந்து, கூடார சந்திப்பிற்காக சபையை மேலே எடுக்கின்றார், அங்கே நம்முடைய அருமையானவர்களுடன் நாம் ஒன்று கூடுவோம். பாருங்கள்-? அங்கே தான் அந்த வித்தியாசம் உள்ளது. இப்பொழுது இங்கேயிருக்கின்ற இந்த ஜனங்கள்... நாம் மரிக்கையில், நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்போமானால், மறுகரையில் நிச்சயமாக கிறிஸ்து இயேசுவாகிய அந்த மகத்தான சரீரத்துடன் இருக்கத் தக்கதாக நாம் செல்வோம். நாம் பாவிகளாக இருப்போமானால், அவிசுவாசிகள் என்னும் பெரிய சரீரத்துடன் இருக்கத் தக்கதாக நாம் செல்வோம்; நம்முடைய பங்கு அங்கே நரகத்தில் மாய்மாலக்காரர்கள் இன்னும் மற்றவர்களுடன் இருக்கும் என்றும் தேவன் கூறியுள்ளார். ஆமென்-! ஒருக்கால் சரியாக தெளிவாக இல்லாமலிருக்கலாம். ஆனால், நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால் நாம் இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது இங்கே சிறிய ஒன்று. 41 கேள்வி:16 தயவு செய்து யாத்திராகமம் 24-வது 4-வது அதிகாரம் 24-ம் வசனத்தை விளக்குங்கள். தேவன் மோசேயை அல்லது அவனுடைய குமாரனை கொல்ல முனைந்தார், ஏன்-? இந்த வேத வசனத்தின் அர்த்தம் என்ன-? அது எங்குள்ளதென்று நமக்குத் தெரியும், யாத்திராகமம் 4:24. இது ஒரு அருமையான கேள்வியாகும். இப்பொழுது ஒரு க்ஷணம் இங்கே நாம் இதை வாசிப்போம். யாத்திராகமம் 4 மற்றும் 24: வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். இந்த கதையை எத்தனைப் பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்-? இப்பொழுது, மோசேக்கு அநேக சந்ததிகள் முன்பு தேவன் ஆபிரகாமிற்கு விருத்தசேதனம் என்னும் அடையாளத்தை அளித்தார். அது ஒவ்வொரு யூதனும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டுமென்று தேவன் செய்த உடன்படிக்கையாகும். அது சரியா-? ஒவ்வொரு மனிதனும்... அது ஒரு அடையாளமாகும். இன்றைக்கு நாம் விருத்தச்சேதனம் பண்ணப்பட்டுள்ளோமா-? மாம்சத்தினால் அல்ல, பரிசுத்த ஆவியினால். இப்பொழுது, இப்பொழுது, தேவன் ஒவ்வொரு ஆணுக்கும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்று இந்த கட்டளையை அளித்தார். அங்கே சென்று இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கத் தக்கதாக தேவன் மோசேயை அழைத்தபோது, அந்த அதே விடுவிக்கும் அடையாளத்தை தன்னுடைய குமாரனுக்கு அவன் செய்யவில்லை. நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதைப் பார்க்கிறீர்களா-? நான் ''இப்போழுது சபையாகிய நீங்கள் எல்லாரும், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் உள்ளே வந்து தண்ணீரால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள். ஆகவே உங்களை சபை அங்கத்தினனாக செய்யப் போகிறோம். நாம் எல்லோரும் ஒன்றாக மகிமைக்கு செல்கிறோம்'' என்று நான் கூறுகிறேன் என்றால், என்ன, சகோதரனே, அது வேதவசனம் அல்ல. நீ மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் பண்ணப்படும் வரை... நீ அப்படித் தான் இருக்க வேண்டும். நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எந்த சபையை நீ சேர்ந்தவனாக இருந்தாலும், உன் பெற்றோர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல, நீ ஒரு தனிப்பட்ட நபராக பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தாலொழிய நீ எடுத்து கொள்ளப்படுதலில் செல்லமாட்டாய். பாருங்கள்-? உன்னால் செல்ல முடியாது. அதுதான் அந்த அதே விடுவிக்கும் அடையாளம், விருத்தசேதனம்; ஆகவே அந்த விருத்தசேதனம் பரிசுத்த ஆவியே. இப்பொழுது தேவன்... 42. கேள்வியை கேட்டவர் இதைக் கேட்டார்: “தேவன் மோசே அல்லது அவனுடைய குமாரனை கொல்லப் பார்த்தாரா என்று இந்த வேதவசனம் கூறுகிறதா-? ஏன்-?'' தேவன் மோசேயைத் தொடர்ந்தார். சிப்போராள் ஒருவள் தான் அங்கே அவனை காப்பாற்றினாள். எப்படியென்றால் சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, போய் தன் குழந்தையினுடைய நுனித்தோலை அறுத்து அதை மோசேயின் முன்பாக எறிந்து ''நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றாள். அது சரியா-? தேவன் மோசேயின் உயிரை எடுத்துவிட்டிருப்பார், ஆனால் ஒருக்கால் ஒரு தூதன் அங்கே நின்று கொண்டிருந்திருப்பான். அவன், ''சிப்போராளே-! அதை சீக்கிரமாக பிடித்துக்கொள்-!'' என்று கூறினான். பாருங்கள்-? சிப்போராள் போய் குழந்தைக்கு விருத்தசேதனம் பண்ணினாள். ''மோசே நீர் மற்ற எல்லாவற்றைக் குறித்தும் மற்றும் உம்முடைய பிரயாணத்தைக் குறித்தும் மிக மிக அக்கறைக் கொண்டிருக்கிறீர், உன்னுடைய சொந்த குமாரனுக்கோ விருத்த சேதனம் பண்ணப்படவில்லை'' என்றாள். அநேக சமயங்களில் நான் ஆச்சரியப்படுவது உண்டு... ஏனெனில் “ஓ, தேவனுக்கு மகிமை. நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நான் ஆப்பிரிக்காவிற்கு, இந்தியாவிற்கு செல்ல வேண்டுமென்று அவர் விரும்புகிறார், என்று என்னிடம் கூறின மக்களை நான் சந்தித்திருக்கின்றேன். நான் ஒரு பால்காரனிடம் நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா என்று நீங்கள் எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா-? ஒரு பேப்பர் விநியோகிக்கும் பையனிடம் இன்னுமாக நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா என்று நீங்கள் எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா-? உங்கள் அக்கம் பக்கத்தில் குடியிருக்கிறவர்களைக் குறித்தென்ன, அவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா-?'' என்று கூறினேன். பாருங்கள்-? இப்பொழுது அது தான் கேள்வி. பாருங்கள்-? அது உங்களுடைய இருதயத்தில் இருக்குமானால்... 43. இங்கே சில காலத்திற்கு முன்னர் இங்கே ஃபிளாரிடாவில் ஒரு பெண் என்னை சந்தித்தாள். இந்த சிறிய பெண், எனக்கு ஒரு வழியும் இல்லை... நான் நீதிபதியல்ல. ஆனால் இங்கிருந்த இந்த மேடையிலிருந்து பிரசங்கித்த ஒரு சிறிய பிரசங்கி அங்கே இருந்தார். ஆகவே வேறொரு பிரதேசத்தில் இருந்த அந்த சிறிய நபர் திருமாணமாகி மனைவி மற்றும் மூன்று அல்லது நான்கு பிள்ளைகளைக் கொண்டவராக இருந்தார். ஆகவே இந்த பெண் ஒரு விதவைப் பெண்ணாக இருந்தாள். ஆகவே அவர்கள் இருவரும் ஒரு பெரிய காடிலாக் காரில் டெக்ஸாஸிலிருந்து ஒன்றாக வந்தனர். ஆகவே அந்த பெண் வந்தாள். அவள் விரும்பும் வகையில் எந்த விதத்திலும் உடையுடுத்த அவளுக்கு உரிமையுண்டு, அதினால் எனக்கொன்றுமில்லை; ஆனால் ஒரு கிறிஸ்தவ பெண்ணாக அதன்படி அவள் உடை உடுத்தி இருக்கவில்லை. அவள் (ஓ, என்னே-!) அவள் ஒரு பெரிய நீண்ட காதணிகளை (அதை எந்த விதமாக அழைத்தாலும் சரி) இதைப் போன்று தொங்கிக் கொண்டு இருந்தது, மேலும் வாயில் அடர்த்தியாக உதடு சாயம் பூசிக்கொண்டிருந்தாள்; மேலும் மேலும் அந்த மேலும் அவளுடைய கண் புருவங்கள் வெட்டப்பட்டு அதின் மேல் மைகளை, ஒரு பென்சிலினால் மையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் “சகோதரன் பிரன்ஹாம், கர்த்தர் என்னை வெளி நாட்டிற்கு அழைக்கின்றார்'' என்று கூறினாள். நான் “அவர் அழைக்கிறாரா-?''என்றேன். “ஆம்-!'' மேலும் அவள், ''இந்த மனிதனுடன் நான் செல்லப் போகிறேன்'' என்றாள். நான், ''நல்லது, தேவன் உங்களை அழைக்கிறார் என்றால், நல்லது, சரி“ என்றேன் (ஆனால் அவர்களுடைய கனியினால்... எனக்கு அது சரியாக தென்படவில்லை... பாருங்கள்-?) அவள், ''நீங்கள் விசுவாசிக்கவில்லையா, கர்த்தர்...-?'' என்றாள். நான், “என்னைக் கேட்காதே. கர்த்தர் உங்களிடம் கூறியிருந்தாரானால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் உங்களிடம் கூறியிருக்கிறாரோ அதைச் செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்விதமாக நினைக்கவில்லை, நான் உங்களிடம் வெளிப்படையாக இருப்பேன்” என்றேன். அவள், ''நல்லது, ஏன் அவ்விதமாக எண்ணுகிறீர்கள்-?'' நான், “முதல் காரியம், நீங்கள் ஒரு விவாகமான பெண்ணாக இந்த விவாகமான மனிதனுடன் நகரத்தில் ஒன்றாக இங்கே தங்குவது நல்லதாகத் தென்படவில்லை. இதனால் நிந்தை வருமானால், பாருங்கள்-?'' என்றேன்.மேலும் நான் கூறினேன், ”இப்பொழுது, முதல் காரியம் என்னவெனில்...'' 44. அந்த பெண்ணிற்கு என்ன நேரிடும் என்று நான் வியக்கின்றேன்-? அதே காரியமானது... இன்று என்னிடம் தொலைபேசியில் பேசின, அந்த மனிதனை விவாகம் செய்ய விரும்பின, தன்னுடைய சொந்த கணவனை விட்டுவிட்ட அந்த ஸ்திரீயைப் போல், இவளும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் சுற்றிலும் குழப்பிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு நிலைக்கு வந்தாள், ஒருக்கால் தேவனுடன் தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம், ஆனால் உலகத்தின் காரியங்களை இச்சித்துக் கொண்டு இருந்தாள். ஆகவே நான் அவளை, ''நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டீர்களா-?'' என்று கேட்டேன். அவள், “இன்னுமாக இல்லை, ஆனால் நான், அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்றாள். நான், “முதலில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், எந்தவித கணவனைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் உங்களுக்கு கூறுவார்” என்றேன். அது சரி. பாருங்கள்-? நீங்கள் - நீங்கள்... அது அவ்விதமாகத்தான் இல்லையென்றால் நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் மரித்துப் போவீர்கள். இன்றிரவு தேவன் அநேக காரியங்களை பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உங்களுடைய இருதயத்தை அநேக முறை தட்டினார் (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது தட்டுகிறார் - ஆசி). ஆனால் இந்த நேரங்கள் ஏதாவதொன்றில் அவர் கதவை அடைத்துவிடப் போகின்றார், ஆகவே - ஆகவே இரக்கம் அகன்றுவிடும். பாருங்கள்-? 45. நிச்சயமாக, தேவன் அவனுடைய ஜீவனை எடுத்துவிட்டிருப்பார். அவர் அவனை கொல்லப் பார்த்தார் என்று அவர் கூறினார். வேதவசனம் எவ்வாறு இருக்கிறது என்று கவனியுங்கள்: வழியிலே தங்கும் இடத்திலே கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனை கொல்லப் பார்த்தார். (மோசே, இப்பொழுது கவனியுங்கள்). அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை - கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து, நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். அது சரி. இப்பொழுது, தேவன் மகனை கொல்லப் பார்க்கவில்லை. தேவன்... அந்த ஒன்றுமறியாத சிறு குழந்தை என்ன செய்வதென்று அறியாதிருந்தது; அது ஒன்றும் அறியாத ஒன்றாகும். ஆனால் காரியம் என்னவெனில், அந்த குழந்தையின் தகப்பன், விருத்தசேதனம் என்னும் அடையாளத்தின் கீழ் இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க குழந்தையுடன் சென்று கொண்டிருந்த அவன்; ஆனால் இன்னுமாக தன்னுடைய சொந்த மகனுக்கு விருத்த சேதனம் பண்ணப்படாதிருந்தது. பாருங்கள்-?ஆகவே சிப்போராள் அதை, அந்த நுனித்தோலை, ஒரு கல்லைக் கொண்டு அறுத்து கீழே எறிந்து, ''நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்“ என்றாள். 46. கேள்வி:17 தயவு கூர்ந்து வேத வசனத்தின் அர்த்தங்களையும், அது எப்பொழுது நிறைவேறும் என்று விளக்குங்கள்: ஏசாயா 4 மற்றும் 1. நன்றி. சரி. நாம் இப்பொழுது திருப்புவோம்... வேதாகமங்களை வைத்திருந்து, பார்க்க விரும்புகிற ஜனங்களாகிய நீங்கள், என்னவென்று நாம் பார்ப்போம்... இதை பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு விதமான பதிலை நாம் காண்போம் என்று நான் நினைத்தேன். இதோ அது. அந்நா... (ஓ, ஆமாம்-!) அது நடக்கும்... அந்நாளில் ஏழு ஸ்திரிகள் ஒரே புருஷனை பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை புசித்து எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள். நல்லது, சகோதரனே, அது அந்த விதமாகவே மிக மோசமாக இப்பொழுது உள்ளது. நம்முடைய தேசத்திற்கு எப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான காரியமானது சம்பவித்திருக்கின்றது-! என் அருமை கிறிஸ்தவ நண்பனே, இதைநான் கூறட்டும். ஒவ்வொருவருக்கும் தேவ மரியாதையுடன் இதை நான் கூறுவேனாக: அப்படியொன்று... சரித்திரம் படித்திருக்கின்ற ஜனங்களாகிய உங்களுக்கு, காலங்களினூடாக ஒவ்வொரு அருமையான தேசமும் ஒழுக்க நெறி தவறுதல், சரியாக பின்புறம் செல்லுதல் இவற்றில் விழுந்து போன அதே பாதையில்தான் சரியாக நாம் இப்பொழுது இருக்கிறோம். 47. இக்காலை நான் கூறின விதமாக... (அதை மறுபடியும் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்). வெளிநாடுகளில் ஒரு மனிதன் என்னிடம் வந்து சகோதரன் பிரன்ஹாம், எந்த விதமான ஸ்திரீகளை நீங்கள் எல்லாரும் அங்கே கொண்டிருக்கிறீர்கள்-? நல்லது, “நீங்கள் பாடுகின்ற எல்லா பாடல்களும், உங்கள் ஸ்திரீகளைக் குறித்த ஏதோ ஒரு பழைய கீழ்த்தரமான பாடல்களாய் இருக்கின்றனவே'' என்றார். அது தான். எல்லாரும் ஏதோ ஒரு எல்லாம் கலந்த கதம்ப கூளம் போன்ற - போன்ற - போன்ற... பாடுகிறார்கள். நல்லது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? சில வார்த்தைகளைக் கொண்டு நான் அதை உங்களிடம் கூறட்டுமா-? உலகமானது இந்த விதமான நிலையை அடைந்துள்ளது, ஏனெனில் இது ஒரு நவீன சோதோம், கொமோரா ஆகும். சரியாக-! கலிபோர்னியாவில் நான் ஒரு செய்தித்தாளை எடுத்தேன். ஆண்புணர்ச்சிக்காரர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடம் எத்தனை ஆயிரம் பேர்களாக அதிகரிக்கிறது என்று நான் மறந்துவிட்டேன். அவர்களுடைய இயற்கையான விருப்பமாகிய - கணவன் மனைவிக்கிடையே, இருக்கின்ற ஒன்று, அது ஜனங்களைவிட்டு அகன்று கொண்டிருக்கிறது. அவ்விதம் நடந்தேறும் என்று தேவன் கூறியவாறு சரியாக அதே விதத்தில் நடக்கின்றது. ஆகவே தங்களுடைய சொந்த... 48. நீங்கள் காண்பீர்களானால்... புகழ் யாருக்கு கிடைக்கிறதென்று பாருங்கள். உங்கள் வானொலியில் கேட்டுப் பாருங்கள், அல்லது தொலைகாட்சிகள், அல்லது எதை நீங்கள் வைத்திருந்தாலும் சரி, அதைப் பாருங்கள். அது மிக மோசமான, மற்றும் கீழ்த்தரமான... ஏதோ ஒரு பெண் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு பாடல் இருக்கிறது, அது தான் தகாவழிப் பேர்போன (notariety) ஒன்றைப் பெற்றுக் கொள்கிறது. நாம் நமது பெண்களுக்காக கவலைகொள்ளாத - அல்லது நம்முடைய பெண்கள் தங்களுக்காக அக்கறை கொள்ளாமல் உள்ளனரோ என்பதை போன்ற ஒரு நிலைக்கு அது வந்துவிட்டது. அதுதான். ஒரு பெண் தன்னைத் தானே சரியாக வைத்துக் கொள்வாளானால், மனிதனும் சரியாகத்தான் நடந்து கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். இது மனிதனுக்காக வாதிடுகின்ற ஒன்றல்ல, ஆனால் அது உண்மை என்று எனக்குத் தெரியும். ஆம் ஐயா-! ஆனால் அது என்ன-? அது ஒரு - ஒரு மிக மோசமான நிலையில் இருக்கின்றது, அது அவ்வாறே இருந்து கொண்டிருக்கின்றது. அது வேத வசனங்களுக்கு ஒத்திருக்கின்றது, அவ்விதமாகத்தான் இருக்கும் என்று வேதாகமம் கூறியிருக்கிறது. ஆகவே எப்படி நாம் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியும்-? எப்படி நாம் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியும்-? 49. கவனியுங்கள், கிறிஸ்தவ நண்பர்களே. இன்னும் சிறிது நேரம் இருக்கையில் நான் உங்களை ஒன்று கேட்கட்டும். நாம் பில்லி கிரஹாமைக் கொண்டிருக்கிறோம். நாம் ஜாக் ஷீலரைக் கொண்டிருக்கிறோம். எல்லா விதமான மத சம்பந்தமான அசைவுகள் உலகம் முழுவதுமாக நாம் கொண்டிருக்கிறோம். அவைகள் அமெரிக்கா முழுவதுமாக கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக முடிகின்ற அளவிற்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது, ஆனால் எழுப்புதல் இல்லை. ஏன்-? கதவுகள் அடைபடுகின்றன. இக்காலை நான் கூறின விதமாக, குளத்திலிருந்து ஒவ்வொரு மீனையும் நாம் வலைவீசி பிடித்திருக்கிறோம். ஒருக்கால் ஒன்று அல்லது இரண்டு எங்கேயோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. பில்லி கிரஹாம் நடத்திய கூட்டத்தில் (பாஸ்டன் அல்லது எங்கோ என்று நான் நம்புகிறேன்) ஆறு வாரங்களில் இருபதாயிரத்திற்கும் மற்றும் முப்பதாயிரத்திற்கு இடையே அவ்வளவு எண்ணிக்கையில் மனந்திரும்பினார்கள் என்று கூறினார். சில வாரங்கள் கடந்து அவர்கள் சென்ற போது இருபது போர்களைக் கூட அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதைக் குறித்து சிந்தியுங்கள்-! சகோதரனே, அது ஏறக்குறைய முடிந்து போனது. இங்கே ஒன்றை என்னால் கூறமுடியும். பாருங்கள்-? 50. வருவேன் என்று தேவன் உரைத்த நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் ஜீவிக்கும் நேரமானது, மனிதர்... அதைக் குறித்து நாம் முயற்சிப்பதோ அல்லது சிந்திப்பதோ என்பதல்ல, நாம் முன்குறிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தேவ வசனம் கூறுகின்றது. அது சரி. தேவன் எதை அழைத்திருக்கின்றாரோ அது தேவனிடம் வந்து சேரும்; தேவன் எதை அழைக்கவில்லையோ அது தேவனிடத்திற்கு வராது. தேவன் அழைக்கின்றார், அவர்கள் அழைப்புகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்; அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்... இப்பொழுது, எந்த ஒருவரையும் தேவன் ஆக்கினைக்குள்ளாக்குகிறார் என்று நான் கூறவில்லை. எல்லாரும் - எந்த ஒருவரும் அழிந்து போக வேண்டுமென்று அவர் விரும்புவதில்லை, ஆனால் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆனால் அவர் தேவனாக இருக்க வேண்டியதால், அவர்கள் வரமாட்டார்கள் என்று அவர் - அவர் துவக்கத்திலேயே அறிந்திருந்தார். ஆனால் இன்னுமாக அவர்களுக்கு ஒரு தருணத்தை அளிக்கிறார், ஆனால் அவர்கள் வருவதில்லை. எப்படி... அவர் அதை அறியாதிருப்பாரானால், நாம் குதிரைகள் இல்லாத வண்டிகளை நாம் வைத்திருப்போம் என்று எப்படி அவர் அறிந்திருந்தார்-? நாம் இப்பொழுது கொண்டிருக்கிறதைப் போல இந்த காலங்கள் வரும் என்று எப்படி அவர் அறிந்திருந்தார்-? அவர் ஏன், “மனிதன் துணிகரமுள்ளவனாயும், இறுமாப்புள்ளவனாயும், சுகபோகப் பிரியனாயும் இருப்பான் என்று கூறினார்-? துவக்கத்திலிருந்து இந்த எல்லா மற்றக் காரியங்களும் வரும் என்று எல்லா தீர்க்கதரிசிகளும் ஏன் முன்னுரைத்தனர்-? தேவன் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அது என்னவாக இருக்குமென்று அவர் அறிந்திருக்கிறார். காலங்களினூடாக தேவன் மனிதனை நோக்கிப் பார்த்தார். ''அவர்கள் வரமாட்டார்கள்'' என்று கூறினார். அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றனர், ஏனெனில் அவர்களாகவே அதைத் தெரிந்து கொண்டனர். ஆமென். இதோ புரிகின்றதா. 51. என் சகோதரனே, சகோதரியே நான் விசுவாசிக்கிறேன், (நான் இதை தேவ மரியாதையுடனும் என்னுடைய இருதயத்தில் தேவ பயத்தை கொண்டவனாகவும் கூறுகிறேன்), அமெரிக்கா மூழ்கிவிட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். அவள் ஒழுங்கு குலைந்து போயிருக்கிறாள். அவள் மிகவும் கீழான நிலைக்கு சென்றுவிட்டாள். அது பரிதாபகரமானதாகும். நான் இந்த வேத வசனத்திற்கு பதிலளிக்கையில் - நான் கூறுகையில் இங்கு சற்று சிந்தித்துப் பாருங்கள், ஏழு ஸ்திரீகள் ஒரு மனிதனை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் உலகப் போரில் - இரண்டாம் உலகப் போரில் செய்தித்தாளிலிருந்து ஒரு பாகத்தை நான் வெட்டியெடுத்து வீட்டில் வைத்திருக்கிறேன். நீங்களே அதைப் வாசித்து பார்த்துக் கொள்ளுங்கள். அதில் ''நம்முடைய அமெரிக்க பெண்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு என்ன நேர்ந்தது-? முதல் ஆறு மாதங்களுக்கு வெளிநாடு சென்றிருந்த இராணுவ வீரர்களில் மூன்றில் இரண்டு பேர்கள் தங்கள் மனைவிகளால் விவாகரத்து செய்யப்பட்டனர்“ என்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பேர் விவாகரத்து செய்யப்படனர். இந்த பெண்கள் ஓடிப் போனார்கள். அது ஏன்-? நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், நண்பர்களே, அது இந்த காலத்தின் ஆவியாகும். 52. கடைசி நாட்கள் இங்கிருக்கையில் நாம் இந்த கடைசி நாட்களின் ஆவிக்குள் சென்று தான் ஆகவேண்டும். நீ ஒரு நடன அரங்கத்திற்குள் செல்வாயானால், நீ நடன ஆவிக்குள் சென்றாக வேண்டும், அல்லது அவர்கள் அங்கே நடனமாட முடியாது. நீ ஒரு சபைக்குச் செல்கிறாய், நீ தேவனை ஆராதிக்கும் முன்பு நீ ஆராதிக்கும் ஆவிக்குள்ளாக வேண்டும். இந்த கடைசி நாட்கள் வருமுன்பாக உலகமானது இந்த கடைசி நாட்களின் ஆவிக்குள்ளாக வேண்டும். நாம் இந்த கடைசி நாட்களின் ஆவியில் இக்காரியங்கள் இங்கிருக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார். நாம் அதைத்தான் பெற்றுள்ளோம். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். புருஷரும், ஸ்திரீகளும் நித்திரையாயுள்ளனர். ஆனால் அவர்கள் அதை அறியவில்லை. ஒழுக்கங்கள்... அன்றொரு நாள் ஒரு வாலிபப் பையனை... ஓ, சில காலத்திற்கு முன்பாக, கோடை காலத்தில், நான் அவனை சந்தித்தேன். நாங்கள் ஒரு நகரத்திற்குள் வந்து கொண்டிருந்தோம். அவன் உயர்நிலைப்பள்ளி செல்லும் வாலிபப் பையன், விவாகம் செய்துக் கொண்ட அவன் இவ்விதம் என்னிடம் கூறிக் கொண்டிருந்தான். அவன், நான் இந்தப் பெண்ணை விவாகம் செய்துக் கொண்டேன், ஏனெனில் அவள் மிகவும் நல்ல பெண்ணாயிருந்தாள். அவள் உயர்நிலைக் கல்வியை முடிக்கு முன்பே நான் அவளை விவாகம் செய்ய வேண்டியதாயிருந்தது,'' என்றான். மேலும் அவன்,''நான் அறிந்துள்ள வரையில், பல வருடங்களாக உயர்நிலைப் பள்ளியில் ஒரு கன்னிகையையும் நாங்கள் பெற்று இருக்கவில்லை,'' என்றான். பாருங்கள்-? அவ்வளவாய் ஒழுக்கக் கேடாகி உள்ளது. 53. இங்கே கலிஃபோர்னியாவில் நீங்கள் இந்த விதியிற்கு விலகி இருக்க வேண்டுமென்று காவற்காரர் உங்களுக்கு சொல்லுகின்ற விதிகளின் வழியாய் நான் சென்றிருக்கிறேன். கடந்து செல்வதற்கு, ஒரு ஸ்திரீயைக் காட்டிலும், ஒரு மனிதனுக்கு அது மிகவும் அபாயமான தெருவாக இருந்து. இருளான குருட்டுச் சந்துகள். ஓ, தேவனே, இரக்கம் காட்டுவீராக-! இக்காரியங்கள் யாவும் வரும் என்று வேதம் கூறுவதை நீங்கள் அறிவீர்களா-? சோதோம் கொமாராவை ஒரு முன் அடையாளமாக அளித்திருக்கிறார். அவர் அங்கு சென்றார். அதே காரியம் நடந்தேறியது. தேவன் அக்கினியை கீழே அனுப்பி அந்த இடத்தை சுட்டெரித்தார். அது அந்த இடத்திற்கு வருகையில், ஆம் அந்தக் காரியத்தையே பெற்றுக் கொள்ளும் என்று உலகம் முழுவதும் காண்பிக்கும்படியாய், அதுவே அந்த அடையாளக் கம்பமாயுள்ளது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) 54. நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நிச்சயமாக. ஏழு ஸ்திரீகள் ஒரு மனிதனைப் பிடித்துக் கொண்டு, “நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து எங்கள் சொந்த வஸ்திரங்களை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும்” என்பார்கள். சகோதரனே, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து நீ செல்ல வேண்டியதில்லை. நம்முடைய சொந்த தேசத்திலே நான் பார்த்த காரியங்களில், தெருக்களில் மிக மோசமானது என்று நான் எண்ணின, என் ஜீவியத்தில் நான் கண்டதில் ஒரே ஒரு இடம் தான் இருக்கிறது. ஆனால் நாம் சரியாகிக் கொண்டிருக்கவில்லை. நாம் அப்படியே காலங்கள் தோறும் மிக மோசமாக, மோசமாகிக் கொண்டேயிருக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருடைய நாமத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் தொடர்ந்து மோசமாகிக் கொண்டேயிருப்போம். ஒரேயொரு நம்பிக்கை மாத்திரமே உண்டு, அது கிறிஸ்து இயேசுவில்தான் ஆகும். நீ என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நான் இங்கே தேசம் முழுவதும் சென்று கூக்குரலிட்டிருக்கிறேன். மரித்தோரையும் கூட தேவன் எழுப்பியுள்ளார், நாங்கள் நகரத்திற்குள் சென்றோம்; வருடக்கணக்காக சக்கர நாற்காலிகளில் இருந்த மக்கள் எழுந்தனர், டிரக் வண்டிகளுக்கு பின்னால் நகரத்தில் நடந்து, தங்களுடைய சக்கரநாற்களை, காரியங்களை தள்ளிக் கொண்டே சென்றனர். ஸ்திரீகள், இறந்து விட்டார் என்றுடாக்டர்களால் சான்றிதழ் அளிக்கப்பட்டவர்கள், எழுதப்பட்ட டாக்டர்களின் பெயர்களைக் கொண்ட X-ரேக்கள் பெற்றிருந்தவர், மரித்த நிலையிலிருந்து எழுப்பப்பட்டனர். ஆனால் நகரம் முழுவதும் உட்கார்ந்து கொண்டு, ''ஹ, மனோத்தத்துவம், பரிசுத்த உருளையர் கூட்டம்'' என்று கூறிக் கொண்டிந்தது. ஓ, ஆக்கினையைத் தவிர வேறெதையும் உங்களால் எதிர்ப்பார்க்க முடியாது-! ஓ-! சரியே-! நியாயத்தீர்ப்பு இங்கே இருக்கிறது; நீ அதை பெற்றுத்தான் ஆகவே வேண்டும். வரவிருக்கின்ற கோபாக்கினையிலிருந்து தப்பியோடு, உன்னால் முடிந்த வரை கிறிஸ்து இயேசுவிடம் விரைந்து ஓடு-! இந்த காரியங்களிலிருந்து வெளியே செல்-! ஆம், அது கடைசி நாட்களின் ஆவியாகும். கூறப்படக் கூடிய அநேகக் காரியங்கள் உண்டு. நான் விரைந்து செல்கிறேன். 55. கேள்வி:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நாம் ஆராதனைக்காக கர்த்தருடைய வீட்டிற்குள் எவ்விதமாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார் என்பதை எங்களுக்கு தயவு கூர்ந்து கூறுவீரா-? அது சரி, அது அருமையான ஒன்றாகும். ஒவ்வொரு சபைக்கும் அது தேவையான ஒன்றாகும். சபைக்கு நீங்கள் வரவேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கின்றார்... இப்பொழுது, இது ஒரு கேள்வியாகும், வெளிப்படையான ஒரு கேள்வியாகும். இது வேதப் பூர்வமான ஒன்றா; அது - ஆம் அது தான். பொறுங்கள், அவர் என்ன கூறினார் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். முதலாவதாக, வேத வசனம் நீங்கள் விரும்புவீர்களானால், ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்கு ஒரு நோக்கத்திற்காகத் தான் வர வேண்டியவர்களாயிருக்கின்றனர், அது ஆராதிக்கத் தக்கதாக, பாடல்கள் பாடுவதற்காக, மற்றும் தேவனை தொழுது கொள்ளத் தக்கதாக, அந்த விதமாகத்தான் தேவன் அதை எதிர்ப்பார்க்கின்றார். நாம் தேவனுடைய வீட்டிற்கு வந்து நம்முடைய - அல்லது வேறெதைக் குறித்தோ , அல்லது ஒருவரைக் குறித்து ஒருவர் பேசிக் கொள்வதோ, அல்லது வாரம் முழுவதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பவைகளைக் குறித்தோ பேச தேவன் எதிர்ப்பார்ப்பதில்லை, நாம் வந்து அவரை ஆராதிப்பதையே அவர் எதிர்ப்பார்க்கிறார். அது ஆராதானையின் வீடாக இருக்கிறது. ''சகலமும் ஒழுங்கும் கிரமுமாக நடைபெற வேண்டும்“ என்று பவுல் வேதாகமத்தில் கூறியுள்ளான். எல்லா காரியமும் சரியாக இருக்க வேண்டியதாயுள்ளது. செய்தியும் இருக்க வேண்டும். 56. நான் கூறப்போகின்ற முதல் காரியம், பழைய ஏற்பாடு - அல்லது கூறப்போனால் புதிய ஏற்பாட்டின் சபையின் முறைமைகளின் படி, முதலாவதாக, ஜனங்கள் தேவனுடைய சபையில் தொழுது கொள்ளுதலின் ஆவியுடன் பிரவேசித்தனர். அவர்கள் உள்ளே நடந்து வந்தனர், பாடல்கள் பாடப்பட்டன. பிறகு ஒருக்கால் பிரசங்கி பேசுவார், ஏனெனில் அவர் சபையின் தீர்க்கதரிசியாக இருந்தார். (புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி ஒரு பிரசங்கி ஆவார்; அது நமக்கு தெரியும்: “இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது'' என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகின்றது). இப்பொழுது, பிரசங்கி பிரசங்கம் செய்ய ஆரம்பிக்கின்றார். அவர் பிரசங்கிக்கையில் ஒருக்கால் ஒரு பெரிய பிரசங்கத்தின் முடிவில், ஆசிர்வாதங்கள் விழ ஆரம்பிக்கின்றன; ஜனங்கள் “ஆமென்” என்று கூறி தேவனை ஸ்தோத்தரிக்க செல்கின்றனர். அவர் பிரசங்கத்தை முடித்தவுடன், ஒரு செய்தியானது வரும், ஒருக்கால் அந்நிய பாஷையில் அது பேசப்படலாம் (1கொரிந்தியர் 14:13, 14) பிறகு - பிறகு சபையில் வியாக்கியானம் செய்பவர் இல்லையென்றால், இந்த நபர் அமைதியாயிருக்க வேண்டியவராகவுள்ளார், ஏனெனில் அவர்கள் அந்நிய பாஷைகளில் சரியாகப் பேசுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதை தேவனுக்கு முன்பாகச் செய்கின்றனர். பாருங்கள்-? ஆனால் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி அங்கே வியாக்கியானம் பண்ணுகிறவர் இருப்பாரெனில், வியாக்கியானம் பண்ணுகிறவர் செய்தியைக் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். எல்லா சபைகளும் அதற்கு வருகின்றன. 57. சார்லஸ் ஃபுல்லர், நான் அங்கேயிருந்த போது அதைக் குறித்து என்னிடம் குழம்பித் தொல்லைப்படுத்தினார், இப்பொழுதோ அதை அவர் ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் எல்லாரும் அதை லாங் பீச் முழுவதும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஐயா-! சரியாக - சரியாக அமர்ந்திருக்கும் இடத்தில், தேவனுடைய ஆசிர்வாதங்களை கொண்டிருந்து, அந்நிய பாஷைகளில் பேசி, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்றனர். ஆகவே அவர் என்னுடைய முகத்திற்கு நேராக நின்று, ''சகோதரன் பிரன்ஹாம், அந்த அர்த்தமற்ற காரியத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது'', என்றார். நான், “நல்லது , அது உங்களைப் பொறுத்தது. அது அவிசுவாசிகளுக்கல்ல, சகோதரன் ஃபுல்லர், அது விசுவாசிக்கிறவர்களுக்காகத்தான்'' என்றேன். இப்பொழுது அதே காரியத்தை தான் அவர் பிரசங்கிக்கின்றார். ஒரு நேரத்திற்கு அது வருகின்றது, ஒரு பலப்பரீட்சை இருக்கின்றது. 58. இப்பொழுது அப்படியானால், அது ஒழுங்கில் இருக்குமானால், இதைத் தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... பிரசங்கம் செய்பவர் பேசிக் கொண்டிருக்கையில் ஒவ்வொரு காரியமும் பிரசங்கியை கவனிக்க அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் அபிஷேகத்தின் கீழ் பிரசங்கிக்கின்றாரென்றால் தேவனுடைய வார்த்தையானது சென்று கொண்டிருக்கின்றது, அப்படியானால், ஒவ்வொரு தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியி இருக்கின்றது. ஒரு மேய்ப்பர் பிரசங்க மேடையை நோக்கி நடந்து, வேதாகமத்தை புரட்டுகையில், சபையானது அமைதியாக இருந்து, வேதாகமத்தை அது வெளிப்படுத்துகையில் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும், அவர் என்ன கூறப் போகின்றார் என்பதை கவனிக்க வேண்டும். உங்களுக்கு அருமையாக காணப்படுகின்ற ஒன்றை அவர் கூறுவாரானால், நீங்கள், “ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-!'' என்று கூறலாம் அல்லது நீங்கள் விரும்புகின்ற எதுவாயிருந்தாலும் சரி. ஆமென் என்றால் ”அப்படியே இருக்கக் கடவது'' என்று அர்த்தமாகும். அதைச் செய்ய வேதாகமம் கூறுகின்றது. பிறகு, செய்தி முடிவுற்ற பிறகு... ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் இருத்தல், ஜனங்கள் களிகூர்ந்து கொண்டிருப்பார்களானால், பிரசங்கி அதைச் செய்ய இடங்கொடுக்கையில், ஒருக்கால் அவர் வேறொரு செய்தியை அனுப்பலாம். அவர் ஒரு செய்தியை அனுப்புவாரானால், அது யாராவது ஒருவருக்குவரும், அப்படியானால் வியாக்கியானங்கள் வேத வசனத்தை மேற்கோள் காட்டுவதாகவோ அல்லது வேறெதையோ செய்வதாக இராது. தேவன் வீண் உச்சரிப்புகளை செய்வதில்லை. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டும் என்று யாரோ ஒருவருக்கு ஒரு நேரடியான செய்தியாக இருக்கும் அல்லது சபைக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் ஏதோ ஒன்றாக அது இருக்கும். அப்பொழுது அந்த சபைக்குரிய பக்தி விருத்தியை அவர்கள் பெற்றுக் கொள்கையில் அவர்கள், 59. உதாரணத்திற்கு இதைப் போன்று: யாராவது ஒருவர் இங்கே எழுந்து நின்று அந்நிய பாஷைகளில் பேசி; “இந்த நபர் வியாக்கியானம் அளித்து, பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது: இன்னார் - இன்னார் சென்று இங்கேயிருக்கின்ற இந்த நபரின் மீது கரங்களை வையுங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது, இன்றிரவு அவர்களுடைய சுகமடையும் நேரமாகும்'' என்று கூறுவார். அது என்னவாயிருக்கிறது-? பிறகு இந்த அதே நபர் ''நான் அங்கே உட்கார்ந்து கொண் டிருக்கையில் என்னுடைய இருதயம் அந்த குழந்தைக்காக எரிந்து கொண்டிருந்தது“ என்றார். இப்பொழுது - இப்பொழுது அவர்கள் ஆவியானவருக்கு கீழ்ப்படிந்து எழும்புகின்றனர், சென்று அந்த குழந்தையின் மீது உங்கள் கைகளை வையுங்கள், அது சுகமாகின்றது. அப்படியில்லையெனில், ஏதோ தவறுயிருக்கின்றது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள்-? அது ஒரு நேரடியான செய்தியாகும். அங்கே அவிசுவாசி உட்கார்ந்து கொண்டு “ஒரு நிமிடம் பொறுங்கள். ஓ, தேவன் அந்த ஜனங்களோடு இருக்கின்றார்-!'' என்பான். நான் என்ன கூற வருகின்றேன் என்று பாருங்கள்-? பிறகு அவர்கள் கூறுவர் - அல்லது, பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது: பட்டணத்தின் தெற்கு புறத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும், ஸ்பிரிங் தெருவின் பக்கத்தில் இருக்கின்றவர்கள், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியே சென்றுவிடுங்கள், ஏனெனில் பட்டணத்தில் இருக்கின்ற எல்லாரையும் அடித்து கொண்டு செல்லப்போகின்ற ஒரு புயல் வரப் போகின்றது. அப்படியானால், முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, அது முழு சபைக்கும் ஒரு தீர்க்கதரிசனம் ஆகும். 60. பிறகு யாராவது ஒருவர் - ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு - எழுந்து நின்று ''அது கர்த்தரால் உண்டானதா-?'' ஒவ்வொருவரும் கூறுவர். மூன்று நல்ல மனிதர் எழுந்து ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு ''அது கர்த்தரால் உண்டாயிற்று“ என்று கூறுவார்களானால், அப்படியானால் சபை அதை பெற்றுக் கொள்கிறது; அந்த பட்டணத்தின் கோடியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் வெளியே சென்றுவிடுவார்கள், அந்த நேரத்திற்கு அவர்கள் அதிலிருந்து புறம்பே சென்றுவிடுவார்கள். பிறகு அது நடந்தேறவில்லை எனில் நீங்கள் அந்த நபரை பிடியுங்கள். பாருங்கள்-? உங்கள் மத்தியில் வேறொரு ஆவி இருக்கின்றது. ஆனால் அது நடந்தேறினால், அப்பொழுது வரவிருந்த கோபாக்கினையிலிருந்து உங்களை தப்புவித்ததற்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள், தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பாருங்கள்-? அந்த காரியங்களை கவனியுங்கள். அது சபையானது ஒழுங்கில் உள்ளது என்பதாகும். இரண்டு அல்லது மூன்று செய்திகள் - மூன்றுக்கு மேல் அல்ல - அதே நேரத்தில் புறப்பட்டு செல்லும். எதுவெல்லாம் புறப்பட்டு வருகின்றதோ, அது ஒழுங்கில் அமைந்திருக்க வேண்டும். முதலாவதாக... பிறகு, வேறொரு சபை, ஒழுங்கில் வேறொரு காரியம்... 61. எனக்குத் தெரியவில்லை, இதை ஒரு ஸ்திரீ கேட்டிருக்கலாம். நான்... வேறே, ஒன்று என் சிந்தைக்குள் வந்தது, ஆகவே அதையும் நான் கூறுவேன். அந்த ஸ்திரீ, அவர்கள் சபைக்குள் வரும் போது, புதிய ஏற்பாட்டின்படி அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு முகவாட்டத்துடன் உள்ளே நடந்து வந்து ஆராதனை முழுவதும் இருக்கவேண்டும். அது வேதாகமத்தின் படியுள்ளது. இப்பொழுது, நான் எண்ணுகிறேன் ஒரு ஸ்திரீ... நிச்சயமாக. இப்பொழுது, பெண்களே நான் உங்களைக் கடிந்து கொள்ளவில்லை. பாருங்கள்-? சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு வாலிபப் பெண் என்னிடம் வந்தாள். அல்ல... அந்த பெண், அவளுக்கு ஒரு பிரச்சனை இருந்தது என்று என்னிடம் வந்த போது சகோதரன் ஜூனியர் அங்கே இருந்தார். இங்கே சமீபத்தில் அவளுடைய அயலகத்தினர் அவளைப் பார்த்து நகைத்தனர், ஏனெனில் அவள் தன்னுடைய முடியை கத்தரித்துக் கொள்வதில்லை என்பதற்காக, அவ்விதம் நகைத்தனர். ஆகவே அவள் சென்று தன்னுடைய முடியை கத்தரித்துக் கொண்டாள். பிறகு, அங்கே நதியண்டையில் யாரோ ஒரு பெண் அவளைக் குழப்பி, அவளுடைய ஆவிகளை எடுத்துப் போடப் போவதாக அவளிடம் கூறியிருந்தாள், தன்னுடைய முடியினால் அவளுடைய பாதத்தைக் கட்டி, இந்த பெண் வெறுப்புக் கோளாறு (Phobia) ஏற்படச் செய்து விட்டாள். அந்த பெண் தன்னுடைய சிந்தை இழந்து போக வேண்டுமென்று விரும்பினாள் இரண்டு பிள்ளைகள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் அப்படியே அதைப்போன்று உட்கார்ந்து கொண்டு இருந்தாள். 62. ஒரு நாள் வீட்டிற்கு முன்பாக அவள் காரோட்டி வந்து நின்றாள். பரிசுத்த ஆவியானவர் அசைந்து, அவளிடம் பேசி, அவள் சுகமடையப் போகிறாள் என்று அவளிடம் கூறினார், ''ஆவியானவர் உரைக்கிறதாவது...'' பிறகு அவள் - அவள் சிறிது நாட்கள் அப்படியே இருந்தாள், பிறகு அவள்... நேற்று நான் சகோதரன் ஜூனியர் மற்றும் சகோதரன் ஃபங்க் உடன் அந்த பெண்ணைப் பார்க்க நான் சென்றேன். நான் அரைமைல் தூரத்தில் இருந்தேன். அவள் நின்று கொண்டு வளரவிடப் போகின்ற தன்னுடைய மயிரை சீவிக் கொண்டே, ''அயலகத்தினர் சிரிக்கட்டும், அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யட்டும்'' என்றாள். அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கே போகவிடவில்லை. அது அவளிடம் பேசி நான் அந்த இடத்தில் இருக்கிறேன் என்றும், வர நான் விரும்புகிறேன் என்றும், அவளிடம் கூறினது. கடந்த இரவு தரிசனத்தில் அந்த பெண் வருவதை நான் கண்டேன், அவளிடம் என்ன கோளாறு இருக்கிறது என்று கூறினேன்; அவள் சற்று முன்னர் என்னுடைய அறையில் சுகமானாள். பாருங்கள்-? அதுசரியா சகோதரன் ஜூனியர்-? அது சரி. சற்று முன்னர். பாருங்கள்-? அங்கே நான் செல்ல தேவன் அனுமதிக்கவில்லை. ஏனெனில் காரியமானது இன்னும் தயாராக இருக்கவில்லை. பாருங்கள்-? அவர் என்னை சரியாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து, அது மனிதன் அல்ல அது தேவன் தான் என்று காண்பிக்க அதைச் சரியாக அங்கே உறுதிபடுத்தினார். பாருங்கள்-? இப்பொழுது அவள் சகோதரன் பிரன்ஹாம், “என் கணவர் நான் நீண்ட முடிவைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்” என்று கூறினாள். நானும் “தேவனும் அதே காரியத்தைத் தான் விரும்புகிறார்'' என்றேன். அது சரி, ஏனெனில் ஸ்திரீகள் நீண்ட மயிரை வைத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர். அதுதான் அவர்களுடைய முக்காடு ஆகும். 63. இந்த ஸ்திரீகள் இன்றைக்கு அல்லது ஸ்திரீகளாகிய நீங்கள், கூறப்போனால், தொப்பிகளை அணிகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்களுடைய முக்காடு என்று கூறுகிறீர்கள். அது தவறு. வேதாகமம் ஒரு ஸ்திரீயினுடைய முக்காடு அவளுடைய தலைமயிரே என்று கூறுகிறது. ஆகவே அவள் தன்னுடைய மயிரைக் கத்தரித்துக் கொள்வாளானால் அது அவள் ஜெபிப்பதற்கு ஒரு சாதாரண காரியமாகும். அது சரியா. அது வேத வசனம். பாருங்கள்-? ஆகவே இப்பொழுது, ஸ்திரீகள் நீண்ட மயிரை கொண்டு இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர், அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது ஒரு பொருட்டல்ல; அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே. நீங்கள் எந்த இடத்திலேயாவது எனக்கு காண்பியுங்கள்... நீங்கள், ''நல்லது, என்னுடைய முடி நீளமாக உள்ளது. பாருங்கள் அது என்னுடைய தோள்கள் வரை உள்ளது'' என்று கூறலாம். அது குட்டை மயிர் ஆகும். “கிறிஸ்து...'' நீங்கள் ”கிறிஸ்து நீண்ட முடி வைத்திருந்தாரே'' என்று கூறலாம். இல்லை, இல்லை. அவர் அப்படி வைத்திருக்கவேயில்லை. அவர் தோள் வரை நீளமுள்ள முடியை வைத்திருந்தார் என்று அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் - அவர்கள் இந்த விதமாக அதை இழுத்து தோள் வரை நீளமாக இருக்கும்படி அதை வெட்டிவிடுகின்றனர். அதைக் குறித்து உள்ள கிரேக்க வார்த்தையை பாருங்கள், நீங்கள் அதைக் கண்டு கொள்ளலாம். 64. பெண் தன்மையான மயிர்... மனிதன் இந்த விதமாக நீளமான நீண்ட முடி வைத்திருக்கக் கூடாது, ஏனெனில் அது பெண் தன்மையாகும், ஆனால் அவர் அதை தம்முடைய தோள்களண்டை இங்கே கத்தரித்தார், அந்த இடத்தில் அவர்கள் வெட்டினர். எங்கே அதைக் கத்தரித்தார்கள், அவருடைய தலையை சுற்றி, அதைப் போன்று பாப் செய்துவிட்டார்கள். அது சிறிய முடியாகும். ஆகவே, பெண்கள், தங்கள் தோள் வரை முடி வைத்திருப்பது, அது இன்னுமாக குட்டை முடியாகும். இப்பொழுது, அது உங்களை நரகத்திற்கு கொண்டு செல்லுமா அல்லது உங்களை பரலோகத்திற்கு கொண்டு செல்லுமா என்று நான் கூறவில்லை. அதனுடன் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால் பெண்களுக்கான சபையின் கட்டளை என்னவெனில் அவர்கள் நீண்ட தலை மயிரைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. அது சரி; அது சரி; ஆகவே சபைக்குள் நுழையும்... அது - அது காரியங்களில், பொது காரியங்களில் - அல்லது அது - சபையின் நடத்தைக் குறித்த விவகாரங்களில் அவர்களுக்கு எந்தவித பங்கும் கிடையாது. அவள் கீழ்ப்படிதலுள்ளவளும், பயபக்தி உள்ளவளுமாகவும், இன்னும் மற்ற போன்றவை, ஏனெனில் அவள் தான், முதல் விழுந்து போதலைக் கொண்டு வந்தாள் என்று வேதாகமம் கூறுகிறது. அது சரி; அது சரி. இப்பொழுது விரைவாக முடிப்போம். அது புண்படுத்தவில்லை என்று நான் நம்புகிறேன். 65. கேள்வி:19 என் சபையில் நான் இராப்போஜனம் எடுக்க இருந்த நேரத்தில் ஏன் தேவனுடைய தரிசனமானது என் முன் வரவேண்டும்-? அதில் (நல்லது, இது ஒரு பெண்ணின் பெயராகும்; ஆம், இது பெண்ணின் பெயராகும்), என் சபையில் நான் இராப்போஜனம் எடுக்கவிருந்த நேரத்தில் ஏன் தேவனுடைய தரிசனமானது என் முன் வரவேண்டும்-? நல்லது, அது இவ்விதமாக இருந்தாலொழிய, சகோதரியே மற்றபடி எனக்கு தெரியாது: நீங்கள் உங்கள் சபையில் இராப்போஜனம் எடுக்கையில் ஒரு தரிசனத்தில் இயேசு கிறிஸ்து தோன்றுவதை நீங்கள் கண்டிருந்தால், நீங்கள் அவரை ஒரு அடையாளமாக கைக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் அவர் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். இராப்போஜனம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறதாக இருக்கிறது; நீங்கள் அவரை ஒரு அடையாளமாக உங்கள் சரீரத்திற்குள் எடுத்துக் கொள்கிறீர்கள். ஆகவே சுத்தமாக ஜீவியுங்கள், தூய்மையாக ஜீவியுங்கள். 66. கவனியுங்கள். நீங்கள் இராப்போஜனம் எடுக்கும் போது (இன்னும் சிறிது நேரத்தில் அது வாசிக்கப்பட நீங்கள் கேட்பீர்கள்) நீங்கள் அபாத்திரமாய்ப் புசித்தால், இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஒரு மனிதன் அந்த இராப்போஜனத்தை எடுத்து தேவனுக்கு முன்பாக சரியாக இருப்பானாக, இல்லை இராப் போஜனத்தை எடுக்கிறவன் தேவனுக்கு முன்பாக சரியாக ஜீவிப்பானாக. அதை வீணாக தகுதியாயிராமல் எடுக்காதே. அது... கவனியுங்கள், கடைசி நாட்களில் தேவனுடைய மேஜைகளெல்லாம் முழுவதுமாக வாந்தியினால் நிறைந்திருக்கும் என்று வேதாகமம் முன் உரைத்திருக்கிறது. அதை புரிந்து கொள்ள ஒருவரும் இல்லை, முடியாது இருக்கிறது. அது சரியா-? கவனியுங்கள். சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரிய கூடாரத்திற்குள் நான் சென்றேன். அதன் பெயரை நான் கூறமாட்டேன்; அதை நீங்கள் எல்லாரும் நன்றாக அறிவீர்கள். அவர்கள் இராப்போஜனத்திற்கு எதை வைத்திருந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா-? அவர்கள் ரொட்டியை (bread) எடுத்தார்கள், அதை அவர்கள் துண்டு துண்டாக பாகம் போட்டனர். பிரசங்கி கூறின அந்த மூப்பர்கள், ஏழு பேரும் குடிகாரர்களாக இருந்தனர்... அது சரி. அவர்களில் ஒவ்வொருவரும், அந்த முழு குழுவும்... அவர்கள் கட்டிடத்திற்குள் செல்கையில் மக்களிடம் பேசிக் கொண்டே செல்வதை நீங்கள் காணலாம். சபை கலைந்து சென்ற போது, முடிவில், ஞாயிறு பள்ளிக்கும் சபைக்கும் இடையே, ஒவ்வொருவரும், மேய்ப்பர் மற்றும் எல்லாரும் வெளியே சென்று, அந்தபுறத்தில் சிகரெட்டுகள் புகைத்துவிட்டு பிறகு உள்ளே வந்து கர்த்தருடைய பந்தியை ஆசரித்தனர். ஆகவே அவன் அதற்காக தேவனுக்கு குற்றமுள்ளவனாயிருக்கிறான் என்று தேவன் கூறினார். ''இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்“. அது சரி. 67. “போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது, யாருக்கு நான் உபதேசத்தை போதிப்பேன்-?'' என்றார். அவர், ”கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் என்கிறார்கள். நலமானதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே நான் பேசுவேன். இங்கே இருக்கும் என்று நான் கூறின இளைப்பாறுதல் இதுவே. ஆனால் அவர்களோ இவைகள் எல்லாவற்றிலும், தங்கள் தலைகளை அசைத்து, நாங்கள் அதற்கு செவிகொடுக்க மாட்டோம்,'' என்று கடந்து சென்று விட்டனர். நண்பர்களே, நாம் எங்குள்ளோம். ஓ, இரக்கம்-! விழித்தெழுங்கள். 68. ஆம், சகோதரியே உங்கள் தரிசனம்... நீங்கள் தேவனுக்கு முன்பாக நல்ல, சுத்தமான, பரிசுத்தமான ஸ்திரீயாக அங்கே நீங்கள் நின்று கொண்டு இருந்தீர்களென்றால், இயேசு, தாமே அந்த இராப்போஜனத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றும், நீங்கள் அங்கே அவரை ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் எடுக்கும் முன்பு அப்படியில்லை எனில், நீங்கள் அதை திரும்பவுமாக தேவனுக்கு முன்பாக உங்களை சரி செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு எச்சரிப்பாகவும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். 69. கேள்வி:20 பின் வருகின்ற இது - இது எனக்குத் தெரியும்... I-தீமோத்தேயு, 2-வது, II-தீமோத்தேயு 2-வது அதிகாரம் 16-வது வசனம். சற்று பொருங்கள். II-தீமோத்தேயு... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... நான் என்ன கூறினேனோ அதற்கு ஒருவேளை நீங்கள் இணங்காமல் இருக்கலாம். வீட்டிற்கு நீங்கள்... பிறகு, நீங்கள் வீட்டிற்கு சென்று அதிகமாக ஆராய்ந்து பாருங்கள், பிறகு நீங்கள் ஆவிக்குரியவராக ஆக அது உங்களுக்கு உதவியாயிருக்கும். அது சரி. II-தீமோத்தேயு 2:16 இவ்வாறு இருக்கிறது. சீர்கேடான விண் பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ள போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள். ஆம்-! மேலும், சீர்கேடான வீண் பேச்சு என்பதைக் குறித்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ''சீர்கேடான - சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிரு, அவைகள் அதிகரிக்கும்''. இப்பொழுது, முதல் காரியமாக “சீர்கேடான வீண்பேச்சு, அவைகள் அதிகரிக்கும். இப்பொழுது, பழையதாக இருக்கிற எதுவும் - வீண்பேச்சு பேசிக் கொண்டேயிருக்கும். வேதாகமம் கூறுகிறது - இயேசு, ”உங்கள் 'ஆம்' என்பது 'ஆம்' என்றும் உங்கள் 'இல்லை' என்பது 'இல்லை' என்றே இருக்கட்டும், இதற்கு மிஞ்சினது பாவத்தினால் வருகிறதாயிருக்கும்,'' என்றார். நீங்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவை மற்றும் ஏளனம் கூட நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு உபயோகமற்ற சொல்லுக்கும் தேவன் உங்களை கணக்கொப்புவிக்கச் செய்வார். அதை நீங்கள் அறிவீர்களா-? ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நீங்கள் கணக்குகொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆகவே எப்படிப்பட்ட ஒரு ஜனமாக நாம் இருக்க வேண்டியவர்களாகவுள்ளோம்-? வெளிப்படையாக, உறுதியாக, அன்புமிக்க, பாசமிக்க, முட்டாள்தனம் மிக்க ஒரு குழுவாக இல்லாதவர்கள், எப்பொழுதுமே... 70. கவனியுங்கள். நீங்கள் அந்த நபரை எடுத்துக் கொள்வீர்களானால் இன்று ஆரம்பிக்கவிருக்கிற... ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவனாகிய நான், என்னையே என்னுடைய சொந்த சுபாவத்தையே கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு - ஒவ்வொரு முறையும் கிண்டலும் நையாண்டியும் செய்வதுண்டு. என்னுடைய மனைவியும் கூட ''இப்பொழுது, பில்..-!'' என்று கூறுவாள். நான், “அது பரவாயில்லை; தேனே'' என்பேன். அவள் கூறுவாள், நான் பிள்ளைகளுடன் நெருக்கித் தள்ளி முட்டிமோதிக் கொண்டிருப்பேன்... நான் கூறுவேன்... அவர்களிடம் நையாண்டி செய்து மற்றும் ஏதாவதொன்றைக் கூறுவேன், ''நல்லது இப்பொழுது, உனக்குத் தெரியுமா, கெண்டக்கியிலிருந்து மூன்று மகத்தான மனிதர் வந்துள்ளனர்''. ''அது யார்-?'' ''நல்லது, ஆபிரகாம் லிங்கன்“. ''டானியேல் பூன்'' ''ஹா- ஹம்'' ''அப்புறம் உன் தந்தை'' அதைப் போன்ற ஒன்று. அதற்கு அவள், “இப்பொழுது, பில், இதோ மறுபடியும் நீர் அதைச் செய்கிறீர்” என்பாள். நான் ஏதாவது ஒரு மறைவிடத்தில் சென்று, “கர்த்தாவே என்னை மன்னியும், ”அந்த விதமாக கூற நான் விழையவில்லை. எனக்கு ஏதாவதொன்றைச் செய்யும்; நான் அதை விட்டு கடந்து வரசெய்யும் என்பேன்“ பாருங்கள்-? 71. ஆகவே ஒவ்வொரு நாளும் நான் - நான் அதைச் செய்தால்... இப்பொழுது இக்காலை பின்மாற்றம் என்ற வார்த்தையைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தோம். நீ அதைச் செய்தால் நீ பின்மாற்றத்திலிருக்கிறாய். ஆம், ஐயா-! நீ மனந்திரும்பியாக வேண்டும். அது சரியல்லவா-? இப்பொழுது, நீங்கள் உலகத்திற்குள் சென்று இதை மற்றும் அதை செய்தீர்கள் என்று நான் கூற விழையவில்லை, ஆனால் ஏதோ ஒன்றை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கும்படியாக அநுதினமும் மனந்திரும்பி சாகவேண்டும். ஆதலால் கிறிஸ்து இயேசுவுக்குள் ஜீவிக்க ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு நாளும், நீங்கள் ஒவ்வொரு நாளும் மரிக்க வேண்டும். நான் ஏதாவதொன்றை காணும் போது... தவறாயிருக்கின்ற காரியங்களை அநேக முறைகள் நான் செய்கிறேன். நான் வெளியே செல்வேன், யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை அல்லது மற்றதைக் கூறுவார், அதைக் குறித்து ஒரு சிறிய நகைச்சுவையை நான் ஒருக்கால் கூறுவேன். யாரோ ஒருவர் கூறுவார்... மோசமான ஒன்றல்ல; இப்பொழுது, கிறிஸ்தவர்கள் இழிவான நகைச்சுவைகளைக் கூறுவார்கள் என்று நான் நம்புவதில்லை. இல்லை ஐயா-! இல்லை ஐயா-! அப்படியானால் அவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல என்று வேதம் கூறுகிறது. அந்த பழைய சீர்கேடான காரியங்கள் போன்றவை, நகைச்சுவைகள், அரட்டைகள், மற்றும் அதைப் போன்றவைகளை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறது. இல்லை, அந்த விதமான காரியங்களை கிறிஸ்தவர்கள் கூறமாட்டார்கள்; கிறிஸ்தவர்கள் தூய்மையான எண்ணங்களைக் கொண்டவர்கள் ஆவர். 72. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், எப்பொழுதாவதொரு முறை நீங்கள் ஒரு மனிதனை... இன்று அவன் ஒரு சிறு நகைச்சுவையைக் கூறுவான். ஆகவே நல்லது, அது சரி என்று நினைத்துக் கொள்வான், அதை அவன் அப்படியே விட்டுவிட்டு அதைக் குறித்து ஒன்றும் சிந்திக்கமாட்டான். அடுத்த நாள் அவன் இரண்டு சிறிய நகைச்சுவைகளைக் கூறுவான். பாருங்கள். ஆகவே அடுத்த காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் வேறெதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பீர்கள். ஆகவே முதலாவதாக காரியம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா, அது திரும்பவுமாக அந்த அதே பழைய காரியத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. அது சரியா-? அந்த காரியத்தை விட்டு அகன்று செல்லுங்கள். அதை விட்டுவிலகுங்கள் சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிருங்கள். யாரோ ஒருவர் வந்து... ஒரு சிறிய உதாரணத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ''திருமதி டோ, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? நான் உங்கள் கணவரைக் கண்டேன். என்னவென்று நான் உங்களுக்கு கூறுவேன். நீங்கள் மாத்திரம்... “ பாருங்கள் ஒரு... இப்பொழுது நான் நினைப்பதென்னவென்றால்..., “அதை நான் கேட்க விரும்பவில்லை-!'' என்று கூறி, அப்படியே சென்று கொண்டிருங்கள். அதைக் குறித்து கவனம் செலுத்த வேண்டாம், அவர்கள் அதை நிறத்திவிடுவர். அது சரி. ''நல்லது என்ன என்று உங்களுக்கு தெரியுமா சகோதரியே-? சகோதரனுக்கு என்ன ஆயிற்றென்று நான் உங்களுக்கு கூறுவேன்.'' சகோதரி மட்டுமல்ல, ஆனால் சகோதரனும் கூட. பாருங்கள். “சகோதரனே, என்ன நடந்தது என்று நான் உங்களுக்கு கூறுவேன். நாம் இந்த பிரசங்கியை மாத்திரம் அப்புறப்படுத்தி விட்டால், நாம் இதை செய்வோமானால், அல்லது இந்த டீக்கனை நாம் அப்புறப்படுத்துவோமானால், அல்லது இதை நாம் செய்வோமானால்” ஓ, ஓ - அந்த காரியத்தை விட்டுவிலகுங்கள். 73. உங்கள் மேஜையின் மேல் ஒரு அருமையான சிறு காரியத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன், சிறிது காலத்திற்கு முன்னர் ஃபிளாரிடாவில் அந்த சிறு காரியத்தை நான் கண்டேன். அது மூன்று சிறிய குரங்குகள்; அதில் ஒன்று தன் கைகளை தன் கண்களின் மேல் வைத்திருந்து, “தீமையானதைப் பார்க்காதே'' என்று கூறினது; இன்னொன்று விரல்களை வைத்து ''தீமையானதிற்கு செவி சாய்க்காதே” என்று கூறினது; இன்னும் ஒன்று தன்னுடைய வாயின் மேல் தன் கையை வைத்து “தீமையானதைப் பேசாதே'' என்று கூறினது. அது ஒரு அருமையான காரியம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவ்வாறே நினைக்கிறீர்கள் அல்லவா-? ஆம், ஐயா-! ஓ, என்னே-! அது ஒரு மிக அருமையான காரியம். உங்கள் மனதை மாத்திரம் தூய்மையாகவும் கிறிஸ்துவின் மீதும் வைத்து இருங்கள். நீங்கள் சிந்தித்து இப்பொழுது கூறுலாம், இப்பொழுது... பாருங்கள், நீங்கள் கவனிக்கவில்லையெனில், நீங்கள் உங்களையே ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விடுவீர்கள், நீங்கள் அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டு இருப்பீர்களானால்... நீங்கள் அதை சிந்திக்காதீர்கள்... இப்பொழுது அந்த தவறை நீங்கள் செய்ய முடியாத விதத்தில் உங்களால் மிக பரிபூரணமாக இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்பதால் அந்த வழியாக நீங்கள் எப்பொழுதாவது செல்வேன் என்று நீங்கள் நினைப்பீர்களா. இல்லை ஐயா நீங்கள் பாவமில்லாதவர்கள் அல்ல, ஆகவே நீங்கள் இந்த புறமாக அல்லது அப்பக்கமாக நிச்சயமாக அவர்களுடைய பாதையில் சென்றுவிடுவீர்கள். 74. ஆனால் கீழே அடித்து தள்ளப்பட்ட ஒரு மனிதன், அவன் ஒரு உண்மையான போர்வீரனாக இருப்பானானால் அவன் மறுபடியுமாக எழுந்து நிற்பான். “கர்த்தாவே நான் எழுந்து மறுபடியும் அதை முயற்சித்து பார்க்கட்டும். ஆனால் ஒரு கோழையோ தன்னுடைய முதல் சிறிய தவறை அவன் செய்வதை பார்க்கையில் இன்று காலை நான் கூறின விதமாக அவன் இருப்பான்: அந்த மூட்டுப்பூச்சியும் தண்ணீர் பூச்சியும் மறுபடியுமாக நேராக தண்ணீருக்குள் ஊர்ந்து சென்று விடும். பாருங்கள்-? அவனால் அதை தாங்க முடியாது. ஆகவே எல்லா பழைய அந்த சீர்கேடான வீண்பேச்சு, பேசிக் கொண்டே இருத்தல், பேசுதல் போன்றவற்றிலிருந்து விலகுங்கள். வீண்பேச்சு என்றால் “குழப்பம்'' என்று அர்த்தம். ஆகவே வேதாகமம் ”...உங்கள் நடுவிலே சச்சரவுகளை உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,'' என்று கூறுகிறது. யாராவது ஒருவர், ''ஹ-ஹாம் ஹா- ஹணம்,'' என்று கூறுவாரானால். இப்பொழுது - “இப்பொழுது எப்படியிருக்கிறீர்கள்-?மறுபடியுமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உமக்கு நன்றி'' என்று மாத்திரம் கூறுங்கள். அப்படியே சென்று கொண்டிருங்கள். அது தான் சிறந்த காரியம். அவர்களை விலக்கிவிடாதீர்கள். அவர்களை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அது எங்கு செல்கின்றது என்பதை நீங்கள் காண்பதால் நீங்கள் எந்த ஒரு கவனத்தையும் செலுத்தவேண்டாம். 75. கேள்வி:21 இயேசு தம்முடைய - இயேசு தம்முடைய ஞான ஸ்நானத்திலிருந்து தம்முடைய மூன்று வருட ஊழியத்தின் வரை எங்கே இருந்தார்-? அது சரி. இயேசு, ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு தண்ணீரை விட்டு வெளியே வந்து நேராக, அவர் நாற்பது பகல் மற்றும் இரவுகளுக்கு பிசாசினால் சோதிக்கப்படும் படியாக ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குள் வழி நடத்தினார். அவர் அங்கே நாற்பது பகல் மற்றும் இரவுகளில் சோதிக்கப்பட்டார். அவர் உபவாசித்தார். அவர் வெளியே வந்தார். அவர் தம்முடைய உபவாசத்தை விட்டு வெளியே வந்த போது பிசாசு அவரை சோதித்தான். அவர் பிசாசை தேவனுடைய வார்த்தையினாலே எதிர்த்து, தம்முடைய ஊழியத்திற்குள் பிரவேசித்து, வேத வசனங்களின் படி மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தார். கவனியுங்கள். அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்து அந்த நேரத்திலே, அவர் பலியாக சங்கரிக்கப்படுவார் என்று தேவன் தானியேலில் பேசி இருக்கிறார். அது அவ்விதமே சரி. அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பே நியமிக்கப்பட்டார். அது சரி. மத்தேயு 4-வது அதிகாரத்தில் நீங்கள் அதைக் காணலாம். அது உங்கள் நம்பிக்கையின்படியே சரியாக இல்லையெனில், சரி. இப்பொழுது அந்த ஒன்று... அதை நாம்... ஓ, ஆம்-! முன்பாகவே நியமிக்கப்பட்டிருத்தல். நாம் அதைப் பெற்றிருக்கிறோம், அப்படிதானே...-? 76. கேள்வி:22 ஒரு காலத்தில் - ஒரு காலத்தில் நாமெல்லாரும் வெள்ளையாகவோ அல்லது கறுப்பாகவோ இருந்தோமா-? அந்த இரண்டில் எதற்கு சாபம் கொடுக்கப்பட்டது-? இப்பொழுது, நமக்குத் தெரிந்த வரை ஆதாமும் ஏவாளும் வெள்ளை, அல்லது பழுப்பு, அல்லது மஞ்சள், அல்லது கறுப்பாக இருந்தனரா என்று உங்களுக்கு என்னால் கூற முடியவில்லை. உங்களுக்கு என்னால் அதைக் கூற முடியாது. தேவனைத் தவிர வேறொருவருக்கும் அது தெரியாது; நான் யூகிக்கிறேன்; அவர் அங்கே இருந்தார். இப்பொழுது அந்த... நாமெல்லாரும் ஒரே பாஷைக்காரரும் ஒரே ஜனத்தாருமாய், குழப்பம் என்கின்ற பாபேல் கோபுரம் வரைக்கும் இருந்து வந்தோம். ஆகவே பிறகு அவர்களுடைய பாஷைகள் வித்தியாசப்பட்டது. நமக்கு தெரிந்த வரை அந்த நேரம் வரை அவர்களெல்லாரும் ஒரே ஜனங்களாயிருந்தனர். பிறகு அவர்கள் உடைந்து உலகின் பல்வேறு பாகங்களுக்கு சிதறிப் போயினர். சிலர்... நீங்கள் ஒரு மிருகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; ஒரு குறிப்பிட்ட மண் பகுதியில் உணவு உண்கின்ற எந்த ஒரு ஜீவனையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது அந்த நிறமாக மாறிவிடும். நான் - இங்கே ஒரு வேட்டைக்காரன் இருப்பானானால், சில நிமிடங்களுக்கு நீங்கள் என்னை பின் தொடருங்கள். மெக்சிக்கோவிற்கு செல்லுங்கள், ஓநாயைப் பாருங்கள் (coyote வடஅமெரிக்க ப்ரெய்ரி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவகை ஓநாய்) அரிசோனாவிற்குச் சென்று அங்கே அந்த ஓநாயைப் பாருங்கள் வடபகுதிக்குச் சென்று அதே ஓநாயைப் பாருங்கள். மூன்று நிறங்களையும் பாருங்கள். டெக்ஸாஸில் வளர்கின்ற கிலாபயங்கர ஜந்துவைப் (Gila Monster) பாருங்கள், அரிசோனாவில் வளர்கின்றதைப் பாருங்கள். அவைகளுக்கு உள்ளிருக்கின்ற வித்தியாசத்தைப் பாருங்கள் (கவனிக்கிறீர்களா-?) அவைகள் இருக்கின்ற நிலம், மண் தான் காரணம். பாருங்கள்-? 77. இப்பொழுது, சியாமீஸ் - சியாமீஸ் (siamese) ஒறு மஞ்சள் நிற மனிதன் ஆவான், ஜப்பான் தேச மக்கள் மற்றும் இன்னுமாக, ஒரு சியாமீஸ். எத்தியோப்பியா தேசத்தைச் சேர்ந்தவன் ஒரு - ஒரு கறுப்பின மனிதன் அல்லது இப்பொழுது நம்மிடையே உள்ள நீக்ரோ போன்று. அவன் அங்கே இருக்கின்ற அந்த இருண்ட நாடுகளுக்கு சென்றான். ஆகவே அவர்கள் - ஆகவே - ஆகவே - அவர்கள்... வெள்ளை மனிதராகிய நாமே ஆங்கிலோ - சாக்ஸன் (Anglo- Saxon) ஜனங்கள் ஆகும். ஆகவே - அல்லது அந்த அல்லது இங்கிருக்கிற ஜனங்கள், வெள்ளை மக்கள் என்று நாம் அழைக்கின்றவர்கள், அவர்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்தவர்கள், முன்னர் அது ''ஏஞ்சல் லாண்ட்,'' (“Angel Land”) என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் வெள்ளையாகவும் வெண் பொன்னிறமாகவும் இன்னும் போன்ற... ஐயர்லாந்து, நார்வே இன்னுமாக - அங்கே மேலே வரை பரவலாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் ஆங்கிலோ சாக்சன் ஜனத்திலிருந்து வெளி வந்தவர்கள். 78. இப்பொழுது, முதலாவதாக சபிக்கப்பட்டது எது-? அவர்களில் ஒருவரும் அல்ல. நீங்கள் எதை குறிப்பிட முயல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் காமை குறிப்பிட விரும்புகிறீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் - காமின் ஜனத்திற்கு. இப்பொழுது இங்கே, காம், சேம், யாப்பேத் இருக்கின்றனர். இப்பொழுது காம், அவன் தன் தகப்பனுடைய நிர்வாணத்தை மூட முயற்சிக்கிவில்லை, ஆனால் சிரித்து, அவனைப் பரியாசம் பண்ணினான். ஆகவே, காம் தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்த்ததற்காகவும், அவனுடைய நிர்வாணத்தை மூட முயற்சி செய்யாமலிருந்ததற்காகவும் தேவன் அவன் மீது சாபத்தை வைத்தார். சேமும் யாப்பேத்தும் பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பன் நிர்வாணமாய் படுத்திருந்த போது தங்கள் கோட்டுகளினால் தங்கள் தகப்பனை மூடினார்கள். ஆகவே இப்பொழுது, தேவன் காமிடம், அவனுடைய சந்ததி மற்றவர்களுக்கு அடிமையாயிருப்பான் என்றார். 79. இப்பொழுது, கறுப்பாக இருப்பது ஒரு சாபம் என்று நீங்கள் எண்ணி இருந்தால், அப்படியானால், யூதனும் கறுப்பாக இருக்கின்றானே. அவ்விதமாக நீங்கள் நினைப்பீர்களானால், - அந்த - கறுப்பு மனிதன் அல்லது இப்பொழுது தேசத்தின் நீக்ரோ மனிதன் என்று நாம் அழைக்கிறோமே, நீங்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டும். இந்தியர்கள் நீக்ரோக்களை விட அதிக கறுப்பாக உள்ளனர். நான் இரண்டு நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். இங்கே இருக்கின்ற, இந்த - இந்த எந்தியோப்பியாவிலிந்து வருகின்ற எத்தியோப்பிய மனிதன், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன், இன்றைக்கு நாம் அறிந்திருக்கின்ற கறுப்பு நிற மனிதன் ஆவான். இயேசு வந்த போது நாம் இருந்தவாரே அவர்கள் அங்கே இன்னுமாக அவர்களில் அநேகர் மிக பழைய காலத்தவராக - தங்கள் பழங்குடி இனத்தில் இருக்கின்றனர். பூர்வீக ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிமக்கள் இப்பொழுது இருக்கின்ற விதமாகவே, வெள்ளை நிற மக்களும் ஆதிகாலத்து பழைய காலத்தவராக இருந்தனர், கூறப்போனால் மோசமாக இருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், ஆங்கிலோ - சாக்ஸன் ஜனங்களாகிய நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அங்கே நிர்வாண பூர்வகால குடிமக்களாக, வேட்டைக்காக ஒரு - ஒரு வில்லுடனும் அம்புடனும், கற்கோடாலியுடனும் இருந்தோம் (அது முற்றிலும் சரி), அது முற்றிலும் சரி. ஆகவே எது தான் அது-? இன்று இயேசு கிறிஸ்தவை ஏற்றுக் கொள்ள மறுப்பவன் தான் சபிக்கப்பட்ட ஒருவன் ஆவான் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். அவ்வளவு தான். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 80. இப்பொழுது, உங்களால் கூற முடியாது... நான் சென்று அங்கே அந்த எஸ்கிமோவின் தேசத்தை எடுத்துக் கொள்வேன் என்று உங்களால் கூற முடியாது. அவன் அங்கே வசிக்கிறான்; அந்த மனிதன் இங்கே நம்மிடையே இருக்கின்ற கறுப்பு நிற மக்களைக் காட்டிலும் கறுப்பாக இருக்கிறான். நான் இந்தியாவிற்கு சென்று இந்தியரைக் கூட்டி வருகிறேன்; அவன் - அவன் கறுப்பாக இருக்கிறான். அவன் கறுத்த நிறமாக இருக்கிறான் - மிக கறுத்த மனிதனாக இருக்கிறான். அவன் எப்படி அழைக்கப்படுகிறானென்றால்... அவன் ஒரு இந்தியனாக இருக்கிறான். நல்லது, இப்பொழுது ஆப்பிரிக்காவில் சில ஆப்பிரிக்க ஜனங்கள் உள்ளனர்... அவர்களில் சிலர் சற்று வெள்ளையாக உள்ளனர்; சிலர் ஏறக்குறைய வெள்ளை நிறத்தவராக இருக்கின்றனர்; அவர்களில் சிலர் வித்தியாசப்பட்ட முறைகளில் இருக்கின்றனர். நீங்கள் யூதரிடம் செல்லுங்கள்; எல்லா யூதர்களும் கறுத்த நிறம் கொண்டவர்களாய் இருக்கின்றனர் என்று நீங்கள் கூறுவீர்கள். யூதன் பழுப்பு நிறமனிதன் ஆவான், ஆனால் சிகப்பு தலை, நீலநிறக் கண்கள், வெள்ளை தோலைக் கொண்ட அநேகம் பேர்களை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்-? 81. ஆகவே அந்த முழு காரியம் என்னவெனில்: நாமெல்லாரும் ஒரே மரத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். அது சரி. ஏவாளின் விழுந்து போதலின் மூலமாக நாமெல்லாரும் சபிக்கப்பட்டோம். பிறகு நாமெல்லாரும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமாக இரட்சிக்கப்பட்டோம். இதோ அது. ஆகவே சாபம் என்பது இல்லை. விசுவாசிக்காதவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், ஆனால் விசுவாசிக்கிறவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆகவே நண்பர்களே, கறுப்பு நிறத்தவரோ அல்லது நீக்ரோ மனிதனோ அல்லது வெள்ளை மனிதனோ, அல்லது மஞ்சள் நிற மனிதனோ, இவர்களில் யாருமே இல்லை. அவர்கள்... கறுப்பாயிருப்பதால் கறுப்பு மனிதன் சபிக்கப்பட்டவனாகயிருந்தால், அப்படியானால் மஞ்சள் நிற மனிதன் பாதி சபிக்கப்பட்டிருக்கிறான். பிறகு அந்த ஆகவே அப்படியானால் மஞ்சள் நிற மனிதன் பிறகு பழுப்பு நிற மனிதன், அவன் மூன்றில் இரண்டு பங்கு சபிக்கப்பட்டவனாக உள்ளான். பாருங்கள், பாருங்கள்-? ஆகவே அப்படியானால் ஆப்பிரிக்கா மனிதன் ஐந்தில் நான்கு பங்கு சபிக்கப்பட்டு இருக்கிறான். இன்னுமாக இந்தியன் மிகவும் சபிக்கப்பட்டிருக்கின்றானா என்று நான் யூகிக்கிறேன். ஓ, என்னே-! எப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனம் இல்லை-! அது வித்தியாசப்பட்ட சீதோஷணம், மற்றும் காரியங்களில் மக்கள் ஜீவிக்கிறதால் அவர்கள் கறுத்துப் போயினர். இன்னுமாக...-?... 82. அமெரிக்க இந்தியனைப் பாருங்கள். அவர்களில் அநேகர்... அங்கே இருக்கின்ற நவஜோ, இந்த நாட்டில் இருக்கின்ற கறுப்பு நிற எத்தியோப்பிய ஜனங்களைக் காட்டிலும் கறுப்பு நிற ஜாதி மக்களாக இருக்கின்றனர், நவஜோ. அப்பாச்சுகள் (Apaches)... அவர்கள் ஒரு - ஒரு விதமான செம்புநிற மக்களாக இருக்கின்றனர். மேலும் வித்தியாசமான ஜாதிகள்... பாருங்கள்-? அங்கே சரியாக இந்தியர்கள் மத்தியில், சரியாக இங்கே, நீங்கள் கறுப்பு நிற ஒன்றைக் காணலாம், ஏறக்குறைய... செரோக்கீயும் நாம் இருக்கிறது போன்று ஏறத்தாழ மங்கலான வெளுத்துப் போன நிறத்தையுடையவனாக இருக்கிறான். இங்கே சரியாக இந்த தேசத்தில் வித்தியாசமாக பிரிவுகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் பாருங்கள், அவர்கள் பாதி சபிக்கப்பட்டுள்ளனர், முழுவதும் சபிக்கப்பட்டுள்ளனர் என்று உங்களால் கூறமுடியாது. அவர்கள் கறுப்பராயிருப்பதால் அவர்கள் சபிக்கப்படவில்லை. அவர்கள் மஞ்சள் அல்லது அவர்கள் வெள்ளை நிறத்தவராக இருப்பதால் அவர்கள் சபிக்கப்படவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் ஒரே ஒரு சாபம் தான் உண்டு, அது இயேசு கிறிஸ்துவைக் குறித்த அவிசுவாசமே. (டானி எனக்குத் தெரியும், முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆனால் இன்னும் இரண்டு கேள்விகள் என்னிடம் இருக்கின்றன). 83. கேள்வி:23 சரி இப்பொழுது. சிதறிப் போன இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் எங்கே (ஆதியாகமம் 44 : 49) அநேக தேசங்களுக்கான யோசேப்பின் கோத்திரம்-? சிமியோன், லேவி, தங்களுக்கென சொந்த தேசம் இல்லாதவர்கள், ஆனால் பத்து கோத்திரங்களுக்கிடையே சிதறி இருப்பவர்கள்... பத்து கோத்திரங்கள் எங்கே-? நம்மால் அதை கண்டு பிடிக்க முடியுமா-? ஆம், ஐயா அவைகளைக் கண்டு பிடிக்கமுடியும். பூகோளப் பிரகாரமாக வேதாகமத்தில் அவைகளைக் கண்டு பிடிக்க முடியும். இந்த கடைசி நாட்களில் அவைகள் எங்கேயிருக்கும் என்றும் அவைகளின் முடிவு என்னவாயிருக்குமென்றும் அங்கே தேவன் நமக்கு கூறிகின்றார். ஆகவே சரியாக இப்பொழுது, இஸ்ரவேல் அவர்கள் எங்கே இருந்தனரென்று ஒரு புத்தகத்தை படித்தேன் அது...-?... அது தன் பாதத்தை எண்ணையில் தோய்த்தது மற்றும் எல்லா காரியத்தையும் அது கூறினது. தேவன் அவர்களை அவர்கள் இடத்தில் ஸ்தாபித்துவிட்டார், அவர்களை வெவ்வேறான இடத்தில் வைத்துள்ளார். கடைசி நாட்களில் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற இடத்திற்கு, பாலஸ்தீனாவிற்கு யூதர்கள் எல்லாரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 84. கேள்வி:24 இன்னும் ஒரே ஒரு கேள்வி: தேவன் யுத்தங்களை நியாயத்தீர்ப்பாக அனுப்பியிருக்கிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. யுத்தங்களை நியாயத்தீர்ப்பாக தேவன் அனுப்புகின்றார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. (சற்று செவிகொடுங்கள்.) தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக, குற்றஞ்சாட்டப் பட்டவர்களுடன் - மத்தியில் அப்பாவியான ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கொல்லத்தக்கதாக, ஆதி பாபிலோனிலிருந்து ஹிட்லர் வரை, அவர்கள் போன்ற கொலைபாதகர்களின் கைகளில் பட்டயத்தை தேவன் வைத்தார் என்று சிலர் விசுவாசிப்பது போல, நான் விசுவாசிப்பதில்லை. யுத்தங்கள் சாத்தானின் கிரியைகளாய் இருக்கின்றன. தயவுசெய்து இந்தக் குழப்பத்தை ஊர்ஜிதம் செய்யவும். இப்பொழுது, சற்று நேரம்... சற்று நேரத்திற்கு முன்னர் இதை நான் படித்தேன், அதன் காரணமாகத் தான் இதை நான் கடைசியில் வைத்தேன். இப்பொழுது, நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, இதை நாம் சற்று - சற்று தெளிவாக பார்ப்போம், ஏனெனில் இது ஒரு நேரடியான கூர்மையான கேள்வியாகும். ஆகவே இது பயபக்தியுடன் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். அதன்பிறகு உடனடியாக, நீங்கள் எங்களுடன் சற்று நேரம் பொறுத்துக் கொள்வீர்களானால். 85. நேரமாகிக் கொண்டிருக்கிறதென்று எனக்குத் தெரியும், ஆனால் இது... நினைவில் கொள்ளுங்கள், இதைக் குறித்தென்ன-? இப்பொழுது, நீங்கள் சென்று இரவெல்லாம் நடனம் ஆடிவிட்ட பிறகு அதைக் குறித்து ஒன்றும் எண்ணுவதில்லை, (அப்படித் தானே-?) உலகக் காரியங்களுக்காக செல்கிறீர்கள், ஆனால் தேவனுடைய வார்த்தை என்று வருகின்ற போது இருபது நிமிடங்களுக்கு மேலானால், சகோதரனே, நாம் ஒரு புதிய பிரசங்கியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்கிறோம். பாருங்கள்-? அது ஒரு வெட்கக்கேடான ஒன்று. பவுல் இரவு முழுவதும் பிரசங்கித்தான். அநேக வருடங்களுக்கு முன்பு சரியாக இங்கே காலை 2 அல்லது 3 மணிவரைக்கும் நான் பிரசங்கித்திருக்கிறேன். இங்கே ஜனங்கள் இந்த இடத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டு தேவனை துதித்துக் கொண்டிருப்பார்கள். 2 அல்லது 3 மணிக்கு அநேகர் ஒரே நேரத்தில் டஜன் கணக்கில் பரிசுத்தாவியை பெற்றுக் கொண்டதை நீங்கள் கண்டிருப்பீர்கள். தேவனே இரக்கமாயிரும். அதை நான் மறுபடியுமாக காண எனக்கு விருப்பம்தான். ஆனால் நம்மால் முடியாது; அந்த நாட்கள் சென்றுவிட்டன. நாள் இப்பொழுது கடந்துவிட்டது; இப்பொழுது அது செலவழிக்கப்பட்டு விட்டது. இரவு வந்து கொண்டிருக்கிறது. ஜனங்களெல்லாரும்... இனி மேல் எங்களால் இருக்க முடியாது ஆதலால்... என்னுடைய...-?... செல்ல ஆயத்தமாக வேண்டும். அது அந்த அந்த விதமாகவே சென்று கொண்டு இருக்கிறது. 86. பொறுங்கள், இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சகோதரனே அல்லது சகோதரியே அது யார் என்று எனக்குத் தெரியாது. உங்களுடன் நான் கருத்து வேற்றுமை கொள்ளப் போகிறேன். அது இங்கே இக்காலை வைக்கப்பட்டது. அதை என்னுடைய வேதாகமத்தில் வைத்து சற்று முன்னர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, ஒரு சிநேகத் தன்மையான வழியில்... ஆகவே இப்பொழுது, நீங்கள் என் மீது வருத்தம் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், சற்று முன்னர் அந்த ஏழை ஸ்திரீக்கு, அந்த ஸ்திரீக்கு நான் செய்தது போல, இதைக் குறித்த உங்களுடைய தீர்மானத்திலும் - உங்களுடன் இதைக் குறித்து இணங்க எனக்கு விருப்பம் உண்டு. அவள்... அவளும், அவளுடைய புருஷனும், அவர்கள் ஓடிப் போய் விவாகம் செய்து கொண்டனர்; அதோ அது அங்குள்ளது. ஆனால் அவள் ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறாள்; நீங்கள் அதனுடன் தான் இருக்க வேண்டும். பாருங்கள்-? ஆகவே இப்பொழுது, நான் தேவனுடைய வார்த்தையுடன் அசையாது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கிறேன். 87. ஆனால் இப்பொழுது, ''நான் விசுவாசிக்கவில்லை...'' ஆனால் முதலாவதாக, “தேவன் யுத்தங்களை நியாயத்தீர்ப்புகளாக அனுப்புகிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியாது''. நல்லது இப்பொழுது, நண்பனே, உங்களுடைய நம்பிக்கையில் தவறாக ஒரே ஒரு காரியம் தான் இருக்கின்றது, அது, வேதப் பூர்வமாக இல்லாததே. தேவன் யுத்தத்தை நியாயத்தீர்ப்பாகவும் அனுப்புகிறார். அது சரி. நான் - நான் உங்களுக்கு வேத வசனத்தை கொடுக்கப் போகிறேன்; நான் இதை அப்படியே படித்துவிட்டு பிறகு உங்களுக்கு கூறிவிடப் போவதில்லை. கவனியுங்கள், ''ஒன்றுமறியாத ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கொல்லத் தக்கதாக, பழைய பாபிலோன் துவங்கி ஹிட்லர் வரையிலான இந்த கொலைபாதகர்கள் கைகளில் தேவன் பட்டயத்தை வைத்தார் என்று சிலர் விசுவாசிப்பது போல நான் விசுவாசிப்பதில்லை. ஆனால் அவர் அதைச் செய்தார் என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடம் கூறி, அதை அவர் செய்தாரென்று, அல்லது அவர் அதை மறுபடியுமாக செய்யப் போகிறாரென்று அதை வேதாகமத்தின் மூலமாக அதை நிரூபித்தால், அப்படியானால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா-? (பாருங்கள்-?) சரி. இதற்கு செவி கொடுங்கள். 88. எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் இங்கே அமர்ந்திருக்கின்ற என்னுடைய நெருங்கிய நண்பனாகக் கூட இது இருக்கலாம்; இது யாருடைய கையெழுத்தென்றும் எனக்குத் தெரியாது. பரலோகத்திலிருக்கிற தேவன்தான் அதை அறிவார். என்னால் உங்களுக்கு கூற முடியவில்லை. ஆனால் இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ''என் தேவன் அன்பின் தேவனாவார் - என் தேவன் அன்பாயிருக்கிறார். ஆகவே இதைச் செய்யமாட்டார். யுத்தங்கள் பிசாசினால் உண்டானது. யுத்தங்கள் பிசாசினால் உண்டானதென்று நான் உங்களுடன் ஒப்புக்கொள்கிறேன். அது சரியான ஒன்று.அவன் தான் இந்த உலகத்தின் அதிபதி. இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இராஜ்ஜியமும் ஒவ்வொரு தேசமும் சாத்தானைச் சேர்ந்ததாகும். தேவன் தம்முடைய வார்த்தையில் அவை அப்படித்தான் என்று கூறினார். சாத்தானும், ''அவை என்னுடையது'' என்றான். அவைகளெல்லாம் அவனுடையது தான் என்று இயேசுவும் ஒப்புக் கொண்டார். ஆனால் பிறகு இயேசு அவைகள் எல்லாவற்றிற்கும் அவர் சுதந்தரவாளியாக ஆகப் போகின்றார். பிறகு நமக்கு இன்னுமாக யுத்தங்கள் இருக்காது. ஆனால் இதை திருத்துதலுக்காகவும் நியாயத்தீர்ப்பிற்காகவும் இதைச் செய்ய சாத்தானை தேவன் அனுமதிக்கின்றார். இப்பொழுது, நாம் துவங்குவதற்கு முன்னர் உங்களிடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இதற்கு எனக்கு பதிலளித்து கண்டு பிடிக்க நான் விரும்புகிறேன். தேவன் ஒரு... (நீங்கள் கூறினீர்கள்)... இந்த காரியங்களைச் செய்வதில்லை என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால்... துவக்கத்திலிருந்து நாம் ஆரம்பிக்கும்படி... இப்பொழுது, உங்களால் கூடுமானவரை உங்கள் அசையாத கவனத்தை எனக்கு செலுத்துங்கள். கவனியுங்கள். பின் ஏன் தேவன் தாமே தம்முடைய சொந்த குமாரனை சிட்சித்து சிலுவையில் அவரை கொலை செய்தார்-? தேவன் தம்முடைய சொந்த குமாரனை சிலுவையில் கொன்றார். “அவரை அடித்து, அவரை நொறுக்கி அவரை காயப்படுத்த வேண்டும்'' என்று ”அது அவருக்கு பிரிதீயாயிருந்தது'' என்று வேதவசனம் கூறுகின்றது, என்னை அவர் இரட்சிக்கத் தக்கதாக தேவன் தம்முடைய சொந்த குமாரனுக்கு அந்த விதமாக செய்தார். 89. இஸ்ரவேலின் மகத்தான ராஜாவாகிய சவுலைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். சவுல் சென்று ஓக் ராஜாவையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் பிடித்து அங்கே இருந்த எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்து, ஆண், பெண்கள், பிள்ளைகள் மற்றும் எல்லாவற்றையும்... ஆகவே சவுல்... ஆடு மாடுகள் கூட கொல்லப்பட வேண்டும், உயிர் வாழ எதையுமே விட்டு வைக்கக் கூடாது என்று தேவன் அவனிடம் கூறினார். சவுல் அங்கே சென்று சில ஆடு மாடுகளைக் கொல்லாமல் விட்டுவிட்டான். ஆகவே தேவன் அவனிடமிருந்து ஆவியை எடுத்து தம்மிடமிருந்து அவனைப் பிரித்துவிட்டார்; அவன் தேவனுக்கு சத்துரு ஆனான். தேவன் அந்த வயதான ராஜாவாகிய ஓகை - ஆகாபின் கைகளில் கொடுத்த போது எலியா ஏன் அங்கு நின்றான்-? அவன் ஆகாபிடம் அந்த ராஜாவைக் கொல்லவேண்டும் என்று கூறினான். ஆகாப் அதைச் செய்ய மறுத்தான். எலியா ஒருஉதவிக்காரனை வைத்திருந்தான், அவன் “உன்னுடைய பட்டயத்தினால் என்னை அடி'' என்றான். நீங்கள் வாசித்தால்... அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் “என்னால் முடியாது என்றான். அவன் தன்னுடைய உயிரை இழந்தான்”. பிறகு அவன் வேறொருவனைப் பார்த்து ''என்னை அடி'' என்றான். அந்த மனிதன் அவனை பட்டயத்தினால் அடித்தான், வெட்டினான். பிறகு அவன் தன்னைத் தானே துணியினால் சுற்றிக் கொண்டு வேஷமாறினவனாய் அங்கே நின்று கொண்டிருந்தான். அங்கே ஆகாப் தன்னுடைய இரதத்திலே வந்தான். அவன், “ஏன் - ஏன் இங்கு நீ நின்று கொண்டிருக்கிறாய்-?'' என்றான். அவன், ''நான் ஒரு காவல்காரன்; ஒரு மனிதனை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் என்னை அடித்து ஓடிவிட்டான்,'' என்றான். மேலும் அவன், ''நான் அவனை விட்டுவிட்டேன். இவ்வாறு நான் செய்தால் என் சொந்த பிராணனை அதற்கு ஈடாக செலுத்த வேண்டியதாயிருக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்'' என்றான். அவன்,“அப்படியா, நீ உன் சொந்த பிராணனை அதற்கு ஈடாக செலுத்தித்தான் ஆகவேண்டும்'' என்றான். அவன் தன் வேஷத்தைக் கலைத்து “கர்த்தர் உரைக்கிறதாவது: அங்கேயிருந்த ராஜாவை நீ கொலை செய்யாமல் விட்டுவிட்டபடியால், உன்னைத் தானே அதற்கு ஈடாக செலுத்துவாய்'' என்றான். அது சரியா-? அது முற்றிலும் சரி. 90. இங்கு ஒன்றை நான் உங்களுக்கு வாசித்து காண்பிக்கட்டும். பாபிலோனைக் குறித்து, யோசுவோ - தேவன் யோசுவாவை அங்கே அனுப்பின போது, அவன் சிறு குழந்தைகளை, பிள்ளைகளை, மற்ற எல்லாவற்றையும் அடியோடு அழித்துப் போட்டான், அவன் அவர்களை அழித்து போட்டான். அவன் ஒன்றையும் கூட உயிர்வாழ விடவில்லை. அவன் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துப் போட்டான். சிறிய பெலிஸ்திய குழந்தைகள், அவன் அவைகளை அழித்துவிட்டான். தேவன் அவனுக்கு கட்டளையிட்டார். ஆகவே அவன் அதைச் செய்யவில்லையெனில், அது அவனுடைய ஜீவனாக இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் உங்களை நான் தெளிவாக்கிவிடுவேன். தேவன் அன்பாக இருக்கிறார், பரிபூரண அன்பு; ஆனால் அன்பு என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இன்று மக்களுக்கு விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் உள்ளது. தேவன் அன்பாக இருக்கிறார். அவர் அன்பில் தான் இருக்க வேண்டும். அவர் தம்முடைய வார்த்தைக்கு உத்தமமானவராக இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர் உன்னை நேசிக்கத்தான் வேண்டும். ஆகவே அவர் உன்னை நேசித்தால், அவர் உன்னை பாதுகாத்துக் கொள்ளத் தான் வேண்டும். 91. இங்கே கவனியுங்கள். பிள்ளைகளைக் கொல்லுகிறதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். இங்குள்ள இக்காரியங்களைக் குறித்து வேத வசனங்கள் என்ன கூறுகின்றன என்று - ஒரு நிமிடம் இங்கே வேத வசனங்களில் ஒன்றை நான் உங்களுக்கு காண்பிப்பேன். இங்கே நாம் திருப்புவோம், இதை சற்று ஒரு நிமிடம் கேளுங்கள், தேவன் என்ன கூறினார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது நான், நீங்கள் குறித்து கொள்ள விரும்பினால் எசேக்கியேல் 9-வது அதிகாரத்திலிருந்து நான் வாசிக்கிறேன். கூர்ந்து கவனியுங்கள்: ஆகவே... பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய் நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார். (இப்பொழுது இது தேவன் பேசுவதாகும்) அப்பொழுது இதோ, ஆறு புருஷர் வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள், ஒவ்வொரு மனிதனும் வெட்டுகிற ஆயுதத்தை தன் கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அவர்களில் வெள்ளை சணல் நூல் அங்கிதரித்து தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து வெண்கல பலிபீடத்து அண்டையிலே நின்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேரூபின் மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, வெள்ளை சணல் நூல் அங்கிதரித்து தன் கையிலே - அல்லது அரையிலே கணக்கனுடைய மைக் கூட்டை வைத்திருந்த என்னை - புருஷனைக் கூப்பிட்டு. கர்த்தர் (LORD)... (கொட்டை எழுத்து L-O-R-D க-ர்-த்-த-ர் அது தேவன் ஆகும்) கர்த்தர் அவனை நோக்கி நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய் அதற்குள்ளே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனிதனின் நெற்றியில் அடையாளம் போடு என்றார். பின்பு அவர்... (LORD அந்த கர்த்தர்)... என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் கண்தப்ப விடாமலும் நீங்கள் இரங்காமலும் (6-வது வசனத்தை கவனியுங்கள்) முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்து - சங்கரித்து கொன்று போடுங்கள்... (தேவன் அவ்வாறு கூறினார். தேவன் அவ்வாறு கூறினார்)... அடையாளத்தை கொண்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள். என் பரிசுத்த ஸ்தலத்திலே - நுழைவாசலில் துவக்குங்கள். அப்பொழுது ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பர் மனிதனிடத்தில் துவக்கம் பண்ணினார்கள். வேறு விதமாகக் கூறினால், தேவன் இந்த ஜனங்களிடம், “இப்பொழுது காத்திருங்கள்; உண்மையாக தேவனுக்காக அற்பணித்த அவர்கள்... நான் முதலாவதாக அந்த ஜனங்களுக்கு முத்திரையை இடப்போகிறேன்,'' என்றார். அவர் அவர்கள் மீது ஒரு அடையாளத்தைப் போட்டார். அவர் இப்பொழுது வெட்டுகின்ற ஆயுதங்களை கையில் பிடித்திருக்கிற மனிதராகிய நீங்கள், சென்று ஸ்திரீகள், பிள்ளைகள் அல்லது எதையுமே விட்டு வைக்காமல் ஒவ்வொன்றையும் சங்கரித்து கொன்று போடுங்கள்'' என்றார். 92. ஜலப்பிரளயத்திற்கு முன்னர் இருந்த உலகத்தின் அழிவில், கோடிக் கணக்கான, கோடிக்கணக்கான, கோடிக்கணக்கான ஜனங்கள் பூமியின் மேல் இருந்த போது தேவன் நோவா என்னும் பேர் கொண்ட ஒரு வயதான பரிசுத்த பிரசங்கியை அனுப்பி, 120 வருடங்கள் பிரசங்கித்து, அவர்கள் பேழைக்குள் வரவேண்டுமென்றும் பேழைக்குள் வராத எல்லாரும் அழிக்கப்படுவர், என்றும் கூறினார். வானங்களை தமது கட்டுக்குள் வைத்திருந்த சர்வ வல்லமையுள்ள தேவன், இலட்சக்கணக்கான வயதான மக்கள், வாலிப மக்கள், சிறிய குழந்தைகளை முற்றிலும் அழித்து போட மழையை அனுப்பினார். அவர்கள் நடுங்கி கொண்டு தண்ணீரில் மாண்டுபோயினர். சர்வ வல்லமையுள்ள தேவன் - அவர் சரியாக அன்பின் தேவன் ஆவார். அது உண்மை. அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் தமக்கு சொந்தமானதை நேசிக்கிறார். அவர் தமது வார்த்தைக்கு உத்தமமானவராக இருக்கவேண்டும். ஆதாலால் ஒரு - ஒரு சர்ச்சைக்கல்ல, ஆனால் உங்களுடன் இணங்காமல் போகவேண்டும் என்பதற்காகவே. உங்களுடைய அன்பின் தேவன்... 93. சிறிது காலத்திற்கு முன்னர் இங்கே நான் பேசிக் கொண்டிருந்தேன். அது ஒருக்கால் ஒரு யெகோவா சாட்சியாக இருக்கலாம். அந்த மனிதன் வந்து “சகோதரன் பிரன்ஹாம், எரிகின்ற நரகம் ஒன்றிருக்கிறது என்பதை நீர் விசுவாசிக்கின்றீர் என்பதை எனக்கு கூற முற்படுகிறீரா-?'' என்றார். நான், “அது நான் கூறுவதல்ல, வேதாகமம் அதைக் கூறுகிறது'' என்றேன். அவர், “அப்படியானால் ஒரு நேசமிக்க பரலோகப் பிதா தம்முடைய பிள்ளைகளை எரித்துவிடுவார் என்று என்னிடம் கூற முற்படுகிறீரா-? ஏன்'' என்றார் ''உங்களுடைய குழந்தையை நீர் எரிக்கமாட்டீர்'' என்றார். நான் “இல்லை ஐயா-!'' என்றேன். ''நல்லது அப்படியானால் மானிடராகிய நீர் அவ்வளவாக அன்பைக் கொண்டிருக்கிறீர் என்றால் (பாருங்கள் ஜனங்கள் எப்படி காரியத்தை மாற்றுகின்றனர்-?) - மானிடப் பிறவியாகிய நீங்கள் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர் என்றால், ஒரு நேசமிக்க பரலோகப் பிதா தம்முடைய பிள்ளைகளை அழிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? நான், “முடியாது-!” என்றேன். அவர் தம்முடைய பிள்ளைகளை அழிக்கமாட்டார், ஆனால் நீங்கள் யாருடைய பிள்ளை-? தேவன் தம்முடைய பிள்ளைகளை அழிப்பதில்லை. அவர்களை உள்ளே கொண்டு வர தம்மால் இயன்றதை அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற பிசாசுதான் தன் பிள்ளைகளை அழித்துப் போடுவான். ஆதலால் தேவன் சாத்தானை அனுமதிக்கின்றார். 94. கவனியுங்கள். தீமையானது கீழே இறங்கி வந்து, சாத்தான் சென்று இயேசு கிறிஸ்து வரை தேவனுக்கு மிகவும் பரிபூரண ஊழியக்காரனாக இருந்த அவனை - யோபு - அவனுடைய பிள்ளைகளையும் அவன் கொண்டிருந்த எல்லாவற்றையுமே அழித்துப் போட அனுமதித்தது யார்-? - தம்முடைய ஊழியக்காரனை சோதிக்கும்படியாக தேவன் அங்கே ஒரு கேட்டின் ஆவியை அனுப்பி, யோபின் பிள்ளைகள் எல்லாரையும், எல்லாவற்றையும், அழித்தார். அது சரியா-? நிச்சயமாக. நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என்னுடைய சகோதரனே, சகோதரியே ஓ, ஒரு மணி நேரத்திற்கு என்னால் நின்று கொண்டு அவைகளை உங்களுக்கு காண்பித்தால் எப்படியிருக்கும், அது சரி, இந்த தேவனுடைய ஆவியை நீங்கள் வேறொன்றிலும் கலக்கவிடாதீர்கள். யுத்தங்கள் தேசங்களின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. அழிவுகள் தேவனால் அனுப்பப்பட்ட ஒன்றாகும். வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. தேவன் அன்பின் தேவனாக இருக்கிறார், ஆனால் தேவன் கோபாக்கினையின் தேவனாகவும் இருக்கின்றார். ஆகவே நீங்கள் நேசிக்கின்ற... நிற்கமாட்டார்கள். இன்று சபையை புண்படுத்தின காரியம் இதுதான். 95. “ஒரு நேசிக்கின்ற பிதாவாயிருப்பதால், நான் இதைச் செய்வதைப் பொருட்படுத்த மாட்டார்'' நீங்கள் அதைச் செய்ய விரும்பினால் நீங்கள் சென்று அதைச் செய்யலாம், ஏனெனில் ஆரம்பமாக தேவனுடைய அன்பு உங்களில் இல்லவேயில்லை. இன்னும் சிறிது நேரத்தில் நாம் இராப்போஜனத்தை எடுக்கப் போகிறோம், ஆகவே நான் இது உங்களுக்குள் ஆழமாக பதியச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். காரியம் என்னவெனில், உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறதோ, அது தான் உற்பத்தி செய்யும் - உங்கள் வாழ்க்கையை உருவாக்கும். நீங்கள் எந்த விதமான விதையை நிலத்தில் விதைக்கிறீர்களோ அதன் இனம் தான் வெளிவரும். நீங்கள் ஒரு மக்காச் சோளப்பொறி செடியை எடுத்து அதிலிருந்து கனிக்கல் நாணலை (gypsumneed) எப்படி நீங்கள் எடுக்கமுடியும்-? நீங்கள் ஒரு... நீங்கள் ஒரு நெல்லை எடுத்து அதினின்று ஒரு ஊமச்சிமுள்ளை உற்பத்தி செய்ய முடியதோ அதே போன்றுதான் இதுவும் ஆகும்... நீங்கள் அவைகளை ஒன்று சேர்க்க முடியாது, ஏனென்றால் அது இரண்டு வித்தியாசப்பட்ட சுபாவத்தை உடையவை, மொத்தமாக இரண்டு வித்தியாசப்பட்ட ஜீவன்கள். நீங்கள் ஒரு கனிக்கல் கொடியின் விதையையும் ஒரு வெங்காயத்தின் விதையையும் எடுக்கலாம், சிறந்த ஒரு மனிதனாலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அது மிகவும் ஒன்றாகத் தென்படும். அது சரி. நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் அதை நடுவதேயாகும். அவைகள் ஒருவிதமாகத் தான் இருக்கும், ஆனால் அவைகளை நடுங்கள். அவையிரண்டும் உற்பத்தி செய்யும், ஒன்று கனிக்கல் செடியாக இருக்கும், மற்றொன்று வெங்காயமாக இருக்கும். அது முற்றிலும் சரி. “என்ன - இந்த விதை என்ன - இந்த விதமாக சரியாகக் காணப்படுகிறதே - ஆனால் வித்தியாசமான ஜீவனை உற்பத்தி செய்கிறதே-?” எனலாம். ஏனென்றால் அது அந்த விதமான ஜீவனை அதற்குள் கொண்டிருக்கிறது. 96. ஆகவே கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்ளும் எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, தேவனுடைய கிருபையால், அந்த விதமான ஜீவியத்தை செய்யாவிடில், அது ஒரு கனிக்கல் செடியாகும். அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள். அந்த காரியமானது உங்களுடைய இருதயத்தில் இருக்குமானால், நீ வேறெங்காவது என்னவாயிருக்கிறாய் என்று அது சாட்சி பகரும். அது தீமையாக இருக்குமானால், இங்கே என்னவாக நீ இருக்கிறாய் என்று அது சாட்சி பகரும். நீ மரிக்கும் போது, நீ ஏற்கெனவே எங்கிருந்தாயோ அங்கே நீ சென்று தான் ஆக வேண்டும். நீ நல்லவனாக இருந்தால் நீ - நீ நல்லவனாக இருக்கிறாய், ஏனெனில் தேவன் உன்னை நல்லவனாக உண்டாக்கியிருக்கின்றார், நீ மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், அந்த வழியாகத் தான் நீ சென்றாக வேண்டும், ஏனெனில் நீ கொண்டிருக்கிற ஜீவனானது இந்த இடத்துடன் சாட்சி பகர வேண்டும். இங்குள்ளதைக் குறித்து அது சாட்சி பகர்ந்தால் இங்கேதான் நீ சென்றாக வேண்டும். அங்கே மேல் உள்ளதைக் குறித்து அது சாட்சி பகர்ந்தால், அங்கே தான் நீ செல்லவேண்டும். பாருங்கள்-? 97. நீ என்னவாக இருக்கிறாயோ, நீ... அதை உங்கள் மனதில் இப்பொழுது கிரகித்துக் கொள்ளுங்கள். நான் முடிக்கப் போகிறேன். அது நீங்கள் இங்கே என்னவாயிருக்கிறீர்களோ, நீங்கள் எங்கோ ஏதோ ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எப்பொழுதும் பரிபூரணத்தில் இருக்க வேண்டுமென்று விரும்பினீர்கள். ஒரு பரிபூரணம் இருக்கின்றது, அந்த பரிபூரணம் இந்த ஜீவன் அல்ல. இங்கே கிறிஸ்தவனாக இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், இங்கே கிறிஸ்தவர்களாக இருக்கின்ற ஒவ்வொரு நபரும் ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் மகிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது. நீங்கள் வேறொரு சரீரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். மற்றுமொரு சமயம் உங்களுக்கு இருக்காது, இப்பொழுது சரியாக உங்களுக்கு இருக்கிறது. இந்த ஒன்று அழிந்து போகுமானால் சரியாக இப்பொழுது வேறொரு சரீரம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதைக் குறித்து உங்களால் சிந்திக்க முடிகின்றதா. அதை ஒரு நிமிடம் ஆராய்ந்து பாருங்கள். நாம் ஒவ்வொருவரும் நாளை காலை சூரியன் எழுவதற்கு முன் ஒருக்கால் நித்தியத்தில் இருக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா-? இப்பொழுது நீ ஒரு கிறிஸ்தவனாக இல்லையென்றால், என் நண்பனே, ஒரே ஒரு காரியம் தான் உனக்காக விடப்பட்டிருக்கிறது. நீ அந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். நீ அந்த சாலையில் இருந்தால் நீ அந்த சாலைக்குதான் சென்றாக வேண்டும். நீ ஒரு நெற்கதிராக இருந்தால் நீ நெல்லை உற்பத்தி செய்வாய். நீ களையாக இருந்தால், நீ களையினுடைய ஜீவனைத்தான் பிறப்பிப்பாய். இப்பொழுது நீ... ஒன்றையும் அறியாமல், ஒன்றையும் போதிக்காமல் உன்னை வரும்படி செய்து, சபையின் அங்கத்தினனாக மட்டும் இருக்கச்செய்யும் ஒரு சபையைச் சர்ந்தவனாக இருப்பின்... நீ நல்லது, “ சகோதரன் பிரன்ஹாம், இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய சபை போதிக்கிறது. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று கூறலாம். ஆனால் உன்னுடைய ஜீவியம் அதனுடன் ஒத்துப்போகவில்லையெனில், நீ இன்னுமாக அதை சென்றடையவில்லை. 98. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பிசாசு கூட விசுவாசிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா-? வெளிப்படையாக இயேசு - இயேசு தேவனுடைய குமாரன் என்று வெளிப்படையாக பிசாசு அறிக்கை செய்தது என்பதை நீங்கள் அறிவீர்களா-? அவன் இரட்சிக்கப்படவில்லை. அவன் இரட்சிக்கப்பட முடியாது; அவன் தான் பிசாசு. ஆகவே இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்வது... உங்களுக்கு தெரியுமா, பரிசேயர், சதுசேயர் அனைவரும் மிக வைராக்கியமாக இருந்த, பக்தியாக இருந்த ஜனங்கள்; தேவனை நம் இருதயங்களில் எவ்வளவாக நேசிக்கிறோம், இவ்வாறு அவர்கள் எண்ணினர்; ஆனால் அந்த குற்றமற்ற ஒன்றை, அந்த தேவனுடைய குமாரனை காணத் தவறினர், அவர் தேவனுடைய குமாரன் என்று அடையாளம் கண்டு கொள்ளத் தவறினர். ஆனால் இன்னுமாக அவர்கள் மிக பக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர் (அது சரியா-?) மிக வைராக்கியமாக, மிக அறிவு கூர்மையுள்ளவர்களாக, நம்முடைய அறிவாளிகளுக்கு தெரிந்துள்ளதைக் காட்டிலும் வேதத்தை மிக அதிகமாக அறிந்திருந்தனர். அவர்கள் உட்கார்ந்து கர்த்தரை சேவிப்பதைத் தவிர பரம்பரைப் பரம்பரையாக வேறெதுவும் செய்வதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. 99. இப்பொழுது வேதவசனம் என்ன கூறுகிறதென்று கவனியுங்கள்: ''கடைசி நாட்களில்...'' என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களாகிய உங்களுக்கு, தேவ அன்புடன், கூறுவது. வேதாகமம், “கடைசி நாட்களில் மனிதன் துணிகரமுள்ளவனாயும், இறுமாப்புள்ளவனாயும், தேவப் பிரியராயிராமல் சுகப்போகப் பிரியனாயும் இருப்பான்” என்று கூறுகின்றது. இப்பொழுது அது உண்மையாயிருக்கிறதல்லவா-? இந்த கட்டிடத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட நபர் அன்றொரு இரவு புத்தாண்டு விருந்திற்கு சென்றார், அடித்தளத்தில் அவர்கள் பானங்களும் களியாட்டங்களும், ஐஸ்கிரீம் இரவு உணவுகளும் இன்னும் மற்றவைகளை அவர்கள் கொண்டிருந்தனர். சபைகள் நடனங்களைக் கூட வைக்கின்றன. செய்யவேண்டாம் என்று தேவன் சரியாக எதைக் கூறினாரோ, அவர்கள் அதை கிறிஸ்துவின் நாமத்தில் செய்கின்றனர். சபை என்ன செய்ய வேண்டுமென்று இயேசு கூறினாரோ அது இங்கேயிருக்கிறது, ஆனால் அவர்கள் அதை மறுதலிக்கின்றனர். இயேசு. இங்கே தம்முடைய கடைசி வார்த்தைகளாக சபைக்கு தம்முடைய சித்தமும் பிரமாணமுமாக: ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (இது மேய்ப்பர் ஒருவேளை இதுவரையிலும் வாசித்திருக்கலாம். இதோ மற்றைய பாகம்) விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள். அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்களானால் அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கு செய்யாது; வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்,'' என்பதே. இப்பொழுது, அதைத் தான் இயேசு தம்முடைய நாமத்தில் செய்ய வேண்டுமென்று அவர்களிடம் கூறினார். அவர்கள் இருக்கின்ற ஒன்றை மறுதலிக்கின்றனர், ஆனால் அவர்கள் சென்று அவர் கூறினதற்கு முரணாக செய்து, அது கடந்து விட்டதென்று போதித்து அதனுடன் ஒன்றுமில்லை என்று கூறி, அதற்கு பதிலாக வேதாகமக் கல்வியை கற்றுக் கொடுக்கின்றனர். ஓ, நாம் இருக்கின்ற நிலையைக் குறித்து நமக்கு ஆச்சரியமில்லை. இங்கே கவனியுங்கள், என் சகோதரனே இதை நான் உனக்கு கூறட்டும். இங்கிருக்கின்ற ஒவ்வொரு அங்கத்தினனும் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் மிகவுமாக நிறப்பப்பட்டு அடையாளங்கள் அவர்களைப் பின் தொடருமானால், அந்த எல்லைக்கு சபையானது வருமானால்... 100. அந்த தீவில் கப்பல் நொறுங்கின பிறகு பரிசுத்த பவுலைக் குறித்து நான் நினைக்கிறேன். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை அளித்திருந்தார். பதினான்கு பகலும் இரவுகளும்... அவர்கள் காப்பாற்றப்படுவர் என்கிற நம்பிக்கை அற்றுப்போயிற்று. அந்த சிறிய, பழைய படகு அங்குமிங்குமாக மிதந்து கொண்டிருந்தது, இரவும் பகலும் பதினான்கு நாட்கள் அவர்களெல்லாரும் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். பவுல் அங்கேயிருந்தான், அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். அவன் ''நீங்கள் தைரியமாக இருங்கள், ஏனெனில் நான் யாருடைய ஊழியக்காரனாக இருக்கிறேனோ அந்த தேவனுடைய தூதனானவர், அவர் என்னிடம் நின்று, 'பயப்படாதே நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும்', இதோ யாத்திரைப் பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார் என்றான்“ என்று கூறினான். கப்பல் சேதமுற்று கரைக்கு வந்தபோது, அவர்கள் அங்கே அந்த தீவு மக்களுடன் சென்றார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின் மீது போடுகையில் அங்கே ஒரு பெரிய சர்ப்பம் இருந்தது, அது அவனுடைய கையைக் கவ்விக் கொண்டது. அந்த சர்ப்பம், ஒரே நிமிடத்தில் கொல்லக் கூடிய விஷத்தை அவனுடைய கையில் ஏற்றினது. அந்த தீவார் அதைக் கண்டு, ''கவனி, அந்த ஆள் செத்து மடிவான், இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் மரித்துப் போவான். அவன் சுவிசேஷத்தை பிரசங்கிக்க தகுதியற்றவன்“ என்று கூறினார்கள். பக்திவாய்ந்த ஜனங்கள் அவனை சங்கிலியினால் கட்டினார்கள். அந்த நாளில் இருந்த மிக அருமையான சபை அவனைச் சங்கிலியில் கட்டிப்போட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமானது இல்லையென்றால், அதே காரியத்தை தான் இன்றைக்கும் காண்பீர்கள். அது சரி-! அவள் - அவள் சிறிது சட்டத்தை உடைக்கும்போது பாருங்கள். 101. ஆகவே ஒரு சர்ப்பம் அவன் கையைக் கவ்விக் கொண்டது. இப்பொழுது கவனியுங்கள். பவுல் பயப்படவில்லை. அவன் “இயேசு கிறிஸ்து, 'சர்ப்பங்களை அவர்கள் எடுத்தாலும் அது அவர்களுக்கு தீங்கு செய்யாது' என்று கூறினார் என்றான். ஆகவே அவன் நடந்து நெருப்பிலே அதை உதறித் தள்ளி; திரும்பி சில விறகுகளை பொறுக்கி நெருப்பிலே போடுவதற்காக எடுத்து, தன் முதுகை காட்டி அனலூட்டிக் கொண்டான்; இந்த பக்கமாக திரும்பி தன் கைகளுக்கு அனல் காட்டினான்”. அந்த தீவார், ''ஏன் இவன் இன்னும் மரிக்கவில்லை-? அந்த மனிதன் ஏன் மரிக்கவில்லை-? ஏன் அவன் சடிதியாய் விழுந்து சாகவில்லை-?'' என்றனர். ஆனால் பவுலோ முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான். (நான் என்ன கூற முனைகிறேன் என்று பாருங்கள்-?) அந்த விஷம் அவனை பாதிக்காத அளவிற்கு முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான். ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிற ஒரு சபையை எனக்குத் தாருங்கள். வேத சாஸ்திரம் படித்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்யத் தவறினதை தேவன் ஒரு வருடத்தில் செய்வார். சபையின் அபிஷேகமானது வரும் வரை காத்திருங்கள். அந்த சிறிய மீதமுள்ளவர்கள், அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது. புறஜாதிகளின் கதவுகள் அடைக்கப்பட்டபிறகு, தேவன் அப்பொழுது ஒரு சபையை அபிஷேகம் பண்ணுவார். ''அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியாயிருக்கிறவன் இன்னும் நீதியாக இருக்கட்டும். பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டும்'', தேவன் சபையை தேவனுடைய வல்லமையால் அபிஷேகம் பண்ணுவார், காரியங்கள் அப்பொழுது சம்பவிக்கும். அப்பொழுது மாத்திரமல்ல, இப்பொழுதும் அவர் அதைச் செய்கின்றார். அடையாளங்களையும் அற்புதங்களையும் கவனித்து; பின்பு மக்கள் சுற்றும் முற்றும் பார்த்து, “அது பிசாசினால் உண்டானது'' என்று கூறுகின்றனர். ஓ ஏனெனில் அவர்கள் வேத வசனங்களையோ, அல்லது தேவனுடைய வல்லமையையோ அறியாதிருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அது அங்கே இருக்கின்றது. 102. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இவ்வளவு நேரம் கடந்து உங்களை வைத்திருந்ததற்காக நான் வருந்துகிறேன். நான் இவ்வாறு செய்வது அரிது. ஆனால் உங்கள் எதிர்ப்பார்ப்பின்படியாக நான் இருப்பதில்லை. உங்களுடைய எண்ணங்களுக்கும் காரியங்களுக்கும் ஏற்றவாறு ஒருக்கால் இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் இருந்திருக்கக் கூடும். இக்காலை இரண்டிற்கு பதிலளிக்கப்பட்டது. அப்படி இல்லையெனில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களைப் புண்படுத்தவோ அல்லது எதையோ செய்ய நான் - நான் முயலவில்லை. நான் அதை கூறித்தான்... நீங்கள் கேள்வியைக் கேட்டீர்கள். எனக்குத் தெரிந்தவரை நான் உங்களுக்கு பதிலை அளித்தேன். சரி. இப்பொழுது, ஒருக்கால் காரியங்களைக் குறித்து அதிகமாக எனக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும், இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறார், பாவத்திலிருந்து நம்மை புறம்பே வைத்திருக்கிறார், தம்முடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் நமக்கு அளிக்கின்றார். ஜெபிக்கப்பட்ட மக்களுக்கு என்ன சம்பவிக்கின்றது என்பதை நீங்கள் கவனிப்பீர்களானால்... தேசங்களில் பாருங்கள். எல்லா இடங்களிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பாருங்கள். நேரம் வந்துக் கொண்டிருப்பதையும் கவனியுங்கள். இங்கே சில சமயங்களுக்கு முன்னர் இரண்டு கிளைகளைக் குறித்து நாம் இங்கே பிரசங்கித்ததை கவனியுங்கள், ஆதியாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது, அவைகள் எப்படி எல்லா இடங்களிலும் சாட்சி பகருகின்றன என்பதைக் கவனியுங்கள். எப்படி அந்த அவிசுவாசி, தன்னுடைய மதத்தில் அடிப்படியாகவும் நல்ல முறையிலும் இருக்கிறான், ஆனால் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறான். ஆகவே சபை அசைந்து சென்று கொண்டேயிருக்கிறது. 103. கர்த்தராகிய இயேசு தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. நீங்கள் மிக பாரம் கொண்டவர்களாகி - தேவன் தாமே ஜனங்களாகிய உங்கள் மேல் அதை வைப்பாராக இழந்துபோன ஆத்துமாக்களுக்காக இரவும் பகலும் தூங்க முடியாத அளவிற்கு மிகவுமாக பாரப்படுவீர்களாக. தேவன் தாமே அவ்விதமாக பாரப்படுகிற சிலாக்கியத்தை பிரன்ஹாம் கூடாரத்திற்கு அளிப்பாராக. நீங்கள் தூங்க முடியாத அளவிற்கு இழந்து போன ஆத்துமாக்களுக்காக மிகவுமாக பாரப்படுவீர்களானால் நீங்கள் சத்தம் இடவில்லை, அல்லது நீங்கள் எதையுமே செய்யாதிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை, நீ அவ்வாறு செய்வாயானால், ஜெபிக்கப்படத் தக்கதாக உலகமே இங்கே உள்ளே வந்து கொண்டிருக்கும். (அதுசரி-!) ஜெபிக்கப்படத் தக்கதாக உலகமே வந்து கொண்டிருக்கும். நீங்கள் எல்லாவிடங்களிலும் அறியப்படுவீர்கள். தேவனே உம்முடைய ஆவியை எங்களுக்கு அளியும், எங்களை உடைத்து போடும், வியாதியஸ்தரை சுகப்படுத்த, பிசாசுகளைத் துரத்த, மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யத்தக்கதாக வல்லமையால் எங்களை நிரப்பும். நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் போது உங்கள் இருதயத்தில் ஒரு சிறு அதிர்வு கூட இல்லாமல் அந்த ஆசீர்வாதத்தை கேளுங்கள். தேவன் அதைச் செய்ய போகிறார் என்று விசுவாசியுங்கள். அந்த இடத்தை கவனியுங்கள், அது சரியாக ஆரம்பிக்கும். ஏன்-? தீமையானது நம்மை விட்டு சென்றுவிட்டது. அங்கே நின்று கொண்டிருந்த அந்த மரத்தைப் போல. இயேசு அதைப் பார்த்தார், அதில் கனியே இல்லாதிருந்தது. அவர், “நீ சபிக்கப்பட்டிருப்பாயாக'' என்றார். இருபத்து நான்கு மணி நேரம் சென்றது. பேதுரு, ''பாருங்கள், இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கிறது'' என்றான். ஏதோ ஒன்று சம்பவித்திருந்தது. தேவனுடைய வார்த்தை உரைக்கப்பட்டிருந்தது. இயேசு, “தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்று கூறி அதைக் குறித்து சந்தேகிக்காமல் இருந்தால், அது உனக்கு கீழ்ப்படியும்'' என்றார். தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருங்கள். 104. இப்பொழுது இராப்போஜன நேரமாக இருக்கிறது. நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியிருக்ககையில் உங்களை தேற்றும் படியாக யாரோ ஒருவரை நான் கேட்கப் போகிறேன்... கர்த்தாவே, தேவன் உலகிலுள்ள எல்லா நாடுகளையும் அவர்களுடைய அரசியல் நிலைகளின்படி நியாயந்தீர்க்கப்போகிறார் என்ற அந்த மகத்தான நியாயத்தீர்ப்பின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை கர்த்தாவே உலகெங்கிலுமுள்ள புருஷரும் ஸ்திரிகளும் இந்த மணி நேரத்தில் காண்பார்களாக. எல்லா இடங்களிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நின்றாக வேண்டும். ஆகவே பிதாவே, தப்பிக்க விரும்புகிற ஜனங்களுக்கு இந்த ஜனங்களிற்கு ஒரு தப்பிக்கும் வழி இருக்கிறதென்று நாங்கள் மிகவுமாக மகிழ்ச்சி கொள்கிறோம். தாவீதின் சந்ததியாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலமாகத்தான் அந்த வழி உள்ளது. அன்புள்ள பிதாவே, நாங்கள் அதினூடாக செல்லக் கூடிய மத்தியஸ்தராகிய அவரை பூமிக்கு அனுப்பினதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவர் எங்களுக்காக பரிந்து பேசி, எங்கள் பாவங்களையெல்லாம் எடுத்துவிடுவார். ஆதலால் நாங்கள் தேவ கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவாகும். கோபாக்கினை வரவிருக்கிறது என்று நாங்கள் அறிவோம். கடந்த நாட்களில் யோவான் கூறினது போல ''வரும் கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.'' இப்பொழுது, கார்த்தாவே, இன்று நாங்கள் இராப்போஜனம் எடுக்கின்ற வேளையில் உம்முடைய சுத்தமாக்கும் இரத்தத்தினால் கர்த்தாவே எங்களை இன்றிரவு பரிசுத்தப்படுத்தும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்; இந்த மக்களின் ஒவ்வொரு பாவமும் போக்கப்படுவதாக. அதை தகுதியில்லாதவர்களாக எடுக்கும்படி எங்களை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தமமாகவும் தாழ்மையாகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனெனில் உம்முடைய வார்த்தையில் நீர் கூறியுள்ளீர், அவ்வாறு நாங்கள் செய்தால், கர்த்தருடைய இரத்தத்திற்கும் சரீரத்திற்கும் குற்றவாளிகளாக இருக்கிறோம் என்று உம்முடைய வார்த்தையில் நீர் கூறியுள்ளீர். இப்பொழுது, கர்த்தாவே, இந்த மக்களை பரிசுத்தமாகவும் அற்பணிக்கப்பட்டவர்களாகவும் செய்யும், ஆதலால் நாங்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல் அதை எடுக்க ஏதுவாயிருக்கும். 105. ஆகவே இப்பொழுது, பிதாவே, முதன்முறையாக இராப்போஜனம் எகிப்திலே கொடுக்கப்பட்டது என்று நாங்கள் உணர்ந்து கொள்ளுகிறோம். ஆட்டுக்குட்டியும் அப்பமாகிய, இராப்போஜனத்தை எடுத்த அந்த மக்கள், அவர்கள் வெளியே சென்ற போது, நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் பிரயாணம் செய்தனர்; அவர்கள் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்த போது அவர்களில் ஒருவரும் பெலவீனமாக இல்லை. அவர்கள் இராப்போஜனத்தை எடுத்திருந்தனர். தேவனே இரக்கமாயிரும். எல்லா வியாதியஸ்தரும் சுகமாக்கப்பட வேண்டுமென்றும் இழந்து போன எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உறைந்து போய், அக்கறையில்லாதவர்கள் தேவனுடைய அக்கினிக்கு அருகில் வந்து தங்கள் ஆத்துமாக்களை அனலாக்கிக் கொள்ளட்டும். இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது எங்களை மன்னியும். எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய குமாரன் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். 106. நம்முடைய தலைகள் வணங்கியிருக்கின்ற வேளையில், (சகோதரன் பியானோ கருவியில் சுருதியை அளிக்கையில்) இங்கு தங்கள் கையை உயர்த்தி “சகோதரன் பில், நான் - நான் உத்தமுமாக... ஆத்துமாவின் நிலைக்காக என்னை நீங்கள் நினைவு கூறும்படி நான் - நான் - நான் விரும்புகிறேன். நான் - நான் - நான் பரிசுத்த ஆவியை பெற விரும்புகிறேன். நான் - நான் - நான் பரிசுத்த ஆவியை பெற விரும்புகிறேன்'' என்று கூறும் நபர் இங்கு இருப்பாரோவென்று நான் வியக்கிறேன். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா...-?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை, உம்மை, உம்மை, உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை, உங்களையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஸ்திரீயே, உம்மையும், உம்மை, உம்மை, சகோதரனே, என்னே, எல்லா இடங்களிலும் கரங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே உங்கள் கரத்தை நான் காண்கிறேன். பரிசுத்த ஆவியைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா, சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரு நெருங்கின நடையை நீங்கள் விரும்புகிறீர்களா. நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே, நாம் நம்முடைய கர்த்தருடைய வருகைக்கு அருகாமையில் இருக்கிறோம். எல்லா இடங்களிலும் அற்புதங்களும், அடையாளங்களும் - தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, நிச்சயமாக - எனக்கு அவருடைய வார்த்தையைக் குறித்த சில கருத்துக்களை எனக்கு அளிக்காத வரை நான் சென்று அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யத்தக்கதாக பரிசுத்தாவியால் அபிஷேகிக்கப் பட்டு, திரும்ப வந்து வார்த்தையை பிரசங்கித்து எல்லா இடங்களிலும் அதை ஸ்தோத்தரித்து, இந்த காரியங்களுக்கு செவி கொடுக்க தேவன் என்னை அனுமதிப்பதில்லை. அவர் அதை எனக்கு கொடுக்க மாட்டார். ஆதலால் நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். 107. நீங்கள் இயேசு கிறிஸ்து இல்லாமல், பரிசுத்த ஆவி இல்லாமல் இருப்பீர்களானால், அந்த பரிசுத்தாவியைப் பெறாமல் நீங்கள் இளைப்பாறுதலை கொண்டிருக்க தேவன் விடாதிருப்பாராக. வஞ்சிக்கப்படாது இருங்கள். நீங்கள் இந்த உறைந்து போன உலர்ந்த கண் அறிக்கைகளை செய்து பரிசுத்தாவியையுடையவராய் இருக்கின்றீர் என்று சொல்லாதீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் போது பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்வதில்லை. ஆவியைப் பெற நீங்கள் விசுவாசம் கொள்வதில்லை. அது ஒரு வரம் ஆகும். பவுல், ''நீங்கள் விசுவாசித்த பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா-?“ என்று கூறினான். ஆகவே விசுவாசியுங்கள். தேவன்தாமே அதை உங்களுக்கு அருளுவாராக. இப்பொழுது, பிதாவே, தங்கள் கைகளை உயர்த்தியுள்ள இவர்களுக்கு, இப்பொழுது பரிசுத்த ஆவி என்னும் நபரை அவர்களுக்கு அளிப்பீராக. இந்த அநேகருக்குள் ஆழமாக அவர் வருவாராக - மேலே உயர்த்தப்பட்ட பத்து அல்லது பதினைந்து கரங்கள் உயர்த்தப்பட்டன. நிலைபேறுடைய (Being) உம்மையே ஞானஸ்நானமாக இவர்கள் ஒவ்வொருவருக்கும் அளிப்பீராக. இவர்கள் தாமே தங்கள் ஜீவியங்களில் அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும் விதத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படட்டும். இவர்கள், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'' என்று இயேசு கூறின விதமாக அவர்கள் எல்லாவிதமான அடையாளங்களையும் காண்பார்கள். பிதாவே, இதை அருளும். உம்முடைய குமாரனின் நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் தாழ்மையுடன் ஜெபிக்கிறோம். ஆமென். கேள்விகளும் பதில்களும் COD #4 54-05-15 கேள்வி:25. கத்தோலிக்க சபையுடன் பிராட்டெஸ்டென்ட் சபை கொண்டிருக்கின்ற தொடர்பு எந்த விதமானது என்ற கூற விழைகிறீர்-? 26. "மிருகத்தின் சொரூபம்'' என்றால் என்ன அர்த்தம்-? 24. இப்பொழுது, தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு முதலாவதிற்கு நான் பதிலளிப்பேன். நான் கூறினேன், கத்தோலிக்க சபை... கடந்த இரவு நாம் பார்த்தோம், மிருகத்தின் முத்திரையானது ரோமிலிருந்து வரவேண்டுமென்று நாம் பார்த்தோம். அது சரியா-? அது ரோமாபுரியைத் தவிர வேறு எந்த தேசத்திலிருந்தும் வராது. அங்கேதான் அது சிங்காசன மிட்டிருக்கிறது, அங்கே தான் அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க ஜனங்களுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ என்னிடம் ஒன்றுமில்லை என்று நான் கூறியுள்ளேன். நாமெல்லாரும் பரலோகத்திற்கு செல்ல முயன்று கொண்டிருக்கின்ற மானிடர்கள். 25. போதிக்கிறதில் போப் ஒரு ஆள், காண்டர்பரியின் ஆர்ச் பிஷப் மற்றொருவர் ஆவார், மற்றொருவர், மற்றொருவர், மற்றொருவர்; நானும் போதகர்களில் ஒருவன், அவ்வளவு தான். நான் ஒருக்கால் ஒரு அதி தீவிர மூடபக்தி உள்ளவன் என்றும், நான் தவறாயிருக்கிறேன் என்றும் அவர்கள் போதித்து கூறுவர். எனக்கு ஒரு உரிமை. வேத வசனத்தினால் அதை நான் நிரூபிக்கக் கூடுமானால் அல்லது நான் ஒரு அதிதீவிர மூடபக்தியுள்ளவன் என்று வேத வசனத்தைக் கொண்டு அவர்களால் நிரூபிக்கக் கூடுமானால் நான் ஒரு மூடபக்தியுள்ளவன் தான். ஆனால் அவர்கள் தங்களுடைய ஸ்தாபிதத்தில் தவறாயிருக்கின்றனர் என்று வேத வசனத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியுமானால், அப்படியானால் அது தவறு தான்; வேத வசனம் சரியானது. இப்பொழுது ஒரேயொரு இடம் மாத்திரம் உங்களுக்கில்லை, அது வேதாகமம் முழுவதுமாக எல்லா இடத்திலும் வரவேண்டும். 26. இப்பொழுது, நான் 'கத்தோலிக்க சபைதான் தாய் சபை'' என்று கூறினேன், அது முற்றிலும் சரியானதே. சபை ஸ்தாபனங்களை எடுத்து கொள்வோமானால், கத்தோலிக்க சபை தான் தாய் சபை. முதலாவதாக உருவாக்கப்பட்ட முதல் சபை கத்தோலிக்க சபை தான், சுமார் .... சிறந்த வரலாற்றில், சுமார் கி.பி.606ல் இருக்க காண்போம், அது ஆதி பிதாக்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்று அப்போஸ்தலர்களின் காலத்தில் இருந்திருக்கும். அவர்கள் மரித்து போய் சிறு கொள்கைகளுடன் சிதறிப் போகத்துவங்கினர். ஆகவே மனந் திரும்பச் செய்யப்பட்ட ரோமர்கள், ரோம சாம்ராஜ்ஜியம், நாட்டை கட்டுக்குள் கொண்டு வந்தது, பிறகு சபையும் நாடும் ஒன்று சேர்ந்து "உலகளாவிய மதம்'' என்ற ஒரு மதத்தை ஆரம்பித்தனர். "கத்தோலிக்கம்” என்னும் வார்த்தைக்கு “உலகளாவிய'' என்று அர்த்தம் ஆகும். அவர்கள் சபையை ஸ்தாபித்தனர், அது தான் முதலாவதான மதம், கிறிஸ்தவ மதம், உலக சரித்திரத்திலே ஸ்தாபிக்கப்பட்ட ஒன்று. 27. யூத மதம் ஒரு ஸ்தாபனமாக இருந்ததில்லை, அது ஒரு சுதந்திர ஜனமாகும். அவர்கள் சபைகளைக் கொண்டிருந்தனர், ஆனால் ஸ்தாபனம் அல்ல. தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் அல்ல ஒரு தேசத்தினுடனே மட்டும் இடைபடுகிறார். அது ஒரு தேசம் ஆகும். 28. ஆகவே இப்பொழுது. கத்தோலிக்க சபைதான் முதலாவது ஸ்தாபனமாகும். அந்த ஸ்தாபனம் என்ன என்பதை கண்டு பிடிக்கத்தக்கதாக வேதாகமத்திலிருந்து அதை நாம் எடுத்தோம். ஆகவே தேவனுடைய வார்த்தையின்படி, அது தனியொரு மனிதனால், ஒரே மனிதனால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வேதத்தின்படி அந்த மனிதன் ரோமாபுரியின் ஏழு மலைகளின் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஒரு சபையில் இருக்க வேண்டும். அங்கே ...... அவன் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தேசத்திலும் அரசாளுகிற வல்லமையை, மத சம்பந்தமான அரசாளுகிற வல்லமையை கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கிறான் மற்றொவன் உலகத்தில் கிடையாது. 29. ஆகவே-ஆகவே கம்யூனிசம், இயேசு பேசின அந்திகிறிஸ்து அல்ல- அல்ல என்று நாம் பார்த்தோம். ரஷ்யாவைபோல, கம்யூனிசம் ஒரு தேசம் அல்ல, கம்யூனிசம் ஒரு ஆவி ஆகும். அமெரிக்கா - அதனுடன் அது சபைகளில் இருக்கிறது, அது ஜனங்களுக்குள் இருக்கிறது, அது வியாபாரத்தில் இருக்கிறது, அது எல்லா இடத்திலும் இருக்கிறது. கம்யூனிசம், அதனுடைய ஆவி, பள்ளிகளில் இருக்கிறது, வீடுகளில் அது இருக்கிறது, எல்லா இடத்திலும் இருக்கிறது. 30. பிறகு - பிறகு அவர்கள் இந்த சபையை ஸ்தாபித்தவுடன் அது முரணாக ...... நாம் இப்பொழுது ஏழு சபை காலங்களையும், தீர்க்கதரிசனத்தையும், இங்கே சரியாக நமக்கு வேதத்தின் மூலமாக தேவன் கொண்டு வந்த வழியை பார்த்தோம். ஒவ்வொரு காலமும் வேதத்தின்படியேயும், வரலாற்றின் வாயிலாகவும் வேதாகமத்தின்படியேயும் நாம் பார்த்தோம்; ஒவ்வொன்றும் அந்த நேரத்தில் இருண்ட காலங்களினூடாக வந்தது. பிறகு இருண்ட காலத்தில் கத்தோலிக்க சபை உருவாக்கப்பட்டது. 31. பிறகு சீர்திருத்தம் வந்தது, அது மார்டின் லூத்தர் ஆகும். மார்டின் லூத்தர் ஒரு வெளிச்சத்தைக் கொண்டிருந்தார். அந்த சீர்திருத்தத்தில் அந்த வெளிச்சமானது, ''விசுவாசத்திகுலே நீதிமான் பிழைப்பான்; விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்” என்பதைக் கொண்டிருந்தது. அவர்கள் அதை (இராப் போஜனத்தை), ''இது கிறிஸ்துவின் சரீரம்'' என்று கூற வேண்டிய வர்களாக இருந்தனர். அவர் ஒரு ஜெர்மானிய மதகுருவாயிருந்தார். அவர் அதை மறுத்து, அதை அவர் தரையில் எறிந்து ''இது கிறிஸ்துவின் சரீரம் அல்ல; இது வெறும் அப்பம்-!'' என்றார். அப்படி செய்ததின் மூலம், அவர் கத்தோலிக்க சபையை துறந்தார், ஆதி சீர்திருத்தத்தில் அவர் வெளியே வந்தார். மார்டின் லூத்தர் அதைச் செய்தார், அது ஒரு அருமையான அசைவாகும். 32. இப்பொழுது, லூத்தர் தன்னுடைய தவறைப் புரிந்தார், கத்தோலிக்க சபை செய்தது போல லூத்தர் இன்னுமொரு குழுவை ஸ்தாபித்தார், ஜனங்களை ஸ்தாபித்தார். 33. பிறகு, நேரடியாக ஒரு புது வெளிச்சம் வந்தது. அந்த புது வெளிச்சம் வந்த போது, தேவன் தம்முடைய ஜனங்களோடு வெளியே வந்தார். லூத்தரன் சபையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அந்த ஜனங்கள், அவர்கள் சபையில் தங்கியிருக்க வேண்டிய தாயிற்று. அதே விதமாகத்தான் கத்தோலிக்கரில் அநேகர் வெளியே வந்து லூத்தரன்களாயிருந்தனர். நல்லது, பிறகு வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் செய்தியுடன் வந்த போது, அப்பொழுது லூத்தரன்களில் அநேகர் தங்கள் சபையை விட முடியாதிருந்தனர்; ஆனால் அவர்களில் அநேகர் செய்தனர். வெஸ்லி சபையை உண்டாக்கினார். 34. நீதிமாகுக்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதலிற்கு பிறகு, பெந்தெகொஸ்தே வந்தது. அப்பொழுது பெந்தெகொஸ்தே, அநேகர் மெத்தோடிஸ்டு இன்னும் பலவற்றிலிருந்து வெளியே வந்து பெந்தெகோஸ்தேயினராக ஆயினர். ஏனெனில் அது ஒரு மேலான வெளிச்சமாக இருந்தது. இப்பொழுது மற்ற எல்லாரைப் போலவே சரியாக பெந்தெகோஸ்தே ஸ்தாபனமாகிவிட்டது. 35. இப்பொழுது, வேதாகமம் அதைக் கூறுகிறது. இவைகள் கண்டிப்பான வார்த்தைகளாயிருக்கிறது, ஆனால் அவைகளை வேதத்திலிருந்து நான் வாசிக்கிறேன். நீங்கள் உங்கள் டாக்டர் அல்லது வேறு சிலர் கூறுவதைக் கேட்கிறீர்கள், ஆனால் நானோ வேதவசனத்திலிருந்து போதிக்கிற உங்கள் சகோதரன் ஆகும். வேதாகமம் கத்தோலிக்க சபையை "ஒரு விபசாரி, ஒரு வேசி, வே-சி.'' என்று அழைக்கிறது. அதை பின்பற்றின பிராடெஸ் டெண்டு சபைகளை அவர், தாய்கள் ..... அல்லது அவர்கள், ''இந்த தாயின் வேசிகள்.'' என்று அழைத்தார். இருந்த தொடர்பு என்னவென்றால், கத்தோலிக்க சபையானது காரியத்தை ஸ்தாபித்து அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த வெளிச்சத்தை அல்லது அப்பொழுது அவர்கள் என்ன வைத்திருந்தனரோ அதை எல்லா ஜனங்களும் விசுவாசிக்கும்படி செய்தனர். லூத்தரன்கள் அதே காரியத்தைச் செய்தனர். ஆகவே அவள் அந்த விதமான ஒரு மகத்தான ஸ்திரீயாயிருந்தாள் என்று வேதாகமம் கூறுகிறது. 36. இப்பொழுது அந்த விதமான ஸ்திரீ என்றால் என்ன-? ஒரு ஸ்திரீ விபசாரம் செய்து கொண்டிருப்பது என்பதாகும். ஆகவே சபைகள் ஜனங்களுடன் ஆவிக்குரிய வேசித்தனம் புரிந்து கொண்டிருக்கின்றன. பாருங்கள்-? அவர்கள் அப்படித்தான், அவர் கள் அப்படித்தான். அதை போதிக்கின்ற வேதாகமம் இதோ இருக்கிறது, வேதத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத பிரமாணங்கள் மற்றும் இன்னும் சில காரியங்களை அவர்கள் உண்டாக்கினர். ஆகவே, இது ஏறக்குறைய கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நான் இங்கே நின்று, எந்த ஊழியக்காரனாகிலும், எந்த நேரத்திலும், இங்கே வந்து எடுத்து. . . உங்களுடைய பாடப்புத்தகத்தை, உங்கள் பிரமாணத்தை அல்ல, ஆனால் வந்து வேத்தை எடுத்து, வேதத்தின் வெளிச்சத்தில், இது தவறு என்று நிரூபிக்க கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். 37. ஆகவே முரண்பாடுகளைக் குறித்து, அவர்கள் “எதிர்முரண்பாடுகள்-!'' என்று கூறுகின்றனர். எவராவது வந்து வேதாகமத்தில் ஒரு முரண்பாட்டை எனக்கு காண்பிப்பார்களானால் இரண்டு மாதச் சம்பளத்தை தருவதாக நான் அறிவித்து இருக்கிறேன். அது அங்கேயில்லை. அது அங்கிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது அங்கேயில்லை. வேதாகமம் அதற்குத்தானே முரண் பாடு கொண்டதாக இருக்குமானால், அது உபயோக மற்றதாக இருக்கும், உங்களால் அதை விசுவாசிக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக உள்ளுக்கம் பெற்றதாயிருக்கிறது. வேதாகமத்தில் எந்த ஒரு முரண்பாடும் கிடையாது. 38. இப்பொழுது பிராடெஸ்டென்ட் சபை, அதினுடைய ஸ்தாபனத்தில், (தேவனுடைய வார்த்தையின்படி) அதே காரியத்தை கத்தோலிக்க சபையுடன் இணைத்து இருக்கின்றது. 39. இப்பொழுது, கத்தோலிக்க மக்களுக்கு விரோதமாக என்னிடம் ஒன்றும் கிடையாது. இங்கே இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிற என்னுடைய அருமையான நண்பர்களில், சிலர், கத்தோலிக்க ஜனங்களின் வளர்ச்சியில் வந்தவர்கள். இங்கே, கடந்த இரவிற்கு முன்பு, பரிசுத்த ஆவியின் மூலமாக பிராட்டெஸ்டெண்ட் மற்றும் கத்தோலிக்கத்தைக் குறித்து ஒரு கடுமையான செய்தியை நான் அளித்த போது, அந்த கத்தோலிக்கர் நேராக இங்கே பீடத்திற்கு நடந்து வந்து என்னுடைய கையை குலுக்கினர். அவர்களும் நம்மை போன்று அதே விதமான மானிடர்கள் ஆவர். 40. கத்தோலிக்க மதகுருக்களுடன் உங்களால், விவாதிக்க முடியாது, ஏனெனில் இந்த வேதாகமம் தான் எல்லா வார்த்தையாயிருக்கின்றது என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள், "அது சபை தான்" என்று கூறுவார்கள். நாம், "அது வேதாகமம்தான்'' என்று கூறுகிறோம். 41. கத்தோலிக்கர், ''கத்தோலிக்கர்களாகிய நாங்கள் சபைக்கு சென்று ஆராதிக்கிறோம். பிராடெஸ்டென்டுகளாகிய நீங்கள் வீட்டிலே இருந்து வேதாகமத்தை படிக்கிறீர்கள், '' என்று கூறுகின்றனர். 42. நான், "ஆமாம், நீங்கள் சபைக்கு சென்று வழிபடுகிறீர்கள், ஆனால் எதை-?'' என்றேன். அது தான் அடுத்த காரியமாகும், பாருங்கள். 43. இப்பொழுது, ஆனால் தேவன் தாம் தம்முடைய வார்த்தையில் இருப்பதாகக் கூறினார். இது தேவனுடைய வார்த்தை. நான் அதை விசுவாசிக்கிறேன். நான் ஒரு வேதாகம வழிபாடு செய்பவன். அதன் காரணமாகத்தான் பிராஸ்டெண்ட் கொள்கையுடனும், அதனுடைய - அதனுடைய சபை ஸ்தாபனத்துடன் நான் இணங்காமல் இருக்கிறேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தையாக இல்லாத காரியங்களை அவர்கள் போதிக்கின்றனர். ஆகவே என்னால் அதனுடன் இணங்காதிருக்கத்தான் முடியும். நான் அவர்களுக்கு எதிராக சர்ச்சை உண்டு பண்ணுவதில்லை, இல்லை, ஐயா, அவர்கள் என்னுடைய சகோதரர் ஆவர். நான் அவர்களுடன் சச்சரவு கொள்வதில்லை, ஆனால் நான் அவர்கள் கருத்துக்கு விரோதமாயிருப்பேன். ஏனெனில் தேவன் என்ன கூறுகின்றாரோ அதை மாத்திரமே எடுத்து கொண்டு, மற்ற எல்லாவற்றையும் பொய்யாக விட்டு விட வேண்டியவனா யிருக்கிறேன். பாருங்கள்-? 44. ஆகவே இப்பொழுது அந்த தொடர்பானது..... இப்பொழுது வேதாகமம் அந்த ஸ்திரீ, கத்தோலிக்க சபை, வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 17வது அதிகாரத்தில், இவ்விதமாக அழைக்கப் பட வேண்டியளாக இருக்கிறாள், "ஒரு வேசி', அவள் ''வேசிகளுக்கெல்லாம் தாய்'' ஆவாள். ஆகவே ஸ்திரீ ''ஒரு சபையை பிரதிநிதித்துவப் படுத்துகிறாள்,'' என்று வேதாகமம் கூறுவதை நாம் பார்க்கிறோம். ஆகவே அப்படியானால் அவளுக்கு குமாரத்திகள் இருக்குமானால் அவர்களும் வேசிகள்தான், அது பையன்களாக இருக்க முடியாது, அது குமாரத்திகளாகத்தான் இருக்க வேண்டும், ஆகவே அது சபைகளாகத் தான் இருக்க வேண்டும். ஆகவே பிராடெஸ்டென்ட் கொள்கையானது கத்தோலிக்கத்திலிருந்து பிறந்து வெளி வந்தது ஆகும். 45. ஆகவே இப்பொழுது அடுத்ததாக, மிருகம் ..... அல்லது, இது கூறுகின்ற அடுத்த காரியம்: கேள்வி:26 மிருகத்தின் சொரூபம்'' என்றால் என்ன அர்த்தம்-? 46. இது - இது அதனுடன் சேர்ந்த ஒரு கேள்வியாகும், இதைக் கேட்ட நபர் ஒரு நல்ல கேள்வியைக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ..... கத்தோலிக்க சபை தான் அந்த – அந்த மிருகம் என்று வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. மிருகம் என்றால் ''வல்லமை'' என்று அர்த்தம் என்று வேதாகமம் கூறுகின்றது. அது சரியா-? மிருகம், மிருகம் என்றால் வல்லமை என்பதுதான் அதன் அர்த்தமாகும் என்றே வேதம் கூறுகின்றது. ஆகவே மிருகம் ''வாடிகன் நகரம்'', "கத்தோலிக்க குருக்களாட்சி'' ஆகும். அது சரி. ஆகவே இப்பொழுது, அது தான் மிருகம் என்பதாயிருந்த சபையின் வல்லமையாகும். 47. பிறகு பிராடெஸ்டென்ட் சபை கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்து தங்களைத் தாங்களே ஸ்தாபித்துக் கொண் டனர், அது ஒரு சிறிய வல்லமை. அது தான் சொரூபமாகும். 48. ஏதாவது ... ஏதோ ஒன்று என்னுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்டிருக்குமானால், அது என்னைப் போலத்தான் காட்சியளிக்க வேண்டும். இந்த சபையின் சாயலின்படி ஏதோ ஒன்று உண்டாக்கப் பட்டிருக்குமானால், அது சபையைப் போன்று தான் காணப்படவேண்டும். 49. ஏதோ ஒன்று செய்யப்பட்டது, ஒரு மிருகம் ..... மிருகத்திற் கென்று ஒரு சொரூபம் உண்டாக்கப்பட்டது, அது லூத்தர் - கொள்கை, மெத்தொடிஸ்டு - கொள்கை, பாப்டிஸ்டு - கொள்கை, பெந்தெகொஸ்தே - கொள்கை, பரிசுத்தர்- கொள்கை, இந்த எல்லா கொள்கை , (ism) இசம்களும், ஒரு ஸ்தாபனமாக உருவாகிக் கொண்டு, மிருகத்தைப் போலவே ஒரு சொரூபத்தை உண்டாக் கினது. இதோ அது இங்கேயுள்ளது. 50. 'அப்படியானால் சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் கூற முனைவதென்னவென்றால், எல்லா கத்தோலிக்கர்களும் எல்லா மெத்தோடிஸ்டுகளும், எல்லா பாப்டிஸ்டுகளும் எல்லாம்...-? '' நான் அதைக் கூறவில்லை. 51. ஆயிரம், ஆயிரம், பத்தாயிரங்கள் கணக்கான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் அந்த சபைகளில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஸ்தாபனங்களில், அவர்கள் அவர்களை ஒரு போதனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர், அவர்கள் அதற்கு நிற்கமாட்டார்கள். ஒரு-ஒரு சபை, அது ஸ்தாபித்து கொள்ளும் போது, அது ஒரு போதகத்தின் கீழ் வந்து விடுகின்றது. 52. வேதாகமத்தை தவிர வேறு எந்த ஒரு போதகமும் என்னிடம் கிடையாது. இதுதான் தேவனுடைய போதகமாகும், பரிசுத்த ஆவியானவர் அதனுடைய வியாக்கியானி ஆவார், அவர் ஒரு வெளிச்சத்திலிருந்து மற்றொரு வெளிச்சத்தை அவர் கொண்டு வருகிறார். இன்று நான் பிரசங்கிக்கும் சுவிசேஷம், நான் இன்னும் நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேனானால், அப்படியிருக்கு மானால், இன்னும் அதிகமான வெளிச்சம் இருக்கும். அது மாற்றமில்லாமல் எப்பொழுதுமே அதே விதமாக வந்திருக்கிறது. 53. உன்னுடைய பெரிய - முப்பாட்டனார் பாட்டியை பார்க்கச் சென்ற போது, மாட்டு வண்டியில் பயணம் செய்தார், அப்பா, அம்மாவை பார்க்க டி - மாடல் காரில் சென்றார். இப்பொழுது நாம் ஏறக்குறைய ஜெட் விமானத்தில் செல்கிறோம். பாருங்கள், நாம் முன் சென்று கொண்டேயிருக்கிறோம்; விஞ்ஞானம், முன் சென்று கொண்டேயிருக்கிறது. கல்வி முன் சென்றுக் கொண்டிருக்கிறது. சுவிசேஷமும் அவ்விதமே முன் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே வேதாகமும் அவ்விதமாக இருக்கும் என்று கூறுகிறது, ''அவர்கள் இங்கும் அங்கும் ஓடுவார்கள், அறிவும் பெருகிப்போம்.'' ஆகவே அதுதான் அந்த இணைப்பு. அதன் காரணமாகத்தான் ..... 54. பிராடெஸ்டென்ட் ஸ்தாபன சபைகளும் கூட மிருகத்தின் சொரூபம் தான், ஏனெனில் அது கத்தோலிக்க கொள்கை போல முற்றிலும் சரியாக ஸ்தாபித்து கொண்டது. தம்முடைய சபையானது எந்த காலத்திலும் ஸ்தாபித்து கொள்ள வேண்டுமென்று தேவன் கட்டளையிடவேயில்லை, ஆனால் அவர் அதை எப்பொழுதுமே கடுமையாக கடிந்து கொண்டார்-! இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா-? (சபையார் "ஆமென்'' என்கின்றனர். -ஆசி] ஜனங்கள் அல்ல; சபை-! 55. அவர்கள் ஜனங்களை ஒரு-ஒரு வெளிச்சத்தின் கீழ் கொண்டு வர முயன்ற போது... இங்கே, ஜனங்கள் உங்களை மாட்டு வண்டியில் சுற்றி வரச் செய்ய முயன்றால் எப்படி யிருக்கும்-? உங்களால் அதை வரவேற்கமுடியாது; நாம் இன்னும் மேலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே அப்பொழுது இருந்து வழியும் இதுவே ஆகும். எவராவது என்னிடம் “ஓ, நீர் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் இது, அது” என்று கூற முயன்றால். நானோ வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறேன்-! நான்... ஊழியக்காரர்களுடன் அது தான் ஒரு தொந்தரவாக இருக்கின்றது, அவர்கள் எப்பொழுதுமே பின்நோக்கிப் பார்க்கின்றனர். 56. இங்கே, ஒரு பிரஞ்சு விஞ்ஞானி, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், “ஒரு மனிதன் மணிக்கு முப்பது மைல் வேகத்திற்கு மிக வேகமாக சென்றால், புவியீர்ப்பானது அவனை பூமியிலிருந்து எடுத்துச்சென்று விடும். மணிக்கு முப்பது மைல்-!'' என்று கூறினார். நல்லது, விஞ்ஞானமானது இன்றைக்கு அதை பின்னால் சென்று குறிப்பிடுமா-? அது அப்படி அல்ல-! இல்லை, ஐயா. அவனை மணிக்கு ஒன்பது அல்லது பத்தாயிரம் மைல் வேகம் செல்லும் அளவிற்கு செய்துள்ளனர். ஆம், சிலசமயங்களில் ஒரு ராக்கெட்டில், இன்னுமாக மணிக்கு ஆயிரத்து அறுநூறு மைல்கள் வேகமாக இருக்கின்றது. அது இன்னுமாக அவனை முன்னே கொண்டு சென்று கொண்டிருக்கிறது-! 57. விஞ்ஞானம் மனிதனை, முன்னே, இன்னும் முன்னே கொண்டு சென்றிருக்கிறது, அவனுடைய மனதிலுள்ளதைக் காட்டிலும் மகத்தான காரியங்கள்..... ஆகவே அவன் ஒரேயொரு காரியத்தை, அறிவின் விருட்சத்தைக் கொண்டிருக்கிறான். ஊழியக்காரர் அளவில்லாதிருக்கின்ற அவருடைய ஆவியால் அவனை கொண்டு சென்றதைப் பார்க்கிலும் இன்னுமாக மேலே கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அது என்னவென்பது இதோ இருக்கிறது. விஞ்ஞானம் சில வருடங்களுக்கு முன்னால் என்ன கூறினது என்பதை விஞ்ஞானமே திரும்பி பார்ப்பதில்லை; விஞ்ஞானமானது இப்பொழுது எதை அவர்கள் கொண்டிருக்கிறார்களோ அதை எடுத்து, வேறு ஒன்றிற்காக அது முன்னே சென்று கொண்டிருக்கிறது. 58. ''நல்லது, அதைக் குறித்து மூடி என்ன கூறினார் என்று பார்ப்போம், அதை குறித்து வெஸ்லி என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்'' என்று நீ ஒரு பிரசங்கியை கேட்கிறாய், அவர்கள் அதைக்குறித்து என்ன கூறியிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. அதைக் குறித்து இப்பொழுது தேவன் என்ன கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அது தான். இன்னும் மகத்தானவற்றிற்காக நான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்-! அது தான் அதன் காரணமாக ... 59. வேதாகமம், "மிருகத்தின் வாயிலிருந்து மூன்று அசுத்த ஆவி புறப்பட்டு வந்தது'' என்று கூறுகிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா-? "அசுத்த ஆவிகள்'', ''தவளைகளுக்கு ஒப்பானவை" என்றது. தவளை எப்படி பார்க்கிறது என்று எவரா வது கவனித்திருக்கிறீர்களா-? தவளை எப்பொழுதுமே பின்நோக்கித்தான் பார்க்கும், அது முன்நோக்கி பார்க்காது: பின்நோக்கி பார்க்கும், எப்பொழுதுமே பின்புறமாக, பின்நோக்கி பார்க்கும். 60. ஆனால் எசேக்கியேலில், நான்கு வித்தியாசமான தலைகளைக் கொண்டிருந்த நான்கு ஜீவன்கள், அவைகள் நேர் முகமாக பார்த்துக் கொண்டிருந்தன, அவைகளால் பின்னால் செல்ல முடியாதிருந்தது. அவைகள் எப்போழுதுமே நேர்முகமாகச் சென்று கொண்ட்டிருந்தன. அவைகள் எங்கு சென்றாலும் இவைகள் நேர்முகமாகச் சென்று கொண்டிருந்தன. வித்தியாசத்தை பாருங்கள்-? 61. இப்பொழுது, அதுதான் பிராடெஸ்டென்ட் கொள்கை கத்தோலிக்க கொள்கையுடன் கொண்டிருக்கின்ற தொடர்பாகும். 62. ஆகவே நீங்கள் எல்லோரும் கத்தோலிக்கரையே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் "பானை கைப்பிடி வைத்த வெந்நீர் கொதிக்க வைக்கும் பாத்திரத்தை 'கறுப்பு' என்று அழைக்க முடியாது''. அது சரி. 63. ''நீ ஒரு கிறிஸ்தவகு-?'' என்றால், 64. ''நான் உங்களுக்கு விளக்கி கூறவேண்டுமானால் நான் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவன்.'' ஆமாம். அவ்விதமாக நீ கூறுவது அதனுடன் ஒரு சம்பந்தமுமில்லை. நீ அங்கே இருக்கின்ற ... எங்கோ ஒரு பண்ணையைச் சேர்ந்தவன் என்று கூட கூறிவிடலாம். 65. "ஏன், நான் கத்தோலிக்க சபையை சேர்ந்தவன்.'' அது இன்னுமாக உன்னை ஒரு கிறிஸ்தவகுகச் செய்வதில்லை. பாப்டிஸ்டு அல்லது மெத்தோடிஸ்ட் சபையைச் சேர்ந்திருந் தாலும் உன்னை ஒரு கிறிஸ்தவனாக ஆக்குவதில்லை. 66. ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கிறிஸ்தவன் என்கிற வார்த்தைக்கு ''கிறிஸ்துவைப் போல்” என்று அர்த்தம். அதை உன்னால் செய்ய முடியவில்லை என்றால், உனக்குள்ளாகவே அதை உன்னால் கிரியை செய்ய முடியவில்லையென்றால், அதைச் செய்ய உனக்கு ஒரு வழியும் கிடையாது. நீ உன்னைத் தானே மறக்க வேண்டும், உனக்குத்தானே நீ மரிக்க வேண்டும், கிறிஸ்து உனக்குள் வந்து உனக்குள் கிறிஸ்துவின் ஜீவியத்தை செய்ய விட வேண்டும். 67. "ஒருவன் ...'' இங்கே இயேசு, "ஒருவன் ஆவியிகுலும் ஜலத்தினாலும் பிறவாவிட்டால் இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்” என்று கூறினார். அவன் ஒரு கத்தோலிக்கன், மெத் தோடிஸ்ட், பாப்டிஸ்ட் அல்லது என்னவாயிருந்தாலும் உங்கள் பாவம் மன்னிக்கப்படுவதற்கு தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள். அது இயேசுவின் சொந்த வார்த்தையாகும். ஆகவே இப்பொழுது நீங்கள் மெத்தோடிஸ்டாக இருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று, தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள் என்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் ஒரு கத்தோலிக்கராக இருந்து அதே காரியத்தை செய்துள்ளீர்களானால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள். 68. ஆனால் நீங்கள் அந்த கத்தோலிக்க சபை அல்லது மெத் தோடிஸ்ட், அல்லது பாப்டிஸ்ட் சபையின் போதகத்தை விடாமல் பிடித்து கொண்டிருப்பீர்களானால், நீங்கள் இன்னுமாக இழந்து போகப்பட்ட நிலையில் உள்ளீர்கள். அதன் காரணமாகத் தான் இன்றைக்கு உலகத்தின் நிலையை இப்படியாக நாம் கொண்டிருக்கிறோம், ஏனெனில் ஜனங்கள் சரியாக .... அவர்கள், ''அது என்னுடைய மத உணர்ச்சிக்கு எதிரானது” என்கின்றனர். 69. ''தெய்வீக சுகமளித்தலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா -?'' 70. ''அது எங்களுடைய மத உணர்ச்சிக்கு எதிரானது.'' அது உங்கள் சபைக்கு எதிரானது; உங்கள் சபை போதகம் அவ்விதமாக அதை உருவாக்கியுள்ளது, பாருங்கள், சபை என்ன கூறுகிறதோ அதை நீங்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு நீங்கள் கத்தோலிக்கரை நோக்கி கூச்சலிடுகிறீர்கள்; அதே காரியத்தை தான் அவர்களும் செய்கின்றனர். ஆகவே அதுதான் மிருகம் மற்றும் மிருகத்தின் சொரூபம் ஆகும்-! வேதாகமம் கூறுகிறது, ''அதை எடுத்துக் கொள்கிறவன் பரலோக இராஜ் ஜியத்தில் பிரவேசிக்க முடியாது, ஆனால் நாய்களும், சூனியக்காரரும், இன்னும் பலர் இருக்கிற இடத்தில் தள்ளப்பட்டு அக்கனியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள். பரிசுத்ததூதர்கள் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் பிரசன்னத்தில் என்றென்றுமாக வாதிக்கப்படுவார்கள்''. நண்பனே-! அதை விட்டு வெளியே வா, தேவனோடு சரியாக இருந்துகொள்-! ஆம், ஐயா. 71. இப்பொழுது இதை நான் பார்க்கட்டும். நல்லது, அவைகளை நாம் முடித்துவிடுவோம். இப்பொழுது, யாரோ ஒருவர் இன்று என்னிடம் கேட்டார்; இரண்டு அல்லது மூன்று முறைகள் என்னிடம் கேட்கப்பட்டது. கேள்வி:27. சகோதரன் பிரன்ஹாம், "மிருகத்தின் முத்திரையை'' குறித்து பேசுகையில், அவர்கள் உங்கள் தலையில் ஒரு இலக்கத்தை பச்சை குத்துவார்களா அல்லது உங்கள் கையில் ஏதோ ஒன்று பச்சை குத்துவார்கள் என்ற நீங்கள் நம்புகிறீர்களா-? இல்லை ஐயா-! அதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். 72. அது ஒரு புறக்கணிப்பாக இருக்கும்-! நிச்சயமாக-! ''எந்த ஒரு மனிதனும் சபைகளின் சங்கத்தை சேர்ந்தவனாக இருந்தாலொழிய அவனால் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. '' அது உண்மை . இப்பொழுது அது ஒரு ஐக்கியம் போல வந்து, காரியத்தை ஐக்கியப்படுத்தி, அதை ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட மார்க்கமாக கொண்டு வரும். என்னுடைய வார்த்தையை குறித்துக் கொள்ளுங்கள், அது நீண்ட தொலைவில் இல்லை-! அவள் அங்கே சற்று அருகாமையில் இருக்கின்றாள் என்பதை நீங்கள் காண்பீர்கள். 73. இந்த காரியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதிருக்கிற காரணம் என்னவெனில், எல்லா நேரத்திலும் நீங்கள் இங்கேயே இருக்கின்றீர்கள். கத்தோலிக்கம் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாடுகளுக்கு, ஒரு தடவை என்னை பின் தொடர்ந்து வாருங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள். சகோதரனே, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்ற எல்லாவற்றையுமே அவர்களுக்கு அவர்கள் கூறுகின்றனர். 74. இங்கே தீர்க்கதரிசனத்தில் நாம் கண்டெடுத்தோம், இங்கே வேதாகமம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஒரு ஆட்டுக் குட்டியைப் போல "மதச் சுதந்திரம்' வந்தது, அவர்கள் நேரடியாக அந்த காரியங்களை ஒன்றாக அணைத்தனர், அவன் வலுசர்ப்பத்தைப் போல பேசினான், அவனுக்கு முன்னிருந்த வலுசர்ப்பம் கொண்டிருந்த அதே வல்லமையை அவன் உபயோகித்தான் என்று கூறுகின்றது. அது தான் அமெரிக்க ஐக்கிய நாடுகள்-! அது சரி. 75. சிறிது காலத்திற்கு முன்னர் என்னுடைய நண்டராகிய, ஒரு ஊழியக்காரர் என்னிடம் ''சகோதரன் பிரன்ஹாம், தேவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கீழே விழ விடமாட்டார். ஏனெனில் அதனுடைய அடிப்படையானது அதனுடைய முற்பிதாக்கள் மேலே இருக்கிறது, மதத்தின் மேல் உருவாக்கப்பட்டது'', என்றார். 76. நான், "அவர் யூதர்களையே விட்டு விட்டார்; அவர்கள் கொண்டு போகப்பட்டனர், நாம் கொண்டிருந்ததை விட இன்னும் மேலான ஒரு நிலையை அவர்கள் கொண்டிருந்தனர்'' என்றேன். அது சரி. கடந்து சென்ற ஏதோ சந்ததிக்கு தேவன் மரியாதை கொடுப்பவர் அல்ல; ஒன்று வரிசையில் நட அல்லது நீ இராஜ்ஜியத்திலிருந்து வெட்டப்படுவாய், அவ்வளவுதான். உண்மையாக-! அது சற்று கடினமான ஒன்றாகும், ஆனால் அது உனக்கு நல்லதாகும். அது சரி. அது வேதவசனம். நாம் கொண்டிருக்கிறோம், நாம் ..... 77. இன்று சிக்கல் என்னவெனில், ... உங்களில் வயது சென்றவர்களுக்கு இது தெரியும். நாம் மிக அதிகமான ஹாலிவுட் சுவிசேஷத்தை கொண்டிருக்கிறோம். அது சரி. அதில் அநேக காரியம் அதிகமாக முழு களியாட்ட ஆர்ப்பாட்ட கூச்சலுடன் இருக்கின்றது, அதிகமான கவர்ச்சியுடனும் அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்துடனும், ஊது கருவிகளின் கீச்சொலி மற்றும் இன்னுமாக இருக்கின்றன. "யார் எழுந்து கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வது-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரனே, சரியாக இப்பொழுதே நீ பரலோகம் போவாய்''. அது ஒரு பொய்-! அது ஒரு பொய்யாகும்-!. 78. "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்-!'' ஆகவே அவன் மறுபடியும் பிறந்திருந்தால், அங்கே வந்த அந்த அதே ஆசீர்வாதம் இங்கேயும் அவனிடத்திற்கு வரும். நாம் கடந்த வாரம் அதைக் குறித்து திரும்பத் திரும்ப வேதவசனங்களின் மூலமாக பார்த்தோம். ஆகவே கிழக்கத்திய மக்களிடத்தில், பரிசுத்த ஆவி யூதர்களின் மேல் விழுந்த போது அவர்கள் கீழை நாகரீகத் தொடர்புடைய, கிழக்கத்திய ஜனங்கள், பரிசுத்த ஆவி மகத்தான அடையாளங்களுடனும் வெளிப்படுத்தல்களுடனும் விழுந்தது என்பதை நாம் பார்த்தோம் . இருளோ அல்லது பகலோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏறக்குறைய ஒரு- ஒரு நேரமானது இருக்கும் என்று வேதாகமம் கூறுகின்றது. அது ஒரு விதமான மப்பான நாளாக, சாயங்காலத்தின் கடைசி பாகமான ஒன்றாக அது இருந்தது. ஆகவே அப்பொழுது கடைசியாக மாலையில் சில நிமிடங்களுக்கு சூரியன் வெளியே வரும். ''சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும். அது சரியா-? நல்லது, அது மேற்கத்திய ஜனங்களாகும், புறஜாதிகள் அங்கே முன்னர் யூதர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியை, அதே அடையாளங்களுடனும் வெளிப் படுத்தல்களுடனும் பெற்றுக் கொள்கின்றனர். அது தான். 79. ஆகவே மக்களே, உலகம் உங்களை ஒரு ''தலையில் பித்து பிடித்துள்ள அதிதீவிர மதவைராக்கியம் கொண்ட ஒருவன்” என்று அழைக்கப்போகிறது. அதை அவர்கள் செய்வார்கள் என்று இயேசு கூறினார். வேதாகமம் அதையே கூறுகின்றது. நீங்கள் ஒரு விநோதமான ஜனங்கள், நீங்கள் விநோதமானவர்கள். ஏனென்றால் அது மிகவும் வித்தியாசப்பட்ட ஒன்று ஆகும். 80. என்னுடைய வீட்டண்டை என் சுற்று வட்டாரத்திலும் நான் அதை கவனித்து இருக்கிறேன், அங்கேயிருக்கின்ற ஜனங்கள்; என்னுடைய சிறு பிள்ளைகளை; நாங்கள் சுத்தமாக வைத்து கூடுமானவரை பண்பார்ந்தவர்களாக வாழ நாங்கள் முயற்சிக் கிறோம், ஆனால் அக்கம் பக்கத்தார் பிள்ளைகளுக்குள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குவதை உங்களால் காண முடியும். பாருங்கள்-? அவர்கள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகின்றனர். 81. ஆகவே எனக்குத், காரியங்களை அறிந்து கொள்ளும் ஒரு வழியை உடையவனாக நான் இருக்கிறேன். (அதை நீங்கள் அறிவீர்கள், கூட்டத்தில் அதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்), நகரத்தில் உள்ள மேய்ப்பார்கள் "நல்லது, இப்பொழுது, பில்லி ஒரு நல்ல பையன், அவனுக்கு எதிராக எங்களிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், நம்மைக் காட்டிலும் சிறிது வித்தியாசமான ஜனக்குழுவாக அவர்கள் இருக்கின்றனர்'' என்று கூறுவதை நான் அறிந்துள்ளேன். தேவனுக்கு நன்றி-! அது சரி. தேவனுக்கு நன்றி-! அதுதான் அந்த முத்திரை. நாம் பேசிக்கொண்டிருக்கிற முத்திரை அது தான். 82. கவனியுங்கள், பரிசுத்தாவியை யூதர்கள் பெறுவதற்கு 900 ஆண்டுகளுக்கு முன்னர் பரிசுத்த ஆவி முன்னுரைத்து அது என்னவாயிருக்கும் என்று கூறினதை கடந்த இரவு பார்த்தோம். மைக்கூட்டு... "கணக்கனுடைய மைக்கூட்டு எழுத்தாளன் எருசலேமிற்குள் சென்று அவர்களுடைய நெற்றியில் ஒரு அடையாளத்தைப் போட்டான் அது சரியா-? சபையை தேவன் கடிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதைக் குறித்து பேசினர். கி.பி.96-ல் தீத்து எருசலேமின் மதில்களை முற்றுகை இட்டு, நகரத்தை எரித்து போட்டான். தீர்க்கதரிசனத்தின்படி ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி ஆனது. இன்றைக்கு ஆலயத்தின் ஒரே ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டிருக்கிறது, அது ஒரே ஒரு பழைய சுவர். அங்கே அவர்கள் கற்களைக் குவித்துள்ளனர், அது மழமழப்பாக யூதர்கள் அழுது கதறுகின்ற, அழுகின்ற சுவராக அங்கே இருந்து கொண்டிருக்கின்றது, ஆலயத்தில் விடப்பட்டிருக்கின்ற ஒரேயொரு காரியம் அதுவே. அதே இடத்தில் ஒமரின் மசூதி இருந்து கொண்டிருக்கின்றது. 83. இயேசு “தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லியிருக்கிற படி; பாழாக்குதலை செய்கின்ற அந்த அருவருப்பு நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, ” பிறகு அவர் வளை அடைப்பு குறியில் குறிப்பிடுகிறார் (ஆங்கில வேதாகமத்தில்தமிழாக்கியோன்) (இதை வாசிக்கிறவன் புரிந்து கொள்ளக் கடவன்)” என்று கூறினார். பாருங்கள்-? அது சரி. அதோ அது. அவர் எத்தனை நாள்.... முறைகள் அது புறஜாதிகள் காலம் நிறைவேறும் வரையிலும் அதன் மதில்கள் மிதிக்கப்படும், அதன்பின் யூதரிடத்திற்குத் திரும்ப வருவார். ஆகவே நாம் சரியாக அந்த நேரத்தில் தான் இருக்கிறோம்-! இங்கே கடந்த சில ஆண்டுகளாக யூதர்கள் ஆயிரக்கணக்காக திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரவு நாம் அதை எவ்விதமாக பார்த்தோம் என்பது உங்களுக்கு தெரியும், எப்படி வேத வசனம் பரிபூரணமாக ..... ஒரு செய்தித்தாளை வாசிப்பது போல இன்னும் தெளிவாக அது இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து இன்னும் அதிகமான புரிந்து கொள்ளுதலை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். 84. ஆனால், மேலுமாக அவர்கள் தலையில் போடப்பட்ட அடையாளம் பச்சை குத்தப்பட்ட ஒன்றல்ல. அப்படித்தானே-? அது என்ன-? பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இந்த கடைசி நாளின் அடையாளமாக இருக்கப் போகிறது-? எது-? வேதாகமம் ''கடைசி நாளில் உள்ள ஜனங்களுக்கு தேவனுடைய பரிசுத்த ஆவியே முத்திரையாக இருக்கிறது'' என்று வேதம் கூறுகின்றது. இப்பொழுது அங்கே ... எபேசியர் 4:30, "அன்றியும் நீங்கள் உங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்,'' என்று வேதம் கூறுகிறது. எபேசியர் 1:13 மற்றும் இன்னும் அநேக இடங்களில், அதே காரியத்தைத்தான் கூறுகின்றது, ''பரிசுத்த ஆவிதான் தேவனுடைய முத்திரை." 85. முத்திரை என்றால் என்ன-? அது எந்த ஒன்றானதும் நிறைவுபெறும் வரை ஒரு முத்திரையானது போடப்பட முடியாது. லூத்தரன்கள் முத்திரையிடப்படவில்லை, கிருபையின் யுகத்தின் நாளானது இன்னுமாக நிறைவேறவில்லை; அவர்கள் நீதிமானாக் கப்படுதலை பிரசங்கித்தனர். மெத்தோடிஸ்டுகள் முத்திரையிடப் படவில்லை. இங்கே ஒரு கேள்விக்கு நான் வருகிறேன்; இன்னும் சிறிது - இன்னும் சிறிது நேரம் கழித்து அதை நாம் பார்ப்போம். அவர்கள் முத்திரையிடப்படவில்லை, ஏனெனில் அது நிறைவு பெறவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகமோ தேவனுடைய கிரியைகளின் நிறைவு பெறுதலாக இருக்கிறது-! 86. அவர் கூறினார், "பரலோகத்திலே சாட்சியிருகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என்பவைகளே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்'' நீங்கள் பிதா இல்லாமல் குமாரனைக் கொண்டிருக்க முடியாது, குமாரன் இல்லாமல் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க முடியாது, அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். 87. "பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. ஜலம், இரத்தம் , ஆவி என்பவைகளே. இவைகள் ஒள்றாயில்லை, ஆனால் ஒருமைப்பட்டிருக்கிறது'' என்று அவர் கூறினார். புரிகின்றதா, ''ஒரு முழுமையான முத்தரித்தல்” லூத்தரின் கீழே நீதிமாகுக்கப்படுதல், ஜலம்; இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்படுதல். 88. நீதிமாகுக்கப்படுதல் ரோமர் 5:1 ஆகும், "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.'' விசுவாசத் தினாலே நீதிமாகுக்கப்படுதல். 89. இரத்தத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், எபிரேயர் 13:12, மற்றும் 13 "இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலமாக ஜனத்தை பரிசுத்தம் செய்யும் படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' 90. லூக்கா 24:49, "என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்தி லிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்.'' அப்போஸ்தலர் 1:8, "இந்த பரிசுத்த - ஆவி உங்களிடத்தில் வரும்போது, அப்பொழுது நீங்கள் எருசலே மிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந் தங்களும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். ''இயேசு மறுபடியுமாக திரும்பி வரும் வரையில் நிலைத்திருக்கின்ற ஒரு பரிசுத்த ஆவி-! "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களோடு, உங்களுக்குள், உலகத்தின் முடிவு பரியந்தம்; நான் செய்கிற அந்த- அந்த காரியங்களை நீங்களும் செய்வீர்கள். ''தம்முடைய ஆவியின் மூலம் சபையின் மூலமாக கிரியை செய்தல்-! அவர் ''நீங்கள் இகழப்பட்டு ஏளனஞ் செய்யப்படுவீர்கள். '' என்றார். அவர் ''வீட்டெஜமானாகிய என்னையே பெயல்செபூல் என்று, குறிசொல்லுகிறவர்களின் தலைவன்' என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா-?'' என்றார். "என்னிமித்தம் பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான் களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு களி கூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே''. 91. அது தான் வேதவசனம், பாருங்கள். அதோ அது. ஆகவே, நண்பனே நீ பார், நீ அதை கொண்டிருக்கத்தான் வேண்டும், இப்பொழுது நீ உன்னுடைய தேர்ந்தெடுப்பை செய்தாக வேண்டயவனாயிருக்கிறாய்; நீ ஒரு சுயாதீனன். 92. ஆனால் அதுதான் பிராடெஸ்டென்ட் சபைக்கும் கத்தோலிக்க சபைக்கும் இருக்கின்ற தொடர்பாகும். வேதத்தின் படி .... அவர்களிருவரும் ஒன்றாக, சபையை மாத்திரம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்; இயேசுவை அல்ல, இப்பொழுது, சபையை மட்டுமே பற்றிக் கொண்டிருக்கின்றனர். சபையில் உள்ள மக்கள், இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தேவன் தாமே தங்களுக்கு வழியைத்திறந்து தங்களை ... தங்களுக்கு வெளிச்சத்தை அளியும் என்று ஜெபிக்கின்ற அவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர், அவன் எந்த சபையில் இருந்தாலும் பரவாயில்லை. அது சரி. ஆனால் அவன் தன்னுடைய ஸ்தாபனத்தை பிடித்துக் கொண்டிருப் பானானால் அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்ற வார்த்தை மீறுதல் என்னும் அடையாளத்தை பெற்றுக் கொண்டவன் ஆவான். முரண்பாடான ஒன்று-! ஆகவே கத்தோலிக்கமும் பிராடெஸ்டென்ட்டும், இரண்டும் ஒரே விதமாக, "அவள் ஒரு, வேசியாயிருந்தாள்; வேசிகள், அவளு டைய குமாரத்திகளும் வேசிகளே” என்று வேதம் கூறுகின்றது. இது தெளிவாக இருக்கிறதா-? சரி. கேள்வி:28. ஆகவே பரிசுத்த... இன்னுமாக கைகள் வைக்கப்படுதலினால் பரிசுத்த ஆவி அருளப்படுகின்றதா-? சீஷர்கள் பேதுரு, பவுல், இன்னும் மற்றவர் அதைச் செய்தனர், அது இன்னும் சாத்தியமான ஒன்றா-? பவுல் அதை இந்த விதமாகத் தானே பெற்றான். 93. ஆம், அருமை சகோதரனே, சகோதரியே, இந்த - இந்த குறிப்பை எழுதின யாராயிருந்தாலும் சரி. கைகள் வைக்கப்படுதலினாலே முற்றிலுமாக பரிசுத்த ஆவியானது பெறப்பட வேண்டியதாக இருக்கிறது. 94. இப்பொழுது, அநேக மக்கள் என்னை... நான் ஒரு பெந்தெகொஸ்தேயினனாக குறிக்கப்பட்டுள்ளதால், நான் ஒரு பெந்தெகொஸ்தே என்று கூறுகின்றனர். நான் ஒரு பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்தை சார்ந்தவனாக ஒரு போதும் இருந்ததில்லை. நான் எல்லா ஸ்தாபனங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றவனாக உள்ளேன், தேவனுடைய உதவியைக் கொண்டு அந்த வழியிலேயே நான் இருக்க முனைகிறேன். ஏனெனில் என்னால் சரியாக அந்த பிளவில் நின்று “நாமெல்லாரும் சகோதரர்-! இங்கே வாருங்கள் நாம் ஒன்றாக வழக்காடுவோம்'' என்று கூறமுடியும். 95. தேவனுடைய கிருபையால் நான் முதன்முதலாக முன்பு ஆரம்பித்த போது... இங்கேயிருக்கின்ற ஜனங்களாகிய நீங்கள், என்னுடைய செயலாளர்கள் மற்றும் இங்கு அமர்ந்திருக்கக் கூடிய இவர்கள் இன்று உலகில் நான் பத்து இலட்சம் மற்றும் இன்னும் அதிகமான ஜனங்களுடன் நான் தொடர்பு கொண்டிருப்பேன் என்று அறிவார்கள். ஒரு ஸ்தாபனம் துவக்கப்பட்டிருந்தால் அது எப்படியிருந்திருக்கும்-! பாருங்கள்-? அது சரி. ஆனால் எனக்கு ஒரு ஸ்தாபனம் தேவையில்லை, அது வேதாகமத்திற்கு எதிரானது. ஸ்தாபனத்தில் உள்ள ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று என்னால் கூடுமானவரை நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காரியம். கர்த்தர் ஜனங்களிடத்தில் எனக்கு கொடுத்திருக்கிற செல்வாக்கை ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் மேல் வைப்பதற்கு பதிலாக, நிச்சயமாக அதை அவருடைய மகிமைக் கென்றே உபயோகிப்பேன். அதற்கு உரியவராயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் மேல் அதை நான் வைப்பேன். எந்த ஸ்தாபனமும் உங்களை இரட்சிக்கமுடியாது; அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும். இப்பொழுது, கைகளை வைப்பதின் பேரில், இப்பொழுது, சிறிது வித்தியாசமான ... 96. இப்பொழுது, அருமையான பெந்தெகொஸ்தே ஜனங் களாகிய நீங்கள், என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு நிலைக்கு வந்து, " நாம் சென்று பரிசுத்த ஆவிக்காக காத்திருப்போம்' என்று கூறினால், பெந்தெகொஸ் தேயில் என்ன ஒரு வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது-! 97. ஆகவே நான் இதைக் கூறுகிறேன் ... உங்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்கல்ல. களத்தில் எனக்கு இருக்கும் மிகப்பெரிய உதவி பெந்தெகொஸ்தே ஜனங்கள் தான், ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தல் மற்றும் தேவனுடைய வல்லமையின் செய்தியை விசுவாசிக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் மூக்கை அதற்கு நேராக திருப்புவார்கள். 98. ஆனால் சபைக்கு வெளியே இருக்கின்ற தனிப்பட்ட நபர்கள், நித்திய ஜீவனிற்கு முன்குறிக்கப்பட்டவர்கள், அவர்கள் வருவார்கள். அவ்வளவு தான். ஆனால் முன்குறிக்கப் படாதவர்கள் வரமுடியாது; தேவன் அவ்விதமாகக் கூறினார், "அவர்கள் ஆக்கினைக்காக முன்குறிக்கப்பட்டனர்'' ஆனால் எந்த ஒருவரும் அழிந்து போக வேண்டும் என்று அவருக்கு சித்தமல்ல, ஆனால், அவர் தேவனாய் இருப்பதால், அவர்கள் அதை கண்டனம் பண்ணு வார்கள் என்பதை அவர் கண்டார். ஆதலால் அது – அது அவ்வளவு தான், அவர் அதை முன்பாகவே கண்டார். அந்த காரியங்களை காண்பது தான் தேவனுடைய முன்னறிவு ஆகும். இந்த அதே நாளில் சபை எங்கே நின்று கொண்டிருக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார். தேவன் அதை துவக்கத்திலிருந்தே அறிவார். சபை இன்று எவ்விதமாக இருந்து கொண்டிருக் கின்றதோ அதை தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். இன்றிரவு நான் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பேன் என்று உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பே அவர் அறிந்திருந்தார். அவர் தேவன்; துவக்கத்திலிருந்து முடிவுவரை அவருக்குத் தெரியும். 99. இப்பொழுது, இப்பொழுது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் போதித்துள்ளனர் . . . இப்பொழுது, அநேகமாக இதன் பேரில் நிறைய காரியங்களை என்னால் எடுக்கமுடியும், ஆனால் வார்த்தைக்கு வரவேண்டுமானால் நான் உத்தமமாக இருக்க வேண்டும். ''காத்திருத்தல்'' ("tarrying"') என்கின்ற ஒரு காரியமானது ஒருக்காலும் கிடையாது-! நீங்கள் தவறில் இருக்கின்றீர்கள். காத்திரு என்றால் "ஜெபி'' என்று அர்த்தமல்ல. ''எதிர்பார்த்திரு'' என்று அர்த்தம். மேலேறிச் சென்ற பிறகு, இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு ... சிலுவையிலறையப்படுதல், பிரகாரம் சுத்தமாக்கப்படுதல். பாவ நிவாரண பலியின் நாளுக்கு பிறகு, உயிர்த்தெழுதல் .... அவர் கொல்லப்பட்டபோது, அது பாவ நிவாரண பலியின் நாள், பிறகு மேலேறிச் செல்வதற்கு முன்பு நாற்பது நாட்கள், பிறகு பெந்தெகொஸ்தே. பெந்தெ கொஸ்தே என்ற வார்த்தைக்கு ''ஐம்பது'' என்று அர்த்தம், பாவநிவாரண பலி செலுத்துதலுக்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்பதாகும். 100. பாவநிவாரண பலி செலுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொன்றும், எழுத்துப்பூர்வமாக, பூகோளரீதியாக, தேவன் கூறியவிதமாகவே ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக வந்தாக வேண்டும். ஆகவே பெந்தெகொஸ்தே, அது ஒரு யூபிலி நேரமாக இருந்தது, அறுவடையின் முதற் பலன்களை அவர்கள் கொண்டு வந்த போது, ஒரு யூபிலியைக் கொண்டிருந்தனர். 101. இப்பொழுது, இயேசு வரும் வரைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்தாக வேண்டிய பரிசுத்த ஆவி சபை, அந்த சபையினுடைய முதற் பலன்கள், முதற் பலன் பெந்தெகொஸ் தேயன்று வந்தது. அது பெந்தெகொஸ்தே நேரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக அது இருந்தது; அது சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, பலியானது கொல்லப்பட்ட பிறகு, இயேசு கிறிஸ்து மேலேறிச் செல்லுதல் வரைக்கும் நாற்பது நாட்களாக இருந்தது. அவர் "எருசலேம் வரை சென்று உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள்.'' என்றார். அப்போஸ்தலர் 1... 102. அப்போஸ்தலர் 2, ''பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.'' 103. ஆகவே அப்பொழுது வெளியே இருந்த மத உலகம் அந்த மகத்தான வைதீக சபைகள், வந்து இந்த ஜனங்கள் தள்ளாடி குடித்து வெறித்த மக்களைப் போல இருந்ததைக் கண்டனர். ஆகவே அவர்கள் வந்து இவர்களைப் பார்த்து சிரித்து கேலி செய்து, "இந்த கலிலேயக் கூட்டத்தினரைப் பாருங்கள்-! இவர்கள் எல்லாரும் குடித்து வெறித்துள்ளனர்-!'' என்றனர். தவறான புரிந்து கெள்ளுதலைப் பார்த்தீர்களா-? 104. என்னுடைய கத்தோலிக்க நண்பனுக்கு கூறுகிறேன், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாள் அங்கே இவர்களுடன் இருந்தாள். சகோதரியே, பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளாமல் அவள் பரலோகத்திற்கு வர தேவன் அனுமதிக்கமாட்டாரானால், அந்த விதமாக இருக்குமானால், அதை விட குறைவான ஒன்று உங்களை அங்கே கொண்டு செல்லும் என்று நீங்கள் நீனைக்கிறீர்களா-? இல்லை. ஆகவே நம்முடைய வீண் பெருமையான வீம்பான காரியத்தை விட்டுவிடுவோமாக, அதை நாம் விட்டு விடுவோமாக. 105. சொல்வதற்கென உலகம் வைத்திருப்பவைகளுக்கு எந்தவித கவனத்தையும் செலுத்த வேண்டாம்-! தேவன் சொல்வதற்கென வைத்திருப்பவைகளையே நாம் கவனிக்க வேண்டும். இது தான் தேவனுடைய வார்த்தையாகும். இந்த வரைபடத்தின் படியேதான் நாம் அதை கட்டவேண்டியவர்களாகவுள்ளோம், ஏனெனில் அவர் பேதுரு விடம் "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை,'' என்று கூறிகுர். எல்லா காரியமும் நடந்தேறும். பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராக இருக்கும் என்று அது காண்பிக்கிறது, ஆனால் அதை மேற்கொள்ளமுடியாது. அதை நிறுத்திவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றார்களா-? நீங்கள் சூரியனைக் கூட விரைவாக நிறுத்திவிடலாம். அது சரி. அதையோ உங்களால் நிறுத்த முடியாது. அது முன் செல்ல வேண்டுமென்று தேவன் நியமித்திருக்கின்றார். 106. இங்கே நான் முதன்முதலாக நான் மனம்திரும்பினேன், அங்கே பின்னால் இருக்கின்ற என்னுடைய ஏழை தாயும் கூட எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணினார்கள். என்னுடைய மாமியாரும் ''அவன் மனநல காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டுடியவகுக இருக்கிறான்” என்று கூறிகுர்கள். அந்த நகரத்தின் பிரசங்கிகள், "இன்னும் சீக்கரத்தில் எரிந்து போய்விடுவான்,'' என்றனர். நான் நீண்ட காலமாக எரிந்து கொண்டிருக்கிறேன். அது இன்னுமாக - இன்னுமாக எரிந்து கொண்டிருக்கிறது, எந்நேரத்திலும் இன்னும் பிரகாசமாக. ஏன்-? அது அணைந்து போக முடியாது, அது தேவன் ஆகும்-! எரிந்து அணைந்து போவதற்கு பதிலாக, அது இப்பொழுது உலகம் முழுவதுமாக பரவிக் கொண்டிருக்கிறது. 107. இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஓஹையோ நதியண்டையில். இங்கே சரியாக ஓஹையோ நதியில் நான் ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருக்கும் போது அதே காரியத்தைதான் அவர் கூறினார், உங்களில் அநேகர் அங்கே நின்று கொண்டிருந்தீர்கள், அந்த ஒளி, தூதன், நாங்கள் எங்கேயிருந் தோமோ அந்த இடத்திற்கு நேராக கீழே வந்து, ''இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை கொண்டு வரும்,'' என்றார். ஆகவே அது அதைச் செய்தது. அது .... அவர் இன்னுமாக வரவில்லை, ஆனால் அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள், அது உலகம் முழுவதுமாக எங்கும் பரந்தகன்று சென்றிருக்கின்றது. பாருங்கள்-? ஆகவே இன்று இப்பொழுது, சற்று சிந்தியுங்கள், சென்றுள்ள பிரயாசத்தினால், பல இலட்சக்கணக்கானவர் வந்துள்ளனர். 108. அந்த பிராயசத்தினால் தான் எத்தனை இலட்சக்கணக் கானவர்கள் வந்தனர் என்று கத்தோலிக்க பத்திரிக்கையான ஞாயிறு வருகையாளர் கூட அதைக் குறித்து கூறியுள்ளது. 109. மற்றவர்கள் அதை கேட்டு, ''அது தான் சத்தியம்-! இந்த உலகக் காரியங்களினின்று சரியாக என்னை இப்பொழுது அகற்றிக் கொண்டு, சென்று உண்மையான சுவிசேஷத்தை பிரசங்கிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறுகிறார்கள். 110. அதன் காரணமாக தான் அவர்கள் நம்மை ''முழு சுவிசேஷம்'' என்று அழைக்கின்றனர், அவர்கள் முழு சுவிசேஷத்தை கேலிக் கூத்தாக செய்கின்றனர். ஆனால், சகோதரனே, ஒன்றுமில்லாத பாதி எனக்குத் தேவையில்லை, நான் ...... அது எனக்கு முழு காரியமாக இருக்க வேண்டும். அதில் ஒரு பாகம் நன்றாக இருக்குமானால், அதின் மற்றைய பாகமும் நன்றாக இருக்கும். அந்த முழுமையான சுவிசேஷம்-! 111. இப்பொழுது, கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் திரும்பவுமாக அங்கே வந்தார். பெந்தெகொஸ்தே ஜனங்கள் காத்திருந்தனர், ''அங்கே பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி நிரப்பிற்று''. 112. அதற்கு பிறகு ஒரு முறை கூட அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்க இருக்கவில்லை. பேதுரு இந்த வார்த்தைகளை புறஜாதிகளுக்கு பேசின போது, அவர்கள் ஞானஸ் நானம் பண்ணப்படுவதற்கு முன்பே பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கினார், அது சரியா-? சற்று, அப்போஸ்தலர் 10:49 ..... ஆனால் இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தை கேட்டவர்கள் . . . யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனை புகழுகிறதையும் கேட்ட போது பேதுருவோடே கூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள ..... விசுவாசிகள் கேட்ட போது பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்து... பிரம்மித்தார்கள் . அப்பொழுது பேதுரு: துவக்கத்தில் நமக்கு நடந்தது போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் . . . காண்கையில் எவருகிலும் தண்ணீரை விலக்கலாமா-? ஆகவே அவன் இருந்து பிறகு ஞானஸ் - ... இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்-! . . . 113. அது சரி; காத்திருத்தல் இல்லை; காத்திருத்தல் இல்லை. அந்த அப்போஸ்தல வழி, தேவனுக்கு எந்தவித குறிப்பிட்ட வகுத்துரைக்கப் பட்ட ஒழுங்கு முறை கிடையாது; இருதயம் பசியாயிருக்கையில், நீ எதற்காக பசி கொண்டிருக்கிறாயோ அதை அவர் உனக்கு தருவார். உனக்கு பரிசுத்த ஆவி தேவையாயிருக்கு மானால், சரியாக இப்பொழுதே உன் மேல் இறங்க அவரால் முடியும். 114. பேதுரு, அவன் பிரசங்கிக்க சென்ற போது, ராஜ்ஜியத்தின் திறவு கோல்களை பேதுரு வைத்திருந்தான். இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்து பார்க்கப்போகின்ற ஒரு கேள்வியை நான் வைத்திருக்கிறேன். அவன் ராஜ்ஜியத்திற்குரிய திறவு கோல்களை கொண்டிருந்தான். அவன் அதை கொர்நேலியுவின் வீட்டிற்குத் திறந்தான். அவன் சமாரியர்களுக்கு அதை திறந்தளித் தான், இங்கே அதை அவன் திறந்தளித்தான்; ஆனால் பிலிப்பு அங்கே சென்று அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணுவித்தான், பிறகு பேதுரு வந்து அவர்கள் மேல் கைகளை வைத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இப்பொழுது, அவன் ஒன்றைச் செய்தான், ஏனெனில் அங்கே இருந்த அந்த மந்திரவாதி . . . அங்கே சிமியோன் என்ற மாயவித்தைக்காரனை அவர்கள் கொண்டிருந்தனர், அவன், "நான் சிறிது பணத்தை உங்களுக்கு தருகிறேன், அதாவது நான் எவன் மீது கைகளை வைக்கிறேகுே அவன் பரிசுத்த ஆவியை பெறத்தக்கதாக அந்த வரத்தை எனக்கு கொடுங்கள்” என்றான். அது சரியா-? ஏதோ ஒரு காரியம் சம்பவித்தது-! (தங்கள் கழுத்துப் பட்டைகளை பின்புறமாக திருப்பிக் கொண்டு, வந்து அவர்கள் மேல் கைகளை வைத்து ''நான் உனக்கு அப்போஸ்தல ஆசீர்வாதத்தை தருகிறேன்” என்று கூறிகின்ற இந்த பேராய பிஷப்புகள் அல்ல) பேதுரு தன் கைகளை அவர்கள் மீது வைத்தபோது ஏதோ ஒன்று சம்பவித்தது; அது இன்னுமாக சம்பவிக்கின்றது. 115. கைககள் வைக்கப்படுகையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழும்போது, அவர்கள் ஈக்களைப் போல கீழே விழுவதை நான் கண்டிருக்கிறேன். ஆம். அதுதான் கைகளை வைப்பது என்பதற்குரிய அப்போஸ்தல உபதேசம் ஆகும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதிலிருந்து சிறிது வித்தியாசப்பட்டவராக நீங்கள் இருந்தால், நாளை இரவு ஒரு சிறு குறிப்பை மாத்திரம் எனக்கு எழுதுங்கள். சரி. கேள்வி:29. உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னுமாக கேட்க . . . இன்னுமாக சுவிசேஷத்தை கேட்கவில்லை, சுவிசேஷத்தின் வார்த்தை , எவ்வளாக... என்னை மன்னியுங்கள். இது மையினால் எழுதப்பட்டுள்ளது, இங்கு எனக்கு வியர்வை வந்து கொண்டிருக்கிறது, அது இதன் மேல் ஊறிப்போய் விட்டிருக்கிறது. நாம் பார்ப்போம். உலகத்திலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னுமாக சுவிசேஷத்தை கேட்கவில்லை, இவர்கள் இன்னுமாக சுவிசேஷத்தை கேட்டிராமல் இருக்கும் பட்சத்தில், எப்படி நம்முடைய கர்த்தரால் இப்பொழுது வரமுடியும்-? அவர்களில் மூன்றில் இரண்டு பாகம்-? நல்லது, அது முற்றிலுமாக சரி. நான் என்ன நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு கூறுகிறேன். 116. இங்கே சில காலத்திற்கு முன்பு சூடான் மிஷனின் தலைவரான டாக்டர், ரிட்ஹெட், அநேக பட்டங்களுடன், அவர் எத்தனை பட்டங்களைப் பெற்றிருக்கின்றார் என்று அவருக்கே தெரியாத அளவிற்கு பட்டங்களைப் பெற்றிருந்த அவர், சுமார் ஒரு வருடம் ஆறு மாதங்கள் அதற்கும் முன்னர் அங்கே என்னுடைய வீட்டிற்கு வந்தார். இவரும் இப்பொழுது பரிசுத்த ஆவியை பெற்று மெக்சிக்கோவில் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்ற இந்த பாப்டிஸ்ட் ஊழியக்காரரானான ஹைமான் ஆப்பில் மான் என்பவரும் என்வீட்டில் வந்து நின்றனர். ஆகவே அவர் வீட்டிற்கு வந்து, அவர் “சகோதரன் பிரன்ஹாம்'' என்றார், ''நீர் பெந்தெ கொஸ்தேயினருடன் தொடர்புகொண்டுள்ளீரா-?'' நான், "ஆம் ஐயா'' என்றேன். அவர், ''நான் டாக்டர். ரீட்ஹெட்'' என்று கூறினார். நான், "உம்மை தெரிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உள்ளே வருவீரா-?'' என்றேன். அவர், “சரி, ஐயா,'' என்றார். 117. அவர் உட்கார்ந்து, "நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் பாப்டிஸ்ட் சபையில் நியமிக்கப்பட்டீர் என்று நான் கேள்விப்பட்டேன்'' என்றார் 118. நான், "அது சரியே'' என்றேன். நான், ''அதை விட்டு நான் வெளியே வந்து விட்டேன், ஏனெனில் என்னால் அதை பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாப்டிஸ்ட் சபை என்ன கூறுகிறதோ அதை அல்ல. வேதாகமம் என்ன கூறுகின்றதோ அதை நான்நான் பிரசங்கிக்கவே விசுவாசிக்கிறேன், பாப்டிஸ்ட் சபைக்கு ஏதிராக என்னிடத்தில் ஒன்றுமில்லை, அவர்கள் மற்ற சபையைப் போல நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்றேன். நான் “நான் விடுதலையாக இருக்கும்படியாய், நான் அதனின்று வெளியே வந்தேன்'' என்று கூறினேன். அவர், ''நல்லது தான், நாங்களும் பாப்டிஸ்டுகள் என்று உங்களுக்குத் தெரியுமா'' என்று கூறினார். நான், "ஆம், ஐயா" என்றேன். 119. ஆகவே அவர் “ நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து என்ன-? நான் இருந்திருக்கிறேன், அவர்கள் நாற்காலிகளை உதைத்து குதித்து, சத்தமிட்டு, இன்னுமாக தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன்'' என்றார். 120. நான், " நானும் கூட அவை எல்லாவற்றையுமே கண்டிருக் கிறேன்'' என்று கூறினேன். ஆனால் நான் " சகோதரனே அதற்கு பின்னால், அங்கே ஒரு தூய்மையான உண்மையான ஒழுங்காகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருக்கின்றது” என்று கூறினேன். 121. அவர் ''சகோதரர் பிரன்ஹாமே, நான் அதை பெற்றுக் கொள்ள முடியுமா-? எனக்கு அநேக பட்டங்கள் உண்டு-! நான் ஒரு டாக்டர் பட்டம் பெற்றவன், நான் இது, நான் பி.எச்.டி (Ph.D) பட்டம் பெற்றிருக்கிறேன், எனக்கு இளங்கலையியல் பட்டம் உண்டு, எல்லா விதமான பட்டமும், எல்லா தேசங்களிலிருந்து கெளரவ பட்டங்களுடன் அதைப் போன்ற காரியங்களும் என்னிடம் உண்டு,'' என்றார். மேலும் "ஆகவே இயேசு கிறிஸ்து எங்கேயிருக்கிறார்-?'' என்று கேட்டார். 122. நான், ''நல்லது சகோதரனே, அவர் சரியாக இங்கே அறையில் இருக்கின்றார்,'' என்றேன். 123. அவர் “நான் நின்று ஒரு வைராக்கியமான முகமதியனிடம் பேசினேன், அவர் அமெரிக்காவில் படித்திருந்தார், நான் அவரிடம், 'உன்னுடைய பழைய மரித்து போன தீர்க்கதரிசியை துறந்து விட்டு உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்' என்று கூறினேன். அவர் 'அன்புள்ள ஐயா, என்னுடைய முகமது செய்வதை விட உங்களுடைய உயிர்த் தெழுந்த கர்த்தராகிய இயேசு எனக்கு அதிகமாக என்ன செய்யமுடியும், அவர்கள் இருவரும் வேதாகமங்களை எழுதினர், அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்கள் இருவரும் மரித்தனர். மரணத்திற்கு பிறகு நமக்கு ஒரு ஜீவன் உண்டு என்று அவர்கள் இருவரும் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றனர், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்.'' என்று கூறினார். 124. அவர் "ஓ-! ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் சந்தோஷத்தை கொண்டிருக்கிறோம்'' என்றார். 125. அவர், 'நாங்களும் கூடத்தான். என்னால் கூட உங்களைப் போலவே உளவியல் தத்துவத்தை உற்பத்தி செய்ய முடியும்'' என்றார். அது சரிதானே. "அவர் கூறினார், 'நல்லது பாருங்கள், எங்கள் முகமது ... உங்கள் கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்களே.' என்றார். 126. டாக்டர் ரீட்ஹெட், "என்ன, அவர் உயிரோடு எழுந்து விட்டார்-!” என்றார். 127. அவர், 'அதை நிரூபியுங்கள்' என்றார், 'அதை நிரூபியுங்கள்-!'' என்றார், 'அதை நிரூபிக்க இரண்டாயிரம் வருடங்கள் உங்களுக்கு இருந்தது, ஆனால் அதைக் குறித்து உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தான் கேள்விப்பட்டிருக்கின்றனர்' என்றார், 'எங்கள் முகமது மரித்தோரிலிருந்து எழுந்திருக்கட்டும், முழு உலகமே இரண்டே நாட்களில் அதைக் குறித்து தெரிந்து கொள்ளும்' என்றார்'' அவர் கூறுவது சரியே. ''அவர் கூறினார், 'எங்கள் முகமது மரித்த பிறகு ஜீவனைத் தவிர வேறெதையும் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை. உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ உங்களுக்கும், போதகர்களாகிய உங்களுக்கும், அவர் செய்த அதே காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்றாரே. ஆகவே போதகர்களாகிய நீங்களும் அதை இப்பொழுது செயல்படுத்துங்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'''. 128. அவர், ''சகோதரன் பிரன்ஹாம், தூசியில் அதைப் போன்று என் காலை சரேலென்று தேய்த்து பேச்சின் பொருளை மாற்றி விட்டேன்” என்று கூறினார். அந்த எல்லா பட்டங்களுடன்-! ஏன்-? அந்த பட்டங்களில் தேவன் எங்கேயிருக்கிறார்-? ஒரு பி.எச்டி (Ph.d) பட்டங்கள் அல்லது டி.டி (D.D) பட்டங்கள் இன்னும் போன்றவற்றின் மூலமாக தேவன் அறியப்படமாட்டார். 129. சாதாரண விசுவாசத்தின் மூலமாயும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாயும் தேவன் அறியப்படுகின்றார். அது தான் ஒரே ஒரு வழியாகும். தேவன், உனக்குள் இருந்து அவர் உன்னை ''ஒரு தேவனுடைய குமாரனாக'' கொண்டு வருகிறார், உன்னு டைய சுபாவத்தை மாற்றுகிறார். ஆகவே அந்த அதே காரியம், இந்த எல்லா காரியங்களையும் உண்டாக்கி தம்முடைய வார்த் தையின் மூலமாக உலகத்தை பேசி சிருஷ்டித்த சிருஷ்டிகராகிய தேவன் - அந்த அதே ஆவி உனக்குள்ளாக இருத்தல், அப்பொழுது தேவன் கூறுகின்ற எல்லாவற்றையும் நீ விசுவாசிக்கின்றாய். கூடாதது ஒன்றுமில்லை; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். 130. நீங்கள் ஒரு சிறிய போதகத்தை நம்பி நின்று “'நான் அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளமாட்டேன். தேவன் இதை செய்வார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. என்னால் விசுவாசிக்க முடியவில்லை'' என்று கூறாதீர்கள். நீங்கள் உங்கள் அவிசுவாசத் தினாலே தேவனை மட்டுப்படுத்தி விடுகிறீர்கள். அது தான். 131. ஆகவே டாக்டர். ரீட்ஹெட் அங்கே நின்று “சகோதரன் பிரன்ஹாமே, ஒரு மனிதனால் உண்மையாகவே பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள முடியுமா-?'' என்றார். 132. நான், ''ஆம், ஐயா, டாக்டர். ரீட்-, உங்களால் முடியும்'' என்றேன். 133. அவர், “தேவன் என்னுடைய இருதயத்தை அறிவாரானால்; நான் விசுவாசிக்கிறேன், நீங்கள், சரியாக இப்பொழுது அபிஷே கத்தின் கீழாக அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் எனக்கு ...... நான் உண்மையயைக் கூறுகிறேன் என்று நம்புகிறீர்களா-?” என்றார். நான், ''அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்-!'' என்றேன். அவர், “எப்படி அதை நான் பெற்றுக் கொள்ள முடியும்-?'' என்றார். - நான், ''முழங்காற்படியிடுங்கள்'' என்று கூறினேன். 134. அங்கே அவர் அந்த பழைய காபி மேஜையின் பக்கத்தில் முழங்கால்படியிட்டார். இங்கிருந்துதான் அதை நான் எடுத்தேன். இங்கே சற்று முன்னர் அதை சரி செய்த அந்த மனிதன் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர், அங்கே கீழே முழங்கால்படியிடு கையில், மேலே இருந்த கண்ணாடியை உடைத்துவிட்டார். அவர் ""தேவனே, என்னுடைய பாவமான ஆத்துமாவின் மேல் இரக்க மாயிரும்'' என்றார். நான் அவர் மீது கைகளை வைத்தேன், அங்கே அவர் மீது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சரியாக வந்தது. அது சரி. 135. ஆகவே அவர் இப்பொழுது எல்லா இடத்திலும் அந்த பாப்டிஸ்ட் சபையை கொழுந்து விட்டெரியச் செய்திருக்கின்றார்-! அது அங்கே முழுவதுமாகச் சென்றது. அது சரி. 136. சுவிசேஷமானது... இயேசுவால் அதுவரை ... வரமுடியாது. 137. கவனியுங்கள்-! நாம் உலகம் முழுவதுமாக கைப்பிரதிகளை கொடுக்கிறோம். அந்த கைப்பிரதிகள் கொடுக்கப்படாமல் உங்களால் எந்த ஒரு மூலைக்கும் செல்லமுடியாது, வேத கல்லூரி படிப்பின் மூலம் எவராவது அங்கே வருகின்றனர். நீங்கள் இன்று அயல்நாடுகளுக்கு சென்று உங்களை ஒரு “மிஷனரி'' என்று அழைத்துக் கொள்ளும்போது, அவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பதைப் பாருங்கள். நீங்கள் இந்தியாவுக்குள் நடந்து சென்று ''நான் ஒரு மிஷனரி ஊழியக்காரன்'' என்று கூறிப்பாருங்கள். 138. "நல்லது, நீங்கள் எங்களுக்கு என்ன போதிக்கப்போகிறீர் கள்-?'' அவர்களுக்கு வேதாகமத்தை குறித்து அதிகமாக தெரியும். இதைக் காட்டிலும் ... அங்கே இருக்கின்ற அவர்களுடைய பிள்ளைகளில் சிலர், இங்கே அமெரிக்காவில் இருக்கின்ற அவர்களு டைய போதகர்களுக்கு அதைக் குறித்து தெரிந்துள்ளதைக் காட்டிலும், அதைக் குறித்து இன்னும் அதிகமாக அவர்களுக்கு தெரியும். அது ஒரு கிழக்கத்திய புஸ்தகம்தானே. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அமெரிக்கா என்னும் தேசம் வருவதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்கள் சுவிசேஷத்தை கொண்டிருந்தனர். பரிசுத்த தோமா, அவர் பிரசங்கித்த அந்த மகத்தான சபை, இன்னும் அது இந்தியாவில் நின்று கொண்டிருக் கின்றது. உங்களுடைய எந்த ஒரு உபதேசமும் அவர்களுக்கு தேவையில்லை, அவர்களுக்கு அதைக் குறித்து எல்லாம் தெரியும். அவர்கள் “எங்களுக்கு நீங்கள் என்ன உபதேசிக்கப் போகிறீர்கள்-?'' என்று கூறுகின்றனர். "நல்லது நாங்கள் எல்லாரும் அமெரிக்க மிஷனரிமார்கள்.'' 139. ''நீங்கள் எங்களுக்கு என்ன உபதேசிக்கப் போகிறீர்கள், எப்படி விஸ்கி குடிப்பது என்றா-? அங்கே உங்கள் சபைகளில் அதைத்தான் முழுவதுமாக நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்-! எப்படி சிகரேட் புகைப்பது என்றா-? எப்படி எங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்வது என்று இன்னும் மற்றவைகளையுமோ போதிக்கப் போகிறீர்கள். அதை நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால், அது எங்களுக்குத் தேவை இல்லை'' என்றார்கள். ''நீங்கள் ஏதோ ஒரு புதிய வேதத்தத்துவத்தையோ அல்லது எதோ ஒன்றுடன் நீங்கள் இங்கே வருவீர்களானால், வார்த்தையில் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு போதிக்க முயற்சிப்பீர்களானால், அதைக் குறித்து உங்களைக் காட்டிலும் அதிகமாக எங்களுக்கு தெரியும்” என்றார்கள். அது சரி. அவர் ''வார்த்தை என்ன கூறுகிறதோ அதை நீங்கள் நிரூபித்துக்காட்ட நீங்கள் வருகிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம்'' என்றார். ஆமென்-! அதோ புரிகின்றதா. அவர்கள் அதற்கு தான் தாகம் கொண்டிருக்கின்றனர். 140. என்னுடைய வார்த்தையை குறித்து கொள்ளுங்கள், உங்களுடைய வேதத்தின் பக்கங்களில் இதை எழுதிக் கொள்ளுங்கள், ஏனெனில் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்ப தாகும், ''நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் இந்தியாவில் இறங்கும் போது, பத்தாயிரம் பத்தாயிரம்கணக்கானவர்கள் இரட்சிக்கப்படுவதைக் குறித்து நீங்கள் கேள்விப்படப் போகிறீர்கள்”. பரிசுத்த ஆவியானவர் அதைக் கூறியிருக்கின்றார். நான் அதை என்னுடைய வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கின்றேன். சரியாக இங்கே பத்தாயிரக்கணக்கான வேதாகமங்களில் அது எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது, அந்த சிறு பையன் உயிரோடெழுப்பப்பட்டது போல், ஒரு தரிசனத்தினால் அவர் கூறினது போலவே. ''அங்கே அவர்களில் மூன்று இலட்சம் பேர்கள் இருக்கின்றனர். '' ஆகவே நீங்கள் அது சரியா என்று பாருங்கள்-! அப்படித்தான் அங்கே சுவிசேஷமானது ஓரிரவுக்குள்ளாக பிரசங்கிக்கப்படப் போகின்றது. அது இடத்திற்கு இடம் அப்படியே எங்கும் விரிந்து பரந்தகன்று செல்லும். 141. ஆப்பிரிக்காவில், ஒரே ஒரு பீட அழைப்பில் தேவனை ஏற்றுக்கொண்ட அந்த முப்பதாயிரம் பேரிடம், "உங்கள் கரங்களை உயர்த்தி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு அமெரிக்க மிஷனரி இங்கே வந்து சபைகளில் மொழிகளை நீங்கள் கற்றுக் கொள்ளத்தக்கதாக உங்களுக்கு போதிக்க நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஒரு மிஷனரியை அங்கே அனுப்ப, தாய்மார்கள் சலவை வேலை செய்கின்றனர், அவர்கள் அங்கே சென்று ஒரு பெரிய அருமையான காரில் சவாரி செய்து, வசதியான இடத்தில் வாழ்ந்து கொண்டு சில கைப்பிரதிகளை கொடுத்து விட்டு திரும்ப வந்து விடுகின்றனர். அது அவர்களுக்கு தேவையில்லை; அவர்கள் அதைத்த என் நிரூபித்தனர். 142. சில இரவுகளுக்கு முன்னர் இங்கே இந்த யூத மருத்துவமனையில், ஊழியக்காரர்களுடனும் மருத்துவர்களுடனும் தெய்வீக சுகமளித்தல் என்ற பொருளின் பேரில், ஒரு கூட்டத்தில் நான், நான் பேசினேன், ''நீங்கள் என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைத்தீர்கள், அந்த கர்த்தருடைய தூதன் ...... நான் கூறினபோது எனக்கு ஒரு தீயக்கனவு உண்டானது என்று கூறினீர்கள்,'' என்று கூறினேன். நான், ''நம்முடைய சொந்த சபையும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து மிஷனரிகளை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. நான் அங்கே சென்ற போது, அவர்கள் சிறு மண் விக்கிரகங்களை செய்து கொண்டிந்தனர், மண் விக்கிரகங்களிலிருந்து உதவி பெற முயற்சித்து கொண்டு, தங்களை 'கிறிஸ்தவர்கள்' என்று அழைத்துக் கொண்டிருந்தனர்'' என்றேன். மேலும் நான், ''ஆகவே நீங்கள் 'அதிதீவிர மூடபக்தி வைராக்கியம்' என்று எதை அழைத்தீர்களோ அது, நம்முடைய இலட்சக்கணக்கான டாலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மிஷனரிமார்கள் கடந்த நூற்று ஐம்பது வருடங்களாக செய்துள்ளதைக் காட்டிலும் ஐந்து நிமிடங்களில் கிறிஸ்துவுக்கு அதிகமான ஆத்துமாக்களை சம்பாதித்தது'' என்று கூறினேன். அவர்கள் தங்கள் வாய்களை மூடிக்கொண்டனர், அது தான்-! அதோ அது இருக்கிறது. நான், அந்த மனிதரிடம், "அறிவு புகட்டிக் கொள்ள நீங்கள் ஒருக்காலும் - ஒருக்காலும் முயற்சிக்க வேண்டாம், இந்த சுவிசேஷத்தை எடுத்துக் கொண்டு ஒரு வெள்ளை மனிதனும் கூட செல்ல முடியாத, நோய்களுள்ள, நாகரீகத்திற்கு புறம்பான தேசத்திற்கு அங்கே செல்லுங்கள்.'' என்று கூறினேன் 143. டர்பன் நகர் செய்தித்தாளிலிருந்து ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன், அது “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு வயதான மனிதன் கூட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று கொண்டு சராசரியாக ஒரு வாரத்திற்கு ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருக்கிறார். ''அவ்விதமாகத்தான் சுவிசேஷமானது சென்று கொண்டிருக்கின்றது, சிறிது சிறிதாக, முழு உலகத்தை சுற்றிவர இன்னும் ஆறு மாதங்கள் மாத்திரமே தேவையாயுள்ளது. சரி. 30. கிறிஸ்தவ - கிறிஸ்தவ விஞ்ஞானத்தை குறித்து நீங்கள் விளக்குகிறீர்களா-? 144. அது சரி. நான் .... இங்கே ... என் சகோதரனே அல்லது சகோதரியே, இந்த கேள்வியை வைத்த யாராயிருந்தாலும் சரி, நான் உங்கள் மதத்தைக் குறித்து பேசமாட்டான். கிறிஸ்தவ விஞ்ஞானம் என்பது உளவியல் ஆகும். (தெய்வீக சுகமளித்தல் தேவனுடைய வல்லமையாகும்-!) கிறிஸ்தவ விஞ்ஞானம் காரியத்திற்கு மேலாக சிந்தையை வைக்கின்றதாகும். கிறிஸ்தவ விஞ்ஞானம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ விஞ்ஞானம்...இல்லை, திருமதி எட்டி அவர்களின் புத்தகங்களை அங்கே வைத்திருக்கிறேன், நான் அவை எல்லாவற்றையும் படித்தேன். பாருங்கள்-? அது சரி, கிறிஸ்தவ விஞ்ஞானம் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை மறுதலித்து, அவரை ஒரு ''தீர்க்கதரிசி'' என்று கருதுகிறது. இயேசு கிறிஸ்து ஒரு மனிதன் அல்ல; அவர் தேவனாக இருந்தார்-! அவர் தெய்வீகமானவராக இருந்தார்-! ஆகவே அவர்கள் அதை காரியத்திற்கு மேலாக சிந்தைவைப்பது என்றே நினைக்கின்றனர். 145, என்னுடைய புயத்திலோ அல்லது என்னுடைய வயிற்றிலோ, சுளுக்கு இருக்கும் ஆனால் .... அல்லது என் தலையில் வலி இருக்குமானால், அது வலியுண்டாக்குகிறது என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு போதுமான உணர்வு இருக்கின்றது, அது எனக்கு வலியுண்டாக்குகிறது என்று நான் நினைக்கின்றேன் என்பதாக அல்ல, ஆனால் தேவனுடைய வல்லமை அதை எடுத்து போடும் என்று எனக்குத் தெரியும், என்னுடைய... நான் அதைக் குறித்து சிந்திப்பதல்ல. பாருங்கள்-? ஆதலால், கிறிஸ்தவ விஞ்ஞானம், என்னிடம் கேட்கப்பட்ட மற்றொன்றுடன் நான் இதையும் கூறுவேன், அது நவீன நாட்களின் கொள்கைகளில் ஒன்றாகும், ஒரு ஆழமான, இருண்ட தவறாகும். அது சரி. நண்பனே, அல்லது இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, உன்னுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்காக அல்ல, ஆனால் நான் உத்தமமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதை எழுதின நீயும் நானும் ஒன்றாக, ஒரு நாளில் இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் கணக்கொப்புவிக்கும்படியாக நிற்போம், நான் என்ன கூறுகிறேகுே அதற்கு நான் பதில் கூற வேண்டியவனாக இருக்கிறேன். இப்பொழுது, எனக்குத் தெரியாதவரையில், நான் அதற்கு பதில் அளிக்க மாட்டேன். அது சரி. கேள்வி:31. இப்பொழுது, நாங்கள்... நாங்கள் இங்கிருந்து தொலை தூரத்தில் வசிப்பதால்... அவர்கள் கூறுகின்றனர். கூடாரத்திற்கு வர வேண்டுமானால் நாங்கள் வசிக்கின்ற மிக தொலை தூரத்திலிருந்து இங்கே வரவேண்டியதாக இருக்கிறது. நாங்கள் எங்கு செல்ல நீர் பரிந்துரைப்பீர், இந்த சபைகளெல்லாம் தாய் சபைக்கு அல்லது கத்தோலிக்கத்திற்கு செல்வதை காண்கையில், நாங்களாக ஒன்றாக கூடலாமா-? 146. என்னுடைய அருமை சகோதரன் அல்லது சகோதரி, இதை எழுதின யாராய் இருந்தாலும் சரி, எந்த சபைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் கூறமாட்டேன். ஆனால் நான் என்ன செய்வேனென்றால், இதை, என் சகோதரனே, சகோதரியே, நான் .. நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருந்தால், பாருங்கள், நல்லது நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டு பிறகு நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுள்ள மக்கள் இருக்கின்ற ஒரு கூட்டத்திற்கு செல்லுங்கள். .நீங்கள், அந்த விதமான ஜனங்களுடன் நீங்கள் ஒன்று கூட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். 147. இங்கே சமீபமாக ஒரு மனிதனை நான் கண்டேன், அவர் பிறந்து பத்து வருடங்களாக ... அல்லது பிறக்கவில்லை, என்னை மன்னியுங்கள், அவர் கடந்த பத்து வருடங்களாக பார்வை யில்லாமல் இருந்தார். அவர் ஒரு பெரிய சபையை சார்ந்தவராக இருந்தார், அவர் மிசெளரியிலுள்ள கென்னட்டில் வாழ்ந்து வந்தார். அவருக்கு .... அவர் ஒரு - அவர் அநேக வருடங்களுக்கு முன்னர் ஒரு காலணி தைப்பவராக இருந்தார், அவர் கண் பார்வையிழந்தார். அந்த மனிதன் மேடையின் மீது வந்தார், அவர் யார் என்றும் அவரிடம் என்ன தவறு இருந்த தென்றும், அவர் எவ்வளவு காலமாக குருடாக இருந்தார் என்றும் பரிசுத்த ஆவி யானவர் அவருக்கு கூறினார், அவர் செய்த ஏதோ ஒரு சிறிய அசுத்த மான கிரியையையும் கூறினார். அவர் " நான் அங்கே செல்ல தேவன் என்னை வாழ விடுவாரென்றால், நான் அதை சரி செய் வேன்,'' என்றார். ஆகவே, அவர் அதைச் சொன்ன மாத்திரத்தில், அவருடைய கண்கள் திறக்கப்பட்டது; இதே வேதாகமத்திலிருந்து, அதிகாரத்திற்கு பிறகு அதிகாரம் வாசித்து காண்பித்தார். 148. அவர் தன்னுடைய சபைக்கு சென்று துதி செலுத்திக் கொண்டிருந்தார். ஆகவே அந்த போதகர் அவரிடம், " இது எப்படியோ நடந்துவிட்டிருக்கும். என்ன, நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள், அவ்வளவு தான். இதில் ஒன்றுமே கிடையாது. இந்த காரியத்தில் ஒன்றும் கிடையாது, இது பிசாசினால் உண்டானது-!'' என்று கூறினார். 149. பிசாசினால் சுகப்படுத்த முடியும் என்று கூறும் ஒரு வேதவசனத்தையாவது எனக்கு காண்பியுங்கள் என்று நான் அனைவருக்கும் சவாலிடுகிறேன். பிசாசினால் சுகமாக்க முடியும் என்று நீங்கள் எனக்கு காண்பிப்பீர்களானால், நீங்கள் அதைச் செய்வீர்களானால், பிசாசு உங்களுடைய பிதா என்று நான் நிரூபிக் கிறேன்; அது சரி, அது தேவனுடைய வார்த்தைகளில் இல்லை. அது நிரூபிக்கப்பட முடியாது. ஆகவே நீங்கள்..... வேண்டுமானால் . நீங்கள் அதை முயற்சித்துப் பார்க்கலாம், நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள். அது சகோதரனே, பிஷப்புகளாலும் மற்ற எல்லா வற்றாலும் செய்யப்பட்டுவிட்டது, ஆதலால் அதைச் சொல்லாதே. 150. கவனியுங்கள்-! அந்த அதே மனிதன் தன்னுடைய இருதயத்தில் அதை விசுவாசித்தான். மூன்று மாதங்கள் கழித்து முன்பு இருந்த விதமாகவே பார்வை இழந்தவராக, அவர் என்னுடைய ஆராதனைகளில் இருந்தார், அது தான் காரியம். 151. ஆகவே அந்த விதமான கொள்கைகளிலிருந்து விலகி யிருங்கள்-! விசுவாசிக்கிறவர்களுடன் உங்களை ஒன்று கூட்டிக் கொண்டு, ஐக்கியப்படுங்கள். வேதாகமம் கூறுகிறது, " அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. '' ''வேறு பிரித்துக் கொள்ளுங்கள்,'' என்று தேவன் கூறுகிறார். வெளியே வாருங்கள்-! “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவி லிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய்... அசுத்தமானதைத் தொடா திருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். சபையின் நடுவில் நிற்கின்ற கர்த்தர் நானே,” அது சரி. வெளியே வாருங்கள்-! அவர்களுடன் ஐக்கியப்படாதீர்கள். 152. ஆனால்... ஒரு சபை, அருமையான சபையின் மத்தியில் நீங்கள் உங்களை ஐக்கியப்படுத்துங்கள். மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், காம்ப்பெல்லைட், யாராயிருந்தாலும் சரி, அது... எங்கே உண்மையான விசுவாசிகள் இருக்கிறார் களோ, அங்கே சபை பிரமாணம் என்ன கூறுகிறதோ அதைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை, அவர்கள் தங்கள் சகோதரர் களை, சகோதரிகளை சந்திக்கவும் ஒன்றாக தேவனை ஆராதிக்கவும் அங்கே செல்கின்றனர். அது சரி. கேள்வி:32. கடந்த இரவு நீங்கள் ''ஒவ்வொரு கோத்திரத்திலும், தேசத்திலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமான ஜனங்கள்,'' என்று வெளிப்படுத்தின விசேஷம் 7-வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதைக் குறித்து பேசினீர்கள். ''அவர்கள் தான் கிறிஸ்துவின் மணவாட்டி' என்று கூறியதை, நான் நீங்கள் கூறியதை சரியாக புரிந்து கொண்டுள்ளேனா-? ஆம், நீங்கள் என்னை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் தான் மணவாட்டி. 153. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், சரியாக வெளிப்படுத்தல் 7-ல், அவன் 144000 பேரைக் கண்டான். இப்பொழுது என் சகோதரனே, இதன் பேரில் உங்களை குற்றப்படுத்தவில்லை, ஆனால் அந்த நூற்று ... வழக்கமாக ஒரு யெகோவா சாட்சிகள் குழுவைச் சேர்ந்த ஒருவர் தான் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் தான் மணவாட்டியாக இருக்கும் என்று விசுவாசிப்பார். அது பிழையான ஒன்றாகும்-! அவர்கள் ஒவ்வொருவரையும் யோவான் அறிந்திருந்து அவர்களை பெயர் சொல்லி அழைத்தான். அவர்கள் ஒவ்வொருவரும் யூதர்களாக இருந்தனர். அவர் ''காத்திலிருந்து பன்னீராயிரம், செபுலோனிலிருந்து பன்னீராயிரம், பென்யமீனிலிருந்து பன்னீராயிரம், யூதாவிலிருந்து பன்னீராயிரம்,'' என்றான், அது சரியா-? இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்கள் இருக்கின்றது, பன்னிரண்டும் பன்னிரண்டும் பெருக்கினால் ... இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் ஆகும். அது சரியா-? அவர் "எல்லா இஸ்ரவேல் புத்திரரும்'' என்றார். யோவான் அவர்களை அடையாளம் கண்டு கொண்டான். 154. பிறகு அவன் இந்த பக்கமாக திரும்பிப் பார்த்து, "சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் இருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து அசைத்துக் கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு, ஓசன்கு. .. ராஜாவுக்கு என்று பாடிக் கொண்டு இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறார்கள்" என்றான். அவன் " யார் இவர்கள்-?'' என்று கேட்டான். 155. அவன் ''மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்து தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த் தவர்கள் இவர்கள் தான். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் ஆட்டுக்குட்டி ஆனவரை அவருடைய ஆலயத்தில் சேவிப்பார்கள், இவர்கள் அவரை விட்டு செல்ல மாட்டார்கள்'' என்றான். அது தான் மணவாட்டி, பாருங்கள் மனைவி, புறஜாதி மணவாட்டி. 156. நினைவில் கொள்ளுங்கள், மணவாட்டியானவள் புறஜாதி யாக இருக்கிறாள். அவர் “அவர் வந்து, புறஜாதிகளிலிருந்து தமது (எதற்காக-?) நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்து கொள்ளுவார்,” என்றார். 157. இப்பொழுது, உலகத்திலே அநேக வாலிபப் பெண்கள் உள்ளனர். ஆனால் நான் ஒரு பெண்னை எடுத்திருக்கிறேன், அது தான் மேடா பிராய், அவள் தான் இப்பொழுது திருமதி. வில்லியம் பிரன்ஹாம். அவள் ...... அவள் இன்னுமாக பிராய் அல்ல. அவள் இப்பொழுது பிரன்ஹாமாக இருக்கிறாள், பார்த்தீர்களா-? 158. ஆகவே அவ்வாறே தான், நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஒரு மணவாட்டியாக, மணவாட்டியின் அங்கத்தினர்களாக ஆகிவிடுகின்றீர்கள். கேள்வி:33. வாடிகன் நகரத்தின் மேல் இருக்கின்ற லத்தீன் வார்த்தைகள் என்ன-? அவைகள் 666 என்று எப்படி வருகின்றது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம், அவைகள் எதைக் கூற விழைகின்றன. 159. நல்லது, அது இன்னுமாக... இந்த லத்தீன்-அந்த லத்தீன் வார்த்தைகள் வாடிகன் நகரத்தின் மேல் இல்லை; அது போப்பினுடைய சிங்காசனத்தின் மேல் இருக்கின்றது, அவர் உட்கார்ந்திருக்கின்ற அவருடைய சிங்காசனத்தின் மேல் அங்கே "VICARIVS FILII DEI." என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், காலை, நான் எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் எழுதி கொண்டு வருகிறேன். ரோம் எழுத்துக்களில் அதை நீங்கள் எழுத்து கூட்டலாம், VICARIVS FILI DEI, அந்த வார்த்தைக்கு ''தேவனுடைய குமாரனுக்கு பதிலாக; இவர் தேவனுடைய குமாரனுக்கு வாரிசு ஆவார்'' என்று அர்த்தம். 160. “பேதுரு முதலாவது போப்பாண்டவர் என்றும் அவன் இயேசு கிறிஸ்துவுக்கு வாரிசு'' என்றும் கத்தோலிக்க சபை விசுவாசிக்கின்றது. அது தவறான ஒன்றாகும்-! சரி. பிறகு “அவனைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு போப்பாண்டவரும் ஒரு வாரிசு; இப்பொழுது இருக்கின்ற போப்பும் கூட, இப்பொழுது இருக்கிற வரும் இயேசு கிறிஸ்துவின் வாரிசு ஆவார்” என்று உரிமை கொண்டாடுகின்றது. அங்கே இவ்வாறு எழுதப்பட்டிருக் கின்றது, “இயேசு கிறிஸ்துவின் வாரிசு, 'VICARIVS FILI DEI' '' என்று அங்கே எழுதப்பட்டிருக்கின்றது. ரோம் எழுத்துக்களை எடுத்து எழுதிப்பாருங்கள் (X என்றால் பத்து, V என்றால் ஐந்து, இன்னும் அதைப் போன்று), நீங்கள் "VICARIVS FILI DEI" என்று கூட்டி ஒரு கோட்டை வரைந்தால், உங்களுக்கு அறுநூற்றறுபத்தாறு என்று வரும். அதை எழுதி கண்டுபிடியுங்கள். 161. இப்பொழுது, எங்கள் விசுவாச மார்க்கத்தின் உண்மைகள் என்னும் புத்தகம் என்னிடம் இருக்கின்றது. கத்தோலிக்க சபையில் அவ்வாறு அது அழைக்கப்படுகின்றது, என்னுடைய ஜனங்கள் ஐயர்லாந்து கத்தோலிக்கர் ஆவர். ஆகவே நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்-? 162. அது முற்றிலுமாக உண்மையான ஒன்றாகும், அது சரி, அது அங்கே... வேதாகமம் "அவன் சபையில் அல்லது ஒரு- ஒரு இடத்தில், அல்லது ரோமாபுரியில் ஏழு மலைகளின் மேல் இருக்கின்ற ஒரு சபையில் உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகவே அவனுடைய வல்லமை உலக முழுவதும் செல்லும். அவன் அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான்” என்று கூறுகின்றது. 163. அதற்கு பிறந்த சிறு சபைகள் அந்த சபையிலிருந்து வெளியே வந்தன, "அவள் ஒரு வேசி என்றும், அவளை பின்பற்றினவர்கள் வேசிகள்" என்றும் வேதம் கூறுகின்றது. அது சரி. உங்களுக்கு புரிகின்றதா. ஏனெனில் அவர்கள் அதே காரியத்தை ஸ்தாபித்து, அவர்களுடைய பிரமாணங்களையும் உபதேசங்களையும் கொண்டி ருந்தனர். சற்று அவளைப் போன்று மிக வல்லமை யுள்ளவளாக அல்ல, ஆனால் இன்னுமாக அவர்கள் சிறிய விதத்தில், வல்லமையைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே மிருகம் என்றால் "வல்லமை'' என்று அர்த்தம். உங்களுக்கு புரிகின்றதா. ஆகவே அவர்கள் கத்தோலிக்கர் தான், பெரிய வல்லமையை பெற் றுள்ளனர். மெத்தோடிஸ்டுகள், பிறகு பிரஸ்பிடேரியன்கள், பிறகு லூத்தரன்கள், பிறகு பாப்டிஸ்டுகள், பிறகு இன்னுமாக. இவர்களுடையது சிறிய ஸ்தாபிக்கப்பட்ட வல்லமைகள், ''என்னுடைய சபை-! என்னுடைய சபை-! என்னுடைய சபை-!'' என்று கூறிக்கொள்கின்றனர். 164. ஆனால் உண்மையான விசுவாசியோ அதைக் குறித்து ஒன்றும் கூறமாட்டான். அது, "என்னுடைய கிறிஸ்து-! என்னு டைய கிறிஸ்து-! என்னுடைய கிறிஸ்து-!'' என்றிருக்கும். அது தான் வித்தியாசம். எப்படி உங்களுக்குத் தெரியும்-? அடையாளங் களுடனும் அற்புதங்களுடனும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகருகின்றார். 165. இதோ ஒரு சிறிய விதமான ஒரு சிறிய ஒழுங்குப் புறம்பான ஒன்று. இதை வாசிப்பதை நான் வெறுக்கிறேன். ஆனால் யாரோ இதை இங்கே வைத்திருக்கின்றனர்: 34. இந்த சபையானது ஏன் முன்னேறவில்லை என்பதற் கான காரணத்தை நீர் கேட்டீர். காரணம் என்ன, அது மூப்பர் களில் சிலர் அந்நிய பாஷைகள் மற்றும் சுகமாக்குதல் வரத்தை மறுதலிக்கின்றனர். அது உண்மை என்று நாங்கள் எல்லாரும் அறிவோம். 166. அவர் யாரென்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் இந்த கூட்டங்களில் இங்கே இருக்கையில், அது சீக்கிரமாக அகற்றப்படும். கேள்வி:35. ஒரு கிறிஸ்துவன் கால் கழுவுதலை கைகொள்ள வேண்டுமா, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு பதிலாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் )நாமம்( ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா என்று தயவு கூர்ந்து விளக்குங்கள். தயவு செய்து. 167. சரி. இதே காரியத்தைக் குறித்து கேட்கப்பட்ட அவைகளில் மூன்று என்னிடம் இங்க இருந்தது. 168. கால் கழுவுதலைக் குறித்து, நல்லது, அதைக் குறித்து நான் துவங்குகிறேன். சரி, நீங்கள் ஒருக்கால் வித்தியாசப்பட்ட கருத்தை உடையவராக இருக்கலாம், அதனால் பரவாயில்லை. சற்று சிலவற்றை நான் வாசிப்பேனாக. அல்லது நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், பரிசுத்த யோவான், 13 வது அதிகாரத்தை சற்று எடுங்கள். இங்கே உங்களை நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இயேசு கிறிஸ்து தாமே என்ன கூறியிருக்கிறார் என்பதை கவனியுங்கள், பிறகு நான் உங்களை ஏற்பாட்டிற்குள் (Testament) கொண்டு சென்று அது இன்னுமாக கை கொள்ளப்படுகின்றது என்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். 2வது வசனத்தி லிருந்து ஆரம்பிப்போம். ' அவர்கள் போஜனம் முடிவடைந்து கொண்டிருக்கையில் சீமோனின் குமாரனாகி 45 யூதாஸ் காரியோத்து அவரைக் காட்டி கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டின பின்பு )ஆங்கில வேதத்தில் உள்ளபடி -தமிழ்யாக்கியோன்( தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கெ ாடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதையும் தேவனிடத்திற்குப் போகிற தையும் இயேசு அறிந்து, (அவர் ஆவியிலிருந்து வெளியே வந்து, மாம்சத்திற்குள் சென்று ஆவிக்குள்ளாக மறு படியும் திரும்ப வந்து விட்டார். பாருங்கள்-?) ஆகவே போஜனத்தை விட்டெழுந்து வஸ்திரங்களை கழற்றி வைத்து ஒரு சிலையை எடுத்து அரையிலே கட்டிக் கொண்டு பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக் கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்த போது அவன் அவரை நோக்கி ஆண்டவரே நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்கு ..... நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (ஓ உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-! சரி) அதற்குச் சீமோன் பேதுரு ... என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூட .... என்று கூறிகுன். ஆகவே இயேசு அவனை நோக்கி முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும், மற்றபடி அவன் கத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மை காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்த படியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு, திரும்ம உட்கார்ந்து அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு செய்ததை அறிந்திருக் கிறீர்களா-? நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவர் ரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்கு செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யும்படி உங் களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால் . . .செய்வீர்களானால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள். 169. இரண்டு தீமோத்தேயுவில் பவுல் சபைக்கு எழுதும் போது, "ஒரு விதவையானவள் பரிசுத்தவான்களுடைய காலகளைக்கழுவி இருந்தாலொழிய அவள் சபையில் விதவைகளின் கூட்டத்தில் கொண்டு வரப்படக்கூடாது.'' அது சரி. கால் கழுவுதல் வேதாகம நாட்கள் முழுவதுமாக அனுசரிக்கப்பட்டது. ஆகவே தேவனுடைய ஒத்தாசையினால் நான் என் சரியான மனதை வைத்திருப்பேனானால், தேவன் எனக்கு உதவி செய்வாரானால், நான் மரிக்கும் வரை அதைக் கைக்கொள்வேன். அது சரி, அது இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு முற்றிலுமான கட்டளையாகும். - இப்பொழுது, இங்கே ஒரு தாக்குமுனை கொண்ட கொட்டுகின்ற ஒரு கேள்வியாக இது இருக்கப் போகின்றது. (குறிப்பு: கேள்விகள் 36ம், 37ம்- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் சரியானதா அல்லது தவறானதா-? என்ற தலைப்பில் கைப்பிரிதியாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது - WBGNS) கேள்வி:38. பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ள அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்று இந்த சமய போதிக்கின்றதா-? 262. இல்லை, ஐயா. இல்லை, நாங்கள் அப்படி செய்வதில்லை. அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும், பாருங்கள், அது பரிசுத்த ஆவி அல்ல. அது ஒரு வரமாகும். இந்த மரம் ஒன்பது விதமான கனிகளைக் கொண்டிருக்கிறது. அது சரியா-? 263. நீங்கள் ஒரு ஆப்பிள் மரத்தை பார்க்கையில், அது ஆப்பிள் பழங்களைக் கொண்டிருக்குமானால், அது ஆப்பிள் மரம் என்கிறீர் கள். ஒரு மரத்தை பார்க்கும் போது, அது பேரிக்காய்களைக் கொண்டிருக்குமானால், அது பேரிக்காய் மரம் என்று கூறுகிறீர்கள். அதன் மேல் காட்டத்தி மரப்பட்டை இருந்து, அதில் பேரிக்காய் கள் இருந்தாலும் சரி, அதனுடைய ஜீவன் என்ன-? அதன் ஜீவன் பேரிக்காய் மர ஜீவன் தான். அது சரியா-? 264. இப்பொழுது, இந்த தேவனுடைய மரமானது ஒன்பது ஆவிக்குரிய கனிகளையுடையதாக இருக்கிறது. அது சரியா-? சரி-? அங்கே வித்தியாசப்பட்ட... ''ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தை போதிக்கும்... வேறொருவனுக்கு அந்த ஆவியினா லேயே அறிவை உணர்த்தும் வசனமும் வேறொருவனுக்கு புரிந்து கொள்ளுதலும், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகின்றது,'' என்றார். ஒன்பது வித்தியாசமான ஆவிக்குரிய வரங்கள் இந்த தேவனுடைய மரத்தின் மீது வளர்கின்றது. அது சரியா-? நல்லது, இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுவது மாத்திரம் ஒன்றே ஒன்றல்ல, இன்னும் மற்றவைகளும் கூட இருக்கின்றன. 265. இப்பொழுது நீங்கள் அந்நிய பாஷையில் பேசி இன்னுமாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இப்பொழுது அதை சற்று நினைவில் கொள்ளுங்கள். நான் சரியாக... சூன்யக்காரிகள் மந்திரவாதிகள் வந்து அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியை உடையவர்கள் அல்ல. உங்களுக்குத் தெரியும், அவர்கள் மேலே வந்து சத்தம் இடுவதையும் குதிப்பதையும் நான் கண்டிருக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் உள்ளனர். சமீபமாக நான் ஒரு கார்ன்-நடனத்தில் நின்று கொண்டிருந்தேன், வெளியே ... அங்கே டௌக்லாஸ், அரிசோனாவில் அங்கே ஒரு சிறிய துண்டு. அங்கே அவர்கள் நடத்தும் கார்ன்- நடனத்தை கண்டிருக்கிறேன், அந்த மந்திரவாதி வந்து பயங்கராமாகச் செய்து கொண்டிருந்தான், எல்லாக் காரியமும் செய்து கொண்டிருந்து அங்கே தன் மீது தூசியை போட்டுக்கொண்டான். அப்படியென்றால் அவன் இரட்சிக்கப் பட்டிருக்கிறான் என்றல்ல. அந்த மனிதன் ஒரு - ஒரு மந்திரவாதி ஆவான். 266. நான் இந்தியாவில் இந்தியாவிற்கு சென்றிருந்த போது ... ஆப்பிரிக்காவில் மந்திரவாதிகள் வந்து தங்கள் மந்திரங்களினாலே எனக்கு சவால் விட்டதையும், ஒரு மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தை குடித்ததையும் நான் கண்டிருக்கிறேன். அது சரி. நீ அதை நேரடியாக சந்திக்கையில் எதைக் குறித்து நீ பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருப்பது நல்லது. ஆனால் சர்வல்லமையுள்ள தேவன் அந்த மனிதன் அசையவும் கூடாத விதத்தில் அவனை கட்டிப்போட்டதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகவே அப்பொழுது, அதைப் போன்ற அவனுடைய கண்ணாடிக் கண்கள், அவர்கள் அவனை தூக்கிச் சென்றனர். ஆம், ஐயா. 267. சகோதரனே, தேவன் உண்மையாயிருக்கிறார்-! அது உண்மை . ஆனால் தேவன் ஆவியாயிருக்கிறார், அந்நிய பாஷையில் பேசுவதிலும் அல்லது, இது, அது அல்லது மற்றதில் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல. நான் கூறுவது என்னவென்றால் எந்த ஒரு மனிதனும் ...இங்கே சபையில் இருக்கின்ற பிரச்சனை அது தான். பாருங்கள், நீங்க.. பெந்தெகொஸ்தேயினர் அந்த ஒரு காரியத்தின் மீது கட்டுப்பாடற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாயினர். அவர்கள் ஜனங்களிடம் சென்று .... அவர்கள் மீது கைகளை வைத்து, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக செய்வதற்கு பதிலாக, அவர்களை பீடத்தண்டை கொண்டு சென்று முதுகின் மீது அவர்களை அடிக்க ஆரம்பித்து ''அதைப் பேசு-! அதைப் பேசு-! அதைப் பேசு-!'' என்று சத்தமிடுகின்றனர். மேலும் மேலும் குழப்பத்தை பெற்றுக் கொள்ளும் வரை ஒரு சொல்லைக் கூறுகின்றனர், அது அந்நிய பாஷை அல்ல. 268. ஒரு உண்மையான பரிசுத்த ஆவி நபரானவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், அவன் தேவனுக்குரிய ஜீவியத்தைச் செய்வான். அந்த மனிதர்களில் சிலர் மோசமான ஜீவியங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள், அவர்கள் அப்படியாக இல்லை என்று அவர்களுடைய கனிகள் நிரூபிக்கிறது. இயேசு, "அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிந்து கொள்வீர்கள்” என்றார். ஆகவே ஆவியின் கனியானது அந்நிய பாஷையில் பேசுவது அல்ல, அது ஆவியினுடைய வரம் ஆகும். 269. இந்த அந்நிய பாஷைகளையும் மக்கள் பேசுவதையும் அவர்கள் கேட்ட போது. பேதுரு, ''மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்” என்று ஒருபோதும் கூறவில்லை. அவன், "பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்'' என்றான். அது அவர்கள் பெறுகின்ற பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். ஆமென். சரி. நாம் சீக்கரமாக கடந்து செல்ல வேண்டும். கேள்வி:39. எனக்கு இரண்டு பையன்கள் உள்ளனர் (ஒருவனுக்கு இரண்டு வயது; மற்றொருவனுக்கு ஐந்து வயது), அவர்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டுமா-? 270. நல்லது, இப்பொழுது சகோதரியே அல்லது சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, அது உங்களைப் பொறுத்தது. எனக்கு ஒரு சிறிய பெண் பிள்ளை இருக்கின்றாள் .... என்னுடைய சிறிய பையன், பில்லி பால், பதினாறு வயதாயிருக்கையில், இங்கே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். என்னுடைய சிறு பெண் பிள்ளைக்கு எட்டு வயதாயிருந்தது. அவள் என்னிடம் வந்து என் மடியில் அமர்ந்து, "அப்பா, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் வைக்க விரும்புகிறேன், ஆகவே நான் - நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,'' என்று கூறினாள். நான் அந்த சிறு பெண் பிள்ளைக்கு எட்டு வயதில் ஞானஸ்நானம் கொடுத்தேன். சிறு பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்பினால், அவைகளுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். அவைகளுக்கு, ஏன் அவைகள் ...... கர்த்தர் எதையெல்லாம் கூறினாரோ அதை தொடர்ந்து செய்யுங்கள், அது உங்களைப் பொறுத்தது. கேள்வி:40. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள் மாத்திரமே சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலில் இருப்பார்களா, அல்லது எல்லா விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தப்படுமா-? 271. நாம் .... அதை சரியாக விளக்கிக் காண்பிக்க நமக்கு நேரம் இல்லை. ஆனால், சகோதரனே பரிசுத்தாவி மணவாட்டி மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் இருப்பாள். பாருங்கள்-? வேதாகமம் ...-?... மற்றவர்கள் கைவிடப்பட்டிருக்க மாட்டார்கள். 272. கவனியுங்கள்-! பூமியை நியாயந்தீர்க்கப் போவது யார்-? பரிசுத்தவான்கள். தானியேல், ''நான் பார்த்துக் கொண்டிருக் கையில் நீண்ட ஆயுசுள்ளவர் வந்தார்- அவர் ஆயிரம் பதினாயிரம் பதினாயிரம் பரிசுத்தவான்களுடன் வந்தார்,'' என்றான். அது சரியா-? சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்று விட்டிருந்தது. பிறகு அவர்கள் கீழே வந்தனர், நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது. 273. ஆகவே புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அது சரியா-? வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அது ஜீவ புஸ்தகம்பரிசுத்த ஆவியைப் பெற்றிராத பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசி யைக் குறித்தது ஆகும். 274. மணவாளனை சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டனர் என்று இயேசு போதிக்கவில்லையா-? அவர்களில் ஐந்து பேர் .... அல்லது அவர்கள் எல்லாரும் கன்னிகைகளாக சுத்தமான வர்களாக, பரிசுத்த முள்ளவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள், இவர்கள், உறங்கச் சென்று பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாயிருந்தனர். மண வாளன் வந்த போது, சத்தம் வந்தது, சத்தமிட்டது, அவர்கள், "ஓ நாங்கள் உள்ளே செல்லட்டும். உங்கள் எண்ணையில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள்'' என்றனர். 275. அவர், ''நீங்கள் வாங்குகிறவர்களிடத்திற்கு போங்கள், ஜெபியுங்கள், இப்பொழுது அதை பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றார். ஆனால் அவர்களால் முடியவில்லை. ஆகவே அவர்கள் சென்ற போது, அந்த - அந்த கன்னிகைகள் கலியாண விருந்துக்குள் பிரவேசித்தனர், அவர்களோ அழுகையும், கூக்குரலும் பற்கடிப்பும் இருந்த புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர். கடந்த இரவு, கடந்த இரவுக்கு முந்தின இரவு, வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரத்தில், வலுசர்ப்பம், தேவனில் விசுவாசம் கொண்டிருந்து இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்ட மீதியாயிருந்த அந்த ஸ்திரீயின் சந்ததியின் மீது யுத்தம் பண்ண தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது என்று போதித்தோம் அல்லவா-? 276. ஸ்திரீகளாகிய உங்களுக்கு, நீங்கள் உங்கள் மாதிரியின் படியே ஒரு நல்ல அருமையான துணியை எடுத்து நீங்கள் அதில் இவ்விதமாக, உங்கள் மாதிரியின்படியே வெட்டியெடுக்க வேண்டிய பகுதியை அதிலிருந்து வெட்டியெடுகிறீர்கள். அது உங்களைப் பொருத்ததாகும்-? நீங்கள் வெட்டியெடுத்ம பகுதியி லிருந்து உங்கள் ஆடையை உருவாக்குகிறீர்கள். மீதமான பாகமும், வெட்டப்பட்ட துண்டைப் போலவே நல்ல துணியாய் இருந்த போதிலும், நீங்கள் உங்கள் தெரிந்துகொள்ளுதலின்படி அதை வெட்டியெடுத்தீர்கள். அது சரியா-? நல்லது, விலையெறபெற்ற தாயிருந்தாலும், அது உங்களுடைய தெரிந்து கொள்ளுதலாய் உள்ள து. 277. ஆகவே தெரிந்து கொள்ளப்படுதலினால் நாம் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்கிறோம் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே-! வேதாகமம் “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' என்று கூறுகின்றது. அது சரியல்லவா-? ஆகவே ... நீங்கள் இழந்துபோகப் படமாட்டீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வாள். மற்றவர்கள் நியாத்தீர்ப்பினூடாக கடந்து வருவார்கள்; அவர்களோ அப்படியில்லை. கேள்வி:41. ஒருவன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டி இருப்பதால், ஏன் இயேசு மத்தேயு 28-ல் ''பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறவேண்டும்-? அதைத் தான் நான் உங்களுக்கு விவரித்துக் காண்பித்தேன். 278. சரி, நீங்கள் களைத்துப்போயிருக்கிறீர்களா-? நீங்கள் களைத்து போய் உள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். கேள்வி:42. ஆனால் “பிதா குமாரன் பரிசுத்த ஆவி" ஞானஸ்நானத்திற்கு தேவன் கனத்தை கொண்டிருக்கிறாரா-? இந்த நாமத்தில், இந்த நாமங்களில் ஞான ஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்தாவியை பெற்ற மக்கள் இருக்கிறார்களா-? பிதாவை மகிமைப்படுத்த இயேசு வந்தாரா-? இந்த ஞானஸ்நானம் அங்கீகரிக்கப்படுமா-? 279. ஆம், பிதாவை மகிமைபடுத்த இயேசு வந்தார். பரிசுத்த யோவான் 14 ஆம் அதிகாரத்தை பாருங்கள். நான் சற்று ..... என்னிடம் ... சற்று காத்திருப்பீர்களானால் இன்னும் மூன்று தான் இருக்கிறது, நாம் அதைப் பார்ப்போம் என்று நான் விசுவாசிக்கி றேன். கவனியுங்கள், பிறகு நாம் புதியவைகளை பார்ப்போம், ஏனெனில் உண்மையாக இன்றிரவு சிலவற்றை நான் நிறுத்து வேன், என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள், இது சபையாகும், நாம் சென்று கொண்டேயிருக்கிறோம். 280. கவனியுங்கள், பிதாவை வெளிப்படுத்த இயேசு வந்தார். கவனியுங்கள், துவக்கத்தில் தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கினார். அது சரியா-? நல்லது, தேவன் என்றால் என்ன-? ஒரு ஆவி. பரிசுத்த யோவான் 4வது அதிகாரத்தில், இயேசு கிணற்றண்டை இருந்த ஸ்திரீயினிடத்தில் பேசிக் கொண்டிருந் தார், அவர், ''தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்” என்று கூறினார். அது சரியல்லவா-? தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலிலே உண்டாக்கி யிருப்பாரானால், அப்படியானால் எப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் உண்டாக்கியிருந்தார். ஒரு ஆவியான மனிதன். 281. ஆதியாகமம் 2-ல், நிலத்தை பண்படுத்த எந்த ஒரு மனிதனும் இல்லை, ஆகவே தேவன் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கினார். அவருடைய சாயலில் அல்ல, ஆனால் மிருக ஜீவனின் சாயலில் உண்டாக்கினார். பிறகு இங்கே இந்த மிருக மனிதனில் மனிதனின் ஆவியை வைத்தார், அவன் ஜீவாத்து மாவானான். இப்பொழுது அது தான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மிருகம் மோட்டார் வாகனங்களை செய்யாது, வாழ்க்கைக்கு உதவியாயிருக்கின்ற காரியங்களை இன்னும் அதைப் போன்ற மற்றவைகளை அது செய்யாது. அது ஒரு மிருகம் ஆகும், ஊமையான முரட்டுத்தனமான ஒன்று. அதற்கு ஆத்துமா கிடையாது. அதினால் எழுதவும் படிக்கவும் முடியாது. அதனால் பேச முடியாது, உரையாடமுடியாது. அது ஊமையான முரட்டுத்தனமான ஒன்று. ஆனால் முரட்டுத்தனமானதைப் போல மனிதனும் மாம்சத்தில் இருக்கிறான், ஆனால் அவனுக்குள் தேவனுடைய ஆத்து மாவைக் கொண்டவனாக இருக்கிறான். அது அவனை அழியாதவனாக்குகிறது. அவனால் கண்டு பிடிக்க முடியும் ...... அவனால் செய்ய முடிகின்றதை கவனியுங்கள்-! ஆகவே ஏறக் குறைய தேவனுக்கு சமமான நிலையில் இருக்கின்றான், ஏனெனில் அவனுடைய விழுந்து போன நிலையிலும் அவன் தேவனுடைய குமாரனாக இருக்கிறான். அவன் அற்புதமானவன்-! அவனைப் பாருங்கள்-! பாருங்கள்-? அது தான். 282. பிறகு மனிதன் மாம்சத்தில் விழுந்த போது .... தேவன் தமக்கு மேற்கொண்டு மற்றொரு தனிப்பட்ட நபரை கீழே அனுப்பிருந்தாரானால், அவர் அநீதி உள்ளவராவார். ஆகவே அதை நீதியாகச் செய்வதற்கு தேவனுக்கிருந்த ஒரே வழி மனிதனுடைய இடத்தை தாமாகவே எடுத்துக் கொள்வதாகும். 283. சகோதரன் நெவிலை இங்கே இந்த பெண்ணிற்காக நான் மரிக்கச் செய்தால் எப்படியிருக்கும்-? நான் உங்கள் மீது ஆளுகையு டையவனாக இருந்து, இந்த பெண்ணை இங்கே இந்த பெண்ணிற் காக நான் மரிக்கச் செய்தால் எப்படியிருக்கும்-? நான் நீதியாக இருந்து அதைச் செய்ய முடியாது. நான் மரணத்தை அறிவித்து, நீ வாழ வேண்டுமென்று நான் விரும்பினால், உன்னை நியாயப்படுத்த நான் உன்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 284. ஆகவே பிறகு தேவன், ஆவியின் ரூபத்தில் இருந்தவர் ... இல்லை, ரூபமின்றி இருந்தார். வேதாகமம், ''தேவன் ரூபமில் லாதவர்'' என்று கூறுகிறது. அது சரி. பிறகு தேவன் ஒரு உருவம் எடுக்க வேண்டியதாயிருந்தது, ஆகவே அவர் ஒரு கன்னிகையை நிழலிட்டு அவளுக்குள் ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார், இனச்சேர்க்கை இல்லாமல் அல்லது அதனுடன் எதுவுமே இல்லாத விதத்தில், ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார். அது தேவனுடைய குமாரனாக வளர்ந்தது. பிறகு தேவன் கீழே வந்து தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து பூமியில் அவரை தேவனாகச் செய்தார். 285. பரிசுத்த யோவான் சுவிசேஷத்தில், தோமா, "ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்'' என்றான். 286. அவர், 'இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா-?' என்றார். அவர், ''பிதாவை எங்களுக்குக் காண்பியும்' என்று நீ ஏன் சொல்லுகிறாய்-?'' என்றார். ஏன், அவர் ''நீ என்னைக் காண்கையில் நீ பிதாவைக் காண்கிறாய். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசம் செய்கிறார்'' என்றார். 287. சில காலத்துக்கு முன்னர் நான் அங்கே பேசிக் கொண்டிருந்தேன், இங்கே ஒரு பெண்மணி, குதிக்தெழுந்து, "ஓ சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள் என்பது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள், நிச்சயமாக அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். நீங்களும் உங்கள் மனைவியும் கூடத்தான் ஒன்றாயிருக்கிறீர்கள். அதே விதமாகத் தான் அவர்களும் ஒன்றாயிருக்கிறார்கள்'' என்றாள். 288. நான், "என்னை மன்னியுங்கள்.'' என்றேன். நான் “அவர்கள் அல்ல'' என்றேன். நான் “'உங்களால் என்னைக் காணமுடிகிறதா-?'' என்றேன். ''நிச்சயமாக” என்றாள். அப்படியா, ''என் மனைவியை உங்களால் காணமுடிகிறதா-?'' அவள், "இல்லை'' என்றாள். 289. நான், ''அதோ-! நானும் என் மனைவியும் இருக்கிறதைக் காட்டிலும் வித்தியாசமான விதமாக அவர்கள் இருக்கின்றனர்.'' என்றேன். பாருங்கள்-? நான், ''அது சரி'' என்றேன். 290. இயேசு, ''பிதாவை காணாமல் உங்களால் என்னைக் காணமுடியாது'' என்றார். நிச்சயமாக முடியாது-! அதுமூவகைச் சட்டத்தில் இரண்டாவது சட்டம், அதே சட்டம் (rule) அது தேவனாகும். இயேசு கிறிஸ்து ஒன்று தேவனாக இருக்கவேண்டும் அல்லது உலகமானது எப்பொழுதும் கொண்டிராத ஒரு பெரிய வஞ்சகராக இருக்கவேண்டும். 291. கவனியுங்கள்-! சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெண் ஒரு கிறிஸ்துவ விஞ்ஞான பெண், என்னிடம் வந்து, ''நான் உங்களுக்கு நிரூபிப்பேன்,'' என்றாள். இப்பொழுது, கிறிஸ்துவ விஞ்ஞானம் நண்பனே, ஒரு நிமிடத்திற்கு சற்று பயபக்தியாயிரு, பாருங்கள். அவர்கள், "அவர் ஒரு மனிதனேயன்றி வேறொன்றும் அல்ல என்று நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்றனர். ''நீர் மிகவும் அதிகமாக இயேசுவைக் குறித்து ஜம்பப்பேச்சு பேசுகிறீர்” என்றார்கள். 292. ''இரவும் பகலுமாக நான் ஜம்பப்பேச்சு பேசினாலும் அவருக்கு சேரவேண்டியதை என்னால் அவருக்கு கொடுக்க இயலாது” என்றேன். நான் கூறினேன், "கூறப்போனால் ...'' 293. "அவர் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா” என்று ஏசாயா அவருக்கு பெயரிட்டான். அவரே எல்லாமாய் இருக்கிறார். "அவர் ஆல்பா, ஓமேகா, முதலும் முடிவும், தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பிதா, குமாரன் பரிசுத்தாவி' எல்லாம் அவரே. "தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கின்றது, ''. என்று வேதம் கூறுகின்றது. தேவனுடைய பரிபூரணம் யாவும் அவருக்குள் இருந்தது. 294. அவள், ''நான் உங்களிடம் கூறுகிறேன், அவர் லாசருவை எழுப்பத்தக்கதாக, லாசருவிற்காக ஜெபிக்க அவர் சென்ற போது, அவர் ஒரு மனிதனாகத்தான் இருந்தார் என்று நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்றாள். 295. "நீ அதைச் செய் பார்க்கலாம்'' என்றேன். 296. "வேதாகமம் 'அவர் கண்ணீர் விட்டார்' என்று கூறுகிறதே. அது அவர் மனிதன் தான் என்று நிரூபிக்கிறது, அவரால் கண்ணீர் விட முடிந்தது” என்றாள். 297. நான், ''நிச்சயமாக, கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது குமாரன் ஆகும்” என்றேன். 298. அவர் ஒரு தேவன்- மனிதன் ஆவார். நானும், நீங்களும் போல அவர் ஒரு மூன்றொன்றான நபர் ஆவார்; நாம் ஆத்துமா, சரீரம் மற்றும் ஆவியாக இருக்கிறோம். அவர் தேவனுடைய தெய்வ நிலையில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருந்தார், அது தான் அவர். அவர் தாமே தெய்வ நிலையில் இருந்தார்-! அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கே அவரால் வேறொன்றை எவ்விதம் செய்ய முடியும்-? அது வேறொன்றாய் இருந்து இருக்குமானால்... அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டனர்; அவர்களுக்காக அவர் கதறினதில் வியப்பு ஓன்றுமில்லை. ஒரு மனிதன் எவ்விதம்... அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரல் இட்ட போது, அவர் அதை எவ்விதமாக உணர்ந்தார்-? அவர் அவர்களை ஆக்கினைக்கு உட்படுத்தி நரகத்திற்கு அனுப்பவேண்டும் அல்லது தமது ஜீவனையே அளிக்க வேண்டும்; அவர் தம் பிள்ளைகளுக்காக ஜீவனைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவருக்குள் தெய்வத்துவம் வசித்தது-! அது தான் அவர். 299. அந்த ஸ்திரீ, "சங்கை. பிரன்ஹாம் அவர்களே, இங்கே கவனியுங்கள். நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன். அவர் கண்ணீர்விட்டபோது, அவர் மனிதன் என்பதை நிரூபித்தார்,” என்றாள். 300. நான், ''ஸ்திரீயே, அவர் ஜெபி... மனிதனாயிருந்தார் அல்லது அவர் கண்ணீர் விட்ட போது மனிதன் தான் என்பது சரியே. அவர் கண்ணீர் விட்ட போது மனிதன் தான், அழிவு தன் எஜமானை அறியும் ஆத்துமா தன் சிருஷ்டிகரை அறியும். ஆனால் அவர் தம் மெலிந்த சரீரத்தில் நிமிர்ந்து நின்று அழுகி, தோல் புழுக்கள் அவனுடைய சரீரத்தில் ஊர்ந்திருக்க மரித்து 4 நாட்களான, மரித்து 4 நாட்களான மனிதனை, லாசருவே வெளியே வா, என்று அவர் கூறின போது அவர் எழுந்து தன் கால்களில் நின்றானே, மறுபடியும் ஜீவித்தானே, அது மனிதனைக் காட்டிலும் மேலானது,'' என்றேன். 301. அவர், அன்றிரவு பசியுள்ளவராய் மலையிலிருந்து இறங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்று அந்த மரத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு மனிதனாக இருந்தார். அந்த அத்திமரத்தில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் அவர் ஐந்து பிஸ்கட்டுகளையும் இரண்டு மீன் துண்டு களையும் எடுத்து ஐயாயிரம் பேர்களை போஷித்தபோது, அது மனிதனை விட மேலான ஒன்றாகும்-! அது தேவன் அங்கே இருத்தல் ஆகும்-! அந்த சிருஷ்டிகரால் சமைக்கப்பட்ட மீனைப்பிட முடிந்தது, அது இன்னுமாக சமைக்கப்பட்ட மீனாகவே இருந்தது, வேக வைக்கப்பட்ட அப்பத்தை எடுத்து பிட்டுக் கொடுத்தார்; அவர் எவ்விதமான அணுக்களைக் கட்டவிழ்த்திருப்பார்-? அல்லேலூயா-! அவர் தேவன், அணுக்கள் மற்ற எல்லா காரியங்களின் சிருஷ்டிகர்-! அது மனிதனைக் காட்டிலும் அதிகமான ஒன்றாக இருந்தது-! 302. அவர் நாள் முழுவதும் பிரசங்கங்கள் செய்து, வியாதியஸ் தரை சொஸ்தப்படுத்தி, மிகவும் களைப்புற்றவராக, அங்கே அந்த இரவு அந்த படகில் இருந்த போது கடலின் பத்தாயிரம் பிசாசுகள் அவரை மூழ்கடித்துவிட வேண்டும் என்று சபதம் செய்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். அங்கே இருந்த அந்த சிறிய பழைய படகு, ஒரு பாட்டில் மூடியைப் போன்று அங்குமிங்கம் தண்ணீரில் தத்தளித்தது, இங்குமங்கும் பெரிய அலைகள் அடித்துக் கொண்டிருந்தது, அவரோ படுத்துக்கொண்டிருந்தார், அலைகள் கூட அவரை எழுப்பமுடியாத விதத்தில் மிகவுமாக களைப்புற்றிருந்தார். பிசாசுகள் உறுமிக்கொண்டிருந்தன, "அவர் தூங்கிக்கொண்டிருக் கையில் இப்பொழுது அவரை பிடித்துவிடுவோம்'' என்றன. ஆனால் அவர் விழித்துக்கொண்டபோது, அங்கே விழித்துக் கொண்டார், அவர் ஒரு மனிதனாக இருந்தார், அவர் மிகவுமாக களைப்புற்றிருந்தார். ஆனால் அவர் படகுப்பாயின் நுனிக்கயிற்றில் தம்முடைய பாதத்தை வைத்து, கடலைப் பார்த்து, ''அமை தாலாயிரு-!'' என்றார், காற்றுகளும் அலைகளும் அவருக்கு கீழ்ப்படிந்தன. அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்றாகும்-! அது வானங்களை உண்டாக்கின சிருஷ்டிகராகிய தேவன் ஆகும். 303. "இவர் எப்படிப்பட்ட மனிதனோ காற்றும் கடலலைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று அந்த அப்போஸ்தலன் கூறியதில் ஆச்சரியமில்லை. 304. அது மனிதனைக் காட்டிலும் அதிகமான ஒன்று. அது தேவன் ஆகும். பாவத்தை எடுத்துக் போடத்தக்கதாக, ஒரு பலியாக சிலுவையில் அவர் ஆணியால் அறையப்பட்டிருந்த போது ஒரு மனிதனாக அவர் இருந்தார். தம்முடைய கையில் ஆணிகளால் அடித்திருக்கப்பட்டிருந்த ஒரு மனிதனாக அவர் இருந்தார். தம்முடைய தலையின் மேல் முள்ளுகளையுடைய ஒரு மனிதனாக அவர் இருந்தார். எள்ளி நகையாடின போர்ச்சேவகர்களின் எச்சிலை தம் மேல் கொண்டிருந்த ஒரு மனிதனாக அவர் இருந்தார். நொறுக்கப்பட்ட, சாட்டையடிகள் கொண்ட, காயப்பட்ட ஒரு மனிதனாக அவர் இருந்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார்-! அவர், ''என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்-?'' என்று கதறிய போது ஒரு மனிதனாக அவர் இருந்தார். உதவிக்காக கதறிக்கொண்டிருந்த போது ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் ஈஸ்டர் காலையன்று கல்லறையில் மரணத்தின் முத்திரைகள் உடைத்த போது, அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று-! தாம் தேவன் என்று அவர் நிரூபித்தார். ஜீவிக்கும்போது அவர் என்னை நேசித்தார்; மரித்தபோது என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்பட்ட போது அவர் என் பாவங்களை தூரமாகக் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்தபோது அவர் இலவசமாய் என்னை என்றைக்குமாய் நீதிமானாக்கினார்; ஒரு நாளில் அவர் வருவார், ஓ மகிமையான நாள்-! 305. எட்டி ப்ருட் இவ்விதமாகச் சத்தமிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை. இயேசுவின் வல்லமையை எல்லோரும் வாழ்த்தட்டும் தூதர்கள் தாழவிழுந்து பணியட்டும் அந்த ராஜரீகக் கிரீடத்தை கொண்டு வந்து அவரே எல்லாவற்றிற்கும் தேவன் என்று முடிசூட்டுவோம். 306. கர்த்தராகிய இயேசு அவர் தான் அந்த மகத்தான நபர். அவர் யேகோவா, மாமிசத்தில் திரைமறைக்கப்பட்டிருந்த தேவன். வேதாகமம் ''வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும், அதை அவருடைய நாமத்தில் செய்யுங்கள்,'' என்று கூறுகின்றது. வேதாகமம்,'' "பரலோகத்திலுள்ள முழுக்குடும் பத்திற்கும் 'இயேசு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியிலுள்ள முழு குடும்பத்திற்கும் 'இயேசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது'', என்று கூறுகின்றது. அவருடைய நாமத்தில் நாம் ஜெபிப்போம், அவருடைய நாமத்தில் ஜீவிப்போம், அவருடைய நாமத்தில் போதிப்போம், அவருடைய நாமத்தில் மரிப்போம், அவருடைய நாமத்தில் அடக்கம் பண்ணக்கடவோம், அவருடைய நாமத்தில் ஞானஸ் நானம் பெறுவோம், அவருடைய நாமத்தில் உயிர்த்தெழுவோம், அவருடைய நாமத்தில் பரலோகம் செல்வோம். அது தான் அவருடைய நாமம், அவருடைய மணவாட்டிக்கு “செல்வி இயேசு'' என்று பேரிடப்பட்டுள்ளது. அவருடைய நாமத்திற்காக புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்ட மக்களை அது வெளியே எடுக்கும். 307. நான் ஒரு ஒருத்துவக்காரன் அல்ல. இல்லை ஐயா. திரித்துவ ஜனமே அதை உன்னிடத்திலிருந்து எடுத்துப்போடு. நான் ஒரு ஒருத்துவக்காரன் இல்லை. இல்லை ஐயா. ஒரு நாள் ஒருத்துவத்தைச் சேர்ந்தவகுே அல்லது ஒரு திரித்துவக்காரனோ அல்ல. வேதாகமம் என்ன கூறுகிறதோ அதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். அது சரியானது, ஆமென். வியூ-! நான் ஒன்றின் பேரில் அதிகமாக பேசுகி றேன். அது என்ன-? அதை சரியாக விளக்கினேனா-? அல்லது, அது என்னவென்று நாம் பார்ப்போமா-? ஓ, அப்படியா, அது சரியானது, அந்த ... எப்படி பிதா கிறிஸ்துவுக்கள் இருந்தார் என்று. அவர் ஒரு மனிதனாக இருந்தார், அவர் தேவன் - மனிதன் ஆவார். கேள்வி:43. பெந்தெகொஸ்தே சபை பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில் ஞான ஸ்நானம் கொடுக்காமல் இருக்கின்றதா-? அவர்களில் சிலர் அவ்விதம் செய்கின்றனர். கேள்வி:44. ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் மரித்து போவானானால் அவன் இழக்கப்பட்டுப்போவானா-? 308. இல்லை, ஐயா. அவன் ஒரு விசுவாசியாக இருந்தால், அவன் உயிர்த்தெழுதலில் வருவான், 2ம் உயிர்த்தெழுதலில். அவன் அபிஷேகம் பெற்றிருந்தால், முதலாம் உயிர்த்து எழுதலில் அவன் செல்வான். இப்பொழுது ஏறக்குறைய என் வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். அது திருப்திகரமாக இல்லை எனில், அப்படியானால் நீங்கள்- நீங்கள் என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு வேதவசனத்தை தருகிறேன். ஏனெனில், இன்னும் இந்த இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், பிறகு நாம் முடிப்போம். கேள்வி:45. சகோதரன் பில், சூதாட்டத்தைக் குறித்து வேதாகமம் ஏதாவது கூறிகிறதா-? 309. ஆம், அது கூறுகின்றது, ஆனால் இப்பொழுது அதை என்னால் கூற முடியாது. போர்ச் சேவகர்கள் அவருடைய துணிகளுக்கும், அதைப் போன்ற சிலவற்றிற்கும் சூதாடினர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்னால் கூற முடியாது. கேள்வி:46. ஒன்று கொரிந்தியர் 15:29யை நீங்கள் விளக்குவீர்களா-? 310. சகோதரன் நெவில் உங்களால் கூடுமானால் அதை எனக்காக எடுங்கள், ஒன்று கொரிந்தியர் 15:29. நாம் அதை எடுப்போம். 311. இப்பொழுது ஒருக்கால் நாளை என்னால் உங்களுக்கு அதை எடுக்க முடியும். அந்த .... அந்த எழுத்துக்கள் எப்படி "VICARIVS FILII DEI" என்று எழுத்து கூட்டின. உங்களுக்கு விருப்பமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். கேள்வி:47. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு எசேக்கியல் 38 மற்றும் 39ன் தீர்க்கதரிசனம் நிறைவேறுமா-? 312. அப்படி அல்ல என்று எண்ணுகிறேன். நாம் அடுத்ததாக எதிர்நோக்கி இருப்பது சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் என்று எண்ணுகிறேன். ஆகவே அதற்கு பிறகு, "கோகும் மாகோகும் கீழே வந்த போது " அது ரஷ்ய சேனைகள் வருகின்ற அந்த ... 313. கவனியுங்கள், இங்கே பொதுப் பணி கம்பெனியில் மேலதிகாரியாக திரு. போஹன்னான் இருந்தார், ஒரு அருமையான கிறிஸ்து வ மனிதன். அவர் ஒரு நாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், அவர், ''பில்லி, நான் வாசிக்க முயற்சி செய் தேன், வெளிப்படுத்தின விசேஷத்தை விவரிக்க என்னுடைய மேய்ப்பரை கேட்க முயற்சித்தேன், நாங்கள் முயற்சித்து முழுவதுமாக குழப்பமடைந்து விட்டோம், யோவான் அந்த இரவு ஏதையாவது தின்றுவிட்டு ஒரு சொப்பனத்தைக் கண்டிருக்க வேண்டும்'' என்று கூறினார். நான் ''திரு.போஹன்னான், உமக்கு வெட்கமில்லையா'' என்றேன். நான் கூறினேன் ... அவர், ''நல்லது, அதை யாருமே புரிந்து கொள்ள முடியாது'' என்றார். 314. நான், 'இல்லை, எந்த இயற்கையான மனிதனாலும் முடியாது, ஆனால் பரிசுத்த ஆவியானவரால் அதை வெளிப்படுத்த முடியும்'' என்றேன். 315. அவர், "நல்லது, இங்கே பாருங்கள் பில்லி,'' என்றார். அவர், ''மணவாட்டி சீனாய் மலையின் மேல் நின்று கொண்டிருந்தாள். இங்கே வாயிலிருந்து ஊற்றப்பட்ட தண்ணீர் இருந்தது, வலுசர்ப்பம் ஊற்றிக்கொண்டிருந்தது, மணவாட்டியின் மீது யுத்தத்தைக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள். அதை ஒன்று சேர்த்து விவரியுங்கள் பார்க்கலாம்-!'' என்றார். 316. நான், 'திரு. போஹன்னான் உங்களுக்கு தெரிந்தது என்னவென்றால், மூன்று வித்தியாசமான காரியங்களை நீங்கள் குழப்பிக் கொண்டவர்களாய், அதை, மணவாட்டி என்று அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சீனாய் மலையின் மேல் ஆட்டுக் குட்டியானவருடன் நின்று கொண்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை 'மணவாட்டி' என்று அழைக்கின்றீர்கள். அது அவர்கள் அல்ல. வாயிலிருந்து தண்ணீரை ஊற்றி, ஸ்திரீயின் வித்தின் மீதியானவர்களுடன் யுத்தம்பண்ணச் சென்றது, என்று நீங்கள் அவர்களைக் குறிப்பிடுகிறீர்கள், அது மணவாட்டி அல்ல; அது விடப்பட்டவர்கள் ஆவார். மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள்; அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருந்தனர்; இங்கே உபத்திரவத்தினூடாக பெயர் கிறிஸ்தவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். ஆகவே அது சரி'. 317. சகோதரனே இப்பொழுது நீங்கள் அதை எடுத்திருந்தால் அதை வாசியுங்கள். (சகோதரன் நெவில் ஒன்று கொரிந்தியர் 15:29 வாசிக்கின்றார் - ஆசி) மேலும் மரித்ததோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்-? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்-? 318. இப்பொழுது, இப்பொழுது, சகோதரரே, மரித்தவர் களுக்காக ஞானஸ்நானம் கொடுப்பது என்று விசுவாசிக்கின்ற ஒரு - ஒரு மக்கள் இருக்கின்றனர், அது மார்மோன் மக்கள் ஆகும். நான் அவர்கள் ஆலயத்திற்கு அநேக முறை சென்றிருக்கிறேன். அவர்கள் மிகவும் அருமையான ஜனங்கள் ஆவர். நீ ஒருவேளை ஒரு மார்மோனாக இருக்கலாம். நான் உன் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் என் அன்பான நண்பனே, நீ உன் தகப்பனாருக்காக ஞானஸ்நானம் பண்ணப்பட முடியாது. அச்செயலை அவர்கள் செய்தாக வேண்டும். "மரமானது எப்பக்கம் சாய்கின்றதோ, அது அப்பக்கமாகவே விழுந்து விடும்.'' பவுல் இங்கே “மரித்தோரைக்'' குறித்து பேசுகிறான். ''மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தோர் உயிர்த்தெழாவிடில் நீங்கள் ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞான ஸ்நானம் பண்ணப்பட வேண்டும்-?'' நான் என்ன கருதுகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா-? அப்பபோழுது நீங்கள்... ''மரித்தோர் உயிர்த்து எழாவிடில் புசிப்போம், குடிப்போம், நாளைக்கு சாவோம் என்று சொல்லலாமே-?'' ஆனால் அவனோ தொடர்ந்து மரித்தோர் உயிர்த்தெழுதலுக்காக தேவனை மகிமைப் படுத்துகிறான். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு அவருடைய மரணம், அடக்கம் உயிர்த்து எழுதலுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அதனால் தான் நாம் "மரித்தவருக்காக'' ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். சரி. இதன் பின் மேலும் இன்னொன்றுள்ளது என்று நான் நம்புகிறேன். சகோதரன் பில், பரிசுத்தாவியை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு கூறுங்கள். அது ஜெபத்தினாலும், அர்பணிக்கப்பட்ட ஜீவியத்தாலும், சுகம் அளித்தலைப் போல அதைப் பெற்றுக் கொள்ளும் போதா-? இங்கே நீர் எனக்கு ஜெபித்த போது சுகமளித்தலுக்காக விசுவாசம் கொண்டிருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்-? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக நீங்கள் கைகளை வைத்து ஜெபிப்பதுண்டா-? நான், "பிதா கமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றள்ளேன். நீர் சமீபமாக பேசினது போல நான் மறுபடியுமாக இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்று தயவு செய்து எனக்கு கூறுங்கள். இப்பொழுது, என் அருமை கிறிஸ்தவ நண்பனே, என்ன செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு கூறிக்கொண்டிருக்கவில்லை. நான் வேத வசனத்தைத் தான் எடுத்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன். நாம் பேசிக் கொண்டிருக்கையில் எவ்வித மாக, எப்படி பரிசுத்த ஆவியானவரால் சரியாக இப்பொழுது வரமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். பரிசுத்த ஆவி தேவனுடைய ஒரு வரமாகும். பாருங்கள்-? அது தேவனுடைய வர மாகும். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே அது வரும். நான் உங்களிடம் கூறுவேன், அந்த... ஜனங்கள் சரியாக போதிக்கப்பட்டிருப்பார்களானால், … இங்கே வயோதிபர்களாகிய உங்களில் கூடாரத்தில் இருந்து கொண்டிருக்கின்ற முற்காலத்தை சேர்ந்த உங்களிடம் ஒன்றை நான் கேட்கட்டும். நான் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது கவனியுங்கள். ஊழியர்களே, இதை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரண்டை அந்த மக்கள் வரும் போது அதற்கு முன்னர் ஜீவியம் சுத்தமாகத்தக்கதாக அந்த மக்களுக்கு நான் போதித்து இருந்தேன், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்ள கடமைபட்டு உள்ளார் என்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற உடன் அதை ஏற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் சரியாக அங்கு இருக்கின்றார் என்றும் அவர்கள் விசுவாசிக்கும்படிச் செய்தேன். அவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது சரி. நீங்கள் மாத்திரம்... 319. மேய்ப்பர்களே, உங்கள் ஆடுகளுக்கு போதியுங்கள், இங்கே வேதாகமத்திற்குள் அவர்களை கொண்டு செல்லுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை தட்டிக் கொடுக்கின்றார்-ஆசி) ஏதோ ஒரு சபையின் பழைய பாடப் புஸ்தகத்திலிருந்து அப்பாலே செல்லுங்கள், இங்கே தேவன் போதித்து இருக்கின்ற வேதாகமத்திற்கு வாருங்கள், பிறகு இந்த விதமான சிக்கல்கள் உங்களுக்கு வராது. 320. அபிஷேகிக்கப்பட்ட நபரால் கைகள் வைக்கப்படுதல், ஆம், கைகளை வைப்பதின் பேரில் தான் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். கேள்வி:48. சகோதரன் பில், பிரசங்கி வார்த்தையை கொடுத்துக் கொண்டிருக்கும் போது யாராவது எழுந்து அந்நிய பாஷையில் செய்திகளைக் கூறினால் அது ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட ஒன்றா-? இந்த நபர் இங்கே மூன்று கேள்விகளை வைத்திருக்கிறார் கேள்வி:49. மற்றொரு கேள்வியானது; மேலும் பீட அழைப்பு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விதமாகச் செய்வது ஒழுங்கிற்கு புறம்பான ஒன்றா-? கேள்வி:50. மூன்று, மூன்றாவது: மேலும் அது ...... சபையில் யாராவது ஒருவர் எழுந்து நின்று, ஆராதனையின் போது ஏதோ ஒன்றைக் கூறினதற்காகவோ அல்லது செய்ததற்காகவோ ஒரு ஊழியக்காரனை, புனிதமான மேஜையின் பின்பாக இருப்பவரை கண்டிக்கலாமா-? இந்த எல்லா காரியங்களும் கூடாரத்தில் அநேக முறைகள் செய்யப்பட்டுள்ளன. 321. இப்பொழுது, இதை நான் சீக்கிரமாக கூறட்டும், இப்பொழுது இது சபைக்கான ஒன்றாக இருக்கிறது. நான்... இப்பொழுது, எங்கள் வாசல்களில் இருக்கும் வெளி மக்களே, நான் சபைக்கு இப்பொழுது சிறிது அடி கொடுக்கப் போகிறேன், ஆகவே நீங்கள். உங்களால் கூடுமனால் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். 322. என் பிள்ளைகளே-! கவனியுங்கள், அந்த வரங்கள் மகத்தானவைகள் அல்லவா. நான் உங்களை எவ்வாறு மெச்சுகிறேன் என்றும், நான் உங்களை தேவ அன்புடன் நேசிப்பதை யாருமே அறிந்திருக்க முடியாது. ஆனால் அந்த வரங்களை சரியான இடத்தில் நீங்கள் உபயோகிக்காவிட்டால் அவை உங்களுக்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகவும் இருக்கும். 323. இன்றைக்கு மக்களைப் பாருங்கள், களத்தில் இருக்கும் அருமையான மனிதர், வியாதியஸ்தருக்காக ஜெபித்து அதற்கு பணத்தை வசூல் செய்கின்றனர். அது தவறாகும். ஒரு மனிதன் சுகமாக்குதலுக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கான விசுவாசம் கொண்டிருப்பானானால், அவன் பணம் வாங்காமல் மக்களுக்கு ஜெபம் செய்யும் ஒரு நற்பண்பு கொண்டுள்ள ஒருவனாக இருக்க வேண்டும். தேவனுக்கு நன்றி-! சகோதரனே, நான் அதைக் கூற விரும்புகிறேன், எனக்குத் தானே அல்ல, ஆனால் தேவனுடைய மகிமைக்காக, எனக்காக மக்களிட மிருந்து பணம் ஒரே காணிக்கையில் பத்து லட்சம், ஐந்து லட்சம் டாலர்கள் வந்தபோதும் மற்றும் அதைப் போன்ற ஒன்றையும் ஒரு முறை கூட நான் வாங்கினது கிடையாது. அது உங்களுக்கு தெரியும்; அது சரியாக இங்கே இருந்தது, அந்த காகிதம். பாருங்கள்-? அது சரி. அது... நீ அதைச் செய்யம் போது, தேவனிடம் உனக்கு இருக்கின்ற உன்னுடைய விசுவாசத்தை நீ இழக்கப்போகின்றாய். 324. இப்பொழுது அந்நிய பாஷையில் பேசுகின்ற, அந்நிய பாஷையின் வரங்களையுடைய மக்களாகிய நீங்கள், உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்த சபையில் நீங்கள் தேவைப் படுகிறீர்கள். நீங்கள் இங்கிருக்க நான் விரும்புகிறேன். ஆனால், இப்பொழுது, இந்த - அந்த காரியம் ஒழுங்கில் இருக்கின்றது, பிரசங்கி பிரசங்கம் செய்யும் போது அதை ஒரு போதும் செய்யவேண்டாம். அவ்விதம் செய்வாயானால், நீ ஒழுங்கிற்கு வெளியே இருக்கின்றாய். பாருங்கள்-? நீ அதைச் செய்யகூடாது. ஏனெனில் வேதாகமம், 'தீர்க்கதரிசியின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கி இருக்கிறதே,'' என்று கூறுகிறது. ஆகவே ஒரு மனிதன் பிரசங்கிக்கும் போது, அவன் மேடையைக் கொண்டிருக்கிறான், அவன் கூட்டத்தைக் கொண்டிருக்கிறான், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக பேசப் போகின்றார். அவன் முடித்தவுடன் அப்பொழுது அது செய்திக்கான நேரமாக இருக்கிறது, நீங்கள் பாருங்கள். ஆகவே ஒழுங்கிலிருந்து வெளியே செல்லாதீர்கள்; அப்படி செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தடங்கலைக் கொண்டு வருகிறீர்கள். பிறகு நீங்கள் - சென்று கொண்டிருக்கிற செய்தியோடு பரிசுத்த ஆவியை நீங்கள் துக்கப்படுத்துவீர்கள்.. 325. இங்கே சில காலத்திற்கு முன்னர், நான் இங்கே வாஷிங்டனில் எங்கோயொரு இடத்தில் ஒரு கூட்டத்தில் நான் இருந்தேன், அநேகமாயிரம் மக்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆகவே என்னுடைய நிர்வாகி, ஒரு உண்மை யான வேதாகம வியாக்கியானி, அவர் அங்கே நின்று கொண்டு, அபிஷேகிக்கப்பட்டவராக, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார், பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டிருந்தார். ஒரு பெண் எழுந்து அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள், அவர் சற்று நேரம் பொறுத்திருந்து பிறகு பேச்சைத் தொடர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் ஆர ... துக்கமடைந்தார், அதை ஜனங்கள் மத்தியில் உங்களால் காணமுடியும்;. அவர் மறுபடியுமாக பேச ஆரம்பித்தார், அவள் எழுந்து கொண்டாள். ' அவர் ''கர்த்தருடைய நாமத்தில், சகோதரியே உட்காருங்கள், நீங்கள் ஒழுங்கிற்கு வெளியே இருக்கிறீர்கள்'' என்றார். ஊழியக்காரர்கள் அவளை அங்கே கொண்டு சென்று அவளுக்கு தெரியப்படுத்தினர். 326, இப்பொழுது, அது என்ன, அந்த வரங்கள் உலகத்தி லிருக்கின்ற அவைகள், இப்பொழுது சபையில் இருக்கின்றன. வரங்கள் சபையில் இருக்கின்றன, ஆனால் அந்த ஏழை சிறிய பிள்ளைகள் அந்த வரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பிறகு அதை எப்படி கட்டுக்கள் வைப்பது என்கின்ற போதகம் இல்லாமல் இருக்கின்றனர். நீங்கள் அதை கட்டுக்குள் வைக்காமற் போனால் நீங்கள் நன்மையைக் காட்டிலும் அதிக சேதத்தைத் தான் விளைவிப்பீர்கள், பாருங்கள்-? 327. வெளியே சென்று வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்து யாரோ ஒருவரை சுகமடையச் செய்து ''இப்பொழுது, அதற்காக நீ எனக்கு ஆயிரம் டாலர்கள் கொடுத்தாக வேண்டும்'' என்று கூறும் ஒரு மனிதனைப் போன்று. இப்பொழுது அவன் நன்மையைக் காட்டிலும் இன்னும் அதிகமான கேட்டைத்தான் செய்திருக்கிறான். அந்த மனிதன் கிறிஸ்துவின் காரியத்தின் பேரில் நிந்தையைக் கொண்டு வந்ததைக் பார்க்கிலும் சென்று மரித்துப்போயிருந்தால் நலமாயிருந்திருக்கும். 328. இப்பொழுது, நீங்கள்... மேய்ப்பரோ அல்லது சுவிசேஷகரோ, அல்லது யாராயிருந்தாலும் அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தால் அமைதியாயிருங்கள். அவ்விதமாகச் செய்யும் படி பவுல் கூறியிருக்கிறான், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, ஆகவே அப்பொழுது அவன் ''நீங்கள் ஒவ்வொருவராய்ப் பேசுங்கள்,'' என்றான். அது முற்றிலும் உண்மையானது. ஆகவே அவன், "நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன், அது நல்லது,'' என்றான். 329. ஆனால் நீங்கள் அந்நிய பாஷையின் வரத்தைக் கொண்டிருந் தாலொழிய உங்களால் அந்நிய பாஷையில் பேசமுடியாது. ஆகவே அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் இப்பொழுது இந்த சபையில் அநேக வரங்கள் இருக்கினறன. அதில் அநேக வரங்கள் இங்கே மெத்தோடிஸ்ட் சபையில் இருக்கின்றது, இங்கே பாப்டிஸ்ட் சபையில் அதின் அநேகம் இருக்கின்றது, அது பிரசங்கிக்கப்பட்டால்தான் அந்த வரமானது கிரியை செய்ய ஆரம்பிக்கும். 330. அது எவ்விதம்-? நீ நிலத்தில் விதையைப் போட்டு அதைப் பண்படுத்தாவிட்டால், அதற்கு என்ன ஆகும்-? பாருங்கள், அது அங்கே உலர்ந்து புழுதியில் கிடந்து அழுகிப்போகும்; அது எந்த நன்மையும் கொடுக்காது. இந்த சபையில் இது வரைக்கும் இந்த வரங்கள் இருந்துவருகிறது, ஆனால் பெந்தெகொஸ்தே மழை, இப்பொழுது தான் அதற்கு நீர் பாய்த்து கனியை கொண்டு வரத்தக்கதாக தண்ணீர் விழ ஆரம்பித்திருக்கிறது, இப்பொழுது, அதை சரியான இடத்தில் பயன்படுத்துங்கள். 331. இப்பொழுது, அது கூறுகிறது, நல்லது, அந்த நபர் கேட்ட கேள்வி அடுத்த கேள்வி அங்கே இருந்தது என்று நான் நம்புகிறேன். அந்த ... அவர்கள் பீட அழைப்பு கொடுக்கும் போது-? 332. இல்லை, அப்படியென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் கவனித்து இருப்பீர்களானால் கொரிந்தியரை எடுத்து வாசித்துப் பாருங்கள், உங்களில் சிலர் இங்கேயிருக்கிறீர்கள், அந்நிய பாஷையில் பேசும் வரத்தை உடையவர்களாக நீங்கள் இருப்பீர் களானால், அப்படியானால் நீங்கள் கவனியுங்கள். வேதாகமத்தில், அவர்கள் ..... ஆராதனை முடிவுற்ற பிறகு, சபையார் மீது தேவனுடைய ஆசீர்வாதம் வரும், அப்பொழுது அவர்கள் பேச ஆரம்பிப்பார்கள், அப்பொழுது அவர்கள் தேவனை மகிமைப் படுத்த ஆரம்பிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு சமயமும், யாராவது ஒருவருக்கு ஒரு நேரடியான செய்தி இருக்கும். அல்லது... இப்பொழுது நீங்கள் அதை கவனிக்க வேண்டும். பாருங்கள்-? அது மாம்சமான ஏதோ ஒன்றல்ல. அது யாராவது ஒருவர் எதோ ஒன்றை செய்யும் படியாக, அல்லது சபைக்கு பக்தி விருத்தி உண்டாக்கத் தக்கதாக எதோ ஒன்றுக்காக யாராவது ஒருவருக்கு ஒரு செய்தியாக இருக்கும். அது சபையை மகிமைப்படுத்தத்தக்கதாக எதோ ஒன்றாக இருக்கும். 333. அங்கே தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள் தங்கள் பெயரின் பேரில் நிந்தையை வரவழைத்துக் கொண்டனர். பெந்தெ கொஸ்தெ என்ற பெயரை நீங்கள் உச்சரித்தாலே ஜனங்கள் தள்ளி நடந்து "அபத்தம்'' என்று கூறுவார்கன், ஏனென்றால் அதிக கூக்குரல்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர், அந்த ஜனங்கள் உத்தமமாக உள்ளனர், ஆனால் போதிக்கப்படாமல் உள்ளனர். 334. பவுல், "அங்கே இருக்கின்ற பெந்தெகொஸ்தே சபைக்கு நான் வரும் போது, அதை ஒழுங்கில் அமைப்பேன்,'' என்றான். ஆவியானவர் கட்டளையிட்டபடியே அது ஒழுங்கில் தான் இருக்க வேண்டும், ஒவ்வொரு காரியமும் ஒழுங்கின் படி தான் செய்யப்படவேண்டும், ஆகவே அவன், ''இப்பொழுது, உள்ளே வந்து நீங்கள் எல்லாருமே அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் போது, கல்லாதவன் உள்ளே வருவானானால், அவன் 'உங்கள் எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதா-?' என்று கூறி வெளியே சென்று விடுவான்,'' என்றான். 335. அவ்விதமாகத் தான் பெந்தெகொஸ்தே சபையும் செய்கின்றது. அவன், "இப்பொழுது, உங்களில் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து ஏதோ ஒன்றின் இரகசியங்களை வெளிப்படுத்துவானானால், உங்களில் ஒருவன் தீர்க்கதரிசியாக இருப்பான்,'' என்று கூறினான். வேறு விதமாகக் கூறினால், அவன் ''அப்படியானால் ஜனங்கள் கீழே விழுந்து 'தேவன் உங்களோடு இருக்கின்றார்' என்ற கூறுவார்கள் அல்லவா-?'' என்று கூறினான். 336. நல்லது, நான் தீர்க்கதரிசி வரத்தை மறுதலிக்கவேண்டு மென்றிருந்தால் அந்நிய பாஷையில் பேசும் வரத்தை எவ்வாறு நான் மறுதலிக்க முடியும், இந்த மற்ற வரங்களையும் நான் மறுதலிக்க வேண்டுமே-? இப்பொழுது அநேக சபைகள், பெரிய சபைகள், நசரீன், பில்கிரிம் ஹோலினஸ், இன்னும் மற்றவைகள், ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசினால் அவன் ஒரு பிசாசு என்று அவர்கள் நினைக்கின்றனர். அது பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணமாகும், அதற்கு மன்னிப்பே கிடையாது. அதைத்தான் யூதர்களும் செய்தனர், பரிசுத்த ஆவியையுடைய மக்களை பரியாசம் செய்தனர், அதற்காக அவர்கள் ஆக்கினைக்குட் படுத்தப்பட்டு இழக்கப்பட்டுப் போயினர். சரியாக-! ''நீங்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை'' என்று இயேசு கூறவில்லையா. ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள்; உங்களுக்கு புரியவில்லையெனில், அப்படியே தரித்திருங்கள். 337. பொறுப்புகளுக்குள் அழைக்கப்பட்டிருப்பவர்கள், போதகர்கள் ... பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள மக்களாகிய நீங்கள், இப்பொழுது கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா ... இங்கே நான் நின்று கொண்டு போதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இங்கே என் பக்கத்தில் ஒரு மனிதன் குதிக்க ஆரம்பித்து சரியாக இதே நேரத்தில் போதிக்க ஆரம்பித்தால், மற்றொரு மனிதன் இங்கே வெளியே நின்று கொண்டு ஒரு யூபிலி பாடலை பாடத்துவங்கினால்-? எப்படிப்பட்ட ஒரு குழப்பமாக இருக்கும்-! 338. நல்லது, அந்த விதமாகத்தான் அந்நிய பாஷையில் பேசுதலும்கூட. அது ஆவியானவர் அளிக்கின்ற விதமாகவே, ஒழுங்கில் அது வரட்டும், நீங்கள் அந்நிய பாஷையில் பேசலாம். 339. இப்பொழுது நீங்கள், ''நல்லது சகோதரன் பிரன்ஹாம், என்னால் இயலாது,'' என்று கூறலாம். 340. ஓ, ஆமாம், உன்னால் முடியும். உன்னால் முடியும் என்று பவுல் கூறியுள்ளான். அவன், ''உங்களில் ஒருவன், உங்களில் அந்நியபாஷையில் பேசுகிறவன் இருந்து, அர்த்தஞ் சொல்லு கிறவனில்லாவிட்டால், அவன் அமைதியாக இருக்கக்கடவன்” என்று கூறினான். அது எவ்வளவாக பேச வேண்டுமென்று விரும் பினாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள். சகோதரனே, அது ஒரு வரம். அந்த காரியங்களுக்குள் நாம் செல்ல இந்த நாட்கள் சிலவற்றில் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த தேவன் அனுமதிக்க நான்- நான் ஜெபிக்கிறேன், நீங்கள் பாருங்கள். அது ஒரு வரம் என்றும் அந்த வரம் எல்லா நேரத்திலும் கிரியை செய்ய விரும்புகிறது என்றும் உங்களால் காணமுடியும். பாருங்கள்-? ஆனால் அந்த வரத்தை எங்கே, எப்படி உபயோகிக்க வேண்டு மென்று அறிந்து கொள்ள இங்கே பரிசுத்த ஆவியின் ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே அந்த... 341. நீங்கள், "நல்லது, தேவனுக்கு மகிமை, பரிசுத்த ஆவி வரும்போது உங்கள் போதகன் தேவையில்லை என்று வேதாகமம் கூறுகிறது. அவர் தாமே போதகர் ஆவார்'' என்று கூறலாம். சகோதரனே, நீங்கள் எப்படி சாதாரணமாக வேத.... அப்படி யானால் ஏன் பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை வைத்தார்-? 342. "எனக்கு போதிக்க யாரையும் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, பரிசுத்த ஆவியானவர் எனக்கு போதிக்கிறார்,'' எனலாம். அது ஒரு போதகனின் மூலமாக செய்கிறது. அவர் சபையில் போதகர்களை வைத்தார். 343. அவன், "எல்லாரும் போதகர்களா-? எல்லாரும் அப்போஸ்த வர்களா-? எல்லாரும் குணமாக்கும் வரங்களையுடையவர்களா-?'', என்றான். பரிசுத்த ஆவியானவர் இவை எல்லாவற்றையும் சபையில் வைத்துள்ளார், அவர் அவை எல்லாவற்றையும் நடப்பிக்கிறார், அவைகள் ஒவ்வொன்றும் ஒழுங்கின்படியே நடப்பிக்கப்படுகின்றது. 344. இப்பொழுது அது என்னுடைய பாதத்தை போன்று; அவைகளில் ஒன்று "நான் இந்த வழியாக போகிறேன்,'' என்று கூறுகிறது, மற்றொன்று, ''நான் இந்த வழியாக திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறுகிறது. இப்பொழுது, நீ என்ன செய்யப் போகின்றாய்-? கை கூறிற்று, ''நான் மேலே செல்லப் போகிறேன்,'' என்று. மற்றொன்று சுற்றி இந்த வழியாக செல்கிறது. இந்த சரீரம் எந்த விதமான உருவை அடையப் போகின்றது-? பாருங்கள்-? 345. ஆனால், இப்பொழுது, சிந்தையானது இங்கே "பாதமே, நீங்கள் இருவரும் முன்னே செல்லுங்கள். கையே, நீ அவர்களுடன் செல். தலையே, நீ நேராக நில். புயங்களே, நீங்கள் அதே விதமாகச் செய்யுங்கள்'' என்று கூறுகின்றது. ஒவ்வொன்றும் இசைவாக நடக்கின்றது. இப்பொழுது, நான் அங்கே சென்றடையும்போது, நான் என்னுடைய புயங்களை உபயோகப்படுத்திவில்லை. இப்பொழுது, பாதம் அதனுடைய கடமையைச் செய்தது, மேய்ப்பர் பிரசங்கத்தை செய்கின்றார்; இப்பொழுது, புயங்களே, நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். பாருங்கள்-? நான் என்ன கூற விழைகிறேன் என் ' பாருங்கள்-? 346. நல்லது, புயங்கள் இந்த விதமாக நீட்டிக்கொண்டிருந்தால், ''ஓ, அது எங்கே -? அது எங்கே-?' பாதம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறது-?செல்லவில்லை, நீ இன்னுமாக அங்கே இல்லை. பார், புயமே அமைதியாயிரு; சற்று நேரம் கழித்து நீ உபயோகப் படுத்தப்பட வேண்டிய வேளையானது இருக்கும்; நீ அங்கே செல்லும் வரை பொறுத்திரு. நான் என்ன கூற விழைகிறேன் என்று காணமுடிகின்றதா-? அது வரமாகும், அது செயலில் இருக்கின்ற ஆவியானவருடைய வரம் ஆகும். 347. நான் கர்த்தரை நேசிக்கிறேன். நீங்களும் தானே-? ஆமென். கவனியுங்கள், உங்களுக்கு என்னால் கூற முடிகின்ற ஒரு காரியத்தை நான் அறிவேன். பத்து மணிக்குப் பிறகு இருபது நிமிடங்கள் ஆகின்றன. நிச்சயமாக உங்களுக்கு பொறுமை இருக்கிறது. இப்பொழுது, நண்பர்களே, இப்பொழுது இந்த விதமாக இங்கே பாருங்கள். நான் ..... இது எனக்குத் தெரிந்தவரையில் இருக்கிறதானதாகும். அதைப் போன்ற ஒரு பெரிய குவியலான கேள்விகளை நான் முடிக்க வேண்டியதாக யிருக்கின்றது. என்னால் .... நீங்கள் அதனுடன் ஒத்துப்போகவில்லை யெனில், என்னுடன் சர்ச்சைக்கு வராதீர்கள். நீங்கள் என் சகோதரனாக இருங்கள், பாருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன், அது என்னுடைய இருதயத்தில் உள்ளதால் இந்த காரியங்களை மாத்திரமே நான் கூறுகிறேன். அதைத் தான் நான் விசுவாசிக் கிறேன், மேலும் அந்த விதமாகத்தான் நான் அதை விவரிக்கிறேன், வேதத்தில் உள்ளபடியே அந்த விதமாகத் தான் நான் அதைக் கொண்டு வருகிறேன். 348. இப்பொழுது, நீங்கள், ''சகோதரன் பிரன்ஹாம், நான் அந்த விதமாக விசுவாசிப்பது இல்லை'' என்று கூறுவீர்களானால், அது முற்றிலும் சரியானதாக இருக்கும், பாருங்கள். நாங்கள் எந்த வித வித்தியாசத்தையும் நினைக்கமாட்டோம், நாம் சரியாக சகோதர சகோதரிகளாக முன்னே செல்வோம். 349. ஆகவே - ஆகவே நீங்கள் ''நல்லது, நான் - நான் மெத்தோடிஸ்ட் சபை அல்லது பாப்டிஸ்ட் சபையை சேர்ந்திருந்தாலும், எப்படியாயினும் நான் இரட்சிக்கப் படுவேன்” என்று கூறுவீர்களானால், சரி, சகோதரனே, அது முற்றிலுமாக சரி. நான் இன்னுமாக உங்களை ''என் சகோதரனே'' என்கிறேன். ஏனன்ெறால் நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள். பாருங்கள்-? அது சரியே. ஆதலால் நாம் அதே விதமாக சகோதரராக நண்பர்களாக இருக்கப்போகிறோம். 350. ஆனால் இந்த சபை நிற்க வேண்டிய அந்த போதகத்திற்காக, நான் இங்கே சில நாட்களாக, அவைகளை இந்த சபை முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். பாருங்கள்-? அதற்குத்தான் சபை யானது நின்று கொண்டிருக்கிறது-! ஆகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத் தை அல்லது ஆவியின் வரங்கள் வெளிப்படுதலையும் விசுவாசிக் காத ஒரு மூப்பர் இங்கே இருப்பாரென்றால், அந்த மூப்பர், சரியாக நான் இங்கே நிற்கின்ற வேளையில், அவர் அதை சரிப்படுத் தாதிருக்கும் பட்சத்தில் சபையில் இருக்க அருகதையற்றவராக இருப்பார். அது முற்றிலும் சரியே. ஆகவே குழுவினர் அதை கவனித்துக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவுள்ளனர். சரியாக-! இந்த சபை மூப்பர்களால் கட்டுப்படுத்தப் படவில்லை; இந்த சபை வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், ஐயா. இப்பொழுது, அந்த காரியங்கள், அது தான் இந்த சபையின் போதகம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 351. எங்களிடம் எந்த ஒரு அங்கத்தினர் பாகம் என்பது கிடையவே கிடையாது. இங்கே அங்கத்தினர் என்று யாருமே கிடையாதே, ஆனால் வருகின்ற ஒவ்வொருவரும் ஒரு அங்கத்தினர் ஆவர், ஏனெனில் நாங்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் ஒரே சரீரத்தின் அங்கத்தினர்கள் என்று விசுவாசிக்கிறோம். 352. ஆகவே என் அருமை கிறிஸ்தவ சகோதரனே அல்லது சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துகிறோம். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஏற்கெனவே ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக-! நீங்கள், ''சகோதரன் பிரன்ஹாம், அதைக் குறித்து நான் என்ன செய்ய வேண்டும்-?' எனலாம். அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ் நானும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் கூறின விதமாகத்தான் நானும் கூற வேண்டியவனாகயிருக்கிறேன்-! 353. இப்பொழுது, இங்கே பாருங்கள், அப்போஸ்தலர். இதை நாம் வாசிப்போம், கலாத்தியர் 1:9. குறித்துக்கொள்பவர்களே, இதை குறித்துக்கொள்ளுங்கள். பவுல், இதைக் கூறின இந்த அதே மனிதன், இந்த காரியத்தை அவன் போதித்தான். இப்பொழுது அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்ளா-? அது சரியா-? அவர்கள் மறுபடியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினான். ஆகவே பவுல், ''வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது ...'' என்று கூறினான். கலாத்தியர் 1:8, "இதற்கு மேலும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் கூட பிரசங்கித்தால் அவன் சபிக்கப் பட்டவனாயிருகக்கடவன்.'' அவன் ஒரு ஆர்ச் பிஷப்பாயிருந் தாலும் சரி, அவன் ஒரு போப்பாகயிருந்தாலும் சரி, அவன் ஒரு ஊழியக்காரனாக இருந்தாலும் சரி, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும் சரி, அவன் ஒரு கிறிஸ்தவ குருவாக இருந்தாலும் சரி, அவன் வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும் சரி, அல்லது யாராயிருந்தாலும் சரி, அவன், ''இதற்கு மேலும் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் கூட பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்-!'' என்றான். அது சரியல்லவா-? ஆகவே அவன் மறுபடியுமாக அதை திரும்பவும் கூறினான். ''முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன், இதைக் காட்டிலும் வேறு எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்-!, ” அது சரியல்லவா-! 354. ஆகவே கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. அதை வார்த்தையிலிருந்து நான் வாசித்தேன், பிறகு உங்கள் தீர்மானத்தை நீங்கள் செய்யுங்கள். 355. இப்பொழுது எத்தனை பேர் அந்த அருமையான பழைய பாடலை நேசிக்கிறீர்கள்.என் விசுவாசம் மேல் நோக்கி உம்மை காண்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே, இப்பொழுது நான் ஜெபிக்கையில் கேட்டருளும், என் பாவங்கள் யாவும் அகற்றும், இந்நாளிலிருந்து நான் உமக்கே முழு சொந்தம்-! 356. இந்த சபையிலுள்ள உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். மரித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு பிரசங்கித்துக்கொண்டிருக்கும் மரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதனாக நான் பிரசங்கிக்கும் செய்திகளில் கடைசியானதாக இது ஒருக்கால் இருக்கலாம் என்று உணர்கின்றவனாக; மரித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு மரித்து கொண்டிருக்கிற ஒரு மனிதனாக, என்னுடைய கடைசியானதாக இருக்கும் விதத்தில் நான் செய்யும் ஒவ்வொரு பிரசங்கமும் இருக்க முயற்சிக்கிறேன். இந்த சமூகத்தின், தேசத்தின் என் சக குடிமக்களும், என் சகோதரருமாகிய உங்களை நான் இப்பொழுது கேட்கிறேன், இந்த ஆராதனைகளுக்குப் பிறகு தேவனுடன் ஒரு நெருங்கின நடை உங்களுக்கு தேவையாயிருக்கிறது என்று உண்மையாக நீங்கள் உணர்கிறீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக-! நான் ஒரு ... உங்களுடைய சகோதரனாக, உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னுடைய உத்தமமான ஜெபம் என்னவென்றால், நீங்கள், இந்த தேவனோடான நெருங்கின நடையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. 357. ஆகவே, நியாயத்தீர்ப்பின் நாளிலே, நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த இரவுகள் தாமே, அங்கே ஒரு மகத்தான பதிவான ஒலிநாடா அந்த நாளிலே போடப்படும், என்னுடைய சத்தம் வெளி வரும், நான் அங்கே நின்று கணக்கொப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறேன், ஏனெனில் அந்த நாளில் என் வார்த்தைகள் ஒன்று என்னை ஆசீர்வதிக்கும் அல்லது என்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கும். அது கடந்த 20 மற்றும் கூடுதல் வருடங்களாக என்னுடைய வார்த்தைகளாக அது இருந்து வருகிறது, சுமார் 20 வயது நிரம்பிய ஒரு சிறு பையனாக, சுவிசேஷத்தை பிரசங்கித்தேன், இப்பொழுது எனக்கு 45 வயதாகின்றது. அதை நான் சிறிது கூட மாறவில்லை, ஏனெனில் வேதாகமம் அவ்விதமாகவே இருக்கும் வரையில் அதை என்னால் மாற்றவும் முடியாது. 358. நான் அதை பிஷப்புகளுக்குள்ளும், மற்ற எல்லாவற்றுக்குள்ளும் வேர் பாய்ச்சியுள்ளேன், வார்த்தையின்படியே அதற்கு முரணாக பேசக் கூடிய யாரையும் இதுவரை நான் கண்டதில்லை. அவர்கள் கூறுவர். நல்லது, இப்பொழுது, நான் ... இந்த மதகுரு, இங்கே சில நாட்களுக்கு முன்னர், அவர், "சங்கை பிரன்ஹாம் நாங்கள் வேதாகமத்தை எடுப்பதில்லை; எங்களுக்கு சபை தான்” என்றார். அந்த மனிதனிடம் உங்களால் பேசமுடியாது. ஆனால் நீங்கள் அதை வேதாகமத்தின் மேல் அடித்தளமாக வைத்தால், அது வித்தியாசமாக இருக்கும். பாருங்கள்-? 359. நான் ஜெபிக்கிறேன் தேவன்... இங்கே இருக்கின்ற என்னுடைய ஒவ்வொரு கத்தோலிக்க நண்பர்களும், மற்றும் என்னுடைய ஒவ்வொரு பிராடெஸ்டென்ட் நண்பர்களும், மேலும்... அவர்கள் இன்னுமா... எந்த... உங்கள் ஒவ்வொரு வரையும் நான் - நான் நேசிக்கிறேன். அது உண்மையா அல்லது இல்லையா என்று தேவன் அறிவார். ஜெப வரிசையில் கவனியுங்கள் , குருடர்- குருடர் மற்றும் சப்பாணி, அது, "கத்தோலிக்கம்'' என்று கூறுவதில்லை . 360. இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மேடை... சரியாக இங்கே, ஒரு கத்தோலிக்கன், புற்றுநோயால் மரித்து கொண்டிருந்தார், அது அவரை தின்றுவிட்டிருந்தது; அவர் என்னுடைய வீட்டிற்கு வந்தார், பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார், புற்றுநோயிலிருந்து அவரை சுகப்படுத்தினார். அவர் ஒரு கத்தோலிக்கரா, இல்லையா என்று அவரிடம் அவர் கூறவில்லை; நான் அவரிடம் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர் வந்தார், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். சரியாக அங்கே அந்த மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர் லூயிவில்லில் ஒரு வர்த்தகர். ஆமாம். பாருங்கள்-? 361. நீ ஒரு கத்தோலிக்கனா அல்லது இல்லையா என்று அது கேட்கவில்லை. அது உங்கள் இருதயம் தேவன் பேரில் பசி கொண்டிருக்கின்றதா என்பதேயாகும். "நீதியின் மேல் பசிதாக முள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிரப்பப்படுவார்கள்.'' அது சரியா-? ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 362. ''நம்மை ஒன்றாகக் கட்டுகின்ற அந்த கட்டு ஸ்தோத்தரிக்கப்படுவதாக'' என்ற இந்த பழைமையான பாடலை எத்தனை பேர் அறிந்து உள்ளீர்கள். ''நம்மைக் கட்டுகின்ற அந்த கட்டு' என்ற பாடலை 40 வயதிற்கு மேலானவர்களில் எத்தனை பேர் அறிந்து இருக்கிறீர்கள் நம் இருதயங்களை கிறிஸ்துவ அன்பினால் கட்டுகின்ற அந்த கட்டு ஸ்தோத்தரிக்கப்படுவதாக. ஒன்றான சிந்தைகளின் ஐக்கியம் மேலுள்ளதைப் போன்றே உள்ளது. 363. உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமா-? கவனியுங்கள், நான் இதைக் கூற விரும்புகிறேன், நாம் கொண்டிருக்கின்ற இந்த அதிகமான கூச்சல்களைக் காட்டிலும், இந்த பழைய பாடல்களை அதிகமாக நாம் கொண்டிருப்போமானால், சபை -!மிக சரியாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பழைய காலத்தவரால், பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட அந்த பழைய பாடல்களை நான் விரும்புகிறேன். 364. அங்கே கெண்டக்கி மலைகளில், வீட்டிற்கு பின்பாக உட்காரும் வழக்கத்தை கொண்டு இருந்த ஒரு கறுப்பர் இன மனிதனை நான் நினைப்பதுண்டு. அவர் களைப்பு அடையும்போது, அவர் அந்த பழைய- பழைய மரத்துண்டின் மீது உட்கார்ந்து கொண்டு, கட்டையின் மீது தன் கைகளால் தட்டுவார். அவரை சரியாக நான் நினைவில் கொண்டுள்ளேன், அவர் தலையைச் சுற்றிலும் ஒரு சிறிய வட்டமான வெள்ளை மயிர் இருந்தது. அவர் அந்த பழைய பாடலைப் பாடுவார், ஒரு பழைய பாடல்: நான் எழுந்து இயேசுவிடம் செல்லுவேன், அவர் தம்முடைய கரங்களில் என்னை அணைத்துக் கொள்வார்; என் அருமை இரட்சகரின் கரங்களில், ஓ, பத்தாயிரம் அழகுகள் அங்கே இருக்கின்றன. 365. அவ்வளவாக மெட்டு அதற்கு இல்லை. அந்த பழைய பாடலை எத்தனைப் பேர் கேட்டிருக்கிறீர்கள்-? என்னே, அது அருமையானது. கவனியுங்கள் ஒலிப்பதிவின் முடிவு - ஆசி எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- I (COD-5) 57-0925 1. தேவனில்லாமல் எப்படி அவளால் அதைச் செய்ய முடியும்-? அது உண்மையான ஒன்றாயிருக்கும், அவ்வாறிருக்காதா-? அது கர்த்தர் இல்லாமல் செய்யப்பட முடியாது. அவைகள் எல்லாவற்றிலிருந்தும் நான் பிரசங்கிக்கப் போவதில்லை. ஆனால் ஒருவிதமான கடினமான ஒரு காரியத்தை ஒருகால் நான் பெற்றுக் கொள்ளலாம் என்றும், உங்களுக்குத் தெரியும், எனவே நான் ஆயத்தப்படுவது மேலானதாகும் என்றும் நான் எண்ணியிருந்தேன். ஆனால், ஓ, அதுவோ மிக, மிக இலகுவானதாயிருந்தது. ஆகையால் ஜனங்கள் மத்தியில் மிக அதிகமான கேள்விகள் இல்லாமலிருக்கலாம், அவை மிக எளிமையான, இலகுவான கேள்விகளாகவே உள்ளன. நல்லது, கர்த்தருடைய ஒத்தாசையினால் என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2 சகோதரி ஆர்கன்பிரைட் இன்றிரவு உள்ளே இருக்கிறார்களா-?… சகோதரி ரூத். சகோதரி ரூத், நீங்கள் இங்கே இருக்கிறீர்களா-? இங்கே உள்ளீர்கள். நான்…ஓ, ஆம், நான் இங்கே அந்த முகவரியை வைத்துள்ளேன்,…இல்லை, நான் வைத்திருக்கவில்லை. நான் எதை இங்கிருந்து எடுக்க முடியும். நான் அதை என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் வைத்திருந்தேன், நான் என்னுடைய குறிப்புப் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டேன். இப்பொழுது, நான் வீட்டிற்கு செல்லும்போது, காவல்துறையினர் என்னை பிடித்தால், சகோதரன் பிளீமேன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வரவேண்டும். நான்… என்னுடைய குறிப்புப் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டேன் என்றும், நான் இன்றிரவு ஒரு ஓட்டுனர் உரிமமில்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்லப் போகிறேன் என்றும் பில்லியிடம் சொல்லுங்கள். நான் அதை என்னுடைய சட்டைப் பையில் வைத்து விட்டேன் என்று எண்ணி, நான் என்னுடைய உடைகளை மாற்றிக் கொண்டேன். பின்னர் இந்தப் பிற்பகல் நான் துரிதமாக புற்களை வெட்டிக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் அதை விட்டு விட்டு அவசரமாக வீட்டிற்குள் சென்று என்னுடைய உடைகளை துரிதமாக மாற்றிக் கொண்டு இங்கு விரைந்து ஓடி வரவேண்டியதாயிருந்தது. நான்—நான் கிரேக்க வேதாகம அகராதியைக் கொண்டு வந்துள்ளேன், ஆனால் நீங்கள் அதிலிருந்து எடுத்துப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். 3 அந்த கடிதத்தைக் குற்த்து மோசமாக எண்ணாதீர்கள். நான் அதைப் பார்க்கிலும் மோசமான ஒன்றை ஒருபோதும் பெறாமலிருந்தால், அது ஒரு அருமையான கடிதமாயிருக்கும். அது நன்றாயிருந்தது. அது மிக, மிக அருமையானதாயிருந்தது. நான் அதைப் படிக்கமாட்டேன் என்று உங்களிடம் கூறினேன், ஆனாலும் நான் அதை உங்களுக்கு படித்துக்காட்டிவிட்டேன், ஏனென்றால் உங்களுக்குத் தெரியும், அதை இனிமேலும் என்னால் படிக்காமல் வைத்திருக்க முடியவில்லை. அவள் என்னக் கூறினாள் என்பதைக் குறித்து நான் வியப்புற்றேன். அது மிக, மிக அருமையானதாய், ஒரு உண்மையான பள்ளி ஆசிரியர் எழுதுவதுபோல எழுதப்பட்டிருந்தது. அது நன்றாயிருந்தது, நான் அதைப் பாராட்டுகிறேன். அது—அது உங்களுக்கு…அளிக்கிறது… 4 நீங்கள் பாருங்கள், உங்களோடு சற்று வேறுபட்டுள்ள யாரோ ஒருவருடைய கடிதங்களை நான் விரும்புகிறேன். பாருங்கள், எல்லா நேரத்திலும் உங்களோடு யாருமே வேறுபாடு கொள்ளாமலிருந்தால், அப்பொழுது நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள். நீங்கள் ஆழமாய் ஆராய்ந்து புரிந்து கொள்ளும்படி நீங்கள் சற்று வேற்றுமையானவற்றையும் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் எதையுமே கவனிக்காமலிருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு தேய்ந்த பாதையில் செல்லுவீர்கள், நீங்கள் அவ்வாறு செல்லும்போது, அப்பொழுது நீங்கள்—நீங்கள் தொல்லைக்குள்ளாவீர்கள். நீங்கள் அந்தவிதமாக தொடர்ந்து செல்லும்போது, நீங்கள் யாருடனாவது வித்தியாசப்பட்டால் தான் ஒரு முறையாவது உங்களுடைய சிறகுகளில் உள்ள புழுதியைத் தட்ட முடியும். 5 நான் ஆப்பிரிக்காவில் இரண்டு சிங்கக் குட்டிகளைக் கண்டேன். அவைகள் ஏறக்குறைய அந்தவிதமான சிறு குட்டிகளாயிருந்தன. புள்ளிகளைக் கொண்ட மிகச் சிறிய சிங்கக்குட்டி; ஒரு ஆண் குட்டி சிங்கம், ஒரு குட்டி பெண் சிங்கம். இப்பொழுது, அவைகளோ பூனைக்குட்டிகளைப் போலக் காணப்பட்டன, அவைகள் அந்தவிதமாக மிகச் சிறியவனவாயும், சிறு… அழகான குட்டிகளாயும் இருந்தன, அவைகள் விளையாடிக்கொண்டிருந்தன. நான் அவைகளை அமெரிக்காவிற்கு கொண்டுவரப் போவதாயிருந்தேன். எனவே நான் அவைகளை ஒரு பறவைக் கூண்டில் வைத்திருந்தேன். நான் அவைகளை இங்கே கொண்டுவரப் போவதாய் இருந்தேன். ஆனால் என்னால் அவைகளுக்கு கொடிய விஷ நோயினின்று பாதுகாக்கும்படிக்கு எந்த தடுப்பூசியையும் போட முடியவில்லை. அவைகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்படாமல் அவைகளை அமெரிக்காவிற்கு நான் கொண்டுவர அனுமதிக்கமாட்டார்கள். எனவே நான் அதற்கு தடுப்பூசி போட ஆப்பிரிக்கா முழுவதிலுமே தேடியும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அது ஒரு சிங்கமா அல்லது இல்லையா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டுமென்று விரும்பினால், அதன் பின்புறத்தில் ஒரு குத்துவிட்டிப் பாருங்கள். அப்பொழுது அது சண்டையிட ஆயத்தமாகி, அது ஒரு சிங்கம் என்று உங்களை அறிந்து கொள்ளச் செய்யும். எனவே—எனவே அந்தவிதமான முடிவுகள் அது எந்நிலையில் நின்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளச் செய்யும். 6 அந்த விதமாக நீங்கள் ஒருமுறையாவது செய்ய வேண்டும், அப்பொழுது ஒரு விதமான புழுதியை உங்களுடைய சிறகுகளிலிருந்து பின்னோக்கி உதறித் தள்ளிவிட அறிந்து கொள்ள நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது நாம் சிங்கத்தைப் போல கோபப்படுகிறதில்லை. நாம் அதை…ஜனங்கள் கேள்விகளைக் கேட்பதை விரும்புகிறோம். சகோதரி ரூத், அந்த விதமான கேள்விகள் எனக்கோ மிக மிக நன்மையானதாகவே உள்ளன. அது ஒரு… நான்—நான் அதை விரும்புகிறேன், பாருங்கள். அவைகளில் உண்மையாக நான் பெற்றுக் கொள்ள வெறுக்கிற ஒரு விதமான மோசமானவை உண்டு. ஆனாலும் இவைகள் ஒரு…அது அருமை ஆனதாயிருந்தது. 7 இப்பொழுது நாம் சில நல்லதும், குழப்பமானதும் மற்றும் சபை சம்மந்தமான கேள்விகளையும் பெற்றுள்ளோம். அங்கே பின்னால் உள்ள ஒரு அறையிலிருந்த ஒரு பிரசங்கியார் இப்பொழுது என்னிடத்தில், “எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்னர் வெளிப்படுத்தின விசேஷம் 11-, அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்க்கதரிசிகள் வருவார்களா அல்லது யூதர்கள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரா-? என்ன…” என்று கேட்டார். இப்பொழுது, அந்தவிதமாக கேள்விகள் உங்களை சுற்றி வளைக்கிறது. ஆனால் இந்தவிதமான—இந்தவிதமான இந்த எளிமையான் கேள்விகளோ பரவாயில்லை. ஆனால் இப்பொழுது நாம் துவங்குவதற்கு முன்பு, ஜெபத்திற்காக நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 8 பிதாவே, நீர் 12 வயதாயிருந்த போது, நீர் தேவாலயத்தில் வேதபாரகரோடும், கல்விமான்களோடும் வேத வாக்கியங்களைக் கொண்டு விவாதித்துக் கொண்டு இருக்கிறவராகக் காணப்பட்டீர். அவர்களோ ஆச்சரியப்பட்டனர். அவர்கள் வயோதிகர்களாயும், வேத வாக்கியங்களை நன்கு கற்று பயிற்றுவிக்கப்பட்டவர்களாயிருந்தபோதிலும் கிட்டத்தட்ட 12 வயதுடைய ஒரு சிறு பையன் வேத வாக்கியங்களை விளக்கிக் கூறுவதில் அப்படியே திகைப்படையச் செய்வதைக் கண்டனர். நீர் உம்முடைய பிதாவுக்கு அடுத்தவைகளில் இருந்தாதீர். நீர் உம்முடைய தாயினிடத்தில், “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா-?” என்று கூறி, வேதவாக்கியங்களை அவைகளினுடைய ஆவிக்குரிய பொருள்களின் மூலம் விளக்கினீர். 9 கர்த்தாவே, நாங்கள் எவ்வளவு பலவீனரும், நாங்கள் எவ்வளவு நலிவு உற்றோருமாய் இருக்கிறோமென்றும், நாங்கள் எப்படியாய் தவறு செய்யக் கூடியவர்களாய் இருக்கிறோம் என்பதையும் நீர் அறிந்து இருக்கிறபடியால், நீர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இன்றிரவு எங்களோடு வந்து, வேத வாக்கியங்களை எங்களுக்கு விளக்கித்தருமாறு நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். நான் உம்பேரில் சார்ந்திருந்து காத்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதாவது, எந்த நேரத்திலாவது என் சொந்த சிந்தனைகளை அல்லது சொந்த வியாக்கியானத்தை அல்லது சில சுயநல காரியங்களை கூறமுயன்றால், நான் அதை விளக்கிக் கூறிக்கொண்டிருக்கிற விதமே சரியானதாயிருக்கும் என்பது போன்று கூற தென்பட்டால், கர்த்தாவே, சிங்கங்கள் தானியேலைப் பின்தொடர்ந்து வந்தபோது, அவைகளின் வாயைக் கட்டினது போல…என்னுடைய வாயை அடைத்துப்போடும். நீர் இன்னமும் மாறாத தேவனாயிருக்கிறீர். 10 அது முழுமையாகவே…இருப்பதாக. நாங்கள் பரிசுத்தாவியின் பேரில் சார்ந்து இருக்கையில், அவரே இந்தக் காரியங்களை எங்களுக்கு வெளிப்படுத்துவாராக. அவர் அவைகளை அப்பொழுது பேசும் போது, அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பவர் அதை ஏற்றுக் கொள்ளும்படி அவைகள் மிகவும் தெளிவானதாயிருக்கும். நான் எப்பொழுதும் விசுவாசித்து வந்ததற்கு அது மாறான பதிலாயிருக்குமானால், அப்பொழுது கர்த்தாவே, நான் புதியதான ஒன்றை, கர்த்தருடைய நல்ல ஒரு வழியை கண்டு அறிந்தது உள்ளதற்கு என்னுடைய இருதயமும் கூட மகிழ்வதாக. நீர், “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்றீர். 11 இப்பொழுது இந்த வேத போதனைக்குப் பின், நிச்சயமாகவே அநேக சிந்தனைகள் முதலியன எழும்பும். இப்பொழுது தேவனே இந்த எல்லா கேள்விகளுக்கும் மிகவும் இனிமையாய் தென்படும்படியாகவும், கனிவாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவர்தாமே கனிவாய், இனிமையாய் அவைகளுக்கு பதிலளிப்பாராக. நாங்கள் இதை தேவனுடைய மகிமைக்காக, தம்முடைய சபையை நிலைநிறுத்துவதற்காக இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 12 அநேக சமயங்களில் ஒரு சுய நல நோக்கங்களைக் கொண்ட எந்த காரியமும் அதனுடைய முழு சுவையையுமே பாழாக்கிவிடுகிறது. இப்பொழுது, இந்த வேத வாக்கியத்தின்படி கேட்கப்பட்டுள்ள கேள்விகள். 13 இப்பொழுது, நான் இன்றிரவு பேசும் போது சற்று ஊதல் சத்தமானது என் வாயிலிருந்து எழுப்பினால், அதற்குக் காரணம் எனக்கு ஒரு பல் இல்லை. நான் அதை உள்ளே சரியாக பொருத்தா விட்டால், என்னால் பிரசங்கிக்க முடியாது. நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது நான் மெதுவாக பேசுகிறேன்; நான் அதை வெளியே எடுத்துவிட்டபடியால், நான் பேசும் போது கிட்டத்தட்ட ஊதல் சத்தமே எழும்புகிறது. 14 திருமதி பில்லிகிரஹாம் அவர்கள் அவர் பேரிலான ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். அவர்கள் அவரை எப்போதும் கண்டதிலேயே மிகமோசமான கொந்தளித்துப் போடிருப்பதைக் கண்டது, அவர் முன்னால் பொருத்தி வைத்திருந்த ஒரு போலி பல்லை தொலைத்து விட்டபோதேயாம். அவர் அதைத் தொலைத்து விட்டாராம், சரியாக அந்த நேரத்திலோ அவருக்கு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தபடியால், அவரால் பேச முடியவில்லையாம்… அந்தப் பல்லின் பின்னே ஒரு உறைப் போன்ற மூடி பொருத்தப்பட்டிருந்ததாம். ஆனால் அது இல்லாதபடியால் அவர் பேசும்போது, தன்னுடைய பல்லினூடாக “வ்வூயு, வ்வூயூ” என்ற ஊதல் சத்தத்தை எழும்பினாராம். அதன் பின்னர் அவர் முழங்காற்படியிட்டு, ஜெபித்து வியர்த்துப் போய், முடிவிலே தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் அவருடைய பாதவிரல்களின் மேல் உள்ள கால்சட்டை மடிப்பில் விழுந்திருந்ததை அவர்கள் கண்டு பிடித்துக் கொடுத்தார்கள் என்று திருமதி பில்லிகிரஹாம் கூறினார். அவர் தங்கியிருந்த உணவக விடுதியில் பணிபுரியும் பையன்களில் ஒருவன் அந்த போலிப் பல்லை கண்டு பிடித்துக் கொடுத்தானாம். திருமதி கிரஹாம் அவரைக் குறித்து இதைக் கூறின போது, நான் அதை ஒரு சிறு காகிதத் துண்டில் எழுதி வைத்துக் கொண்டேன். நான் அதை இங்கு என்னுடைய வேதாகமத்தில் வைத்துள்ளேன் என்று நான் நினைக்கிறேன். 15 எனவே அது ஒருவிதமான…நாம் சற்று வயோதிகமடைந்து, முதுமையினால் தளர்வுறும்போது, உங்களுக்குத் தெரியும், இதை இழந்து விட வேண்டியதாயுள்ளது, அது மோசமாகிவிடுகிறது. எனவே நான்…நான் அங்கே பின்னால் சகோதரன் ராபர்ஸன் அவர்களோடிருந்தபோது, நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் காலை இந்த பல்லின் ஒரு பாகம் உடைந்து போய்விட, நான் அதை பொருத்தும்படிக்கு மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆகையால் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 16 இப்பொழுது நாம் இந்தக் கேள்விகளைப் பார்க்கப் போகிறோம், என்னால் கூடுமானால் அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றினூடாகவும் நான் பார்க்க முயற்சிக்கப் போகிறேன். சகோதரன் டோனி அவர்களே, தேவனுடைய கிருபையினால் நான் உங்களுடைய சொப்பனத்திற்கு வியாக்கியானத்தைப் பெற்றுள்ளேன், அது அற்புதமானதாயிருந்தது. நான் அதைக் காண மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அது ஒரு நல்ல வியாக்கியானமாயுள்ளது. அதாவது நான் அதை இங்கே வெளிப்படையாக கூறக் கூடாது என்று நான் நினைக்கிறேன், எனவே நீங்கள் அதை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள்—நீங்கள்…நான் அதை அந்தவிதமாக கூற உள்ளேன். அவர் அன்றொரு இரவு என்னிடத்தில் கேட்டார், அதாவது அவர் ஒரு சொப்பனம் கண்டிருந்தார், எனவே நான் கர்த்தரிடத்திற்கு சென்று, அதன் பேரில் ஜெபிக்கும் வரையில், அது என்னவாயிருந்தது என்று என்னால் அவரிடத்தில் கூற முடியவில்லை. அதன்பின்னரே கர்த்தர் அதை எனக்கு வெளிப்படுத்தி, அதன் வியாக்கியானம் என்னவாயிருந்தது என்பதை என்னிடம் கூறினார். சகோதரன் டோனி, அது அற்புதமானதாயும், உங்களுக்கான நற்செய்தியாயுமுள்ளது. 17 இப்பொழுது, முதல் கேள்வியில், இப்பொழுது, எங்கிருந்து முதலில் துவங்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அவை அனைத்துமே நல்ல கேள்விகளாகவே உள்ளன. ஆனால், இப்பொழுது, நாம் இதனை நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதில்லை, நாம் அவைகளினூடாக பார்த்து பதில் கூற முடியவில்லையென்றாலும் சரி, நாம் அவைகளை ஞாயிற்றுக் கிழமை பார்த்து முடித்துவிடலாம். கேள்வி:51. மத்தேயு 25:46-ல் கூறப்பட்டுள்ள, “நித்திய ஆக்கினை” என்பதன் பொருள் என்ன என்பதை விளக்கிக் கூறவும். “ஆனால்…” அதுவே கேள்வியாயுள்ளது. கேள்வி:52. அதன் பின்னர், இரண்டாம் கேள்வி: “ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்” என்பது கிட்டத்தட்ட அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்பதைப் போன்றதாயுள்ளதா-? 18 பரவாயில்லை, இப்பொழுது பரிசுத்த மத்தேயு 25-வது அதிகாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உங்களுடைய முதல் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது நாம்…இப்பொழுது, நான் இவைகளை ஒருபோதும் ஆய்ந்து படித்திருக்கவில்லை, அங்கே பின்னால் இருந்தபோது அவைகளை சற்று கவனித்துப் பார்த்தேன், நான்—நான் அவைகளை எப்படி அறிந்துள்ளேனோ அதன்படி என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலுரைக்க முயன்றுள்ளேன். என்னுடைய… நாம் ஆய்ந்து படிக்கையில், நீங்கள் என்னோடு சேர்ந்து உங்களுடைய வேதாகமங்களை திருப்புங்கள். இப்பொழுது, நான் இதை மூல கிரேக்க வேத அகாரதியிலிருந்து எடுத்துப் படித்துக் காண்பிக்க விரும்பினேன், எனவே நீங்கள் அதனுடைய மூல மொழியில் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள். நான்—நான் அதை விரும்புகிறேன். எனவே நாம் அதை மூல பாஷையான கிரேக்க மொழியிலும் மற்றதிலும் பார்ப்போம். இப்பொழுது இது ஒருவிதமாக மெதுவாக ஆய்ந்து பார்ப்பதுபோன்று இருக்கும், ஏனென்றால் நான் அதற்கான வேதவாக்கியங்களை எங்கெல்லாம் என்னால் கண்டறிய முடியுமோ அங்கு எல்லாம் அவைகளை கண்டறிந்து அவைகளினுடைய இடத்தில் அவைகளைப் பொருத்த வேண்டும். சரி. 19 இப்பொழுது, எவரேனும் ஒரு வேதாகம ஆய்வினைக் கொண்டு கண்டறிய விரும்புகிறீர்களா-? நீங்கள் விரும்பினால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நாம்…நாம் மூன்று அல்லது நான்கு பேரை இங்கே பின்னால் உடையவர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் வேதத்தின் மூலம் ஆராய்ந்துப் பார்க்க விரும்பினால், சரி. சகோதரன் காக்ஸ் அவர்களே, நீங்கள் இங்கு வந்து, இந்த வேதாகமங்களை என்னிடத்திலிருந்து கொண்டு செல்வீர்களா-? அது—அது உங்களுக்கு நன்மையானதாயிருக்கும், உங்களால் முடிந்தால்,…(அங்கு ஒன்று உள்ளது, நீங்கள் அப்படியே—உங்களுக்கு வேண்டுமானால், அங்குள்ள அநேக வேதாகமங்களையும் நீங்கள் கொண்டு செல்லுங்கள்.) எவருக்கேனும் ஒரு வேதாகமம் வேண்டுமானால், உங்களுடைய கரத்தை அப்படியே உயர்த்துங்கள், அந்தப் பையன் அவைகளை உங்களண்டைக்குச் சரியாக கொண்டு வருவான், பாருங்கள். நாம் இவைகளை ஒருமித்து ஆய்ந்துப் பார்க்க வேண்டும். அப்படியே… 20 இப்பொழுது, இந்த வாசிப்பின் பேரில், முந்தின அதிகாரங்களில்…எபிரெயப் புத்தகத்தின் முதல் ஏழு அதிகாரங்கள். இதைப் போதித்தப் பிறகு, உண்மையாகவே, இந்த பாடங்களை பதிவுசெய்கிற இந்தப் பையன் எடுத்துக் கொண்டு, அதாவது சகோதரன் மெர்சியர் மற்றும் சகோதரன் கோட் அவைகளை வைத்திருக்கிறார்கள், இப்பொழுது அவைகளை புத்தக வடிவில் வெளியிட ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை வைத்துள்ளனர். இப்பொழுது…நாம் பாதியளவு கூட அலசி ஆராய்ந்துப் பார்த்திருக்கவில்லை, நாம் வெறுமென மேலோட்டமாகவே அலசிப் பார்த்துள்ளோம். அவர்களோ அவைகளை எழுத்துவடிவில் அமைத்து…அவைகளிலிருந்து தங்கக் கட்டிகளை எடுத்து…அந்தத் தங்கக் கட்டிகளை, அப்படியே அதாவது எபிரெய போதனையின் தங்கங்கட்டிகள் சிலவற்றை மெருகேற்றியிருக்கிறார்கள். சகோதரன் மெர்சியர் அவர்கள் சீக்கிரத்தில் அவைகளை எழுத்து வடிவில் அச்சிட்டு, எவர்களுக்கு அவைகளை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அவைகளைத் தருவார். 21 இப்பொழுது இங்குள்ள இதில், அது உள்ளே கொண்டு வருகிற…உங்களால்…சுவிசேஷ சபைக்குள்…அதினூடாக செல்ல முடியாது, இது ஒரு சுவிசேஷ சபையாயுள்ளது. அநேக ஜனங்களில் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் எழும்பாமல் நீங்கள் ஒரு—ஒரு உபதேசத்தினூடாகச் செல்ல முடியாது. நீங்கள் அவ்வாறுதான் செல்ல வேண்டும். இப்பொழுது நான் ஒரு போதகர் என்ற ஸ்தானத்திற்கு தூரமானவாய் உள்ளேன், மேலும் வேதாகமத்தை தெளிவாக பொருள் கொண்டு விளக்கும் ஒருவனே அல்ல. ஆனால் நான் எந்தக் காரியத்தையும் கூறுவதற்கோ அல்லது எந்தக் காரியத்தையும் செய்வதற்கோ கூட நான் முதலில்—முதலில் கேட்டறிந்து அல்லது அதற்கான என்னுடைய மிகச் சிறந்த காரியத்தை கண்டறிய முயற்சிக்காமலோ செய்ய ஒருபோதும் முயற்சித்ததேயில்லை. 22 கடந்த இரவு ஒரு அருமையான சகோதரனால் இது என்னிடத்தில் கேட்கப்பட்டது. அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர்—நீர் உம்மை எங்குமே சிக்க வைத்துக்கொள்ளமாட்டீர் என்று சகோதரன் ஸ்டூவர்ட் ஒரு முறைக் கூறினார். பாருங்கள், அதாவது அதிலிருந்து வெளியேற அல்லது அதிலிருந்து விலகிச் செல்ல நீர் எப்பொழுதுமே ஏதோ ஒரு வழியை உடையவராயிருப்பீராமே” என்றார். 23 அப்பொழுது நான், “நல்லது, அதற்குக் காரணம், நான் எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நான் எப்பொழுதுமே சிந்திக்க முற்படுகிறேன். புரிகிறதா-? ஆகையால் ஜனங்கள் என்னிடத்தில் கேட்டால், அப்பொழுது என்னுடைய சிந்தனைகள் என்னவாயிருந்தன என்பதை என்னால் அவர்களுக்குக் கூற முடியும். புரிகிறதா-?” என்றேன். ஆனால் அது நீங்கள் சரியாக சிந்தித்தால் அவ்வாறு இருக்கும். நீங்கள் எந்தக் காரியத்தையாவது செய்வதற்கு முன்பு, தேவன் உங்களை எடுத்துக் கொள்ள வேண்டிய பக்கமாக செல்ல முயற்சிக்க வேண்டும், அப்பொழுது அது உண்மையாகவே சிக்கப்படமாட்டாது. 24 ஆகாப் எலியாவை சிக்க வைக்க முயன்ற அந்த நேரத்தை உங்களால் யூகித்துப் பார்க்க முடியவில்லையா-? பரிசேயர்கள் இயேசுவை சிக்க வைக்க முயன்ற அந்த நேரத்தை உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா-? பாருங்கள், அவர்—அவர் உடனே பதிலை உடையவராயிருந்தார், ஏனென்றால் அவர் செய்த ஒவ்வொரு காரியமும், அதாவது அவர் அதை தேவ சித்தத்தின் மூலமே செய்தார், அவர்…அந்தவிதமாகவே அவரால்—அவரால் அதைச் செய்ய முடிந்தது. இப்பொழுது, அந்தவிதமாகவே நாம் இதனையும் தேவ சித்தத்தையும் கொண்டே செய்ய விரும்புகிறோம். இப்பொழுது கேட்கப்பட்டுள்ள கேள்வியோ, நாம் இந்தக் கேள்வியை எடுத்து வைத்துக் கொள்வோம்: மத்தேயு 25:46-ல் உள்ள “நித்திய ஆக்கினை,” என்பது என்ன பொருள்படுகிறது என்று விளக்கவும். 25 இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது எல்லோரும் மத்தேயு 25:46—ஐப் பாருங்கள் அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினியயை அடையவும்… 26 இப்பொழுது, “என்ன… என்று விளக்கிக் கூறவும்” என்பதே கேள்வியாய் உள்ளது. இப்பொழுது சதாக்காலம் என்ற வார்த்தை “என்றென்றும்” மற்றும் என்றென்றும், “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதிலிருந்து வருகிற வார்த்தையாயுள்ளது. என்றென்றும் என்பதோ, “அதிகப்படியான காலம்” என்று மட்டுமே பொருள்படுகிறது. இப்பொழுது நீங்கள் வாசிப்பீர்களே ஆனால்… இந்தக் கேள்விகளை யார் எழுதினது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்தக் கேள்விகளின் மேல் யார் என்று அவர்களுக்குடைய பெயரை எழுதவில்லை; அது இருக்க வேண்டியதில்லை, எனக்கு அவைகள் வேண்டியதில்லை, பாருங்கள். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும்… (இப்பொழுது கவனியுங்கள், அது தான் துன்மார்க்கர்) 27 இப்பொழுது, அருமையான-அருமையான நபர் இந்த கேள்வியைக் கேட்டு உள்ளார், அப்படியே அதனுடைய மீதி பாகத்தைப் படியுங்கள்: …நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள். 28 துன்மார்க்கரோ நித்திய ஆக்கினையை அடைவார்கள் (ஒரு குறிப்பிட்ட காலநேரம்), ஆனால் நீதிமானோ நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். நீங்கள் நித்திய ஆக்கினையை ஒரு போதும் கண்டறியமாட்டீர்கள், அவ்வாறு இருக்கவும் முடியாது. பாருங்கள், அவர்கள் நித்திய ஆக்கினையைப் பெற்றுக் கொள்வார்களானால், அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டால், அவர்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாருங்கள், அது அவ்வாறிருக்க முடியாது. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், கேட்கப்பட்டுள்ள கேள்வியிலேயே… பதில்களும் தானே உள்ளன. புரிகிறதா-? அந்தப்படி,… இப்பொழுது கவனியுங்கள், நான் இங்கே இதற்கு முன்பு உள்ள வசனத்தை படிக்கவுள்ளேன். அப்பொழுது அவர்களும்… 29 20-ல்…44-வது வசனம்: அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும்… காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய (என்றென்றுமான) ஆக்கினையை அடையவும், (அது துன்மார்க்கர்)…நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். 30 வித்தியாசம் புரிகிறதா-? துன்மார்கர் என்றென்றுமான ஆக்கினையை அடைவார்கள், ஆனால் என்றென்றும் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு.” இப்பொழுது இதுவும் அதே மாதிரியான கால அளவைப் பொறுத்ததாயிருந்தால், இது இவ்வாறு எழுதப்பட்டிருந்திருக்கும். “இவர்கள் குறிப்பிட்ட கால அளவு ஆக்கினையை அடைவார்கள் என்றும், மற்றவர் குறிப்பிட்ட கால அளவு நித்திய ஜீவனை உடடையவர்களாயிருப்பார்கள் என்றிருக்கும்.” புரிகிறதா-? இல்லையென்றால் “இவர்கள் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்றும், மற்றவர்கள் நித்திய ஜீவனை அடைவார்கள் என்றும் இருக்கும்.” பாருங்கள், நித்திய ஆக்கினை உண்டு என்றால், என்றென்றும், தண்டிக்கப்படுவதென்பது, நித்தியமான…அப்பொழுது அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும், ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தேவனிடத்திலிருந்து வருகிறது. துவக்கம் என்ற ஒன்று இல்லாததற்கு முடிவேக் கிடையாது. துவக்கம் என்ற ஒன்று உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உண்டு. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா-? 31 இப்பொழுது, வேதவாக்கியம் தானே அந்த அருமையான நபருக்கு… பதிலளித்து விட்டது…இப்பொழுது நீங்கள் அதை மூல வேதாகம கிரேக்க அகராதியில் எடுத்துப் பார்த்தால், “இவர்கள் குறிப்பிட்டக் கால ஆக்கினையை அடைவார்கள், அதாவது பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட காலம் அக்கினிக் கடலில் ஆக்கினை அடைவார்கள்” என்றே உள்ளது. இப்பொழுது a-i-n-i-o-n என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், “ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை” என்பதாகும். கிரேக்க வேத அகராதியில் இங்கே, “குறிப்பிட்ட கால ஆக்கினை” அல்லது “ஆக்கினைக் காலம்” என்றே உள்ளது. பாருங்கள், “அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினியயை அடைவார்கள்.” அந்த வார்த்தை a-i-n-i-o-n எயர்ன் என்று உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எயர்ன் என்ற வார்த்தையின் பொருள் “காலங்கள், ஒரு காலம், ஒரு குறிப்பிடப்பட்டக் காலம்” என்பதாகும். அதன் பின்னர் இங்கே அதை ஆங்கில மொழிபெயர்ப்பில் மீண்டும் எடுத்துப் பார்த்தால், என்றென்றும் என்று உள்ளதோ “ஒரு குறிப்பிட்ட காலம்” என்பதாகும். பாருங்கள், அது கிரேக்க மொழியிலிருந்து, “ஒரு குறிப்பிட்ட காலம்” என்ற பொருள்கொண்ட வார்த்தையிலிருந்து வருகிறது. அந்த வார்த்தை எயர்ன், இல்லை எ-ய-ர்-ன், எயர்ன் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், “ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை” என்பதாயுள்ளது. 32 ஆனால் அதன்பின்னர் மற்றவர்களைப் பற்றி வாசிக்கும் போது, “ஆனால் இவர்கள் நித்தியத்தை அடைவார்கள்” என்று உள்ளது. அந்த ஒரு வித்தியாசம் தான் உள்ளது. பாருங்கள், நித்திய ஜீவன். “நித்தியம்” என்ற வார்த்தையிலிருந்தே நித்தியம் எனபது உண்டாகிறது. நித்தியத்திற்கு துவக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. அது என்றென்றுமான முடிவு இல்லாதது. இப்பொழுது அதற்கு பதில் கூற வேண்டும், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் அந்த வேதவாக்கியத்தை உண்மையாகவே கூர்ந்து கவனிப்பீர்களேயானால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 33 “அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ…” துன்மார்க்கர் நித்திய ஆக்கினையை அடைவார்கள், ஒரு குறிப்பிட்டக் காலம் தண்டிக்கப்படுவர்: ஒருகால் கோடா கோடி ஆண்டுகளாய் இருக்கலாம், எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக நிச்சயமாக தண்டிக்கப்படுவீர்கள். ஆனால் நிச்சயமாகவே பாவம் என்பதற்கு ஒரு துவக்கம் இருந்ததுபோல, பாவத்திற்கு ஒரு முடிவும் உண்டு. ஆக்கினைக்கு ஒரு துவக்கமிருந்தது, ஆக்கினைக்கு ஒரு முடிவும் உண்டு. நகரம் பிசாசிற்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. புரிகிறதா-? சரி. இப்பொழுது நான் இங்கே மற்றொன்றை எடுத்து, இன்னும் ஒரு சில நிமிடங்களுக்கு அதற்கு பதில் கூற வேண்டும், அது அழகான ஒன்று, அதுவும் இதற்குள்ளாக இணைகிறது. இப்பொழுது, ஆனால் இங்கே இவைகள்: “ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்” என்பது ஏறக்குறைய தேவனுடைய சிந்தையிலிருந்து அவர்கள் தள்ளப்படுவது போன்றதாயுள்ளதா-? 34 இல்லை, அது அவ்விதமாயிருக்காது. இப்பொழுது நீங்கள் இங்கே கலியாண விருந்தினை குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது இங்கே கேட்கப்பட்டிருந்தோ, “ராஜ்யத்தின் புத்திரர்” என்பதாகும். ராஜ்யத்தின் புத்திரர் யூதர்களாயிருக்கிறார்கள், அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்படுகின்றனர். அவர்கள்—அவர்கள் புறம்பான இருளுக்குள்ளாக தள்ளப்பட்டு, அவர்கள் அழுகையும், புலம்பலும் பற்கடிப்புமான நேரத்தினூடாக சென்று விட்டனர். அவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர், ஏனென்றால் அது உங்களுக்கும், எனக்கு மனந்திரும்ப ஒரு தவனை கொடுப்பதற்காகவேயாகும், ஆனாலும் அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து ஒரு போதும் தள்ளப்படவில்லை. அவர் இஸ்ரவேலரை ஒருபோதும் மறப்பதில்லை. எந்த வேதவாசகருமே இஸ்ரவேலர், “ராஜ்யத்தின் புத்திரர்” என்று குறிப்பிட்டுள்ளதை அறிவர். பாருங்கள், அது ராஜ்யமாய், வாக்குத்தத்தமாய் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், தேவன் அந்த தேசத்தோடு ஈடுபடுதல், அவர் இஸ்ரவேலரோடு ஈடுபட்டபோது, அது ராஜ்யத்தின் புத்திரராம். 35 இப்பொழுது, உங்களுக்கு நினைவிருக்கும், அவர் அங்கே, “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முடிவிலே வந்து ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்” என்று ஒரு இடத்தில் கூறினார். பாருங்கள், அந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும் ராஜ்யத்தில் இருப்பார்கள். அவர்கள், அவர்கள் ராஜ்யத்தினுடைய ஆசீர்வாதமான ஜனங்களாயிருந்தனர். ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள். 36 இப்பொழுது, இங்கே உள்ள மணவாளனுக்கு எங்கிருந்து குறிப்பு வருகிறது. மணவாளன் வரும் போது, அவர்கள்…ஐந்து கன்னிகைகள் ஆண்டவரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர், ஆனால் அவர்கள் தங்கள் தீவட்டிகளோடு எண்ணெய்யை எடுத்துக் கொண்டு போகவில்லை. மற்ற ஐந்து பேர் தங்களுடைய தீவட்டிகளோடு எண்ணெயையும் கொண்டு சென்றனர். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், யூதர்களோடு புறஜாதிகளும், இருவருமே புறக்கணிக்கப்படுகிறபடியால், அது ஒரு அழகான காட்சியாயுள்ளது. அதை சிந்தையில் வைத்துக் கொள்ளுங்கள், எல்லா நேரத்திலுமே மூன்று வகுப்பினைக் கொண்ட ஜனங்கள் இருந்து வருகின்றனர்: யூதர், புறஜாதிகள் (சம்பிரதாயமான),…; யூதர், புறஜாதிகள் மற்றும் சபை. நீங்கள் அவைகளை குழப்பிக் கொண்டால், நீங்கள் வெளிப்பாட்டைப் பெறும்போது, நீங்கள் நிச்சயமாகவே தொல்லைக்குள்ளாவீர்கள். நீங்கள்… 37 ஒரு முறை திரு.போஹனான் என்னிடத்தில் கூறியது போலாகும், அவர், “பில்லி, வெளிப்படுத்தின விசேஷத்தை வாசிக்க முயற்சிக்கும் எவருக்கும் தீக்கனவுகள் உண்டாகும். ஏன் தெரியுமா” என்று கூறி, தொடர்ந்து அவர், “இங்கே மணவாட்டி பூமியில் இருக்கிறாள், வலுசர்ப்பமானது தன்னுடைய வாயிலிருந்து நதி போன்ற வெள்ளத்தை ஊற்றி அவளோடு யுத்தம்பண்ணப் போயிற்று” என்றார். மேலும், “அப்பொழுது அதே சமயத்தில் அந்த மணவாட்டி இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராக நின்று கொண்டிருக்கிறாள்” (யோகோவா சாட்சிக்காரரின் உபதேசம்) “சீனாய் மலையின் மேல். அதே சமயத்தில் மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள்” என்றார். இல்லை, இல்லை, நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். 38 மூன்று வகுப்பினைக் கொண்ட ஜனங்களே உள்ளனர். பாருங்கள், அது, புறக்கணிக்கப்பட்ட யூதர், உறங்கிக்கொண்டிருக்கும் கன்னிகை அந்த வெள்ளத்தை…அது ஸ்திரியினுடைய வித்தல்ல, அது வலுசர்ப்பம் தன்னுடைய வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை ஊற்றின ஸ்திரியினுடைய சந்ததியான மற்றவர்கள்…வெளிப்படுத்தின விசேஷம் 11. ஆகையால் உண்மையாகவே, இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் யூதர்கள் முற்றிலும் மணவாட்டியல்ல, அவர்கள் மீதமுள்ள யூத சபை. யோகோவா சாட்சிக்காரரின் உபதேசமே அவர்களை மணவாட்டியாக பொருத்துகிறது, நீங்கள் அதை எப்படி நிரூபிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை, ஏனென்றால் அது மணவாட்டியல்ல. 39 அங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் நீங்கள் கவனிப்பீர்களேயானால், அதில், “அவர்கள் கற்புள்ளவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் அண்ணகர்களாயிருக்கிறார்கள். ஒரு அண்ணகன் என்னவாயிருந்தான்-? அவர்கள்…ராணியைக் காவல்காத்த ஆலயக் காவலர்களாக அந்த அண்ணகர்கள் இருந்தனர், ஏனென்றால் அவர்கள்…அவர்கள் மனிதனால் அண்ணகர்களாக்கப்பட்டனர். அவர்கள்…அதாவது, “அவர்கள் ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதிருந்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்தீர்களா-? அவர்கள் ஆலய அண்ணகராயிருந்தனர். அது தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களிலிருந்து தேவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவரை தேர்ந்தெடுத்திருந்தார். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால்,…நாம் ஒரு விநாடியில் அதை புரிந்து கொள்ள முடியுமானால், அது உங்களுடைய மனதில் அதை ஒரு விதமாக தீர்த்து வைக்கும், நீங்கள் உண்மையாகவே… 40 நாம் வெளிப்படுத்தின விசேஷவும் 7-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம், அதில் என்னக் கூறப்பட்டுள்ளது என்பதை…இப்பொழுது நாம் இங்கே கண்டறிவோம். அது ஒரு அழகான காரியமாயுள்ளது: இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்களின் நின்று,…(இப்பொழுது, இது எசேக்கியல் 9-ம் அதிகாரத்திற்கு இணையான சம்பவமாயிருக்கிறது, அங்கே அவன் யூதரின் அழிவுகளைக் கண்டான். இங்கேயோ இவன் புறஜாதிகளின் அழிவுகளை வெளிப்படுத்தின விசேஷம், 7-ம் அதிகாரத்தில் காண்கிறான்)…பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, (காற்று என்பது “யுத்தம் மற்றும் சண்டை” என்பதையேப் பொருட்படுத்துகிறது) பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். (அது யுத்தத்தை “நிறுத்தி வைத்தல்”) 41 ஓ, நாம் இந்தக் கேள்வியின் பேரில் விவரமாகப் பார்க்கும்படி நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். அது நிகழ்ந்த போது…அங்குதான் ரசல் குழப்பமடைந்துள்ளார். இது வருவதைக் கண்டதாக ரசல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். அவர், “அது கர்த்தராகிய இயேசுவின் வருகையாயிருக்கும்” என்றும், அது சபையின் முத்திரையிடுதலாயிருந்தது என்பதை அறியாமல் அவ்வாறு தீர்க்கதரிசமுரைத்துள்ளார். பார்த்தீர்களா-? 42 எப்படி உலகப் போர்…முதல் உலகப் போர்…என்று அவர்கள் வியப்புறுகின்றனர். பாருங்கள், அது நவம்பர் பதினோராம் மாதம், பகல் பதினோரு மணிக்கு, பதினோராம் மாதம், பதினோராம் நாள், பதினோராம் மணி வேளையில் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு உடனடியாக சபைக்கு இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானமும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் வெளிப்படுத்தப்பட்டது. சரியாக அதற்கு பின்னரே உடனே வெளிப்படுத்தப்பட்டது. 43 நீங்கள் அதை வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் எடுத்துப் பார்த்தால், எப்படி நாம் பிலெதெல்பியா சபைக் காலத்திற்கும், லவோதிக்கேயா சபைக் காலத்திற்கும் இடையே உள்ள காலத்தை ஒன்று சேர்ந்து இணைத்தோம். மெத்தோடிஸ்டுகள் பிலதெல்பியா சபைக்காலத்தை உடையவர்களாய் இருந்தனர், சகோதரசிநேகம். கடைசி சபைக் காலமோ லவோதிக்கேயா சபைக்காலமாய் இருந்தது. அது வெதுவெதுப்பான காலமாயிருந்தது. அவர் அங்கே, “(திறந்த வாசலை) உனக்கு முன்பாக ஒரு வாசலை வைத்து இருக்கிறேன்” என்றார். திறந்த வாசல்-! நீங்கள் அந்த வேத வாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்தால், உங்களுக்கு சரியாக காண்பிக்குபடிக்கு, அங்கே ஒரு இடத்திற்குள்ளா சரியாக அது முழு செய்தியையும் இணைக்கும். 44 கவனியுங்கள்-! இங்கே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பேரில் இருந்து வருகிற ஞானஸ்நானம் மற்றும் உள்ள ஒவ்வொரு காரியமும், (நாம் அதற்குள் நேரடியாக ஆய்ந்து பார்க்க வேண்டும்) அது முற்றிலும் ஒரு கத்தோலிக்கக் கோட்பாடாயிருந்தேயன்றி, அது ஒருபோதும் ஒரு கிறிஸ்தவ உபதேசமாயிருக்கவில்லை. இல்லை ஐயா. நான் வெறுமென…நாம் இன்றிரவு கிரேக்க வேதாகம அகராதியோடு கூட இங்கே அதற்குள்ளாகச் சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். புரிகிறதா-? ஆம் ஐயா, சரித்திரத்தினூடாகவுங் கூடச் சென்றுப் பார்க்க வேண்டும். வேதாகமத்தில் அந்த விதமாக எவருமே, எப்போதுமே ஒரு போதும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இருக்கவில்லை, அதாவது வேதாகமத்தில் முதல் ஆறு நூறு ஆண்டுகளாக அவ்வாறு இல்லை. அது கத்தோலிக்கருடைய சொந்தக் கோட்பாடு என்பதை என்னால் இங்கே சரியாக நிரூபிக்க முடியும், அவர்கள் தான் அதை, அந்த தெளித்தலையும், ஊற்றுதலையும் துவங்கினவர்களாய் இருக்கிறார்கள். 45 அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து வெஸ்லியர்களின் சபைக்குள்ளாக, மெத்தோடிஸ்டு சபைக்கும், மெத்தோடிஸ்டுகள் அதை பாப்டிஸ்டுக்கும், பாப்டிஸ்டு அதை அப்படியே கொண்டு வந்தனர், அது இன்னமும் ஒரு கள்ள உபதேசமாய் உள்ளதே-! வேதத்திற்கு திரும்பி வந்து, “நீ உயிருள்ளவென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று வேதம் உரைத்துள்ளதை உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது முற்றிலும் உண்மை. அவர்கள்… 46 அவர்கள் அவருடைய நாமத்தை ஞானஸ்நானத்தில் இருளின் காலம் வரையில், நான்காம் காலம்…சபைக்காலம், பெர்கமு சபைக் காலம் வரை பயன்படுத்துவார்கள் என்று வேதம் போதித்துள்ளது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அவர் இருளின் காலங்களை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில், ஒவ்வொன்றையுமே கூறியுள்ளார், அவர், “உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுமதலியாமல்” என்றார். 47 அது அங்கு அந்த மற்றொரு காலத்திற்கு, கத்தோலிக்க காலத்திற்கு வந்தபோது, அவர், “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்-! நீ என் நாமத்தை மறுதலித்துவிட்டாய்” என்றார். அங்குத்தான் காரியம். புரிகிறதா-? அது அப்படியே எல்லாவற்றையும் ஒரு பெரிய அழகான காட்சியாய் ஒன்று சேர்ந்து முழு வேதாகமத்திலும் இணைக்கிறது. 48 இப்பொழுது இதைக் கவனியுங்கள்: …நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் வானத்திலிருந்து ஏறிவரக் கண்டேன்;…(முத்திரை) 49 இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன-? இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்புக்கார சகோதரராகிய நீங்களோ, “ஓய்வு நாளைக் கடை பிடித்தல்” என்று கூறப் போகிறீர்கள். நீங்கள் அதை எனக்கு வேதத்தில் காண்பிக்க வேண்டும். அது அங்கே இல்லை. எந்த ஒரு இடத்திலும் அவ்வாறு அது கூறப்படவில்லை…அது முத்திரையாயுள்ளது… 50 நீங்கள் எபேசியர் 4:30-ஐ வாசிப்பீர்களேயானால், நீங்கள் உடனே ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்ன என்பதை கண்டறிவீர்கள். எபேசியர் 4:30, “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது. அடுத்த எழுப்புதல் வரை என்று அல்ல, ஆனால் அது பெற்றுள்ள நித்திய பாதுகாப்பு (ஊ—ஊ). “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” எபேசியர் 4:30 அதைக் கூறவில்லையா என்று பாருங்கள், அதன்பின்னர் உங்களுடைய வேதாகம ஓரக்குறிப்பு வாசிப்புகளினூடக உள்ள வேதவாக்கியங்களினூடாக சென்று அதைக் கண்டறியுங்கள். இப்பொழுது, “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை உடையவர்களாயிருத்தல்.” 51 இப்பொழுது, முதலாம் உலகப் போர் வரையிலும் பரிசுத்த ஆவி என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக கற்பிக்கப்படவில்லை. நாம் நம்முடைய—நம்முடைய நாற்பது வருட பொன்விழாவினை இல்லை நாற்பதாவது வருட பெரு விழாவினை கொண்டாடிவிட்டோம். …அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாது இருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (இப்பொழுது நீங்கள் உங்களுடைய “புத்திரர்” என்ற கேள்வியண்டைக்கே வந்து கொண்டு இருக்கிறீர்கள், பாருங்கள்) (சேதப்படுத்தாதே, பூமியை அழித்துப் போடாதே, எந்த அணுகுண்டும் வெடிக்க அனுமதிக்காதே, நமது தேவனுடைய ஊழியக்காரர் முத்திரையிடப்படுகின்ற வரையில் ஒரு காரியத்தையும் முழுமையாக செய்ய வேண்டாம்) 52 இப்பொழுது, நாம் பின்னோக்கி ஆராய்ந்து பார்க்கக் கூடுமானால், உலகப் போரின் வீழ்ச்சி என்ற புத்தகத்தின் தொகுதி இரண்டில், அந்த—அந்த நிகழ்வு எப்படி நடந்தது என்று பார்ப்போமேயானால், தளபதி ஆலன்பி எருசலேமின் எல்லையைப் பிடிக்கும் வரை சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவன் இங்கிலாந்தின் இராஜாவிற்கு தந்தி அனுப்பி, “நான் அந்த நகரத்தின் புனிதத்துவத்தின் நிமித்தமாக நான் அதைச் சுட்டெரித்துப் போட விரும்பவில்லை” என்றான். மேலும், அவன், “நான் என்ன செய்யலாம்-?” என்று கேட்டான். 53 அதற்கு அவனோ, “ஜெபி” என்றான். 54 அவன் அதன் மீது மீண்டும் விமானத்தில் பறந்து வந்தான், அவர்கள் வந்த போது, இவர்களோ, “ஆலன்பி வந்து கொண்டிருக்கிறான்” என்றனர். அங்கே முகமதியர்கள் இருந்தனர், அவனோ, “அல்ஹா வந்து கொண்டிருக்கிறார்” என்றே எண்ணிக் கொண்டான். எனவே அவர்கள் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டு சரணடைந்துவிட்டனர். அப்பொழுது ஆலன்பி எருசலேமிற்கு பவனிவந்து, எந்த ஒரு துப்பாக்கிச் சூடுமன்றி தீர்க்கதரிசனங்களின்படி அதைக் கைப்பற்றினான். அது உண்மை, பின்னர் அதை யூதர்களுக்கு திரும்பக் கொடுத்துவிட்டான். 55 அதன் பின்னர் அவர்கள் யூதர்களை துன்புறுத்த ஒரு ஹிட்டவரை எழுப்ப, அவர்களையோ அவர்கள் உலகம் முழுவதிலும் ஓடச் செய்தனர். 56 வேதமோ, “அவர்களை கழுகின் செட்டைகளின் மேல் சுமந்து வருவேன்” என்று அவர் கூறினார் என்று உரைத்துள்ளது. அவர்கள் திரும்பி வரத் துவங்கினபோது,…லைப் என்ற நாளிதழ் ஒரு சில வாரங்களுக்கு முன் அவர்களைக் குறித்து வெளியிட்டது, அதாவது அவர்கள் இலட்சக் கணக்கானவர்களை எருசலேமிற்குள் கொண்டுவந்தனர் என்றும், அவர்கள் சென்று தங்களுடைய முதியவர்களை தங்களுடைய முதுகின் மேல் சுமந்து வந்தனர் என்றும் வெளியிட்டிருந்தது. அவர்கள் பேட்டி காணப்பட்டனர். நான் அதைக் குறித்த எல்லாவற்றையும் திரைப்படமாக வைத்துள்ளேன். அவன் கூறினான்…அங்கே தாவீதின் நான்கு நட்சத்திரக் கொடி தொங்கிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பழமையான கொடி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக பறந்துக் கொண்டிருக்கிறது. 57 இயேசு, “அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும் போது என்றும், இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்றும்” கூறினார். 58 இங்கே அவர்கள் அந்த முதியவர்களின் கொண்டு வந்துக் கொண்டிருந்த போது, “எதற்காக இங்கு வருகிறீர்கள்-? நீங்கள் உங்களுடைய தாய் நாட்டில் மரிப்பதற்காகவா திரும்பி வந்து கொண்டிருக்கிறீர்கள்-?” என்று கேட்க்கப்பட்டனர். 59 அப்பொழுது அவர்களோ, “இல்லை, நாங்கள் மேசியாவைக் காண் வந்திருக்கிறோம்” என்றனர். 60 சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் வாசலருகே இருக்கிறோம்-! அப்பாலே அங்கு அந்த ஊழியக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இங்குள்ள இந்த யூதக் கூட்டமோ, அவர்களால் கூடுமானால் உங்களுடைய போலிப் பல்லைக் கூட உங்களிடமிருந்து எடுத்து ஏமாற்றி விடுவார்கள். எனவே இந்த யூதர்களைக் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நியாயப் பிரமாணங்களையும் மற்றவைகளை கடைபிடித்துக் கொண்டு அங்குள்ளவர்கள், ஒரு மேசியா இருந்தார் என்பதைக் கூட ஒருபோதும் அறியாதிருக்கிறார்கள். 61 சகோதரன்…ஸ்டாக்லோம் என்ற இடத்திலே சகோதரன் பெட்ரூஸ் பத்து இலட்சம் புதிய ஏற்பாடுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்களோ அவைகளைப் பெற்றுக் கொண்டு, அவைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், “நல்லது, இது மேசியாவாயிருந்தால், அவர் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்ய நாங்கள் காணட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்” என்று கூறினர். 62 என்னுடைய ஊழியத்திற்கான என்ன ஒரு அமைப்பு-! எருசலேமில் உள்ள வாசல்களில் உள்ளே நுழைய எனக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தபோது, அதற்குள்ளாக செல்ல, அப்பொழுது நான் எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருந்தேன். அப்பொழுது நான் அங்கு நெடுக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர், “இப்பொழுது போகாதே” என்றார். 63 அப்பொழுது நான், “அது என்னுடைய வெறுமென கற்பனையாய் இருந்திருக்கலாம். என்னுடைய பயணச்சீட்டு கட்டணம் செலுத்தி வாங்கப்பட்டு விட்டது, நானோ என்னுடைய பாதையில் இருக்கிறேன். அங்கிருந்தும் ஒரு மனிதன் என்னை சந்திக்க வருகிறார், முழு கூட்டமும், பள்ளிகள் முதலியன ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டனவே” என்று எண்ணினேன். 64 நான் சற்று தூரம் நடந்து சென்றேன், அப்பொழுது ஆவியானவர், “போகாதே-! நீ போக வேண்டாம்” என்றார். 65 அப்பொழுது நான் பயணச் சீட்டு முகவரிடம் திரும்பிச் சென்று, “நான் இந்த பயணச்சீட்டை ரத்து செய்கிறேன். நான் கீரிஸில் உள்ள ஏதென்ஸுக்கும், மார்ஸ் மேடைக்கும் செல்ல வேண்டும்” என்று கூறினேன். 66 அதற்கு அவரோ, “பரவாயில்லை, ஐயா, உங்களுடைய பயணச் சீட்டு எருசலேமிற்கான் அழைப்பாயுள்ளதே” என்றார். 67 அப்பொழுது நானோ, “நான் எருசலேமிற்கு போவதற்குப் பதிலாக ஏதென்ஸிற்குப் போக விரும்புகிறேன்” என்றேன். பரிசுத்த ஆவியானவர் காத்துக் கொண்டிருக்கிறார், அந்த வேளையானது இன்னும் வரவில்லை. இது சரியான வேளை அல்ல. 68 கவனியுங்கள்: …நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும்… நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும்…சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (அது பரிசுத்த ஆவியின் முத்திரை என்பதை எவருமே அறிவர்; கவனியுங்கள்) முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; (இப்பொழுது, அவர்கள் யூதர்களாயில்லையா; இதைக் கவனியுங்கள்) இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப் பட்டவர்கள் 144000 பேர் (அவர்களில் ஒரு புறஜாதியானும் இல்லை. அது கடைசி காலம்) 69 கவனியுங்கள்-! யூதா கோத்திரம், பன்னீராயிரம், ரூபன் கோத்திரம், பன்னீராயிரம்; தொடர்ந்து கீழே, காத், பன்னீராயிரம்; நப்தலி, அதனைத் தொடர்ந்து கீழே ஆசேர், செபுலோன் மற்றும் இந்த இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுமே. பன்னிரண்டை பன்னிரெண்டால் பெருக்கினால் எவ்வளவு-? 144000. அங்கே 144000 யூதர்கள் இருந்தனரே-! புறஜாதிகள் அல்ல, யூதர்கள்-! அதற்கு மணவாட்டியோடு எந்த ஒரு காரியமும் சம்மந்தக் கிடையாது. ஆகையால் யோகோவா சாட்சிக்காரர் தங்களுடைய உபதேசத்தில் தவறாயிருக்கின்றனர். அவர்கள் “யூதர்கள்,” புறஜாதிகள் அல்ல என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள், புறஜாதியார் ஒருபோதும் ஒரு ஊழியக்காரராக கருதப்பட்டிருக்கவேயில்லை. நாம் குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம், ஊழியக்காரர்களல்ல. 70 இப்பொழுது அதனுடைய மற்ற பாகத்தை வாசித்துப் பாருங்கள். தர்பூசணிப் பழத்தை சாப்பிடும் மனிதன் போல, அவன், “அது நன்றாயுள்ளது, ஆனால் நாம் அதை இன்னும் அதிகமாகப் புசிப்போம்” என்பது போன்றேயாகும். சரி, தேவன் அதைக் குறித்து இங்கே ஏராளமானவற்றை வைத்திருக்கிறார். இப்பொழுது, அப்படியே கவனியுங்கள். இப்பொழுது, இப்பொழுது நாம் 8-வது வசனத்தில் இருக்கிறோம்: செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 71 பாருங்கள், யோவான் ஒரு யூதனாயிருக்கிறபடியால், அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளங்கண்டு கொண்டான், இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் கண்டான்; ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் பன்னீராயிரம் பேர், பன்னிரண்டை பன்னிரண்டால் பெருக்கினால் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருக்கின்றனர். அவர்கள் சபை அல்ல, யூதர்கள். வேதமோ, அவர்கள் ஒவ்வொரு கோத்திரமாய் பெயரிடப்பட்ட “இஸ்ரவேல் புத்திராயிருந்தனர்” என்றே இங்கு உரைத்துள்ளது. 72 இப்பொழுது 9-வது வசனத்தைக் கவனியுங்கள். இவைகளுக்குப் பின்பு (இப்பொழுது இங்கே மணவாட்டி வருகிறாள்)… இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்த போது, இதோ,… ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்,… 73 அங்கு தான் உங்களுடைய ஆலய அண்ணகர்கள் உள்ளனர், அவர்கள் 144000 பேர்களாயிருக்கின்றனர், ஒரு சிறு இடம், அவர்கள் மணவாட்டியோடு இருந்து ஒரு ஆலயத்தை காவல் புரியப் போகிறார்கள்; அவள் மணவாட்டியினுடைய மெய்க்காவலர். அந்த 144000 பேர் மணவாட்டிக்கு மெய்க் காவாலராயுள்ளனர்; ஆலய அண்ணகர்கள். 74 கவனியுங்கள்-! உண்மையாகவே, நீங்கள் இங்கே 14-வது அதிகாரத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன், அது, “ஏன், அவர்கள் மணவாட்டியோடு உள்ளனர், அவர்கள் எங்கெல்லாம்…” என்று உரைக்கிறது. முற்றிலுமாக-! ராணி எங்கெல்லாம் சென்றாளோ அங்கெல்லாம் அவளோடு அண்ணகர்கள் பயணித்தனர். உண்மையாகவே-! ஆனால் அவர்கள் எங்கே இருந்தனர்-? அவர்கள் மெய்க்காவலர்களே அல்லாமல் வேறொன்றுமாய் இருக்கவில்லை, அந்த விதமாகத்தான் அது சரியாக இங்கிருக்க வேண்டும் என்று வேதம் பறைசாற்றுகிறது. 75 கவனியுங்கள்: இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்த போது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், (அங்குதான் உங்களுடைய புறஜாதி மணவாட்டி வருகிறாள், சரி) ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், (அங்கே அவர்களுடைய இரட்சகர் இருக்கிறார், ஆட்டுக்குட்டி, நியாயப் பிரமாணம் அல்ல; ஆட்டுக்குட்டி, கிருபை) வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,…ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். (கவனியுங்கள், இன்னும் ஒரு சில நிமிடங்களில், அந்த வெள்ளை அங்கிகள் பரிசுத்தவான்களுடைய நீதிகளல்லவா என்று பார்ப்போம்) அவர்கள் மகாசத்தமிட்டு: (அது ஒரு பெந்தேகோஸ்தே எழுப்பதலாய் இருக்கவில்லையென்றால், நான் அந்த ஒன்றை ஒருபோதும் கேட்டதே இல்லை) இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுது கொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். 76 அது ஒரு பெரிய சிறப்புக் கூட்ட நேரம் போன்று தென்படுகிறது, அது அவ்வாறில்லையா-? அவ்வாறே இருக்கப் போகிறதே-! அது யார்-? 144000 பேர்களா-? கிடையாதே-! ஒருவனும் எண்ணக்கூடாததுமான இந்த திரளான கூட்டமாகிய ஜனங்கள்…சகல ஜாதிகளிலும், சகல் கோத்திரங்களிலும், பாஷைக் காரரிலுமிருந்து வந்தவர்கள். என்னுடைய அருமையான நண்பனே உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா-? 77 இப்பொழுது கவனியுங்கள், அதை அப்படியேப் படியுங்கள். இப்பொழுது: அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்-? எங்கே இருந்து வந்தார்கள்-? என்று கேட்டான். 78 மூப்பன் யோவானிடத்தில், அது 144000 பேரை அடையாளங்கண்டு கொண்ட ஒரு யூதனிடத்தில் கூறினான், அவன், “இப்பொழுது, நீர் அவர்களை அறிந்திருக்கிறீர், அவர்கள் எல்லோரும் யூதர்கள். ஆனால் இவர்கள் யார்-? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்-?” என்று கேட்டான். மூப்பன் என்ன கூறினான் என்று பார்த்தீர்களா-? “மூப்பர்களில் ஒருவன் பதிலளித்தான்,” (அது சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த மூப்பர்கள்) “எனக்கு, ‘வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்-? எங்கேயிருந்து வந்தார்கள்-? இப்பொழுது, யூதர்களையும், அவர்களுடைய உடன்படிக்கை முதலியனவற்றை நாம் யாவரும் அறிவோம், ஆனால் இவர்கள் எப்பொழுது வந்தார்கள்-? என்று பதில் கூறுவாயாக என்றான். இப்பொழுது கவனியுங்கள்: அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (“எனக்கு—எனக்கு—எனக்கு தெரியாது,” யோவான், “அது எனக்கு புரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. எனக்குத் தெரியவில்லை” என்றான்) அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்: (“சோதனைகளினூடாகவும், இந்த அநேக அபாயங்களினூடாகவும், வலைகளினூடாகவும், கன்னிகளினூடாகவும் நான் ஏற்கெனவே வந்துள்ளேன்.” பார்த்தீர்களா-?)…இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை…(சபையிலா-? அது சரியாகத் தென்படுகிறதா-?)…ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். …இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும்…(என்னுடைய வீட்டில் என்னை சேவிக்கிறது யார்-? என்னுடைய வீட்டில் என்னை சேவிக்கிறது யார்-? என்னுடைய மனைவி, அது சரியா-?)…அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்;…(அதாவது என்னுடைய வீட்டில், என்னுடைய பொருளாதாரத்தில் என்னோடு தரித்திருக்கிறது என்னுடைய மனைவியே. அவளே என்னோடு தங்கியிருந்து, என்னுடைய மனைவியே. அவளே என்னோடு தங்கியிருந்து, என்னுடைய துணிகளைத் துவைத்து, எனக்காக காரியங்களை தொடர்ந்து ஆயத்தப்படுத்துகிறாள்)…சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர், இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (ஓ, என்னே, கவனியுங்கள்-!) இவர்கள் இனி பசியடைவதுமில்லை,…(அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சில ஆகாரங்களை தவிர்த்து விட்டது போல காணப்படுகின்றனர்)…இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (அங்குதான் அவள் இருக்கிறாள், அங்குதான் உங்களுடைய மணவாட்டி இருக்கிறாள்) 79 அங்கே உங்களுடைய லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் உள்ளனர், அங்குதான் உங்களுடைய ஊழியக்காரர்கள் இருக்கின்றனர். ஆகையால் “ராஜ்யத்தின் புத்திரர்” இங்கே, அருமையான நபர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார், அது ஒரு…இந்த குறிப்பிடத்தக்க கேள்வியைக் கேட்டுள்ளார். நான் இதை இங்கேயே…எங்கோ பின்னால் விட்டுவிட்டிருந்திருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன், ஆனால் “அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள்,” என்பது அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்று பொருள்படுகிறதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்டக் காலம் ஆவிக்குரிய பலன்களிலிருந்து புறம்பே தள்ளப்படுகின்றனர். பாருங்கள், வெறுமென கொஞ்சங் காலத்திற்காகவேயாகும். 80 ஆகையால், தீர்க்கதரிசி இஸ்ரவேலர் இந்த நாளில் திரும்பி வருவதைக் கண்டபோது, அவன், “ஓய்வு நாள் ஆசாரிப்பு எடுக்கப்பட்டுவிட்டால் இஸ்ரவேலர் இருப்பார்களா-? அவர்கள் ஓய்வு நாளிலும் மற்றெந்த நாளைப் போல வியாபாரம் செய்து, இந்த எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்” என்று கேட்டான். மேலும் அவன், “நீர்—நீர் எப்போதாவது…இஸ்ரவேல் முழுவதுமாக மறக்கப்பட்டுப் போகுமா-?” என்று கேட்டான். 81 அதற்கு அவர், “வானம் எவ்வளவு உயரமாயுள்ளது-? பூமி எவ்வளவு ஆழமாயுள்ளது-? அதை உனக்கு முன்பாக இருக்கிற அந்த கோலினால் அளந்து பார்” என்றார். அப்பொழுது அவன், “என்னால் அளக்க முடியாது” என்றான். 82 அப்பொழுது அவரும், “என்னாலும் இஸ்ரவேலை ஒருபோதும் மறக்க முடியாது” என்றார். நிச்சயமாக முடியாது. இஸ்ரவேல் ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை. 83 ஆகையால் நீங்கள் பாருங்கள், என்றென்றும் என்பதும், நித்தியம் என்பதும் இரண்டு வித்தியாசமான காரியமாயுள்ளன. இஸ்ரவேலர் புறம்பே தள்ளப்பட்டனர், ஆனால் தேவனுடைய சிந்தையிலிருந்து அல்ல. பவுல் அதை இங்கு பேசுகிறான், எனக்கு…ஆய்ந்து பார்க்க நேரமிருந்தால், ஆகையால் நான் துரிதமாக வேதவாக்கியத்தண்டைக்கு சென்று, அதை…என்னால் அவைகளை உங்களுக்கு குறிப்பிட்டுக் கூற முடியும், பாருங்கள், அது என் சிந்தையில் வருகிறது. 84 பவுல் அங்கே அதைக் குறித்துப் பேசுகிறான், புறஜாதிகளாகிய நாம், நாம் நடந்து கொண்ட விதம் மற்றும் நாம் என்ன செய்துள்ளோம் என்பதைக் குறித்தும் கவனமாயிருக்கும்படிக்குக் கூறினான். புரிகிறதா-? காரணம் தேவன் முதல் கிளையை தப்பவிடாதிருக்க, பாருங்கள், நாமோ உள்ளே ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறோம், பாருங்கள்,…இஸ்ரவேலர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக குருடாக்கப்பட்டிருந்தனர் என்றே அவன் கூறினான். வெறுமென ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்காகவே இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டிருந்தனர். அது உண்மை, ஆனால் அந்தத் திரை அவர்களுடைய கண்களிலிருந்து எடுக்கப்படும். தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் கடைசி புறஜாதி நபர் பிறக்கும்போது, அது எடுக்கப்படுகிறது, அதன்பின்னர் அவர்களுடைய திரை இஸ்ரவேலருடைய கண்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அப்பொழுது அவர்களோ, “இவரே நாம் காணும்படி எதிர்பார்த்திருந்த மேசியா” என்று கூறுவார்கள். அது உண்மை, ஆனால் புறஜாதியாரின் வாசலோ அடைக்கப்படும் (பேழை அடைக்கப்பட்டது போல), அந்த நேரத்தில் புறஜாதிகளுக்கு எந்தக் கிருபையுமே விடப்பட்டிருக்காது. 85 இப்பொழுது, நான் ஒரு கேள்வியின் பேரில் அதிகப்படியான முழு நேரத்தையுமே எடுத்துக் கொள்கிறேன். யாரோ ஒருவர், “இப்பொழுது நீர் என்னுடைய கேள்விக்கு பதில் கூறவில்லை” என்று கூறுகிறார். நல்லது, நாம் அதற்குரிய பதிலைப் பெறமுடியுமா என்று துரிதமாகப் பார்ப்போம். 86 சரி, இங்கே உள்ளது நீளமான ஒரு—ஒரு கேள்வி. ஸ்திரீகள் கேட்டுள்ளதோ அல்லது புருஷர் கேட்டதோ அல்லது அது யாராயிருந்தாலும் இதைக் குறித்துக் கேட்டுள்ள ஒவ்வொரு காரியமும் சரியே. கேள்வி:53. கர்த்தராகிய இயேசு முழு உலகத்திற்காகவும், அதாவது உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் மரிக்கவில்லை என்பது உண்மையல்ல தானே-? ஆனால் சரியாகக் கூறினால்… (இப்பொழுது, நான் அதை விளக்கிக்கூற உள்ளேன், ஆனால் அவள்… அவன் அல்லது அவள், அது யாராய் இருந்தாலும்… ஒரு ஸ்திரியினுடைய கையெழுத்துபோல் காணப்படுகிறது) ஆனால் சரியாகக் கூறினால் இந்த—சரியாகக் கூறினால் உலகின் ஒவ்வொரு பாகங்களில் உள்ள இவர்களுக்காக, பிதாவானவர் அவருக்கு கொடுத்தவர்களுக்காகவே மரித்தார் என்பது உண்மையா-? இவர்களை உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நித்திய ஜீவனுக்கென்று நியமித்து, அவர்களை தம்முடைய சொந்த தயவுள்ள சித்தத்தின்படி தெரிந்து கொண்டாரா-? 87 முற்றிலுமாக, அதுவே உண்மை-! அது முற்றிலும் உண்மை. இயேசு… மரித்ததே… இல்லை… அவர் ஒரு நோக்கம் உடையவராயிருக்கிறார். 88 நாம் அதைப் பார்ப்போமாக, நான் நினைக்கிறேன்…இதன் பேரில் வருகிற ஒரு கேள்வியை… அவர்கள் வாசித்தார்கள் என்று நான்-நான் நினைக்கிறேன். 54. வேதம் சந்தேகத்திற்கு இடமின்றி இவர்கள்… மாட்டார்கள், இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று நமக்கு சொல்லுகிறது. ஆகையால்… 89 அது முற்றிலும் உண்மை. ஆக்கினைக்குட்படும்படிக்கு தேவனால் முன் குறிக்கப்பட்ட ஜனங்கள் உண்டு என்று வேதம் நமக்குக் கூறுகிறது. 90 அது எப்பொழுதுமே உங்களுடைய சிந்தையில் இல்லாமற்போகாதபடிக்கு நீங்கள் அதை வாசித்துப் பார்க்க விரும்புகிறீர்களா-? சரி, நாம் இப்பொழுது யூதாவின் புத்தகத்திற்குத் திரும்புவோம், யூதா இங்கே பேசுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப் பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: 91 அவன் அதை யாருக்கென்று குறிப்பிட்டு எழுதுகிறான் என்று பார்த்தீர்களா-? பாவிகளுக்கல்ல, சுவிசேஷ ஊழியத்திற்கு மாத்திரமல்ல, ஆனால் பரிசுத்தமாக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்டு எழுதுகிறார். பாருங்கள், அவர்கள் ஏற்கெனவே ராஜ்யத்தில் இருக்கிறவர்கள். உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்து உள்ளவனாய் இருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி…(எப்படி-?)…சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. 92 பூர்வத்திலே எழுதப்பட்டிருக்கிறது-! தேவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து, “நான் இந்த மனிதனை இரட்சிப்பேன், நான் அந்த மனிதனை இழந்து விடுவேன்” என்று கூறினதல்ல. இது அதுவாயிருக்கவில்லையே-! தேவன் மரித்தார், இயேசு மரித்த போது, பாவ நிவர்த்தியானது ஒவ்வொரு நபருக்காகவும் முழு பூமியையுமே மூடினது. ஆனால் தேவன், முன்னறிவினால்…அவர்…சித்தம் கொண்டிருக்கவில்லை… எவரும் கெட்டுப் போக வேண்டுமென்று அவர் சித்தங்கொண்டிருக்கவில்லை. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதுவே அவருடைய—அதுவே அவருடைய நித்திய நோக்கமாயிருந்தது. ஆனால் அவர் தேவனாய் இருப்பாரானால், யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருக்கவில்லை என்றால், அப்பொழுது அவர் முடிவுற்ற தேவனாய் இருக்கவில்லை. எனவே வேதம் அதையே போதிக்கிறது. அதாவது நாம் முடிந்தால்… 93 நாம் ரோமர் 8-ம் அதிகாரத்தை இங்கே திருப்பிப் பார்க்கும்படி நேரமிருந்து, நீங்கள் அதை வாசித்துப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். ரோமர் 9-வது அதிகாரம், வேதாகமத்தில் இன்னும் மற்ற இடங்களிலும் உள்ளன. எபேசியர் 1-வது அதிகாரம். தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் உறுதியாய் நிற்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், தேவன் நிபந்தனையற்ற உடன்படிக்கையை அளித்தார். அவர் முன்னறிந்து கொண்டவர்களுக்காக மரிக்கும்படி இயேசுவை அனுப்பினார். புரிகிறதா-? 94 எனவே, “அவள் இரட்சிக்கப்படுவாளா அல்லது இல்லையா என்பதை தேவன் அறிந்திருக்கவில்லை என்று நீங்கள் கூறுவது போன்று” கூறுவது அல்ல. நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது உலகத் தோற்றத்துக்கு முன்னே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் தேவனாய் இருக்கவில்லையே. 95 முடிவுற்ற என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா-? பாருங்கள்…முடிவுற்ற என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை அகராதியில் பார்த்து கண்டறிந்து கொள்ளுங்கள். ஏன், அவர் பூமியின் மீது இருக்கப்போகும் ஒவ்வொரு உண்ணியையும், ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு கிருமியையும் அறிந்திருந்தார். அவைகள் பிறந்து உலகில் வாழ்வதற்கு முன்னமே அவர் அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் தேவனாயிருக்கவில்லை. நிச்சயமாகவே, அவர் அதை அறிந்திருந்தார். சரி. 96 அப்பொழுது, அங்கே, தேவனால், “நான் உன்னை எடுத்து நகரத்துக்கு அனுப்புவேன்; நான் உன்னை எடுத்து, பரலோகத்திற்கு அனுப்புவேன்” என்று கூற முடியாது. தேவன் நீங்கள் இருவருமே பரலோகத்திற்கு போக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் முன்னறிவினால் ஒருவர் நேர்மையற்ற நபராயிருப்பார் என்றும், மற்றொருவர் ஒரு பண்புள்ள மனிதனாய், ஒரு கிறிஸ்தவராயிருப்பார் என்றும் அறிந்திருந்தார். புரிகிறதா-? ஆகையால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் முன்னறிந்திருந்த மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு அவர் இயேசுவை அனுப்ப வேண்டியதாய் இருந்தது. உங்களுக்கு இது புரிகிறதா-? இப்பொழுது இங்கே பாருங்கள்: இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று வேதவாக்கியங்கள் நமக்கு சந்தேகத்திற்கிடமின்றி கூறுகின்றன. 55. ஆகையால் பாவநிவிர்த்தியானது…ஆதாமினுடைய இனம் முழுவதையுமே பாதுகாப்பிற்காக மறைப்பதற்கானதாயிருந்ததானால், சிலர் தங்களுடைய வாக்குத்தத்தை அல்லது ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் அவர்கள் இழக்கப்பட்டு விட்டனரா அல்லது… வல்ல… சுயாதீன… அவன்… நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கங்களைக் காட்டிலும் வலிமையான ஆற்றலான ஒன்றாய் இருக்குமா-? அது…(இப்பொழுது இந்த நபர் இந்த இரண்டாம் கேள்வியின் பேரில் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.) மனிதனுடைய சுயாதீன சித்தம் நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்ல தேவனின் நோக்கங்களைக் காட்டிலும் வலிமையான ஒரு ஆற்றாலாயிருக்குமா-? 97 இல்லை என் சகோதரனே, சகோதரியே. நிச்சயமாக இல்லை. எதுவுமே அதைப் பார்க்கில் வல்லமையானது கிடையாது…மனிதனுடைய சித்தத்தை நித்திய தேவனின் நியாயத்தீர்ப்பின் நோக்கத்தோடு ஒருபோதும் ஒப்பிடவே முடியாது. பாருங்கள். அது அவ்வாறிருக்க முடியாது. 98 இப்பொழுது உங்களுடைய முதல் கேள்வி சரியானதாயிருந்தது. நண்பனே, உங்களுடைய இரண்டாம் கேள்வி சரியானதாயிருக்க முடியாது. காரணம் பாருங்கள், இங்கே எழுதப்பட்டுள்ள விதத்திலேயே பாருங்கள், பாருங்கள்: மனிதனுடைய சுயாதீன சித்தமானது நித்திய திட்டங்களையும், சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தையுங் காட்டிலும் வலிமையான ஒரு ஆற்றலாய் இருக்காதா-? (ஏன், நிச்சயமாக இல்லை. சர்வ வல்லமை உள்ள தேவனின் நோக்கத்தைக் காட்டிலும் மனிதனின் சித்தமானது எப்படி ஒரு வலிமையான ஆற்றலாயிருக்க முடியும்-? மனிதன் தன்னுடைய மாம்ச சம்மந்தமான நிலையில் அவன் விரும்புகிறதைச் செய்யும் சித்தமானது எப்படி ஒரு வலிமையான ஆற்றலாயிருக்க முடியும்-? மனிதன் தன்னுடைய மாம்ச சம்மந்தமான நிலையில் அவன் விரும்புகிறதைச் செய்யும் சித்தமானது நித்தியமான, பரிபூரண தேவனைக் காட்டிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்குமா-? நிச்சயமாக இருக்காதே-! அது அவ்வாறு இருக்க முடியாது, பாருங்கள். நித்திய தேவன், அவருடைய நோக்கம் பரிபூரணமாய் இருக்கும் போது, இங்குள்ள ஒரு—ஒரு மாம்சபிரகாரமான மனிதனை, எப்படி உங்களால் கூற முடியும், (அவன் எவ்வளவு வல்லமையாயிருந்தாலும்) கவலைப்பட வேண்டியதில்லை, அவனுடைய நோக்கங்களை இதனோடு, நித்திய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நோக்கங்களோடு ஒருபோதும் ஒப்பிடலாகாது. 99 [ஒரு சகோதரி சபையிலிருந்து பேசுகிறார்—ஆசி.] ஆம். [“நான் வருந்துகிறேன். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நான் அங்கே கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.”] ஆம், சரி, சகோதரியே. [“நான் தேவனுடைய நித்திய நோக்கம் மனிதனுடைய சுயாதீன சித்தத்தை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருட்படுத்திக் கூறினேன், அதை அவ்வாறு கூறவில்லை என்று நான் நினைக்கிறேன்.’”] 100 அது உண்மை. ஓ, பரவாயில்லை, அப்படியானால் நான்—நான் அதைத் தவறாக வாசித்திருக்கிறேன், பாருங்கள். சரி. ஆம், சகோதரியே, அப்படி ஆனால் நீங்கள் கூறினது முற்றிலும் சரியே. அதுவே உங்களுடைய-உங்களுடைய கேள்வியாயிருந்தது என்று எனக்குத் தெரியாமற் போய் விட்டது. சரி. ஆனால், பாருங்கள், நான் இதை எங்கே பெற்றுக் கொண்டேன், பாருங்கள்,…இப்பொழுது நான் பார்க்கட்டும், அதாவது, “ஆதாமினுடைய இனம் முழுவதும் பாதுகாப்பாய் மூடப்பட்டிருக்க, சிலர் தங்களுடைய—தங்களுடைய ஒதுக்கீட்டைப் பெறாததால் இழக்கப்பட்டிருப்பது, நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைக் காட்டிலும் மனிதனுடைய சுயாதீன சித்தம் ஒரு வலிமையான ஆற்றல் வாய்ந்ததாயிருக்குமா-?” பாருங்கள், அங்கே நான்—நான் உங்களுடைய கருத்தினை தவறாக புரிந்து கொண்டுவிட்டேன். ஆம், சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய நோக்கம். நல்லது, அதுவே இதற்கு தீர்வாகிறது. 101 எல்லோருமே அதைப் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் புரிந்து கொண்டால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய நோக்கமோ நிச்சயமாகவே மனிதன் செய்ய முடிந்த எல்லாவற்றிற்கும் மேலானதாயிருக்கும். இப்பொழுது: கேள்வி:56. மத்தேயு 28-ம் அதிகாரம், 19-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் ஞானஸ்நானத்தின் பேரிலான பொருள் எனக்குப் புரியவில்லை, இது என்னப் பொருட்படுத்துகிறது-? 102 நல்லது, இப்பொழுது, இதற்கு எனக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாமலிருக்கலாம். நீங்கள் விரும்பினால், நாம் அதைப் பார்க்கும்படி யாராவது என்னோடு மத்தேயு 28-ம் அதிகாரம், 19-ம் வசனத்திற்கு திருப்புங்கள். நாம் பார்ப்போம், அந்த நபர் என்ன… 25… இப்பொழுது, நீங்கள் தரித்திருப்பீர்களானால், இது உங்களை பலமுள்ளதாக்கும். இது—இது நன்மையானது, நீங்கள் பாருங்கள். இது சுவிசேஷமல்ல, ஆனால் இது… 103 இப்பொழுது நாம்…இப்பொழுது, “வேதாகமத்தில் ஒரு முரண்பாடு உண்டு” என்று இங்கே இதைக் கூற ஜனங்கள் முயற்சிக்கின்றனர். இப்பொழுது, நான் மத்தேயு 28:19…ஐ யாராவது திருப்பி எடுக்க விரும்புகிறேன், இல்லையென்றால், இல்லை, நான் யாராவது…மத்தேயு 28:19—ஐ எடுக்க விரும்புகிறேன். யாராவது அப்போஸ்தலர் 2:38-க்கு திருப்ப விரும்புகிறேன். சகோதரன் நெவில், நீங்கள் உங்கள் வேதாகமத்தை அங்கே வைத்துள்ளீர்களா-? 104 நான் இப்பொழுது உங்களுக்காக நீங்களே வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “நான் வேதத்தில் ஒரு கண்டிப்பான முரண்பாட்டை உங்களுக்குக் காண்பிப்பேன், என்னவென்றால் வேதம்…ஜனங்கள், ‘வேதம் தாமே முரண்படுகிறதில்லை’ என்று கூறுகிறபடியால், நீங்கள் இதை ஆராய்ந்து பார்க்கும்படிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” 105 இது வேதாகம ஆசிரியர்களை மகிழ்ச்சியற்றதாக்குகிறது. ஆனால் இதுவோ—இதுவோ எளிமையானதாயுள்ளது. இப்பொழுது நான் மத்தேயு 28:19—ஐ வாசிக்கவுள்ளேன், நான் படிப்பதை நீங்கள் கவனியுங்கள். உங்களில் சிலர் அப்போஸ்தலர் 2:38—ஐ எடுத்து ஆயத்தமாக வைத்திருங்கள். நான் 18-வது வசனத்திலிருந்து துவங்கிப் படிப்பேன், இது மத்தேயுவின் முடிவான அதிகாரமாயுள்ளது. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (பிதாவின் அதிகாரம் எங்கே-?) 106 வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததானால், அப்பொழுது தேவன் அதிகாரமற்றவராய் இருந்தாரல்லவா-? அல்லது அவர் வெறுமென ஒரு கதையைக் கூறினாரா-? அவர் கேலி செய்து கொண்டிருந்தாரா-? அவர் அதைக் கருத்தாய் கூறினார். அவர் அதைக் கருத்தாய் கூறினார். அவர் அதை பொருள்படக் கூறினார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டு இருக்குமேயானால், அப்பொழுது தேவனுடைய அதிகாரம் எங்கே-? அவர் தேவனாயிருந்தாரே-! அது சரியானதாயுள்ளது. அங்கே அதற்கு ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு. அதுவே அங்கிருந்த எல்லாமாயிருந்தது. பாருங்கள், அவர் தேவனாய் இருந்தார்; இல்லையென்றால் அங்கு வேறு ஏதோ அதிகாரத்தைக் கொண்ட வேறு யாராவது இருக்க வேண்டும், அல்லது வேறு அதிகாரமே இல்லாதிருக்க வேண்டும். புரிகிறதா-? ஆகையால் உங்களால்—உங்களால் அதைக் குழப்ப முடியாது. நாம் இங்கே இந்த காரியத்தின் பேரில் உள்ளதை சரியாக புரிந்து கொள்வோம். சரி. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்… வானத்திலும் பூமியிலும்… கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞான ஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். 107 இப்பொழுது யாராவது ஒருவர் அப்போஸ்தலர் 2:38-ஐ வாசியுங்கள். அப்படியே ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். அப்போஸ்தலர், 2-ம் அதிகாரம், 38-ம் வசனம். இப்பொழுது, இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், அப்படியே பொறுமையாயிருங்கள், நாம் இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது, இயேசு அவர்களிடம் இப்பொழுது, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,” என்று மத்தேயு 28:19-ல் கூறின பத்து நாட்களுக்குப் பின்னர் இது கூறப்பட்டது. 108 இப்பொழுது, பேதுரு, பத்து நாட்கள் கழித்து…அவர்கள் மற்றொரு பிரசங்கத்தை ஒரு போதும் பிரசங்கிக்கவேயில்லை. அவர்கள் எருசலேமின் மேலறைக்குச் சென்று அங்கே (பத்து நாட்களாக) பரிசுத்த ஆவியானவர் வருவதற்காகக் காத்திருந்தனர். எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்-? இந்த இடத்தில். இங்கே பேதுரு இருக்கிறான், பேதுரு ராஜ்யத்தின் திறவு கோல்களை உடையவனாயிருக்கிறான். சரி, அவன் என்ன செய்கிறான் என்று நாம் பார்ப்போம். மத்தேயு… இல்லை நான் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தையே பொருட்படுத்திக் கூறுகிறேன், நாம் 36-வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்: ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். “ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததில் வியப்பொன்றும் இல்லையே. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 109 “இப்பொழுது, ஒரு முரண்பாடு உண்டு. மத்தேயு, ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,’ என்று கூறினான், பேதுருவோ அப்போஸ்தலர் 2:38-ம் வசனத்தில், பத்து நாட்கள் கழித்து, ‘நீங்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’” என்று கூறினான். 110 அதன்பின்னர் அதற்கு அடுத்த முறை மனந்திரும்புதலைப் பற்றிக் கூறப்பட்டபோது—கூறப்பட்டபோது…இல்லை வேதத்தில் ஞானஸ்நானத்தைப் பற்றிக் கூறப்பட்டபோது, அது அப்போஸ்தலர் 8-வது அதிகாரத்தில், பிலிப்பு சமாரியர்களுக்குச்…சென்று பிரசங்கித்தான். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர், அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். 111 அதற்கு அடுத்த முறை அப்போஸ்தலர் 10:49-ல் புறஜாதிகள் அதைப் பெற்றுக் கொண்டதைப் பற்றிக் கூறப்பட்டது. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், கேட்கும்போது…அப்பொழுது பேதுரு: ஆரம்பத்திலே நாம் பெற்றுக் கொண்டபோலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். 112 இப்பொழுது நான் இங்கு வைத்துள்ளதை ஒரு சிறு காரியத்தை எடுத்துக் கூறி, நீங்கள் அதை மறந்து போகாதபடிக்கு ஒரு சிறு விளக்கப் பாடத்தை உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் கூறப் போவதென்ன என்றால்… உலகில் எத்தனை வகையான பிரிவு ஜனங்கள் இருக்கின்றனர்-? மூன்று வகையினர் உள்ளனர். காம், சேம், யாபேத்தினுடைய ஜனங்கள். எத்தனை பேர் அதை அறிவீர்கள்-? அந்த நோவாவின் மூன்று குமாரர்களிலிருந்தே நாம் வந்துள்ளோம். காமினுடைய ஜனங்கள், சேமினுடைய ஜனங்கள்… யாப்பேத்தினுடைய ஜனங்கள் ஆங்கில இன மரபினராயிருக்கின்றனர், சேமினுடைய ஜனங்கள்…மூன்று வம்சத்தினர், அதாவது: யூதர், புறஜாதியார், பாதி யூதர் பாதி புறஜாதியார். இப்பொழுது, கவனியுங்கள், அங்கே அந்த…இது காம்…சேம், காம் மற்றும் யாப்பேத். 113 இப்பொழுது, முதல் முறையாக ஞானஸ்நானமானது யோவான் ஸ்நானகனால் உரைக்கப்பட்டது…உரைக்கப்பட்டது. அது உண்மையென்பதை எத்தனை பேர் அறிவீர்கள்-? சரி. நான் அதை இங்கே யோவான் ஸ்நானகன் மீது சுட்டிக்காட்டப் போகிறேன். யோவான் யோர்தானின் நதியிலே ஜனங்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்றும், தேவனோடு சரிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்களுடைய பொருட்களை விற்று, ஏழைகளைப் போஷிக்க வேண்டும் என்றும், போர் சேவகர் தங்களுடைய சம்பளே போதுமென்றும், தேவனோடு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான். எத்தனைபேர் அதை அறிவீர்கள்-? அவன் யோர்தானின் நதியிலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான், அவர்களுக்குத் தெளிக்கவில்லை, அவர்கள் மேல் ஊற்றவில்லை, ஆனால் அவர்களை தண்ணீரில் மூழ்க்கினான். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், இங்கே மூல கிரேக்க வேதாகம அகராதியில், அது பாப்டிஸ்ஸோ என்ற வார்த்தையாயுள்ளதா என்று கண்டறியுங்கள், அது, “ஞானஸ்நானம்பண்ணப்படுதல், தண்ணீரில் மூழ்க்குதல், கீழே வைத்தல், அடக்கம்பண்ணப்படுதல்” என்பதாகும். இப்பொழுது, முதன்முறையாக அங்கு உரைக்கப்பட்ட ஞானஸ்நானம் அங்கே இருந்தது. 114 இரண்டாம் முறை ஞானஸ்நானம் உரைக்கப்பட்டிருந்ததோ, இயேசுவானவர் மத்தேயு 28:19-ல் அதை கட்டளையிட்டிருந்தார். 115 அதற்கு அடுத்த முறை ஞானஸ்நானம் உரைக்கப்பட்டிருந்ததோ அப்போஸ்தலர் 2:38-ல் இருந்தது. 116 அதற்கு அடுத்த முறை உரைக்கப்பட்ட ஞானஸ்நானம் அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் இருந்தது. 117 அதற்கு அடுத்த முறை உரைக்கப்பட்டிருந்த ஞானஸ்நானம் அப்போஸ்தலர் 10-ம் அதிகாரத்தில் இருந்தது. 118 இங்கே இயேசுவானவர், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து” என்று கூறின அந்த நேரத்தில் இருந்து நாம் வருகிறோம். 119 இப்பொழுது நாம் முதலாவதாக இந்த வேதவாக்கியத்தை சரியாக புரிந்து கொள்வோம். அதாவது, “வேதத்தில் எந்த ஒரு வேதவாக்கியமும் மற்றொன்றிற்கு முரண்பாடாயிருக்காது” என்று நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். அப்படியிருந்தால் நீங்கள் அதை என்னிடத்தில் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை 26 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன், நான் இது வரையிலும் அதைக் கண்டதேயில்லை. முரண்பாடான வேதவாக்கியமே கிடையாது. அது அவ்வாறு முரண்படுமே ஆனால், அப்பொழுது அது ஒரு மனிதனால் எழுதப்பட்ட காரியமாய் இருக்கிறது. இல்லை ஐயா, வேதாகமத்தில் எந்த முரண்பாடுமே கிடையாதே-! 120 இப்பொழுது இதை நீங்கள், “அதைக் குறித்து என்ன-?” என்று கேட்டீர்கள். 121 இங்கே இயேசுவானவர் நின்று, “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,” என்று கூறுகிறார். 122 பேதுருவோ திரும்பி நின்று அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். 123 “அங்குதான் உங்களுடைய முரண்பாடு உள்ளது.” அதைப் போல் காணப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் ஒரு மாம்ச சிந்தையோடு அதை வாசித்துக் கொண்டிருப்பீர்களேயானால், ஒரு திறந்த இருதயத்தோடு வாசிக்காமலிருந்தால், அது ஒரு முரண்பாடாயிருக்கும். 124 ஆனால் நீங்கள் அதை திறந்த மனதோடு வாசிப்பீர்களேயானால், நலமாயிருக்கும், அதாவது, “பரிசுத்த ஆவியானவர் இதை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு அதை வெளிப்படுத்தினபடியால் தேவனே அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்று இயேசுவானவர் அவ்வண்ணமாகக் கூறினார். நீங்கள் இதை சிந்தையிலே வைத்துக் கொண்டு, ஒரு சுயநல சிந்தையின்றி, ஆனால் கற்றுக் கொள்ளும்படியான ஒரு மனப்பூர்வமான இருதயத்தோடு வாசிப்பீர்களேயானால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்தக் காரியங்களை உங்களுக்குப் போதிப்பார். 125 இப்பொழுது இதை ஒப்பிடவில்லையென்றால்…நீங்கள், “நீங்கள் கூறுவது சரியென்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்-?” என்று கேட்டீர்கள். நல்லது, அது மற்ற வேதவாக்கியங்களோடு ஒப்பிடப்படுகிறது. நீங்கள் ஒப்பிடவில்லையென்றால், நீங்கள் இங்கே ஒரு மிகப்பெரிய முரண்பாட்டைப் பெற்றுக் கொள்வீர்கள். 126 இப்பொழுது நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இது மத்தேயுவின் கடைசி அதிகாரமாய் உள்ளது. நான் இதை ஒரு எளிய முறையில் எடுத்து, நீங்கள் ஒவ்வொருவரும்…சிறு பிள்ளைகளும் இதைப் புரிந்துகொள்ளும்படி கூறவுள்ளேன். 127 உதாரணமாக, நீங்கள் ஒரு காதல் கதையை வாசித்தால், அதன் பின்பகுதியில், “மேரியும், ஜானும் அதற்குப்பின் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்தனர்” என்று கூறப்பட்டிருந்தால், அப்பொழுது நீங்கள் அதற்குப்பின் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்த அந்த ஜான் யார், மேரி யார் என்று நீங்கள் வியப்புறுவீர்கள். இப்பொழுது, ஜான் யார், மேரி யார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நீங்கள் புத்தகத்தின் முதலாம் பாகத்திற்குத் திரும்பிச் சென்று, ஜான் யார் என்றும், மேரி யார் என்றும் கண்டறிந்து கொள்வது மேலானதாயிருக்கும். அதன்பின்னர் இங்கு திரும்பி வந்து, மேரி யாராயிருந்தாள் என்றும், அவள் எந்த குடும்பத்திலிருந்து வந்தாள் என்றும், ஜான் யாராயிருந்தார் என்றும், அவர் எந்த குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், அவருடைய பெயர் என்னவாயிருந்ததென்றும், அவர்கள் எப்படி திருமணம் செய்து கொண்டனர் என்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும் கண்டறிந்துகொள்கிறீர்கள். அது சரிதானே-? 128 நல்லது, அது வேதாகமத்தை இங்கு வாசிக்கும்போதும் அதேக் காரியமாகவே உள்ளது…பாருங்கள், இயேசு, “நீங்கள் போய் ஜனங்களுக்கு பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானங் கொடுங்கள்” என்று ஒருபோதும் கூறவேயில்லை, அதாவது திரித்துவ ஜனங்கள் ஞானஸ்நானங் கொடுக்கிற விதமாக கொடுக்கும்படிக் கூறவேயில்லை. வேதத்தில் அதற்கான வேதவாக்கியமேக் கிடையாது. அவர் ஒருபோதும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமங்களில் (நா—ம—ங்—க—ளி—ல்), நாமங்களில்” என்று கூறவேயில்லை. 129 அவர், “(நா—ம—த்—தி—லே)” என்றார், ஒருமை அங்கே உங்களுடைய வேதாகமத்தைப் பார்த்து, அது சரியா என்று கண்டறியுங்கள், மத்தேயு 28, “நாமத்திலே.” 130 “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில்…” என்றல்ல. அது திரித்துவப் பிரசங்கியார் ஞானஸ்நானங்கொடுக்கிற விதமாயுள்ளது. “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில்.” அது வேதாகமத்தில் கூட இல்லை. 131 “ஆகையால் நாமத்தில்…” நீங்கள், “அப்படியானால், ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்’” என்று கூறினீர்கள். அப்பொழுது அங்கே ஒரு குறிப்பிட்ட பெயர் உண்டு. 132 நல்லது, பிதா என்பது ஒரு பெயரா-? பிதா என்பது ஒரு நாமமல்ல என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்-? பிதா என்பது ஒரு பட்டப் பெயர். குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல. குமாரன் என்பது ஒரு நாமமல்ல என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்-? எத்தனை பிதாக்கள் இங்கே இருக்கிறீர்கள்-? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். எத்தனை குமாரர்கள் இங்கே இருக்கிறீர்கள்-? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். உங்களில் யாராவது ஒருவர் “குமாரன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறீர்களா-? உங்களில் யாராவது ஒருவர் “பிதா” என்று பெயரிடப்பட்டிருக்கிறீர்களா-? சரி, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயரல்ல. பரிசுத்த ஆவி என்பது அது என்னவாயுள்ளது என்பதாகும். எத்தனை மானிடர்கள் இங்கே இருக்கிறீர்கள்-? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். புரிகிறதா-? அங்குதான் காரியம், பரிசுத்த ஆவி அது என்னவாயுள்ளது என்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவைகளில் ஒன்றும் நாமங்களே அல்ல; அது நாமமே அல்ல. 133 சரி, அப்படியானால், அவர், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானங்கொடுத்து” என்று கூறியிருந்தால், அப்பொழுது நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யார் என்று நாம் திரும்பிச் சென்று கண்டறிவது மேலானதாகும். அப்படியானால் நாம் மத்தேயு முதலாம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று, இந்த நபர் யாராயிருந்தார் என்றும், எந்த நாமத்தில் நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்றும் பார்ப்போம். நாம் இப்பொழுது மத்தேயு 1-ம் அதிகாரம், 18-வது வசனத்தோடு துவங்குவோம். நீங்கள் எல்லோருமே கூர்ந்து வாசியுங்கள். 134 இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்ட உங்களுக்கு நான் ஒரு சிறு விளக்கத்தை இங்கே அளிக்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கே தெளிவாக புரிந்து கொள்ளும்படி நான் இங்கே மூன்று காரியங்களை வைக்கப் போகிறேன், (விளக்கமளிக்க) விளக்கமளிக்கும்படியாக இந்த வேதாகமங்களையும் புத்தகங்களையும் வைத்துக் கூறப் போகிறேன். 135 சரி, நீங்கள் என்னை கூர்ந்து கவனிக்க் வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்பொழுது ஒவ்வொருவரும் என்னைக் கவனியுங்கள். இப்பொழுது இங்கே உள்ள இது பிதாவாகிய தேவன். இங்கே உள்ள இது குமாரனாகிய தேவன். இங்கே உள்ள இதுவோ பரிசுத்த ஆவியாகிய தேவன். இப்பொழுது எத்தனைபேர் புரிந்து கொள்ளுகிறீர்கள்-? நீங்கள் இதை எனக்குப் பின்னேக் கூறுங்கள். இங்கே கீழே உள்ள இது யார்-? [சபையோர், “பரிசுத்த ஆவி” என்கின்றனர்—ஆசி.] பரிசுத்த ஆவி. இங்குள்ள இது யார்-? [சபையோர், “பிதா” என்கின்றனர்—ஆசி.] இங்குள்ள இது யார்-? [சபையோர், “குமாரன்” என்கின்றனர்—ஆசி.] இப்பொழுது, அந்தவிதமாகத்தான் திரித்துவக்காரர்கள் அதை விசுவாசிக்கிறார்கள், பாருங்கள், அது நம்மை அப்படியே அப்பட்டமான அஞ்ஞானிகளாக்குகிறது. 136 யூதர்; அந்தக் காரணத்தினால்தான் உங்களால் ஒரு யூதனோடு எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவர், “நீங்கள் தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை ஒரு யூதனிடத்தில் கொடுக்க முடியாது” என்றார். ஆனால், நிச்சயமாக முடியாது, நீங்கள் என்னிடத்திலும் கொடுக்க முடியாது. புரிகிறதா-? இல்லை, ஐயா. அவர் ஒரே தேவன். அதுதான். சரியானது. மூன்று தேவர்கள் அல்ல. அது எவ்வளவு—எவ்வளவு—எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதை இப்பொழுது கவனியுங்கள். 137 இப்பொழுது நாம் கண்டறியப் போகிறோம். இப்பொழுது, யார்…இது யார்-? இப்பொழுது யாராவது கூறுங்கள். தேவ குமாரன். அது சரியா-? இது குமாரன் நல்லது, அப்படியானால் அவருடைய பிதா தேவன். சரிதானே-? அவருடைய பிதா தேவன் என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்-? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இயேசு கிறிஸ்துவினுடைய பிதா தேவன் என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்-? சரி. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது… 138 இப்பொழுது நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார் என்பதை திரும்பிச் சென்று கண்டறியப் போகிறோம், அந்த மத்தேயு, “நாமத்தில் ஞானஸ்நானங் கொடுத்து” என்றார். பாருங்கள், நாமம்; இப்பொழுது நாமங்களில் அல்ல, ஏனென்றால் அவைகள் நாமங்களாயிருக்க முடியாது, ஏனென்றால் அங்கே நாமமே இல்லை. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (வேதம் அவ்வாறு கூறுகிறதா-? வேதம் என்னக் கூறுகிறது-?)…அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 139 அப்படியானால் இவைகளில் எந்த ஒன்று அவருடைய பிதா-? இப்பொழுது, இது அவருடைய பிதா என்று வேதம் கூறியுள்ளது, இயேசு இது அவருடைய பிதாவாயிருந்தது என்று கூறினார். இப்பொழுது எந்த ஒன்று அவருடைய பிதாவாய் உள்ளது-? இப்பொழுது, அவருக்கு இரண்டு பிதாக்களிருந்திருந்தால், இப்பொழுது, அதைக் குறித்து என்ன-? அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்தால், அப்பொழுது அவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாயிருக்கிறார். 140 இப்பொழுது நாம் இன்னும் சற்று மேற்கொண்டு வாசிப்போம்: அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது…உண்டானது. [சபையோர், “பரிசுத்த ஆவியினால்” என்கிறார்கள்—ஆசி.] 141 என்ன-? பரிசுத்த ஆவியானாலா-? எப்படி பிதாவானவர் அவருடைய பிதாவாயும், பரிசுத்த ஆவியானவரும் அவருடைய பிதாவாக ஒரே நேரத்தில் இருக்க முடியும்-? இப்பொழுது, அது சரியானால், அப்பொழுது அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்திருப்பார். இல்லை ஐயா-! பரிசுத்த ஆவியே தேவனாயிருக்கிறார். பரிசுத்த ஆவி தேவனாயிருக்கிறார். ஆகையால் தேவனும், பரிசுத்த ஆவியும் ஒரே நபராயிருக்கின்றனர், இல்லையென்றால் அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்தார் என்பதாகும். 142 பாருங்கள், நாம் சற்று கழிந்து ஜானும், மேரியும் யார் என்று கண்டறிவோம். சரி, பேதுருவும், மத்தேயும் ஒருவருக்கொருவர் முரண்பட முயற்ச்சித்துக் கொண்டிருந்தார்களா அல்லது இல்லையா என்று நாம் கண்டறிந்து, வேதம் தனக்குத்தானே முரண்படுகிறதா என்று பார்ப்போம். அவ்வாறானால் அது ஆவிக்குரிய பிரகாரமான ஒரு குறைவான புரிந்து கொள்ளதலாயுள்ளது. அது உண்மை. அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்… 143 நான் அந்த ஒன்றை, 20-வது வசனத்தைப் படிக்க வேண்டும். இப்பொழுது 21-ம் வசனம்: அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,…(இந்த நபர், இது யாராயிருந்தது-? ஒரே நபர், தேவன்)…அவருக்கு பேரிடுவாயாக…(என்னவென்று-?) [சபையோர், “இயேசு” என்று பதிலளிக்கின்றனர்—ஆசி.] ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னன். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். 144 எனவே அதற்கு பின் எப்போதும் சந்தோஷமாய் வாழ்ந்த ஜானும், மேரியும் யாராயிருந்தார்-? அதாவது, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்க் கொடுத்து” என்று கூறினவர் யார்-? பிதாவாயிருந்தவர் யார்-? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமா-? [யாரோ ஒருவர், “இயேசு” என்று கூறுகிறார்—ஆசி.] நிச்சயமாகவே, அது இயேசுவாயிருந்தது. நிச்சயமாகவே, அதற்கு எந்த முரண்பாடுமே கிடையாது. ஒரு சிறு முரண்பாடுமில்லை. அது அப்படியே வேதவாக்கியத்தை சரியாக புரிந்துகொள்ளச் செய்கிறது. அவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாயிருந்தார். தேவன் நம்மோடு (இம்மானுவேல்) வாசம் செய்து கொண்டிருந்தார், “இயேசு” என்று அழைக்கப்பட்ட ஒரு சரீரத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். 145 இப்பொழுது, ஒருத்துவ சபையின் ஒருத்துவப் போதனையை, நான் நிச்சயமாகவே அதனோடு கருத்து வேறுபாடு கொள்கிறேன். உங்களுடைய விரல் ஒன்று என்பதுபோல, இயேசுவும் ஒருவராயிருக்கிறார் என்று கருதுகிறார்கள். அவர் ஒரு பிதாவை உரையவராயிருந்திருக்க வேண்டியதாயிருந்தது. அவர் பிதாவை உடையவராயில்லாதிருந்திருந்தால், அவர் எப்படி தம்முடைய சொந்த பிதாவை உடையவராயிருக்க இருக்க முடியும்-? அவருடைய பிதா திரித்துவக்காரர் கூறுகிறதுபோல ஒரு மனிதனாயிருந்தால், அப்பொழுது அவர் இரண்டு தகப்பன்மார்களினால் முறைதவறிப் பிறந்த ஒரு குழந்தையாயிருப்பார். ஆகையால் நீங்கள் பாருங்கள், நீங்கள் இருவருமே வாதத்தினால் தவறாயிருக்கிறீர்கள். புரிகிறதா-? 146 ஆனால் அதைக் குறித்த சத்தியம், அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி ஒருவரின் தனித்தன்மையாயிருக்கிறது. [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.]…உலகத்தின் பாவத்தை எடுத்துப் போட, ஒரு மாம்ச கூடாரத்தில் வாசம் செய்த…அது முற்றிலும் உண்மை, “தேவன் நம்மோடு இருந்தார்.” இப்பொழுது, ஆகையால், மத்தேயு 28:19… 147 இப்பொழுது, நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்து, வேதாகமத்தில் எங்காவது ஒரு நபரை நீங்கள் கண்டறிய முடிந்து…(இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், இப்பொழுது இது உங்களை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம்)…வேதாகமத்தில் எங்காவது ஒரு நபர் எப்போதவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்று திரும்பி வந்து என்னிடத்தில் கூறி, நான் ஒரு மாய்மலக்காரன் என்று என்னிடம் கூறினால், அப்பொழுது நான் அதை ஒரு அடையாளப் பலகையாக எழுதி என்னுடைய முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு பட்டிணம் முழுவதும் நடந்து செல்வேன். அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலுள்ள ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம்பண்ணப்பட்டனர். 148 நீங்களோ, “பிரசங்கியாரே, ஒரு நிமிடம் பொறும். யோவானைக் குறித்தென்ன-? அவன் எந்த நாமத்திலும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை-!” எனலாம். 149 சரி, என்ன சம்பவித்தது என்பதை நாம் கண்டறிவோம்; அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோமாக. அங்குதான் நாம் யோவானின் சீஷர்களைக் கண்டறிகிறோம். நாம் இங்கே இந்தக் குழுவை கண்டறியும் வரை ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அப்போஸ்தலர் 19-ம் அதிகாரம். இப்பொழுது நாம் வாசிக்கத் துவங்குவோம். நாம் யோவானின் சீஷர்களைக் கண்டறிவோம்: அப்பொல்லோ என்பவன் (மனமாற்றமடைந்த ஒரு நியாயசாஸ்திரியாய் இருந்தான்) கொரிந்து பட்டிணத்தில் இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: (அவர்கள் இயேசுவை பின்பற்றினவர்களாயிருந்தனர்.) 150 அங்கே இதற்கு முந்தின அதிகாரத்தை நீங்கள் சற்று கவனித்து இருப்பீர்களேயானால், அவர்கள் சத்தமிட்டுக் கொண்டும், களிகூர்ந்து கொண்டு இருக்குமளவிற்கு அப்படிப்பட்ட ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருந்தனர். அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்-? ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு சிறைச் சாலையில் போடப்பட்டிருந்தனர். அது சரியா-? அவர்கள் இங்கு வந்து, ஆக்கிலாவையும், பிரிஸ்கில்லாவையும் கண்டனர். “இயேசுவே கிறிஸ்து” என்று வேதவாக்கியங்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருந்த அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாரால் அங்கே அவர்கள் ஒரு எழுப்புதலில் இருந்து கொண்டிருந்தனர். இப்பொழுது பவுல் அவனை கண்டறிகிறான்: …பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்… 151 இப்பொழுது, அருமையான பாப்டிஸ்டு நண்பனே உன்னைத் தான், “நீங்கள் விசுவாசிகளானபோது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா” என்று உங்களை நீங்களே கேட்டபோது, உங்களுடைய வேத சாஸ்திரத்தின் கீழிருந்து வரும் முட்டுகளை அது தட்டவில்லையென்றால், 152 ஆனால் பவுல் இந்த பாப்டிஸ்டுகளை, “நீங்கள் விசுவாசிக்களானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-?” என்று கேட்க விரும்பினான். இப்பொழுது அவர்கள் என்னக் கூறினர் என்பதைக் கவனியுங்கள்: அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால்…எந்த…(இப்பொழுது நீங்கள் கிரேக்க வேதாகம அகராதியில் இங்கே படித்துப் பார்க்க விரும்பினால், அதில், “அப்படியானால் நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்-?” என்று உள்ளதை உங்களுக்குக் காண்பிக்கும்)…அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள் முன்னர் இங்கே யோவான் கொடுத்ததைப் பெற்றுள்ளோம். யோவான் எங்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். 153 இப்பொழுது நான் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் அந்த ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் அதனால் திருப்தியடைவீர்களா-? நதியிலே இயேசுவோடு நடந்த அதே மனிதன், இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானங் கொடுத்த அதே மனிதன் இந்த ஜனங்களுக்கும் ஞானஸ்நானங் கொடுத்திருந்தார். அது ஒரு நல்ல அழகான ஞானஸ்நானமாயிருந்தது; தெளித்தல் அல்ல, ஊற்றுதல் அல்ல, ஆனால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட அதே இடத்திலே பண்டைய யோர்தானின் சேற்றிலே தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 154 பவுல், “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-?” என்று கேட்டான். அவர்கள்…அவன்… அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை…நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர். அப்பொழுது அவன், “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்-?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” என்றார்கள். அவனோ, “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்-?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யோவான் கொடுத்த ஞானஸ்நானம்” என்றார்கள். 155 இப்பொழுது பவுல் என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். இங்கே கவனியுங்கள்: அப்பொழுது அவன்…நீங்கள் எந்த ஞானஸ்நானம்… யோவான் கொடுத்த… அவர்கள்… அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 156 பாருங்கள், யோவான் மனந்திரும்புதலுக்கு மாத்திரமே ஞானஸ்நானங் கொடுத்தான், ஆனால் இது பாவமன்னிப்பிற்காக இயேசுவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானமாயுள்ளது. அப்பொழுது பாவநிவிர்த்தி செய்யப்படவில்லை, பாவங்கள் மன்னிக்கப்பட முடியவில்லை. இப்பொழுது…அது நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்ததைப் போல, வெறுமென ஒரு நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்தது, லூக்கா 16:16-ல், “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் வழங்கி வந்தது; அது முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள். கவனியுங்கள்… அப்பொழுது பவுல்…(இப்பொழுது கவனியுங்கள்)…நீங்கள்…பெற்றீர்களா… 157 5-வது—5-வது வசனம்: அதைக் கேட்டபோது அவர்கள்: இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே…( மீண்டும்)… ஞானஸ்நானம் பெற்றார்கள். 158 அது சரியா-? ஆகையால் இந்த ஜனங்கள், அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் ஜனங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். யூதர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். புற ஜாதிகள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தனர். வேதம் முழுவதிலுமே ஒவ்வொரு நபருமே இயேசுவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். 159 இப்பொழுது எவராவது வேறெந்த விதத்திலாவது எப்போதாவது ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒரு இடத்தை கண்டறியுங்கள் பார்க்கலாம். எனவே நான் இங்கு திரும்பிச் சென்று கத்தோலிக்க சபையானது எங்கே அதை ஒப்புக் கொள்கிறது என்றும், அதற்கு நீங்கள் தலைவணங்கும்படி எங்கே கூறினது என்றும் உங்களுக்குக் காண்பிப்பேன். அதாவது, கத்தோலிக்கர்கள், “சில பிராட்டெஸ்டெண்டுகளும் இரட்சிக்கப்பட்டு இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் ஞானஸ்நானம் போன்ற ஒரு சில கத்தோலிக்க உபதேசங்களை உடையவர்களாயிருக்கிறார்கள்: அதாவது பரிசுத்த கத்தோலிக்க சபைக்கு இயேசுவின் நாமத்திலிருந்து ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு’ அந்த முறைமையை மாற்ற உரிமை உள்ளது என்று பிராஸ்டெஸ்டெண்ட் சபையும் அதை ஒப்புக் கொள்கிறது” என்றும் கூறுகிறார்கள். இந்த சபையோ அதை ஒப்புக் கொள்கிறதில்லை, நான் வேதத்தோடு தரித்திருக்கிறேன். நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். 160 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாமே, ஜனங்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறும்படி நீர் கட்டளையிடுகிறீரா-?” என்று கேட்கலாம். முற்றிலுமாக-! பவுல் இங்கே கட்டளையிட்டான். 161 இப்பொழுது கவனியுங்கள், காலத்தியர் 1:8-ஐ நாம் எடுத்து, பவுல் என்னக் கூறினான் என்று கண்டறிவோமாக. …நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன். 162 அங்கு தான் காரியமே உள்ளது, “நாங்களாவது அல்லது தூதனாவது.” பவுல், அதே மனிதன், என் சகோதரனே, நீ பெற்றுள்ளதைக் காட்டிலும் மேலான ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்த ஜனங்களை மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டான், ஏனென்றால் யோவான் ஸ்நானகன் இயேசுவினுடைய சொந்த உறை முறையானாய் இருந்தான், இரண்டாம் உறவு முறையான்; தன்னுடைய சொந்த உறவு முறையானவருக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு, அப்படியே யோவானானின் சீஷர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். இயேசு, “அது கிரியை செய்யாததே-!” என்றார் இல்லை பவுல் அதைக் கூறி, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீண்டும் ஞானஸ்நானம் பெறும்படிக் கட்டளையிட்டான். அதற்கு முன்னர் அவர்கள் சத்தமிட்டுக் கொண்டும், தேவனை துதித்துக் கொண்டும், ஒரு பெரிய நேரத்தை உடையவர்களாய் இருந்து கொண்டு, ஒரு மகத்தான எழுப்புதலை உடையவர்களாய், வேதாகமத்தைக் கொண்டு (தங்களுடைய வேத சாஸ்திரத்தைக் கொண்டு) இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தனர். எத்தனை பேருக்கு அந்த வேதவாக்கியம் தெரியும்-? 18-ம் அதிகாரம். நிச்சயமாக அவ்வாறு உள்ளது. அங்குதான் காரியமே உள்ளது. எனவே அதற்கு எந்தக் கேள்வியுமே கிடையாது. 163 இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு சிறு முக்கிய செய்தியைக் கூறட்டும். இப்பொழுது, அவன் ஒருபோதும் கட்டளையை விட்டுச் செல்லவேயில்லை, ஆனால் லூக்காவில்… மத்தேயு 16-வது அதிகாரம். இயேசு, அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்போது, அவர், “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்-?” என்று கேட்கிறார். 164 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை எலியா என்றும், சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும், சிலர் உம்மை இது, அது என்றும் சொல்லுகிறார்கள்” என்றனர். 165 அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்-?” என்று கேட்டார். 166 பேதுரு பிரதியுத்தரமாக, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 167 கவனியுங்கள்-! “யோனாவின் குமாரனாகிய சீமோனே, (யோனாவின் குமாரன்) நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை.” ஆமென்-! 168 பாருங்கள், அது ஆவிக்குரிய வெளிப்பாடாய் வரவேண்டும். அவன் தவறாயிருந்தான் (காயீன், அதாவது அவன் தவறாயிருந்தான்) என்று மாம்சமும் இரத்தமும் ஒரு போதும் ஆபேலுக்குக் கூறவில்லை, அதாவது “காயீன் தவறாயிருந்தான்” என்று ஆபேலுக்கு ஒருபோதும் கூறவில்லை. ஆனால், “அது இரத்தமாயிருந்தது-!” என்பது ஆபேலுக்கு உண்டாயிருந்த ஒரு வெளிப்பாடாயிருந்தது. நாம் அந்த கேள்விக்கு இன்னும் ஒரு சில நிமிடங்களில் வரப் போகிறோம். அது இரத்தமாயிருந்தது, பழங்கள் அல்லது அதுவே நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து எடுத்துவிட்டது. “அது இரத்தமாயிருந்தது,” அது இரத்தமாயிருந்தது என்று ஆபேலுக்கு, ஆவிக்குரிய வெளிப்பாட்டினால்… தேவனால் வெளிப்படுத்தப்பட்டது. அவன், “விசுவாசத்தினாலே,” எபிரேயர் 11:1, “அவன் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான், அதை, தேவன் அவனுடைய பலியை ஏற்றுக் கொண்டார்,” என்று கூறுகிறது. அங்குதான் காரியம். பாருங்கள், அவன் விசுவாசத்தினாலே, வெளிப்பாட்டினாலே அதை செலுத்தினான். 169 இப்பொழுது கவனியுங்கள், “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” (சரியாக கர்த்தராகிய இயேசுவே) “பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் (இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு)… இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” அதைத்தான் அவர் கூறினார். ஆவிக்குரிய வெளி…“நீ பேதுருவாய் இருக்கிறாய், நான் உனக்கு ராஜ்யத்தின் திறவு கோல்களைத் தருவேன் என்று நான் கூறுகிறேன். என்னவெல்லாம்… ஏனென்றால் நீ இங்கேயும் பரலோகத்துக்கும் இடையே ஒரு ஆவிக்குரிய திறந்த வாய்க்காலை உடையவனாயிருக்கிறாய். மாம்சமும் இரத்தமும்; நீ ஒருபோதும் அதை ஒரு வேதாகம கருத்தரங்கிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, நீ அதை ஒரு பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, நீ அதை ஒருபோதும் ஒரு—ஒரு—ஒரு வேத சாஸ்திர பாடத்திலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நீ தேவன் பேரில் சார்ந்திருந்தாய், தேவன் அதை உனக்கு வெளிப்படுத்தினார், அது முற்றிலும் தெளிவாக வேதவாக்கியங்களை அதனோடு ஒன்றாக இணைக்கிறது. நீ பேதுருவாயிருக்கிறாய், அது உண்மை, நான் உனக்கு திறவு கோல்களைக் கொடுப்பேன்; நீ பூமியிலே கட்டவிழ்பது எதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன் என்று நான் கூறுகிறேன்.” 170 பெந்தேகோஸ்தே நாளிலே பேதுரு பிரதிநிதியாயிருந்து, அவர்கள் யாவரும் பேசப் பயப்பட்டபோது, அவன் எழுந்து நின்று, “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிக் கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே அக்கினி, புகைக்காடாகிய அடையாளங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே இது சம்பவிக்கும், அப்பொழுது கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” அங்குதான் காரியமே உள்ளது. ஓ, என்னே. 171 மேலும் அவன், “கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவர் தீர்க்கதரிசியாயிருந்து, அவன் கண்டு…அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார். ‘அதினால் என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்:’” 172 அவன், “தாவீது மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. ஆனால் அவர் தீர்க்கதரிசியாயிருந்து, நீதிபரருடைய வருடையை அவன் முன்னதாகவேக் கண்டான், அவரை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” ஓ, என்னே. அங்கேதான் உங்களுடைய வேதவாக்கியங்கள் இருக்கின்றன. அங்குதான் காரியமே உள்ளது. அதுதான் இது. 173 இப்பொழுது அதுவே சரியான வழியென்றும், உண்மையான வழியென்றும், அதுவே எப்போதும் நியமிக்கப்பட்டிருந்த ஒரே வழியாயிருந்தாதென்றும்…நாம் இங்கே கண்டறிகிறோம். பேதுரு திறவுகோல்களை உடையவனாயிருந்தான், அந்த நாளிலே அவன் பிரசங்கித்தபோது, அவர்கள் கூறினர்…இப்பொழுது கவனியுங்கள், இதோ உள்ளது முதல் சபை. கத்தோலிக்கர்களாகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். காம்பலைட் ஸ்தாபனத்தாராகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். பாப்டிஸ்டுகளாகிய நீங்களும், மெத்தோடிஸ்டுகளும் இதற்கு செவிகொடுங்கள். பெந்தேகோஸ்தேக்களாகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். சர்ச் ஆஃப் காட், நசரீன், யாத்திரீக பரிசுத்தரே இதற்கு செவி கொடுங்கள். 174 பேதுரு திறவுகோல்களை உடையவராயிருந்தார், அவர் அதிகாரத்தை உடையவராயிருந்தார், இல்லையென்றால் இயேசு பொய்யுரைத்தார். எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன், “இரண்டு மாறாத விசேஷங்களினால்; எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்.” அவன் திறவுகோல்களை உடையவனாயிருந்தான். இயேசு அவனுக்கு திறவு கோல்களைக் கொடுத்திருந்தார். அதேப் போன்று அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருந்தேரேயன்றி, ராஜ்யத்தின் திறவுகோல்களை உடையவராயிருக்கவில்லை. பேதுரு அவைகளை உடையவனாயிருந்தானே-! அது முற்றிலும் உண்மை. 175 இப்பொழுது கவனியுங்கள், பேதுரு, நீங்கள் வைத்திருந்த திறவுகோல்கள் உங்களுடைய பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்க, நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்கள். புதிய சபையின் முதல் மனமாற்றமடைந்தவர்களுக்கு கேள்வி உண்டாகிறது. ஆரம்பகால கிறிஸ்தவ சபை. இப்பொழுது கத்தோலிக்கரே, இப்பொழுது பாப்டிஸ்டுகளே, மெத்தோடிஸ்டு, பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் புதிய சபையின் உபதேசத்தில் இருக்கிறீர்களா-? நீங்கள் அதில் இருக்கிறீர்களா என்பதைக் கண்டறியுங்கள். சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு எழும்பி நின்று, நீங்கள் மனந்திரும்பி…ஒவ்வொருவரும்…(பையனே, கவனி; நீ இங்கே அந்த திறவுகோல்களை வைக்கும் விதமாகவே கிறிஸ்து அதை பரலோகத்தில் வைப்பார்)…நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்…(அந்த விதமாகத்தான் நீங்கள் இதற்குள் வருகிறீர்கள்)…அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 176 அந்த திறவுகோல்கள் “கிளிக்” என்ற ஒலியோடு இங்கே தாழ்பாளைத் திறந்தன, அது “கிளிக்” என்ற ஒலியோடு திறந்தன. அந்தக் காரணத்தினால்தான் யோவானுடைய சீஷர்கள் (அவர்கள் பரலோகத்திற்கு செல்வதற்கு முன்), பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வரவேண்டியதாயிருந்தது. அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொண்டார். ஆகையால் அது இப்பொழுது உங்களை குழப்புகிறதில்லை, இது குழப்புகிறதா-? புரிகிறதா-? நிச்சயமாகவே மத்தேயு 28:19 பட்டப் பெயர்களாயிருந்ததேயன்றி நாமமல்ல. 177 சரி, நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது-? நாம் உண்மையாக இன்னும் சில கேள்விகளுக்கு துரிதமாக பதிலளிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் நமக்கு இருக்குமா-? நமக்கு இருக்குமா-? சரி, நாம் உடனே துரிதமாகப் பார்ப்போம். நான் இங்கே கீழே இரண்டு கேள்விகள் வைத்துள்ளேன், என்னால் முடிந்தளவு இதனோடு இணைந்து துரிதமாக பதிலுரைக்க விரும்புகிறேன். அதன் பின்னர் மற்றவைகளுக்கு என்னால் ஞாயிறு காலை பதிலளிக்க முடியும். 57. காயீன் சர்ப்பத்தின் சந்ததியாயிருந்தானா-? (இது ஒரு நல்ல கேள்வி) அப்படியானால், ஆதாம் அவளை அறியும் வரை ஏவாள் ஏன் கருத்தரிக்கவில்லை-? அதே…அடுத்தக் கேள்வியும் அதே விதமாகவே உள்ளது. 58. ஏவாள் புசித்தது சரியாக ஒரு—ஒரு விருட்சத்திலிருந்த கனியா-? அது ஆகாரத்திற்கு நல்லதாயிருந்தது என்று அவள் கண்டாள். 178 சகோதரனே, சகோதரியே, இது யாராயிருந்தாலும் பரவாயில்லை, நாம் ஆதியாகமத்திற்கு திரும்பிச் சென்று இங்கு ஒரு காரியத்தைக் கண்டறிவோம். நீங்கள் விரும்பினால், நாம் ஆதியாகமம் 3:8—க்குச் செல்வோம். சரி, இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். 179 இப்பொழுது நான் அந்த சம்பவத்தை தெளிவுபடுத்தவுள்ளேன். முழுவதும் சுத்தமானதாயும், பரிசுத்தமானதாயுமிருந்தது, பாவமே இல்லாதிருந்தது இல்லை எந்தக் கறையுமில்லாதிருந்தது. இப்பொழுது நான்… உங்களுடைய…இந்த முதல் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். விருட்சத்தில் உள்ள ஜீவன்…தோட்டத்தின் மத்தியில், விருட்சத்தின் மையத்தில். விருட்சம் என்பது “ஸ்திரீயாயிருந்தது.” இப்பொழுது நீங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்கள் அப்படியே பொறுமையாயிருந்தால், நான் அதை உங்களுக்கு வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்கவுள்ளேன். 180 நாம் முதலில் அவள்…அவள் ஆதாமை அறியும் முன்னே அவள் கர்பந்தரித்தாளா அல்லது இல்லையா அல்லது அதற்கு முன்னரா என்று முதலில் பார்ப்போம்…கவனியுங்கள்: பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுதும் ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து…(இப்பொழுது, அதற்கு முந்தின நாள் அவன் அதை அறிந்திருக்கவில்லை; ஏதோக் காரியம் சம்பவித்திருந்தது, அவன் நிர்வாணமாக்கப்பட்டான் என்று ஏதோ ஒன்று அவனுக்கு வெளிப்படுத்தினது)…ஒளித்துக் கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்-?…விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். 181 அவன் புசித்த விருட்சத்தின் கனி அவன் நிர்வாணி என்பதை உணரச் செய்ததா-? நான் அவ்வப்போது கூறியுள்ளதுபோல, (இது கேலியல்ல, நான் ஒரு கேலிக்காக இதை பொருட்படுத்திக் கூறவில்லை) “ஆனால் ஆப்பிள்களைப் புசிப்பது ஸ்திரீகள் நிர்வாணமாயிருப்பதை அவர்களுக்கு உணர்த்துமானால், அப்பொழுது நாம் மீண்டும் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைத் தருவதே மேலானதாகும்.” புரிகிறதா-? அதனால் நிர்வாணமாக்கப்படவில்லை. அது ஒரு மரமாகவோ, அவர்கள் புசித்தது ஒரு ஆப்பிள் பழமாகவோ இருக்கவில்லை, அது பாலியலாய் இருந்தது. கவனியுங்கள். …புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். அப்பொழுது…கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்ச்சித்தது…(ஹூ-?)…சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன். (பாருங்கள், ஆதாமினால் அவள் கர்ப்பந்தரிப்பதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே) 182 ஆதாம் ஏவாளை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி ஆபேலைப் பெற்றாள்—பெற்றாள். 183 ஆனால் நான் ஒரு சரியான திசையிலிருந்து உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது அவள் விருட்சமாயிருந்தாள் என்றும், ஒவ்வொரு ஸ்திரீயும் ஒரு கனிவிருட்சமாயிருந்தாள் என்றும் நிரூபிப்பதற்காகவே இதைக் கேட்கிறேன். எத்தனைபேர் அதை அறிவீர்கள்-? நீங்கள் உங்களுடைய தாயாரினுடைய கனியாயிருக்கவில்லையா-? நிச்சயமாக. நீங்கள் அவ்வாறுதான் இருக்கிறீர்கள். “கனியின் மத்தியில் இல்லை விருட்சத்தின் மத்தியில் உள்ளது, அவள் தொடக் கூடாத கனி.” 184 நீங்கள் கவனிப்பீர்களேயானால், இயேசு ஜீவ விருட்சமாயிருந்தாரல்லவா-? 6-வது அதிகாரத்தில், “நானே வானத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து வந்த ஜீவ அப்பம்” என்று வாக்களிக்கவில்லையா-? 185 ஒரு மனிதன்…ஸ்திரியினுடைய…பாருங்கள், பிறப்பினூடாக, ஸ்திரியின் மூலமாக நாம் யாவரும் மரிக்கிறோம்; ஏனென்றால் நாம் ஒரு ஸ்திரீயினுடைய பிறப்பின் மூலமாக நாம் மரணத்திற்குட்பட்டிருக்கிறோம் (அது சரியா-?) மனிதனுடைய பிறப்பினூடாக நாம் யாவரும் என்றென்றுமாய் ஜீவிக்கிறோம். ஸ்திரீயானவன் ஒரு மரண விருட்சமாயிருக்கிறாள், மனிதன் ஒரு ஜீவ விருட்சமாயிருக்கிறான்; ஏனென்றால் ஸ்திரீயானவள் தனக்குள்ளாக ஜீவனைக் கூட உடையவளாயிருப்பதில்லை. அது முற்றிலும் உண்மையே. அந்த கரு உயிர்மத்தின் ஜீவன் மனிதனிலிருந்தே சரியாக உண்டாகிறது. அது ஸ்திரீக்குள்ளாகச் செல்கிறது, ஸ்திரீயானவள் ஒரு அடைகாகும் கருவியேயல்லாமல் வேறொன்றுமல்ல. குழந்தையானது தொப்புள் கொடியைத் தவிர வேறெதனோடும் தாயினிடம் தொடர்புடையதாயிருக்கவில்லை. அந்தத் தாயினுடைய ஒரு துளி ரத்தம் கூட குழந்தைக்குள்ளாக இல்லை; ஆனால் அவளுடைய இரத்ததில் பிறந்தாலும், குழந்தைக்குள் தாயினுடைய இரத்தம் ஒரு துளி கூட கிடையாது. போய் கண்டறியுங்கள்…அல்லது மருத்துவரின் புத்தகத்தில் வாசித்துப் பாருங்கள் அல்லது உங்களுடைய மருத்துவரைக் கேட்டுப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது அங்கில்லை, இல்லை ஐயா, தாயினுடைய இரத்தம் ஒரு துளிகூட கிடையவே கிடையாது. அவள் கருமுட்டையாயிருக்கிறாள், அவ்வளவுதான். ஜீவன் மனிதனிடத்திலிருந்தே உண்டாகிறது. 186 ஸ்திரீயினூடாக, இயற்கையான பிறப்பினூடாக அதை காண்பிப்பதற்கு அது ஒரு அழகான மாதிரியாயுள்ளது, நாம் யாவரும் மரிக்க வேண்டும், ஏனென்றால் நாம் துவக்கத்திலேயே மரித்தவர்களாயிருக்கிறோம். மனிதனாகிய கிறிஸ்து இயேசு மூலமாக மாத்திரமே நாம் ஜீவிக்க முடியும். ஏதேன் தோட்டத்தில் இரண்டு விருட்சங்கள் இருந்தன. உங்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லையா-? 187 கவனியுங்கள்-! அந்நாளிலே இந்த விருட்சத்தை காவல் புரிந்தது ஒரு கேரூபினாயிருந்தது. அதாவது அவர்கள் அந்த ஜீவ விருட்சத்தை எப்போதாவது ருசித்துவிட்டால், அப்பொழுது அவர்கள் என்றென்றும் உயிரோடிருப்பர். எத்தனை பேர் அதை அறிவீர்கள்-? அவர்கள் என்றென்றும் உயிரோடிருப்பர். முதல் முறை அவர்கள் அதை ருசிபார்க்க முடிந்தபோது…தூதன், “நாங்கள் அதைக் காவல்புரிவோம்” என்றான். அதற்கான வழியைக் காவல்செய்ய தோட்டத்திற்கு கிழக்கே கேரூபீங்களையும், வீசிக் கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். கேரூபிங்களை கிழக்கே காவல் செய்ய வைத்து, (இந்த விருட்சத்தண்டை) வர முடியாதபடிக்கு காவல்செய்ய வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். 188 இயேசு வந்தபோது, அவர், “நானே ஜீவ அப்பம், இந்த அப்பத்தை புசிக்கிறவன் ஒரு போதும் மரியான்” என்றார். அங்கேதான் உங்களுடைய விருட்சம் உள்ளது. 189 அதுதான் உங்களுடைய ஸ்திரீயின் நிலைமையாகும், உங்களுடைய பாலியல் சேர்க்கை மரணத்தையேக் கொண்டு வருகிறது. பாலியல் வாஞ்சை என்ற ஒன்று நிச்சயம் உண்டாயிருக்கிறபடியால், அதனால் விடப்பட்டுள்ளது மரணமே. ஆவிக்குரிய பிறப்பு என்ற ஒன்று நிச்சயம் உண்டாயிருப்பதால், அதனால் விடப்பட்டிருப்பதோ நித்திய ஜீவனாயிருக்கிறது. மரணம் ஒரு ஸ்திரீயின் பிறப்பினூடாக உண்டாகிறது, ஒரு மனிதனுடைய பிறப்பினூடாக ஜீவன் உண்டாகிறது. ஆமென்-! அங்குதான் காரியமே உள்ளது. 190 இப்பொழுது நாம் காயீனிடத்திற்கு திரும்பிச் செல்வோம். அந்த ஆவி, அந்த அற்பத்தனம் எங்கிருந்து உண்டானது என்று உங்களால் எனக்குக் கூற முடியுமா-? காயீன்…பாருங்கள், தேவ குமாரனாயிருந்த ஆதாமின் குமாரனாய் காயீன் இருந்திருந்தால், அந்தப் பொல்லாங்கு எங்கிருந்து வந்தது-? முதலாவது காரியமென்னவெனில் அவன் பிறந்தபோது, அவன் வெறுத்தான், அவன் ஒரு கொலைகாரனாயிருந்தான், அவன் பொறாமையுள்ளவனாய் இருந்தான். இப்பொழுது அவனுடைய தகப்பனின் சுபாவத்தை எடுத்துப் பாருங்கள், துவக்கத்திலேயே, அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி, அவன் துவக்கத்தில் இருந்து… அவன் மிகாவேலைக் குறித்து பொறாமை உள்ளவனாயிருந்தான், அங்குதான் முழு தொல்லையும் ஆரம்பமானது. எத்தனைபேர் அதை அறிவீர்கள்-? காயீன் தன் தகப்பனுடைய சுபாவத்தை உடையவனாயிருந்தான், எனவே அவன் தன் சகோதரனைக் குறித்து பொறாமையாயிருந்து, அவனைக் கொன்றான். அந்த சுத்தமான…அந்த சுத்தமான ஓடையிலிருந்து இந்த சுபாவம் உண்டாயிருந்திருக்க முடியாது. அது… இந்த தாறுமாறாக்கப்பட்ட ஓடையிலிருந்தே உண்டாக வேண்டியதாய் இருந்தது. காயீன் பிறந்தவுடனே, இப்பொழுது அவனைக் கவனியுங்கள். 191 அப்பொழுது காயீனுக்குப் பிறகு ஆபேல் பிறந்தான், அதன் பின்னரே அவள் ஆதாமினால் கர்ப்பந்தரித்தாள். அவன் அவளை அறிந்த போது-அறிந்த போது, அவள் ஆபேல் என்னும் குமாரனைப் பிறப்பித்தான். ஆபேல் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாய் இருந்தான்; ஆபேல் கொல்லப்பட்ட போது, சேத் அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான்; மரணம், அடக்கம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்ற மாதிரியில் உள்ளது. 192 ஆனால் இப்பொழுது, காயீன் ஆராதித்தான்; அவனுடைய எல்லா மாம்சபிரகாரமான கிரியைகளும் இன்றைக்கு உள்ள மாம்சபிரகாரமான சபையைப் போன்றே உள்ளன; அவர்கள் சபைக்குச் செல்கிறார்கள், அவர்கள் ஆராதிக்கிறார்கள். காயீன் ஆராதித்தான்; அவன் ஒரு நாத்திகனாய் இருக்கவில்லை, அவன் ஒரு கம்யூனிஸ்டாய் இருக்கவில்லை. காயீன் ஒரு விசுவாசியாய் இருந்தான்; அவன் தேவணடை சென்று, அவன் ஒரு பலி பீடத்தைக் கட்டினான். அவன் ஆபேல் செய்த எல்லா மார்க்க சம்மந்தமான காரியத்தையும் செய்தான், ஆனால் அவன் ஆவிக்குரிய வெளிப்பாடாகிய தேவனுடைய சித்தத்தைப் பெற்றிருக்கவில்லை. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக-! அங்கு தான் காரியமே உள்ளது. உங்களுக்கு இது புரிகிறதா-? அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருக்கவில்லை, இன்றைக்கு சபையோடும் உள்ள காரியமும் அதுதான். இயேசு தம்முடைய சபையை அந்த ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டுவதாகக் கூறினார். நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா-? ஓ, என்னே, இப்பொழுது உங்களுடைய கண்கள் திறக்கப்பட முடியும். பாருங்கள், ஆவிக்குரிய வெளிப்பாடு. 193 காயீன் வந்தான்; அவள் ஒரு பலிபீடத்தைக் கட்டினான், அவன் ஆராதித்தான், அவன் பலியைக் கொண்டுவந்தான், அவன் முழங்காற்படி இட்டான், அவன் தேவனைத் துதித்தான், அவன் தேவனை ஆராதித்தான், ஆபேல் செய்த பக்தியான ஒவ்வொரு காரியத்தையும் காயீன் செய்தான். ஆனால் அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டை பெற்றிராதபடியால், தேவன் அவனை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டாரே-! 194 அதே விதமாகவே காயின் வம்சத்தை பின் தொடர்ந்துப் பாருங்கள்: காயீனிலிருந்து பேழையண்டைக்கு, பேழையிலிருந்து இஸ்ரவேலருக்குள், இஸ்ரவேலரிலிருந்து இயேசுவானவர் வரை, இயேசுவிலிருந்து இந்நாள் வரையிலுமே தொடர்ந்து பாருங்கள்; அது மாம்சபிரகாரமான, அடிப்படையான சபையாய், வணங்காத, வெற்றாசாரமான, கல்வியியலைக் கொண்டதாய் இருக்கிறதா என்று பாருங்கள். ஆவிக்குரிய வெளிப்பாடில்லாமல், வேத வாக்கியங்களை அறிந்துள்ள மனிதனால், எல்லா உபதேசங்களையும், வேத சாஸ்திரங்களையும் அறிந்துள்ளவனால், அவர்களால் அதை அந்தவிதமாக விளக்கிக் கூற முடியும் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். [சகோ.பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார்—ஆசி.] அது உண்மை. அதுவே காயீனின் உபதேசமாய் உள்ளது. 195 வேதமோ, “அவர்களுக்கு ஐயோ-! ஏனென்றால் இவர்கள் காயீனுடைய உபதேசத்தில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்” என்று உரைத்துள்ளது. அதே யூதாவின் புத்தகத்தில், அவன், “அவர்கள் இந்த ஆக்கினைக்கென்று முன் குறிக்கப்பட்டிருந்தனர்” என்றான். நிச்சயமாகவே, அவர்கள் அதற்காகவே முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். புரிகிறதா-? பிலேயாம் என்னாவாயிருந்தான்-? அவன் ஒரு பேராயராயிருந்தான். அவன் எல்லா சபைக்கு மேலாக இருந்தான். அவன் தன்னால் முடிந்தளவு அடிப்படையான காரியத்தோடு அங்கே மேலேறி வந்தான். அவன்…செலுத்தினான்…அங்கே அவன் பிரபலமான முக்கியஸ்தரோடு மேலே நின்று கொண்டிருப்பதைப், தங்களுடைய மகத்தான பிரபலங்களோடு அங்கே மேலே நிற்பதைப் பாருங்கள். அவர்கள் நாத்திகர்களாயிருக்கவில்லை, அவர்கள் விசுவாசிகளாயிருந்தனர். 196 அந்த—அந்த மோவாபின் வம்சம் லோத்தினுடைய குமாரத்தியிலிருந்து தோன்றினது. லோத்து…ஜீவித்து…லோத்தினுடைய குமாரத்தி தன் தகப்பனோடு சயனித்து, கருவுற்று ஒரு பிள்ளை பெற்றெடுத்தாள், அந்தப் பிள்ளை…மோவாபின் கோத்திரமாக வளர்ந்தது. அவர்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருந்தனர். மகத்தானவர்களாயும், புகழ்ச்சி நயமிக்கவர்களாயும், அவர்கள் இளவரசர்களாயும், ராஜாக்களாயும், முக்கியஸ்தர்களாயுமிருந்தனர். அவர்கள் பேராயர்களையும், முக்கிய சபை சங்க மேலான தலைவர்களையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவர்களாயிருந்தனர். 197 இங்கே ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள், மற்றொரு குழுவினர், இஸ்ரவேலர் வருகின்றனர். ஒரு ஸ்தாபனமற்ற பண்டைய சிறு குழுவினராய், ஸ்தாபன பாகுபாடற்றவர்களாயிருந்தனர். அவர்கள் செய்யப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாண வரைப்படத்தில் இருந்த ஒவ்வொரு காரியத்தையும் மிகச் சரியாகச் செய்திருந்தனர். ஆனால் அது என்னவாயிருந்ததென்றால், அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர், தேவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் அவர்களோடிருந்தார். 198 ஓ, அவர்கள் மாம்சபிரகாரமான காரியங்களை உடையவர்களாய் இருந்தார்கள் என்பதை நான்—நான் அறிவேன், ஜனங்களோ, “அவர்கள் ஒன்றுக்கும் உதவாக் கூட்டம், அவர்களை உதைத்துத் தள்ளுவதைத் தவிர அவர்களோடு செய்வதற்கு ஒன்றுமேயில்லை” என்றனர். ஆனால் அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர், அவர்கள் அடிக்கப்பட்ட கன்மலையை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் ஒரு வெண்கல சர்ப்பத்தை உடையவர்களாயிருந்தனர், அவர்களோடு செல்லுகிற ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அல்லேலூயா-! நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நீங்கள்—நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் உணர்ச்சிவசப்படவில்லை. நான் நலமாக உணருகிறேன். 199 கவனியுங்கள்-! நான், “அந்த மாறாத அதே தேவன் இன்றைக்கு நம்மோடு ஜீவிக்கிறார்” என்று நினைக்கிறேன். அது இன்னமும் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. நிச்சயமாகவே அது ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. அது சரியாக நித்தியமானதாயுள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக-! ஆம் ஐயா. 200 இதோ அவன் அடிப்படையான காரியங்களோடு அங்கே நின்றான்: அவர்கள் பாப்டிஸ்டுகளின் கூட்டமாய், பிரஸ்பிடேரியங்களாய் அந்த மலையின்மேல் நின்றனர், அங்கே அவர்களுடைய பேராயரை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் ஒரே விதமான மார்க்க ரீதியான பக்தியாயிருந்தனர், அவர்களும் அதே தேவனையே தொழுது கொண்டனர். அவர்கள், “அங்கே உள்ள உதாவுக் குப்பைக் கூட்டத்தை கீழே நோக்கிப் பாருங்கள். ஏன்-? அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் கூட இருக்கவில்லை. அவர்கள் கத்துகிற, கூச்சலிடுகிற, பரிசுத்த உருளையர் கூட்டமேயல்லாமல் வேறொன்றுமில்லை.” என்றனர். 201 அது சரியா-? சரியாக அவர்கள் அவ்வாறேயிருந்தனர். அவர்கள் பரிசுத்த உருளையராயிருந்தனர் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் ஆதியாகமத்திற்குத் திரும்பி சென்று, அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது நடந்ததைக் கண்டறியுங்கள். ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட்டது, மீரியாம் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு, கரையிலே நின்று அதை அடித்து ஆவியில் நடனமாடினாள், மோசே ஆவியில் பாடினான். அது நாம் பரிசுத்த உருளை என்று அழைக்கப்படும் ஒரு கூட்டமாயிருக்கவில்லையென்றால்,…பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், துதித்துக்கொண்டுமிருந்து அந்தக் கூட்டம் வேறென்ன என்று எனக்குத் தெரியாது. எல்லா நேரத்திலுமே மற்ற தேசங்கள் அவர்களை வெறுத்தன, ஆனால் தேவன் அவர்களோடிருந்தார். அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாய் அந்த அக்கினி ஸ்தம்பத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். 202 மோவாப், “இப்பொழுது, இங்கே நோக்கிப் பாருங்கள். நாம் எல்லா முக்கிய உயர்பதவி சபைத் தலைவர்களையும், எல்லா பேராயர்களையும், எல்லா திருச்சபை மூப்பர்களையும் இங்கு அழைத்து வருவோம். நாம் இதைக் குறித்த ஏதோ ஒன்றை செய்வோம், ஏனென்றால் நாம் ஒரு பக்தியான தேசமாயிருக்கிறோம். எனவே நாம் அந்த பிரச்சாரம் நம்முடைய அருமையான ஸ்தாபனத்தில் கலந்துவிட அனுமதித்துவிடக் கூடாது” என்றனர். 203 ஆகையால் அவர்கள் இவர்களை அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் பன்னிரண்டு பலிப்பீடங்களைக் கட்டினர்: அந்தவிதமாக இஸ்ரவேலரும் பன்னிரண்டு பலிபீடங்களைக் கட்டியிருந்தனர். மோவாபியர் அந்த பலிபீடங்களின் மேல் பன்னிரண்டு காளைகளை பலியாகச் செலுத்தினர்; தேவன் கேட்டிருந்ததை இஸ்ரவேலர் சரியாக செய்திருந்தனர்; அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு பிரதிநித்துவமாக அதன்மேல் பன்னிரண்டு ஆட்டுக்காடாக்களைப் பலியிட்டனர்; இரண்டு இடங்களிலுமே பன்னிரண்டு ஆட்டுக்கடாக்களை பலியிட்டனர். 204 எல்லா முக்கியஸ்தர்களும், பேராயர்களும் மற்றும் உள்ள யாவரும் சுற்றி நின்றனர். அவர்கள் பலியைத் தகனித்தனர். அப்பொழுது அவர்கள் ஜெபித்தனர், அவர்கள் தங்களுடைய கரங்களை யோகோவாவினிடத்தில் உயர்த்தி, “யோகோவாவே, எங்களுக்குச் செவிகொடும்-!” என்றனர். அவர்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்-? அவர்களுடைய பிலேயாம் அந்தவிதமாக புறப்பட்டுச் சென்றபோது, ஆவியானவர் அவன் மீது வந்திறங்கினார். நிச்சயமாக (அவன் ஒரு மாம்சபிரகாரமானவனாயிருந்தான்) 205 ஆவியானது ஒரு மாய்மாலக்காரன் மீது விழக் கூடும் என்று வேதம் உரைத்துள்ளது. நான் அதைக் குறித்துப் போதித்ததை இப்பொழுது நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். “மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது.” ஆனால் அதை வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அங்கு தான் நீங்கள் அதைப் புரிந்துக் கொள்ள முடியும். 206 அப்பொழுது அவன் அதைச் செய்தபோது…ஆவியானவர் அவன்மீது வந்தபோதிலும் சத்தியத்தையேக் கூறினார், அவன் இஸ்ரவேலரை சபிக்க முயன்றான், ஆனால் அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துவிட்டான். 207 இப்பொழுது, தேவன் ஒரு அருமையான சபைக்கு, ஒரு அருமையான பேராயருக்கு, ஒரு அற்புதமான போதகருக்கு, ஒரு கூட்ட படித்த மேதைகளுக்கு மரியாதை அளிப்பதாயிருந்தால், அவர் அந்தப் பலியை ஏற்றுக் கொள்ள் கடமைபட்டவராயிருந்திருப்பார், ஏனென்றால் அவன் இஸ்ரவேலரைப் போன்று அடிப்படையில் சரியாக இருந்தான்; ஆனால் அவன் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டையும், தேவனுடைய சித்தத்தையும் பெற்றிருக்கவில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அதுவே இன்றைக்கு வித்தியாசமாயுள்ளது. 208 இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர்கள், “அந்த நபரைவிட்டு விலகிப் போங்கள். அவன் ஒரு சமாரியன் என்றும், அவன் பையத்தியக்காரன் என்றும் நாங்கள் அறிவோம். நீ எங்களுக்குப் போதிக்கிறாயா-? நீ விபச்சாரத்தில் பிறந்தாய். நீ ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாய் வந்தாயேயன்றி வேறொன்றுமல்ல. உன்னுடைய தந்தை யார்-? தேவன் உன்னுடைய பிதா என்று கூறுகிறாயே, நீ தூஷணக்காரன்-? ஏன்-? நீ அப்படித்தானே எங்களிடத்தில் பொருட்படுத்திக் கூறுகிறாய்-? நாங்கள் பிரசங்கிகளாயிருந்து வருகிறோம், நாங்கள் பேராயர்களாயிருந்து வருகிறோம். எங்களுடைய பூட்டனாரினுடைய பூட்டனாரின் பூட்டனாரின் காலத்திலிருந்தே வழி, வழியாக தொடர்ந்து பிரசங்கிமார்களாயும், பேராயர்களாயுமிருந்து வருகிறோம். நாங்கள் சபையில் பிறந்து, வளர்க்கப்பட்டோம். நாங்கள் மிகப் பெரிய உயரிய வேதாகம கருத்தரங்குகளில் இருந்திருக்கிறோம். நாங்கள் நியாயப் பிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அறிந்து உள்ளோம். நீ எங்களுக்கு போதிக்க முயற்சிக்கிறாயா-? நீ எங்கேயாவது பள்ளிக்கு எப்போதாவது போயிருக்கிறாயா-? நீ இதை எங்கே கற்றுக் கொண்டாய்-?” என்றெல்லாம் கேட்டனர். 209 அப்பொழுது அவரோ, “நீங்கள்…உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்” என்றார், இயேசுவே கூறினார். 210 அவர்களுக்கு மத்தியில் அற்புதங்களோ, அடையாளங்களோ இல்லாதிருந்தன. அவர்களுக்கு மத்தியில் தெய்வீக சுகமளித்தல்கள் மற்றுமுள்ள காரியங்கள் இல்லாதிருந்தன. அவர் மத்தியில் ஆசீர்வாதங்களே இல்லாதிருந்தன. ஆனால் இயேசு ஒரு முற்றிலுமான ஆவிக்குரியப் பிரகாரமான வேதவாக்கியங்களின் வெளிப்பாடாயிருந்தார். 211 அவர்கள், “ஏன், அது இன்ன—இன்ன விதமாய் எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர். 212 இயேசு, “ஆம், அது இப்படியும் கூட எழுதப்பட்டிருக்கிறதே” என்றார். ஆனால் தேவன் தம்முடைய மனிதனை தம்முடைய அடையாளங்களினால் ரூபகாரப்படுத்தினார். 213 பேதுரு அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் அதேவிதமாகக் கூறினார், அவன், “இஸ்ரவேலரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” என்றான். (அங்குதான் உங்கள் காரியமே உள்ளது) “அங்கே பெரிய சனகரீம் ஆலோசனை சங்கத்தினால்…முன்னறிவின்படியே ஒப்புக்கொடுக்கப்பட்ட… ஆனால் தேவனுடைய முன்னறிவினால், தேவன் இந்த மரணத்திற்கேதுவாய் மரிக்கும்படி அவரை முன்னியமித்திருந்தார். நீங்கள் அவரை கொடூரமான அக்கிரமக்காரருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தீர்கள். நீங்கள் ஜீவாதிபதியைச் சிலுவையிலறைந்தீர்கள், தேவன் அவரை எழுப்பினார், நாங்கள் அதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்.” 214 வ்வூயு, என்னே ஒரு பிரசங்கியார்-!…அவனால் தன்னுடைய சொந்த பெயரையும் கூட கையெழுத்திட முடியாது, ஆனால் அவன் தேவனை அறிந்திருந்தான். அவர்கள், “அவன் இயேசுவுடனே கூட இருந்தவரென்றும், அவனுக்கு சம்பவித்திருந்ததையும்” அவர்கள் அறிந்து கொண்டார்கள். நிச்சயமாகவே, அது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. ஓ, என்னே. இப்பொழுது அங்குதான் காரியமே உள்ளது. 215 காயீன் அந்த மாம்சபிரகாரமான நிலைமையில் இருந்தான், அந்த மாம்சபிரகாரமான சபையும் இன்றைக்கு அதே நிலையில்தான் உள்ளது. ஆவிக்குரிய சபையோ இன்னமும் அக்கினிஸ்தம்பத்தையும், இன்னும் அடையாளங்களையும், அற்புதங்களையும், இன்னமும் மாறாத கிறிஸ்துவையும் உடையதாயிருக்கிறது: அது ஏதேன் தோட்டத்திலிருந்து ஆட்டுக்குட்டியின் இரண்டாம் வருகை வரையில் எல்லாவிதத்திலுமே மரிக்கும் ஆட்டுக் குட்டியையே ரூபகாரப்படுத்துகிறது. அவர் முற்றிலும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 216 அந்த காயீனின் வம்ச வரிசையில், பக்தியான, மெருகேற்றப்பட்ட, மேதைகள் இருந்தனர், சரியாக அந்தவிதமாகவே இருந்து வந்தனர். அதேவிதமாகவே, ஒவ்வொரு நாளும் அதேவிதமாகவே இருந்தனர். காயீன் ஆபேலுக்கு செய்தது போல குற்றங்காண்போர்களும், துன்பப்படுத்துவோர்களுமாய் இருந்தனர். எனவே அவர்கள் இன்றைக்கு அவ்வண்ணமாக இருக்கின்றனர், அவ்வாறே இருந்து வருகின்றனர், எப்போதும் அவ்விதமாகவே இருப்பார்கள்; மாம்சபிரகாரமானவர்கள், அவிசுவாசிகள். அது உண்மை. 217 இப்பொழுது ஆதியாகமம் 3:8, நான் 20-ம் வசனத்தையுங்கூட இங்கே வாசிக்கிறேன், நான் சற்று முன்பு அதை பார்த்துக்கொண்டிருந்தேன்: ஆதாம்…ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானாவள். (பாருங்கள், அது இந்த வஞ்சித்தல் நடந்துவிட்டப் பிறகு) 218 காயீன்…“இப்பொழுது பொருங்கள்-!” நீங்களோ, “எப்படி ஒரு பாம்பினால், ஒரு சர்ப்பத்தினால் அவ்வாறு செய்ய முடிந்திருக்கும்-?” என்று கேட்கலாம். 219 ஆனால், சகோதரனே, இங்கே கவனியுங்கள், அது ஒரு சர்ப்பமாயிருந்தது என்று வேதம் கூறவில்லை; வேதம், “அது சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது” என்று உரைத்துள்ளது. அது ஒரு ஊர்வனவாயிருக்கவில்லை, அது ஒரு மிருகமாயிருந்தது. அது…அங்கே…அவ்வாறுதான் இருந்தது. 220 நீங்கள் விரும்பினால், நமக்கிடையே ஒரு சிறு அடையாளத்தைப் போல நான் இதை உங்களுக்குக் கூறட்டும். அங்குதான் விஞ்ஞானம் குழப்பமடைந்துள்ளது. ஒரு மனிதனுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது ஒரு மனிதக் குரங்கு என்றே அவர்களால் கண்டறிய முடிந்துள்ளது. எத்தனை பேர் அதை அறிந்துள்ளீர்கள்-? ஆனால் அங்கே ஒரு காரியம் இடையில் உண்டு. ஆயினும் அவர்களால் மனித எலும்புகளை மனித குரங்கின் எலும்புகளோடு சரிவர இணைத்துப் பார்த்து கூற முடியவில்லை, அதே சமயத்தில் அது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. அவர்கள் அதை ஒரு தவளைக்குஞ்சிலிருந்து ஒப்பிட கொண்டு வரலாம், அவர்கள் அதை ஒரு தலைப்பரட்டையிலிருந்து ஒப்பிட கொண்டு வரலாம். அவர்கள் அதை ஒப்பிட ஒரு கரடியண்டைக் கொண்டு வரலாம். நீங்கள் ஒரு கரடியை எடுத்து, அதனுடைய தோலை உரித்துவிட்டால், அது ஒரு சிறிய ஸ்திரீயை போன்றேயிருக்கும். அதேவிதமாகவே இருக்கும். அதை தோலூரித்து, அங்கே நிற்கவைத்தால் ஸ்திரீயைப் போன்றே…ஸ்திரீ நிற்பது போன்றேயிருக்கும். அவளும் ஒரு கரடியைப் போலவே இருக்கிறாள். கரடியினுடைய பாதமும், கரமும் மனித இனத்தைப் போன்றே உள்ளது. ஆனால் ஒரு மனித குரங்கோ அதைப் பார்க்கிலும் நெருக்கமானதாய் இருக்கிறது. அது கிட்டத்தட்ட மனிதனைப் போன்றிருந்தாலும், அவர்களால் அதைக் கண்டறிய முடியவில்லை. 221 நீங்கள் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இங்கே ஒரு சிறு இரகசியம் உள்ளது. அது எங்கே உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா-? அது அவர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேண்டுமானால் எல்லா எலும்புகளையுமே தோண்டிப் பார்க்கலாம். அவர்கள் தோண்டிப்…பார்க்கலாம்…சிற்பிகள் தோண்டிப் பார்க்கலாம், விஞ்ஞானம் மற்றும் காலக்கணிப்பாய்வாளர் அணு அளவைகளினால் கால அளவை கணக்கிட்டாலும், அவர்கள் அதை ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், சரிப்பமானது பூமியின் மேலிருந்த சகலத்தைப் பார்க்கிலும் மேலானதாய், ஒரு மனிதனைப் போன்றிருந்தது, தேவன் அதை சபித்து, அது தன்னுடைய வயிற்றிலே ஊர்ந்து போகும்படிச் செய்துவிட்டார், எனவே அது ஒரு மனிதனைப் போன்ற சாயலேயில்லாமல் ஒரு பாம்பாக மாறி இருக்கிறது. இப்பொழுது அப்படியே உங்களுடைய தலையை சொரிந்து கொள்ளுங்கள், விஞ்ஞானிகளான அவர்கள் அதனை சற்று ஆய்ந்து பார்க்கட்டும். 222 ஆனால் வேதமோ, “சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் அது தந்திரம் உள்ளதாயிருந்தது” என்று கூறுகிறது. அது உண்மை. அது மனிதனுக்கும் குரங்கிற்குமிடையே இருந்த இணைப்பாயிருந்தது, தேவனோ அதை சபித்து, அது செய்திருந்த காரியத்தின் நிமித்தமாக தன்னுடைய வயிற்றிலே ஊர்ந்து செல்லும்படி செய்துவிட்டார். அது இந்த ஸ்திரீயை வஞ்சித்தது, அவள் தன்னுடைய முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள், அதுவே காயீனாயிருந்தது, சுபாவப்படி சர்ப்பத்தினுடைய சொந்த தூண்டுதலாயிருந்தான், பிசாசு சர்பத்திற்குள் நுழைய, அது அதனைச் செய்தது. 223 அப்பொழுது அவள் கர்ப்பந்தரித்து, பிரசவித்தாள், அவள் வஞ்சிக்கப்பட்டப் பிறகு அவள் மீண்டும் கர்பந்தரித்தாள். இப்பொழுது கவனியுங்கள், அவள் வஞ்சிக்கப்பட்டாள், அவள் ஏறக்குறைய…அவள் தவறு செய்துவிட்டாள். ஆனால் அவள் தன்னுடைய கணவனால் கர்ப்பவதியானபோது, அவள் சரியாக முறைப்படியானவளாக இருந்தாள், ஏனென்றால் அதற்குப்பின் அநேக, அநேக முறைகள், அநேக மாதங்கள், அநேக முறைகள், அநேக மாதங்கள், அநேக நாட்கள் அவள் ஆதாமோடு இருந்திருப்பாள். உங்களால் அதைக்கூற முடியாது, நமக்குத் தெரியாது, ஆனால் அவள் ஆதாம் உடையதையும் பெற்றெடுத்தாள். 224 யாரோ ஒருவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார், அதாவது, “நல்லது, குமாரனை…அவன் கூறி…அவள்…காயீன் பிறந்தபோது, அவள், ‘கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்’” என்றாள். முற்றிலுமாக, நிச்சயமாகவே, அது அவ்வாறே இருக்க வேண்டியதாயிருந்தது. அது இயற்கையின் விதியாயிருந்தது. இன்றைக்கும் நீங்கள் சரியாக அந்தவிதமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் பிறக்கும்போது, தேவன் அப்படியே இறங்கி வந்து உங்களை உருவாக்குகிறதில்லை. நீங்கள் உங்களுடைய தாய் தந்தையரின் கர்ப்பப்பிறப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு…அங்கே ஒரு…உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய கர்ப்பப் பிறப்பாயிருப்பார்கள். அது எல்லா நேரத்திலுமே பிரதி உற்பத்தியாய் உள்ளது, மரங்களின் விதைகள் மற்றுமுள்ள அந்தவிதமான காரியங்களைப் போலவேயாகும்; ஆனால் மூல காரியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். எனவே அது இதனை விளக்குகிறது என்று நான் நம்புகிறேன். 225 நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது-? இனிமேல் நேரமேயில்லை. இந்த நல்ல அடுத்த ஒரு கேள்விக்கு செவி கொடுங்கள்…அதாவது நாம் ஞாயிறு அதைப் பார்க்கப் போகிறோம்: “எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்…” (நாம் அதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்) “…கிறிஸ்து.” அந்த நேரத்திலே… இப்பொழுது, நான் அதன் பேரிலான சில வேத வாக்கியங்களை, நல்ல வேத வாக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன் [சகோ.பிரான்ஹாம் இதற்கு பாகம் 2-ல்-(COD-6) பாரா-361, 60-வது கேள்வியில் பதிலளிக்கிறார்—ஆசி.] 226 அதைப் போன்றே… இதோ ஒரு நல்ல கேள்வி உள்ளது… இதற்கு பதில் அளிக்கும்படியாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நீங்கள் என்னை பொறுத்துக் கொள்வீர்களா-? அதற்கு அதுவே பதிலளிக்கக் கூடும். கேள்வி:59. நீர், “துன்மார்கர் நித்தியமாய் எரியமாட்டார்கள்”…என்று கூறும்போது…(நல்லது, நான் இப்பொழுது யோகா சாட்சிக்காரர் அதன் பேரில் கூறினதை கூறினேன், நான் கூறினேனல்லவா-?)…துன்மார்க்கர் நித்தியமாக எரியமாட்டார்கள் என்று நீங்கள் கூறும்போது, நீர் அது பாதாளத்தில் அல்லது அக்கினிக் கடலில் என்று பொருட்படுத்திக் கூறுகிறீரா-? வெளிப்படுத்தின விசேஷம் அதைக் கூறுகிறது என்பதை நான் அறிவேன் (அது 20-வது அதிகாரம்) அதாவது நரகம் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. அவர்கள் நித்தியமாக எரிந்து போகவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் என்னவாகிறார்கள்-? 227 நான், அதைக் குறித்துக் கூறியிருக்கிறது போல, சகோதரனே அல்லது சகோதரியே; அது யாராயிருந்தாலும் சரி; அவர்கள் அழிந்துபோவார்கள், அவர்களுக்கு இனிமேல் ஒன்றுமே இருக்காது. அவர்களுக்கு ஒரு துவக்கம் இருந்தது, அங்கே அவர்களுக்கு முடிவு இருக்கும். அவர்கள் இனி மேல் ஒன்றுமேயில்லாமற் போய்விடுவார்கள். எப்படி…அவர்கள் எவ்வளவுகாலம் எரிவார்கள், அதைக் கூற முடியாது. ஆனால், பாருங்கள், அங்கே… 228 நீங்கள் உங்களுடைய சிந்தையில் இதை புரிய வைத்துக் கொள்ளக் கூடுமானால் நலமாயிருக்கும், பாருங்கள், அது மிகவும் எளிமையானது. ஒரே மாதிரியான நித்திய ஜீவன்தான் உண்டு, அது தேவனிடத்திலிருந்து தாமே வருகிறது. தேவன் மாத்திரமே நித்திய ஜீவனாயிருக்கிறார். நீங்கள் இங்கே கிரேக்க வேதாகம அகராதியில் எடுத்துப் பார்த்தால், ஸோயீ என்ற கிரேக்க வார்த்தை உள்ளதைப் பார்க்கலாம். ஸோயீ என்பது “நித்திய ஜீவனாய்” உள்ளது. நித்திய ஜீவன் என்பது “தேவனாய்” இருக்கிறது. இயேசு, “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறேன்” என்றார், நீங்கள் இங்கே கிரேக்க வேதாகம அகராதியில் நோக்கிப் பார்த்தால், அதில், “ஸோயீ” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. வேதாகமத்தில் எந்த இடத்திலும் நித்திய நரகம் இருக்கும் என்று கூறுகிற ஒரு இடமே இல்லை, அவர்கள், “சதாகாலம்” எரிவார்கள் என்றே வேதம் கூறியுள்ளது. 229 இப்பொழுது, “சதாக்காலம்” என்ற வார்த்தைக்கு சென்று பார்த்தால், அதற்கு எயர்ன்—எயர்ன் என்று உள்ளதைப் பாருங்கள். நீங்கள் இங்கே வேதாகமத்தில் கவனித்தீர்களா-? எத்தனை பேர், “எயர்ன், எயர்ன்…” என்று அதில் கூறப்பட்டிருப்பதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்கள்-? எத்தனைபேர் எயர்ன் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதை அறிவீர்கள்-? ஏன், நிச்சயமாக, எயர்ன் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதை எவருமே அறிவர். 230 “அவர்கள் எயர்ன் என்ற அர்த்தங்கொண்ட குறிப்பிட்ட காலம் எரிவார்கள்.” “அக்கினிக் கடலுக்குள் தள்ளப்பட்டு, எயர்ன் என்ற அர்த்தங்கொண்ட குறிப்பிட்டக் காலம் எரிந்து போவார்கள்.” எயர்ன் என்பதன் பொருள் “கால அளவுகள்” என்பதாகும். அவர்கள் கோடான கோடி ஆண்டுகளாக தண்டையில் எரியலாம், ஆனால் முடிவாக, அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும், ஒன்று சேர்ந்து அழிந்து போகும்படியாக, பாருங்கள், ஏனென்றால் பரிபூரணமில்லாதிருக்கிற ஒவ்வொரு காரியமும் பரிபூரணத்திலிருந்து தாறுமாறாக்கப்பட்டதாயுள்ளது; அதற்கு ஒரு துவக்கம் இருந்தது, எனவே அதற்கு முடிவு இருக்க வேண்டும். 231 ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ள நாம், ஸோயீயை, “தேவனுடைய சொந்த ஜீவனை” நமக்குள்ளாகப் பெற்றுள்ளோம், நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம். சதாகாலங்களிலுமுள்ள ஜீவனை உடையவர்களாய் அல்ல, பாவியோ சதாக்காலங்களிலுமுள்ள ஜீவனை உடையவனாயிருக்கிறான், ஆனால் நாம் “நித்திய ஜீவனை” உடையவர்களாயிருக்கிறோம். 232 அண்மையில் சகோதரன் காக்ஸ் அவர்கள், நாங்கள் அமர்ந்து கொண்டிருந்த போது, நாங்கள் புறப்படும் முன்…அங்கே கற்கள் இருந்தன, அப்பொழுது அவர் ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் வாழ்ந்த பண்டைய மிருகத்தின் புதைபடிவக் கல்லை எடுத்து “சகோதரன் பிரான்ஹாம், அது எவ்வளவு காலத்திற்கு முந்தினதாயிருக்குமா-?” என்று அவர் கேட்டார். 233 அப்பொழுது நான், “ஓ, காலவரிசைப்படி, அது பத்தாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்று நீங்கள் கூறலாம். அது ஏதோ ஒரு விதமான ஒரு காலத்தில் வாழ்ந்த பண்டைய சமுத்திர பெரிய கோர உருவங்கொண்ட பிராணியாய், ஒரு சமுத்திர விலங்காய், அநேக ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாயிருக்கலாம்” என்றேன். 234 அப்பொழுது அவர், “அந்த பிராணியின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மானிட வாழ்க்கை எவ்வளவு குறைவுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்” என்றார். 235 அதற்கு நான், “ஓ, ஆனால், சகோதரனே, அந்த காரியத்திற்கு முடிவு உண்டு, ஆனால் கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டாயிருக்கிற ஜீவனுக்கோ முடிவு இல்லை. அது இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகள் வாழலாம், ஆனால் அது ஒருபோதும் நித்திய ஜீவனை உடையதாயிருக்காது, ஏனென்றால் நித்திய ஜீவன் தேவனிடத்திலிருந்து மாத்திரமே உண்டாகிறது” என்றேன். 236 நித்தியம், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, நீங்கள் ஒரு விசுவாசியாய் இருக்கிறபடியால் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறீர்கள். ஒரு அவிசுவாசி ஒரு குறிப்பிட்ட கால ஜீவனையே உடையவனாயிருக்கிறான். நித்தியமான…ஒரு விசுவாசி நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான், அது நித்தியமாயிருக்கிறபடியால் அழிந்து போக முடியாது. 237 ஆனால் ஒரு விசுவாசி, அவன் செல்லுகையில்…ஒரு அவிசுவாசி உலகத்தினூடாகச் செல்வான், அவனுக்கு கவலைகளும், துயரங்களும் உண்டு; ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அவன் அனுபவிப்பதாகக் கூறிக் கொள்கிறான், “ஹூப்பீ, ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கிறான்.” ஸ்திரீகள், மதுபானம், மகிழ்ச்சியான பெரிய நேரம், அவன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டேயிருப்பதாக அவன் எண்ணுகிறான். அவன் மரித்து, அவன் அக்கியும் கந்தகமும் எரிகிற கடலுக்குள் செல்வான், அங்கே சதாகாலமும் எரிந்து கொண்டேயிருக்கப் போகிறான், ஒரு கால் அவனுடைய ஆத்துமா நூறு கோடி ஆண்டுகள் அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் வாதிக்கப்படலாம். 238 நான்…நீங்களோ, “அது வழக்கமான காணப்படுகிற கந்தக் கல்லைப் போல இருக்குமா-?” என்று கேட்கலாம். அது இதைப் பார்க்கிலும் கோடிக் கணக்கான மடங்கு மோசமானதாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். உங்களால் அதை நெருப்பின் மூலம், இப்பொழுதுள்ள அக்கினியைக் கொண்டு விவரித்துக் கூற முடியாது என்று நான் நினைக்கிறேன். “அக்கினியினால்” என்று அது குறிப்பிடப்பட்டுள்ளதற்கான ஒரே காரணத்தினால், அது நமக்கிருக்கின்ற எல்லாவற்றையும் முற்றிலும் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறது என்பதாகும். அது முற்றிலும் பட்சித்து, ஒவ்வொன்றையும் அழித்து விடுகிறதையே அந்த அக்கினி செய்கிறது. ஆகையால் அது அவ்வண்ணமாய் அங்கு இருக்கும், ஆனால் ஒரு விதமாக…தண்டிக்கப்பட்ட வேண்டிய ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு. 239 இப்பொழுது, நீங்கள் அக்கினி என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும், ஏனென்றால் பரிசுத்த ஆவி என்பதும், “பரிசுத்த ஆவியும் அக்கினியும்” என்றே உபயோகப்படுத்தப்படுகிறது; ஏனென்றால் பரிசுத்த ஆவி பாவத்தை எரித்துப் போடுகிறது, பாருங்கள், சுத்தமாக்குகிறது. 240 ஆனால் அக்கினி, அது நரகத்திலிருந்து வருகிறது, அது ஒரு, “அக்கினிக் கடல்” என்று கூறப்பட்டுள்ளது. அது என்னவென்றால், அது ஒரு தண்டனையோடு வாதிக்கப்படுதலாயுள்ளது. ஐஸ்வரியவான் பாதாளத்திலிருந்து தன்னுடைய கண்களை ஏறெடுத்தபோது, “லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும், ஏனென்றால் இந்த அக்கினி ஜீவாலை என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றான். ஒரு எரிகின்ற நரகம் இல்லையென்று எண்ணிக் கொள்ளாதீர்கள், ஒரு உண்மையான நரகம் உண்டு. உண்மையாகவே ஒரு பிசாசு உண்டு என்றால், ஒரு உண்மையான நரகம் உண்டு. 241 ஆனால், நீங்கள் பாருங்கள், தாறுமாறாக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு, ஏனென்றால் அது முடிவிலே அந்த தூய்மைக்கும், தேவனுடைய பரிசுத்தத்திற்கும் திரும்பி வர வேண்டும். தேவன் நித்தியமாயிருக்கிறார்; நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருந்தால், தேவன் நமக்குள்ளாக இருக்கிறார், தேவன் மரிக்க முடியாதது போல நாமும் ஒருபோதும் மரிக்க முடியாது. அங்குதான் காரியமே உள்ளது. 242 இப்பொழுது அந்தப் மூல வாக்கியமே அதை உண்மையாகவே விளக்குகிறது, பாருங்கள், அதை சரியாகக் கூறுகிறது. இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் ஒரு…எனக்குத் தெரியாது…ஆம்: “அவர்கள் என்னவாக—என்னவாக ஆவார்கள்-?” 243 அவர்கள் அழிந்து போவார்கள், இனிமேல் அவர்கள் ஒன்றுமேயில்லாதவர்களாவார்கள். ஆத்துமா போய்விடுகிறது, ஆவி போய்விடுகிறது, ஜீவன் போய்விடுகிறது, சரீரம் போய்விடுகிறது, சிந்தனைகள் போய்விடுகிறது, ஞாபக சக்தி போய்விடுகிறது. 244 இனி ஒருபோதும் பொல்லாத சிந்தனைகள் கூட இருக்காது அல்லது ஒருபோதும் பொல்லாங்கு மகிமையில் சம்பவிக்காது. அது உண்மை. அது…இங்கே இந்த பாகத்தில் இருக்கும் அந்த ஜனங்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? 245 வேதம், “துன்மார்க்கருடைய யோசனைகளும்கூட அழிந்துபோம்” என்று கூறவில்லையா-? அவனுடைய சிந்தனைகள் அழிந்துபோம். 246 இதோ ஒரு மனிதன் இங்கே இருப்பான் என்றும், இதோ தேவனாகிய மகத்தான பரிசுத்தர் இங்கே இருக்கிறார் என்றும், அங்கே அப்பால் உள்ள ஒரு குழியில், அதற்குள் ஆத்துமாக்கள் எரிந்து கொண்டிருக்கும் என்று அறீயீர்களா-? ஏன், அது பரலோகமாயிருக்க முடியாது. அந்த எண்ணங்கள், அந்த ஞாபக சக்தி, தாறுமாறாக்கப்பட்ட ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு பொல்லாத சிந்தனையும், ஒவ்வொருகாரியமும் அழிந்து விடும், அதில் உள்ள பொல்லாத ஒவ்வொரு காரியமும் அழிந்துபோம். நாம் வேறேதுமில்லாமல் ஸோயீயோடு, தேவனுடைய ஜீவனோடு சுத்தமாய் இருப்போம்; காலங்கள் உருண்டோடிக் கொண்டேயிருக்க நித்தியத்தில் இருப்போம்; அதற்கு ஒருபோதும் முடிவேயில்லாமல் நித்தியமாயிருக்கும்-! 247 “துன்மார்க்கர் குறிப்பிட்ட கால தண்டைக்குள்ளாகச் சென்றனர், ஆனால் நீதிமான்களோ நித்திய ஜீவனுக்குள்ளாகச் சென்றனர்.” உங்களுக்கு இது புரிகிறதா-? குறிப்பிட்ட கால தண்டனை, நித்திய ஜீவன், என்னே ஒரு வித்தியாசம். 248 இப்பொழுது, பாருங்கள், அதுவல்ல…இப்பொழுது, எனக்குத் தெரியும், உங்களுக்கு, என்னுடைய அருமையான சிறு பிள்ளைகளாகிய உங்களுக்கு, எனக்கு—எனக்கு எல்லாமே தெரிந்தது போன்று என்னைக் காண்பிக்க முயற்சிக்கவில்லை. நான் அதைச் செய்தால்… 249 இப்பொழுது, நான் இன்னும் மூன்று அல்லது நான்கிற்கு மேற்பட்ட நல்ல கேள்விகளை வைத்துள்ளேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவைகளை ஞாயிறு காலையில் எடுக்க உள்ளேன். 250 இப்பொழுது, கவனியுங்கள். எழும்புகிற இந்த கேள்விகளைப் பாருங்கள். நான் ஒரு வயதான பிரசங்கியார். நான்—நான்—நான் இருபத்தியாறு ஆண்டுகளாக ஊழியத்தில் இருக்கிறேன். நான்—நான் இதற்காக, என்னால் இதை கூற முடியும் என்பதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், என்னுடைய…என்னுடைய ஜீவியத்தில் எந்த காரியமும் எனக்கு முதலில் வெளிப்படுத்தப்படாமல், அதை அறிமுகப்படுத்த ஒருபோதும், நான் ஒருபோதும் முயன்றதேயில்லை. அந்த கர்த்தருடைய தூதனுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்…எனக்கு கல்வியறிவு இல்லாது இருந்தது, எந்த திறமையும் இல்லாதிருந்தது. இந்த தூதன் இறங்கி வந்தார், அவர் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு எனக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் முற்றிலும் பொருந்தாத எந்த ஒரு காரியத்தையும் அவர் என்னிடத்தில் ஒரு போதும் கூறினதேயில்லை. அதினாலே…அவர், “நீ—நீ ஒரு தெய்வீக சுகமளித்தலின் வரத்தைக் கொண்டு செல்வாய்” என்று கூறினபோது, நான் உடனே அதை எழுதினேன். அவர் அதைக் கூறின விதமாகவே நான் அதை எழுதி வைத்தேன். 251 மூன்று வருடத்திற்குள் மேலாளர் அதை என்னுடைய—என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அதைக் கவனித்தீர்களா-? அவர் உங்களிடத்தில் ‘ஒரு வரம்’ என்று கூறினபடியே அது மிகப் பரிபூரணமாய் உள்ளது” என்றார். 252 பாருங்கள், “வரம்” என்று ஒருபோதும் கூறவில்லை. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொன்றும்—ஒவ்வொன்றும்…ஒவ்வொரு வரமும், “வரமாயுள்ளது.” ஆனால் தெய்வீக சுகமளித்தல், அது, “ஒரு வரமாய்” உள்ளது. அது “சுகமளிக்கும் வரங்களாய்” உள்ளன. நீங்கள் எல்லாவிதமான சுகமளிக்கும் வரங்களையும் வித்தியாசமான விதங்களில் பெற்றிருக்கக் கூடும். ஆனால் மற்ற ஒவ்வொன்றும், “வரமாய்” உள்ளது. “அந்த” தீர்க்கதரிசன வரம், “அந்த” இதைக் குறித்த வரம். ஆனால் தெய்வீக சுகமளித்தல், “வரங்கள்” என்று பன்மைகளில் உள்ளன. நான் அதை ஒருபோதும் கவனித்தேயில்லை, அதாவது பரிசுத்த ஆவியானவர் மிகவும் பரிபூரணமாயிருக்கிறார். ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக-! 253 அதே பரிசுத்த ஆவியானவர் நூற்றுக்கணக்கான மனிதரைக் கொண்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தனித்தனியாக வேதாகமத்தை எழுதினார் என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா…அவர்களில் ஒருவரும் மற்றவர்க்கு வேறுபட்டிருக்கவில்லை, அவர்கள் ஒவ்வொருவரும் வேற்பாடின்றி முழுமையாய் இருந்தனர்; மேலும் அவர்களில் ஒருவரும் மற்றவரைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டதும் கூட இல்லை. 254 பவுல் புறப்பட்டுச் சென்று, அரேபியாவில் இருந்தான், பதினான்கு ஆண்டுகளாக எருசலேமிற்கு வருகைத் தரவில்லை, ஆனால் எருசலேமில் இருந்தான்…ஒருபோதும் எருசலேமிற்கு புறப்பட்டுச் செல்லவில்லை. ஆனால் அரேபியாவில் இருந்து விட்டு, பின்னர் பிரசங்கிக்கக் துவங்கின போதும், பேதுருவையும், மற்றவர்களையும் பதினான்கு ஆண்டுகளாகப் பார்க்கவே இல்லை. அவர்கள் ஒன்றாக சேர்ந்தபோது, அதாவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம், தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை போன்ற ஒரு காரியத்தையே அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். 255 ஓ-! நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்: அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெந்தேகோஸ்தேவில் விழுந்த அக்கினியால், சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான மக்கள் எங்கும் உள்ளனர். அவர்கள் இருதயங்கள் யாவும் அக்கினியால் ஜீவாலிக்கின்றன, ஓ, இப்பொழுது அது என் இருதயத்தில் கொழுந்து விட்டெரிகிறது. ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை-! நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் மேலறையில் ஒன்று கூடி, எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட ஊழியத்திற்காக வல்லமை வந்தது; அந்த நாளிலே அவர்களுக்காக அவர் என்ன செய்தாரோ இப்பொழுது அதையே அவர் உங்களுக்காகவும் செய்வார், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறமுடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 256 கவனியுங்கள், நான் உங்களுக்காக ஒரு சிறு செய்தியை வைத்துள்ளேன்: என் சகோதரனே வந்து, இந்த ஆசீர்வாதத்தை தேடுவீர், அது பாவத்திலிருந்து உங்களுடைய ஆத்துமாவை சுத்திகரிக்கும், அது சந்தோஷ—மணிகள் ஒலிக்கத் துவங்கும் உங்களுடைய ஆத்துமாவை தொடர்ந்து அனல் மூட்டும்; ஓ, அது என்னுடைய இருதயத்திற்குள்ளாக இப்பொழுது கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது, ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை, நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 257 நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பதனால் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா-? அது என்ன-? அது வெளிப்படுத்துகிற ஆவியாயுள்ளது. அது, “இந்தக் கல்லின் மேல்” என்ற ஒரு தேவனுடைய வெளிப்பாடாய் உள்ளது. ஒரு தலைமைப் பேராயராயிருந்தாலும்…எனக்குக் கவலையில்லை. 258 அண்மையில் என்னுடைய வீட்டில் ஒரு கத்தோலிக்க பாதிரியார் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர், “திரு பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்” என்றார். அதற்கு நானோ, “சரி, கேளுங்கள் ஐயா” என்றேன். மேலும் அவர், “பேராயரிடத்திலிருந்து உங்களுக்கு வந்துள்ள ஒரு கடிதத்தை நான் இங்கு வைத்திருக்கிறேன்” என்றார். அதற்கும் நான், “சரி, ஐயா” என்றேன். 259 அப்பொழுது அவர், “நீங்கள் கூறும் வாக்குமூலங்களுக்காக நீங்கள் உங்களுடைய கரத்தை வைத்து, நீங்கள் கூறப்போவது உண்மை என்று பயப்பக்தியோடு சத்தியம் பண்ணுவீரா-?” என்று கேட்டார். 260 அதற்கு நானோ, “நான் சத்தியம் பண்ண மாட்டேன்.” என்றேன். மேலும் நான், “வேதம், ‘வானத்தின் பேரிலாவது அல்லது பூமியின் பேரிலாவது சத்தியம் பண்ணாதிருங்கள். (ஏனென்றால் அது அவருடைய பாதபடி) உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்,’ என்று உரைத்துள்ளதே. எனவே நான் கூறுவதை பேராயர் கேட்க விரும்பினால், அவர் என்னுடைய வார்த்தையை அதற்காக ஏற்றுக் கொள்ளட்டும், அவர் கேட்க விரும்பவில்லையென்றால், நான் அதற்காக சத்தியம் பண்ணமாட்டேன்” என்றேன். 261 புனித இருதய திருச்சபையிலிருந்து இங்கு வந்த இந்த கத்தோலிக்க குரு, “நீர் பவுலின் பிரேஸியர் அவர்களுக்கு இன்ன—இன்ன குறிப்பிட்ட தேதியில் ஞானஸ்நானங்கொடுத்தீரா-?” என்று கேட்டார். 262 அதற்கு நான், “ஐயா, நான் ஓஹையோ நதியில் ஞானஸ்நானம் கொடுத்தேன்” என்றேன். 263 அப்பொழுது அவர், “நீர் அவளுக்கு எப்படி ஞானஸ்நானம் கொடுத்தீர்-?” என்று கேட்டார். 264 அதற்கு நான், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவளைத் தண்ணீரில் மூழ்க்கி அவளுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்” என்றேன். 265 அவர் அதை குறித்துக் கொண்டார். மேலும், “கத்தோலிக்க சபையானது முன்பெல்லாம் அந்த விதமாகவே ஞானஸ்நானங் கொடுத்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா-?” என்று கேட்டார். அதற்கு நான், “எப்பொழுது-?” என்று கேட்டேன். அப்பொழுது அவர். “ஆதிகாலத்தில்” என்றார். அதற்கு நான், “எந்த ஆதிகாலத்தில்-?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “துவக்கத்திலே” என்றார். அதற்கு நான், “எந்த துவக்கத்தில்-?” என்று கேட்டேன். அப்பொழுது அவரோ, “வேதத்தில்” என்றார். அதற்கு நான், “சீஷர்களிலிருந்த ஆரம்ப காலத்தையா…நீர் பொருட்படுத்திக் கூறுகிறீரரா-?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “நிச்சயமாக” என்றார். அப்பொழுது நான், “நீ கத்தோலிக்க…கூறுகிறீர், சீஷர்கள் கத்தோலிக்கராயிருந்தார்கள் என்று நீர் கூறுகிறீரே” என்றேன். அதற்கு அவர், “அவர்கள் நிச்சயமாகவே கத்தோலிக்கர்கள்” என்றார். அப்பொழுது நான், “கத்தோலிக்க சபை அதை மாற்றவில்லை என்று நான் எண்ணியிருந்தேனே-?” என்றேன். அவர், “அது மாற்றவில்லையே” என்றார். 266 அப்பொழுது நான், “அப்பொழுது பேதுரு, ‘மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஏன் கூறினார்-? நீங்களோ, அவன் ஒரு போப்பாக இருந்தான்…என்று கூறுகிறீர்களே-?” என்று கேட்டேன். 267 அதற்கு அவரோ, “ஆம், போப்புதான்” என்றார். 268 அப்பொழுது நான், “அப்படியானால் நீங்கள் ஏன் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்-? அவன் தண்ணீரில் மூழ்க்கினான், நீங்களோ தெளிக்கிறீர்கள். இப்பொழுது என்ன சம்பவித்தது-?” என்று கேட்டேன். 269 அதற்கு அவர், “ஆனால், நீங்கள் பாருங்கள், கத்தோலிக்க சபையானது அவர்கள் செய்யும்படி விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்ய அதிகாரத்தை உடையதாயிருக்கிறது” என்றார். ஊ. 270 அப்பொழுது நான், “நீர் சீஷர்களை கத்தோலிக்கர்கள் என்று அழைத்தீரே-?” என்று கேட்டேன். 271 அதற்கு அவர், “ஆம்” என்றார். 272 அப்பொழுது நான், “ஐயா, நான் ஜோசிபஸினுடைய புத்தகத்தை வைத்துள்ளேன், நான் பாக்ஸ் என்பவர் எழுதின இரத்த சாட்சிகளின் புத்தகத்தை வைத்துள்ளேன், நான் பெம்பர்மேன் என்பவரினுடைய ஆதிகாலங்கள் என்ற புத்தகத்தை வைத்துள்ளேன், நான் ஈஸ்ஸலப் என்பவரினுடைய இரு பாபிலோன்கள் என்ற புத்தகத்தை வைத்துள்ளேன், உலகில் உள்ள மிகப் பழமையான சரித்திரப் புத்தகங்களையும் வைத்துள்ளேன், எனவே எங்கே கத்தோலிக்க சபையானது நியமிக்கப்பட்டது இல்லை ஒரு ஸ்தாபனமானது என்று எனக்குக் காண்பியுங்கள்…கடைசி அப்போஸ்தலன் மரித்த பிறகு, ஆறு நூறு வருடங்கள் கழித்தே ஆனது” என்று கூறினேன். “ஓ” அவரோ, “நாங்கள் சபை கூறுகிறதையே விசுவாசிக்கிறோம்” என்றார். அதற்கு நான், “வேதம் கூறுகிறதையே நான் விசுவாசிக்கிறேன்” என்றேன். புரிகிறதா-? “ஏன்-?” அவரோ, “தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார்” என்றார். 273 நானோ, “தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். நான் கூறினேன், “இருந்தாலும்…” அவர் கூறினார்…நான், “தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார் என்று வேதம் கூறவில்லை, ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார் என்று கூறுகிறது. ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது; நமக்குள்ளே வாசம்பண்ணினார்’” என்றேன். அது உண்மை. நான், “தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். 274 அவர் வெளியே போய் அதைக் கூறினார். அவர், “பரவாயில்லை, எங்களால் விவாதிக்க முடியவில்லை” என்று கூறிவிட்டு, “காரணம் நீங்கள் வேதத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள், நான் சபையில் விசுவாசம் கொண்டிருக்கிறேன்” என்று கூறிவிட்டார். 275 நான், “வேதம் தேவனுடைய ஏவப்பட்ட வார்த்தையாயிருக்கிறது என்றும், அதில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய வார்த்தையாய், வரப்போகும் முழு காலங்களுக்குமான அவருடைய நித்திய திட்டங்களாயிருக்கின்றன. அவர், ‘வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை’ என்றார். அது உண்மை. நான் அந்த வார்த்தையை விசுவாசிக்கிறேன்” என்றேன். 276 அப்பொழுது அவர் திருமதி. பிரேஸியர் அவர்களிடம் சென்றார். அவர், “திருமதி. பிரேஸியர், உன்னுடைய மகள் கத்தோலிக்க சபையில் ஒரு அங்கத்தினராக இருக்கலாம் என்று சம்மதித்து ஒரு காகிதத்தில் நீ கையெழுத்திட்டு இங்கு தருவாயா-?” என்று கேட்டார். 277 அதற்கு அவளோ, “நான் அதைப் பார்க்கிலும் அவளோடு கல்லறைக்கு நடந்து செல்வதே மேலானதாகும்” என்றாள். 278 அப்பொழுது அவர், “உனக்கு அவமானம்” என்றார். மேலும், “அந்த அர்த்தமற்ற காரியத்திலிருந்து அந்தப் பெண் வெளிவந்து, கத்தோலிக்க சபைக்குள்ளாக இருப்பதற்கு நீ நன்றியுள்ளவளாயிருக்க வேண்டாமா-?” என்று கேட்டார். 279 நான் “உன்னுடைய பெண் என்னுடைய சபைக்கு வந்தால், நீ அதைக் குறித்து என்னக் கூறுவாய்-?” என்று கேட்டேன். 280 “ஓ” அவர், “அப்படியானால் அது வித்தியாசமானது” என்றார். 281 மேலும், “இல்லை, அதுவல்ல” என்றார். அவர் அந்த சிறு பெண்ணை அங்கேயிருந்து செல்லவிட்டபோது, அவர் எங்கிருந்தோ வந்திருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் எங்கோ இருந்திருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அப்பொழுது அவள், “இப்பொழுது, நீர் உள்ளே வருவதற்கும் அதே வாசல் திறந்துள்ளது” என்றாள். 282 பாருங்கள், அதுவே வழியாயுள்ளது. பயப்படாதீர்கள், நீங்கள் பயப்பட வேண்டாம். தேவன் உங்கள் பட்சத்தில் இருந்தால், உங்களை விரோதிப்பவன் யார்-? சரியே-! நீங்களோ ஒரு முதுகெலும்பிற்கு பதிலாக பறவையின் கவை எலும்பையேப் பெற்றுள்ளீர்கள், இன்றைக்கு அதுவே அதைக் குறித்த தொல்லையாயுள்ளது. தேவனுக்காக சரியாக உறுதியாய் நில்லுங்கள்-! 283 அந்த அப்போஸ்தலர்கள் மேலும், முன்காலங்களிலும் இறங்கின அதே பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு தம்முடைய சபையில் இன்னமும் இருக்கிறார், தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” அது தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளுதலினால் ஜனங்களைக் கொண்டுவந்து அவர்களுடைய கண்களைத் திறந்தலாகும். இல்லையென்றால் நீங்கள் ஒருபோதும் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது, நீங்கள் குருடாயிருக்கிறீர்கள், தேவன் உங்களுடைய மனக்கண்ணைத் திறந்ததாலொழிய நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் குருடராயிருக்கிறீர்கள், தேவன் உங்களுடைய மனக்கண்ணைத் திறந்தாலொழிய நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் குருடராயிருக்கிறீர்கள் என்றும், உங்களால் காண முடியாது என்றும் வேதம் உரைத்துள்ளது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதேயில்லை. எல்லா கல்வியறிவினாலும், நீங்கள் பெற முடிந்த எல்லா பாண்டியத்தியத்தினாலும் நீங்கள் அப்படியேத் தொடர்ந்து குருடாகவே இருந்து வருகிறீர்கள். 284 இப்பொழுது இங்கே உள்ள சர்ச் ஆப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபனத்தவராகிய நீங்கள் வேதம் எங்கு பேசுகிறதோ அங்கே நீங்கள் பேசுகிறீர்கள், வேதம் எங்கே அமைதியாயிருக்கிறதோ அங்கு நீங்களும் அமைதியாயிருப்பதாகக் கூறுகிறீர்களே, இதைப் பற்றின சிலவற்றைக் குறித்து என்ன-? நீங்கள் அதன் பேரில் மிக அமைதியாயிருக்கிறீர்களே. சரி. 285 பாருங்கள், அதற்கு ஆவிக்குரியபிரகாரமான வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் தேவையாயிருக்கிறது. ஆகையால் தேவன் இறங்கி வந்து, தம்மை வெளிப்படுத்தி, அது சத்தியம் என்பதை ரூபகாரப்படுத்துகிறார். ஆமென்-! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? நானும் அவ்வண்ணமாகவே நேசிக்கிறேன். ஆமென். 286 சரி, இப்பொழுது மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் எல்லோரும் பாப்டிஸ்டுகளோடு கரங்களைக் குலுக்க விரும்புகிறீர்களா-? பிரஸ்பிடேரியன்-களாகிய நீங்கள் அவ்வாறு விரும்புகிறீர்களா-? 287 “இப்பொழுது,” நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நீர் பாப்டிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளோடு ஐக்கியப்படாத… பிரஸ்பிடேரியன்-களையும் ஐக்கியத்திலிருந்து வெளியே தள்ளச் செய்கிறீரா-?” என்று கேட்கலாம். 288 இல்லை ஐயா, நான் அவ்வாறு செய்கிறதில்லை. நான் அவர்களை என்னுடைய சகோதரர்களாக கருதுகிறேன். முற்றிலுமாக-! நீங்கள் ஞான ஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லையென்றால் எனக்குக் கவலையில்லை. நீங்கள், “சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம்” என்னும் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தால், அது…“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டது போன்று எந்த நன்மையுமாயிருக்காது. அவை வெறுமென பட்டப்பெயர்களே. அவர் சாரோனின் ரோஜாவாயிருந்தார். அவர் அவ்வாறு இருந்தாரா-? பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், அந்த எல்லாமுமாயிருந்தார். நிச்சயமாகவே, அவர் அவ்வாறு இருந்தார். அப்படியே ஒரு காரியம் அல்லது மற்றொன்று. ஆனால் இங்குதான் அது உள்ளது: சரியான வேதப் பிரகாரமான முறையோ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ளது. நீங்கள் வேதப்பிரகாரமான வழியை விரும்பினால், அதுவே சரியானது. அதுவே சரியான வழியாயுள்ளது. 289 இப்பொழுது, நீங்கள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தால், அதனால் பரவாயில்லை என்பது போல உணர்ந்தால், ஆமென். இது தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்தால், ஆமென். தொடர்ந்து செல்லுங்கள், பாருங்கள். 290 ஆனால் என்னப் பொறுத்த மட்டில், என்னுடைய பாகத்தைப் பொருத்தவரையில், நீங்கள் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் மீண்டும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டுமா-?” என்று கேட்டால், அப்பொழுது நான், “ஆம்” என்றே கூறுவேன், ஏனென்றால் அது என்னுடைய பாகம். 291 அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ இங்கு வந்து, “என்னை ஒரு பிரசங்கியாயிருக்கும்படிக்கு கர்த்தர் அழைத்தார்” என்றாள். அவள் இங்கிருந்தே நிலவிற்கு குதிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியாதது போல, என்னால் அவள் கூறின அதையும் நமப முடியவில்லை. அவள்… 292 நான், “நல்லது, சகோதரியே, அது மிக நன்றாயுள்ளது” என்றேன். மேலும் நான், “நீர் திருமணமானவரா-?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம்” என்றாள். மேலும், “உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டா-?” என்று கேட்டேன். அதற்கும், “ஆம்” என்றாள். அப்பொழுது நான், “என்ன…உங்களுடைய கணவர் இரட்சிக்கப்பட்டிருக்கிறாரா-?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை” என்றாள். அப்பொழுது நான், “அப்படியானால் நீங்கள் அவரோடு என்ன செய்யப் போகிறீர்கள்-?” என்று கேட்டேன். அதற்கு, “அவரை வீட்டிலேயே விட்டு விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள். 293 அப்பொழுது நான், “அதுவே பிசாசு எப்போதும் கொண்டுள்ள மிகச் சிறந்த தூண்டில். முதலாவது நீங்கள் ஒரு அழகான ஸ்திரீயாயிருக்கிறீர்கள், நீங்கள் இங்கிருந்து ஊழிய களத்திற்குள் செல்லும் போது நீங்கள் பிசாசிற்கான வழக்கமான ஒரு தூண்டிலாயும், ஒரு குறி இலக்காய் இருப்பீர்கள். உன்னுடைய கணவனை, வீட்டில், ஒரு வாலிபனை, நீ அவனை இந்த இரண்டு பிள்ளைகளோடு விட்டுச் செல்லப் போகிறாய்; அப்பொழுது அவன் மற்றொரு ஸ்திரீயோடு ஓடத் துவங்குவான், இந்தப் பிள்ளைகளோ இந்நாட்களில் ஒன்றில் மற்றொரு தந்தையை உடையவராயிருப்பரே” என்றேன். மேலும் நான், “முதலாவது காரியம், தேவன் ஒரு ஸ்திரீயை அழைத்திருந்தால், அவர் தன்னுடைய வார்த்தைக்கு முரண்பட்டுவிட்டாரே” என்றேன். தொடர்ந்து நான், “இப்பொழுது, நீங்கள் அவ்வாறு போக விரும்பினால், பரவயாயில்லை” என்று கூறி, “இப்பொழுது, பகுத்தறிதல், கர்த்தர் உனக்கு பகுத்தறிதலைக் கொடுத்திருக்கிறார் என்று நீ கூறுகிறாயே. அப்படியானால் நீ மேடையின் மேல் சென்று, அதை செய்ய முயற்சிக்க விரும்புகிறாயா-?” என்று நான் கேட்டேன். 294 அதற்கு அவளோ, “சரி” என்றாள். என்ன சம்பவித்தது என்று நீங்கள் பாருங்கள். 295 நீங்கள் பாருங்கள், அது ஆர்வம் மிகுதியினால் உண்டானது. அது வார்த்தையின்படி வர வேண்டும். அது வார்த்தையின்படியில்லையென்றால், அப்பொழுது அது சரியானதல்ல. உங்களுடைய உணர்ச்சிகள் என்னவாய் இருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை, அது சரியல்ல. ஆமென்-! அது நன்மையாகவே தொனிக்கிறது. ஆமென்-! 296 சரி: நாம் ஒளியில் நடப்போம், அப்பேர்பட்ட ஒரு அழகான ஒளி, அங்கிருந்து வருகிற இரக்கத்தின் பனித்துளிகளோ பிரகாசிக்கின்றன்; இரவும் பகலும் நம்மை சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே, உலகத்தின் ஒளி. இயேசுவே, உலகத்தின் ஒளியென, ஒளியின் பரிசுத்தவான்களே நீங்கள் எல்லோரும் பறைசாற்றுங்கள்; அப்பொழுது இயேசுவே, உலகின் ஒளியென்று, பரலோகத்தின் மணிகள் ஒலிக்கும். நாம் ஒளியில் நடப்போம், அப்பேர்ப்பட்ட அழகான ஒளி, அங்கிருந்த வருகிற பனித்துளிகள்… இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே,…ஒளி… 297 இப்பொழுது நாம் இதை மீண்டும் பாடுகையில், நீங்கள் திரும்பி நான்கு பக்கங்களிலும் உள்ள ஒவ்வொருவரோடும் இப்பொழுது கரங்களைக் குலுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்: நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளி, (ஆமென்) அங்கிருந்து வருகிற இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கின்றன; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற, இயேசுவே…ஒளி. 298 நீங்கள் மெத்தோடிஸ்டுகளை நேசிக்கிறீர்களா-? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] பாப்டிஸ்டு களையுமா-? பிரஸ்பிடேரியன்களையுமா-? கத்தோலிக்கரையுமா-?…ஓ, நீங்கள் அவர்கள் எல்லோரையும் நேசிக்கிறீர்களா-? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நாம் ஒளியில் நடப்போம், அழகான… (நாம் செல்லுகையில் கரங்களைக் குலுக்குவோம்) ஓ, அங்கிருந்து வருகிற இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கின்றன; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே…ஒளி 299 இப்பொழுது நாம் கலைந்து செல்லும் போது பாடும் நம்முடைய பாடலைப் பாடுவதற்கு முன்னர்…இப்பொழுது முடிந்தளவு நான் மீண்டும் ஞாயிறு இருங்கிருப்பேன். இப்பொழுது, அதற்குப் பின் கிறிஸ்துமஸிற்குப் பிறகு வரையிலும் நான் திரும்பி வரமாட்டேன். பாருங்கள், ஏனென்றால் நான் மிக்சிகனுக்கும், மிக்சிகனிலிருந்து கொலரோடாவிற்கும், கொலரோடாவில் இருந்து ஹைடஹோவிற்கும், ஹைடஹோவிலிருந்து கலிபோர்னியாவிற்கு செல்கிறேன், அதன்பின்னரே நாங்கள் திரும்பி வருவோம். கூடுமானால், (நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்) நான் ஜனவரி மாதம் இருபத்தி நான்கு முதல் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரை லோவாவில் உள்ள வாட்டர்லூவில் இருப்பேன். பாருங்கள், அந்த பெரிய அரங்கம் அங்குள்ளது, சற்று முன் நான் அந்த தொலைபேசி அழைப்பைப் பெற்றுக் கொண்டேன், இப்பொழுதிலிருந்து ஞாயிறு வரை நான் ஜெபிக்க வேண்டும். பாருங்கள், லோவாவிலுள்ள வாட்டர்லூ, அதுவும் இப்பொழுது அதற்கு நெருக்கமாயுள்ளது. 300 ஆனால் இப்பொழுது, நினைவிருக்கட்டும், சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஒலிப்பரப்பாகும் சகோதரனுடைய ஒலிப்பரப்பைக் கவனித்துக் கேளுங்கள். நாங்கள் அவரை அழைத்து, அதை அவரை அறிந்து கொள்ளச் செய்வோம், அது WLRP என்ற ஒளிப்பரப்பில், சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நெவில் நால்வர் குழு சேர்ந்து பாடும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். நாங்கள்…நான் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எடுக்கவில்லை என்றால், அப்பொழுது சகோதரன் நெவில் அந்த கேள்விகளுக்கு பதிலளித்து முடித்துவிடுவார். சகோதரன் நெவில் ஞாயிறு காலை நீர் பதிலளிப்பீரா-? [சகோதரன் நெவில், “பெரிய கட்டளை” என்று கூறி சிரிக்கிறார்—ஆசி.] நல்லது, பாருங்கள், நீங்கள் சிரமப்பட்டால், அப்பொழுது நான் உங்களோடு ஒத்துழைப்பேன். அவர் பார்த்துக் கொள்வார். சரி. 301 சரி: துயரமும் துக்கமுமான பிள்ளையே, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், அது உனக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளிக்கும், ஓ, நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அதை கொண்டு செல். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது-! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப் பெற்ற நாமம், விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது-! எவ்வளவு இனிமையானது-! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; 302 இப்பொழுது சத்தமிடுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு பாப்டிஸ்ட்டை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த விதமாக சத்தமிடுவதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். அந்த வயோதிக தாயார் அங்கு அமர்ந்திருக்க, ஆவியானவர் அவள் மீது வந்தார். அவள் கூச்சலிட ஆரம்பித்து விட்டாள், அவளால் அதை அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை, எனவே அவள் பின்னால் நடந்து சென்று தன்னுடைய மகளை கட்டிடத் தழுவினாள். அந்த விதமாகத்தான் நான் அதைக் காண விரும்புகிறேன். ஆமென். அதுவே உண்மையான நல்ல, பண்டைய மாதிரியைக் கொண்ட, இருதயத்தை தொடக்கூடிய உணர்வுகளாகும். ஓ, என்னே, பண்டைய—பண்டைய, பக்குவமடைந்த, முதிர்சியடைந்த பரிசுத்தவான் மகிமையில் உள்ள பரம் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாய் இருக்கிறார். அப்படியே அழைப்பாணைகளுக்காக காத்திருங்கள், நீங்கள் பாருங்கள், அப்படியே ஒரு அற்புதமான நேரத்தை உடையவராயிருந்து கொண்டிருக்கிறீர்கள். சரி சகோ.நெவில், இப்பொழுது, அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ செய்யலாம். *****